#4 - வியாப்தி சந்தி
ஸ்ரவண நயன க்ராணத்வக்ரஸ = காது, கண், முக்கு, தோல், நாக்கு
இவுகளலி = இவற்றில்
வாக்பாணி பாதாதவயவகளலி = வாய், கை, கால், ஆகிய சொற்களால்
அவயவகளலி = அந்த உறுப்புகளில்
தத்குணகளலி = கேட்பது, பார்ப்பது, செய்வது, நடப்பது ஆகிய குணங்களில்
தத்பதிகளொளகெ = கண் முதலான இந்திரியாபிமானி தேவதைகளில்
ப்ரவிததனு = நிலைத்திருக்கிறான்
க்ருதிபதி = க்ருதி நாமகளான லட்சுமிதேவியின் பதியான ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன்
விவிதகர்மவ = பற்பல (அனைத்து) செயல்களையும் செய்து, செய்வித்து
பவகெ = சம்சார பந்தனத்திற்கு
காரணனாகி = நிமித்த காரணனாகி
திளிஸதலெ = ஜீவர்களுக்கு தெரியாமல்
திருகுதிஹனு = பூ, ஸ்வர்க்க, நரகாதி உலகங்களில் திரிந்து கொண்டிருக்கிறான்.
***
ஸ்ரவண நயன க்4ராண த்வக்3ரஸ
நிவுக3ளலி வாக்பா1ணி பா1தா3
த்யவயவக3ளலி தத்கு3ணகளலி
தத்ப1தி1க3ளொளகெ3 |
ப்ரதி1த1த1னு தா1னாகி3 க்ருதி1பதி1
விவித4க1ர்மவ மாடி3 மாடி3ஸி
ப4வகெ1 கா1ரணனாகி தி1ருகி3ஸுதி1ஹனு தி1ளிசத3லெ ||4
ஸ்ரவண நயன க்ராணத்வக்ரஸ = காது, கண், முக்கு, தோல், நாக்கு
இவுகளலி = இவற்றில்
வாக்பாணி பாதாதவயவகளலி = வாய், கை, கால், ஆகிய சொற்களால்
அவயவகளலி = அந்த உறுப்புகளில்
தத்குணகளலி = கேட்பது, பார்ப்பது, செய்வது, நடப்பது ஆகிய குணங்களில்
தத்பதிகளொளகெ = கண் முதலான இந்திரியாபிமானி தேவதைகளில்
ப்ரவிததனு = நிலைத்திருக்கிறான்
க்ருதிபதி = க்ருதி நாமகளான லட்சுமிதேவியின் பதியான ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன்
விவிதகர்மவ = பற்பல (அனைத்து) செயல்களையும் செய்து, செய்வித்து
பவகெ = சம்சார பந்தனத்திற்கு
காரணனாகி = நிமித்த காரணனாகி
திளிஸதலெ = ஜீவர்களுக்கு தெரியாமல்
திருகுதிஹனு = பூ, ஸ்வர்க்க, நரகாதி உலகங்களில் திரிந்து கொண்டிருக்கிறான்.
காது, கண், மூக்கு, மெய், நாக்கு என்னும் ஐந்து ஞானேந்திரியங்களும், வாய், கை, பாதம், மல ஜல உறுப்புகள் என ஐந்து கர்மேந்திரியங்களும், அவுகள குணகள என்றால் கேட்பது, பார்ப்பது, குளிர் வெயில் மாற்றங்களை அனுபவிப்பது, உப்பு காரம் முதலான அறுசுவைகளை அறிவது, பேசுவது, நடப்பது, மலஜல விசர்ஜனங்களை செய்வது என இவையே பத்து இந்திரியங்களின் குணங்கள் ஆகும். இவுகளலி தத்பதிகள் என்றால், காதுக்கு அபிமானி தேவதைகள், திக்தேவதைகள், கண்ணிற்கு அபிமானி தேவதை சூரியன், மூக்கிற்கு அஸ்வினி தேவதைகள், மெய்க்கு வாயு, முகத்திற்கு அக்னி, கைகளுக்கு தேவேந்திரன், பாதங்களுக்கு ஜயந்த, மல ஜல உறுப்புகளுக்கு முறையே மித்ர, தக்ஷ ஆகிய தத்வாபிமானி தேவதைகளிலும் நிலைத்திருந்து, க்ருதிபதியான ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன், ஜீவர்களின் அனாதி கர்மங்களுக்கேற்ப, சம்சாரத்திற்குக் காரணமான கர்மங்களை, தானும் செய்து, செய்வித்து, சம்சாரத்திலேயே ஜீவர்களை இருத்தி, அவர்களுக்குத் தெரியாமலேயே, அவர்களின் கர்மங்களுக்கேற்ப, அவர்களை பூமியில் பிறக்க வைப்பது, நரகத்தில் தள்ளுவது, ஸ்வர்க்கத்திற்கு போவது மறுபடி சம்சாரத்திற்கே வருவது என திரிந்து கொண்டிருக்கிறான்.
தத்வாபிமானி தேவதைகள் யார்யார் என்பதை பாகவத மூன்றாம் ஸ்கந்தம் ஏழாம் அத்தியாயத்தில்:
தஸ்யாக்னிராஸ்யம் நிர்பின்னம் லோகபாலோவிஷத்பதம் |
நிர்பின்னம் தாலுவருணோ லோகபாலோ விஷத்தரே: ||
இப்படி 12ம் ஸ்லோகத்தில் துவங்கி, ‘பாதாவஸ்ய வினிர்பின்னௌ’ என்னும் 22ம் ஸ்லோகத்தின் வரைக்கும் சொல்லியிருக்கின்றனர். அந்த ஆதாரத்தின் பேரிலேயே, தத்வாபிமானி தேவதைகளின் ஸ்தானம், குணங்கள் ஆகியவை எழுதப்பட்டிருக்கின்றன. கிருதிபதியான பிரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன், இந்திரியங்களிலும், அவற்றின் குணங்களிலும், தத்வாபிமானி தேவதைகளிலும் நிலைத்திருந்து, ஜீவர்களின் அனாதி பிராரப்த கர்மங்களுக்கேற்ப, அறிவைக் கொடுத்து, அதற்கேற்ப செயல்களை செய்து, அவர்கள் மூலமாக செய்விக்கிறான். அவர்கள் மூலமாக சஞ்சித, ஆகாமி என அனைத்துவித கர்மங்களையும் செய்வித்து, ஸ்வர்க்க நரகாதி போகங்களைக் கொடுக்கிறான். சஞ்சித என்றால் அனாதியான பிராரப்த கர்மங்களை செய்துகொண்டிருக்கும்போதே, ஜீவன், மனோ வாக் காயங்களால், மறுபடி பத்து பிறவிகளை எடுக்கத் தேவையான கர்மங்களை செய்கிறான். முன்னர் செய்த கர்மங்களுக்கு சஞ்சித என்றும் பின்னர் செய்யப்போகும் கர்மங்களுக்கு ஆகாமி என்றும் பெயர்.
ஆக, தற்போது இந்த பிறவியில் நாம் அனுபவித்துக்கொண்டிருப்பது, சஞ்சித கர்மங்களின் பலன் என்றும், தற்போது செய்து கொண்டிருக்கும் கர்மங்களின் பலன்களை அடுத்த பிறவிகளில் அனுபவிப்போம் என்றும் அறியவேண்டும். இந்த கர்மங்கள் அனைத்தையும் செய்வித்து, ஜீவர்களை மறுபடி மறுபடி சம்சாரத்தில் அனுப்புவதற்கு பிரத்யும்ன நாமக பரமாத்மனே காரணம். இதன் காரணங்களை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஸ்ரீபரமாத்மனுக்கு மட்டுமே தெரியும். ஆனால், பரமாத்மனே சம்சாரத்திற்குத் தேவையான கர்மங்களை ஜீவர்களால் செய்வித்தாலும், அவரவர்களின் அனாதி கர்மங்களுக்கேற்ப அவற்றை செய்விப்பதால், பரமாத்மனுக்கு வைஷம்யாதி எவ்வித தோஷங்களும் இல்லை என்று அறியவேண்டும்.
No comments:
Post a Comment