ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, March 27, 2020

#19 - வியாப்தி சந்தி

#19 - வியாப்தி சந்தி

அணு மஹத்தினொளிப்ப க4ன பர
மணு வினொளக3டகி3சுவ சூக்‌ஷ்மவ
முணுகி3சுவ தே1லிசுவ ஸ்தூ2லக3ளிவன மாயவிது3 |
3னுஜ ரக்க1ரெல்ல ரிவனொளு
முனிது3 மாடுவதே3னுலூக2
வனிகெ13ளு தா4ன்யகள ஹணிவந்ததலி சம்ஹரிப ||19

அணு = மிகவும் சிறிய பொருட்களில் அதைவிட சிறியதாகவும்
மஹத்தினொளு = மிகப்பெரிய பொருட்களில் அதைவிட பெரியதாகவும், அதில் அந்த பொருட்களின் உருவமாகவும்
இப்ப = இருக்கிறான்
கன = பெரிய பொருட்களை
பரமணுவினொளகெ = மிகச்சிறிய பொருட்களின் உள்ளே
அடகிஸுவ = அடங்கியிருக்கிறான்
சூக்‌ஷ்மவ = மிகச்சிறிய பொருட்களை
முணுகிசுவ = நீரில் மூழ்கடிக்கும்
ஸ்தூலகள = மிகப்பெரிய பொருட்களை
தேலிசுவ = மிதக்க வைக்கும்
இது = இந்த அபாரமான சக்தி
அவன = ஸ்ரீபரமாத்மனின்
தனுஜரக்கஸரெல்லரு = தைத்ய அசுரர்கள் அனைவரும் சேர்ந்து
இவனொளு = இந்த பரமாத்மனில்
முனிது = த்வேஷம் செய்து ஆவதென்ன?
உலூகவனிகெகளு = மிகப்பெரிய பாத்திரங்கள்
தான்யகள = அரிசி முதலான தானியங்களை
ஹணிவந்ததலி = உமியைப் பிரித்து தானியங்களை மட்டும் வைத்துக் கொள்வதைப் போல
சம்ஹரிப = தேகங்களை அழித்து, ஜீவர்களை மட்டும் வைத்துக் கொள்கிறான்.

மிகச்சிறந்த சக்தி பரமாத்மனுடையது என்றும், ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் எப்போதும் பேதம் இருக்கிறது என்றும் இந்த பத்யத்தில் தாசராயர் சொல்லியவாறு, ஜீவ பரமாத்மனின் பேதத்தை தெரிவிக்கும் வேத அர்த்தங்களை இங்கு விவரிக்கிறார். 

பரமாத்மன் மிகச்சிறந்த சக்தி உடையவன். எப்படியெனில்: ‘அணோரணீயான் மஹதோ மஹீயான்’ என்னும் வேத மந்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, மிகவும் சிறிய பொருட்களில் அதைவிட சிறியதாகவும், மிகப்பெரிய பொருட்களில் அதைவிட பெரியதாகவும் இருந்து அதை காக்கிறான். பாகவத 3ம் ஸ்கந்தத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. 

சரமஸ்து விஷேஷாணா மனோகாஸம்யுதஸ்யுய: |
பரமாணு: ஸவிக்ஞே யோன்ருணா மைக்யப்ரமோயத: ||
ஸதஏவபதார்த்தஸ்ய ஸ்வரூபாவஸ்திதஸ்யயத் |
கைவல்யம் பரம மஹானவிசேஷோ நிரந்தர: ||

இதன் பொருள் என்னவெனில்: ஏதேனும் ஒரு பொருளை, உதாரணத்திற்கு ஒரு தலைமுடியை முடியும்வரைக்கும் பிரித்து, அதை துண்டு துண்டாக வெட்டி, அதைவிட சிறியதாக முடி இருக்கமுடியாது என்று ஆக்கியபிறகு, அதையே பரமாணு என்று சொல்லலாம். அத்தகைய பரமாணு வஸ்துவில் அதைவிட சிறியதாக பரமாத்மன் இருக்கிறான். அவ்வளவு சூக்‌ஷ்ம ரூபியானாலும், ஸ்ரீபரமாத்மன், சங்கு சக்கர கதா பத்மங்களை நான்கு கரங்களிலும் ஏந்தியும், பீதாம்பரதாரியாகவும், கிரீட குண்டலங்களை தரித்தும், ஸ்ரீலட்சுமிதேவியின் இருப்பிடமான ஸ்ரீவத்ஸங்களுடனும், கௌஸ்துபாபரணத்துடனும், வனமாலையை தரித்திருக்கிறான். ஸ்ரீலட்சுமிதேவி அந்த பரமத்மனின் வக்‌ஷஸ்தலத்தில் நிலைத்திருக்கிறாள். ஸ்ரீலட்சுமிதேவி பரமாணுரூபியான பரமாத்மனின் வக்‌ஷஸ்தலத்தில் மிகவும் சூக்‌ஷ்ம ரூபத்தில் இருக்கிறாள் என்றால், பரமாத்மனைவிட சிறிய ரூபமாக லட்சுமிதேவிக்கு சொல்லவேண்டுமே தவிர, பரமாத்மனுக்கு எப்படி சொல்லலாம் என்றால்; பரமாத்மன் தன் விருப்பத்தின்படியே லட்சுமிதேவிக்கு இத்தகைய சூக்‌ஷ்ம ரூபத்தைக் கொடுத்து, தன் வக்‌ஷஸ்தலத்தில் வைத்துக்கொண்டிருக்கிறான் ஆகையால், அதுவே பரமாத்மனின் சாமர்த்தியம் ஆகையால், அ-ஸ்வதந்த்ரளான லட்சுமிதேவியை அணுரூபி என்று சொல்ல முடியாது என்று அறியவேண்டும். 

இதைப் போலவே, அனைத்தையும்விட மிகப்பெரியதான பொருட்களைவிட, பெரியதாக, அந்த பெரிய பொருட்களை தன்னில் அடக்கிக்கொண்டு, தானே அனைத்தையும்விட பெரியவன் என்று சொல்லி, அதனால் கைவல்யன் என்று பெயர் பெறுகிறான். அவனைவிட பெரியதான பொருள் வேறெதுவும் இல்லை என்று அர்த்தம். இதே அர்த்தத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். 

மேலும், மிகப்பெரிய பொருட்களை பரமாணுவில் அடக்குகிறான். பிரளய காலத்தில், ஆலயிலையில் ஒரு குழந்தையைப் போல படுத்திருக்கும்போது, மார்க்கண்டேயர் அக்குழந்தையின் மூக்கு துவாரத்தில் நுழைந்து, பிரம்மாண்டத்தின் அனைத்து வஸ்துகளையும் பார்க்கிறார். கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணன் மண் தின்றான் என்று நினைத்து, யசோதை அவனை வாய் திறக்கச் சொல்லி கேட்க, அவன் வாயில், மொத்த உலகத்தையும் கண்டு, வியப்படைந்தாள் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீபரமாத்மன், பரமாணு வஸ்துகளில் பரமாணுவாக இருந்தாலும், அந்த பரமாத்மனின் வயிற்றில் மிகப்பெரியதான பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது. ஆகையாலேயே, தாசராயர் ‘கனபரமாணு வினொளகடடிசுவ’ என்கிறார்.

சிறிய பொருட்களை தண்ணீரில் மூழ்கடிக்கிறான். பெரிய பொருட்களை மிதக்க வைக்கிறான். சிறிய பொருட்களான ராகி ஆகியவை தண்ணீரில் மூழ்கிவிடும். பெரியதான கப்பல்கள் மிதக்கின்றன. இவை அனைத்தும் அவனின் மாயை என்றே அறியவேண்டும். தானியங்களை உரலில் போட்டு, உலக்கையால் குத்தினால், உமிகள் பிரிந்து தானியங்கள் மட்டும் எப்படி தனியாக வருகின்றனவோ, அதுபோலவே, பரமாத்மன் தன்னை த்வேஷிக்கும் அசுர ராக்‌ஷசர்களின் தேகங்களை அழித்து, ஜீவர்களை பிரித்தெடுக்கிறான். இதனால், மூன்றுவித ஜீவர்களும் அனாதி காலத்திலிருந்தே பரமாத்மனிடமிருந்து வேறுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்த விஷயத்தில் பாகவத 10ம் ஸ்கந்தத்தின், ஸ்ருதிகீதா தாத்பர்யத்தில், ஸ்ருதியை உதாரணம் காட்டியிருப்பர். அது எப்படியெனில்:

அபேதமேக மேகோஸ்மி நி:ஷ்ணாடபித்வாகி மூதித்ரய:கரந்தி |
களேன பர்ஷான் ப்ரதிஹன்மிபூரி கிம்மானிந்தந்தெ ஷத்ரவோனிந்த்ரா: ||
(ரிக்வேதம் 8-1-6)

இது ஸ்ரீபரமாத்மனின் வாக்கியம். இந்த உலகம் முழுக்க என்னுடன் போர் புரியவந்தால், நான் மட்டும் அதை எதிர்த்து நிற்பேன். இப்படிப்பட்ட உலகங்கள் இரண்டு என்னுடன் போர் புரிந்தாலும், நானே ஜெயிப்பேன். இத்தகைய உலகங்கள், மூன்று அல்லது அதைவிட அதிகம் ஆகட்டும், என்னை எதுவும் செய்யமுடியாது. உரலில் உலக்கையினால் குத்தி, தானியங்களை பிரித்தெடுப்பதைப் போல, அவர்களின் தேகங்களை நான் பிரித்தெடுக்கிறேன். உமி தனியாக வருவதைப் போல, அவர்களின் ஜீவன்களை பிரிக்கிறேன். அவர்கள் என்னை தூஷிக்கின்றனர்? தோஷங்கள் அற்றவனான என்னை என்ன சொல்லி தூஷிப்பர்? தோஷங்கள் இல்லையென்றாலும், ஏதோ ஒன்றை சொல்லி குற்றம் சாட்டுவர். ஆகையால் ‘அனிந்த்ரா’ சக்தி இல்லாதவர்கள் என்று ஸ்ருதி சொல்கிறது. 


இந்த ஸ்ருதியை, ஸ்ருதிகீதையில் 16வது ஸ்லோக ‘நஹிபரமஸ்ய’ என்னும் ஸ்லோகத்தில் - ‘அபரிமிதா த்ருவாஸ்தனுப்ய தோயதிஸர்வனஹி ஸஷாஷ்யதீதி நிகமோப்ரவ தேசததா’ - என்னும் வாக்கியத்திற்கு ஸ்ரீமதாசார்யர் தாத்பர்யத்தில் உதாரணம் கொடுத்திருக்கிறார். ஜீவர்கள் அனாதி காலத்திலிருந்து, வாயுதேவரின் அதீனத்தில், ஸ்வரூப தேகங்களைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உனக்கு கட்டுப்பட்டவர்களே. தற்போது மேலே சொன்ன ‘அபேதம்’ என்னும் ஸ்ருதியும் இதையே சொல்கிறது. இந்த வாக்கியத்தினாலும், இந்த ஸ்ருதி வாக்கியத்தினாலும், ஜீவர்கள் அனாதி காலத்திலிருந்தும், இருக்கின்றனர். அவர்களின் தேகங்களை மட்டும் நாசம் செய்கிறேன் என்று சொன்னதால், ஜீவர்கள் வேறு பரமாத்மன் வேறு என்று தெரிய வருகிறது. 

***

No comments:

Post a Comment