ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, March 1, 2020

#24 - கருணா சந்தி

#24 - கருணா சந்தி

தந்தெதாய்களு தம்ம சிசுவிகெ3
3ந்த ப4யகள பரிஹரிஸி நிஜ
மந்தி3ரதி3 பே3டி3து33னித்தா13ரிசுவந்த33லி |
ஹிந்தெ3முந்தெ333லதி3 ஒளஹொர
கிந்தி3ரேஷனு த1ன்னவர னெ
ந்தெந்து3 சலஹுவனாக3சத3 வோலெத்த3 நோடி33ரு ||24

தந்தெதாய்களு தம்ம சிசுவிகெ = பெற்றோர், தம் மக்களுக்கு
பந்த பயகளபரிஹரிஸி = வந்த பயங்களைப் போக்கி
நிஜமந்திரதி = தம் வீட்டில்
பேடிதுதனித்து = வேண்டியதைக் கொடுத்து
ஆதரிசுவந்ததலி = ஆதரிப்பதைப் போல
தன்னவரனு = தன் பக்தர்களை
ஹிந்தெமுந்தெடபலதி = முன்னும், பின்னும், இடம், வலத்திலும்
ஒளஹொரகெ = உள்ளே வெளியேயும்
இந்திரேஷனு = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
அகஸதவோல் = ஆகாயத்தைப் போல
எத்த நோடிதரு = அனைத்து இடங்களிலும் வியாப்தனாக
எந்தெந்து = எப்போதும்
சலஹுவ = தன் பக்தர்களை காப்பாற்றுவான்.

குழந்தையானது, ஏதாவது சிறு பிராணியைப் பார்த்து பயம் கொண்டால், பெற்றோர் ஆனவர், உடனடியாக அந்தக் குழந்தையின் அருகில் இருக்கும், அதற்கு பயம் உண்டாகக் காரணமான பிராணியை தூர ஓட்டி, குழந்தையை வீட்டில் அழைத்துப்போய், அதை சமாதானம் செய்து, அக்குழந்தை விரும்பியதைக் கொடுத்து அதை ஆதரிப்பர். அது போலவே, ஸ்ரீபரமாத்மனும் தன் பக்தர்களின் முன்னும் பின்னும், இட வலதில், உள்ளும் வெளியேயும் என அனைத்து இடங்களிலும் நின்று வியாபித்திருக்கிறான். அப்படியாக இருந்து அவர்களை எந்நேரமும் காக்கிறான். 

அக்ரத: ப்ருஷ்டதஸ்சைவ பார்ஷ்வதஸ்ச மஹாபலௌ |
ஆகர்ணபூர்ண தன்வானௌ ரக்‌ஷேதாம் ராமலட்சுமணௌ ||


பயணத்திற்குப் போகும்முன் இந்த ஸ்லோகத்தை சொல்லும் வழக்கம் நம்மில் உண்டு. ஆனால் இதன் பொருள் என்ன? முன்னும், பின்னும், இட, வலதில், காது வரைக்கும் இழுத்துக் கட்டப்பட்ட வில்லை ஏந்தியிருக்கும் ராம லட்சுமணர்கள் நம்மை காப்பாற்றட்டும் - என்பதே ஆகும். இப்படியாக பரமாத்மன் தன் பக்தர்களை காக்கிறான் என்பதையே தாசராயர் விளக்குகிறார்.

***



No comments:

Post a Comment