#7 - வியாப்தி சந்தி
தனு சதுஷ்டயகளொளு = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் நான்கு ரூபங்களைக் கொண்ட தன் சரீரங்களில்
நாராயணனு ஹ்ருத்கமலாக்ய சிம்ஹாசனதொளு = இதயக் கமலம் என்னும் சிம்மாசனத்தில்
அனிருத்தாதி ரூபகளிந்த ஷோபிஸுத = அனிருத்தாதி ரூபங்களால் நிலைத்திருந்து
தானே = நாராயண ரூபியான தானே
சேவ்ய சேவ்யகனெனிஸி = நாராயண ரூபத்தினால் வணங்கப்படுபவனாகவும்; அனிருத்தாதி ரூபங்களினால் வணங்குபவனாகவும் இருந்து
சேவாசக்த சுரரொளு = தன்னையே வணங்குபவர்களான ரமா பிரம்மாதி தேவதைகளில்
அனவரத = எப்போதும்
நெலெஸித்து = நிலைத்திருத்து
அவரந்தெ = ரமா பிரம்மாதிகளைப் போலவே
சேவெயகொம்ப = சேவையை ஸ்வீகரிக்கிறான்
அல்லது, அவரந்தெ = ரமா பிரம்மாதிகள், இந்திராதிகளிடமிருந்து சேவையைப் பெற்றுக் கொள்வதைப் போல, தானும் அனைத்து தேவதைகளிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்கிறான்.
த1னு சதுஷ்டயக3ளொளு நாரா
யணனு ஹ்ருத்க1மலாக்ய சிம்ஹா
சனதொளு அனிருத்தாதி ரூபக3ளிந்த ஷோபிசுத |
தனகெ3 தா1னே சேவ்ய சேவக
நெனிஸி சேவாசக்த சுரரொள
க3னவரத நெலெசித்து சேவெய கொம்பனவரந்தே ||7தனு சதுஷ்டயகளொளு = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் நான்கு ரூபங்களைக் கொண்ட தன் சரீரங்களில்
நாராயணனு ஹ்ருத்கமலாக்ய சிம்ஹாசனதொளு = இதயக் கமலம் என்னும் சிம்மாசனத்தில்
அனிருத்தாதி ரூபகளிந்த ஷோபிஸுத = அனிருத்தாதி ரூபங்களால் நிலைத்திருந்து
தானே = நாராயண ரூபியான தானே
சேவ்ய சேவ்யகனெனிஸி = நாராயண ரூபத்தினால் வணங்கப்படுபவனாகவும்; அனிருத்தாதி ரூபங்களினால் வணங்குபவனாகவும் இருந்து
சேவாசக்த சுரரொளு = தன்னையே வணங்குபவர்களான ரமா பிரம்மாதி தேவதைகளில்
அனவரத = எப்போதும்
நெலெஸித்து = நிலைத்திருத்து
அவரந்தெ = ரமா பிரம்மாதிகளைப் போலவே
சேவெயகொம்ப = சேவையை ஸ்வீகரிக்கிறான்
அல்லது, அவரந்தெ = ரமா பிரம்மாதிகள், இந்திராதிகளிடமிருந்து சேவையைப் பெற்றுக் கொள்வதைப் போல, தானும் அனைத்து தேவதைகளிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்கிறான்.
ஸ்ரீபரமாத்மன், நாராயண ரூபத்தினால் செய்யும் வேலைகள் என்னவெனில்:
அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ எனும் நான்கு ரூபங்கள் உள்ள தன் சரீரங்களின் இதய கமலங்கள் என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்து, அவற்றின் நடுவில் காட்சியளிக்கிறான். அதாவது அனிருத்த நாமக பரமாத்மனின் தேகத்தின் இதய கமலத்தில் நாராயணன், அனிருத்தாதி நான்கு ரூபங்களால் சேவையை ஸ்வீகரித்தவாறு காட்சியளிக்கிறான். இதைப் போலவே, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ ரூபங்களின் நடுவில், ஒவ்வொரு ரூபத்தின் இதய கமலம் என்னும் சிம்மாசனத்திலும், நாராயண ரூபத்தில் நிலைத்திருந்து, அனிருத்தாதி நான்கு ரூபங்களால் வணங்கப்பட்டு காட்சியளிக்கிறான் என்று அறியவேண்டும்.
இப்படி அனிருத்தாதி ரூபங்களால் சேவை செய்தவாறு, நாராயண ரூபத்தினால் அந்த சேவையைப் பெற்றவாறு, தானே சேவ்ய சேவகன் என்று பெயர் பெற்றிருக்கிறான். இதுமட்டுமல்லாமல், தன்னை எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும், ரமா பிரம்மாதி தேவதைகளின் இதய கமலம் என்னும் சிம்மாசனத்திலும், அனிருத்தாதி நான்கு ரூபங்களில் நிலைத்திருந்து காட்சியளித்தவாறு, ரமா பிரம்மாதிகளால் சேவையைப் பெற்று, அந்தர்யாமி ரூபத்தினால் சேவையைப் பெற்றுக் கொள்கிறான்.
தனுசதுஷ்டயகளொளு - என்னும் சொல்லுக்கு அனிருத்தாதி நான்கு தேகங்களில் என்று பொருள் சொல்வதோடு மட்டுமல்லாமல் இன்னொரு பொருளும் சொல்லலாம். ஒவ்வொரு ஜீவனுக்கும் தேகாவரணம் (மூடி) உண்டு. அதாவது ; முதலில் ஜீவனின் ஸ்வரூப தேகம், இரண்டாவது லிங்கதேகம். இது ஜீவனின் ஸ்வரூப தேகத்திற்கு மேல் மூடியைப் போல உள்ளது. இதன் மேல் அனிருத்த தேகம் மூடிக் கொண்டிருக்கிறது. இதன் மேல் இந்த ஸ்தூல தேகம் இருக்கிறது. ஸ்ரீமன் நாராயணன், இந்த நான்கு தேகங்களிலும், இதய கமல சிம்மாசனத்தின் மேல், அனிருத்தாதி நான்கு ரூபங்களால் காட்சியளித்தவாறு நிலைத்திருந்து, ஜீவனின் ரூபமாக ஜீவனில் இருந்து சேவை செய்து, ஸ்ரீநாராயண ரூபத்தினால் சேவையை ஏற்றுக் கொள்கிறான்.
***
No comments:
Post a Comment