#29 - கருணா சந்தி
கேத = (ஸ்ரீபரமாத்மனுக்கு) அழிவில்லை
மோத = மகிழ்ச்சித்தன்மை
ஜயாபஜய = வெற்றி, தோல்வி
மொதலாத = ஆகிய
தோஷகளில்ல = தோஷங்கள் இல்லை
சின்மய = சித்-ஸ்வரூபம்
சாதரதி = பக்தியுடன்
தன்னங்க்ரி கமலவ = தன் பாதாரவிந்தங்களை
நம்பி துதிசுவர = நம்பி வணங்குபவர்களுக்கு
காதுகொண்டிஹ = எப்போதும் காத்துக்கொண்டிருப்பான்
பரம கருண மஹோததியு = அத்யந்த கருணைக்கடலான
சர்வகாமதனு = அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஸ்ரீபரமாத்மன்
தன்னவரு = தன் பக்தர்கள்
மாடிதபராதகள = செய்த தவறுகளை
நோடதலெ = எண்ணிப் பார்க்காமல்
சலஹுவ = காப்பாற்றுவான்.
***
கே2த3 மோத3 ஜயாப1ஜய மொத3
லாத தோ3ஷக3ளில்ல சின்மய
சாத3ரதி3 தன்னங்க்4ரி க1மலவ நம்பி ஸ்து1தி1சுவர |
கா1து3கொ1ண்டிஹ பரமக1ருண ம
ஹோத3தி4யு த1ன்னவரு மாட்த3ப
ராத3க3ள நோட3த3லெ சலஹுவ சர்வகா1மத3னு ||29கேத = (ஸ்ரீபரமாத்மனுக்கு) அழிவில்லை
மோத = மகிழ்ச்சித்தன்மை
ஜயாபஜய = வெற்றி, தோல்வி
மொதலாத = ஆகிய
தோஷகளில்ல = தோஷங்கள் இல்லை
சின்மய = சித்-ஸ்வரூபம்
சாதரதி = பக்தியுடன்
தன்னங்க்ரி கமலவ = தன் பாதாரவிந்தங்களை
நம்பி துதிசுவர = நம்பி வணங்குபவர்களுக்கு
காதுகொண்டிஹ = எப்போதும் காத்துக்கொண்டிருப்பான்
பரம கருண மஹோததியு = அத்யந்த கருணைக்கடலான
சர்வகாமதனு = அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஸ்ரீபரமாத்மன்
தன்னவரு = தன் பக்தர்கள்
மாடிதபராதகள = செய்த தவறுகளை
நோடதலெ = எண்ணிப் பார்க்காமல்
சலஹுவ = காப்பாற்றுவான்.
பொருள்:
சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு, ஏதோ ஒரு பதார்த்தம் கிடைத்தால் மகிழ்ச்சியோ, அது தொலைந்து போனால் துக்கமோ, வெற்றி, தோல்வி இவைகளால் கிடைக்கும் சுக துக்கங்கள் எதுவும் கிடையாது. தன் பாத கமலங்களை நம்பி துதிப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக எப்போதும் அவர் அருகிலேயே காத்துக் கொண்டிருக்கிறான். பரம கருணைக்கடலும், அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவனான ஸ்ரீபரமாத்மன், தன் பக்தர்கள் செய்யும் தவறுகளை கவனிக்காமல், அவர்களுக்கு அருள்வான்.
சிறப்புப் பொருள்:
கேத மோத ஜயாபஜெய மொதலாத தோஷகளில்ல - என்று தாசராயர் சொல்லியிருக்கிறார். ஆனால், பரமாத்மனின் அவதார ரூபங்களில் சுக துக்கங்கள், மகிழ்ச்சி சோகங்கள் ஆகியவை இருப்பது போன்று, பாகவத, ராமாயண காவியங்களைப் படித்தால் நமக்குத் தோன்றும். அதாவது: ராமாயணத்தில் ராவணன் சீதையை அபகரித்துச் சென்றபிறகு, சீதையைப் பிரிந்த சோகத்தில் ஸ்ரீராமன் புலம்பியதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவை அஞ்ஞானிகளை மயக்குவதற்காக செய்யப்பட்ட நாடகமே தவிர, உண்மை அல்ல. இந்த விஷயத்தில் நிர்ணய முதலாம் அத்யாயத்தில்:
அவதாரேஷு யத்கிஞ்சித் தர்ஷயென்னரவத்தரி: |
தச்சாஸுராணாம் மோஹாய தோஷாவிஷ்ணோர் நஹிக்விசித் ||36
அஞ்ஞத்வம் பாரவச்யம் வாவேத பேதாதிகம்ததா |
ததாப்ராக்ருத தேஹத்வம் தேஹத்வாகாதிகம் ததா ||38
அனீஷத்வம் சது:கித்வம் சாம்யமன்யைஸ்ச ஹீனதாம் |
ப்ரதர்ஷயதி மோஹாய தைத்யாதீனாம் ஹரி:ஸ்வயம் ||39
சதஸ்ய கஸ்சித்தோஷோஸ்தி பூர்ணாகிள குணோஹ்யஸௌ ||
ஸ்ரீபரமாத்மன் தன் அவதார ரூபங்களில், மனிதர்களைப் போலவே இருக்கிறான். அவை வெறும் அசுர ஜனர்களின் மோஹனத்திற்காகவே - மனிதர்களைப் போல சுக துக்கங்கள் அவனுக்குக் கிடையாது. சில சமயங்களில் எதுவும் தெரியாததைப் போல அவனும் மற்றவர்களுடன் சேர்ந்து யோசிப்பான். இது எப்போது என்றால், பாகவத 10ம் ஸ்கந்தத்தில்: சுதர்மனின் சபையில் உத்தவாதி மந்திரிகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் சபையில் அமர்ந்திருந்தபோது, இதற்குமுன் சந்தித்திராத ஒரு மனிதர், ஸ்ரீகிருஷ்ணனின் ஆணையின் பேரில் சபையில் நுழைந்து, ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து - ‘தேவா! பாவியான ஜராசந்தன் 20,800 அரசர்களை கைது செய்து அவர்களை கிரிவ்ரஜ என்னும் பட்டணத்தில் வைத்திருக்கிறான். இவர்கள் அனைவரையும் ஈஸ்வரனுக்கு பலி கொடுக்க திட்டமிட்டிருக்கிறான். அந்த அரசர்கள் உன்னிடம் முறையிடுகின்றனர். நீயே ஜராசந்தனைக் கொன்று, அந்த அரசர்களை விடுவிக்க வேண்டும்’ என்று வேண்டினார்.
ராஜதூதனான அந்த பிராமணன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கையில், நாரதர் அங்கு வந்து கிருஷ்ணனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார். ‘கிருஷ்ணா! உன் அத்தை மகனான தர்மராஜன் ராஜசுய யாகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறான். நீ இல்லாமல் அந்த வேலை முடிவதில்லை. நீ இந்திரபிரஸ்தத்திற்கு சென்று அந்த வேலை செய்து முடிக்கவேண்டும். அந்த தர்மராஜனுக்கு தூதனாகவே நான் இங்கு வந்திருக்கிறேன்’ என்றார்.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேர் இரு வேலைகளுக்காக வேண்டுகையில், ஸ்ரீகிருஷ்ணன் அந்த இரண்டில் எதை முதலில் செய்யவேண்டும் என்று புரியாமல் சிந்திக்கும்போது, சபையினரிடமும், ஸ்ரீகிருஷ்ணனிடம் உத்தரவு பெற்று, உத்தவன் சொல்வது : ‘சபையினரே, தர்மராஜன் செய்யத் தீர்மானித்திருக்கும் ராஜசுய யாகம் முடியவேண்டுமெனில் ஜராசந்தனின் வதம் ஆகவேண்டியிருக்கிறது. ராஜர்களை விடுவிக்க வேண்டும் என்றாலும் அதே காரியம் ஆகவேண்டும். இப்படி ஜராசந்தனின் வதம் இரு வேலைகளுக்கும் தேவையே ஆகியிருக்கிறது. அதற்காக, நாம் இப்போது இந்திரபிரஸ்தத்திற்குச் சென்று ராஜசுய யாகத்திற்காக, பீமசேனன் மூலமாக ஜராசந்தனைக் கொல்வதற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்’ என்றார். அனைவரும் இதனை ஒப்புக்கொண்டு அதைப் போலவே செய்வோம் என்றனர்.
ராமாயண காலத்தில் ஸ்ரீராமன், தெற்கு கடற்கரையில் தர்ப்பசயனத்தில் இருந்தபோது, விபீஷணன் ஸ்ரீராமனிடம் சரணாகதி அடைவதற்கு வர, ஸ்ரீராமனோ இவரை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று சுக்ரீவர்களுடன் ஆலோசனை செய்தான். அவர்களோ கூடாது என்றபிறகு, ஸ்ரீஹனுமந்தன் மட்டும் விபீஷணனை ஏற்றுக்கொள்வதே நியாயம் என்றான். ஸ்ரீராமனும், நான் சரணாகதி அடைந்தவர்களை என்றும் விடுவதில்லை என்று சொல்லி, விபீஷணனுக்கு அபயம் அளித்ததாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி அங்கங்கு பரமாத்மன் அஞ்ஞானத்தை காட்டியிருக்கிறான். இவை அனைத்தும் அசுரர்களின் மோகனத்திற்காகவே (அவர்களை மயக்குவதற்காகவே) என்று நினைக்க வேண்டும். சில நேரங்களில் தான் பராதீனனாக இருப்பதாக காட்டிக் கொள்கிறான். அது எப்போது என்றால், சுபத்திரையின் திருமண சந்தர்ப்பத்தில், அவளை அர்ஜுனனுக்குக் கொடுப்பதற்கு பலராமனுக்கு இஷ்டம் இல்லாதபோது, தான் உலக மக்களைப் போல அவதாரம் எடுத்திருப்பதால், அண்ணனின் பேச்சை மீறமுடியாதவாறு இருந்து, அர்ஜுனனை யதி வேடம் தரித்து வருமாறு சொல்லி, பலராமாதி யாதவர்கள் அனைவரும் ரைவத பர்வதத்திற்கு சென்றிருக்கும்போது, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வித்து, இந்திரபிரஸ்தத்திற்கு அனுப்பி, தான் எதுவும் அறியாதவனைப் போல இருந்தான்.
இது மட்டுமல்லாமல், வசுதேவ, தேவகி, நந்தகோப, யசோதை, சாந்திபனி ஆகியோரின் வசத்தில் தான் இருப்பதாக காட்டினான். பீஷ்மாசார்யர் பாணம் விட்டபோது, தன் தேகத்தில் அந்த அம்பு பட்டு ரத்தம் வந்ததாக காட்டிக் கொண்டான். நரகாசுரனுடன் சண்டை போட்டபோது, அவன் விட்ட ஆயுதத்தினால் தான் மூர்ச்சையானது போல காட்டி, சத்யபாமாவினால் காப்பாற்றப்பட்டான். தன் தேகத்தை ப்ராக்ருத சரீரம் என்பதுபோல காட்டிக்கொண்டான். ராமாயணத்தில் ராவணனின் சம்ஹாரம் ஆனபிறகு, சீதையின் அக்னிப்பிரவேச காலத்தில், ஸ்ரீராமனை பிரம்மாதிகள் ஸ்தோத்திரம் செய்திருந்தபோது, ஸ்ரீராமன் தான் யார் என்றே தெரியாதவனைப்போல ‘ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தஷரதாத்மஜம்’ - நான் தசரத ராஜன் என்னும் அரசனின் மகனான மனுஷ்யன் என்கிறான். அப்போது பிரம்மதேவர் - ’அப்படியல்ல. நீ ஸ்ரீமன் நாராயணன். சீதை ஸ்ரீமகாலட்சுமி. நாங்கள் அனைவரும் உன்னை வேண்டியதால், ராவணாதிகளைக் கொல்வதற்காக நீ அவதரித்திருக்கிறாய்’ என்றார்.
கிருஷ்ணாவதாரத்தில் தன் தேகத்தை விட்டுப் போவதாக பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாண்டவர்களின் வனபிரவேச காலத்திலும், சத்யபாமாவின் தந்தையை ஷததன்யன் கொன்றான் என்று கேள்விப்பட்ட சமயத்திலும், ராமாவதாரத்தில் சீதையைப் பிரிந்திருந்த காலத்திலும், அதிக துக்கமுள்ளவனான காட்டிக்கொண்டான். மேலும் ராம கிருஷ்ணாவதார காலத்தில் தசரத வசிஷ்டாதிகள், நந்தகோப, வசுதேவ, பலராம, தர்மராஜ, குந்தி ஆகியோருக்கு தான் நமஸ்கரித்து, அவர்களைவிட தான் சிறியவன் என்று காட்டிக்கொண்டான். இவை அனைத்தையும் அசுர மோகனத்திற்காகவே பரமாத்மன் செய்தான் என்று அறியவேண்டுமே தவிர, பூர்ண குணமுள்ள பரமாத்மனுக்கு எவ்வித தோஷங்களும் இல்லை என்று நிர்ணயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் ‘கேத மோத ஜயாபஜய மொதலாத தோஷகளில்ல’ என்று தாசராயர் சொல்கிறார்.
சாதரதி தன்னங்க்ரி கமலவ நம்பி துதிசுவர காதுகொண்டிஹ - பலிசக்ரவர்த்தி தன்னை முழுவதுமாக நம்பியிருக்கையில், வாமனாவதாரம் எடுத்து அவனை பூமிதானம் கேட்டு, அதன்மூலம் அனைத்தையும் வாங்கி, அவனை சுதல லோகத்திற்கு தள்ளி, அடுத்த மன்வந்தரத்தில் அவனுக்கு இந்திர பதவியைக் கொடுப்பதாக வாக்கு கொடுத்து, அதுவரைக்கும் அவனின் வீட்டு வாயிலை தான் காத்து வருவதாக சொல்லி, இப்போதும் வாமன ரூபத்தில் அப்படியே இருப்பதாக பாகவதம் சொல்கிறது. ஆகையால் தாசராயர் ‘பரமகருண மஹோததி’ என்கிறார். ‘தன்னவர மாடிதபராதகள நோடதலெ சலஹுவ’ என்னும் விஷயத்தில், பீஷ்மாதிகளின் உதாரணத்தைக் காட்டி ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். மேலும், பலிசக்ரவர்த்தி தானம் கொடுக்க முயன்றபோது, சுக்ராசார்யர் அவனை தடுத்தார். அதனையும் மீறி அவன் வாமனுக்கு தானம் கொடுத்ததால், அவனுக்கு அவர் சாபம் கொடுத்தார். ஆனாலும், ஸ்ரீபரமாத்மன் அவர் செய்த தவறுகளை மன்னித்து, அவருக்கு அருளினான்.
No comments:
Post a Comment