ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, March 23, 2020

#15 - வியாப்தி சந்தி

#15 - வியாப்தி சந்தி


மன விஷயதொளகி3ரிஸி விஷயவ
மனதொளகெ3 நெலெகொ3ளிஸி பலு னூ
தனவு சுஸமீசீன விது3பாதேயவெந்த3ருபி1 |
கனஸிலாத3ரு தன்ன பாத33
நெனெவனீயதெ3 சர்வரொளகி3
த்தனுப4விசுவனு ஸ்தூ2லவிஷயவ விஷ்வனெந்தெ3னிஸி ||15

மன = மனதினை

விஷயதொளகெ = பிடித்தவற்றையே கேட்க வேண்டும், அழகானவற்றையே பார்க்க வேண்டும், சுவையானவற்றையே சுவைக்க வேண்டும் என்னும் விஷய சுகங்களில்
இரிஸி = இறக்கி
விஷயவ = அந்த விஷய சுகங்களை
மனதொளகெ = மனதில்
நெலெகொளிஸி = நிலைநிறுத்தி
இது = இந்த விஷய சுகங்கள்
பலுனூதனவு = மிகவும் புதியதாக இருக்கின்றன
சுசமீசீனவாதுது = மிகச் சிறந்தவை
உபாதேயவு = இதனால் சீக்கிரத்தில் சுகம் உண்டாகிறது
எந்தருபி = என்று ஜீவர்களுக்கு தெரியப்படுத்தி
கனஸிலாதரு = கனவிலாவது
தன்ன பாதத நெனெவனு = தன் பாதங்களை நினைப்பவர்களை
ஈயதெ = கொடுக்காமல்
சர்வரொளகித்து = அனைத்து பிராணிகளிலும் இருந்து
விஷ்வனெந்து = விஸ்வ என்று
எனிஸி = அழைக்கப்படுபவன்
ஸ்தூலவிஷயவ = ஸ்தூலமான விஷய போகங்களை அனுபவிப்பான்

சாத்விகர்களின் மனதை மட்டும் தன் பாதாரவிந்த ஸ்மரணையில் நிறுத்தி, விஷய சுகங்கள் தற்காலிகமானவை என்று சொல்லி, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறான் ஸ்ரீபரமாத்மன். ராஜஸ தாமஸ மக்களை அப்படி செய்வதில்லை. அவர்களுக்கு எப்படி அருள்கிறான் என்பதையே இந்த பத்யத்தில் சொல்கிறார் தாசராயர். 

மனதினை விஷய சுகங்களில் நிலைநிறுத்துகிறான். அதாவது, சுவையான உணவுகளையே உண்ண வேண்டும். ஸ்த்ரீயர்களின் போகங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விஷய சுகங்களில் அவர்கள் மனதினை வைத்து, இவை எப்போதும் புதியது, இவற்றையே நாம் எப்போதும் அனுபவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை விதைத்து, அதையே திடமாக்கி, ஜாக்ர அவஸ்தையில் அதாவது அவர்கள் விழித்திருக்கும்போது பகவத் ஸ்மரணையே வராமல், கனவில் கூட தன் பாதாரவிந்தங்களின் ஸ்மரணையைக் கொடுக்காமல், விஷ்வ என்று அழைத்துக் கொண்டு அனைத்து இடங்களிலும் இருந்து, ஸ்தூலமான சுகங்களை தான் அனுபவிக்கிறான். 

ஸ்வநிர்மிதேஷு நிர்விஷ்ணோ புங்க்தே பூதேஷு தத்குர்ணா - பிராணிகளில் தான் இருந்து அந்த தேகத்திற்கு சம்பந்தப்பட்ட சுகங்களை மட்டும் அனுபவிக்கிறான் என்னும் பாகவத வாக்கியமே இதற்கு ஆதாரமாக இருக்கிறது. 

***


No comments:

Post a Comment