#27 - கருணா சந்தி
கண்ணிகெவெயந்ததலி = கண்ணிற்கு இரப்பைகள் உதவி செய்வதைப் போல
கை = கைகள்
மைதிண்ணிகெ = உடம்பில் அரிப்பு ஏற்படும்போது
ஒதகுவந்ததி = உதவி செய்வதைப் போல
பல்களு = பற்கள்
பண்ணு பலகளனகிது = பழம், கரும்பு ஆகியவற்றைக் கடித்து
ஜிஹ்வெகெ = நாக்கிற்கு
ரசவனீவந்தெ = சாற்றினைக் கொடுப்பதைப்போல
நுடிவெண்ணின = வாக்தேவதையான சரஸ்வதிதேவியை
ஆண்ம = ஆளும் பிரம்மதேவர் (என்னும் பெயர் கொண்ட)
அண்டதி = பிரம்மாண்டத்தில்
புண்யபலகளனீவந்தெ = பிரம்மஜனர்களுக்கு புண்யபலன்களைக் கொடுப்பதைப்போல
லட்சுமணனண்ண = ஸ்ரீராமதேவர்
அமரகண சஹித = தேவதைகளுடன் சேர்ந்து
பக்தரவரகெ = பக்தர்களுக்குத் தேவைப்படும்போது சரியாக வந்து உதவுவான்
பொருள்:
***
க1ண்ணிகெ3வெயந்த3த3லி கை1 மை
தி1ண்ணிகொ3தகு3வ தெ1ரதி1 ப1ல்க3ளு
ப1ண்ணு ப4லகளனகிது ஜிஹ்வெகெ3 ரசவனீவந்தெ1 |
பு1ண்ய ப4லவீவந்த3த3லி நுடி3
வெண்ணி நாண்மாண்ட3தொ3ளு லக்ஷமண
நண்ணனொத3கு3வ ப4க்தரவசன கமரக3ணசஹித ||27கண்ணிகெவெயந்ததலி = கண்ணிற்கு இரப்பைகள் உதவி செய்வதைப் போல
கை = கைகள்
மைதிண்ணிகெ = உடம்பில் அரிப்பு ஏற்படும்போது
ஒதகுவந்ததி = உதவி செய்வதைப் போல
பல்களு = பற்கள்
பண்ணு பலகளனகிது = பழம், கரும்பு ஆகியவற்றைக் கடித்து
ஜிஹ்வெகெ = நாக்கிற்கு
ரசவனீவந்தெ = சாற்றினைக் கொடுப்பதைப்போல
நுடிவெண்ணின = வாக்தேவதையான சரஸ்வதிதேவியை
ஆண்ம = ஆளும் பிரம்மதேவர் (என்னும் பெயர் கொண்ட)
அண்டதி = பிரம்மாண்டத்தில்
புண்யபலகளனீவந்தெ = பிரம்மஜனர்களுக்கு புண்யபலன்களைக் கொடுப்பதைப்போல
லட்சுமணனண்ண = ஸ்ரீராமதேவர்
அமரகண சஹித = தேவதைகளுடன் சேர்ந்து
பக்தரவரகெ = பக்தர்களுக்குத் தேவைப்படும்போது சரியாக வந்து உதவுவான்
பொருள்:
கண்ணில் தூசு விழுந்தால், உடனடியாக இரப்பைகள் கண்களை மூடி அதனை காப்பாற்றிவிடுகிறது. அதே இரப்பைகள், கண்களிடமிருந்து எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்ப்பதில்லை. உடம்பில் எங்காவது அரிப்பு ஏற்பட்டால், உடனடியாக கை அங்கு சென்று அதை தீர்த்துவைக்கிறது. அந்த உதவிக்கு எந்த பிரதிபலனையும் கை எதிர்பார்ப்பதில்லை. பழம், கரும்பு ஆகியவற்றை பற்கள் கடித்து, அவற்றின் சாற்றினை நாக்கிற்கு அனுப்புகிறது. அவையும் எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்ப்பதில்லை. இவற்றைப்போலவே, ஸ்ரீபரமாத்மன் பிரம்மாண்டத்தில் இருக்கும் மக்களுக்கு புண்ய பலன்களைக் கொடுப்பதற்கு, தேவதைகளுடன்கூடி, பக்தர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் சரியாக வந்துவிடுகிறார்.
No comments:
Post a Comment