#31 - கருணா சந்தி
ஸ்ரீமனோஹர ஷமலவர்ஜித1
கா1மித1ப்ரத3 கை1ரவத3ள
ஷ்யாம ஷபல ஷரண்ய ஷாஸ்வத1 ஷர்க1ராக்ஷசக2 |
ஸாமஸன்னுத1 சகலகு3ணக3ண
தா4ம த்ரிஜகன்னாதவிட்டல
நீ மஹியொளவதரிஸி சலஹித சகல சுஜனரன ||31
ஸ்ரீமனோஹர = லட்சுமிதேவியின் மனதை பரிகரிக்கும்
ஷமலவர்ஜித = தோஷங்கள் அற்றவனான
காமிதப்ரத = விருப்பங்களை நிறைவேற்றும்
கைரவதள ஷ்யாம = குவளை மலரின் இதழைப் போன்ற நீல நிறத்தைக் கொண்ட
ஷபலஷரண்ய = பிராமணாதி வர்ணத்தவர்க்கு அருள்பவனான
சாஸ்வத = நிரந்தரமானவனான
ஷர்கராக்ஷ சகா = தேவதைகளுக்கு நண்பனான
சாமசன்னுத = சாமவேதத்தால் வணங்கப்படுபவனான
சகலகுணகணதாம = அனைத்து நற்குணங்களால் நிறைந்தவனான
ஸ்ரீஜகன்னாதவிட்டல = என் பிம்பமூர்த்தியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன் என்னும் ஸ்ரீபரமாத்மன்
ஈ மஹியொளவதரிஸி = இந்த பூமியில் 10 ரூபங்களால் அவதரித்து
சகலசுஜனரன = அனைத்து யோக்யர்களை
சலஹித = அருளினான்.
எந்த ஸ்ரீபரமாத்மன் மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, ரேணுகா புத்ரனான பரசுராம, ராவணாதிகளைக் கொன்ற தசரதராமன், தேனுகாசுரர்களைக் கொன்ற பலராமனில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணன், புத்த, கல்கி ஆகிய அவதாரங்களால் சஜ்ஜனர்களுக்கு அருள்கிறானோ;
மேலும் எந்த பரமாத்மன் லட்சுமி மனோஹரமானவனோ, தோஷங்கள் அற்றவனோ, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறானோ, குவளை மலரைப் போல நீலவர்ணம் கொண்டவனோ, பிராமணாதி வர்ணத்தவர்களால் வணங்கப்படுபவனோ, அனாதி நித்யனோ, தேவதைகளுக்கு நண்பனாக இருக்கிறானோ, சாமவேதத்தால் வணங்கப்படுகிறானோ, அனைத்து நற்குணங்களால் நிரம்பியவனோ, யார் இந்த பூமியில் அனேக ரூபங்களால் அவதரித்து சஜ்ஜனர்களுக்கு அருள்கிறானோ அவனே என் பிம்பமூர்த்தியான ஸ்ரீஜகன்னாதவிட்டலன் என்னும் ஸ்ரீபரமாத்மன் - என்னும் மங்கள ஸ்லோகங்களால் இந்த சந்தியை முடிக்கிறார் தாசராயர்.
தாசராயர் தசாவதாரங்களைப் பற்றி சொல்லும்போது, கிருஷ்ணாவதாரத்தைக் குறித்து ‘தேனுகாசுர மதன’ என்கிறார். தேனுகாசுரனை பலராமன் கொன்றான் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தைக் குறிக்கும் பூதனா, த்ருணாவர்த்த, கம்ஸ ஆகியோரைக் கொன்றவன் என்று சொல்லாமல், பலராமனைக் குறிப்பதான தேனுகாசுரனை சொல்லி, பலராமனை எடுத்து, ஸ்ரீகிருஷ்ணனை விட்டுவிட்டதாக தோன்றுகிறது. தசாவதாரத்தில் ராமானுஜ மதத்தவர்கள் -
மத்ஸ்யகூர்ம வராஹஸ்ச நாரசிம்ஹஸ்ச வாமன: |
ராமோராமஸ்ச ராமஸ்ச கிருஷ்ண: கல்கீசதேதஷ: ||
என்று மத்ஸ்ய முதல் வாமன வரைக்குமான 5 அவதாரங்கள், பரசுராம, தசரதராம, பலராம, கிருஷ்ண, கல்கி என 5, மொத்தம் 10 அவதாரங்கள் என்று சொல்கின்றனர். ஸ்ரீமதாசார்யரின்படி பார்கவ, ராம, கிருஷ்ண, கல்கி என்று பலராமனை விட்டு புத்தாவதாரத்தை சேர்த்து மொத்தம் 10 அவதாரங்கள் என்று சொல்கிறார். ஆனால், தாசராயரோ இரண்டு மதங்களையும் விட்டு, பலராம, புத்த, கல்கி என்று சொல்லி முக்கியமான கிருஷ்ணாவதாரத்தையே விட்டுவிட்டார். இது ஸ்ரீமதாசார்யரின் மதத்திற்கு எதிராக இருக்கிறது மட்டுமல்லாமல், தாசகூட வியாஸகூடத்தவர்களின் வேறுபாட்டைக் காட்டுகிறது என்று அறியக்கூடாது. தாசராயர் வியாசகூடத்திற்கு எதிராக எப்போதும் ஒரு சொல்கூட சொல்லியவரல்ல என்று அறியவேண்டும். அப்படியிருக்கையில், இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்றால்:
இந்த விஷயத்தில் சிறிது கவனத்துடன் படித்தால் உண்மை புலப்படும். பாகவத 1ம் ஸ்கந்தத்தில் - பரமாத்மனின் முக்கிய அவதாரங்களைப் பற்றி பேசும்போது - ‘
ஏகோனவிம்ஷே விம்ஷதமேவ்ருஷ்ணிஷு ப்ராப்யஜன்மனி |
ராமக்ருஷ்ணாவிதிபுவோ பகவானஹரத்பரம் ||
19 மற்றும் 20வது அவதாரங்களாக, பலராம மற்றும் கிருஷ்ண என்னும் ரூபங்களால், வ்ருஷ்ணி வம்சத்தில் அவதரித்து, பூமியின் பாரத்தைக் குறைத்தார் என்று சொல்கிறார். இந்த வாக்கியத்தால், ராமகிருஷ்ணாதி ரூபங்களைப் போல, பலராம அவதாரமும்கூட, பரமாத்மனின் அவதாரங்களில் 19 மற்றும் 20தாக சேர்த்துக் கொள்வதால், இவையும் பரமாத்மனின் அவதாரங்களே என்று எண்ணவேண்டும். இப்படியிருக்கையில், நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கும் வாக்கியத்திற்கு இது எதிராக இருக்கிறது. நிர்ணயத்தில் - 2ம் அத்தியாயம், 25ம் ஸ்லோகம்) - பரமாத்மனின் மத்ஸ்ய, கூர்மாதி அவதாரங்களை சொல்லியவாறு, 28ம் ஸ்லோகத்தில்,
ததைவ படவாவக்த: கல்கி தன்வந்த்ரி ப்ரபு: |
இத்யாத்யாகேவலோ விஷ்ணுர்னிஷாம் பேத: கதஞ்சன || என்கிறார்.
இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில்: மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பார்க்கவராம, கிருஷ்ண, புத்த, வேதவியாஸ, கபில, தத்தாத்ரேய, ரிஷப, சிம்சுமார, ரிஷி புத்ரரான நர நாராயணர், ஹரி, தாபஸ என்னும் மனு, மஹிதாஸ, ஹம்ஸ, மோகினி, ஹயக்ரீவ, பெண் குதிரையின் ரூபம், கல்கி, தன்வந்த்ரி - இந்த அவதாரங்கள் எல்லாம் பரமாத்மனின் சாட்சாத் அவதாரங்களே. இந்த அவதாரங்களில் பரஸ்பரம் பேதங்களை சிந்திக்கக்கூடாது என்று சொல்லி, பிறகு:
கயஸ்சலக்ஷ்மி ணாத்யாஸ்சத்ரயோ ரோஹிணி நந்தன: |
ப்ரத்யும்னோ ரௌக்மிணேயஸ்ச தத்புத்ரஸ்சானிருத்தக: ||
நர:பல்குன இத்யாத்யாவிசேஷாவேஷினோஹரே: ||
என்று பரமாத்மனின் விசேஷாம்ச அவதாரங்களை சொல்கிறார். இதில் லட்சுமண, பரத, ஷத்ருக்ன, பலராம ஆகியோரும் பரமாத்மனின் விசேஷாம்ச அவதாரர்கள் என்று தெரிகிறது. பலராமன், பரமாத்மனின் சுக்லகேஷாவேஷத்தால் கூடிய சேஷதேவர் என்று பாகவத வாக்கியம் சொல்கிறது. இப்படியாக, ஒரு இடத்தில் பலராமனை பரமாத்மனின் சாட்சாத் அவதாரம் என்றும், இன்னொரு இடத்தில் விசேஷ அம்சம் என்றும் சொல்லியதுபோல தோன்றுகிறது. இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒரே வாக்கியமாக சேர்ப்பதற்காகவே தாசராயர் ‘தேனுகாசுர மதன’ என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவெனில்:
ப்ரலம்பாசுர, தேனுகாசுர ஆகியோரைக் கொன்றது வெறும் பலராமனின் செயல் அல்ல. சுக்லகேஷாவேஷத்தினால் பலராமனுக்குள் நிலைத்திருக்கும் பரமாத்மனே தேனுக முதலானவர்களைக் கொன்றான் என்று பாகவத தாத்பர்ய வாக்கியத்தால் அறிகிறோம். பலராமனுக்குள் இருந்த எந்த பரமாத்மன் தேனுகாசுரர்களைக் கொன்றானோ, அதே பரமாத்மன், ஸ்ரீகிருஷ்ண ரூபத்தினால் கம்சாதிகளைக் கொன்றான் என்று சொல்வதற்காக ‘தேனுகாசுரனைக் கொன்றவன் கிருஷ்ணனே’ என்று புரியவைப்பதற்காக, கிருஷ்ணாவதாரத்திற்கு, ‘தேனுகாசுரமதன’ என்கிறார்.
புத்தாவதாரத்தை சொல்லும்போது ‘த்ரிபுரர ஹானிகைஸித நிபுண’ என்று தாசராயர் சொல்கிறார். உலகத்தில் த்ரிபுராரி என்று ருத்ரருக்கே பெயர் உண்டு. ஹரிவம்ச, பாரதாதிகளிலும், ருத்ரரே த்ரிபுராசுரர்களைக் கொன்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில், ’த்ரிபுரவ ஹானிகைஸித’ பௌத்தாவதாரியான பரமாத்மன் என்று ஏன் சொல்கிறார்? இதன் விளக்கம்: பிரம்ம, விஷ்ணு ஆகியோரின் உதவியினால், ருத்ரதேவர் த்ரிபுரத்தைக் கொன்றது உண்மையானாலும், இந்த தைத்யர்கள் அனைவரும் பூமியில் மறுபடி பிறந்தனர். அது எப்போது என்றால், பாண்டவரின் வம்சத்தவர், வியாசரின் அருளால் தர்மபரிபாலனை செய்து வந்தபோது, பூமியில் அனைவரும் நற்சாஸ்திரங்களைப் படித்து வாழ்ந்து வந்தபோது, தைத்யர்கள் பூமியில் பிறந்து, ரிஷிகளுக்குத் தெரியாதவாறு அவர்களின் நடுவில் இருந்து, ஞானத்தை சம்பாதித்துக்கொண்டு, சத்சம்பிரதாயங்களை பின்பற்றத் துவங்கினர்.
வேதவியாச தேவருக்குப் பிறகும் நற்கல்வியினால் கெட்ட ஆகமங்கள் அனைத்தும் அழிந்துபோனதால், தைத்யர்கள்கூட நல்ல ஆகமங்களையே பின்பற்றத் துவங்கினர். அவிர்பாகமானது ஒரு நாய்க்கு எப்படி யோக்யதை இல்லையோ, அதைப்போலவே, தமஸ்ஸில் அபார துக்கங்களை அனுபவிக்க தகுதியானவர்களான தைத்யர்களுக்கு, சரியான சாதனைகளை செய்வித்து, அவரவர்களுக்கு சரியான கதியை கொடுக்கவேண்டுமென்று பரமாத்மனை தேவதைகள் வேண்டிக்கொண்டனர். பரமாத்மன் தேவதைகளுக்கு அபயம் அளித்து, ஒரு அழகான குழந்தையின் ரூபத்தை எடுத்தார்.
அந்த சமயத்தில் பூமியில் ஒரு அசுரனிடம் ஒரு அசுரன் சுத்தோதனன் என்னும் பெயரில் பிறந்தான். அவன் த்ரிபுராசுரர்களின் மூலபுருஷன். அதாவது பூமியில் அவர்கள் அனைவருக்கும் முன்னாடியே பிறந்தவன். அவனுக்கு ஜித என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இவனுக்கு கயெ என்னும் மனைவியிடம் ஒரு குழந்தை பிறந்தது. (அல்லது கயா க்ஷேத்திரல் பிறந்தது என்றும் அர்த்தம் கொள்ளலாம்). பரமாத்மன் அந்த சிசுவை விலக்கி, அந்த இடத்தில் தான் படுத்துக் கொண்டான். இதனை சுத்தோதனன் அறியாமல், அக்குழந்தையை தனது என்றே பாவித்தான். அந்த சமயத்தில், அந்த தைத்யர்கள் வைதிக கர்மங்களை பின்பற்றி வந்தனர். அதைக்கண்ட அக்குழந்தை சிரிக்க, அப்போதே பிறந்த குழந்தை சிரிப்பதைக் கண்டு, அதற்கான காரணத்தை கேட்டனர்.
அதற்கு அக்குழந்தை, நான் உங்களுக்கு தக்க ஞானோபதேசத்தை செய்வேன் ஆகையால், எனக்கு புத்தன் என்று பெயர். நீங்கள் பயத்துடன் செய்யும் வைதிக கர்மங்களைப் பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்த கர்மங்கள் என்றும் சுகங்களை அளிப்பவையல்ல. என் உபதேசத்தின்படி நீங்கள் நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லி, சாஸ்திரத்திற்கு எதிரான சூன்ய மதத்தைப் போதித்தான். அதனை தைத்யர்கள் நம்பவில்லை. அப்போது, பகவத் ஆணையின்படி ருத்ராதி தேவதைகள் அனைவரும் அங்கு வந்து, தைத்யர்களுக்கு புத்தனின் வாக்கியத்தில் நம்பிக்கை வருவதற்காக, தத்தம் ஆயுதங்களை அக்குழந்தையின் மேல் பிரயோகிக்க, அனைத்தையும் அக்குழந்தை விழுங்கிவிட்டது. ஸ்ரீவிஷ்ணு தன் சக்கரத்தை பிரயோகிக்க, அதனைப் பிடித்து அக்குழந்தை தன் ஆசனமாக ஆக்கி, அதன்மேல் அமர்ந்துவிட்டது.
அப்போது தேவதைகள் அனைவரும் அக்குழந்தையை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த தைத்யர்கள் அனைவரும் புத்த மதத்தை அங்கீகரித்து, பரமாத்மனின் மாயையில் மயங்கி, சத்தர்மங்களை விட்டு, சூன்யவாதிகளாகி தமஸ்ஸை அடைந்தனர். இதற்கு ஆதாரம் நிர்ணய வாக்கியம் 32ம் அத்தியாயத்தில் ‘தக்தா: புராயே த்ரிபுரங்கத்யைவ ருத்ரேண ஜாதா: ப்ருதிவீதலேதே’ என்னும் 140 ஸ்லோகத்திலிருந்து 152 ஸ்லோகம் வரை இதே அர்த்தத்தையே சொல்லியிருக்கிறார். அதன் 148ம் ஸ்லோகத்தில்
யஸ்த்ரை புராணம் ப்ரதமோத்ர ஜாத: ஷுத்தோதனேத்யேவ ஜினேதி ஜோக்த: |
க்ஷேத்ரே கயாக்யேஸ்ய ஷிசும் ப்ரஜாதம் சம்ப்ராஸ்யதூரேத்ர பபூவ விஷ்ணு: ||
என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி பௌத்த அவதாரத்தினால், த்ரிபுராசுரனை நாசம் செய்திருப்பதால் ‘த்ரிபுரவ ஹானி கைஸித’ என்று எழுதுவதற்கு ஆதாரம் கிடைத்தது. இதைத்தவிர, த்ரிபுராசுரர்களின் மனைவியர் தன் பதிவிரதத்தைப் பாதுகாத்து, பார்வதியை பூஜித்து, தமக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை தருமாறு வேண்ட, பார்வதியும், உங்களின் பதிவிரதத்திற்கு பிரச்னை வரும்வரை உங்கள் சௌமாங்கல்யத்திற்கு பிரச்னை இல்லை. விரதம் பங்கமானால், உங்களுக்கு விதவை நிலை வந்துவிடும் என்று வரமளித்தார். இந்த வரத்தினால், த்ரிபுராசுரர்கள் அழிக்கப்படமுடியாமல் இருந்தனர். ஸ்ரீபரமாத்மன் பௌத்த ரூபத்தினால் அந்தப் பெண்களை மோகித்து அவர்களின் விரதங்களை பங்கம் செய்தார். ஆகையால், த்ரிபுரவாசிகளான அசுரர்கள், நாசமடைந்தனர் என்று ஒரு கதையும் இருக்கிறது.
இதற்கு கனகதாசர் தனது ஒரு கீர்த்தனையில் பரமாத்மனின் பத்து அவதாரங்களை, மூன்று சரணங்களில் பாடியிருக்கிறார். அதில் பௌத்தாவதாரத்தை துதித்திருக்கும் விதம் இப்படியாக இருக்கிறது.
ராகம்: ஆனந்தபைரவி. தாளம்: ரூபகம்
சித்தஜ கோடி லாவண்ய முப்புரத
உத்தம ஸ்த்ரியர வ்ரதவளிதெ
மத்தெ கல்கியாகி மதுபர கெடஹீத
ஹத்தாவதாரத ஹரியெம்பெனல்லதெ |
பத்தலெ நிந்தவனெந்தெனெ தேஜியனேரி வத்திஹாரிதனெந்தெனெ
பாரி பாரிகெ சத்துஹுட்டிதவனெந்தனெ ஆதிகேசவ |
பக்தவத்ஸலனெந்து பொகளுவெனல்லதெ நின்ன
நானேனெந்தெனோ ரங்கய்யா ரங்க நின்ன |
என்று சொல்லியிருக்கிறார். இதில் ‘முப்புரத உத்தம ஸ்த்ரீயர வ்ரதவளிதெ’ என்னும் வாக்கியம், மேற்சொன்ன கதைக்கு பொருந்துகிறது. இந்த காரணத்தினாலும், பௌத்தாவதாரத்தினால் த்ரிபுராசுரனை நாசம் செய்தான் என்று சொல்லமுடியும்.
‘கலிமுக தானவர சம்ஹரிஸி தர்மதி காய்த சுஜனரன’ இது கல்கி அவதாரத்தைக் குறிக்கிறது. பாகவத 12ம் ஸ்கந்தம் 3ம் அத்தியாயத்தில் :
இத்தம் கலௌ கதே ப்ராயே ஜனேஷு பரதர்ம ஸு |
தர்மத்ராணாய சத்வேன பகவானவதரிஷ்யதி ||
ஷம்பலாக்ராம முக்யஸ்ய ப்ராஹ்மணஸ்ய மஹாத்மன: |
பவனே விஷ்ணுயஷஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி ||
அஷ்வமாஷுகமாருஹ்ய தேவதத்தம் ஜகத்பதி: |
அஸினாஸாதுதமன மஷ்ட்யைஷ்வர்ய குணான்வித: ||
விசரன்னஸிர்மாக்ஷோண்யாம் ஹயேனாப்ரதிமத்யதி: |
ந்ருப லிங்கச்சதோதஸ்யோன் கோடிஷோ நிஹனிஷ்யதி ||
இப்படி பாவிகளால் நிறைந்த கலியுகம் முடியும்போது, மக்கள் அனைவரும் ம்லேச்சாசாரிகளாக இருப்பதை அறிந்து ஸ்ரீபரமாத்மன் தர்மத்தை காப்பதற்காக பூமியில் அவதரித்தான். ஷம்பல என்னும் கிராமத்தில், முக்யஸ்தனாக இருக்கும் விஷ்ணுயஷஸ் என்னும் பிராமணனின் வீட்டில் கல்கி என்னும் பெயரில் பரமாத்மன் அவதரித்து, அதிவேகமாக ஓடும் ‘தேவதத்த’ என்னும் குதிரைமேல் அமர்ந்து அஷ்ட ஐஸ்வர்யத்தால் நிறைந்து, வாளினை ஏந்தி பூமண்டலத்தில் சுற்றியவாறு, அரசனைப் போல வேடமணிந்த திருடர்களை கொல்வான். அப்போது கிருதயுகம் பிறக்கும். தொடர்ந்து நான்கு பாத தர்மத்தையும் நிர்ணயிப்பான் என்று சொல்லியிருக்கிறார்.
தாசராயரின் ‘கலிமுகதானவர சம்ஹரிஸி’ என்னும் வாக்கியத்தை பார்த்தால், கலி முதலான தைத்யர்களை கொன்றவன் என்ற அர்த்தம் வருகிறது. மேற்சொன்ன பாகவத வாக்கியத்தில் அரசர்களைப் போல வேடமணிந்த திருடர்கள் என்று அர்த்தம் வருகிறது. இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால், ‘கலிமுக’ என்றால், கலியை பார்த்திருப்பவன் என்று பொருள் வருகிறது. அதாவது, கலியுகத்தின் பலனாக அசுர ஆவேசத்தினால், பூமியில் பிறந்து, பாவங்களை செய்து, அரசன் என்று பெயர் பெற்ற திருடர்களைக் கொல்வேன் என்று பொருள்.
‘ஷர்க்கராக்ஷ சக’ என்றால் சூக்ஷத்ரிஷ்டி உள்ளவர்கள் அதாவது தேவதைகள் என்று பொருள். கீதா தாத்பர்யத்தில் இதற்கான விளக்கம் இருக்கிறது.
அனைத்து வேதங்களும் பரமாத்மனையே துதித்திருந்தாலும் ‘ஸாமசன்னுத’ சாம வேதத்தினால் வணங்கப்படுபவன் என்று எதற்கு சொன்னான் என்றால், தேவதைகள் அனைவரும் தன்னை கொண்டாடினாலும் கானரூபமான சாமவேதத்தில், பகவன் மகிமை மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருப்பதால், சாமகான ப்ரியன் என்று பரமாத்மனுக்கு பெயர் வந்திருக்கிறது. மேலும், கீதையில் ‘வேதானாம் சாமவேதோஸ்மி’ - வேதங்களில் என் விபூதி ரூபத்தை சாம வேதத்தில் அறிவாயாக - என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment