#28 - கருணா சந்தி
துரிதாரண்ய பாவகனு = பாவங்கள் என்னும் காட்டிற்கு நெருப்பைப் போல இருக்கும் ஸ்ரீபரமாத்மன்
கொட்டுதனு = பக்தர்கள் கொடுப்பதை
கைகொம்ப = பெற்றுக் கொள்வான்
அரக்ஷணபிட்டகல = பக்தர்களை அரை நொடியும் விட்டு விலக மாட்டான்
தன்னவர = தன் பக்தர்களை
துரிதகள = பாவங்களை (கஷ்டங்களை)
தூரதலி = வெகு தூரத்திற்கு
அட்டுவனு = ஓட்டுவான்
ஹரி = ஸ்ரீஹரி
பெட்ட = மந்த்ர பர்வதத்தை
பென்னலி = முதுகின் மேல்
ஹொரஸிதவரொளு = ஏற்றிய தேவதைகள் மேல்
சிட்டு மாடிதனேனு = கோபம் கொண்டானா? (இல்லை)
கங்கெட்ட சுரரிகெ = தன்னிலிருந்து வேறுபட்டிருக்கும் தேவதைகளுக்கு
சுதெய = அமிர்தத்தை
உணிஸித = குடிக்க வைத்தான்
அஹிதரன = அவர்களின் எதிரிகளான தைத்யர்களை
முரிதனு = சம்ஹரித்தான் (கொன்றான்)
***
கொ1ட்டுத3னு கைகொம்ப3ரக்ஷண
பி3ட்ட1க3ல த1ன்னவர து3ரித1க3
ளட்டுவனு தூ3ரத3லி து3ரிதா1ரண்ய பா1வக1னு |
பெ3ட்ட பெ3ன்னிலி ஹொரிசித3வரொளு
சிட்டு மாடித3னேனு ஹரி க
ங்கெ1ட்ட சுரரிகெ3 சுதெ3யனுணிசித1 முரித3னஹித1ரனு ||28துரிதாரண்ய பாவகனு = பாவங்கள் என்னும் காட்டிற்கு நெருப்பைப் போல இருக்கும் ஸ்ரீபரமாத்மன்
கொட்டுதனு = பக்தர்கள் கொடுப்பதை
கைகொம்ப = பெற்றுக் கொள்வான்
அரக்ஷணபிட்டகல = பக்தர்களை அரை நொடியும் விட்டு விலக மாட்டான்
தன்னவர = தன் பக்தர்களை
துரிதகள = பாவங்களை (கஷ்டங்களை)
தூரதலி = வெகு தூரத்திற்கு
அட்டுவனு = ஓட்டுவான்
ஹரி = ஸ்ரீஹரி
பெட்ட = மந்த்ர பர்வதத்தை
பென்னலி = முதுகின் மேல்
ஹொரஸிதவரொளு = ஏற்றிய தேவதைகள் மேல்
சிட்டு மாடிதனேனு = கோபம் கொண்டானா? (இல்லை)
கங்கெட்ட சுரரிகெ = தன்னிலிருந்து வேறுபட்டிருக்கும் தேவதைகளுக்கு
சுதெய = அமிர்தத்தை
உணிஸித = குடிக்க வைத்தான்
அஹிதரன = அவர்களின் எதிரிகளான தைத்யர்களை
முரிதனு = சம்ஹரித்தான் (கொன்றான்)
பொருள்:
தன் பக்தர்கள் கொடுக்கும் சிறியதான பத்ர, புஷ்பங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான். அரை நொடிகூட அவர்களை விட்டு இருப்பதில்லை. பக்தர்களின் பாவங்கள் என்னும் காட்டினை சுடும் விஷயத்தில் நெருப்பைப்போல இருக்கும் ஸ்ரீபரமாத்மன், அவற்றை தூர ஓட்டுகிறான். பாற்கடலை கடையும் நேரத்தில் மந்தர மலையை தன் முதுகின் மேல் ஏற்றி வைத்த தேவதைகள் மேல் கோபம் கொண்டானா பரமாத்மன்? (இல்லை). அதே தேவதைகளுக்கு அந்த அமிர்தத்தை பகிர்ந்தளிக்கவும் செய்தான். அவர்களின் எதிரிகளான தைத்யர்களைக் கொன்றான்.
சிறப்புப் பொருள்:
’கொட்டதனு கைகொம்ப’ - குசேலன் கொடுத்த ஒரு பிடி அவலைப் பெற்றுக்கொண்டான். கஜேந்திரன் கொடுத்த ஒரு தாமரை மலரைப் பெற்றான். இப்படி பரமாத்மன், தன் பக்தர்கள் கொடுக்கும் சிறிய அளவிலான பொருட்களையே பெரியதாக நினைத்து அன்புடன் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். நம்பியவர்களின் கஷ்டங்களை பரிகரிக்கிறான்.
ஒருமுறை தேவதைகள், துர்வாசரின் சாபத்தின் பலனாக, ராஜ்யத்தை இழந்து, பரமாத்மனிடம் தஞ்சம் புகுந்தனர். ஸ்ரீபரமாத்மன், தேவ-தைத்யர்களை பாற்கடலைக் கடையுமாறும், அமிர்தத்தை எடுக்குமாறும் சொல்ல, மத்தாக இருந்த மந்தரமலை பாரமாக இருந்த காரணத்தால் நீரில் மூழ்கத் தொடங்கியது. தேவதைகளும் பரமாத்மனிடம் அந்த மலையை மேலே தூக்கிக் கொடுக்குமாறு வேண்ட, அவர்களின் ஆசையை நிறைவேற்ற பரமாத்மன் கூர்ம ரூபத்தினால் அந்த மலையைத் தாங்கிப் பிடித்தான். இப்படி மலையை தன் மேல் வைக்கக் காரணமாக இருந்த தேவதைகளை மன்னித்து, அந்த அமிர்தத்தை அவர்களுக்கே பகிர்ந்தளித்தான் பரமாத்மன்.
இதையே தாசராயர் பெட்ட பென்னலி’ என்னும் வாக்கியத்தால் சொல்லியிருக்கிறார். அதே பாற்கடலைக் கடையும் சந்தர்ப்பத்தில் தேவதைகளை ஏமாற்ற எண்ணிய தைத்யர்களை ஏமாற்றி போரில் அவர்களைக் கொன்றார். அதையே தாசராயர் ‘முரிதனஹிதரன’ என்றார்.
No comments:
Post a Comment