#25 - வியாப்தி சந்தி
ஜலவனபஹரிசுவ = நீர் பிடிக்கும்
களிகெ பட்டலு = நாழிகையைக் குறிக்கும் கிண்ணம் (பாத்திரம்)
உளிது = விட்டு
ஜைகண்டெ = ஜாங்கட வாத்தியத்தை
கைபிடிதெளெது = கை பிடித்து தன்னிடம் இழுக்கும்
ஹொடெவந்ததி = அடிப்பதைப் போல
ஸந்தத = எப்போதும்
தானு = ஸ்ரீபரமாத்மன்
கர்த்ரு = செய்பவனாக
ஹலதரானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீபரமாத்மன்
புண்யபாபத பலகளனு = அவரவர்களின் புண்ணிய பாவங்களின் பலன்களை
தேவாசுரர கணதொளு = தேவதைத்யர்களின் குழுவில்
விபாகவமாடி = பிரித்து
உணிசுத = கொடுப்பான்
சாக்ஷியாகிப்ப = அதற்கு தானே சாட்சியாகவும் இருப்பான்.
ஜலவ னப1ஹரிசுவ க3ளிகெ3 ப3
ட்ட1லனுளிது3 ஜைக4ண்டெ கை1பி1டி3
தெ3ளெது3 ஹொடெவந்த3த3லி சந்த1த1 க1ர்த்ரு தா1னாகி3 |
ஹலத4ரானுஜ புண்ய பாபத
ப2லக3ளனு தேவாசுரர க3ண
தொளு விபா4க3வ மாடி உணிசுத சாக்ஷியாகிப்ப ||25
ஜலவனபஹரிசுவ = நீர் பிடிக்கும்
களிகெ பட்டலு = நாழிகையைக் குறிக்கும் கிண்ணம் (பாத்திரம்)
உளிது = விட்டு
ஜைகண்டெ = ஜாங்கட வாத்தியத்தை
கைபிடிதெளெது = கை பிடித்து தன்னிடம் இழுக்கும்
ஹொடெவந்ததி = அடிப்பதைப் போல
ஸந்தத = எப்போதும்
தானு = ஸ்ரீபரமாத்மன்
கர்த்ரு = செய்பவனாக
ஹலதரானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீபரமாத்மன்
புண்யபாபத பலகளனு = அவரவர்களின் புண்ணிய பாவங்களின் பலன்களை
தேவாசுரர கணதொளு = தேவதைத்யர்களின் குழுவில்
விபாகவமாடி = பிரித்து
உணிசுத = கொடுப்பான்
சாக்ஷியாகிப்ப = அதற்கு தானே சாட்சியாகவும் இருப்பான்.
கடிகாரம் இல்லாத அந்த காலத்தில், காலத்தைக் கண்டுபிடிப்பதற்காக 4 அங்குல அகலம், 4 அங்குல ஆழமும், அடியில் ஒரு சிறிய துளை கொண்ட ஒரு பாத்திரத்தை (அதன் பெயரே ‘களிகெ பட்டலு’ - நாழிகையை சொல்லும் பாத்திரம்) வேறொரு பெரிய நீருள்ள பாத்திரத்தில் மூழ்குமாறு செய்வர். அந்த துளையுள்ள பாத்திரம் எப்போது முழுமையாக நீரில் மூழ்குகிறதோ, அப்போது ஒரு நாழிகை ஆகிவிட்டது என்று பொருள்.
இந்த பாத்திரத்தை செய்யும் விதத்தை பாகவதத்தில் இப்படி சொல்லியிருக்கின்றனர்.
த்வாதஷார்த்த பலோன்யானஞ் சதுர்பிச்ஷ துரங்குலை: ||
ஸ்வர்ணமாப்யை: க்ருதச்சித்ரம் யாவத் ப்ருஸ்தம் ஜலம்பிபேத் ||
ஆருபலகாளு என்றால் 18 தோலா (1 தோலா = 11.66கிராம்) அரிசி பிடிக்கும் ஒரு பித்தளை அல்லது தாமிர பாத்திரம். அதன் நடுவில் 4 அங்குல நீளத்திற்கு ஒரு துளையைப் போட்டு அந்த பாத்திரத்தை மேலிருந்து பிடிப்பதற்கு ஒரு கயிறு கட்டவேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் இந்த பாத்திரத்தை விட்டால், நடுவில் இருக்கும் துவாரத்தின் மூலமாக இதில் நீர் நிரம்பும். துளையுள்ள பாத்திரம் முழுதாக முழுகிவிட்டால், ஒரு நாழிகை ஆகிவிட்டது என்று பொருள். இப்படி ஒரு நாழிகை முடிந்தவுடன், பக்கத்தில் இருக்கும் நேரம் காப்பாளர், 1,2,3 என்று நாழிகைகளுக்கேற்ப ஜாங்கடையில் சத்தம் செய்து நேரத்தை தெரிவிப்பார். இப்படி நீர் நிரம்புகிறது என்பதை அந்த காப்பாளருக்குத் தெரியுமே தவிர, அந்த பாத்திரத்திற்கு தெரிவதில்லை. அப்படியே அந்த பாத்திரம் முழுகியபிறகு, மறுபடி அதை வெளியில் எடுத்து, நீரைக் கொட்டிவிட்டு, மறுபடி அந்த பெரிய பாத்திரத்தில் வைப்பார்.
ஜீவர்களின் விஷயத்தில் பரமாத்மனும் இந்த நேரம் காப்பாளரைப் போல இருப்பான். பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரே, புண்ணிய பாவங்கள். ஜீவர்களின் ஸ்வபாவத்தை அறிந்து, அவர்களின் ஸ்தூல தேகத்தை ஸ்ருஷ்டித்து, பாத்திரத்து நடுவில் துளை போட்டு, அதில் நீர் நிரம்புவதைப்போல, பரமாத்மனும் ஜீவர்களின் ஸ்தூல தேகத்தில் அவர்களுக்கு சிறிது ஸ்வாதந்த்ர்யம் என்னும் துளையைக் கொடுத்திருக்கிறார். அதனால், சிறிது ஆசை மட்டும் தோன்றுகிறது.
பாத்திரம் தானாகவே நீரை நிரப்பினாலும், பாதுகாப்பாளர் அதன் அருகில் அமர்ந்து அது எவ்வளவு நீர் கொண்டிருக்கிறது என்பதை அறிவானோ, அது போல, ஜீவனும் அஸ்வதந்த்ரனாக பரமாத்மனால் அருளப்பட்டு, தேகத்தில் அவன் அளித்த அல்ப ஸ்வாதந்த்ர்யத்தால், தன் கர்மபலன்களுக்கு ஏற்ப, புண்ணிய பாவங்களை ஏற்றுக்கொள்கிறான். பாத்திரம் நிரம்பிவிட்டது என்பதை அறியும் காப்பாளர், ஜாங்கடவை அடிப்பது போல, பரமாத்மன், ஜீவர்களின் சாதனை முடிந்துவிட்டது என்பதை அறிந்து, அவர்களின் தகுதிக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறார்.
ஜாங்கடையில் எவ்வளவு முறை சத்தம் வருகிறது என்பதை வைத்து நேரத்தை மனிதர்கள் அறிவதைப் போல, ஜீவர்கள் தத்தம் புண்ணிய பாவ கர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இப்படி நேரத்தை தெரிவிக்கும் காப்பாளர், அதற்கு எப்படி சாட்சியாக இருக்கிறாரோ, அதுபோலவே பரமாத்மனும், பலன்களை தேவ தைத்யர்களுக்கு பிரித்துக்கொடுத்து, தான் அதற்கு சாட்சியாக இருக்கிறார்.
***
No comments:
Post a Comment