ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, March 21, 2020

#13 - வியாப்தி சந்தி

#13 - வியாப்தி சந்தி

பா1313ளடி3கெ3ரெயெ சலிலவு
தோ1து3 கொ1ம்பெ3களுப்பி3 பு1ஷ்ப1
ஸ்வாது32லவீவந்த33லி சர்வேஸ்வரனு ஜனரா
ராதனெய கைகொண்டு பி3ரம்ம ப4
வாதி33ள நாமத3லி ப2லவி
த்தா13ரிசுவனு த1ன்ன மஹிமெய தோ1ரகொ33 ஜகக்கெ ||13

பாதபகள = மரங்களின்
அடிகெ = வேருக்கு
ஸலிலவு = நீரினை
எரியெ = ஊற்றினால்
தோது = பூமி நனைந்து
கொம்பெகளுப்பி = அதன் கிளைகள் வளர்ந்து
புஷ்ப = பூக்களை
ஸ்வாது பல = சுவையான பழங்களை
ஈவந்ததலி = கொடுப்பதைப் போல
சர்வேஷ்வரனு = அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனான பரமாத்மன்
ஜனர = மக்கள் செய்யும்
ஆராதனெய = பூஜைகளை
கைகொண்டு = ஏற்றுக்கொண்டு
பிரம்ம பவாதிகள நாமதலி = பிரம்ம ருத்ராதி பெயர்களால்
பலவித்து = பலன்களைக் கொடுத்து அருள்கிறான்
ஜககெ = உலகிற்கு, (இந்த தத்வத்தை)
தோரகொட = காட்டிக் கொள்ள மாட்டான். 

பாகவத நான்காம் ஸ்கந்தத்தில் :

யதா தரோர்மூல நிஷேசனேன த்ருப்யந்தி தத் ஸ்கந்த புஜோபஷாகா: |
ப்ராணோபஹாராச்ச யதேந்த்ரியாணாம் ததைவ சர்வார்ஹணமச்யுதேஜ்யா ||

ஒரு மரத்தில் வேருக்கு நீர் ஊற்றினால், எப்படி அதன் கிளைகள் மகிழ்ந்து, வளர்கிறதோ, மற்றும் ஜீவாதாரத்திற்காக உணவு உண்டால், எப்படி கை கால்கள் முதலான இந்திரியங்கள் வளர்ந்து திடமாகிறதோ, அது போலவே, நமக்கு மூலபூதனான அதாவது வேர் போல இருக்கும் பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனை பூஜித்தால், அதனால் உலகிற்கு சுகம் உண்டாகும். 

ஜனராராதனெய கைகொண்டு பிரம்ம பவாதிகள நாமதலி பலவித்தாதரிசுவனு - ஜீவர்களில் சாத்விகர், ராஜஸர் மற்றும் தாமஸர் என்று மூன்று வகையினர் உண்டு. அதில் சாத்விகர்களான த்ருவன், பிரகலாதன் ஆகியோர் நிஷ்காமர். விஷ்ணுவையே பஜிப்பவர்கள். ராஜஸர், சகாமர் என்றால் பலன்களை எதிர்பார்த்து பஜிப்பவர்கள். மற்றவர்களை துன்புறுத்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் பஜிப்பவர்கள் தாமஸர்கள். பாகவத 11ம் ஸ்கந்தத்தில் வரும் இந்த ஸ்லோகமே இதற்கு ஆதாரமானதாகும். 

மதர்பணம் நிஷ்பலம்வா சாத்விகம் நிஜகர்மதத் |
ராஜஸம் பலசங்கல்பம் ஹிம்ஸா ப்ராயாதி தாமஸம் ||

பலன்களை எதிர்பார்த்து பூஜிப்பவர்களாகட்டும், பிறரை இம்சிக்க வேண்டும் என்று நினைத்து பூஜிப்பவர்களாகட்டும், அவர்கள் விஷ்ணுவை பஜிப்பதில்லை. பிரம்மனையோ, ஈஸ்வரனையோ பஜிக்கிறார்கள். அது ஏனெனில்: பாகவத 10ம் ஸ்கந்தத்தில் :

ஷாபப்ரஸாதயோரீஷா: பிரம்மா விஷ்ணு ஷிவாதய: |
ஸத்ய: ஷாபப்ரஸாதோங்கஷிவ பிரம்மாச நாச்யுத: ||

சாபத்தைக் கொடுக்க வேண்டுமென்றாலும், வரங்களைக் கொடுக்க வேண்டுமென்றாலும், பிரம்ம, விஷ்ணு, சிவ ஆகியோரையே நினைக்க வேண்டும். இவர்கள் அனைவரும் அதிபதிகளே. ஆனால், சீக்கிரத்தில் தரிசனம் கொடுத்து, வரங்களைக் கொடுக்க வேண்டுமென்றாலும், சிறிய அபராதத்திற்கு கோபத்துடன் சாபத்தைக் கொடுப்பதானாலும், பிரம்ம ருத்ரரே அப்படி செய்வர். ஆனால், விஷ்ணு அப்படி அல்ல. (கஷ்டப்பட்டு வெகு காலம் ஆராதனை செய்தால், நிரந்தரமான பலன்களைக் கொடுப்பவர் விஷ்ணு). இப்படி இருக்கையில், மற்றவர்களை துன்புறுத்த வேண்டும் என்னும் விருப்பத்தில், விரைவாக பலன்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள், பிரம்ம ருத்ராதிகளை பஜிக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு விரைவாக பலன்களைப் பெறுகின்றனரோ, அவ்வளவு விரைவாக நாசமும் அடைகிறார்கள். சீக்கிரத்தில் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் தற்காலிகமே ஆகின்றன.

தற்போது சமூகத்தில், ஒரு வேலை ஆவதற்காக, ஒரு சாதாரண வேலையில் இருப்பவரையோ, அல்லது மிகப்பெரிய வேலயில் இருப்பவரையோ பார்க்க வேண்டுமெனில், அதற்கான பலன்களைப் பெறவேண்டுமெனில், எப்படி வித்தியாசம் இருக்கின்றதோ, அதுபோலவே, இதர தேவதைகளைக் கண்டு பலன்களைப் பெறுவதும், ஸ்ரீபரமாத்மனைக் கண்டு வரங்களைப் பெறுவதிலும்கூட வித்தியாசங்கள் இருக்கின்றன. 

பாகவத 10ம் ஸ்கந்தத்தில், வ்ருகாசுரன் (பஸ்மாசுரன்) நாரதரிடம் கேள்வி கேட்டபோது, 

வ்ருகோனாமாஸுர: புத்ரஷகுனே: பதினாரதம் த்ருஷ்ட்வாஷுதோஷம் பப்ரச்ச தேவேஷுத்ரி ஷுதுர்மதி: |
ச ஆதிதேஷகிரிஷ முபாதாவ ஸ்வஸித்தயே ||
ஸோல்பாப்யாம் குணதோஷாப்யாமாஷு துஷ்யதி குப்யதி ||

சகுனியின் மகனான வ்ருகாசுரன், நாரதரைக் கண்டு - ‘ஸ்வாமி, நாரதரே, பிரம்ம விஷ்ணு சிவன் இவர்களில் விரைவாக வரங்களைக் கொடுப்பவர் யார்?’ என்று கேட்டார். அதற்கு நாரதர் - ‘ஹே அசுரனே, ருத்ரதேவரை பூஜிப்பாயாக. அவரே விரைவாக பலன்களைக் கொடுப்பவர். சிறிய தவறுகளுக்கும் தண்டனை கொடுப்பார். பாணாசுரன் முதலானவர் செய்த தவத்திற்கு மெச்சி, அவனின் வீட்டு வாயிலை காத்தவர் அவர்’ என்று பதிலளித்தார். இந்த காரணத்தினாலேயே ராஜஸ தாமஸர்கள் பிரம்ம ருத்ராதிகளை வணங்குகின்றனர். 

ஆகாஷத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் |
சர்வதேவ நமஸ்கார: கேஷவம் ப்ரதிகச்சதி ||

இந்த ஸ்லோகத்தின்படி, ஆகாயத்திலிருந்து விழும் நீர் அனைத்தும் எப்படி இறுதியில் கடலுக்குப் போய் சேர்கிறதோ, அது போலவே, எந்த தேவதையை நினைத்து வணங்கினாலும், அது ஸ்ரீபரமாத்மனையே போய் சேர்கிறது. அதாவது, ஸ்ரீபரமாத்மனே அந்த தேவதையின் ரூபத்தில், தேவதைகளில் இருந்து, பூஜையை ஏற்று, அவர்களுக்கு தக்க பலன்களைக் கொடுக்கிறார். இதே அபிப்பிராயத்தினாலேயே தாசராயர் - ‘பிரம்ம பவாதிகள நாமதலி பலவித்து’ என்று சொல்கிறார். 


ராவண, ஹிரண்யகசிபு ஆகியோர் பிரம்மதேவரைக் குறித்து தவம் செய்ய, ஸ்ரீபரமாத்மன், பிரம்மனின் அந்தர்யாமியாக இருந்து, தரிசனம் அளித்து, அவர்களுக்கு வரம் அளித்தான். வ்ருகாசுரன் முதலானோர் ருத்ரதேவரைக் குறித்து தவம் செய்ய, ஸ்ரீபரமாத்மன், ருத்ரரில் அந்தர்யாமியாக இருந்து, தரிசனம் அளித்து, வரங்களை அளித்தான் என்பது பொருள். யோக்யரோ, அயோக்யரோ, அவர்களின் தவத்திற்கு தக்க வரங்களைக் கொடுத்து ஆதரிக்கிறான். ஆனால், பிரம்ம ருத்ரர்களில் இருந்து, வரங்களை அளித்தவன் தானே என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாதவன். இந்த ரகசியங்களை ஞானிகள் மட்டுமே அறிவர். 

***



No comments:

Post a Comment