#20 - வியாப்தி சந்தி
தே3வ மானவ தா3னவரு யெ
ந்தீ3வத3தி3 ஆவாக3 இப்ப1ரு
மூவரொளகி3வகி3ல்ல ஸ்னோஹோதா3ஸீன த்3வேஷ |
ஜீவ ரதி4காரானுசாரத
லீவ சுக2 சம்சார து3க்கவ
தானுணதெ அவரவரிகு3ணிசுவ நிர்க3தாஷனனு ||20
தேவமானவ தானவரு = தேவதைகள், மனிதர்கள் மற்றும் தைத்யர்கள்
எந்து ஈ விததலி = இந்த விதமாக
இப்பரு = இருக்கிறார்கள்
மூவரொளு = இந்த மூன்று வகையானவர்களில்
இவகெ = இந்த பரமாத்மனுக்கு
ஸ்னேஹ = தேவதைகளில் நட்பாகட்டும்
உதாசீன = மனிதர்களில் உதாசீனமாகட்டும்
த்வேஷா = தானவர்களில் த்வேஷம் ஆகட்டும், இல்லை
ஜீவர = த்ரிவித ஜீவர்களின்
அதிகாரானுசாரதலி = யோக்யதைக்கேற்ப
சுக = தேவதைகளுக்கு சுகங்களை
சம்சார = மனிதர்களுக்கு கலவையான சுக துக்கங்களை
துக்கவ = தைத்யர்களுக்கு நித்ய துக்கத்தை
தா = தான்
உணதலெ = கொடுக்காமல்
அவரவரிகெ = அவரவர்களுக்கு
உணிசுவ = கொடுக்கிறான்
நிர்கத = இல்லாமல்
அஷனனு = ஆகாரம் உள்ளவன்
த்ரிவிதா ஜீவஸங்காஸ்து தேவமானுஷ தானவா: |
தத்ர தேவாமுக்தி யோக்யா: மானுஷேஷோத்தமஸ்ததா ||
மத்யமா மானுஷாயேது ஸ்ருதியோக்யாஸ்ததைவஹி |
அதமா நிரயான்யைவ தானவாஸ்து தமோலயா: ||
முக்திர்னித்யா தமஸ்சைவ நாவ்ருத்தி: புர்னரேதயோ: ||
தேவானாம் நிரயோனாஸ்தி தமஸ்சாபி கதஞ்சன: |
நாசுராணாம் ததா முக்தி: கதாசித்கேனசித்க்வசித் ||
மானுஷாணாம் மத்யமானாம் நசைதத்வ்யமவாப்யதே ||
(மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் 1-86-89)
ஜீவராசிகளில் தேவதைகள் என்றும், மனிதர்கள் என்றும், அசுரர்கள் என்றும் மூன்று வகைகள் உள்ளன. இதில் தேவதைகள் அனைவரும் மனுஷோத்தமர்கள் முக்தி யோக்யர்கள் ஆவர். மனிதர்களில் மத்யமர் எப்போதும் நித்ய சம்சாரிகள். மனிதர்களில் அதமர் நரகத்தை அனுபவிப்பவர்கள் ஆவர். தானவர்கள் அனைவரும் தமோயோக்யர்கள் ஆவர். இதில் முக்திக்கு சென்றவர்களுக்கும், தமஸ்ஸிற்கு சென்றவர்களுக்கும் மறுபிறவி இல்லை. தேவதைகளுக்கு நரகமோ, தமஸ்ஸோ என்றும் இல்லை. அசுரர்களுக்கு, எந்த சாதனைகளை செய்தாலும், எந்த காலத்திலும் முக்தி கிடையாது. மனிதர்களில் மத்யமர்களுக்கு முக்தியோ, தமஸ்ஸோ கிடையாது. இந்த அபிப்பிராயத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார்.
இப்படி தேவ மனித தானவ என்னும் மூன்று வித ஜீவராசிகளில், தேவதைகளில் பரமாத்மனுக்கு நட்போ, மனிதர்களில் உதாசீனமோ, தானவர்களில் த்வேஷமோ இல்லை. அனைவரையும் சமமாகவே பாவிக்கிறான். அப்படியெனில் ‘இந்த்ரஸ்யார்த்தெ கதம் தைத்யானவதீத்விஷமோயதா’ என்னும் பாகவத 7ம் ஸ்கந்தத்தில் பரமாத்மன் அனைவருக்கும் சமமானவன். அன்பானவன். இப்படியிருக்கையில், இந்திரன் மேல் இருக்கும் அன்பினால், தைத்யர்களைக் கொன்றது எதற்காக? என்று பரிக்ஷித் ராஜன் கேட்க, சுகாசார்யர் இப்படியாக அதற்கு பதில் சொல்கிறார்.
தேஷகால குணாம்ஸ்சைவ பக்தாதீனப்யவேக்ஷ்யது |
யோக்யதாஞ்ச ததா கர்ம சம இத்யபிதீயதே ||
என்னும் பாகவத தாத்பர்யத்தின் வசனத்தின்படி, தேச, கால, குணங்கள் ஆகியன, அவரவர்களின் கர்ம, யோக்யதை, இவற்றை அனுசரித்து அவரவர் செய்யும் பக்தி த்வேஷாதிகளுக்கேற்ப பலன்களைக் கொடுப்பதற்கு சமம் என்று பெயர். பக்தி செய்பவருக்கும், த்வேஷம் செய்பவருக்கும் ஒரே பலன்களைக் கொடுப்பதற்கு சமம் என்று பெயரில்லை என்கிறார். ஆகையால், பஜிப்பவர்க்கு அவர்களது பக்திக்கு தக்கவாறு பலன்களை, த்வேஷிப்பவர்க்கு அவர்களது த்வேஷத்திற்குத் தக்கவாறு பலன்களை கொடுப்பதற்கு சமம் என்று பெயர்.
தேவதைகள் பரமாத்மனை ஆராதனை செய்வதால் அவர்களுக்கு சுகங்களைக் கொடுக்கிறான். தைத்யர்கள் த்வேஷம் செய்வதால், அவர்களுக்கு துக்க பலன்களைக் கொடுக்கிறான் என்று அர்த்தம். இதையே இன்னும் விளக்கமாக சொல்கிறார்.
த்ரிவித ஜீவர்களின் அதிகாரத்திற்கேற்ப, தேவதைகளுக்கும் மனுஷ்யோத்தமர்களுக்கும், நித்ய சுகமயமான முக்தியையும், மானவ மத்யமர்களுக்கு நித்ய சம்சாரிக உலகத்தையும், தானவர்களுக்கு நித்ய துக்கமயமான தமஸ்ஸினையும் கொடுத்து, அதை அவர்கள் ஏற்குமாறு செய்கிறார். ஆகாரங்களை ஏற்காத பரமாத்மன், த்ரிவித ஜீவர்களிலும் இருந்து, அவர்களுக்கு சம்பந்தப்படாமல், சுகதுக்கங்களின் சம்பந்தம் இல்லாதிருக்கிறான்.
ஆனால், இதே சந்தியில் முன்னர் ‘தோதகனு தானாகி’ என்னும் பத்யத்தில் ‘கரணதொளித்து விஷயவனைதுவனு திளியதவனோபாதி புஞ்சிஸுத’ ஆகிய பத்யங்களில், பரமாத்மன் ஜீவர்களில் இருந்து சுகங்களை அனுபவிக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு பரஸ்பரம் வேறுபாடு வரவில்லையா? என்றால் அதற்கான தீர்வு பின்வருமாறு. ஜீவர்கள் தம் கர்மங்களை செய்தவாறு புண்ய சாதனங்களை செய்திருக்கும்போது, தம்முடைய சஞ்சித புண்ணியங்களை அனுபவிக்கின்றனர். அந்த ஜீவர்களுக்காக தானும் அந்த சுகங்களை பரமாத்மன் அனுபவிக்கிறான் என்பது முன்னர் பார்த்த பத்யத்தின் அபிப்பிராயம். இந்த பத்யத்தில், முக்தர் ஆனபிறகு, சுகமயமான ஸ்வரூபமுள்ள ஜீவர்களுக்கு சுகங்களைக் கொடுப்பது மட்டுமல்லாமல், தான் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். இதனால் இதில் வேறுபாடு எதுவும் இல்லை என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment