ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, June 3, 2020

#18 - பஞ்சதன்மாத்ர சந்தி

சதுரமூர்த்யாத்மக ஹரியு த்ரிம்

ஷதி சுரூபதி3 பி3ரம்மனொளு மா

ருதனொளிப்பத்தேளு ரூபத3லிப்ப ப்ரத்3யும்ன

சுதரொளிப்பத்தைது3 ஹதி3னெ

ண்டதுல ரூபக3ளரிது வத்ஸர

ஷதக3ளல்லி பூஜிசுதலிரு சதுராத்மகன பத3||18

 

சதுர மூர்த்யாத்மக = அனிருத்தாதி நான்கு ரூபாத்மகனான

ஹரியு = வாசுதேவனு

த்ரிம்ஷதி சுரூபதி = மிகச்சிறந்த 30 ரூபங்களால்

ப்ரம்மனொளு = பிரம்மதேவரில்

ப்ரத்யும்ன = பிரத்யும்னரூபியான ஸ்ரீபரமாத்மன்

மாருதனொளு = வாயுதேவரில்

இப்பத்தேளு ரூபதொளு = 27 ரூபங்களில்

இப்ப = இருக்கிறார்

ஸுதரொளு = பிரம்ம வாயுகளின் மக்களான கருட, சேஷ, ருத்ரர்களில்

இப்பத்தைது ரூபதொளு = 25 ரூபங்களில், சங்கர்ஷண இருக்கிறான்

ஹதினெண்டதுள ரூபகள = யாருமே தனக்கு சமம் இல்லாத 18 ரூபங்களில்

அனிருத்தன் = அனிருத்தன் இருக்கிறான்

வத்ஸரஷதகளலி = இப்படியாக 100 ஆண்டுகளில் மொத்தம் 100 ரூபங்களை நினைத்து

சதுராத்மகன = 4 ரூபத்மகனான ஸ்ரீபரமாத்மனை

பதவ = பாதாரவிந்தங்களை

பூஜிஸுதலிரு = பூஜித்துக் கொண்டிரு.

 

மனிதர்களுக்கு இருக்கும் 100 ஆண்டு கால ஆயுளில் நினைக்க வேண்டியதான பகவத்ரூபங்களைப் பற்றி சொல்கிறார்.

 

அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் 4 ரூபங்களைக் கொண்டிருக்கும் ஸ்ரீபரமாத்மன், மனிதனின் ஆயுளில் முதல் 30 ஆண்டுகள் பிரம்மனின் அந்தர்யாமியாகி அதிபதியாக இருப்பான். வாசுதேவன் 30 ரூபங்களால் 30 ஆண்டுகள் வரை பிரம்மதேவரின் அந்தர்யாமியாக இருந்து சரீரத்தை காப்பாற்றுகிறான்.

 

அதன்பிறகு, 27 ஆண்டுகள் வரை, அதாவது, 31ம் வயதிலிருந்து 57ம் வயது வரை, வாயுதேவர் அபிமானிகளாக இருக்கிறார். அப்போது, பிரத்யும்னன் 27 ரூபங்களால் அந்த 27 ஆண்டுகளும் வாயுவின் அந்தர்யாமியாக இருந்து நம் சரீரத்தை காப்பாற்றுகிறான்.

 

அதன்பிறகு, 25 ஆண்டுகள் வரை, அதாவது 57ம் வயதிலிருந்து 82ம் வயது வரை, கருட சேஷ ருத்ரர் அதிபதியாக இருக்கின்றனர். அப்போது சங்கர்ஷணன் 25 ரூபங்களால் அந்த 25 ஆண்டுகளும் கருட சேஷ ருத்ரர்களின் அந்தர்யாமியாக இருந்து நம் சரீரத்தை காப்பாற்றுகிறான்.

 

அடுத்த 18 ஆண்டுகள் வரை, அதாவது 82ம் வயதிலிருந்து 100 வயது வரை, ஸ்ரீஅனிருத்தரூபியான பரமாத்மன், தானே 18 ரூபங்களால் நம் சரீரத்தை காப்பாற்றுகிறான்.

 

இப்படியாக 4 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், 100 ஆண்டுகள் வரை, 4 ரூபங்களால் நம்மை காக்கிறான் என்று அறிந்து ஸ்ரீநாராயண மூர்த்தியை பூஜிக்க வேண்டும் என்று பொருள்.

***

 

No comments:

Post a Comment