#26 - வியாப்தி சந்தி
ரமாரமண = லட்சுமிபதியான பரமாத்மன்
சர்வரொளு = அனைத்து பிராணிகளிலும்
சம்பந்தவாகதெ = ஸ்தூலதேக சம்பந்தம் இல்லாமல்
சகல கர்மவ = அனைத்து கர்மங்களையும்
அவரந்ததலி = அந்த பிராணி செய்வதைப் போல தானும் செய்து, செய்வித்து
தத்பலகள = அந்த கர்மங்களின் பலன்களை
உணதே = தான் அனுபவிக்காமல்
அணுமஹத்தெனிப = சிறியதும், பெரியதுமான
கடமந்திரதி = குடம், பாத்திரம் ஆகியவற்றின் உள்ளே வெளியேயும்
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
தும்பிஹ = நிலைத்திருக்கும்
பாந்தளத தெரனந்தெ = ஆகாயத்தைப் போல
இருதிப்பனு = இருக்கிறான்
***
பொ1ந்தி3கொ1ண்டி3ஹ சர்வரொளு ச
ம்ப3ந்த வாக3தெ சக1லக1ர்மவ
ரந்த3த3லி தா1 மாடி மாடிஸி தத்ப2லக3ளுணதெ3 |
கு1ந்த3தெ3 அணு மஹத்தெ1னிப க3ட1
மந்தி3ரதி3 சர்வத்ர து1ம்பி3ஹ
பா3ந்த3ளத3 தெ1ரனந்தெ1 இருதிப்பனு ரமாரமண ||26
ரமாரமண = லட்சுமிபதியான பரமாத்மன்
சர்வரொளு = அனைத்து பிராணிகளிலும்
சம்பந்தவாகதெ = ஸ்தூலதேக சம்பந்தம் இல்லாமல்
சகல கர்மவ = அனைத்து கர்மங்களையும்
அவரந்ததலி = அந்த பிராணி செய்வதைப் போல தானும் செய்து, செய்வித்து
தத்பலகள = அந்த கர்மங்களின் பலன்களை
உணதே = தான் அனுபவிக்காமல்
அணுமஹத்தெனிப = சிறியதும், பெரியதுமான
கடமந்திரதி = குடம், பாத்திரம் ஆகியவற்றின் உள்ளே வெளியேயும்
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
தும்பிஹ = நிலைத்திருக்கும்
பாந்தளத தெரனந்தெ = ஆகாயத்தைப் போல
இருதிப்பனு = இருக்கிறான்
ஸ்ரீபரமாத்மன், அனைத்து பிராணிகளிலும், அவர்களின் தேக இந்திரியங்களின் சம்பந்தம் இல்லாமல், ஜீவர்களிலும் இந்திரியங்களிலும், அவர்களின் ஸ்தூல தேகத்தில் வியாப்தனாக இருந்து, அவரவர்கள் செய்யும் கர்மங்களை அவர்களைப் போல தானே செய்து, அவர்களிடமிருந்து செய்வித்து, அந்த பலன்களை தான் உண்ணாமல், அவர்களுக்கே கொடுப்பான். சிறிய குடமோ, பெரிய குடமோ, அவற்றின் உள்ளே முழுவதுமாக ஆகாயம் எப்படி நிரம்பியிருக்கிறதோ அப்படியே ஸ்ரீபரமாத்மன் சூக்ஷ்மரான (சிறியவர்) ஜீவர்களிலும், பெரியவர்களின் ஜீவர்களிலும், தனக்கும் அதற்கும் சம்பந்தப்படாமல் (நிர்லிப்தனாக) வியாபித்திருக்கிறார்.
No comments:
Post a Comment