ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, March 19, 2020

#11 - வியாப்தி சந்தி

#11 - வியாப்தி சந்தி

தந்தெ பஹும்ப்4ரமதி31ன்னய
3ந்து43ளக3வ நெரெஹி மது3வெய
நந்த3னகெ3 தா1 மாடி3 மனெயொளகி3டு3வ தெ1ரனந்தெ1 |
இந்திராத4வ தன்ன இச்செ க3
ளிந்த3 கு3ணகள சேதனக்கெ ச
ம்ப3ந்த4கை3ஸி சுகா2சுகா2த்மக1 சம்ஸ்ருதியொளிடு3||11

தந்தெ = தந்தை
பஹு சம்ப்ரமதி = வெகு விமரிசையுடன்
தன்னய பந்துபளகவ = தன் உற்றார் உறவினர்களை
நெரஹி = அழைத்து
நந்தனகெ = தன் மகனுக்கு
மதுவெய = திருமணத்தை
தா = தான்
மாடி மனெயொளகிடுவ தெரனந்தெ = சம்சாரியாக மாற்றி வீட்டில் வைப்பது போல
இந்திராதவ = லட்சுமிபதியானவன்
தன்ன இச்செகளிந்த குணகள = சத்வ ரஜஸ் தமோ என்னும் மூன்று குணங்களின் சம்பந்தமான ப்ராக்ருத ஸ்தூல தேகங்களை
சேதனக்கெ = ஸ்வரூபதேக, லிங்கதேகங்களால் ஆன ஜீவனுக்கு
சம்பந்தகெயிஸி = சம்பந்தம் செய்து (கொடுத்து)
சுகாசுகாத்மக சம்ஸ்க்ருதியலி = சுகதுக்கங்களின் கலவையான சம்சாரத்தில் வைப்பான். 

தந்தையானவர், தன் மகனுக்கு திருமணத்தை செய்யவேண்டுமென்று சிந்தித்து, தன் உற்றார் உறவினர்களையெல்லாம் அழைத்து, வெகு விமரிசையுடன் திருமணத்தை செய்து, அந்த தம்பதிகளை ஒரு வீட்டில் வைத்து சம்சாரிகளாக்கி எப்படி பார்த்துக் கொள்கிறாரோ அப்படியே, ஸ்ரீலட்சுமிபதி தன் விருப்பத்திற்கேற்ப தன் மக்களைப் போல இருக்கும், சாத்விக, ராஜஸ, தாமஸ எனும் மூன்று வித ஜீவராசிகளுக்கும் புத்தி என்னும் மனைவியுடன் திருமணம் செய்விக்கிறான். தத்வாபிமானி தேவதைகளே உற்றார் உறவினர். ஸ்தூல சரீரமே வீடு. இதில், சாத்விகர்களுக்கு தேவதாதி சரீரங்களையும், ராஜஸர்களுக்கு மனித சரீரங்களையும், தாமஸர்களுக்கு தைத்யாதி சரீரங்களையும் கொடுத்து, அவரவர்களின் சாதனைகளை நிறைவேற்றுவதற்காக சுகதுக்கங்களின் கலவையான சம்சாரத்தில் அவர்களை வைக்கிறான். 

சிறப்புப் பொருள்:
இங்கு தாசராயர் ‘குணகள சேதனகெ சம்பந்த கெய்ஸி சுகா சுகாத்மக சம்ஸ்க்ருதியொலிடுவ’ என்கிறார். சத்வ ரஜஸ் தமோ குணங்களை சேதனர்களுக்கு சம்பந்தப்படுத்தி என்று அர்த்தம் கொண்டால், ஜீவர்கள் அனாதி காலத்திலிருந்தே சத்வாதி குண சம்பந்தமான ஸ்வரூப தேகத்தினால் கூடியிருக்கின்றனர். குணங்களை விட்டு சேதனர்கள் இல்லை என்று ஸ்ரீமதாசார்யரின் வாக்கியம் இருக்கிறது. மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் 

த்ருஷ்ட்வாஸசேதன கர்ணா ஜடரேஷயனானானந்த மாத்ரவ புஷ:ஸ்ருதி விப்ரமுர்க்தா |
த்யானங்கர்த்தா ஸ்ருதிகதாம்ஸ்ச சுஷுப்தி சம்ஸ்தா பிரம்மாதிர்கா கலிபர்ரா மனுஜாம்ஸ்ததைக்‌ஷத் ||

அதாவது, ஸ்ரீபரமாத்மன், தன் வயிற்றில் சயனம் கொண்டிருக்கும் பிரம்மதேவர் முதலான தேவதைகள், கலி வரைக்குமான தைத்யர்கள், மனிதர்கள் இந்த மூன்று வித ஜீவராசிகளையும், வெறும் மகிழ்ச்சியை மட்டும் கொண்ட முக்தர்களையும் பார்த்து, ஸ்ருஷ்டி செய்வதற்கு விருப்பப்பட்டான். இதிலிருந்து, அனாதி காலத்திலிருந்து ஜீவர்கள் த்ரிவிதர் என்று நிர்ணயம் ஆகிறது. மேலும் விஷ்ணு ரகசியத்தில் :

ஸ்ருஷ்ட்யாதிகுருதே சர்வமன்யதா தத்தயாளுதா |
வ்யாஹன்யேத ததாப்யன்யான் ஜீவான்மதாமர்ஸா |
ஸ்ருஜத்யவதி ஹந்த்யேவ பக்தானாம் பக்திவ்ருத்தயே |
ஏவம் சாத்விக மத்யஸ்த தாமஸாம்ஸ்த்ரி விதானபி |
ஸ்ருஜத்யவதி ஹந்தீஷோலீலயா பக்தவத்ஸல ||
அனாதிகால தத்ஸ்த்யேவ சங்கல்போ ஜகதீஷிது: ||

தயாளுவான ஸ்ரீபரமாத்மன் சர்வ ஜகத்தையும் ஸ்ருஷ்டி செய்கிறான். இது இல்லையென்றால், பரமாத்மனின் தயாளுத்வத்திற்கு கேடு வருகிறது. ஆகையால், பிரம்மாதி ஸாத்விகர்களை மட்டும் ஸ்ருஷ்டிக்காமல், மற்றவர்களான தாமஸர்களைக்கூட ஸ்ருஷ்டித்து, காப்பாற்றி, இறுதியில் சம்ஹரிக்கிறான். 

அனாதி காலத்திலிருந்து இதுவே அவனது சங்கல்பமாக இருக்கிறது என்கிறார். இந்த ஆதாரங்களின்படி ஜீவர்கள் அனாதியிலிருந்து த்ரிவிதர்கள் என்று தெரிகிறது. இப்படியிருக்கையில், ஸ்ருஷ்டி காலத்தில் பரமாத்மன் ஜீவர்களுக்கு குணங்களை சம்பந்தப்படுத்துகிறான் என்று தாசராயர் சொல்வதால், பரமாத்மன் ஜீவர்கள் சில பேரை சாத்விகர்களாகவும், சிலரை ராஜஸர்களாகவும், வேறு சிலரை தாமஸர்களாகவும் தன் இஷ்டத்திற்கேற்ப படைக்கிறான் என்று அர்த்தம் கொண்டால், அது ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்தத்திற்கு விரோதமாகிறது. ஆகையால், ’குணகள’ என்றால், அது சம்பந்தமான ஸ்தூல ஷரீரங்கள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். 


சாத்விக ஜீவர்களுக்கு சத்வகுண சம்பந்தமான தேவாதி சரீரங்களையும், ராஜஸர்களுக்கு ரஜோகுண சம்பந்தமான மனித சரீரங்களையும், தாமஸர்களுக்கு தமோகுண சம்பந்தமான தைத்யாதி சரீரங்களையும் கொடுக்கிறான் என்று அர்த்தம் கொண்டால், நிர்ணய வாக்கியத்திற்கும், விஷ்ணு ரகசிய வாக்கியத்திற்கும் சரியாக பொருந்தி வருகிறது. அல்லது, ’குணகள’ என்றால் ஷப்த ஸ்பர்ஷாதி தன்மாத்ரா குணங்கள் என்றும் அர்த்தம் சொல்லலாம். தத்வ தேவதைகள் என்னும் உறவினர்களுடன் கூடிய சரீரங்கள் என்னும் வீட்டில் வைத்து, ஜீவர்களுக்கு ஷப்த, ஸ்பர்ஷாதி குணங்களைக் கொடுத்து, சுக துக்கங்களின் கலவையான சம்சாரத்தில் வைத்து, அவர்களின் சாதனை முடிந்தபிறகு, சாத்விகர்களுக்கு சுகாத்மகமான முக்தியைக் கொடுத்து, தாமஸருக்கு துக்காத்மகமான தமஸ்ஸைக் கொடுத்து, மத்யமருக்கு கலவையான நித்ய சம்சாரத்தைக் கொடுக்கிறான் என்று பொருள்.

***

No comments:

Post a Comment