#17 - வியாப்தி சந்தி
நித்ய நிக3மாதீ1த1 நிர்கு3ண
ப்4ருத்1யவத்ஸல ப4யவினாஷன
சத்யகா1ம ஷரண்ய ஷாமல கோ1மலாங்க3 சுகி2 |
மத்த1னந்த3தி3 மர்த்யரொளஹொர
கெ3த்த1னோடலு சுத்து1தி1ப்பனு
அத்யதி4க1 சந்த்ருப்த1 த்ரிஜகத்1வியாப்த1 பரமாத்ம ||17
நித்ய நிகமாதீத = நித்யமான வேதங்கள் கூட விளக்குவதற்கு சாத்தியமில்லாத குணரூபங்களைக் கொண்டவன்.
நிர்குண = சத்வரஜஸ்தமோ குணங்களுக்குக் கட்டுப்படாதவன்
ப்ருத்யவத்ஸல = பக்தர்களில் அன்பு கொண்டவன்
பயவினாஷன = பக்தர்களின் பயங்களைப் போக்குபவன்
சத்யகாம = உண்மையான விருப்பம் கொண்டவன்
ஷரண்ய = வேண்டுவதற்கு அருகதை கொண்டவன்
ஷாமலகோமலாங்க = கருப்பு வர்ணத்தைக் கொண்ட அழகான தேகத்தைக் கொண்டவன்
சுகி = சுக ஸ்வரூபன்
மத்தனந்ததி = மத்யபானங்களைக் குடித்து, சுயநினைவு இல்லாமல், பயமில்லாமல் சுற்றுபவனைப் போல
மர்த்யர = மனுஷ்யாதி பிராணிகளின்
ஒளஹொரகெ = உள்ளே மற்றும் வெளியே
யித்தனோடலு = எங்கு பார்த்தாலும்
இப்பனு = இருக்கிறான்
அதி = மிகவும்
அதிக = அதிகமாக
சந்த்ருப்த = எப்போதும் திருப்தியாகவே இருக்கிறான்
த்ரிஜகத் வியாப்த = மூன்று உலகங்களிலும் வியாப்தனாக இருக்கிறான்
பரமாப்த = பக்தர்களுக்கு நண்பனானவன்.
ஸ்ரீபரமாத்மன், நித்யமான வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதைவிட அதிக குணரூபங்களைக் கொண்டவன். சத்யரஜஸ்தமோ என்னும் ப்ராக்ருத குணங்கள் அற்றவன். தன் பக்தர்களில் அதிக அன்பினைக் கொண்டவன். பக்தர்களுக்கு வரும் பயங்களை பரிகரிப்பவன். அவனின் சங்கல்பங்கள் என்றும் வீணாவதில்லை. சரணடைவதற்கு தகுதியுள்ளவன். கருமை நிறத்தவன். அழகான அங்கங்களைக் கொண்டவன். நித்யானந்த ஸ்வரூபன். எப்போதும் திருப்தியுடன் இருப்பவன். மூன்று உலகங்களின் உள்ளேயும் வெளியேயும் வியாப்தனாக இருப்பவன். பக்தர்களுக்கு நட்பானவன். மத்யபானங்களைக் குடித்தவர்கள், எப்படி மெய்மறந்து, சுய நினைவில்லாமல், பயமில்லாமல் சுற்றுவரோ, அதைப்போல, அனைத்து பிராணிகளின் உள்ளே, வெளியே மற்றும் அதன் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் அங்கு இருப்பவன். சந்திரமுகி என்னும் உதாரணத்தில், சந்திரனின் ஒளியை மட்டும் எப்படி உவமையாக எடுத்துக்கொள்கிறோமோ அப்படி, இங்கு மத்யபான உதாரணத்தில் இருக்கும் பயமில்லாமை என்னும் குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
***
No comments:
Post a Comment