#25 - கருணா சந்தி
நவசுவிசேஷ சன்மஹிம = புதிதான, மிகவும் விசேஷமான, சிறந்த, மகிமைகளைக் கொண்ட
ஹரியு = ஸ்ரீபரமாத்மன்
ஒடலனெளலந்ததலி = தேகத்தின் நிழலில்
பெம்பலனாகி = நம்மை எப்போதும் இடைவிடாமல் காப்பாற்றுபவனாக
பக்தரதீனனெந்தெனிஸி = தான் பக்தர்களுக்கு வசப்பட்டவன் என்று நினைத்து
ஒந்தரக்ஷணபிடதெ = ஒரு நொடியும் விடாமல்
நம்மொடனெ = நம்முடனேயே
துரிதௌககள = கஷ்ட, பிரச்னைகளை
தடெவ = வராதவாறு தடுக்கிறான்
காமத = நாம் விரும்பும்
சகலேஷ்டகள = நம் யோக்யதைக்கேற்ப அனைத்து இச்சைகளையும் கொடுக்கும்
நம்மந்ததலி = நம்மைப் போலவே
சந்தத = எல்லா காலத்திலும்
நடெவ = நடப்பான்.
பொருள்:
***
ஒட3ல நெளலந்த3த3லி ஹரி ந
ம்மொட3னெ திருகு3வ னொந்த3ரெக்ஷண
பி3டதெ3 பெ3ம்ப3லனாகி3 ப4க்தாதீ4னனெந்தெ3னிஸி |
த1டெ3வ து3ரிதௌ1க4க3ள கா1மத3
கொ1டு3வ சக1லேஷ்ட1க3ள சந்த1த1
நடெ3வ நம்மந்த3த3லி நவசுவிசேஷ சன்மஹிம ||25நவசுவிசேஷ சன்மஹிம = புதிதான, மிகவும் விசேஷமான, சிறந்த, மகிமைகளைக் கொண்ட
ஹரியு = ஸ்ரீபரமாத்மன்
ஒடலனெளலந்ததலி = தேகத்தின் நிழலில்
பெம்பலனாகி = நம்மை எப்போதும் இடைவிடாமல் காப்பாற்றுபவனாக
பக்தரதீனனெந்தெனிஸி = தான் பக்தர்களுக்கு வசப்பட்டவன் என்று நினைத்து
ஒந்தரக்ஷணபிடதெ = ஒரு நொடியும் விடாமல்
நம்மொடனெ = நம்முடனேயே
துரிதௌககள = கஷ்ட, பிரச்னைகளை
தடெவ = வராதவாறு தடுக்கிறான்
காமத = நாம் விரும்பும்
சகலேஷ்டகள = நம் யோக்யதைக்கேற்ப அனைத்து இச்சைகளையும் கொடுக்கும்
நம்மந்ததலி = நம்மைப் போலவே
சந்தத = எல்லா காலத்திலும்
நடெவ = நடப்பான்.
பொருள்:
எப்போதும் புதிதுபுதிதான மகிமைகளைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், நம் நிழலானது எப்போதும் நம்முடனேயே இருப்பதைப் போல, அவனும் நம்முடன் இருந்து, நமக்கு வரும் ஆபத்துகளை பரிகரிக்கிறான். நம் தகுதிக்கேற்ப நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவான்.
சிறப்புப் பொருள்:
விஷஜலாஷயாத்வ்யாள ராக்ஷஸாத்வர்ஷ மாருதாத்வைர்யுதானலாத் |
வ்ருஷயயாத்பயாத்வஸ்வதோ முகாத்வ்ருஷபதேவயம் ரக்ஷிதாமுஹு: ||
கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீபரமாத்மன், கோப கோபியர்களுடன் எந்நேரமும் இருந்து, அவர்களுக்கு வந்த ஆபத்துகளை பரிகரித்தான். காளிந்தி மடுவில் இருக்கும் விஷ நீரினைக் குடித்து, கோப கோபாலகர்கள் அனைவரும் மரணமடைய, அவர்களைக் காப்பாற்றினான், உயிர் பிழைக்க வைத்தான். த்ருணாவர்த்த என்னும் அரக்கனிடமிருந்து, சூறாவளிக் காற்றிலிருந்து, காட்டுத்தீயிலிருந்து, வத்ஸாசுர ஆகியோரிடமிருந்து என பல பிரச்னைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறான். ’நான்கு திசைகளிலிருந்தும் வந்த அனைத்து ஆபத்துகளிலிருந்தும் உன்னால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்’ என்று கோபிகா ஸ்த்ரியர்கள் ஸ்ரீகிருஷ்ணனை துதிக்கின்றனர். மேலும் பாகவத 1ம் ஸ்கந்த 8ம் அத்தியாயத்தில், குந்திதேவி ஸ்ரீகிருஷ்ணனை துதிக்கும்போது:
விஷான்மஹாக்னே: புருஷாததம்ஷனாத ஸத்ஸ பாயா:வனவாஸ க்ருச்சத: |
ம்ருதேம்ருதேsனேக மஹாரதாஸ்த்ரதோ த்ரௌண்யஸ்த்ரதஷ்சாஸ்ம ஹரேsபிரக்ஷிதா: ||
பீமசேனனைக் கொல்வதற்காக துரியோதனன் அவனுக்கு விஷம் கலந்த பக்ஷ்யங்களைக் கொடுத்தபோது அந்த விஷத்திலிருந்தும், எங்களைக் கொல்வதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்ட நெருப்பிலிருந்தும், ஹிடிம்ப, பக ஆகிய அசுரர்களின் தொல்லைகளிலிருந்தும், பீமசேனனை பாம்புகள் கொல்ல வந்தபோது அவற்றைக் கொன்றும், அயோக்யனான துரியோதனனின் சபையில் திரௌபதிக்கு நடந்த மானபங்க சமயத்தில் அவள் மானத்தைக் காத்தும், வனவாச, அஞ்ஞானவாச ஆகிய காலங்களில் வந்த கஷ்டங்களிலிருந்தும், போரின்போது எதிரிகள் விட்ட விஷ பாணங்களிலிருந்தும், அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்திலிருந்தும், உன் அருளாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம் - என்கிறார்.
ஆனால் பாரதாதிகளில் எங்கும் ஸ்ரீகிருஷ்ணனே வந்து இந்த கஷ்டங்களிலிருந்து காப்பாற்றினான் என்று சொல்லப்படவில்லை. இப்படியிருக்கையில், குந்திதேவி, ’உன்னாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்’ என்று எப்படி சொன்னார் என்றால், ஆபத்து வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணனை நினைத்தவாறு செயல்களை செய்ததால், ஸ்ரீகிருஷ்ணன் சில கஷ்டங்களை மறைந்திருந்தும், சில கஷ்டங்களை பிரத்யட்சமாக நேரில் நின்றும் பரிகரித்தான். இந்த விஷயத்தை குந்திதேவி நன்றாக அறிந்திருந்தார். ஆகையாலேயே அவர் இப்படி ஸ்தோத்திரம் செய்தது நியாயமே என்று அறியவேண்டும். அதனால்தான் தாசராயர் ‘தடெவ துரிதௌககள காமத கொடுவ’ என்றார்.
மகாமகிமையுள்ள பரமாத்மன் ‘நம்மந்ததலி நடெவ’ - நமக்குள் இருந்து செயல்களை செய்வதற்கு தீர்மானித்து, நம்மிடமிருந்து அவற்றை செய்விக்கிறான், செய்கிறான். பாகவத தாத்பர்யத்தில் - ‘அதஸ்தத்ப்ரேரணாதேவ ப்ரேமாத்யாமமஜக்ஞிரே’ அவன் மேல் வைக்கும் பக்தியும் அவனுடைய விருப்பத்தாலேயே ஆயிற்று என்று பாகவதோத்தமர்கள் நினைப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். மேலும் ‘நா அஹம் கர்த்தா ஹரி: கர்த்தா’ - எந்த செயலையும் நான் செய்வதில்லை. என் உள்ளிருந்து பரமாத்மனே செய்விக்கிறான்’ என்று பரமத்மனை பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். ‘ நம்மந்ததலி நடெவ’ என்னும் வாக்கியத்திற்கு இந்த அர்த்தம் பொருந்துகிறது.
No comments:
Post a Comment