#9 - வியாப்தி சந்தி
பா4ர்யரிந்தொ3டகூ3டி3 காரண
கார்ய வஸ்துகளல்லி ப்ரேரக
ப்ரேர்ய ரூபகளிந்த ப1ட1த1ந்து1கள வொலித்து3 |
சூர்ய கிரணக3ளந்தெ1 தன்னய
வீர்யதிந்தலெ கொ1டு3த1 கொ1ளுதிஹ
நார்யரிகெ ஈதன விஹாரவு கோ3சரிபு1தே3னு ||9
பார்யரிந்த = ஸ்ரீ பூ துர்கா என்னும் மனைவியர்களுடன்.
ஒடகூடி = சமேதனாக.
காரண = ஸ்ருஷ்டிக்குக் காரணமான ஜட ப்ரக்ருதியிலும்.
கார்யவஸ்துகளல்லி = காரியங்களை செய்யும் இடங்களான உலகங்களிலும்.
ப்ரேரக ப்ரேர்ய ரூபகளிந்த = தீர்மானம் செய்யும், நிறைவேற்றும் ரூபங்களிலும்
படதந்துகளவொல் = துணியில் இருக்கும் நூல்களைப் போல இருந்து
சூர்யகிரணகளந்தெ = சூரிய கிரணங்கள், கடல் நீரைக் குடித்து, மேகங்களில் வைத்து, மறுபடி மழையின் ரூபத்தில் கடலில் போய் சேர்ப்பதைப் போல
தன்னய வீர்யதிந்தலி = தன் சாமர்த்தியத்தாலேயே
கொடுத = ஜீவர்களுக்கு புண்ணிய பாவங்களின் பலன்களைக் கொடுத்து
கொடுதிஹனு = சேவையை ஸ்வீகரிக்கிறான்.
அனார்யரிகெ = நீசர்களுக்கு
இவன விஹாரவு = இவனின் விளையாட்டு
கோசரிபுதேனோ = தெரியுமோ?, அல்லது, ‘கொடுதிஹனு ஆர்யரிகெ’ என்று படித்தால், பிரம்மாதிகளுக்காவது முழுமையாக புரியுமோ? - அதாவது அவரவர்களின் யோக்யதைக்கேற்பவே பகவத் மகிமைகளை அவர்கள் அறிவர் என்று பொருள்.
பரமாத்மன், ஸ்ரீ பூ துர்கா என்னும் தன் மனைவிகளுடன்கூடி, காரண கார்யவஸ்துகளில் அதாவது, இந்த உலகத்தின் ஸ்ருஷ்டி காரணள் ஜடப்ரக்ருதி. மனிதர்களின் உற்பத்திக்காக சுக்லஷோணியான மனிதர்கள் கார்யம். மரங்கள் முதலான உற்பத்திக்கு விதை, மண், நீர் ஆகியவை காரணம். கார்யம் மரங்கள். இப்படி ஒவ்வொரு வஸ்துகளிலும் காரண காரியங்கள் வெவ்வேறாக இருப்பதுண்டு. காரண வஸ்துகளில் தீர்மானம் செய்பவனாகவும், கார்ய வஸ்துகளில் அதை நிறைவேற்றுபவனாகவும் இருந்து; நூலை குறுக்கும் நெடுக்குமாக நெய்வதால், அந்த நூலே ஆடையாக ஆவதைப் போல, பரமாத்மன் கார்ய காரண வஸ்துகளில் நிலைத்திருந்து, பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டு, பிரபஞ்ச ரூபியாக இருக்கிறான்.
மேலும், சூரியன் தன் கிரணங்களால், கடலில் இருக்கும் தண்ணீரை ஸ்வீகரித்து, மேகங்களில் வைத்து, மழையைப் பெய்ய வைத்து, அதன் மூலம் மறுபடி கடலை நிரப்பச் செய்வது போல, பரமாத்மன் தன் சாமர்த்தியத்தினால் பக்தர்களின் சேவையைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு அந்த பலன்களைக் கொடுக்கிறான். சாமான்யரான மக்களுக்கு இவனின் மகிமைகள் எப்படி புரியும்? புரியாது. பிரம்மாதி தேவதைகளுக்கே இவனின் மகிமைகளை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறதா? அவரவர்களின் தகுதிக்கேற்பவே காண்கின்றனர்.
***
No comments:
Post a Comment