ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, March 20, 2020

#12 - வியாப்தி சந்தி

#12 - வியாப்தி சந்தி

த்1ருணக்1ருதா1லய தொ3ளகெ3 பொ1கெ3
ந்தணிஸி ப்ரதி1சி1த்ரத3லி பொ1ரம
ட்ட1னலனிரவனு தோ1ரி தோ1ரத3லிப்ப1 தெ1ரனந்தெ1 |
வனஜஜாண்டதொளகி2ல ஜீவர
1னுவினொளஹொரகி3த்து3 கா1ணிச
தனிமேசேஷனு சகலகர்மவ மாள்பனவரந்தே ||12


த்ருணக்ருதாலயதொளகெ = புல்லால் செய்யப்பட்ட வீட்டில்.
பொகெ = புகை
சந்தணிஸி = பரவி
ப்ரதிசித்ரதலி = ஒவ்வொரு இடத்திலும்
பொரமட்டு = வெளியே வந்து
அனலன = நெருப்பின்
இருவனு = இருப்பை
தோரி = காட்டுகிறது
தோரதலெ = பிரத்யட்சமாகத் தெரியாமல்
இப்பதெரனந்தெ = இருப்பதைப் போல
வனஜஜாண்டதொளு = பிரம்மாண்டத்தில்
அகிள ஜீவர = அனைத்து ஜீவர்களின்
தனுவின = தேகங்களின்
ஒளஹொரகித்து = உள்ளேயும் வெளியேயும் இருந்து
காணிஸதெ = ஜீவருக்குத் தெரியாமல்
அனிமிசேஷனு = தேவோத்தமனான ஸ்ரீபரமாத்மன்
சகல கர்மவ = அனைத்து புண்ய பாபாதி கர்மங்களை
அவரந்தெ = அந்த ஜீவனைப் போல
மாள்பனு = செய்கிறான்.


புல்லால் கட்டிய குடிசை வீட்டினுள் நெருப்பை வைத்தால், அது ஒவ்வொரு இடைவெளியிலும் புறப்பட்டு வெளியில் வந்து, உள்ளேயும் வெளியேயும் பரவியிருக்கும் புகையைப் பார்த்து, அந்த வீட்டில் நெருப்பு இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் நெருப்பைப் பார்க்கமுடியாமல் போகலாம். அதுபோலவே, பரமாத்மனும், பிரம்மாண்டத்தில் இருக்கும் ஜீவர்களின் ஸ்வரூப தேகங்களிலும், ஸ்தூல தேகங்களிலும், மற்றும் பிற அனைத்து இடங்களிலும், உள்ளேயும் வெளியேயும் வியாப்தனாக இருந்து, அந்த ஜீவர்களின் கண்களுக்குத் தெரியாமல், சாதாரண மனிதர்களைப் போலவே தானும் கர்மங்களை செய்கிறான். இந்த புகை உதாரணத்தால், அவன் அனைத்து இடங்களில் வியாப்தனாக இருந்தாலும், எதற்கும் சம்பந்தப்படாமல் இருக்கிறான் என்பதையும் காட்டுகிறார். 

***

No comments:

Post a Comment