ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, March 26, 2020

#18 - வியாப்தி சந்தி

#18 - வியாப்தி சந்தி

1வி ஹரின்மணி வித்3ருமத1
ச்சவிக3ளந்த3தி3 ராஜிசுத1 மா
4வ நிரந்தர தேவ தானவ மானவரொளித்து |
த்ரிவிதகு3ண கர்ம ஸ்வபா4வவ
பவனமுக தேவாந்தராத்மக1
திவ திவதி வ்யக்த1மாடு31 அவரொளித்து3ணிப1 ||18


பவி = வைரம்
ஹரின்மணி = நீலமணி
வித்ரும = பவளம்
சச்சவிகளந்ததி = மிகச்சிறந்த மணிகளைப் போல
ராஜிஸுவ = ஒளிர்ந்தவாறு
மாதவ = ஸ்ரீரமாபதி
நிரந்தர = எப்போதும்
தேவமானவதானவரொளித்து = தேவதைகளில், மனிதர்களில், தானவர்களில் இருந்து
த்ரிவித = மூன்று விதமான
குண = சத்வ ரஜஸ் தமோ என்னும் குணங்கள்
கர்ம ஸ்வபாவவ = மூன்று வித குணங்களின் ஸ்வபாவமான மூன்று வித கர்மங்களை
பவனமுக தேவாந்தராத்மக = வாயுதேவரில் தொடங்கி அனைத்து தத்வாபிமானி தேவதைகளில் அந்தர்யாமியாக இருந்து
திவசதிவசதி = தினந்தோறும்
வ்யக்திமாடுத = நிலைத்திருந்து
அவரொளித்து = த்ரிவித ஜீவர்களிலும், அந்தந்த தேவதைகளிலும் இருந்து
உணிப = த்ரிவித ஜீவர்களுக்கு சுக துக்கங்களின் கலவையான சுக துக்கங்களைக் கொடுக்கிறான். 

ஸ்ரீபரமாத்மன், சாத்விகர்களுக்கு வைரத்தைப் போல ஒளிபொருந்திய, ராஜசர்களுக்கு கருப்பு சேர்ந்த நீலமணி போலவும், தாமசர்களுக்கு பவளத்தைப் போலவும், இப்படி சிறந்த ஒளியுடன் ஒளிர்ந்தவாறு, தினந்தோறும் சாத்விகரான தேவதைகளிலும், ராஜஸரான மனிதர்களிலும், தாமசர்களான தானவர்களிலும் இருந்து, சாத்விகர்களால் சத்கர்மங்களையும், ராஜசர்களால் இருவித கர்மங்களையும், தாமசர்களால் கெட்ட செயல்களையும், அவரவர்களின் சுபாவத்திற்கேற்ப செய்வித்து, வாயுதேவர் முதலான தத்வாபிமானி தேவதைகளுக்குள் அவரவர் ரூபியாகவே இருந்து, தினந்தோறும் அவரவர்களின் ஸ்வபாவிக கர்மங்களை செய்வித்தவாறு, சாத்விகர்களுக்கு சுகங்களை, ராஜசர்களுக்கு சுகதுக்கங்களின் கலவையையும், தாமசர்களுக்கு துக்கங்களையும் கொடுக்கிறான். (அவர்களின் அனுபவத்திற்குக் கொண்டு வருகிறான்).

இதில், பவி, ஹரின்மணி, வித்ரும என்றால் வைரம், நீலமணி, பவளம் என்னும் மூன்று வர்ணங்களை, சாத்விக, ராஜஸ, தாமஸர்களுக்கு ஒப்பிட்டால், பாகவதாதிகளில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு வேறுபாடு வருகிறது. அது எப்படியெனில், பாகவத 10ம் ஸ்கந்தத்தில்: 

ஸத்வந்த்ரிலோகஸ்திதயே ஸ்வமாயயாபிபர்தி ஷுக்லங்கலு வர்ணமாத்மன: |
ஸர்காய ரக்தம் ரஜசோப ப்ரும்ஹிதம் க்ருஷ்ணாந்துவர்ணம் தமஸாஜனாத்யயே ||

என்னும் ஸ்லோகத்தில், உலகத்தை காப்பாற்றுவதற்காக, நீ சத்வ குணத்தை பிரதிபலிக்கும் வெண்மை நிறத்தை ஏற்றாய். ஸ்ருஷ்டி செய்யும் காலத்தில், ரக்த வர்ணத்தை ஏற்றாய். மக்களை அழிக்கும் காலத்தில் தமோ குணத்தை பிரதிபலிக்கும் கருப்பு வர்ணத்தை ஏற்றாய் - என்கிறார். இதிலிருந்து ரஜோ குணரூபம் ரக்த வர்ணம் என்றும், தமோ குணரூபம் கருப்பு வர்ணம் என்றும் தெளிவாகிறது. தாசராயரின் வாக்கியத்திலிருந்து, சாத்விக ரூபம் வைரம் என்றும், ராஜ ரூபம் நீலமணி என்றும், தாமஸ ரூபம் பவள வர்ணம் என்றும் தெரிகிறது. இங்கு சொல்லப்பட்டிருக்கும் நீல வர்ணம் என்பது கருப்பு வர்ணத்திற்கும் பொருந்துகிறது. எப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணன் சில இடங்களில் கருப்பு வர்ணன் என்றும் சில இடங்களில் நீல வர்ணன் என்றும் வர்ணிக்கப்பட்டிருக்கிறான். சில சமயங்களில் கூந்தலை வர்ணிக்கும்போது ’நீலகுந்தல’ என்று சொல்லியிருப்பதால் கிருஷ்ண வர்ணத்திற்கு நீலம் என்றும் பெயருண்டு என்பது தெளிவாகிறது. 


ஆக, தாசரின் வாக்கியத்திலிருந்து, வெண்மை, கருப்பு, சிவப்பு ஆகிய வர்ணங்களை வரிசையாக சொல்லி, தேவ, மானவ, தானவ என்று சொல்லியிருப்பதால், பாகவதாதி கிரந்தங்களில் சொல்லியிருப்பதற்கு வேறுபாடு தெரிகிறது. ஆகவே இந்த பத்யத்தில் ‘தேவ மானவ தானவ’ என்பதற்கு பதில் ‘தேவ தானவ மானவ’ என்று இருக்கலாம் என்று நினைக்கிறோம். அப்படி இருந்தால், சாத்விக, தாமஸ, ராஜஸ என்னும் வரிசையை வைத்துக்கொண்டால், மேற்சொன்ன பாகவத ஸ்லோகத்திற்கு பொருந்துகிறது. இதே விதமாகவே, உத்தம அதம மத்யம என்று நிர்ணயங்களில் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

***

No comments:

Post a Comment