ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, March 14, 2020

#6 - வியாப்தி சந்தி

#6 - வியாப்தி சந்தி

வித்3யெ தா1னெந் தெனிஸிகொ1ம்ப3 னி
ருத்த4தே3வனு சர்வஜீவர
பு3த்தி4யொளு நெலெசித்து3 க்1ருதி1பதி1 பு3த்தி4யெனிசுவனு |
சித்தி4யெனிசுவ சங்கருஷண ப்ர
சித்த4னாமக வாசுதேவ ன
வத்3ய ரூப சதுஷ்டயக3ளரித1வனெ ப1ண்டித1னு ||6

அனிருத்த தேவரு = அனிருத்த நாமக பரமாத்மன்
வித்யயந்து = ஜீவ பரமாத்மருக்கு பரஸ்பரம் பேதம் சொல்லும் வித்யை என்று அழைத்துக் கொள்கிறான்
க்ருதிபதி = க்ருதிதேவியின் பதியான பிரத்யும்ன ரூபி பரமாத்மன்
சர்வஜீவர = அனைத்து ஜீவர்களின்
புத்தியொள் = புத்தியில் 
நெலெசித்து = நிலைத்திருந்து
புத்தியெனிஸுவனு = புத்தி என்று அழைத்துக் கொள்கிறான்
சங்கர்ஷண = சங்கர்ஷண நாமக பரமாத்மன்
சித்தியெனிஸுவ = சித்தி என்று அழைத்துக் கொள்ளும்
வாசுதேவ = வாசுதேவ என்று அழைக்கப்படும் ஸ்ரீபரமாத்மன்
ப்ரசித்தனாமக = புகழ்பெற்றவனான
அனவத்யரூப சதுஷ்டயகள = தோஷங்கள் அற்ற இந்த நான்கு ரூபங்களை
அரிதவனெ = அறிந்தவனே, பண்டிதன். 

வித்யைக்குள் இருந்து, அனிருத்த தேவன், வித்யை என்று அழைக்கப்படுகிறான். வித்யை என்றால் ‘வித்யாத்மனிபிதாபோத:’ என்னும் வாக்கியத்தினால், ஜீவ பரமாத்மரில் பரஸ்பர பேத சிந்தனை செய்வது. இந்த ஞானமானது பொதுவாக, வாயுமதத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. ஜீவ பிரம்ம ஐக்யத்தை சொல்வது, அவித்யை என்று அறியவேண்டும். கீதையில் :

தெய்வோ விஸ்தரஷ: ப்ரோக்த: ஆ ஸுரீம் பார்த்தமேஸ்ருணு |
ஈஷ்வரோஹ மஹம் போகீ சித்தோஹம் பலவான் சுகீ ||
ஆட்யோபிஜினவானஸ்மி கோன்யோஸ்தி ஸத்ருஷோமயா |
யக்‌ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்யெ இத்யஞான விமோஹிதா: ||

’மேலும் தெய்வ விஷயங்களை சொல்கிறேன் கேள்! - நானே பரமேஸ்வரன். நானே போகி. நானே சித்தன். பலசாலி. சுகி. பாக்யவந்தன். ஜனவந்தன். எனக்கு சமம் என்று யார் இருக்கின்றனர்? யாகத்தை செய்வேன். தானத்தைக் கொடுப்பேன். மகிழ்ச்சியடைவேன். என்று இத்தகைய அஞ்ஞானத்தினால் இருப்பவர்களே அசுரர்கள்’ என்று பல வாக்கியங்களால் பார்த்தனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் உபதேசம் செய்கிறான். இதுவே அவித்யை. இந்த வித்யை, அவித்யை இரண்டுமே அகங்காரத்தினாலேயே பிறக்கின்றன. நான் சேவகன். பரமாத்மன் ஜகத்பிரபு என்று அறிவதற்கும் அகங்காரமே காரணம். ஜீவ பிரம்மருக்கு பேதத்தை சொலும் வித்யைக்குள் இருந்து வித்யை என்னும் பெயரைப் பெறுபவன், அனிருத்த நாமக பரமாத்மன் என்று அறியவேண்டும். 

க்ருதிபதியான பிரத்யும்னன், புத்தியில் நிலைத்திருந்து புத்தி என்னும் பெயரைப் பெறுகிறான். புத்தி என்றால் ’புத்த்யா ஸ்வாம்ஷேனயேனாஸௌ நிஸ்சயம் ப்ரதிபத்யதே’ என்னும் பாகவத வாக்கியத்தால் - இதோ, அதோ என்று ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாமல், இதுவே அல்லது அதுவே என்னும் நிச்சய ஞானத்திற்கு புத்தி என்று பெயர். சங்கர்ஷண நாமக பரமாத்மன் சித்தி என்று பெயர் பெற்றிருக்கிறான். சித்தி என்றால், தூய்மையான சித்தத்தினால் உண்டான பகவத் ப்ரசாதமாகும். சத்விஷயங்களில் ஸ்திரமாக நிற்பதே சித்தம். இதிலிருந்து உண்டாகும் பகவத் பிரசாதமே சித்தி. இத்தகைய சித்தியில் சங்கர்ஷணன் இருந்து, சித்தி என்னும் பெயரைப் பெற்றிருக்கிறான். 

அனைத்து இந்திரியங்களுக்கும் மனமே காரணம். பத்து இந்திரியங்களின் செயல்கள் நடைபெற வேண்டுமெனில், மனஸ் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. மனோ நிக்ரஹத்தினாலேயே மனிதன், ஜிதேந்திரியன் என்று ஆகிறான். மனோ நிக்ரஹம் செய்யாமல், தன் இஷ்டம் போல செயல்களை செய்பவன் பாவியாகிறான். இத்தகைய மனதைக் கட்டுப்படுத்தும் விஷயங்களில், வாசுதேவ நாமக பரமாத்மன் இருந்து, பிரசித்தன் என்னும் பெயரைப் பெறுகிறான். 


இப்படி அகங்காரத்தினால் வரும் வித்யை, புத்தியினால் வரும் நிச்சய ஞானம், சித்தத்தினால் ஆகும் சித்தி, மனதினால் ஆகும் பிரசித்தி என்னும் நான்கு இடங்களில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் நான்கு ரூபங்களால் ஸ்ரீபரமாத்மன், வித்யை, புத்தி, சித்தி, ப்ரசித்தி என்னும் நான்கு பெயர்களைப் பெற்று, அனவத்யனாக (யாராலும் வெல்லப்பட முடியாதவனாக) இருக்கிறான். மேலும், எவற்றின் சம்பந்தம் இல்லாமல், தோஷங்கள் அற்றவனாகவும் இருக்கிறான். இத்தகைய நான்கு ரூபங்களை அறிந்தவனே பண்டிதன் ஆகிறான். 

***




No comments:

Post a Comment