ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, March 18, 2020

#10 - வியாப்தி சந்தி

#10 - வியாப்தி சந்தி


ஜனக தன்னாத்மஜகெ3 வரபூ4
ஷண து3கூ1லவ தொ1டி3ஸி தா1
ந்தனெய கைகொளுதவன ஹரசுத ஹருஷப1டுவந்தெ |
வனருஹேக்‌ஷண பூஜ்ய பூஜக1
நெனெஸி பூ1ஜாஸா4னபதா3
ர்த்த2னுதனகெ3 தா1னாகி32லகள3னீவ ப4ஜக1ரிகெ3 ||10

ஜனக = தந்தை. 

தன்னாத்மஜகெ = தன் மகனுக்கு. 
வரபூஷண துகூலவ = சிறந்த ஆடை அணிகலன்களை
தொடிஸி = கொடுத்து
வந்தெனய = நமஸ்காரங்களை
கைகொளுத = ஏற்றுக்கொண்டு
அவன = அந்த மகனை
ஹரஸுத = ஆசிர்வாதம் செய்து
ஹருஷபடுவந்தெ = மகிழ்ந்திருப்பதைப் போல
வனருஹேக்‌ஷண = தாமரைக் கண்ணனான ஸ்ரீபரமாத்மன்
பூஜ்யபூஜகனெனிஸி = ஒருவனில் இருந்து வணங்கப்பட்டும்; இன்னொருவனில் வணங்குபவனாகவும் இருந்து
பூஜாஸாதன பதார்த்தனு = கந்த, புஷ்பாதி பூஜைக்குத் தேவையான பதார்த்தங்களை
தனகெ = தனது பூஜைக்கு
தானாகி = தானே ஆகி
பஜகரிகெ = தன்னை பஜனை செய்பவர்களுக்கு
பலகளனு = பலன்களை
ஈவ = கொடுக்கிறான்.

தந்தையானவர், தனது மக்களுக்கு உத்தமமான (மிகச் சிறந்த) ஆடைகளைக் கொடுத்து, அந்த மக்களிடமிருந்து நமஸ்காரங்களைப் பெற்று, அவர்களுக்கு ஆசிர்வாதங்களை செய்து, மகிழ்ச்சியடைவதைப் போல, ஸ்ரீபரமாத்மன் குருகளிடமிருந்து கொண்டு, பூஜைகளை ஏற்றுக்கொள்கிறான். சிஷ்யர்களிடம் இருந்துகொண்டு, பூஜைகளை செய்கிறான். தன்னால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட மக்களாக இருக்கும் தன் பக்தர்களில் இருந்து, பூஜையை செய்து, அவர்களைவிட உத்தம மக்களில் இருந்து, ராம கிருஷ்ணாதி பிரதிமா ரூபத்திலும் பூஜையை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அதன் பலன்களாக, அன்ன ஆடை அணிகலன்களால் சௌக்யங்களைக் கொடுத்து, தந்தை மக்களிடமிருந்து நமஸ்காரங்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வதைப் போல, பக்தர்களுக்கு வரங்களைக் கொடுத்து, அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான். மேலும், பூஜைக்குத் தேவையான உபகரணங்கள், பழம், புஷ்பம், கந்த, அக்‌ஷதை, தாம்பூலம் ஆகியவற்றில் இருந்து, அதன் ரூபியாக தானே இருந்து, தன் பூஜைக்கு தானே பொருட்களாகிறான். பூஜை செய்த பலன்களை மட்டும் ஜீவர்களுக்குக் கொடுக்கிறான். 

சிறப்புப் பொருள்:
மேற்கண்ட இரு பத்யங்களால், ஸ்ரீபரமாத்மனே விஷயங்களை தீர்மானிப்பராகவும், செய்பவராகவும், பூஜ்யனாகவும், பூஜை செய்பவனாகவும், பூஜைக்குத் தேவையான பொருட்களிலும் இருந்து, பூஜையை செய்து, செய்வித்து, பலன்களை ஜீவர்களுக்குக் கொடுக்கிறான் என்று சொல்வதிலிருந்து, ஜீவனுக்கு கர்த்ருத்வம் கொஞ்சம்கூட இல்லை என்றே தாசராயர் சொல்கிறார். ஆனால், அவரது அபிப்பிராயம் அப்படியில்லை. ஏனெனில், அது ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்தத்திற்கு எதிரானதாகும். சித்தாந்தத்திற்கு எதிராக தாசராயர் என்றும், எதையும் சொன்னதில்லை. 

பகவத்கீதை 18ம் அத்தியாயத்தில்: 

ஆதிஷ்டானம் ததா கர்ம காரணஞ்ச ப்ருதக்விதம் |
விவிதாச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் |
ஷரீர வாங்மனோபிர்யத்கர்ம ப்ராரபதெ நர: |
ந்யாய்யம்வா விபரீதம்வா பஞ்சைதே தஸ்யஹேதவ: ||

எண் கணித சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைப் போல, ஜீவர்கள் புண்ய பாவங்கள் அனைத்தையும் செய்வதற்கு ஐந்து காரணங்கள் உண்டு. அவை என்னவென்றால்: 

1. அதிஷ்டானம், அதாவது தேகம், பூமி ஆகியன. 
2. கர்த்தா - விஷ்ணு
3. வேறு காரணங்கள் அதாவது இந்திரியங்கள், ஸ்ருக் ஸ்ருவங்கள்
4. பல்வேறு செயல்கள் அதாவது கை முதலான இந்திரியங்களால் செய்யப்படுவன, நடப்பது ஆகியன
5. தெய்வ அதாவது அதிர்ஷ்டம் அல்லது கர்த்தா - ஜீவ, தெய்வ அதாவது விஷ்ணு என்று பொருள்.

மனிதனின் மனோ வாக் காயங்களினால் செய்யப்படும் புண்ய காரியங்களாகட்டும், பாவ காரியங்களாகட்டும் அதற்கு மேற்சொன்ன ஐந்து காரணங்களே உண்டு. 

தத்ரைவம் சதிகர்த்தாரமாத்மானம் கேவலந்துய: |
பஷ்யத்யக்ருத புத்தித்வான்னஸ பஷ்யதி துர்மதி: ||

இது இப்படியிருக்கையில், யாரொருவன், தானே கர்த்தன் என்று நினைத்துக் கொள்கிறானோ, அவன் புத்தி இல்லாதவனாகையால், அந்த துர்மதியை எதுவும் அறியாதவன் என்று நினைக்க வேண்டும். 

யஸ்யனாஹம் க்ருதோபாவோ புத்திர்யஸ்யனலிப்யதே |
ஹத்வாபிஸ இமானோகான்ன ஹந்தி நனிபத்யதே ||

யாருக்கு நான் என்னும் அகங்காரம் இருப்பதில்லையோ, யாருடைய புத்தி பலன்களில் விருப்பமில்லாமல், அதற்கு சம்பந்தப்படாமல் இருக்கிறதோ, அவன் இந்த உலகத்தையே அழித்தாலும், அதற்கான பாவம் அவனைச் சேர்வதில்லை. இப்படி பிரபஞ்சத்தை அழிக்கப் பிறந்தவர் ருத்ரதேவர், யமதேவர். இவர்களுக்கு ஸ்வ-கர்த்ருத்வ-அபிமானம் இல்லாததினால், உலகத்தை அழிக்கும் பாவம் இவர்களை சேர்வதில்லை. இந்திரன், வ்ருத்ராசுரனைக் கொன்று பாவத்தை அடைந்தான் என்று பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு மூலகாரணம் அவர்களின், சிறிதேயான, தற்காலிக அகங்காரமே ஆகும். இப்படி 14ம் ஸ்லோகத்தில் துவங்கி, 18ம் ஸ்லோகம் வரைக்கும் பகவத் கர்த்ருத்வத்தை அறிந்து, தன் கர்த்ருத்வ புத்தியை விடவேண்டும் என்று கூறியிருக்கின்றனர். 

18ம் ஸ்லோகத்தின் பொருள் (ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் இயற்றிய கீதாவிவ்ருத்தி):

நனு ஜீவஸ்யஸ்வத: கர்த்ருத்வாபாவெ யஜேதேத்யாதி விதீனாம் தையர்த்யம் ஸ்யாத் |
ஜடேஷ்வர யுக்தானாம் தத்விஷயத்வாதித்யத அஹ ஞானமிதி ||

இந்த வாக்கியத்தின் ஆதாரத்தினால் ஜீவனுக்கு கர்த்ருத்வமே இல்லாதிருந்தால், ‘ஸ்வர்க காமோயஜேத, அஹரஹஸ் சந்த்யாமுபாஸீத’ ஸ்வர்க்கத்தை விரும்புபவன், ஜ்யோதிஷ்டோம என்னும் பாகத்தை செய்யவேண்டும். காலை மாலையில் சந்தியாவந்தனத்தை செய்யவேண்டும் - என்னும் விதி வாக்கியங்கள் அர்த்தமில்லாமல் போகும். ஜட பதார்த்தங்களுக்கும், ஈஷ்வரனுக்கும், முக்தர்களுக்கும் இந்த யாகங்கள் செய்யவேண்டும் என்று சொல்வது சரியல்ல. ஜீவர்களுக்காகவே இந்த விதி வாக்கியங்கள் வந்திருக்கவேண்டும். அவர்களுக்கும் ஸ்வத: கர்த்ருத்வம் இல்லை என்றபிறகு, இந்த வாக்கியங்கள் வெளிவந்திருக்காது. 

ஞானம்ஞேயம் பரிஞாதா த்ரிவிதா கர்ம ஜோதனா |
கரணம் கர்மகர்தேதி த்ரிவித: கர்மசங்க்ரஹ: ||

யாகாதிகளை செய்யவேண்டும் என்னும் கர்மஜோதனா என்றால், கர்மங்களை தீர்மானித்தல், ஞானம், ஞேயம், பரிஞாதா என்று மூன்று விதங்கள் ஆகும். ஞானம் என்றால் விதி வாக்கியங்களுக்கு உட்பட்டு செய்யவேண்டியவை. அதாவது ‘யஜீத’ தியாகம் செய்யவேண்டும். ‘உபாசீத’ உபாசனை செய்யவேண்டும். ‘ஞேயம்’ என்றால் முயற்சி செய்வது. ‘பரிஞாதா’ யாரென்றால், சர்வக்ஞனும், சர்வ ப்ரேரகனுமான ஸ்ரீபரமாத்மன் நிலைத்திருக்கும் ஜீவராசிகள். இந்த மூன்று விஷயங்களாலேயே, செயல்கள் நடக்கின்றன. 

ததித்ரபு சம்ப்ரத்ய க்‌ஷோஜ்வர இத்யாதாவிவனிமித்த நிமித்தினோர பேதோபசாரேண நிமித்த த்ரைவித்யேன நைமித்திக ஜோதனாபி த்ரிவிதேத்யுபசர்யதே |
யஜதேத்யாதி ஷ்ரௌதஸ்மார்த்தவிதௌஸதி ஸ்வாப்ரவ்ருத்தி விஷய ப்ரேரணாஞானம்பவதி |
ததஷ்வேச்சாப்ரயத்னரூப ப்ரவ்ருத்திராத்ம சன்னிஹிதேஷ்வர ப்ரேரணயா புமர்த்தமுத்திஷ்ய கர்மணி ஜீவஸ்ய பவதி இதி விதிஞானாதே: |
கர்ம ஜோதனயாஷ்ச நிமித்தனிமித்தி பாவோத்யேய: ||

உலகத்தில் ஜுரம் வந்த ஒருவன், தன் ஜுரத்திற்கான காரணத்தை ஆராய்கையில், தான் அதிகமாக தயிர் சேர்த்துக் கொண்டதே அதற்கான காரணம் என்று அறிகிறான். இதில் எது ஞானம்? தயிர். அதற்கு ஞேயம் என்றால் ஆதாரம் எது? தயிர் ஊற்றிக்கொண்ட ஈய பாத்திரம். தயிர் தானாக ஒரு ஆதாரம் ஆகமுடியாத காரணத்தால், அது போட்டு வைத்திருந்த ஈய பாத்திரமும் ஒரு நிமித்தமாயிற்று. இப்படி, ஜுரத்திற்கு காரணம் தயிராக இருந்தாலும், அதற்கு ஆதாரபூதமாக இருந்தது, அது போட்டு வைத்திருந்த ஈய பாத்திரம் ஆகும். இப்படியே விதி வாக்கியங்களின் பொருள், ஞானமானாலும், ஞேயமான தேகம் என்னும் பாத்திரம் இல்லாமல், அது செயல்பட முடியாது. 

யாகாதிகளை செய்யவேண்டும் என்னும் விதி இருப்பதால், பரமாத்மன் ஸ்ருஷ்டி காலத்திலேயே, ஜீவனுக்கு கொடுத்திருக்கும் ஸ்வாதந்த்ர்யத்தினால், அவற்றை செய்யவேண்டும் என்னும் விருப்பம் மட்டும் பிறக்கிறது. அதன்பிறகு, ஜீவனில் இருக்கும் பரமாத்மன், ஜீவனின் சம்ஸ்காரத்திற்கேற்ப, அவனின் விருப்பத்தின்படி, அவனது புருஷார்த்தத்திற்கு சாதனமான கர்மத்தை செய்யத் தீர்மானிக்கிறான். அதாவது, ஜீவனின் அனாதி கர்மத்தையும், ஜீவனின் சம்ஸ்காரத்தையும் பார்த்து, தீர்மானிக்கிறான். அப்போது, ஜீவன், பரமாத்மனின் தீர்மானத்திற்கேற்ப அவற்றை செய்ய முற்பட்டால், உள்ளேயிருக்கும் தத்வாபிமானி தேவதைகளுக்கு பரமாத்மன் ஆணையிட்டு, அவர்களுக்குள் தான் இருந்து, செய்து, ஜீவனிடமிருந்து செய்விக்கிறான். 

இப்படியே, ஞானம் என்றால் விதிவாக்கியம், ஞேயம் என்றால் தேகம் மற்றும் பகவத் விருப்பம். பரிஞாதா என்றால் ஜீவன். ஆக, ஸ்வதந்த்ர கர்த்தா - பரமாத்மன். ஜீவனுக்கு விதிவாக்கியமும், பகவத் ப்ரேரணையும்கூட நிமித்த காரணங்களாக இருக்கின்றன என்று அறியவேண்டும். 

நசஸ்வத: கர்த்ருத்வாபாவாத்வராதீன கர்த்ரு ஜீவஸ்ய விதிஞானத்வாராகதம் ப்ரவ்ருத்யாத்யர்த்தம் விதிவிஷயத்வமிதிம் ஷக்யம்|
அபராதீன கர்த்ருத்வஸ்ய விதிவிஷயதாயாம் ப்ரயோஜகத்வேன க்யாப்யனுபலம்பேனான்வய வ்யதிரேகாப்யாம் பராதீன கர்த்ருஷக்திகஸ்யேவ விதிவிஷயத்வாவஷ்யம் பாவாத் ||

ஆனால் ஜீவன் எதையும் ஸ்வதந்த்ரமாக செய்வதற்கு சாத்தியம் இல்லை. பராதீனனாக இருந்து, பரமாத்மன் செய்வித்தபடியெல்லாம் செய்யும் ஜீவனுக்கு, விதிவாக்கியத்தால் என்ன பயன் என்று சந்தேகம் வரக்கூடாது. ஏனெனில், உலகத்தில் ஸ்வதந்த்ர கர்த்ருகளான ராஜர்களை விதிவாக்கியங்கள் என்றும் கட்டுப்படுத்துவதில்லை. பராதீனன் என்றால் தன் கட்டுப்பாட்டில் இருப்பவர்களை, இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று சொல்வதற்காகவே விதி வாக்கியங்கள் இருக்கின்றன என்று அனைவருக்கும் தெரியும். அதுபோலவே, ஜடர், ஈஷ்வர மற்றும் முக்தர்கள் இவர்கள் மூவருக்கும் விதிக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று தெரிவதால், அது ஜீவர்களுக்கு மட்டுமானதாகும் என்று தெரிகிறது. ஆகையால், ஜீவன் பராதீன கர்த்ரு ஆகிறான். ஆகையால், விதிகள் அவனுக்காகவே சொல்லப்பட்டிருக்கின்றன என்று தீர்மானம் ஆகிறது. இப்படியே கீதா வ்யாக்யானத்தை இயற்றிய ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார். ஆகையால், தாசராயரின் அபிப்பிராயம் என்னவெனில், ஜீவனுக்கு ஸ்வதந்த்ர கர்த்ருத்வ மட்டுமே இல்லையே தவிர, அதனால் அவன் கர்த்தன் இல்லை என்று சொல்லக்கூடாது.

***

No comments:

Post a Comment