#14 - வியாப்தி சந்தி
***
ஸ்ருதிததிகளிகெ கோ3சரிசத3
பிரதிமஜா னந்தா3த்மனச்யுத
விதத விஷ்வாதா4ர வித்4யாதீ4ஷ விதி4ஜனக1 |
பிரதிதிவச சேதனரொளகெ ப்ரா
க்ருத புருஷனந்த3த3லி சஞ்சரி
சுத நியம்ய நியாமகனு தானாகி3 சந்தெய்ப ||14
ஸ்ருதிததிகளிகெ = வேத சமூகங்களுக்கு
கோசரிஸத = முழுமையாக தரிசனமளிக்காத
அப்ரதிம = சமானம் இல்லாத
ஆனந்தாத்மனு = ஆனந்த ஸ்வரூபனான
அச்யுத = நாசம் இல்லாதவனான
விதத = அனைத்து இடங்களிலும் வியாப்தனான
விஷ்வாதார = உலகத்திற்கு ஆதாரமானவனான
வித்யாதீஷ = வித்யைக்கு அதிபதியான ரமாதேவியின் தலைவனான
அல்லது
விஷ்வாதார வித்யாதீஷ = உலகத்திற்கு ஆதாரமான வித்யைக்கு தலைவனான
விதிஜனக = பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன்
ப்ரதிதிவஸ = தினந்தோறும்
சேதனரொளகெ = ஜீவர்களில் இருந்து
ப்ராக்ருத புருஷ நந்ததலி = சாமான்யரான பஞ்சபூத சரீரங்களைக் கொண்ட புருஷனைப் போல
நியம்ய = நண்பனைப் போல அவனுக்குக் கட்டுப்பட்டவனைப் போல
நியாமக = அதிபதிகளில் இருந்து, ஆணைகளை பிறப்பிப்பவனைப் போலவும்
சந்தெய்ப = மக்களுக்கு சமாதானம் அளிக்கிறான்.
வேத ஸ்வரூபளான, துர்கா ரூபியான ரமாதேவியும்கூட யாரின் குணரூப ஸ்வரூபங்களை முழுமையாக அறிவதில்லையோ, யார் தனக்கு ஒப்புமை இல்லாதவனோ, உத்பத்தி சூன்யனோ, ஆனந்த ஸ்வரூபனோ, நாசம் இல்லாதவனோ, அனைத்து இடங்களிலும் வியாப்தனோ, உலகத்திற்கு ஆதாரமானவனோ, அனைத்து வித்யைக்கும் தலைவனோ, பிரம்மனின் தந்தை என்று அழைத்துக் கொள்பவனோ, அத்தகைய ஸ்ரீபரமாத்மன், ப்ரக்ருதி சம்பந்தமான, மூன்று குணங்களுக்கும் சம்பந்தமான ஜீவர்களின் ப்ராக்ருத தேகத்தில், தானும் ப்ராக்ருத ரூபத்தைக் கொண்டு இருந்தவாறு, ஒருவனுள் இருந்து ஆணையைப் பிறப்பிக்கிறான், இன்னொருவனில் இருந்து அதை நிறைவேற்றுகிறான். இப்படி அரசாட்சி செய்பவர்களில் இருந்து ஆணையைப் பிறப்பித்து, மகிழ்ச்சியைக் கொடுக்கிறான். மற்றவர்களில் இருந்து அந்த ஆணையை நிறைவேற்றி, பரிசுகளைப் பெறவைத்து, மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்.
No comments:
Post a Comment