பாவபிரகாசிகை
: சந்தி 23 : கல்ப சாதன சந்தி
/ அபரோக்ஷ தாரதம்ய சந்தி
ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
இந்த சந்தியில் பிரம்ம தேவரே முதலான அனைத்து
தேவதைகளின் கல்ப சாதனையை, எந்த தேவதைக்கு எவ்வளவு கல்ப
சாதனைக்குப் பிறகு, அபரோக்ஷம் ஆகிறது என்பதையும், அந்த காலமானத்தையும் இங்கு
விளக்குகிறார்.
ஏகவிம்ஷதி மதப்ரவர்த்தக கா
குமாய்க3ள குஹகயுக்தி நி
ராகரிஸி ஸர்வோத்தமனு ஹரியெந்து3 ஸ்தா2பிஸித3 |
ஸ்ரீகளத்ரனஸத3ன த்3விஜப பி
நாகிஸன்னுத மஹிம பரம க்ரு
பாகடாக்ஷதி3 நோடு3 மத்4வாசார்ய கு3ருவர்ய ||1
ஏகவிம்ஷதி மதப்ரவர்த்தக = 21 மதங்களை உலகத்தில் படைத்து புகழ் பெறச்செய்த
காகு மாய்கள = மாயாவாதிகளின்
குஹகயுக்தி = கபட யுக்திகளை
நிராகரிஸி = கண்டனம் செய்து
சர்வோத்தமனு ஹரியெந்து ஸ்தாபிஸித = ஸ்ரீமன் நாராயணனே
சர்வோத்தமன் என்று நிறுவிய
ஸ்ரீகளத்ரன = லட்சுமிதேவியை பத்னியாகக்
கொண்டிருக்கும் ஸ்ரீபரமாத்மனின்
ஸதன = வசிக்கும் இடமான சேஷதேவர்
த்விஜப = பறவையில் சிறந்தவரான கருடதேவர்
பினாகி = ருத்ரதேவர் இவர்களால்
ஸன்னுத = வணங்கப்படுபவனான
மஹிம = மகிமைகளைக் கொண்ட
மத்வாசார்ய = ஸ்ரீமன் மத்வாசார்யர் என்னும்
குருவர்ய = ஹே குரு ஸ்ரேஷ்டனே.
பரமக்ருபா கடாக்ஷதி = என்னை உன் பரம கருணைப்
பார்வையால்
நோடு = பார்; அதாவது, இப்போது தொடங்கியுள்ள சந்தி எவ்வித தடங்கல்களும் இன்றி முடியவேண்டும்.
அதுமட்டுமல்லாமல், இந்த சந்தியில் சொல்லும் வாக்கியங்கள், நீங்கள் சொன்ன வாக்கியத்திற்கு அனுகுணமாக, அனைத்து மக்களுக்கும் சம்மதமாக இருக்குமாறும் செய்யுங்கள் என்று வேண்டிக்
கொள்கிறார் என்பது கருத்து.
ஸௌர, சாக்த, காணபத்ய முதலான 21 மதங்களின் தவறான வாதங்களை நிராகரித்து ‘ஏகவிம்ஷதி குபாஷ்ய தூஷகம்’ என்னும் மத்வ விஜயத்தின்
வாக்கியத்தைப் போல, பிரம்ம சூத்திரத்திற்கு 22ம் பாஷ்யத்தை இயற்றி, ஹரி சர்வோத்தமன் என்று நிர்ணயம் செய்த, கருட,
சேஷ ருத்ராதிகளால் வணங்கப்படும் மகிமை உள்ள, குரு ஸ்ரேஷ்டரான ஹே மத்வாசார்யரே! உங்கள் கருணைப் பார்வையால், என்னைப் பாருங்கள். இந்த சந்தியில் நான் சொல்வது அனைத்தும், உங்களின் வாக்கியங்களுக்கு சரியாகப் பொருந்தி, அனைத்து மக்களுக்கும் சம்மதம் ஆகுமாறு செய்யுங்கள்.
வேத3மொத3லாகி2ப்பமல மோ
க்ஷாதி3காரிக3ளாத3 ஜீவர
ஸாத4னக3ள பரோக்ஷனந்தர லிங்க3ப4ங்க3வனு |
ஸாது4க3ளு சித்தைபுதெ3ன்னப
ராத4க3ள நோட3த3லெ சக்ர க
தா4த3ரனு பேளிஸித3 தெரத3ந்த3த3லி பேளுவேனு ||2
வேதமொதலாகிப்ப = பிரம்மதேவரில் துவங்கி
அமல= தோஷங்கள் அற்ற
மோக்ஷாதிகாரிகளாத ஜீவர சாதனகள = மோட்சத்திற்கு
தகுதியான ஜீவர்களின் சாதனைகளை
அபரோக்ஷனந்தர = அபரோக்ஷம் ஆனபிறகு
லிங்கபங்கவனு = லிங்க சரீரம் பங்கம் ஆகும் காலத்தை
சக்ர கதாதரனு பேளிஸித தெரதந்ததலி = ஸ்ரீஹரி என்னில்
இருந்து சொன்னதைப் போல
பேளுவேனு = சொல்கிறேன்
ஸாதுகளு = அறிஞர்கள்
என்னபராதகள = என் தவறுகளை
நோடதலெ = பார்க்காமல் (கவனிக்காமல்)
சித்தைபுது = அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிரம்மதேவரில் துவங்கி, மோட்சத்திற்குத் தகுதியான அனைத்து ஜீவர்களும், எவ்வளவு கல்பங்கள் சாதனைக்குப் பிறகு, அபரோட்சத்தை அடைகிறார்கள்; மற்றும், அதன் பிறகு முக்திக்கு எவ்வளவு கல்ப சாதனை தேவைப்படுகிறது என்பதை, ஸ்ரீஹரி எனக்குள் இருந்து சொல்லுமாறு சொன்னதை, நான் சொல்கிறேன். இதில் என் தவறுகள் ஏதேனும் இருந்தால், மன்னித்து, அறிஞர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதிலிருந்து, தமது ஸ்வாதந்த்ர்ய கர்த்ருத்வத்தை, தாசார்யர் பரிகரித்துக் கொள்கிறார்
என்பது கருத்து.
த்ருண க்ருமி த்3விஜ பஷு நரோத்தம
ஜனப நரக3ந்த4ர்வக3ணரிவ
ரெனிபரம்ஷவிஹீன கர்மஸுயோகி3க3ளு எந்து3 |
தனுப்ரதீகதி3 பி3ம்ப3ன உபா
ஸனவகெ3ய்யுத இந்தி3ரியஜ க
ர்மனவரத ஹரிக3ர்ப்பிஸுத நிர்மமரு எனிஸுவரு ||3
த்ருண = த்ருண ஜீவர்கள்
க்ருமி = கிருமி (பூச்சிகள்)
த்விஜ = பறவைகள்
பஷு = பசு, நாய் முதலான விலங்குகள்
நரோத்தம = மனுஷ்யோத்தமர்கள்
ஜனப = சக்ரவர்த்திகள்
நரகந்தர்வகண = மனுஷ்ய கந்தர்வ கண
இவர்கள் ஏழு கணங்களும்
அம்ஷவிஹீனரு = இவர்கள் நிரம்ஷ ஜீவர்கள்
கர்மசுயோகிகளு = கர்ம யோகிகள். அதாவது, கர்மத்தினால் சாதனைகள் செய்பவர்கள்
எந்து = எனப்படுகிறார்கள்
தனுப்ரதீகதி = தன் சரீரம் என்னும் ப்ரதிமைகளில்
பிம்பன = பிம்ப மூர்த்தியான ஸ்ரீஹரியின்
உபாஸனகெய்யுத = உபாசனையை செய்தவாறு
இந்திரியஜ கர்ம = ஞானேந்திரிய, கர்மேந்திரிய மற்றும் மனஸ் இவற்றின் சம்பந்தத்தினால் செய்யும் அனைத்து
கர்மங்களையும்
அனவரத = எப்போதும், எல்லா காலங்களிலும்
ஹரிகெ = ஸ்ரீபரமாத்மனுக்கு
அர்ப்பிஸுத = சமர்ப்பணம் செய்தவாறு
நிர்மமரு = நான், எனது என்னும் அபிமானத்தை விட்டவர்கள்
எனிஸுவரு = எனப்படுகிறார்கள்
த்ருண, கிருமி, பறவை,
பசு,
மனுஷ்யோத்தமர்கள், சக்ரவர்த்திகள், மனுஷ்ய கந்தர்வர்கள் என்னும் இந்த 7 வித ஜீவர்களும் நிரம்ஷர்
எனப்படுகின்றனர். சாம்ஷர்கள் என்றால், தத்வாபிமானி தேவதைகளான சூர்யாதிகள்
என்று அறியவேண்டும். சூர்ய மண்டலத்திலும், அனைவரின் கண்களிலும் இருப்பவன் ஒருவனே ஆனாலும், சூரியன், அம்சத்தினால் பல ரூபங்களைக் கொண்டிருக்கிறான். இப்படியே அனைத்து தத்வாபிமானி
தேவதைகளும் இருக்கின்றனர்.
இப்படி இல்லாதவர்கள் நிரம்ஷர்கள். இவர்கள் ஒரு
இடத்தில் இருந்தால், தமது ரூபாந்தரங்களால் இன்னொரு இடத்தில் இருக்காதவர்கள். இவர்கள் கார்ய யோகிகள்
எனப்படுகின்றனர். இவர்களுக்கு பிரதீகாலம்பனர் என்றும் இன்னொரு பெயர் உண்டு. ப்ரதீக
என்றால் அவர்களின் சரீரம். அந்த சரீரத்திலேயே, ஸ்ரீஹரி அபரோக்ஷத்தில் காண்கின்றனர் ஆகையால், ப்ரதீகாலம்பனர் எனப்படுகின்றனர்.
த்ருணாதிமர்த்ய கந்தர்வ பர்யந்தாஸ் தேஹ்யனம்ஷத: ||
நிரம்ஷாஸ்தே ப்ரதீகாக்யாலம்பாஸ்தே கர்மயோகின: ||
ப்ரதீகாக்ய ஷரீரஸ்தம் பஷ்யந்தீதி ததாஹ்வயா: ||
என்னும் பிரகாச சம்ஹிதையின் வாக்கியத்திற்கேற்ப இந்த
அர்த்தம் தெரிய வருகிறது. இந்த த்ருண முதல் மனுஷ்ய கந்தர்வர்கள் வரைக்குமான 7 கணங்கள், தம் தேகத்தில் பிம்ப ரூபியான ஸ்ரீஹரியின் உபாசனை செய்தவாறு, தம் இந்திரியங்களால் செய்யும் அனைத்து கர்மங்களையும், தங்களின் கர்வத்தையும் விட்டு, அவற்றை ஸ்ரீஹரிக்கு அர்ப்பித்தவாறு, தாம் நிர்லிப்தனாக இருக்கின்றனர்.
ஏளு வித3 ஜீவக3ண ப3ஹள ஸு
ராளி ஸங்க்2யானேம வுள்ளுது3
தாளி நரதே3ஹவனு பி3ராம்மண குலதொ3ளுத்3ப4விஸி |
ஸ்தூ2லகர்மவ தொரெது3 கு3ருக3ளு
பேளித3ர்த்த2வ திளிது3 தத்த
த்கால த4ர்ம ஸமர்ப்பிஸுவவரு கர்மயோகி3க3ளு ||4
ஏளு வித ஜீவகண = முந்தைய பத்யத்தில் கூறிய த்ருண
மொதலு மனுஷ்ய கந்தர்வர்கள் வரைக்குமான 7 ஜீவ கணங்கள்
பஹள = எண்ண முடியாதவர்களாக (அதிகமாக) இருக்கிறார்கள்
சுராளி சங்க்யா = தேவதைகளின் சமூகத்தின் எண்ணிக்கை
நேம உள்ளத்து = இவ்வளவு என்று எண்ணிக்கை கொண்டது
கர்மயோகிகள் = மேற்கூறிய 7 வித கர்ம யோகிகளான ஜீவகணர்கள்
நரதேஹவனு தாளி = மனுஷ்ய தேகத்தை அடைந்து
பிராம்மண குலதொளுத்பவிஸி = பிராமண குலத்தில் பிறந்து
ஸ்தூல கர்மவ தொரெது = விஷய சுக ஆசையினாலும், ஸ்வர்க்கத்தின் ஆசையினாலும் செய்யும் காம்ய கர்மங்களை விட்டு
குருகளு பேளிதர்த்தவ = குருகள் சொன்ன உபதேசத்தை
அறிந்து
தத்தத்கால தர்ம = அந்தந்த காலங்களில் செய்யும் புண்ய
பல ரூபமான கர்மங்களை
ஸமர்ப்பிஸுவரு = ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிப்பார்கள்.
த்ருண முதலான 7 வித ஜீவர்கள், எண்ணவே முடியாத அளவிற்கு இருக்கிறார்கள். தேவதா கணங்கள் மட்டும் ‘ஷதகோட்யோஹி தேவானாம்’ தேவதைகள் 100 கோடிகள் என்னும் வாக்கியத்தினால் எண்ண முடியுமாறு இருப்பவர்கள். த்ருணவில்
தொடங்கி,
மனுஷ்ய கந்தர்வர்கள் வரைக்கும் இருக்கும் 7 வித ஜீவர்கள், கர்மயோகிகள் எனப்படுகிறார்கள். இவர்கள், மனிதர்களாக, பிராமண குலத்தில் பிறந்து, காம்ய கர்மங்களை விட்டு, குரு முகத்தினால் பகவன் மஹாத்ம்யத்தைக் கேட்பது, ஆகியவற்றை செய்து, அவற்றை மனப்பாடம் செய்து, செய்த கர்மங்கள் அனைத்தையும்
ஹரிக்கு அர்ப்பித்தவாறு, காலத்தை கழிப்பார்கள்.
ஹீனகர்மக3ளிந்த3 ப3ஹுவித3
யோனியலி ஸஞ்சரிஸி ப்ராந்தகெ
மானுஷத்3வவனைதி3 ஸர்வோத்தமனு ஹரி எம்ப3 |
ஞான ப4க்திக3ளிந்த3 வேதோ3
க்தானுஸார ஸஹஸ்ர ஜனுமதி3
ந்யூனகர்மவ மாடி3 ஹரிக3ர்ப்பிஸித நந்தரதி3 ||5
ஹீனகர்மகளிந்த = (மேற்கூறிய கர்மயோகிகள், பிராமண பிறவியில் பிறப்பதற்கு முன்னர்), அனேக வித நீச கர்மங்களை செய்து
பஹுவித யோனியலி சஞ்சரிஸி = நானா விதமான பிறவிகளை
எடுத்து
ப்ராந்தகெ = இறுதியில்
மானுஷத்வவனைதி = மனிதப் பிறவியில் பிறந்து
சர்வோத்தமனு ஹரி எம்ப = ஸ்ரீஹரியே சர்வோத்தமன்
என்னும் ஞான பக்திகளால்
வேதோக்தானுசார = வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதைப்
போல, விதிகளை செய்து, விதிவிலக்குகளை விட்டு
ஹீகெ சஹஸ்ரஜன்மான்யூன = ஆயிரம் பிறவிகளுக்கு குறைவு
இல்லாமல்
கர்மவமாடி = செய்ய வேண்டிய கர்மங்களை செய்து, ஸ்ரீஹரிக்கு அர்ப்பித்த
அனந்தரதி = பிறகு
த்ருணவில் துவங்கி, மனுஷ்ய கந்தர்வர்கள் வரைக்கும் மேற்கூறிய 7 வித கர்ம யோகிகள், மனிதர்களாக பிறப்பதற்கு முன்னர், அனேக விதமான நீச கர்மங்களை செய்து, அனேக வித பிறவிகளில் பிறந்து
இறந்து,
இறுதியில் மனுஷ்ய பிறவியில் பிறந்து, பரமாத்மனிடம் பக்தியுடன் ஹரி
சர்வோத்தமன் என்று அறிந்து ஞான பூர்வகமாக, வேதோக்த கர்மங்களை, ஆயிரம் பிறவிகளுக்கு குறைவு
இல்லாமல் செய்து, அவற்றை ஸ்ரீஹரிக்கு அர்ப்பித்த பிறகு.
ஹத்துஜனுமக3ளல்லி ஹரிஸ
ர்வோத்தம ஸுராஸுரக3ணார்ச்சித
சித்ரகர்ம விஷோக4னந்தானந்த ரூபாத்ம |
ஸத்ய ஸத்ஸங்கல்ப ஜக3து3
த்பத்தி ஸ்தி2தி லய காரண ஜரா
ம்ருத்யு வர்ஜிதனெந்து3பாஸனெகெ3ய்த3 தருவாய ||6
ஹத்து ஜனுமகளல்லி = 10 பிறவிகளில்
ஹரி சர்வோத்தம,
சுராசுரகணார்ச்சித =
சுர = அமுக்தர்களான தேவதா கணத்தினாலும்
அசுர = முக்தர்களான தேவதா கணத்தினாலும்
அஸுபி: ஸ்வரூபேந்த்ரியை: சின்மாத்ரை:
ரமந்தே ஸ்வரூபானந்த மனுபவந்தித்யஸுரா: --
என்னும் நிர்ணயத்தின், வரதராஜீய வியாக்யான வாக்கியம் இருக்கிறது. மகாபாரத தாத்பர்ய நிர்ணய 2ம் அத்தியாயத்தில், 48 ஸ்லோகம்:
வந்தேபவக்ன மமராஸுர ஸித்தவந்த்யம் -- இதில் அமரர்
என்றால் தேவதைகள் இவர்களாலும், அசுரர் என்றால் தைத்யர்
இவர்களாலும், வணங்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறது. பரமாத்மனுக்கு தைத்ய-வந்த்யத்வம் இல்லை
என்னும் சந்தேகத்தை பரிகரிப்பதற்காக, ஸ்வயம் ஸ்ரீமதாசார்யரே 60ம் ஸ்லோகத்திலிருந்து வியாக்யானம் செய்திருக்கிறார். அது என்னவெனில்: மோக்ஷைக
ஹேதுரசுரூப சுரைஸ்சமுக்த்யைர் வந்த்ய: என்கிறார்.
இதற்கு வரதராஜீய வியாக்யானத்தில், மேலே கூறியதைப் போலவே இருக்கிறது. அதாவது, அசுர = அசு என்றால், சித் ஸ்வரூபமான
ஸ்வரூபேந்திரியங்கள். ஸ்வரூபானந்தத்தை அனுபவிக்கும் முக்தர்கள் என்று அர்த்தம்.
இப்படியாக, அசுர வந்த்ய என்றால் நிர்ணயத்தில் அர்த்தம் சொல்லியிருப்பதால், இங்கும், சுராசுர கணார்ச்சித என்பதில் அசுர என்றால், முக்தர்களான தேவதா கணம் என்று அர்த்தம் சொல்ல வேண்டும். ஆக,
சுராசுர கணார்ச்சித = முக்தாமுக்த தேவதா கணத்தினால்
வணங்கப்படுபவன் என்று அர்த்தம்.
சித்ரகர்ம = விசித்திரமான வியாபாரங்களைக் கொண்ட
விஷோக = சோகங்கள் அற்றவனான
அனந்தானந்த ரூபாத்ம,
ஸத்யசங்கல்ப = சொன்னதை / தன் இஷ்டப்படியே செய்து
முடிப்பவன்
ஜகத் = உலகிற்கு
உத்பத்தி = ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய,
காத்தல், அழித்தல் இவற்றிற்கு காரணன்
ஜராம்ருத்யுவர்ஜித = பிறப்பு இறப்பு ஆகியவை இல்லாதவன்
எந்து உபாசனெகெய்த = உபாசித்த
தருவாய = பிறகு
மனுஷ்ய பிறவிகளில் 1000 பிறவிகளின் சாதனை செய்த பிறகு, மற்றும் பத்து பிறவிகளில், ஹரி சர்வோத்தம, முக்தாமுக்தர்களால் வணங்கப்படுபவன், விசித்ர கர்மங்களைக் கொண்டவன், சோகங்கள் அற்றவன், அனந்தானந்த ரூபங்களைக் கொண்டவன், சத்யசங்கல்பன், உலகத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணன், பிறப்பு இறப்பு இல்லாதவன் என்று
உபாசனைகளை செய்தபிறகு.
மூரு ஜனுமக3ளல்லி தே3ஹா
கா3ர பஷுத4ன பத்னிமித்ர கு
மார மாதாபித்ருக3ளல்லிஹ ஸ்னேஹகிந்ததி4க |
மாரமணனலி பி3ட3தெ3 மாடு3வ
ஸூரிக3ளு ஈ உக்த ஜனுமவ
மீரி பரமாத்மன ஸ்வதே3ஹதி3 நோடி3 ஸுகி2ஸுவரு ||7
மூரு ஜனுமகளல்லி = மூன்று பிறவிகளில்
தேஹாகார பஷுதன = பஞ்சபௌதிக சரீரம், வீடு,
பசு,
செல்வம்
பத்னிமித்ர குமார = மனைவி, நண்பர்கள், மக்கள்
மாதாபித்ருகளல்லிஹ = தாய் தந்தையர் இவர்களிடம்
ஸ்னேஹகிந்ததிக = இவர்களிடம் இருக்கும் நட்பினை
(அன்பினை) விட அதிகமான நட்பினை
மாரமணனலி = லட்சுமிபதியான ஸ்ரீஹரியில்
பிடதெ மாடுவ சூரிகளு = விடாமல் செய்யும் ஞானிகள்
ஈ உக்த ஜனுமவ = மேற்கூறிய பிறவிகள் முடிந்த பிறகு
ஸ்வதேஹதி = தம் தேகத்தில்
பரமாத்மன = பரமாத்மனைக் கண்டு
சுகிசுவரு = மகிழ்ந்திருப்பர்.
முந்தைய பத்யத்தில் கூறப்பட்டுள்ள 10 பிறவிகள் ஆனபிறகு, மூன்று பிறவிகளில், மனைவி, மக்கள் ஆகியவர்களில் செய்யும் அன்பைவிட அதிகமான அன்பினை பரமாத்மனிடம்
செய்தபிறகு அபரோக்ஷம் ஆகிறது. அதாவது, தம் தேகத்திலேயே பரமாத்மனை
காண்பர்.
இப்படியாக, 3ம் பத்யம் முதல் 7ம் ப்த்யத்தின் வரை, த்ருணவில் தொடங்கி 7 வித ஜீவர்கள் வரையிலான கர்மயோகி ஜீவர்களின் சாதனையை சொல்கிறார். மொத்தம் இந்த
5 பத்யங்களில் சாராம்சம் என்னவென்றால்:
நிரம்ஷா: ஸத்ஸாதனாயோசித ஜன்மஸஹஸ்ரத: ||
ஞானந்துதஷபி: ப்ராப்ய ஸத்பக்திம் த்ரிபிராப்ய ச ||
த்ருஷ்ட்வா ஹ்ருதிஸ்தம்யுச்யந்தே ஹ்யதஸ்தே கர்மயோகின:
||
நிரம்ஷரான ஜீவர்கள், 1000 பிறவிகளில் சத்சாதனைகளை செய்து, அதன் பின் 10 பிறவிகளில் ஞானத்தை சம்பாதித்து, அதன் பின், 3 பிறவிகளில் பகவந்தனிடம் த்ருட ஸ்னேகத்தை செய்து, அபரோக்ஷத்தில் பரமாத்மனைக் கண்டு முக்தர் ஆகுவர் என்று ப்ரகாஷ சம்ஹிதையில்
சொல்லியிருப்பதையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார்.
தே3வகா3யகஜான சிரபித்ரு
தே3வரெல்லரு ஞானயோகி3க3
ளாவகாலகு புஷ்கர ஷனைஸ்சர உஷா ஸ்வாஹ
தே3வி பு3த4 ஸனகாதி3க3ளு மே
கா4வளிப பர்ஜன்ய ஸாம்ஷரு
ஈ உப4ய க3ணதொ3ளகி3வரு விக்3ஞானயோகி3க3ளு ||8
தேவகாயக = தேவ பாடகர்கள்
அஜான = அஜானஜ தேவர்கள்
சிரபித்ரு = சிரபித்ரு கணங்கள்
தேவரெல்லரு = இந்த தேவதைகள் அனைவரும்
ஆவகாலகு = அனாதி காலத்திலும்
ஞானயோகிகளு = ஞான யோகிகள் எனப்படுகின்றனர்.
புஷ்கர, ஷனைஸ்சர, உஷா,
ஸ்வாஹாதேவி, புத,
சனகாதிகள், ஆகியோர்
மேகாவளிப = மேகங்களுக்கு அதிபதியான
பர்ஜன்ய,
சாம்ஷரு = இவர்கள் அனைவரும் சாம்ஷர்கள்
ஈ உபய கணதொளகெ = மேற்கூறிய சாம்ஷர் என்னும் இரு
குணங்களில்
இவரு = இவர்கள்
விக்ஞானயோகிகள் = விக்ஞான யோகிகள் எனப்படுகின்றனர்.
தேவ கந்தர்வர்கள், அஜானஜர்கள், சிரபித்ருகள், இவர்கள் சாம்ஷர்கள். பிரதிகூலம்பனர் எனப்படுகிறார்கள். இவர்கள் ஞானயோனிகள்.
தேவகந்தர்வ பூர்வாத் வஷாஸ்சசானஜாம்ஷா: ஸமஸ்தஷ: ||
ப்ரதீகாலம்பனா: ஸாம்ஷா: க்ரமாஸ்ச ஞானயோகின: ||
என்னும் பிரகாச சம்ஹிதா வாக்கியத்திலிருந்து, இந்த அர்த்தம் கிடைக்கிறது.
புஷ்கர, ஷனைஸ்சர, உஷா,
ஸ்வாஹா, புத,
சனகாதிகள், பர்ஜன்ய இவர்கள், சாம்ஷரில் அப்ரதீகாலம்பனர்கள் மற்றும் விக்ஞான யோகிகள் எனப்படுகின்றனர்.
அப்ரதீகாலம்பனாஸ்ச ப்ராயோ விக்ஞானயோகின: ||
அப்ரதீகாலம்பனர்கள் அனைவரும் விக்ஞான யோகிகள் என்னும்
பிரகாச சம்ஹிதையின் வாக்கியமே இதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
ப4ரதக2ண்ட3தி3 நூரு ஜனுமவ
த4ரிஸி நிஷ்காமக ஸுகர்மா
சரிஸிதா3னந்த3ரதி3 தஷஸாஹஸ்ர ஜனுமத3லி |
உருதர ஞானவனு படெ3தொ3
ந்தெ3ரடு ஷத தே3ஹத3லி ப4கு3தி1ய
நிரவதி4கனலி மாடி3 காம்ப3ரு பி3ம்ப3ரூபவனு ||9
பரதகண்டதி = பரத கண்டத்தில்
நூரு ஜனுமவ தரிஸி = நூறு பிறவிகளை எடுத்து
நிஷ்காமக = பலன்களில் இருக்கும் விருப்பங்களை விட்டு
சுகர்மாசரிஸி = சத்கர்ம அனுஷ்டானங்களை பின்பற்றிய
பிறகு
தஷ சாஹஸ்ர ஜன்மதலி = 10,000 பிறவிகளில்
உருதர ஞானவனு படெது = சுக்ஞானத்தைப் பெற்று
ஒந்தெரடு ஷத தேஹதலி = (2+1)*100 = 300 பிறவிகளில்
நிரவதிகனலி = ஒப்புமை இல்லாத ஸ்ரீஹரியிடம்
பகுதிய மாடி நிரவதிகதலி -- என்று ஒரு பாடம்
இருக்கிறது. இந்த பாடத்தின்படி, ஒப்புமை இல்லாத பக்தியை செய்து, என்று அர்த்தம் வருகிறது.
காம்பரு பிம்பரூபவனு = பிம்பரூபத்தைக் காண்பார்கள்.
ஸத்கர்மக்ருத்வா நிஷ்காமம் லபந்தே குருஸந்ததம் |
அகாத்விகா தேவதாஸா: ஸத்கர்ம ஷதஜன்மபி: ||
க்ருத்வாதஷ ஸஹஸ்ரோரு ஜன்மாபிர் ஞானமாப்ய ச|
பக்திம் த்ரிஷத கைராப்ய முச்யந்தே ஞானயோகின: ||
என்னும் பிரகாச சம்ஹிதையின் வாக்கியத்திற்கேற்ப, இந்த பத்ய அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் சாதனை கிரமம் என்னவெனில்: பரத
கண்டத்தில் 100 பிறவிகளில் நிஷ்காம்ய கர்மங்களை செய்து, பிறகு 10,000 பிறவிகளில் சிறந்த ஞானத்தைப் பெற்று, பின் 300 பிறவிகளில் உத்தமமான பக்தியை செய்து, அபரோக்ஷத்தில் பரமாத்மனை காண்பார்கள்.
ஸாத4னாத் பூர்வத3லி இவரிக3
நாதி3கால பரோக்ஷவில்ல நி
ஷேத4கர்மக3ளில்ல நரகப்ராப்தி மொத3லில்ல |
வேத3சாஸ்திரக3ளல்லி இப்ப வி
ரோத4வாக்3யவ பரிஹரிஸி மது3
ஸூத3னனெ ஸர்வோத்தமோத்தமனெந்து3 துதிஸுவரு ||10
இவரிகெ = மேற்கூறிய ஞான விக்ஞான யோகிகளுக்கு
ஸாதனாத் பூர்வதலி = சாதனை ஆகுவதற்கு முன்னர்
அனாதிகால = அனாதி காலத்திலிருந்து
அபரோக்ஷவில்ல = அபரோக்ஷம் இல்லை
நிஷேத கர்மகளில்ல = இவர்களுக்கென்று விதிக்கப்பட்ட
கர்மங்கள் இல்லை
நரகப்ராப்தி மொதலில்ல = நரகத்தில் துன்பப்படுவது
என்பது இல்லை
வேத சாஸ்திரகளல்லி = வேத சாஸ்திரங்க்ளில்
இப்ப = இருக்கும்
விரோதவாக்யவ பரிஹரிஸி = வேறுபாடுள்ள வாக்கியங்களை
பரிகரித்து
மதுசூதனனெ சர்வோத்தமோத்தமனெந்து = ஸ்ரீஹரியே சர்வோத்தமன்
என்று
துதிசுவரு = வணங்குவார்கள்.
தேவ கந்தர்வர்களில் தொடங்கி, பர்ஜன்ய வரைக்கும் கூறிய சாம்ஷர்களான, ஞான விக்ஞான யோகிகளுக்கு, முந்தைய பத்யத்தில் கூறிய சாதனையை
செய்வதற்கு முன்னர், அனாதி காலத்தில் அபரோக்ஷம் இல்லை. விசேஷ கர்மாசரணைகள் இல்லை. நரக பிராப்தியும்
இல்லை. வேத சாஸ்திரங்களில் பரஸ்பரம் வரும் விரோத வாக்கியங்களை பரிகரித்து, சந்தேகமற்ற ஞானத்தினால், ஸ்ரீஹரியே சர்வோத்தமன் என்று
அறிந்து,
மகிழ்ச்சியடைவார்கள்.
ஸத்யலோகாதி3பன பிடி3து3 ஷ
தஸ்த2 தே3வக3ணாந்தரெல்லரு
ப4க்தியோகி3க3ளெந்து3 கரெஸுவராவ காலத3லி |
ப4க்தியோக்3யர மத்3யத3லி ஸ
த்ப4க்தி விக்ஞானாதி3 கு3ணதி3
ந்து3த்தமோத்தம பி3ரம்ம வாயு வாணி வாக்தே3வி ||11
சத்யலோகாதிபன பிடிது = சத்யலோகாதிபதியான
பிரம்மதேவரிலிருந்து துவங்கி
ஷதஸ்த தேவகணாந்தரெல்லரு = சேஷ ஷதஸ்த தேவதைகளின்
வரைக்கும் இருக்கும் அனைவரும்
அவகாலதலி = அனாதி காலத்திலும்
பக்தியொகிகளெந்து கரெசுவரு = பக்தி யோகிகள் என்று
அழைக்கப்படுகின்றனர்
பக்தியோக்யர மத்யதலி = இத்தகைய பக்தி யோகிகளில்
சத்பக்தி விக்ஞானாதி குணதிந்த = பக்தி, விக்ஞான, குணங்களில்
பிரம்ம வாயு வாணி வாக்தேவி = பிரம்ம வாயு சரஸ்வதி
பாரதி ஆகியோர்
உத்தமமோத்தம = உத்தமர்கள்.
பிரம்மதேவரில் தொடங்கி, ப்ருஹத் தாரதம்யத்தில் சொல்லிய 49 மருத்கணர்கள், 12 ஆதித்யர்கள் முதலான தேவதைகளில், மேற்சொன்ன கக்ஷையைச் சேர்ந்த
தேவதைகளை விட்டு, மற்றவர்கள், சேஷ ஷதர்கள் என்று 100 தேவதைகளின் வரைக்கும், இருக்கும் அனைத்து தேவதைகளும் பக்தி யோகிகள் எனப்படுகிறார்கள். அந்த பக்தி
யோகிகளின் நடுவில் பிரம்மதேவர், வாயுதேவர், சரஸ்வதி தேவி, பாரதி தேவி ஆகியோர், சத்பக்தி, ஞானாதிகளால் உத்தமோத்தமர் எனப்படுகிறார்கள்.
ருஜுக3ணகெ ப4க்த்யாதி3 கு3ண ஸா
ஹஜவெனிஸுவுது3 க்ரமதி3 வ்ருத்3தி4 அ
ப்3ஜஜபத3வி பரியந்த பி3ம்போ3பாஸனவு அதி4க |
வ்ருஜின வர்ஜிதரிவரொளகெ3 த்ரிகு3
ணஜ விகாரக3ளில்லவெந்தி3கு3
த்4விஜ ப2ணிப ம்ருட3 ஷக்ரமொத3லா த3வரொளிருதிஹுது3 ||12
ருஜுகணகெ = பிரம்ம பட்டத்திற்கு யோக்யரான ருஜு
கணத்தவர்க்கு
பக்த்யாதி கண சஹஜவெனிஸுவது = பக்த்யாதி குணங்கள், அனாதி காலத்திலிருந்தும் இருந்தே இருக்கிறது
க்ரமதி = கல்ப சாதனை முடிய முடிய
வ்ருத்தி = வளர்ந்தவாறு
அப்ஜஜ பதவி பர்யந்த = 100 கல்ப சாதன ரூபமான பிரம்ம பதவி வரும் வரைக்கும்
பிம்போபாசனவு = பிம்ப உபாசனையானது
அதிக = கல்ப கல்பத்திற்கும் அதிகமாகிக் கொண்டே
வருகிறது
வ்ருஜின வர்ஜிதரு = இவர்களுக்கு பாவங்களும்
சேர்வதில்லை
இவரொளகெ = இந்த ருஜுகணத்தவர்களில்
த்ரிகுண விகாரகளு = ஸத்வ ரஜஸ் தமோ குணங்களின்
சம்பந்தமான குறைபாடுகள் என்றும் இல்லை
த்விஜ = கருட
பணிப = சேஷ
ம்ருட = ருத்ர
ஷக்ர = இந்திர
மொதலாதவரொளு = ஆகியோரில்
இருதிஹுது = த்ரிகுண சம்பந்தமான குறைபாடுகள்
இருக்கின்றன.
100 கல்ப சாதனையால் பிரம்ம பதவியை
அடையும் தகுதி உள்ளவர்கள் ருஜுகணஸ்தர்கள். இவர்களுக்கு பக்த்யாதி குணங்களும், அபரோக்ஷமும், அனாதி காலத்திலிருந்து இருக்கிறது. படிப்படியாக கல்ப சாதனை முடிந்தவாறு, பக்த்யாதிகள் பிம்போபாசனை ஆகியவை அதிகமாகியே வந்து, பிரம்ம பதவியை அடையும்போது முழுமை அடைகிறது.
இந்த ருஜுகணத்தவர்களுக்கு பாப சம்பந்தம் கொஞ்சமும்
இருப்பதில்லை. சத்வாதி ப்ராக்ருத குணத்திலிருந்து வரும் எவ்வித குறைபாடுகளும்
இருப்பதில்லை. இந்த குறைபாடுகள், கருட, சேஷ,
ருத்ர, இந்திர முதலான தேவதைகளில் இருக்கின்றன.
ருஜவோ நாமயேதேவா: யோக்யா பிரம்மபதஸ்யது || -- என்னும் பாகவத தாத்பர்ய வசனங்களால், பிரம்ம பதவி என்பது, இந்த ருஜுகணத்தவரைத் தவிர, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
ஸாத4னாத் பூர்வத3லி ஈ ரு
ஜ்வாதி3 தாத்விகரெனிப ஸுரக3ண
நாதி3 ஸாமான்யா பரோக்ஷிக3ளெந்து3 கரெஸுவரு |
ஸாத4னோத்தர ஸ்வஸ்வபி3ம்ப3 உ
பாதி4 ரஹிதாதி3த்ய நந்த3தி3
ஸாதரதி3 நோடு3வரு அதி4காரானுஸாரத3லி ||13
சாதனாத் பூர்வதலி = சாதனை துவங்குவதற்கு முன்னர்
ஈ ருஜ்வாதி = ருஜுகண முதலான
தாத்விகரெனிப = தத்வாபிமானிகள் எனப்படும்
சுரகண = தேவதா கணம்
அனாதி = அனாதி காலத்திலிருந்து
சாமான்யபரோக்ஷிகளெந்து கரெசுவது = அபரோக்ஷிகள்
என்றே அழைக்கப்படுகிறார்கள்
சாதனோத்தர = தத்தம் சாதனைகள் முடிந்தபிறகு
ஸ்வஸ்வபிம்ப = தத்தம் பிம்ப ரூபியான ஸ்ரீஹரியை
அதிகாரானுசாரதலி = தத்தம் யோக்யதைக்கேற்ப
உபாதி ரஹித = மேகம் முதலானவற்றால் மூடப்படாதிருக்கும்
ஆதித்யனந்ததி = சூரியனைப் போல
சாதரதி = மரியாதையுடன்
நோடுவரு = பார்க்கிறார்கள்
இந்த ருஜுகண முதலான தத்வாபிமானிகள், அனாதி காலத்திலிருந்தும், சாமான்யமான அபரோக்ஷ உள்ளவர்களாக
இருக்கிறார்கள். சாதனை காலம் முடிந்தபிறகு, தத்தம் தகுதிக்கேற்ப, மேகங்களால் மறைக்கப்படாத தூய்மையான
ஆகாயத்தின் நடுவில் இருக்கும் சூரியனைப் போல, தத்தம் பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனை காண்பார்கள்.
‘நோடுவ அதிகாரானுசாரதலி’ என்று சொன்னதால், அனைவரும் ஒரு சூரியனைப் போலவே பார்க்கிறார்களா என்னும் சந்தேகத்தை பரிகரித்தாயிற்று.
சிலர் ஒரு சூரியனைப் போல, சிலர் 10 சூரியனின் பிரகாசம், சிலர் 100, என அவரவர்களின் யோக்யதைக்கேற்ப ஒளி பொருந்திய பரமாத்மனை காண்பார்கள் என்பது
கருத்து.
சி2ன்னப4க்தரு எனிஸுதிஹரு ஸு
பர்ண ஸேஷாத்4யமரரெல்ல
ச்சி2ன்னப4க்தரு நால்வரெனிபரு பா4ரதி ப்ராண
ஸொன்னொட3ல வாக்தே3வியரு பணெ
க3ண்ண மொத3லாத3வரொளகெ3 த
த்தன்னியாமகராகி3 வ்யாபாரக3ள மாடு3வரு ||14
சுபர்ண = கருட தேவர்
சேஷாத்யமரரெல்ல = சேஷ தேவரே முதலான அனைத்து
தேவதைகளும்
சின்ன பக்தரு = நடுநடுவே சிறிது காலம் தடைபட்டு, மறுபடி பக்தி செய்வார்கள் என்று அர்த்தம்.
பாரதி = பாரதி தேவியர்
பிராண = பிராணதேவர்
ஸொன்னொடல = தங்க உடலைக் கொண்டவன் என்றால்
ஹிரண்யகர்ப்ப என்று அர்த்தம். அதாவது பிரம்மதேவர்
வாக்தேவி = சரஸ்வதி தேவியர்
நால்வரு = இந்த நால்வரும்
அச்சின்ன பக்தரு = எவ்வித தடைகளும் இன்றி, பக்தி செய்பவர்கள்
பணெகண்ண மொதலாதவரொளகெ = நெற்றியில் கண் உள்ளவர்
ருத்ரதேவர். இவரில் துவங்கி அனைத்து தேவதைகளிலும்
தத்தன் நியாமகராகி = அந்தந்த வேலைகளுக்கு ப்ரேரகராகி
வியாபாரகள மாடுவரு = செயல்களை செய்வார்கள்.
கருட, சேஷ முதலான தேவதைகள் - சின்ன
பக்தர்கள் எனப்படுகின்றனர். பாரதி, சரஸ்வதி, பிரம்மதேவர், வாயுதேவர் இந்த நால்வரும் அச்சின்ன பக்தர்கள் எனப்படுகின்றனர். இவர்கள்
நால்வரும் ருத்ரதேவர் முதலான தேவதைகளில் இருந்து, அந்தந்த காரியங்களுக்கு ப்ரேரகராகி, கர்மங்களை செய்விக்கின்றனர்.
ஹீன ஸத்கர்மக3ளெரடு3 பவ
மானதே3வனு மாள்பனித3கனு
மானவினிதில்லெனுத த்3ருடப4க்தியலி ப4ஜிபரிகெ3 |
ப்ராணபதி ஸம்ப்ரீதனாகி3 கு
யோனிக3ள கொட3னெல்லகர்மக3
ளானெ மாடு3வெனெம்ப மனுஜன நரககைதி3ஸுவ ||15
ஹீன சத்கர்மகளெரடு = சுகர்ம, துஷ்கர்ம என்னும் இரண்டையும்
பவமான தேவரு = வாயுதேவர்
மாள்பரு = செய்விக்கிறார்
அதகனுமான வினிதில்லெனுத = இந்த விஷயத்தில் சந்தேகமே
இல்லை என்று
த்ருடபக்தியலி பஜிபரிகெ = திடபக்தியினால்
வணங்குபவர்களுக்கு
ப்ராணபதி = முக்யபிராணதேவர்
ஸம்ப்ரீதனாகி = மிகவும் மகிழ்ந்து
குயோனிகள = நாய் நரி முதலான நீச பிறவிகளை
கொடனு = கொடுப்பதில்லை
எல்ல கர்மகள = அனைத்து கர்மங்களையும்
ஆனெ மாடுவனென்ப = நானே செய்கிறேன் என்று சொல்லும்
மனுஜன = மனிதனை
நரகவைதிஸுவ = நரகத்தில் தள்ளுகிறார்.
புண்ய பாவங்களுக்கு சாதனமான சுகர்ம, துஷ்கர்ம என்னும் இரண்டையும், வாயுதேவரே நமக்குள் இருந்து
செய்விக்கிறார். இந்த விஷயத்தில் சந்தேகமே இல்லை என்று நம்பிக்கையுடன் வணங்கும்
மனிதர்களுக்கு வாயுதேவர் மிகவும் மகிழ்ச்சியுடன், நாய் நரி முதலான நீச பிறவிகளைக் கொடுக்காமல் செய்வார். கர்மங்களை நானே
செய்கிறேன் என்று நினைக்கும் மனிதர்களை நரகத்தில் தள்ளுவார்.
தே3வ ரிஷி பித்ரு ந்ருபரு நரரெனிஸுவ
ரைவரொளு நெலெஸித்து3 அவர ஸ்வ
பா4வகர்மவ மாடி3 மாடி3பனொந்து3 ரூபத3லி |
பா4விப்3ரம்மனு கூர்மரூபத3
லீ விரிஞ்ச்யாண்ட3வனு பெ3ன்னலி
தா வஹிஸி லோகக3ள பொரெவனு த்3விதி3ய ரூபத3லி ||16
தேவ = தேவதைகள்
ரிஷி = ரிஷிகள்
பித்ரு = பித்ரு கண
ந்ருப = சக்ரவர்த்திகள்
நரனெனிஸுவ = மனுஷ்யன், எனப்படும் இந்த
ஐவரொளு = முக்தியோக்யரான ஐந்து வித ஜீவர்களில்
ஒந்து ரூபதலி = ஒரு ரூபத்தினால்
நெலஸித்து = நிலைத்திருந்து
அவர = அந்த முக்தியோக்யரின்
ஸ்வபாவ கர்மவ மாடி மாடிப = கர்மங்களை செய்து, செய்விக்கிறான்
பாவிப்ரம்மனு = அடுத்த கல்பத்தில் பிரம்ம பதவிக்கு
வரப்போகும்
த்விதிய ரூபதலி = இரண்டாம் ரூபமான
கூர்மரூபதலி = கூர்ம ரூபத்தினால்
ஈ விரிஞ்ச்யாண்டவனு = இந்த பிரம்மாண்டத்தை
பென்னலி = தன் முதுகில்
தா வஹிஸி = தான் தாங்கிப் பிடித்து
லோககள = அனைத்து பிராணிகளையும்
பொரெவனு = காக்கிறான்.
தேவதைகள், ரிஷிகள், பித்ருகள், சக்ரவர்த்திகள், மனுஷ்யர்கள் என்னும் ஐந்து வித முக்தி யோக்ய ஜீவர்களில் வாயுதேவர் வசித்தவாறு, அவரவரின் யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்து, செய்வித்து, அவர்களை ஒரு ரூபத்தினால் காக்கிறார். இரண்டாவதான, கூர்ம ரூபத்தை தரித்து, பிரம்மாண்டத்தை தன் முதுகில்
தாங்கி,
அனைத்து பிராணிகளையும் காக்கிறார்.
கு3ப்தனாகி3த்த3னிலதே3வ த்வி
ஸப்தலோகத3 ஜீவரொளகெ3 த்ரி
ஷப்3த ஸாவிரதா3ருனூரு ஷ்வாஸஜபக3ளனு |
ஸுப்தி ஸ்வப்ன ஸுஜாக்ரதி3க3ளலி
ஆப்தனந்த3தி3 மாடி3 மாடி3ஸி
க்லுப்தபோ3க3க3ளீவ ப்ராந்தகெ த்ருதிய ரூபத3லி ||17
அனிலதேவ = வாயுதேவர்
த்ருதீய ரூபதலி = தன் மூன்றாம் ரூபத்தில்
த்விஸப்த லோகத ஜீவரொளகெ = 14 உலகங்களிலும் இருக்கும் அனைத்து பிராணிகளிலும்
குப்தனாகித்து = மறைந்திருந்து
ஸுப்தி = அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதும்
ஸ்வப்ன = ஸ்வப்ன அவஸ்தையில் இருந்தாலும்
ஜாக்ரதீகளலி = முழித்திருக்கும் போதும்; அதாவது அனைத்து நிலைகளிலும்
ஆப்தனந்ததி = ஆப்த நண்பனைப் போல
த்ரிஸப்த ஸாவிரதாருனூரு ஷ்வாஸ ஜபகளனு = 3*7= 21,000+600 =
21,600 ஷ்வாஸ ஜபங்களை
மாடி = தாம் செய்து
மாடிஸி = ஜீவர்களால் செய்வித்து
ப்ராந்தகெ = இறுதியில்
க்லுப்தபோககளீவ = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
போகங்களைக் கொடுக்கிறார்.
வாயுதேவர், 14 உலகத்தில் இருக்கும் பிராணிகளில், அவர்களுக்குத் தெரியாமல் இருந்து, ஸ்வப்ன நிலை, முழித்திருக்கும் நிலை, தூக்க நிலை என்னும் மூன்று
நிலைகளிலும் இருந்து; அதாவது எப்போதும் என்று அர்த்தம். அவர்களின் நெருங்கிய நண்பனைப் போல இருந்து, ஒரு நாளுக்கு 21,600 ஷ்வாஸ ஜபங்களை செய்து, செய்வித்து, தன் மூன்றாம் ரூபத்தினால், இறுதியில் அவரவர்களின்
யோக்யதைக்கேற்ப போகங்களைக் கொடுக்கிறார்.
ஷுத்த4 ஸத்வாத்மக ஷரீரதொ3
ளித்த3காலகு லிங்க3தே3ஹவு
பத்த4வாக3து3 த3க்தபடதோபாதி3 இருதிஹுது3 |
ஸித்த ஸாத4ன ஸர்வரொளக3ன
வத்4யனெனிஸுவ க3ருட3 ஸேஷ க
பர்த்தி3 மொத3லாத3மரரெல்லரு தா3ஸரெனிஸுவரு ||18
ஷுத்த ஸத்வாத்மக ஷரீரதொளித்த காலகு = வாயுதேவர்
சுத்தமான ஸத்வாத்மக தேகத்தில் இருந்த காலத்தில்
பத்தவாகது = இவரை கட்டுப்படுத்துவது இல்லை
தக்தபடதோபாதி = எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ஆடை
போன்று
லிங்கதேஹவு = லிங்கதேகம்
இருதிஹுது = உருவம் மட்டும் இருக்கிறது. எந்தவொரு
வேலைக்கும் பிரயோஜனம் இல்லை என்று அர்த்தம்.
ஸித்த ஸாதன = இவர் எப்போதும் ஸித்த ஸாதனர். அனைத்து
சாதனைகளும் சம்பூர்ணமானவையே என்று அர்த்தம்.
இன்னும் சாத்தியமாகும் சாதனை என்று ஒன்றும் இல்லை. இத்தகைய வாயுதேவர், அனைத்து தேவதைகளில்
அனவத்யனெனிஸுவ = வெல்லப்பட முடியாதவர் எனப்படுகிறார்
கருட சேஷ கபர்த்தி = கருட சேஷ ருத்ரர்கள்
மொதலாதமரரெல்லரு = முதலான தேவதைகள் அனைவரும்
தாசரெனிஸுவரு = தாசர்கள் எனப்படுகின்றனர்.
பிரம்ம வாயுகளின் சரீரங்கள் ‘விஷுத்த ஸத்வம் பிரம்மாக்யம்’ என்னும் பாகவத 10ம் ஸ்கந்த தாத்பர்ய வாக்கியத்தைப் போல விஷுத்தமான; அதாவது, ரஜோகுண தமோகுண கலவை இல்லாமல், ஷுத்த ஸத்வ ஸ்வரூபத்தால் ஆனது.
லிங்க சரீரம் இருந்தாலும், அதற்கு கட்டுப்படாதவர். ஒரு ஆடையை
எரித்தால், அது எளிதாக எரிந்து சாம்பலாகிறது. அதைப் போலவே, அவருக்கு லிங்க தேகம் இருக்கிறது. இவருக்கு சாதனைகள் பூர்த்தி ஆகிவிட்டதால், ஸித்த ஸாதன என்று அழைக்கப்படுகிறார். அனைத்து பிராணிகளிலும் இருந்து, யாராலும் வெல்லப்பட முடியாதவராக இருக்கிறார். கருட, சேஷ,
ருத்ராதி தேவதா கணங்கள் இவருக்கு தாசர்கள் எனப்படுகின்றனர்.
க3ணதொ3ளகெ3 தானித்து3 ருஜு எந்தெ3
நிஸிகொம்ப3னு கல்பஷத ஸா
த4னவ கை3தா3னந்தரதி3 தா கல்கி எனிஸுவனு |
த்வினவஷீதிய ப்ராந்தபா4கதி3
அனில ஹனுமத்4பீம ரூபதி3
த3னுஜரெல்லர ஸதெ3து3 மத்4வாசார்ய நெனிஸுவனு ||19
கணதொளகெதானித்து = ருஜு கணர்களுக்குள் தான் இருந்து
ருஜுவெந்தெனிஸிகொம்பனு = ருஜுகணத்தை சேர்ந்தவன் என்று
பெயர் பெறுகிறான்
கல்பஷத ஸாதனவ கைதானந்தரதி = 100 கல்ப சாதனை முழுமையடைந்த பின்
தா கல்கி எனிஸுவனு = தன் 101வது கல்பத்தில், கல்கி எனப்படுகிறான்
த்வினவஷீதிய ப்ராந்த பாகதி = 98ம் கல்பத்தின் இறுதி பாகத்தில் ; அதாவது 99ம் பாகத்தில்.
ஹனுமத்பீம ரூபதி = ராமாவதாரத்தில் ஹனுமந்த
ரூபத்திலும், கிருஷ்ணாவதாரத்தில் பீமசேன ரூபத்திலும்,
தனுஜரெல்லர = தானவர் அனைவரையும்
ஸதெது = சம்ஹரித்து
மத்வாசார்ய = ஸ்ரீமன் மத்வாசார்யர்
எனிஸுவனு = என்று அழைக்கப்படுகிறார்.
முன்னர், வாயுதேவர் ருஜுகணத்தில் சேர்ந்து
ருஜு என்னும் பெயரைப் பெற்று, நித்ரா அவஸ்தையில் இருக்கிறார்.
முதலில் ஸ்ருஷ்டிக்கு வந்தபிறகு 100 கல்ப சாதனைகள் ஆனபிறகு, இவருக்கு ருஜு என்னும் பெயர் போய், கல்கி என்னும் பெயர் வருகிறது.
கல்கி ஆனபிறகு, 100 கல்ப சாதனைகளை செய்து, பிரம்மபதவியைப் பெறுகிறார்.
இந்த விஷயத்தைப் பற்றிய புரந்தரதாசரின் சுளாதி ஒன்று
இருக்கிறது.
ஹரமுக்யாத்யமரரிகெ வரனெனிப ருஜுவொப்ப
ஹருஷதி ஷதகல்ப சாதனவகெய்து தானு
கரெஸுவ கல்கியெந்து, எரடைது தஷகல்ப சாதன மாடுதலெ
விரிஞ்சியெதானெனிஸி ஸத்ய லோகவனாளி
ஸர்வாங்க ஸாயுஜ்யாவ படெவானு
இதரந்தெ சரிபாரு ப்ரதிதின ருஜுகண சேதனரு
தரணீஷ புரந்தர விட்டலான பூர்ணாகருணா
பூர்ணாபாத்ரரு கேளோ அபின்ன பக்தரிவரு ||
என்னும் சுளாதியிலிருந்து ருஜுகணதவர்கள் 100 கல்ப சாதனை ஆனபிறகு, கல்கி என்று அழைக்கப்பட்டு, மறுபடி 100 கல்ப சாதனையால், பிரம்ம பதவிக்கு வருகிறார் என்கிற அர்த்தம் புரிகிறது. அதே அர்த்தத்தையே
தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார்.
இப்படி 100 கல்ப சாதனை ஆனபிறகு கல்கி என்று
அழைக்கப்பட்டு, பின் 98 கல்ப சாதனைகள் முடிந்து, 99ம் கல்பத்தில் வாயு என்று
அழைத்துக் கொண்டு, ராமாவதாரத்தில் ஹனுமந்த ரூபத்தினாலும், க்ருஷ்ணாவதாரத்தில் பீமசேன ரூபத்தினாலும், தைத்யர்களை சம்ஹரித்து, இறுதியில் அந்த தானவர்கள் பிராமண
ஜாதியில் பிறந்து, குபாஷ்யாதிகளை இயற்றி பகவத் குணங்களை தவறாக பரப்ப முயல, பரமாத்மனின் ஆணைப்படி, அவரே மத்வாசார்யராக அவதரித்தார்.
விஷ்வவ்யாபக ஹரிகெ3 தா சா
த்ருஷ்யரூபவ த4ரிஸி பி3ரம்ம ஸ
ரஸ்வதி பா4ரதிக3ளிந்தொ3ட3கூடி3 பவமான |
ஷாஸ்வத ஸுப4க்தியலி ஸுக்3ஞா
நஸ்வரூபன ரூப கு3ணக3ள
நஷ்வரனு எந்தெ3னுத பொக3ளுவ ஸ்ருதிக3ளொளகி3த்து ||20
விஷ்வவியாபக = பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும்
நிலைத்திருந்து,
ஹரிகெ தா = ஸ்ரீஹரிக்கு தான்
சாத்ருஷ்யரூபவ தரிஸி = சமானமான ரூபத்தைப் பெற்று
பிரம்ம சரஸ்வதி பாரதிகளிந்தொடகூடி = பிரம்ம, சரஸ்வதி, பாரதி இவர்களுடன்
பவமான = வாயுதேவர்
ஸ்ருதிகளொளகித்து = வேதங்களில் இருந்து
ஷாஷ்வத சுபக்தியலி = நிரந்தரமான (தடையற்ற) உத்தம
பக்தியால்
சுக்ஞான ஸ்வரூபன = உத்தம ஞான ஸ்வரூபனான ஸ்ரீஹரி
ரூப குணகள = ரூப குணங்களை
நஷ்வர எந்து = நிரந்தரமானவை என்று
பொகளுவ = போற்றுவார்.
வாயுதேவர், பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும்
வியாப்தராக இருந்து, பரமாத்மனின் ஸ்வரூபத்தால், பிரம்மதேவர், சரஸ்வதிதேவி, பாரதிதேவி இவர்களுடன் வேதங்களில் நிலைத்திருந்து, நிரந்தரமான பக்தியால், பரமாத்மனின் ரூப குணங்கள், நிரந்தரமானவை என்று போற்றிக் கொண்டிருக்கிறார். வேதாத்மகர் துர்காதேவியே
ஆனாலும்,
வேதத்தில் நிலைத்திருந்து பரமாத்மனை துதித்துக் கொண்டிருப்பார் என்று
அர்த்தம். அல்லது, மத்வாசார்யரின் ரூபத்தால் வேதார்த்தங்களை வெளிப்படுத்தினார் என்று அர்த்தம்.
கே2ட குக்குட ஜலடபெ3ம்ப3 த்ரி
கோடி ரூபவ த4ரிஸி ஸதத நி
ஷாடரனு ஸம்ஹரிஸி ஸலஹுவ ஸர்வஸஜ்ஜனர |
கைடபா4ரியபுரத3 ப்ரத2ம க
வாடனெனிஸுவ க3ருட3 ஸேஷ ல
லாடலோசனமுக்2ய ஸுரரிகெ3 ஆவகாலத3லி ||21
கேட = ஆகாயத்தில் பறக்கும் பிராணிகள்
குக்குட = பூமியில் வசிக்கும் பிராணிகள்
ஜலட = தண்ணீரில் வசிக்கும் பிராணிகள்
எம்ப த்ரிகோடி ரூபவ = என்னும் இத்தகைய 3கோடி ரூபங்களை தரித்து
ஸதத = அனைத்து காலங்களிலும்
நிஷாடரனு = இரவில் சஞ்சரிக்கும் அசுரர் முதலானவர்களை
சம்ஹரிஸி = கொன்று
ஸர்வ சஜ்ஜனர ஸலஹுவ = அனைத்து சஜ்ஜனர்களையும்
காப்பான்.
கருட, சேஷ, லாடலோசன = கருட, சேஷ,
ருத்ரர்
முக்ய சுரரிகெ = முதலான தேவதைகளுக்கு
ஆவகாலதலி = அனாதி காலத்திலிருந்தும்
கைடபாரியபுரத = மது கைடபர்களைக் கொன்றவரான
ஸ்ரீஹரியின் பட்டணத்தின்
ப்ரதம கவாட வெனிஸுவ = ரத்னமயமான வாயில்
எனப்படுகிறார்.
வாயுதேவர் மூன்று கோடி ரூபங்களை தரித்து, அசுரர்களைக் கொன்று, சஜ்ஜனர்களைக் காக்கிறார். ‘மஹாபலோஹம் கபிலாக்ய ரூபஸ்த்ரி கோடிரூப: பவனஸ்ச மேஸுத:’ என்னும் நிர்ணய 8ம் அத்தியாயத்தில் 237ம் ஸ்லோகத்தில், ஸ்ரீராமதேவர் கூறும் வாக்கியத்தால், வாயுதேவர் 3 கோடி ரூபங்கள் கொண்டவர் என்பது தெரிகிறது. அந்த ரூபங்களில் சில, ஆகாயத்தில் பறக்கும் ரூபங்கள். சில பூமியில் சஞ்சரிக்கும் ரூபங்கள். சில, தண்ணீரில் வசிக்கும் ரூபங்கள். இந்த ரூபங்களால், துஷ்டர்களைக் கொன்று, சஜ்ஜனர்களைக் காக்கிறார். கருட, சேஷ,
ருத்ராதி தேவதைகளுக்கு, வாயு தேவர் பரமாத்மனின்
பட்டணத்தின் வாயிலில் முதலாம் த்வாரபாலகனாக இருக்கிறார். அதாவது, இவரது மூலமாக உபாஸனையை செய்து, பரமாத்மனை அடைய வேண்டும் என்பது
கருத்து. பாரதிரமண முக்யபிராணாந்தர்கத பரமாத்மனையே வணங்க வேண்டுமே தவிர, நேரடியாக பரமாத்மனை துதிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று அர்த்தம்.
ஈ ருஜுக3ளொளகொ3ப்3ப3 ஸாத3ன
னூருகல்பதி3 மாடி3 கரெஸுவ
சாருதர மங்க3ள ஸுனாமதி3 கல்ப கல்பத3லி |
ஸூரிக3ளு ஸந்துதிஸி வந்தி3ஸெ
கோ4ர து3ரிதக3ளளிது போபுவு
மாரமண ஸம்ப்ரீதனாகு3வ ஸர்வகாலத3லி ||22
ஈ ருஜுகளதொளகெ = இந்த ருஜுகணத்தவர்களில்
ஒப்ப = ஒரு வாயுதேவர் மட்டும்
நூரு கல்பதி சாதன மாடி = நூறு கல்பங்களை சாதனை செய்து
கல்ப கல்பதலி = அனைத்து கல்பங்களிலும்
சாருதர மங்கள சுனாமதி = மனோகரமான ரூபத்தினாலும்
மங்களகரமான பெயர்களாலும்
கரெசுவ = அழைத்துக் கொள்கிறார்
சூரிகளு = ஞானிகள்
சந்துதிஸி = ஸ்தோத்திரம் செய்து
வந்திஸெ = வணங்கினால்
கோர துரிதகளு = கோரமான பாவங்கள்
அளிது போபுவு = நாசம் அடைகின்றன
ஸர்வகாலதலி = அனைத்து காலங்களிலும்
மாரமண = லட்சுமிபதியானவன்
சம்ப்ரீதனாகுவ = மிகவும் மகிழ்கிறான்.
ருஜுகணர்களில் 100 கல்பங்கள் சாதனை செய்து, சுரூபங்களை சுநாமங்களை பெற்றவர்
வாயுதேவர் ஒருவரே. இப்படி அனைத்து கல்பத்திலும், ஒரு பிரம்மதேவர் முக்தர் ஆன உடனேயே, தற்போதைய வாயுதேவர் அந்த பதவிக்கு
வருகிறார். ருஜுகணத்தில் 98 கல்ப சாதனைகள் ஆன ஒருவர், வாயுதேவரின் பதவிக்கு வருகிறார். இவரை வணங்கி போற்றும் மக்களுக்கு பாவங்கள்
அனைத்தும் பரிகாரம் ஆகின்றன. பரமாத்மன் மிகவும் மகிழ்கிறான்.
பாஹி கல்கி ஸுதேஜ தா3ஸனெ
பாஹி த4ர்மாத4ர்ம க2ண்ட3னெ
பாஹி வர்சஸ்வி க2ஷண நமோ ஸாது4 மஹிபதியெ |
பாஹி ஸத்த4ர்மக்3ஞ த4ர்மஜ
பாஹி ஸம்பூர்ண ஷுசி வைக்ருத
பாஹி அஞ்சன ஸர்ஷபனெ க2ர்பட2னெ ஸ்ரத்3தா4ஹ்வ ||23
ருஜு கணத்தவர்கள் முதலில் 100 கல்ப சாதனை ஆகும்வரை ருஜு எனப்படுகின்றனர். 100 கல்ப சாதனை ஆனபிறகு, ருஜு என்னும் பெயர் போய், 101ம் கல்பத்தில் கல்கி என்ற பெயர் பெறுகின்றனர். இப்படி கல்கி என்னும் பெயர்
வந்தபிறகு, ஒவ்வொரு கல்பத்திற்கும் ஒவ்வொரு பெயராக 100 கல்பத்திற்கும் 100 பெயர்கள் வருகின்றன. அந்தப் பெயர்களை இங்கு வரிசையாக சொல்கிறார்.
கல்ப # |
பெயர் |
காரணம் |
1 |
கல்கி |
கலியை அழிப்பதால் |
2 |
சுதேஜா |
தேஜஸ்வியாக இருப்பதால் |
3 |
தாசன் |
ஸ்ரீஹரிக்கு முக்கிய தாசனாக இருப்பதால் |
4 |
தர்ம |
தர்ம ஸ்வரூபனாக இருப்பதால் |
5 |
அதர்ம கண்டன |
அதர்மத்தை கண்டிப்பதால் |
6 |
வர்சஸ்வி |
புகழ் பெற்றவனாக இருப்பதால் |
7 |
கஷண |
எதிரிகளை பயமுறுத்துவதால் |
8 |
ஸாது |
சஜ்ஜனர்களுக்கு உதவிகரனாக இருப்பதால் |
9 |
மஹிபதி |
கருட சேஷ ருத்ராதிகளுக்கு பிரபுவாக இருப்பதால் |
10 |
ஸத்தர்மக்ஞ |
உத்தம மான தர்ம ரகசியத்தை அறிந்தவன் ஆகையால் |
11 |
தர்மஜ |
தர்மத்தை காப்பதால் |
12 |
ஸம்பூர்ண |
சம்பூர்ண குணங்களைக் கொண்டிருப்பதால் |
13 |
ஷுசி |
சுத்தமான ஞானத்தைக் கொண்டிருப்பதால் |
14 |
வைக்ருத |
பிரம்மாண்டத்தில் ஸ்தாவர ஜங்கம பிராணிகளில் வியாப்தனாக இருப்பதால் |
15 |
அஞ்சன |
அகார நாமக பகவந்தனை, மக்களிடம் புகழ் பெறச் செய்ததால் |
16 |
ஸர்ஷப |
ருஷ என்றால் ஞானம். ஞானம் உள்ளவன் என்று பொருள். ஞானம் உள்ளவர்களை காப்பதால் |
17 |
கர்பட |
நீசரான கலி முதலானவர்களில் இருந்து அவரவர்களின் சாதனைகளை செய்வதால் |
18 |
ஸ்ரத்தா |
பரமாத்மனிடம் திடமான புத்தி வைத்திருப்பதால் |
பாஹி ஸந்த்3யான மஹஞானனெ
பாஹி மஹவிக்3ஞான கீர்த்தன
பாஹி ஸங்கீர்ணாக்2ய கத்த2ன மஹாபு3த்தி3 ஜய |
பாஹி மாஹத்தர ஸுவீர்யனெ
பாஹி மேதா4வி விஜயாஜெய
பாஹி மாம் ரந்தி3ன்ம மனு மாம் பாஹி மாம் பாஹி ||24
கல்ப # |
பெயர் |
காரணம் |
19 |
ஸத்யான |
எப்போதும் தியானம் செய்து கொண்டிருப்பதால் |
20 |
விக்ஞான |
விசேஷ ஞானம் உள்ளவன் ஆகையால் |
21 |
மஹாஞான |
சிறப்பான ஞானம் உள்ளவன் ஆகையால் |
22 |
கீர்த்தன |
எப்போதும் பகவந்தனின் நாம கீர்த்தனை செய்வதால் |
23 |
சங்கீர்ண |
மத்யம ஜீவர்களுக்கு மிஸ்ர புத்தியை பிறக்க வைப்பதால் |
24 |
கத்தன |
வேத சாஸ்திரார்த்தங்களை சித்தாந்தம் ஆக்கி, வாதிகளை வெல்வதால் |
25 |
புத்திஜய |
எவ்வித சந்தேகங்களும் இல்லாதவன் ஆகையால் |
26 |
மஹத்தர |
ஜீவோத்தமன் ஆகையால் |
27 |
சுவீர்ய |
பலசாலி ஆகையால் |
28 |
மேதாவி |
மகா ஞானியாகையால் |
29 |
விஜய |
வெற்றி வாகை சூடுபவன் ஆகையால் |
30 |
ஜய |
வெற்றியைக் கொடுப்பவன் ஆகையால் |
31 |
ரந்திம |
ரம் என்பது அக்னி பீஜாக்ஷரம். அது பரமாத்மனிடம் இருப்பதால் சங்கர்ஷண மூர்த்தியான ஸ்ரீஹரிக்கு ரந்தி என்று பெயர். அத்தகைய ஸ்ரீஹரியை எப்போதும் மனதில் தரித்திருப்பதால் |
32 |
மனு |
மந்திர பிரதிபாத்யனானதால் |
பாஹி மோத3 ப்ரமோத3 ஸந்தனெ
பாஹி ஆனந்த3 நமோ து3ஷ்ட3னெ
பாஹி மாம் சார்வங்க3 சாருஸுபா4ஹு சாருபத3 |
பாஹி பாஹி ஸுலோசனனெ மாம்
பாஹி ஸாரஸ்வத ஸுவீரனெ
பாஹி ப்ராக்3ஞனெ கபி அலம்பட பாஹி ஸர்வக்3ஞ ||25
கல்ப # |
பெயர் |
காரணம் |
33 |
மோத |
எப்போதும் ஆனந்தப்படுபவன் ஆகையால் |
34 |
பிரமோத |
பரலோக சுகத்தைக் கொடுப்பவன் ஆகையால் |
35 |
ஸந்தன் |
சத்வ குணத்தைக் கொடுப்பவன் ஆகையால் |
36 |
ஆனந்த |
பிற ஜீவர்களை விட அதிக ஆனந்தம் உள்ளவன் ஆகையால் |
37 |
ஸந்துஷ்ட |
எவ்வித விருப்பங்களும் இல்லாதவன் ஆகையால் |
38 |
சார்வங்க |
அழகான தேகம் கொண்டவன் ஆகையால் |
39 |
சாருபாஹு |
அழகான தோள்களைக் கொண்டவன் ஆகையால் |
40 |
சாருபத |
அழகான கால்களைக் கொண்டவன் ஆகையால் |
41 |
ஸுலோசன |
திவ்ய ஞானத்ருஷ்டி உள்ளவன் ஆகையால் |
42 |
சாரஸ்வத |
அனைத்து ஸ்ருதிகளிலும் யதார்த்த ஞானம் உள்ளவர் ஆகையால் |
43 |
ஸுவீர |
வீரன் ஆகையால் |
44 |
ப்ராக்ஞ |
தத்வ ஞானத்தை அறிந்தவன் ஆகையால் |
45 |
கபி |
சுகத்தையே அனுபவிப்பவன் ஆகையால் கபி. கம் என்றால் சுகம். அதனை பானம் செய்வதால்; அதாவது, அனுபவிப்பவன் என்று பொருள் |
46 |
அலம்பட |
விஷய சுகங்களை விட்டவன் ஆகையால் |
47 |
ஸர்வக்ஞ |
அனைத்தையும் அறிந்தவன் ஆகையால் |
பாஹி மாம் ஸர்வஜித் மித்ரனெ
பாஹி பாபவினாகஷனெ மாம்
பாஹி த4ர்மவினேத ஷாரத3 ஓஜ ஸுதபஸ்வி |
பாஹி மாம் தேஜஸ்வி நமோ மாம்
பாஹி தா3னஸுஷீல நமோ மாம்
பாஹி யக்ஞ ஸுக2ர்த்த யஜ்வி யாக3வர்த்தகனெ ||26
கல்ப # |
பெயர் |
காரணம் |
48 |
ஸர்வஜித் |
உலகத்தை வென்றவன் ஆகையால் |
49 |
மித்ர |
ஜகன்மித்ரன் ஆகையால் |
50 |
பாபவினாஷக |
பாவங்களைப் போக்குபவன் ஆகையால் |
51 |
தர்ம |
எப்போதும் தர்மத்தைப் பின்பற்றுவதால் |
52 |
வினீத |
தர்மத்தை போதிப்பதால் |
53 |
ஷாரத |
எதிரிகளுக்கு துன்பத்தைக் கொடுப்பவன் ஆகையால் |
54 |
ஓஜஸ்வி |
யாராலும் வெல்லப்பட முடியாதவன் ஆகையால் |
55 |
தபஸ்வி |
சிறந்த தபஸ்வி ஆகையால் |
56 |
தேஜஸ்வி |
பிரம்ம தேஜஸ்ஸைக் கொண்டிருப்பதால் |
57 |
தான |
தானசீலன் ஆகையால் |
58 |
சுஷீல |
நல்ல நடவடிக்கைகளைக் கொண்டவன் ஆகையால் |
59 |
யக்ஞ |
யக்ஞங்களை செய்வதால் |
60 |
கர்த்த |
அனைத்தையும் செய்விப்பதால் |
61 |
யஜ்வீ |
அனைத்து கர்மங்களையும் பரமாத்மனுக்கு அர்ப்பிப்பதால் |
62 |
யாகவர்த்தக |
அனைவரையும் தேவதா ஆராதனையை செய்ய வைப்பதால் |
பாஹி பிராண த்ராண அமருஷி
பாஹி மாம் உபதே3ஷ்ட தாரக
பாஹி கால க்ரீட3னெ ஸுகர்மா ஸுகாலக்ஞ |
பாஹி காலஸுஸூசகனெ மாம்
பாஹி கலிஸம்ஹர்த்ரு கலி மாம்
பாஹி கால ஸ்வாமரேத ஸதா3ரத ஸுப4லனெ ||27
கல்ப # |
பெயர் |
காரணம் |
63 |
ப்ராண |
அனைத்து ஜீவர்களுக்கும் பிராணனைக் கொடுப்பதால் |
64 |
த்ராண |
மகா சக்தி உள்ளவன் ஆகையால் |
65 |
அமர்ஷி |
எதிரிகளிடம் கோபம் கொள்பவன் ஆகையால் |
66 |
உபதேஷ்ட |
லோக குருவாக இருப்பதால் |
67 |
தாரக |
அனைவரையும் உத்தாரம் செய்பவன் ஆகையால் |
68 |
காலக்ரீடன |
காலத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளை செய்பவன் ஆகையால் |
69 |
ஸுகர்த்தா |
சத்காரியங்களை செய்விப்பவன் ஆகையால் |
70 |
ஸுகாலக்ஞ |
கால லட்சணங்களை நன்றாக அறிந்தவன் ஆகையால் |
71 |
காலஸுஸூசக |
கால நாமக பரமாத்மனை மக்களுக்கு தெரிவிப்பவன் ஆகையால் |
72 |
கலிஸம்ஹர்த்தக |
கலியைக் கொல்பவன் ஆகையால் |
73 |
கலி |
கால ஞானம் உள்ளவன். ‘கலா அஸ்மின்னஸ்தீதி கலி’ |
74 |
கால |
துர்ஜனர்களைக் கொல்பவன் ஆகையால் |
75 |
ஷ்யாமரேஷ |
|
76 |
ஸதாரத |
எப்போதும் சுகமயன் ஆகையால் |
77 |
ஸுபல |
பலசாலி ஆகையால் |
பாஹி பாஹி ஸஹோ ஸதா3கபி
பாஹி கம்ய ஞான த3ஷகல
பாஹி மாம் ஸ்ரோதவ்ய நமோ ஸங்கீர்த்திதவ்ய நமோ |
பாஹி மாம் மந்தவ்ய கவ்யனெ
பாஹி த்3ரஷ்டவ்ய நமோ ஸக்2யனெ
பாஹி க3ந்தவ்ய நமோ க்ரவ்யனெ பாஹி ஸ்மர்தவ்ய ||28
கல்ப # |
பெயர் |
காரணம் |
78 |
ஸஹ |
சஹன சக்தி உள்ளவன் ஆகையால் |
79 |
ஸதாகபி |
அனைத்து காலங்களிலும் ‘ஆகபேர் துக்க பேஷணாத்வாத்’ துக்கங்களைப் போக்குபவன் ஆகையால் |
80 |
கம்யஞான |
பெறுவதற்கு தகுதியான ஞானத்தைக் கொண்டவன் ஆகையால் |
81 |
தஷகல |
அனந்தமான (பூர்ணமான) ஞானத்தைக் கொண்டவன் ஆகையால் |
82 |
ஸ்ரோதவ்ய |
கேட்பதற்கு தகுதியான மகிமைகளைக் கொண்டவன் ஆகையால் |
83 |
ஸங்கீர்த்தவ்ய |
பாடுவதற்கு தகுதியான மகிமைகளைக் கொண்டவன் ஆகையால் |
84 |
மந்தவ்ய |
மனனம் செய்வதற்கு தகுதியான மகிமைகளைக் கொண்டவன் ஆகையால் |
85 |
கவ்ய |
கவிகளால் வர்ணிக்கத் தகுதி உள்ளவன் ஆகையால் |
86 |
த்ரஷ்டவ்ய |
பார்ப்பதற்கு தகுதியானவன் ஆகையால் |
87 |
ஸக்ய |
நண்பனாக இருக்கத் தகுதியானவன் ஆகையால் |
88 |
கந்தவ்ய |
அடைவதற்குத் தகுதியானவன் ஆகையால் |
89 |
க்ருகரணி |
ஸேவை பெற்றுக் கொள்வதற்குத் தகுதியானவன் ஆகையால் |
90 |
ஸ்மர்தவ்ய |
நினைப்பதற்குத் தகுதியானவன் ஆகையால் |
பாஹி ஸேவ்ய ஸுப4வ்ய நமோ மாம்
பாஹி ஸ்வர்க3வ்ய நமோ பா4வ்யனெ
பாஹி மாம் ஞாதவ்ய நமோ வக்தவ்ய க3வ்ய நமோ |
பாஹி மாம் லாதவ்ய வாயுவெ
பாஹி பி3ரம்மனெ பி3ராஹ்மணப்ரிய
பாஹி பாஹி ஸரஸ்வதீபதே ஜக3த3கு3ருவர்ய ||29
கல்ப # |
பெயர் |
காரணம் |
91 |
ஸேவ்ய |
ஸேவை செய்வதற்குத் தகுதியானவன் ஆகையால் |
92 |
ஸுபவ்ய |
பரம ஞானி, காரியங்களை செய்து முடிப்பவன் ஆகையால் |
93 |
ஸ்வர்க்கவ்ய |
ஸ்வ நாமக பரமாத்மன் வசிப்பதால் ஸ்வர்க்கம். அதாவது வைகுண்டம். பக்தர்களுக்கு வைகுண்டத்தைக் கொடுக்கும் தகுதி உள்ளவன் ஆகையால் |
94 |
பாவ்ய |
நினைப்பதற்கு தகுதியானவன் ஆகையால் |
95 |
ஞாதவ்ய |
அறிந்து கொள்வதற்கு தகுதியானவன் ஆகையால் |
96 |
வக்தவ்ய |
ஸ்தோத்திராதிகளால் சொல்வதற்கு தகுதியானவன் ஆகையால் |
97 |
கவ்ய |
வேதகோசரன் ஆகையால் |
98 |
லாதவ்ய |
வாயு பதவிக்கு முந்தைய பதவியின் பெயர். |
99 |
வாயு |
அனைத்து சேதனர்களிலும் ஷ்வாஸ ஜபத்தை செய்வதால் |
100 |
பிரம்மா |
ருஜு கணர்களில் முதல்வர். உத்தமமான ஞான, பக்தியைக் கொண்டவர். சாதனையை முடித்தவர். |
வாமன புராணத3லி பேளித3
ஈ மஹாத்மர பரமமங்க3ல
நாமக3ள ஸம்ப்ரீதிபூர்வக நித்ய ஸ்மரிஸுவர |
ஸ்ரீமனோரமனவரு பே3டி3த3
காமிதார்த்த2க3ளித்து தன்ன த்ரி
தா4மதொளக3னு தி3னத3லிட்டானந்த3 படி3ஸுவனு ||30
வாமன புராணத்தில் சொல்லப்பட்ட, இத்தகைய மகாத்மரின் பரம மங்கலகரமான, மேற்கூறிய 100 நாமங்களை, மிகுந்த பக்தியுடன் தினமும் நினைப்பவர்களுக்கு, லட்சுமி மனோகரனான ஸ்ரீஹரி, அவர்கள் வேண்டிய இஷ்டார்த்தங்களை
நிறைவேற்றி, தன் ஸ்வேதத்வீப, அனந்தாசன, வைகுண்ட என்னும் லோகங்களில் வைத்து அவர்களை மகிழ்விக்கிறான்.
ஈ ஸமீரகெ3 நூருஜன்ம ம
ஹா ஸுக2ப்ராரப்த3 போ3க3 ப்ர
யாஸவில்லதெ3 ஐதுவனு லோகாதி4பத்யவனு |
பூ4ஸுரன ஒப்பிடி3யவ்லிகெ3 வி
ஸேஷ ஸௌக்2யவனித்ததா3தன
தா3ஸவர்யனு லோகபதி எனிஸுவுது3 அச்சரவெ ||31
ஈ ஸமீரகெ = இந்த வாயுதேவருக்கு
நூரு ஜன்ம மஹா சுகப்ராரப்த போக = மகா சுகமயமான
பிராரப்த போகங்கள் இருக்கும்.
ப்ரயாஸவில்லதெ = எவ்வித கஷ்டமும் இல்லாமல்
லோகாதிபத்யவனு = லோகாதிபத்யத்தை
ஐதுவனு = கொடுக்கிறான்
பூசுரன = குசேலன் என்னும் பிராமணனின்
ஒப்பிடியவலிகெ = ஒரு பிடி அவலுக்கு பதிலாக
விசேஷ சௌக்யவனித்த = இஹத்தில் செல்வத்தையும், பரத்தில் முக்தியையும் கொடுத்த
ஆதன = அத்தகைய ஸ்ரீஹரியின்
தாசவர்யன் = தாசனான வாயுதேவர்
லோபதி எனிஸுவுது = லோகாதிபதி ஆவதில்
அச்சரவெ = என்ன ஆச்சரியம்? - என்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை என்று அர்த்தம்.
இந்த வாயுதேவர், மொத்தம் 100 கல்ப சுக பிராரப்தங்களை அனுபவித்து, பிரம்ம பதவியை அடைகிறார்.
ஸ்ரீகிருஷ்ண ரூபியான பரமாத்மன், குசேலனின் ஒரு பிடி அவலுக்கு
மெச்சி,
இஹத்தில் மஹத் ஐஸ்வர்யங்களையும், பரலோகத்தில் முக்தியையும்
கொடுத்தான். இத்தகைய ஸ்ரீஹரியின் தாசவர்யரான வாயுதேவருக்கு லோகாதிபத்யம் வருவதில்
என்னதான் வியப்பு? ஆச்சரியம்?
த்3விஷத கல்பக3க3ளல்லி பி3ட3தீ3
பெஸரினிந்த3லி கரெஸுவனு த
ந்வஷத3 அமரரொளித்து3 மாடு3வனவர ஸாத4னவ |
அஸது3பாஸனெகை3வ கல்யா
த்3யஸுரரனு ஸம்ஹரிஸி தா பொ
ம்ப3ஸுரபத3 வைது3வனு கு3ருபவமான ஸதியொட3னெ ||32
த்விஷத கல்பகளல்லி = 200 கல்பங்களில்
பிடதே = விடாமல்
ஈ பெசரினிந்த = மேற்கூறியவாறு 100 பிறவிகளில் ருஜு என்றும், 101வது கல்பத்திலிருந்து, கல்கியிலிருந்து துவங்கி பிரம்ம என்னும் பெயர்களில் 100 பெயர்களில்
கரெசுவனு = அழைக்கப்படுகிறார்
அமரர = தேவதைகளை
தன்னொஷகெ = தன் வசத்தில் இருக்குமாறு
ஒளகிட்டு = வைத்துக் கொண்டு
அவர ஸாதனவ = தேவதைகள் முதலானவர்கள் செய்யவேண்டிய
சாதனைகளை
மாடுவ = செய்விக்கிறான்.
அஸதுபாஸனெகைவ = ஸோஹம் இத்யாதி உபாசகரான
கல்யாத்யசுரரனு = கலி முதலான தைத்யாதிபதிகளை
சம்ஹரித்து
குருபவமான = ஜகத்குரு எனப்படும் வாயுதேவர்
ஸதியொடனெ = தன் ஸதியான பாரதிதேவியுடன்
தா = தான்
பொம்பசுரபதவி = பிரம்ம பதவியை
ஐதுவனு = அடைகிறார்.
ருஜுகணத்தவர்களுக்கு மொத்தம் 200 கல்ப சாதனை என்று மேலே பார்த்தோம். முதல் 100 கல்பத்து வரைக்கும் ருஜு என்றும், 101ல் துவங்கி, கல்கி முதலான 97ம் பெயர் வரைக்கும் சொல்லப்பட்ட பெயர்களில் 97 கல்பங்களை முடித்து, 98ம் கல்பத்தில், லாதவ்ய என்னும் பெயரைப் பெறுகிறார். 99ம் கல்பத்தில் வாயு பதவிக்கு வருகிறார். 100ம் கல்பத்தில் பிரம்மதேவர். ஆக 200 கல்ப சாதனைகள் ஆகவேண்டும்.
வாயுபதவியில் இருக்கும்போது, தத்வாபிமானி தேவதைகளை, தன் வசத்தில் வைத்துக் கொண்டு, த்ரிவித ஜீவர்கள் செய்யவேண்டிய சாதனைகளை அவரவர்களால் செய்வித்து , அவரவர்களின் யோக்யதைக்கேற்ப கதியைக் கொடுக்கிறார். அன்யதா உபாசனை செய்து
கொண்டிருக்கும் கலி முதலான தைத்யர்களைக் கொன்று, பாரதி தேவியருடன் சேர்ந்து, பிரம்ம பதவியை ஏற்பார்.
அனிமிஷர நாமத3லி கரெஸுவ
அனிலதே3வனு ஒந்து3 கல்பதி3
வனஜ ஸம்ப4வனெனிப னெம்ப3த்தேளுவரெ வருஷ |
கு3ணத்ரய விவர்ஜிதன மங்க3ல
கு3ண ஸுரூப க்ரியெய ஸது3பா
ஸனெயு அவ்யக்தாதி3 ப்ருத்2வ்யந்தரதி3 இருதிஹுது3 ||33
அனிலதேவனு = வாயுதேவர்
ஒந்து கல்பதி = 99ம் கல்பத்தில்
அனிமிஷர நாமதலி = தேவதைகளின் நடுவே ஜீவோத்தமர் என்று
கரெசுவ = அழைக்கப்படுகிறார்
வனஜ ஸம்பவனெனிப = பிரம்மதேவர் என்று பெயர் வந்தபிறகு,
எம்பத்தேளுவரெ வருஷ = 100 கல்பத்தின் 100 ஆண்டுகளில், பிரளய சந்தி காலம் 12.5 ஆண்டுகள் போக, மிச்சம் இருக்கும் 87.5 ஆண்டுகள்.
அவ்யக்தாதி ப்ருதிவ்யந்தரதி = அவ்யக்த தத்வத்தில்
துவங்கி ப்ருதிவி தத்வத்தின் வரை இருக்கும் தத்வங்களில் வியாபித்திருக்கிறார்
குணத்ரய விவர்ஜிதன = ப்ராக்ருதமான சத்வாதி
குணங்களுக்குக் கட்டுப்படாமல் இருக்கும் ஸ்ரீஹரியின்
குணக்ரியெய சுரூபகள = ஆனந்தாதி குணங்கள், ஸ்ருஷ்ட்யாதி கார்யங்கள், ராம கிருஷ்ணாதி அனந்தானந்த
ரூபங்கள் இவற்றின்
சதுபாசனெயு = உபாசனை
இருதிஹுது = செய்கிறார்
வாயுதேவர், வாயுபதவியில் ஒரு கல்பத்தில்
ஜீவோத்தமர் என்று சொல்லிக் கொண்டு, தேவதைகளுடன் இருக்கிறார். பிரம்ம
பதவிக்கு வந்தபிறகு, பிரம்மமானத்தினால் 100 ஆண்டுகளின் கல்பத்தின் நடுவில், 12.5 ஆண்டுகள் சந்திகாலம் என்று சொல்லப்படுகிறது. மிச்சம் இருக்கும் 87.5 ஆண்டுகளில், அவ்யக்த தத்வத்தின் வரை இருக்கும் தத்வங்களில் நிலைத்திருந்து, ப்ராக்ருத குணங்களுக்குக் கட்டுப்படாதவனான ஸ்ரீபரமாத்மனின் மங்களகரமான, ஆனந்தாதி குணங்களை, ஸ்ருஷ்ட்யாதி க்ரியைகளை, ராமகிருஷ்ணாதி அனந்தானந்த ரூபங்களை, உபாசனை செய்கிறார்.
மஹிதருஜுக3ணகொந்தெ3 பரமோ
த்ஸஹ விவர்ஜிதவெம்ப3 தோ3ஷவு
விஹிதவெ ஸரி இத3னு பேள்தி3ரெ முக்தபி3ரம்மரிகெ3 |
ப3ஹுது3 ஸாம்யவு ஞானப4கு3தி1யு
த்3ருஹிண பத3பர்யந்த வ்ருத்3தி3யு
ப3ஹிருபாஸனெயுண்டு நந்தர பி3ம்ப3த3ர்ஷனவு ||34
மஹித = பூஜ்யர்களான ருஜுகணத்திற்கு
பரமோத்ஸஹ விவர்ஜித எம்ப = பகவந்தனின் உபாசனையில்
அத்யந்த உற்சாகம் இருப்பதில்லை என்னும்
ஒந்தே தோஷவு = ஒரே தோஷம்
விஹிதவே சரி இதனுபேளதிரெ = இந்த தோஷத்தை சொல்லாமல் இருந்தால்
முக்த பிரம்மரிகெ = முக்த பிரம்மர்களுக்கு
ஸாம்ய பஹுது = சமர் என்று ஆகிறது
ஞான பக்தியு = ஞான பக்தியானது
த்ருஹிண பதபர்யந்த = பிரம்ம பதவியின் வரை
வ்ருத்தியு = கல்ப கல்பத்திற்கு சிறிது சிறிதாக
அதிகமாகிக் கொண்டே வருகிறது
பஹிருபாஸனெயுண்டு = புறத்தில் வியாப்தமான பகவத்
ரூபங்களின் உபாசனை உண்டு
நந்தர = அதன் பிறகு
பிம்ப தர்ஷனவு = பிம்ப தரிசனம் ஆகிறது.
பூஜ்யர்களான ருஜு கணத்தவர்களுக்கு ஒரு தோஷம் மட்டும்
இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் 200 கல்ப சாதனை கண்டிப்பாக ஆகியே
தீரவேண்டும் என்பதால், தற்போது நாம் பகவந்தனை எங்கே காணப் போகிறோம் என்று நினைத்து, அவர்களுக்கு பகவந்தனின் உபாசனையில் அத்யந்த உற்சாகம் இருப்பதில்லை.
நாளை காலை விடிந்தால், எனக்கு பெரிய பதவி ஒன்று கிடைக்கப் போகிறது என்று தெரிந்தால், எவ்வளவு உற்சாகம் இருக்குமோ, அதுவே 50-60 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கப் போகிறது என்றால் அத்தகைய உற்சாகம் இருக்குமா?
அதைப்போலவே, ருஜுகணத்தவர்களுக்கும் அந்த தோஷம்
இருந்தே இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு அந்த தோஷம் இருக்கிறது
என்று சொல்வதும் சரியாகவே இருக்கிறது. இல்லையெனில், முக்தரான பிரம்மதேவர், ருஜுகணத்தவர், பதவிக்கு வந்தவர், வராதவர் என இந்த அனைவரும் சமம் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
ஆகையால், அந்த தோஷம் இருக்கிறது என்று
சொல்வதும் சரி என்றார். கல்ப சாதனை அதிகமாக ஆக, பக்தி, ஞானமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இவர்களுக்கு வியாப்தோபாசனை உண்டு.
சாதனைக்குப் பிறகு, இவர்களுக்கு பிம்பாபரோக்ஷம் ஆகிறது. அதற்கு முன்பு, சாமான்யமான அபரோக்ஷம், சாதனைக்குப் பிறகு விசேஷ அபரோக்ஷம்
உண்டு என்பது கருத்து.
ஞானரஹித ப4யத்வ பேள்வ பு
ராண தை3த்யர மோஹகவு ஸது3
ரானனகெ3 கூடுவுதெ3 மோஹாஞான ப4ய ஷோக |
பா4னுமண்ட3ல சலிஸித3ந்ததி3
காணுவுது3 த்ருக்3தோ3ஷதி3ந்த3லி
ஸ்ரீனிவாஸன ப்ரீதிகோ3ஸுக2 தோர்த்த3னல்லத3லெ ||35
பிரம்மவாயுகளுக்கு,
ஞானரஹித = ஞானம் இல்லாமல் இருப்பது; அதாவது அஞ்ஞானம் உண்டு என்று அர்த்தம்
பயத்வ = பயப்படுதல் ஆகியவை (இருக்கின்றன)
பேள்வ புராண = என்று சொல்லும் புராண வசனங்கள்
தைத்யர மோஹகவு = தைத்யர்களை மயக்குவதற்காக
சொல்லப்பட்ட வசனங்கள் ஆகும்
சதுரானனகெ = பிரம்மதேவருக்கு
மோஹ, அஞ்ஞான, பய,
ஷோக - ஆகியவை
கூடுவுதெ = இருக்கிறது என்று சொல்லவும் சாத்தியமோ?
ஸ்ரீனிவாசன ப்ரீதிகோசுக = ஸ்ரீனிவாசனை
மகிழ்ச்சிப்படுத்துவதற்காக
தோர்த்தனல்லதலெ = அஞ்ஞானம், பயம் ஆகியவை இருப்பதைப் போல காட்டுகிறார். ஆனால் உண்மையாக அவை எதுவும் இல்லை.
த்ருக்தோஷதிந்தலி = பித்தத்தினால் அல்லது கண்ணில்
தோன்றும் வேறு ஏதாவது நோயினால்
பானுமண்டல சலிசிதந்ததி = ஒருவனுக்கு சூரியன்
சுற்றுவதைப் போல தோன்றும்.
காணுவுது = அப்படியே மக்களின் அஞ்ஞானத்தினாலேயே பிரம்மதேவருக்கு
அஞ்ஞானாதிகள் இருக்கிறதைப் போல தெரிகிறது.
ராமாயணத்தில், அதாவது, ராமாயண சுந்தரகாண்டத்தில், ஹனுமந்த தேவர் சீதையை ராவணனின்
அந்தப்புரத்தில் தேடி அங்கு அவர் கிடைக்காமல் மிகவும் கவலைப்பட்டு இறுதியில் அசோக
வனத்தில் சீதையைக் கண்டார் என்னும் விஷயத்தில் ஹனுமந்த தேவருக்கு அஞ்ஞானம்
இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால், இதன் சரியான அர்த்தமானது, மகாபாரத தாத்பர்ய நிர்ணய 7ம் அத்தியாயத்தில்:
யத்யப்யேதே நபஷ்யந்தி நிஷாசர கணாஸ்துயே |
த்யுலோகசாரின: சர்வே பஷ்யந்த்ருஷ ஏவச ||14
தேஷாம் விடம்பனாயைவ தைத்யானாம் வஞ்சனாயச |
பஷ்யதாம் கலிமுக்யானாம் விடம்போயம் க்ருதோ பவேத் ||15
ஹனுமந்த தேவர் சீதையை தேடினார். இரவில், அசுரர்கள் அனைவரும் தூங்கும்போது, இவர் சீதையை தேடியதை, ராவணனின் வீட்டில் இருக்கும் அசுரர்கள் மட்டும் இவரை பார்க்கவில்லையே தவிர, அந்தரிக்ஷ வாசிகளான அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஞானிகளான ரிஷிகளும்
பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும் தன் முரணை (irony) காட்டுவதற்கும், தைத்யர்களை வஞ்சிப்பதற்கும், பார்த்துக் கொண்டிருக்கும் கலி
முதலானவர்களை மயக்குவதற்கும், ஹனுமந்த தேவர் இப்படியாக நடித்தார்
என்று சொல்லியிருக்கிறார்.
இதைப் போலவே, பீமாவதாரத்திலும் சில இடங்களில் இப்படி நடந்ததாக தெரிய வருகிறது. இவை உண்மை
அல்ல. அஞ்ஞானிகளை மயக்குவதற்காக என்று அறிய வேண்டும். சர்வக்ஞர்களான பிரம்ம
வாயுகளுக்கு அஞ்ஞான, பய,
சோகங்கள் ஆகியவை இருப்பதில்லை. பகவத் விஷயத்தில் மட்டும் பிரம்மதேவருக்கு
சிறிது அஞ்ஞானம் இருக்கிறது. மற்ற ஜகத் விஷயங்களில் இல்லை என்று அறியவேண்டும்.
பகவத் விஷயத்தில் அஞ்ஞானம்கூட பகவத் ப்ரீதிக்காகவே இருக்கிறது.
கண்ணில் இருக்கும் புரை ஆகிய தோஷங்களால், சூர்ய மண்டலம் முதலானவை சுற்றுவதைப் போல தோன்றுகின்றன. அதுபோலவே, அஞ்ஞானிகள் மட்டும் பிரம்ம வாயுகளின் பய சோகாதிகளை அனுபவித்தனர் என்று
அறியவேண்டும்.
க1மலஸம்ப4வ ஸர்வரொள கு3
த்தம நெனிஸுவனு எல்லகாலதி3
விமல ப4க்தி ஞான வைராக்3யாதி3 கு3ணதி3ந்த3 |
ஸமபி4 அதி4கவிவர்ஜிதன கு3ண
ரமெய முக2தி3ந்த3ரிது நித்யதி3
த்3யுமணி கோடிக3ளந்தெ காம்ப3னு பி3ம்ப3ரூபவனு ||36
கமலசம்பவ = பிரம்மதேவர்
விமல பக்தி ஞான வைராக்யாதி குணதிந்த = தூய்மையான
பக்தி,
ஞான,
வைராக்யாதி குணங்களால்
எல்லகாலதி = அனாதி காலங்களில்
சர்வரொளகெ உத்தம நெனிஸுவரு = அனைத்து ஜீவர்களைவிட
உத்தமர் எனப்படுகிறார்.
சமபி அதிக்விவர்ஜிதன = சமம் மற்றும் உத்தமர்
இல்லாதவனின்
குண = குணங்களை
ரமெய = ரமாதேவியரின்
முகதிந்த அரிது = மூலமாக அறிந்து
நித்யதி = தினந்தோறும்
த்யுமணி கோடிகளந்தெ = கோடி சூரியர்களைப் போல
பிம்பரூபவனு = பிம்பமூர்த்தியை
காம்பனு = காண்பார்.
பிரம்மதேவர், அனைத்து காலங்களிலும், தூய்மையான பக்தி, ஞான,
வைராக்யாதி குணங்களில், மற்ற கருட, சேஷ,
ருத்ராதி அனைத்து தேவதைகளைவிட உத்தமர் எனப்படுகிறார். சமம் அல்லது அதிகம்
இல்லாத ஸ்ரீஹரியின் குணாதிஷயங்களை, ரமாதேவியரின் மூலமாக கேட்டு, பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனை கோடி சூர்ய பிரகாச உள்ளவனாக காண்பார்.
ஞான ப4க்த்யாத்3யகி2லகு3ண சது3
ரானன நொளிப்பந்தெ முக்2ய
பிராணனலி சிந்திபுது3 யத்கிஞ்சித் கொரதெயாகி3 |
ந்யூன ருஜுக3ண ஜீவரல்லி க்ர
மேணவ்ருத்3தி4 ஞான ப4கு3தி1 ஸ
மான பா4ரதி வாணிக3ளலி பத3ப்ரயுக்ததி4க ||37
ஞானபக்தியாத்யகிளகுண = ஞான, பக்தி முதலான அனைத்து குணங்கள்
சதுரானன நொளிப்பந்தெ = பிரம்மதேவரிடம் இருப்பதைப் போல
யத்கிஞ்சித் கொரதெயாகி = மிகச் சிறிய அளவில் மட்டுமே
குறைவாக
முக்யபிராணனலி = வாயுதேவரில்
சிந்திபுது = சிந்திக்க வேண்டும்
ருஜுகண ஜீவரலி = ருஜு கணஸ்தர்களில்
ந்யூன = குறைவாக இருந்து
க்ரமேண வ்ருத்தி = கிரமமாக கல்ப சாதன ஆகும்போதெல்லாம்
அதிகமாகிறது
பாரதிவாணிகளலி = பாரதி, சரஸ்வதி தேவியரில்
ஞானபக்திசமான = ஞான, பக்தி ஆகியவை சமமாக இருக்கிறது
ஆனால்,
பதப்ரயுக்ததிக = சரஸ்வதி தேவியர் பதவியில் சிறிது
அதிகமானவர் என்று அறியவேண்டும்.
பிரம்மதேவரிடம் ஞான, பக்தி ஆகியவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு வாயுதேவரிடமும்
இருக்கிறது. ஆனால், பிரம்மதேவருக்கு வாயுதேவரைவிட ஒரு கல்ப சாதனை அதிகமாக ஆகியிருப்பதால், பதவியில் அவர் சிறிதளவு வாயுதேவரைவிட அதிகம்.
ருஜுகணர்களில் முதலில் குறைவாக இருந்து, பின் கல்ப சாதனை ஆக ஆக, ஞான, பக்திகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
சரஸ்வதி, பாரதிதேவியரிடமும், பிரம்ம வாயுகளைப் போலவே, ஞான பக்த்யாதிகள் சமமாக
இருந்தாலும், சரஸ்வதி தேவியின் பதவி சிறிது அதிகமாக இருக்கிறார்.
யாவஞ்ஞானம் சாஸ்திமே வாஸுதேவ தாவத் ஞானம் வாயுதேவஸ்ய
சாஸ்தி ||
இத்யாதி கருட புராண, பிரம்மகாண்ட வசனங்கள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
ஸௌரி ஸூர்யனதெரதி3 பி3ரம்ம ஸ
மீர கா3யத்ரி கி3ரிக3ளொளு
தோருவுது3 அஸ்பஷ்டரூபதி3 முக்திபரியந்த |
வாரிஜாஸன வாயு வாணி
பா4ரதீர்கெ3 மஹாப்ரலயத3லி
பா4ரத3ஞானாதி3 தோ3ஷவு ஹரிக்ருபா ப3லதி3 ||38
ஸௌரிசூர்யனதெரதி = சௌரி என்றால் சனீஸ்வரன். அந்த
கிரகத்தைப் பார்த்தால், ஒரு சாதாரண தீபத்தைப் போலவே
தெரியும். ஆகையால், இதன் குறியீடாக தீபத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படி விளக்கினைப் போல ஹ்ருதயாகாஷத்தில்
பார்க்கும்போது, சூர்யனின் பிரகாசத்தைப் பார்த்தால் எப்படி அது தெளிவாக தெரியாதோ, அப்படியே பகவந்தனின் ரூபங்களை தெளிவாக பார்க்க மாட்டார்கள் என்பது கருத்து.
பிரம்ம,
சமீர = வாயுதேவர்
காயத்ரி = சரஸ்வதி தேவியர்
கிரி = பாரதி தேவியர்
களொளு = இவர்களில்
முக்திபரியந்த = முக்தி அடையும் வரை
அஸ்பஷ்டரூபதி = தெளிவற்ற ருபத்தில் காண்தல்
வாரிஜாஸன = பிரம்மதேவர்,
வாயு வாணி பாரதீர்கெ = வாயுதேவர், சரஸ்வதி, பாரதிதேவி இவர்களுக்கு
மஹாப்ரளயதி = மஹா ப்ரளய காலத்தில்
ஹரி க்ருபா பலதி = ஸ்ரீஹரியின் க்ருபா கடாக்ஷத்தால்
அஞ்ஞானாதி தோஷவு = அஞ்ஞானம் முதலான தோஷங்கள் வராது.
தீபங்களை அனைவரும் சாதாரணமாக பார்க்கலாம். ஆனால், அதைப் போல, சூரியனைப் பார்ப்பதற்கு சாத்தியமில்லை. அதைப்போலவே, பிரம்மதேவ்ர், வாயுதேவர், சரஸ்வதி, பாரதி இவர்கள் அபரோக்ஷத்தில் தீபத்தின் ஒளியைப் போல மிகத் தெளிவாக பகவந்தனை
காண்கின்றனர். அனைத்து இடங்களிலும் இருக்கும் பகவத் ரூபங்களை, சூரிய மண்டலத்தைப் பார்ப்பதைப் போல, தெளிவற்ற நிலையில் காண்பர்.
வாயுதேவருக்கு பிரம்ம பதவியிலிருந்து முக்தி ஆவதால், வாயுதேவர் தெளிவற்ற நிலையிலேயே பகவத் ரூபங்களை காண்பார். பிரம்மதேவர் முக்தரான
பிறகு,
தெளிவாகக் காண்கிறார். முக்தரான பிறகு, அதிக தெளிவாக காண முடியும். இந்த தாரதம்யம், பிரம்ம வாயுகளிடம் இருக்கிறது என்று அறிய வேண்டும்.
பிரம்மதேவர், வாயுதேவர், சரஸ்வதி, பாரதி தேவியர் - இவர்களுக்கு மஹாபிரளயத்திலும்கூட பரமாத்மனின் க்ருபா கடாக்ஷத்தினால்
அஞ்ஞானாதி தோஷங்கள் வருவதில்லை. இந்த விஷயத்தில் கருட புராண, பிரம்ம காண்டத்தில்:
அஸ்பஷ்டரூபே ஞானபலேன சேஷ: ஸௌரிப்ரகாஷஸ்ய யதைவதர்ஷனம் ||
ததாமம ஞானகதோ விசேஷ: தீபப்ரகாஷஸ்ய யதைவ தர்ஷனம் ||
ததாஞானம் வாயுதேவஸ்ய சாஸ்தி அஸ்பஷ்டதா ந்யூனதா
ஹ்யஸ்திவாயோ: ||
ததாsஞ்ஞானம் நைவ ஸஞ்சிந்தனீயம்
சைதாத்ருஷஞ்ஞான வ்யக்திர்முராரே ||
வாய்வாதீனாம் மோக்ஷபர்யந்த மஸ்திவாயோமமப்ரளயே
ஸ்ருஷ்டி காலே ||
ததாகாயத்ர்யா நாஸ்தினாஸ்த்யேவ மோஹ: காயத்ரீவத்பாரதி
தேவதேவ ||
ஆகிய வாக்கியங்கள் ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த பத்ய
அர்த்தங்களையே இந்த ஸ்லோகங்களும் சொல்வதால், அவற்றை மறுபடி தனியாக விளக்கவில்லை.
நூருவருஷானந்தரத3லி ஸ
ரோருஹாஸன தன்ன கல்பதி3
ஆரு முக்தியனைது3வரோ அவரவர கரெதொ3ய்து3 |
ஷௌரிபுரதொ3ளகி3ப்ப நதி3யலி
காருணிக ஸுஸ்னான நிஜபரி
வார ஸஹிததி3 மாடி3 ஹரியுத3ர ப்ரவேஷிஸுவ ||39
நூருவருஷானந்தரதலி = பிரம்மஞானத்தினால் நூறு ஆண்டுகள்
வரை ஒரு கல்பம் முடிந்த பிறகு
ஸரோருஹாஸன = பத்மாசனரான பிரம்மதேவர்
தன்ன கல்பதி = தம் கல்பத்தில்
ஆரு முக்தியனைதுவரோ = அந்த கல்பத்தில் யார் யார்
முக்தியை அடைந்திருக்கிறார்களோ
அவரவர கரெதொய்து = அவர்களுடன் கூடி
ஷௌரிபுரதொளகிப்ப = பரமாத்மனின் உலகத்தில் நடுவில்
இருக்கும்
நதியலி = விரஜா நதியில்
நிஜபரிவார ஸஹிததி = வாணி சேஷ கருடாதி தன்
பரிவாரங்களுடன்
ஸுஸ்னான மாடி = நன்றாக ஸ்னானம் செய்த பிறகு, லிங்க சரீரங்கள் பங்கம் ஆகின்றன. அதன்பிறகு,
காருணிக = கருணாளுவான பிரம்மதேவர்
ஹரி உதர = பரமாத்மனின் உதரத்தில்
பிரவேஷிஸுவ = பிரவேசம் செய்வார்.
பிரம்மதேவரின் 100 ஆண்டுகளுக்கு, ஒரு பிரம்ம கல்பம் என்று பெயர். தத்வாபிமானிகளான சூர்யாதி தேவதைகளே முதலான
முக்தி யோக்யர்களில் 10-20 கல்ப சாதனைகள் என சொல்லியிருப்பவர்களை விட்டு, மற்ற சாமான்ய ஜீவர்கள் அனைவருக்கும் ஒரேயொரு கல்ப சாதனை என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த பிரம்ம கல்பத்தில் ஸ்ருஷ்டிக்கு வந்தவர்கள் இதே
கல்பத்திலேயே முக்தியை அடையவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள்
அனைவருக்கும் பிரம்மதேவருடன் விரஜா நதி ஸ்னானத்தினால் லிங்க சரீரம் பங்கமாகி, முக்தி ஆகிறது.
இப்படியாக நியமம் இருப்பதால், இந்த பிரம்மதேவருக்கு 100 ஆண்டுகள் ஆனபிறகு, இந்த பிரம்ம கல்பம் முடிகிறது. அந்த சமயத்தில் இந்த கல்பத்தில் முக்தர்கள் ஆக
வேண்டிய ஜீவர்களுடன் சேர்ந்து, மற்றும் கருட, சேஷ,
இந்திர முதலான இந்த கல்பத்தில் முக்தர்கள் ஆக வேண்டிய தன் பரிவாரங்களுடன்
சேர்ந்து,
வைகுண்ட லோகத்து நடுவில் இருக்கும் விரஜா நதியில் ஸ்னானம் செய்து, லிங்க சரீரம் பங்கமான பிறகு, அனைவருடன் பரமாத்மனின் உதரத்தை
பிரவேசம் செய்கிறார்.
வாஸுதே3வன உத3ரதொ3ளகெ3 ப்ர
வேஷகை3தா3னந்தரதி3 நி
ர்தோ4ஷ முக்தரு உத3ரதி3ம் பொரமொட்டு ஹருஷத3லி |
ஈஷனிந்தா3க்ஞவ படெ3த3ன
ந்தாஸன ஸிதத்3வீப மோக்ஷதி3
வாஸவாகி3 விமுக்த து3க்க2ரு ஸஞ்சரிஸுதிஹரு ||40
நிர்தோஷ முக்தரு = தோஷங்கள் அற்றவர்களான முக்தர்
ஆனவர்கள்
வாசுதேவன உதரதொளகெ ப்ரவேஷகைதா னந்தரதி = வாசுதேவனின்
உதரத்தில் பிரவேசம் செய்தபிறகு
உதரதிம் = அந்த வயிற்றிலிருந்து
பொரமொட்ட = வெளியே வந்து
ஹருஷதலி = மகிழ்ச்சியுடன்
ஈஷனிந்த = பரமாத்மனின்
ஆக்ஞவ படெது = ஆணையைப் பெற்று
மோக்ஷதி = முக்த ஸ்தானங்களில் ஸ்வேதத்வீபத்திலும், அனந்தாசனத்திலும்,
வாசவாகி = வசித்தவாறு
விமுக்ததுக்கரு = துக்கங்கள் இல்லாதவர்களாக
சஞ்சரிசுதிஹரு = சஞ்சரித்துக் கொண்டிருப்பர்.
முக்தர் ஆகிறவர்கள், லிங்க சரீரம் ஆனபிறகு, பகவந்தனின் உதர பிரவேசம்
செய்வார்கள் என்று முந்தைய பத்யத்தில் பார்த்தோம். அதன் பிறகு, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்: பரமாத்மனின் உதரத்திலிருந்து வெளியே
வந்து,
மகிழ்ச்சியுடன் அனந்தாசன, ஸ்வேதத்வீப முதலான இடங்களில் தம்
இஷ்டத்திற்கேற்ப சஞ்சரித்தவாறு, ஸ்வரூபானந்தத்தை அனுபவித்தவாறு
முக்தியில் வசித்துக் கொண்டிருப்பர்.
ஸத்வ ஸத்வ மஹா ஸுஸூக்ஷ்மவு
ஸத்வ ஸத்வாத்மக கலேவர
ஸத்யலோகாதி4ப னெனிப க3த்யல்பவெரடு3 கு3ண |
முக்திபோ4க்3ய வித3ல்லஜாண்டோ3
த்பத்தி காரணவல்ல ஹரிப்ரீ
த்யர்த்த2வாகீ3ஜக3த3 வ்யாபாரக3ள மாடு3வனு ||41
ஸத்வ ஸத்வ மஹாஸூக்ஷ்மவு ஸத்வ சத்வாத்மக கலேவர = ‘ஸத்வ ஸத்வ மஹாஸத்வ சூக்ஷ்ம ஸத்வஸ்சதுர்முக:’ என்னும் கருட புராணத்து வாக்கியத்திற்கேற்ப, பிரம்மதேவருக்கு ‘விஷுத்த ஸத்வ’ என்று பெயர். அதன் விவரம்: அவரது ஸ்வரூபதேகம் - ஸாத்விக ஸாத்விக ஸாத்விக சூக்ஷ்ம
ஸாத்விக ஸ்வரூபாத்மகமானது என்று அர்த்தம்.
ஸத்யலோகாதிப நெனிப = பிரம்மதேவர், சத்யலோகாதிபதி எனப்படுகிறார்
எரடுகுண = ரஜோகுண, தமோகுணங்கள் இவ்விரண்டும்
அத்யல்ப = மிகவும் குறைவாக இருக்கிறது
இது = (பிரம்ம பதவியில் இருக்கும்போது செய்த) இந்த
கல்ப சாதனை
முக்தி யோக்யவல்ல = முக்தியில் அனுபவிக்கும் சுக
சாதனைக்காக அல்ல
அஜாண்டோத்பத்திகெ = பிரம்மாண்ட ஸ்ருஷ்டிக்கு
காரணவல்ல = அதற்காகவும் அல்ல
ஹரி ப்ரீத்யர்த்தவாகி = ஸ்ரீஹரியின் மகிழ்ச்சிக்காகவே
ஜகத்வியாரகள மாடுவனு = ஸ்ருஷ்ட்யாதிகளை பகவத் சேவை
என்றும்,
இதனால் பகவந்தன் மகிழ்ச்சியடைவான் என்றும், அவற்றை செய்கின்றார் என்று அர்த்தம்.
ஸத்வகுண, ரஜோகுண, தமோகுணர்கள் என்னும் மூன்று வித குணங்களில், குணங்களின் அதிக விகிதத்தினால், சத்வ குணத்தை அதிகமாகக்
கொண்டவர்கள் சாத்விகர்கள் என்றும், ரஜோ குணத்தை பிரதானமாகக்
கொண்டவர்கள், ராஜஸர்கள் என்றும், தமோ குணத்தை பிரதானமாகக்
கொண்டவர்கள் தாமசர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அனைவரிலும் மூன்று குணங்களும்
இருந்தே இருக்கின்றன.
சத்வ குணம் அதிகமாகவும், ரஜோ குண தமோ குணங்கள் குறைவாக இருப்பவர்கள், சாத்விக சாத்விக ராஜஸர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதைப்போலவே, சாத்விக சாத்விக தாமசர்கள் போன்றவர்களும் உண்டு.
இந்த பேதங்களில் பிரம்மதேவர், சாத்விக சாத்விக சூக்ஷ்ம சாத்விகர் என்னும் விதத்தை சேர்ந்தவர் என்பது
கருத்து. அவரிடம், ராஜஸ,
தாமஸ குணங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. வாயு பதவியில் இருக்கும்போதே இவரின்
சாதனைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிவிட்டன. பிரம்ம பதவிக்கு வந்த பிறகு செய்யும்
சாதனைகள்,
வெறும் ஹரி ப்ரீதிக்காகவே ஆகும்.
இவரால் முக்தி சாதனையும் ஆவதில்லை, பிரம்மாண்டத்தின் உற்பத்தி காரணமும் இல்லை. முக்தி சாதனை அனைத்தும் வாயு
பதவியிலேயே முடிந்துவிட்டன என்பது கருத்து.
பாத3ன்யூன ஷதாப்த3 பரிய
ந்தோதி3 உக்3ரத3பாஹ்வயதி3 லவ
ணோத3தி3யொளகெ3 கல்பத3ஷ தபவித்த3னந்தரதி3 |
ஸாதி4ஸித3 மஹதே3வ பதவா
ரைது3 நவ கல்பாவஸானகெ
ஐது3வனு ஸேஷன பத3வ பார்வதி ஸஹிதனாகி3 ||42
பாதன்யூன ஷதாப்த பர்யந்த = நூற்றுக்கு ஒரு பாதம்
குறைவு என்றால் 75 ஆண்டுகள் வரை
ஓதி = 98ம் கல்ப சாதனையில். அதாவது வாயு
பதவிக்கு முந்தைய கல்பத்தில் இதே வாயுதேவர் லாதவ்யர் என்னும் பெயரைப் பெற்றிருந்தார்.
பகவந்தனின் குணாதிசயங்களைக் கேட்டு, அதன்பின்,
உக்ரதபாஹ்வயதி = உக்ரதபா என்னும் பெயரில்
லவணோததியொளகெ = உப்புக் கடலில்
கல்பதஷ = 10 கல்பங்களின் வரை
தபவித்து = உக்ரமான தவத்தினை செய்து
அனந்தரதி = பின்பு, 38 கல்ப சாதனைக்குப் பிறகு, 39ம் கல்பத்தில்
மஹதேவபத = ருத்ர பதவியை
ஸாதிஸித = அடைந்தார்
ஆரைது நவ கல்பாவசானகெ = 6*5=30. 30+9= 39ம் கல்பத்தின் இறுதியில். 39ம் கல்பத்தை முடித்தபிறகு, 40ம் கல்பத்தில் பார்வதி சகிதமாக சேஷனின் பதவியை அடைகிறார்.
ஸுஸ்ராவோக்ர தபானாம யோக்யோ ருத்ரபதஸ்யய: |
ஸார்த்தம் பரார்த்தம் விஷ்ணோஸ்து குர்ணா பக்த்யா
ஸதோதித: ||
என்னும் அனுவியாக்யானத்தின் வாக்கியத்திற்கேற்ப, ருத்ர பதவிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவர் 75 ஆண்டுகள் வரை, பரமாத்மனின் குணாதிஷயங்களை லாதவ்யரிடம் கேட்டு, அதன் பிறகு, உப்புக் கடலில் உக்ரதபா என்னும் பெயரில் 10 கல்ப தவத்தினை செய்து, அதன் பிறகு, 38 பிரம்மகல்பம் முடிந்தபிறகு, 39ம் கல்பத்தில் ருத்ர பதவியைப்
பெற்று,
அந்த கல்பத்தின் இறுதியில், அதாவது 40ம் கல்பத்தில் பார்வதி சமேதராக சேஷ பதவியை அடைகிறார்.
இந்த்3ர மனுத3ஷ கல்பக3ளலி ஸு
நந்த3னாமதி3 ஸ்ரவணகை3து3 மு
குந்த3ன பரோக்ஷார்த்த2 நால்கு ஸுக2ல்ப தபவித்து3 |
நொந்து3 பொகெ3யொளு கோடி வருஷ பு
ரந்த3ரனு அத3னுண்டனந்தர
பொந்து3வனு நிஜலோக ஸுரபதி காமனித3ரந்தெ ||43
இந்த்ர = இந்திரன்
மனுதஷ கல்பகளலி = 10 மன்வந்தரங்களில்
சுனந்த நாமதி = சுனந்த என்னும் பெயரில்
ஸ்ரவணகைது = கருட பதவிக்குத் தகுதியான ஸுமனஸு
என்பவரிடமிருந்து பகவன் மகிமைகளைக் கேட்டு
முகுந்தன = மோக்ஷத்தைக் கொடுப்பவனான ஸ்ரீபரமாத்மனின்
அபரோக்ஷார்த்த = அபரோக்ஷத்தைப் பெறுவதற்காக
நால்கு சுகல்ப = 4 மன்வந்தரங்களில்
தபவித்து = தவம் செய்து
பொகெயொளு = புகையில்
நொந்து = கஷ்டப்பட்டு
கோடி வர்ஷ அதனுண்ட = கோடி வருடங்கள், அந்தப் புகையையே பானம் செய்து
அனந்தர புரந்தரனு = புரந்தர என்னும் பெயருள்ள 7ம் மன்வந்தரத்தில், இந்திர பதவிக்கு வந்த
ஸுரபதி = தேவாதிபதி
நிஜலோக = தன் தகுதிக்கேற்ப இருக்கும் ஸ்வரூப சுகத்தை
முக்தியில் அடைகிறான்.
அல்லது,
நிஜலோக என்றால், இந்திராதிபத்யத்தை அடைந்து, பின் ஸ்வர்க்க லோகத்தை அடைகிறான்
என்று அர்த்தம்.
அந்த கல்பத்தின் இறுதியில் தேவேந்திரனுக்கு முக்தி
என்பது கருத்து.
காமனு = மன்மதன்
இதரந்தெ = இதே ரீதியில் சாதனை உள்ளவன் என்று
அர்த்தம்.
தஷமன்வந்தரம்ஷ க்ரபதயோக்யோ கருத்மக: |
பதயோக்யாத் ஸுமனஸோ ஸுனந்தோ நாமஜா ஷ்ருணோத் ||
உபாஸாம் சக்ர உத்யுக்தோ மன்வந்தர சதுஷ்டய: ||
என்னும் அனுவியாக்யானத்தின் வாக்கியத்தின்படி, இந்த பத்ய அர்த்தத்தை இவ்வாறு அறிய வேண்டும்.
தேவேந்திரன், இந்திர பதவிக்கு வருவதற்கு முன்பு, ஸுனந்த என்னும் பெயரால், கருட பதவியை அடைவதற்குத் தகுதியான, ஸுமனஸ என்பவரிடமிருந்து 10 மன்வந்தரங்கள் வரை, பகவன் மகிமைகளைக் கேட்டு, அதன் பிறகு, பரமாத்மனின் அபரோக்ஷத்திற்காக 4 மன்வந்தரங்கள் தவம் செய்து மறுபடி
1 கோடி ஆண்டுகள் வரை புகையில் தவம் செய்து, அதனையே பானம் செய்து, இந்திர பதவியைப் பெற்று, ஸ்வர்க்கத்தில் வசிக்கிறார். மன்மதனும் இதைப் போலவே சாதனை செய்து கொண்டு, பரமாத்மனின் புத்ரனாக இருக்கிறான்.
கரெஸுவரு பூர்வத3லி சந்த்ரா
ர்கரதி3ஷாந்த ஸுரூபனாமதி3
எரடெ3ரடு3 மனுகல்ப ஸ்ரவணவகை3து3 மனுகல்ப
வரதபோ ப3லதி3ந்த3 அர்வா
க்ஷிரக3ளாகீ3ரைது3 ஸாவிர
வருஷ து3க்கவ நீகி3 காம்ப3ரு பி3ம்ப3ரூபவனு ||44
சந்திரார்க்கரு = சந்திர சூரியர்கள்
பூர்வதலி = பதவியை அடைவதற்கு முன்னர்
அதிஷாந்த சுரூப நாமதி = அதிஷாந்தர் என்றும் சுரூப
என்றும் பெயர்களால்
எரடெரடு மனுகல்ப = இரண்டிரண்டு மனு கல்பங்கள்
ஸ்ரவணகெய்து = முந்தைய கல்பத்தில் சுமனஸ
என்பவரிடமிருந்து பகவன் மகிமைகளைக் கேட்டு
மனுகல்பா = ஒரு மன்வந்தரத்தில் சுமனஸரின் உபாசனையை
செய்து
வர தபோ பலதிந்த = மிகச்சிறந்த வர தவ பலத்தினால்
அல்லது,
வர பலத்தினாலும், தபோ பலத்தினாலும்
அர்வாக்ஷிரகளாகி = தலைகீழாக
ஈரைது சாவிர வருஷ = 10,000 ஆண்டுகள் தவம் செய்து
துக்கவ நீகி = துக்கத்தைக் களைந்து கொண்டு
பிம்பரூபவனு = பிம்ப மூர்த்தியை
காம்பரு = அபரோக்ஷத்தில் காண்பார்கள்.
ஸுரூப ஷ்யாந்தரூபஸ்ச மன்வந்தர சதுஷ்டயம் ||
அஸ்ருண்வதாம் ஸுமனஸோ மன்வந்தரமுபாஸதாம் ||
வர்ஷாயுத ஸஹஸ்ரேண தபோர்வாக் ஷிரஸாக்ருதம் ||
ஆகிய அனுவியாக்யான வாக்கியங்களுக்கேற்ப, சந்திர சூரியர்கள் அவர்களின் பதவியைப் பெறுவதற்கு முன்னர், அதிஷாந்தரூப, ஸுரூப என்னும் பெயர்களால், கருட பதவிக்குத் தகுதியானவரான
ஸுமனஸரை 1 மன்வந்தர காலம் உபாசனை செய்து, 4 மன்வந்தர காலம் அவரிடம் பகவத்
மகிமைகளைக் கேட்டு, அதன் பிறகு, 10,000 ஆண்டுகள் வரை தலைகீழாக நின்று மிகவும் கஷ்டத்துடன் கடுந்தவம் புரிந்து, இன்னொரு 1,000 ஆண்டுகள் ஆகாயத்தில் சயனம் செய்து, சூரிய கிரணங்களையே பானம் செய்து, அபரோக்ஷத்தில் பரமாத்மனைக் காண்பார்கள்.
ஸாத4னக3ள அபரோக்ஷனந்தர
ஐது3வரு மோக்ஷவனு ஷிவ ஷ
க்ராதி3 தி3விஜரு உக்தக்ரமதி3ம் கல்பஸங்க்யெயலி |
ஐத3லெய கை3வத் துபேந்த்3ர ஸ
ஹோத3ர நிகி3ப்பத்து த்3வினவ த்வ
கா3தி4பதி ப்ராணனிகெ3 கு3ரு மனுக3ளிகெ3 ஷோட3ஷவு ||45
ஷிவ ஷக்ராதி = ருத்ர இந்திர முதலான
திவிஜரு = தேவதைகள்
உக்த க்ரமதிம் கல்ப சங்க்யெயலி = முன்னர் கூறியதைப்
போல, கல்ப எண்ணிக்கையில்
ஸாதனகளு = சாதனைகள் ஆனபிறகு
அபரோக்ஷ = அபரோக்ஷத்தில் பகவத் ரூபத்தைக் கண்டு, மோட்சத்தை அடைவார்கள்
ஐதலெயகெ = 5 தலைகள் உள்ள ருத்ர தேவருக்கு
ஐவத்து = 50 கல்ப சாதனை
உபேந்திர ஸஹோதரனிகெ = தேவேந்திரனுக்கு
இப்பத்து = 20 கல்ப சாதனை
த்வகாதிபதி ப்ராணனிகெ = த்வக் இந்திரிய அபிமானியான
அஹங்காரிக பிராணனுக்கு
த்வினவ = 2*9=18 கல்ப சாதனைகள்
குருவனுகளிகெ = ப்ருஹஸ்பதி, ஸ்வாயம்புவ மனு முதலானவர்களுக்கு
ஷோடஷவு = 16 கல்ப சாதனை என்று அறியவேண்டும்.
ருத்ர இந்திராதிகளுக்கு, முன்னர் கூறியபடி, கல்ப சாதனைகள் ஆனபிறகு, அபரோக்ஷத்திற்குப் பிறகு, முக்தி ஆகிறது. யார்யாருக்கு எவ்வளவு சாதனைகள் என்றால், ருத்ர தேவருக்கு 50 கல்பங்கள்; இந்திர தேவருக்கு 20 கல்பங்கள் ஆக வேண்டும்.
ருத்ரதேவருக்கு சொல்லியிருப்பதால், கருடதேவரும் இவருக்கு சமானரே
ஆனதால்,
கருடதேவருக்கும் இதே அளவு சாதனை என்று அறிய வேண்டும். சேஷ பதவியை அடையப்
போகிறவர்,
ருத்ர தேவரே ஆனதால், அவரின் சாதனை தனியாக இருப்பதில்லை.
இந்திரனுக்கு சொல்லியதைப் போலவே, மன்மதனுக்கும் என்று அறிய வேண்டும். அஹங்காரிக பிராணனுக்கு 18 கல்பங்கள்; குரு,
மனு,
ரதி,
தக்ஷ, சசிகளுக்கு 16 கல்பங்கள்.
இந்த கல்ப சாதனை விஷயத்தில் ருத்ரதேவருக்கு 50 கல்ப சாதனை என்று, முதலாம் சந்தியில் ‘க்ருத்திவாஸனே நீ நால்பத்து கல்ப’ என்னும் பத்யத்தின் விசேஷ
அர்த்தத்தில், ஆதாரங்களுடன் விவரித்துள்ளோம். அதனால் அதை மறுபடி இங்கு விளக்கவில்லை.
விம்ஷத்கல்ப மிதாஸ்த்விந்த்ர ஜீவாத்வினவ கல்பகா: ||
அஹம்ப்ராண பதார்த்தஸ்ச குர்வாத்யாத்வ்யஷ்ட கல்பகா: ||
என்னும் பிரகாச சம்ஹிதையின் வாக்கியம் மேலே
சொன்னதற்கான ஆதாரம் என்று அறிய வேண்டும்.
ப்ரவஹமருதகெ3 ஹன்னெரடு3 ஸை
ந்த4வ தி3வாகர த4ர்மரிகெ3 த3ஷ
நவஸுக2ல்பவு மித்ரரிகெ3 ஸேஷஷத ஜனகெ3ண்டு |
கவி ஸனக ஸுஸனந்த3ன ஸன
த்குவர முனிக3ளிகே3ளு வருணன
யுவதி பர்ஜன்யாதி3 புஷ்கரகா3ரு கல்பத3லி ||46
ப்ரவஹ மருதகெ = ப்ரவஹ வாயுவிற்கு
ஹன்னெரடு = 12 கல்பங்கள்
ஸைந்தவ = கடலில் பிறந்த சந்திரன்
திவாகர = சூரியன்
தர்ம = யமதர்மன் ; இவர்களுக்கு
தஷ = 10 கல்பங்கள்
மித்ரரிகெ = மித்ர தாரெ முதலானவர்களுக்கு ; அதாவது, அந்த கக்ஷையை சேர்ந்தவர்களுக்கு
நவஸுகல்பவு = 9 கல்பங்கள்
ஷேஷஷதஸ்த ஜனகெ = சேஷ ஷதஸ்தர்களுக்கு
எண்டு = 8 கல்பங்கள்
கவி = சுக்ராசார்யர்
ஸனக, சனந்தன, சனத்குமார, முனிகளிகெ = இந்த ரிஷிகளுக்கு
ஏளு = 7 கல்ப சாதனைகள்
வருணன யுவதி = கங்கா
பர்ஜன்யாதி = பர்ஜன்யனில் துவங்கி
புஷ்கரகெ = புஷ்கர வரைக்குமான அந்த கக்ஷையில்
இருப்பவர்களுக்கு
ஆருகல்பதலி = 6 கல்பங்கள், முக்திக்கு சாதனையாகும்.
ப்ரவஹஸ்துத்விஷட்கல்ப்யை: ஸூர்யாத்யா தஷகல்பகா: ||
மித்ராதீனாஞ்ச நவபிஸ்தூக்த சேஷகணஸ்யது ||
அஷ்டபி: ஸப்தபி: கல்பை: ஸனகாதி கணஸ்யது ||
ஷட்பி: பர்ஜன்ய மாரம்ப புஷ்கராந்தகணஸ்யவை ||
என்னும் பிரகாச சம்ஹிதையின் வாக்கியத்திற்கேற்ப இந்த
பத்ய அர்த்தம் இப்படியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ப்ரவஹ வாயுவிற்கு 12 கல்ப சாதனை;
சூர்ய சந்திர, யம முதலானவர்களுக்கு 10 கல்ப சாதனை;
மித்ர தாரை முதலானவர்களுக்கு 9 கல்ப சாதனை;
முன்பு கூறிய மனு, சூர்ய, இந்திர முதலான, சோனபானத்தைக் குடிக்கத் தகுதியான தேவதைகள் 100 பேரில்; ப்ரதான வாயு முதலான 15 பேரை மட்டும் விட்டு, மற்ற 85 தேவதைகள். இவர்களுக்கு உக்த சேஷஷதஸ்தர் என்று பெயர். இவர்களுக்கு 8 கல்ப சாதனை ;
பார்க்கவ, சனக, சனந்தன, சனத்குமார, இவர்களுக்கு 7 கல்ப சாதனை;
கங்கா, பர்ஜன்ய முதல் புஷ்கர வரை
இருக்கும் தேவதைகளுக்கு 6 கல்ப சாதனை;
இதன் பிறகு இவர்களுக்கு அபரோக்ஷம் ஆகி, முக்தி ஆகும் என்பது கருத்து.
ஐது3 கர்மஜஸுரரிகா3ஜா
நாதி3 க3ளிகீ3ரெரடு3 கல்பா
ர்தாதி3கத்ரய கோ3பிகாஸ்த்ரீயரிகெ3 பித்ரு த்ரயவு |
ஈ தி3வௌகஸ மனுஜகா3யக
ரைது3வரு எரடொ3ந்து3 கல்ப ந
ராதி4பரிக3ரெ கல்பதொளக3 பரோக்ஷ விருதிஹுது3 ||47
கர்மஜ சுரரிகெ = கர்மஜ தேவதைகளுக்கு
ஐது - 5 கல்பங்கள்
அஜானாதிகளுக்கு = அஜானஜ தேவதை முதலானவர்களுக்கு
ஈரெரடு = 4 கல்பங்கள்
அர்த்தாதிகத்ரய = 3.5 கல்பங்கள்
பித்ரு = பித்ரு கணத்தவர்களுக்கு
த்ரயவு = 3 கல்பங்கள்
ஈ திவௌகஸ மனுஜ காயகரு = தேவ கந்தர்வர் மனுஷ்ய
கந்தர்வர்
எரடு = 2 கல்பங்கள்
ஐதுவரு = அபரோக்ஷத்தை அடைவார்கள்
நராதிபரிகரெ = மனுஷ்யோத்தமர்களுக்கு
ஒந்து கல்ப = 1 கல்ப சாதனை
த்ருணகளிகெ = த்ருண ஜீவிகளுக்கு
அரெ = 0.5 கல்ப சாதனை
அபரோக்ஷ விருதிஹுது = அபரோக்ஷம் ஆகிறது என்பது
கருத்து.
கர்மதேவதைகளுக்கு 5 கல்பங்கள்
அஜானஜ தேவதைகளுக்கு 4 கல்பங்கள்
கிருஷ்ணனின் அங்கசங்கத்தைப் பெற்ற கோபிகா
ஸ்த்ரியர்களுக்கு 3.5 கல்பங்கள்
பித்ருகளுக்கு 3 கல்பங்கள்
தேவ கந்தர்வ, மனுஷ்ய கந்தர்வர்களுக்கு 2 கல்பங்கள்
மனுஷ்யர்களுக்கு 1 கல்பம்
த்ருண ஜீவர்களுக்கு 0.5 கல்பம்;
இந்த சாதனைகளுக்குப் பிறகு அபரோக்ஷம் ஆகிறது
என்பதும் கருத்து.
இவற்றிற்கு ஆதாரம், பிரகாச சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது:
கர்மதேவா: பஞ்ச கல்பாபரோக்ஷிண: |
சதுர்ப்பி ராஜானஜானாம் ஸார்த்த கல்பத்ரேயீணஹி ||
கிருஷ்ணாங்க ஸங்ககோபீனாம் த்ரிபி: பித்ருகணஸ்யது ||
கந்தர்வாணாந்து கல்பாப்யாம் மர்த்யானாந்து ததைகத: ||
அர்த்தகல்பம் த்ருணாந்தானாம் யோக்யானாம் ஹரிதர்ஷனெ ||
நியமோயம் ஸர்வகர்மேஷ்வேவ மேவனஜான்யதா ||
ப்ரோக்ஷ்யை: கல்யைர்விமுச்யந்தே தாவத்கல்பைஸ்து
ஸாதனம் ||
ததூர்வமபரோக்ஷஸ்ய கர்தவ்ய மிதினிஸ்சய: ||
இந்த பத்யத்தின் அர்த்தமே இந்த ஸ்லோகங்களின்
அர்த்தமாக இருக்கின்றன. இறுதி இரு ஸ்லோகங்களில் விசேஷ அர்த்தம் இருக்கிறது. அது
என்னவெனில்:
மேலே சொல்லப்பட்ட கல்ப எண்ணிக்கை, பிரம்ம கல்பம் என்று அறியவேண்டும். ஒவ்வொருவருக்கு எவ்வளவு கல்ப சாதனை
சொல்லப்பட்டிருக்கிறதோ, அவ்வளவு கல்ப எண்ணிக்கையில், அபரோக்ஷத்திற்குப் பிறகு, அவர்கள் முக்திக்காக செய்ய
வேண்டும். அந்த எண்ணிக்கை கல்ப சாதனை செய்தால்தான் அவர்களுக்கு அபரோக்ஷம்
கிடைக்கிறது.
உதாரணம்: இந்திரனுக்கு 20 கல்பம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அபரோக்ஷத்திற்கு முன்னர் 20 கல்ப சாதனை செய்தால், அவருக்கு அபரோக்ஷம் ஆகிறது.
அபரோக்ஷத்திற்குப் பின் முக்தி ஆவதற்கு 20 கல்ப சாதனை செய்யவேண்டும் என்பது கருத்து. இதைப் போலவே அனைவருக்கும் சாதனை
ஆகவேண்டும் என்று அறியவேண்டும்.
தீபக3ளனனு ஸரிஸி தீ3ப்தியு
வ்யாபிஸி மஹதிமிரவ களெது3 ப
ரோபகாரவ மாள்ப தெரத3ந்த3த3லி பரமாத்ம |
ஆ பயோஜாஸனனொளித்து3 ஸ்வ
ரூபஷக்திய வ்யக்தகை3ஸுத
தா பொளெவனவனந்தெ சேஷ்டெய மாடி3 மாடி3ஸுத ||48
தீபகளனனுசரிஸி = வீட்டில் வைத்திருக்கும் தீபத்தின்
யோக்யதைக்கேற்ப
தீப்தியு வியாபிஸி = ஒளி பரவி
மஹாதிமிரவ = பயங்கர இருட்டினை
களெது = போக்கி / துரத்தி
பரோபகாரவ மாள்ப தெரதந்ததலி = நமக்கு உதவி செய்வதைப்
போல
பரமாத்ம = ஸ்ரீபரமாத்மன்
ஆபயோஜாஸனனொளித்து = பிரம்மதேவரே முதலான அனைவரிலும்
இருந்து
ஸ்வரூப ஷக்திய வியக்திகைஸுத = அவரவர்களின்
யோக்யதைக்கேற்ப அவர்களுக்கு சக்தியைக் கொடுத்து
அவரந்தெ = அந்தந்த பிராணிகளைப் போல
சேஷ்டெய = செயல்களை
மாடி மாடிசுத்த = செய்து, செய்வித்து
தா = தான் (பரமாத்மன்)
பொளெவனு = ஒளிமயமாக ஒளிர்கிறான்
5-5 வர்த்திகளாக சேர்த்து, ஒரு பெரிய தீபத்தில் வைத்து, அந்த தீபத்தை பற்றவைத்தால், ஒளி மிகவும் அதிகமாகவும், ஒரே ஒரு திரி போட்டு தீபத்தை
ஏற்றினால், ஒளி குறைந்ததாகவும் எப்படி தெரிகிறதோ அதுபோலவே, ஸ்ரீபரமாத்மன், பிரம்மாதி தேவதைகளில் துவங்கி த்ருணாந்த ஜீவர்கள் வரை அனைவரிலும் இருந்து, அவரவர்கள் செய்யவேண்டிய கர்மங்களை தான் செய்து, அவர்கள் மூலமாகவும் செய்வித்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப, ஸ்வரூப சக்தியைக் கொடுத்தவாறு, பிரம்மாதிகளில் அத்யந்த ஒளி
உள்ளவனாக,
பூர்ண ஞான பக்த்யாதிகளால், அவர்களின் ஸ்வரூப சக்தியையும், த்ருணாந்த ஜீவர்களில் மிகக் குறைந்த சக்தியால், அல்ப ஞானாதிகளால், அவர்களின் ஸ்வரூப சக்தியையும் வெளிப்படுத்தி, தன் ஒளியையும் சிலரில் அதிகமாகவும் சிலரில் குறைவாகவும் வைத்து ஒளி
கொடுக்கிறான்.
ஸ்வோத3ரஸ்தி2த ப்ராண ருத்3ரே
ந்த்3ராதி3 ஸுரரிகெ3 தே3ஹக3ள கொ
ட்டாத3ரதி3 அவரவர ஸேவெயகொம்ப3 நனவரத |
மோத3 போ3த3 த3யாப்தி4 தன்னவ
ராதி3ரோக3வ களெது3 மஹத3ப
ராத4க3ள நோட3த3லெ ஸலஹுவ ஸதத ஸ்மரிஸுவர ||49
ஸ்வோதரஸ்மித = ஸ்ருஷ்டிக்கு முன்னர் தன் உதரத்தில்
வசிக்கும்
ப்ராண = வாயுதேவர்
ருத்ர = ருத்ரதேவர்
இந்திராதி = இந்திரன் முதலான
சுரரிகெ = தேவதைகளுக்கு
தேஹகள கொட்டு = தேகங்களைக் கொடுத்து
ஆதரதலி அவரவர ஸேவெய = அவரவர்களின் சேவையை
அனவரத = அனைத்து காலங்களிலும்
கொம்பனு = ஸ்வீகரிக்கிறான்
மோதபோத = மோத = ஆனந்தம். போத = ஞானம். இவைகளே
ஸ்வரூபமாக உள்ள
தயாப்தி = தயா சமுத்திரனான ஸ்ரீஹரி
தன்னவர = தன் பக்தர்களின்
ஆதி = மனோவியாதியை
ரோகவ = சரீர சம்பந்தமான நோய்களை
களெது = பரிகரித்து
சதத = எப்போதும்
ஸ்மரிசுவர = தன்னை நினைப்பவர்களின்
மஹதபராதகள நோடதலெ = தவறுகளை பார்க்காமல்
சலஹுவ = அவர்களுக்கு அருள்வான்.
பிரளய காலத்தில் தன் வயிற்றில் வசித்திருக்கும்
வாயுதேவர், ருத்ரதேவர், இந்திரன் ஆகிய தேவதைகளுக்கு சரீரத்தைக் கொடுத்து, மரியாதையுடன் அவர்கள் தனக்கு செய்யும் சேவைகளை ஏற்றுக்கொண்டு, ஞானானந்த ஸ்வரூபனான, தயா சமுத்திரனான ஸ்ரீஹரி, தன் பக்தர்களின் ஆதிவியாதிகளை பரிகரித்து, தன்னை எப்போதும் நினைத்திருப்பவர்கள், என்ன தவறுகளை செய்திருந்தாலும், அவற்றைக் கண்டுகொள்ளாமல்
(கவனிக்காமல்), அவர்களை காக்கிறான்.
ப்ரதிப்ரதி கல்பத3லி ஸ்ருஷ்டி
ஸ்தி2தி லயவ மாடு3தலி மோதி3ப
சதுரமுக2 பவமானரன்னவ மாடி3 பு4ஞ்சிஸுவ |
க்4ருதவெ ம்ருத்யுஞ்சயனெனிப தே3
வதெக3ளே உபசேதனரு ஸ்ரீ
பதிகெ3 மூர்ஜக3வெல்ல ஓத3னதிதி2 எனிஸிகொம்ப3 ||50
ப்ரதிபதி கல்பதலி = ஒவ்வொரு கல்பத்திலும்
ஸ்ருஷ்டி ஸ்திதி லயவ மாடுதலி = படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்தவாறு
மோதிப = மகிழ்ச்சி அடைகிறான்
சதுரமுக பவமானர = பிரம்ம வாயுகளை
அன்னவ மாடி புஞ்சிஸுவ = அன்னம் செய்து உண்பான்
ம்ருத்யுஞ்செயனு = ருத்ரதேவர்
க்ருதவெனிஸி = நெய் என்று சொல்லி
தேவதெகளெ உபசேதனரு = தேவதைகளே ஷாக, பாகாதி பதார்த்தங்கள் என்று நினைத்து
ஸ்ரீபதிகெ = லட்சுமிபதியான ஸ்ரீஹரிக்கு
மூர்ஜகவெல்ல = மூன்று உலகத்திலும் இருக்கும் அனைத்து
பிராணிகளும்
ஓதன = அன்னம் என்று நினைப்பான்
ஸ்ரீஹரி, தன்னை அதிதி என்று நினைப்பான்
ஸ்ரீபரமாத்மன், ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மதேவரிடம் பிரம்ம நாமகனாக இருந்து ஸ்ருஷ்டியையும், விஷ்ணு நாமகனாக காத்தலையும், ருத்ரதேவரிடம் ருத்ரரூபியாக
இருந்து அழித்தலையும் செய்தவாறு, மகிழ்ச்சியாக இருக்கிறான். ஒவ்வொரு
பிரளய காலத்திலும், பரமாத்மனுக்கு பிரம்ம வாயுகள், அன்னம் ஆகிறார்கள். ருத்ரதேவர்
நெய் ஆகிறார். மற்ற தேவதைகள் இதர பதார்த்தங்கள் ஆகிறார்கள். இப்படி மூன்று
உலகத்தில் இருப்பவர்களும், பக்ஷ்ய, போஜ்யாதி ரூபமான அன்னம் என்றும், பரமாத்மன் அதிதி என்றும்
அறியவேண்டும்.
க3ர்ப்பிணிஸ்த்ரி உண்ட3போ4ஜன
க3ர்ப்பக3த ஷிஷு உம்ப3 தெரத3லி
நிர்ப4யனு தானுண்டு3ணிஸுவனு ஸர்வஜீவரிகெ3 |
நிர்ப4லதிபரம அணுஜீவகெ3
அப்புவுதெ3 ஸ்தூ2லான்ன போ4ஜன
அர்ப்3ப4கரு பேளுவரு கோவித3ரித3னொட3ம்ப3ட3ரு ||51
கர்ப்பிணி ஸ்த்ரி உண்ட போஜன = கர்ப்பிணிப் பெண்
உண்ணும் அன்னமானது
கர்ப்பகத ஷிசு உம்ப தெரதலி = (அவளின் உடலில்
இருக்கும் நாடி மூலமாக) அவளுக்குள் இருக்கும் குழந்தையானது உண்பது போல
நிர்பயனு = பயம் இல்லாதவனான ஸ்ரீஹரி
தானுண்டு = தான் உண்டு
சர்வ ஜீவரிகெ உணிசுவனு = தான் உண்டு, அதனால் அனைத்து ஜீவர்களுக்கும் உண்ண வைப்பான்.
நிர்பல = பலம் இல்லாத சிறிய பரமாணு ஜீவர்களுக்கு
ஸ்தூலான்ன = பக்ஷ்ய போஜ்யாதிகளால் ஆன இந்த உணவு
அப்புவுதெ = சாப்பிடுவது சாத்தியமா?
பேளுவரு = சாத்தியம் என்று சொல்வார்கள்
அர்ப்பகரு = அல்ப புத்தி உள்ள சிறுவர்கள்
எனப்படுபவர்கள்
இதனு = ஜீவர்கள் உண்பார்கள் என்று
கோவிதரு = அறிந்தவர்கள்
ஒடம்படரு = ஒப்புக் கொள்வதில்லை.
கலிலந்த்வேகராத்ரேண பஞ்சராத்ரேண புத்பதம் |
தஷாஹேனதுகர்கந்து: பேஷ்யண்டம் வா தத:பரம் ||2
வாஸேனது ஷிரோத்வாப்யாம் பாஹ்வாங்க்ர்யாத்யங்க விக்ரஹ:
||
நகரோவாஸ்தி சர்மாணி லிங்கச்சேத்ரோத் பவஸ்த்ரிபி: ||3
சதுர்பிர்தாதவஸ்ஸப்த பஞ்சபி: க்ஷுத்ருடுத்பவ: ||4
(பாகவதம் 3ம் ஸ்கந்தம் 32ம் அத்தியாயம்)
இந்த ஸ்லோகங்களுக்கேற்ப,
* ஒரு இரவில் சுக்ல ஷோணிதங்கள்
கலக்கின்றன.
* 5 நாட்களில் பார்க்குமாறு ஆகிறது
* 10 நாட்களில் பொரை விழுந்த கண்களைப்
போல தெரிகிறது.
* 1 மாதத்தில் தலை,
* 2ம் மாதத்தில் கை, கால் முதலான அங்கங்கள்
* 3ம் மாதத்தில் நகம், முடி,
சர்ம,
லிங்க ஆகியவை தெரிகின்றன
* 4ம் மாதத்தில் ரத்தம், மாமிசம், மேதஸ் ஆகிய 7 தாதுக்கள் பிறக்கின்றன
* 5ம் மாதத்தில் பசி எடுக்கிறது என்று
சொல்லியிருக்கிறார்கள்.
பசி எடுத்தபிறகு, மேலும் 4 மாதங்கள் கர்ப்பத்திலேயே இருந்து, அன்னம் இல்லாமல் உயிர் வாழ்வது
எப்படியெனில்:
மாதுர் ஜக்தான்ன பானாத்யை ரேதேதாதுர ஸம்மத: ||6
தாய் உண்ட போஜனம், குடித்த நீர் ஆகியவற்றால் திருப்தி அடைந்து, குழந்தை கர்ப்பத்தில் வளர்கிறான் என்கிறார்.
இதே உவமையை தாசார்யர் இங்கு சொல்கிறார். கர்ப்பிணி
உண்ட அன்னத்தால், உள்ளே இருக்கும் குழந்தை எப்படி அதையே உண்டு திருப்தியாக இருக்கிறதோ, அதைப் போலவே பரமாத்மன், அனைத்து பிராணிகளிலும் தான்
இருந்து,
உண்டு உண்விக்கிறான். அப்படி இல்லை என்றால், வெறும் பரமாணு ஸ்வரூபனான ஜீவன் அற்புதமான உணவை உண்பது சாத்தியமா? வெறும் அஞ்ஞானிகளான, சிறுவர்களைப் போல இருப்பவர்களே
இப்படி சொல்வார்களே தவிர, ஞானிகளானவர்கள் இதனை எப்போதும்
ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அபசயக3ளில் லுண்டு3து3த3ரி
ந்துபசயக3ளில்ல மரக3ணதொ3ள
கு3பம ரெனிஸுவரில்ல ஜனுமாதி3க3ளு மொத3லில்ல |
அபரிமித ஸன்மஹிம நரஹரி
அபுனராவர்த்தரனு மாடு3வ
க்ருபணவத்ஸல ஸ்வப்ரத3 ஸௌக்2யவனித்து ஷரணரிகெ3 ||52
அபசயகளில்ல = உண்ணாமல் இருப்பதால், பரமாத்மன், சோர்வுடன் இருக்கிறான் என்று அர்த்தமல்ல
உண்டுதுதரிந்த = உண்டதால்
உபசயகளில்ல = உணவை உண்டதால் சக்தி பெற்று வளர்கிறான்
என்றும் அர்த்தமல்ல
அமரகணதொளகெ = தேவதா கணத்தில்
உபமரெனிஸுவரில்ல = இவனுக்கு சமம் என்று ஒப்பிட்டுச்
சொல்வதற்கு யாரும் இல்லை
ஜனுமாதிகளு மொதலில்ல = பிறப்பு, வளர்தல், குறைதல், மரணம் ஆகியவை இவனுக்கு இல்லை
அபரிமித சன்மஹிம = எல்லைகள் இல்லாத மகாமகிமைகளைக்
கொண்ட
க்ருபணவத்ஸல = பக்தனாக இருந்து ஜிதேந்திரியனாக
இல்லாதவன் - க்ருபணன். அத்தகையவர்களிடம் வாத்ஸல்யம் காட்டுவதால், க்ருபணவத்ஸல என்று பெயர்.
அத்தகைய ஸ்ரீஹரி,
ஷரணரிகெ = தன்னை சரணடைந்தவர்களுக்கு
ஸ்வபத சௌக்யவனித்து = தன் உலகத்தில்
ஸ்வரூபானந்தத்தைக் கொடுத்து (முக்தியைக் கொடுத்து)
ஆபுனராவர்த்தனெ = அவர்களுக்கு மறுபடி பூமியில்
பிறப்பு இல்லாதவாறு
மாடுவ = செய்கிறான்.
ஸ்ரீஹரி, அனைவரிலும் இருந்து, தான் உண்டு, அவர்களையும் உண்ண வைக்கிறான் என்று முந்தைய பத்யத்தில் பார்த்தோம். அப்படி
அவன் (ஸ்ரீஹரி) உண்ணவில்லையெனில், சோர்வு அடைந்து, எழ,
உட்கார முடியாதவன் ஆகிவிடுவான் என்று சந்தேகப்படக்கூடாது என்கிறார். அத்தகைய
சந்தேகம் வருபவர்களுக்கு இந்த பத்யத்தில் பதில் அளிக்கிறார் தாசார்யர்.
ஸ்ரீஹரிக்கு போஜனம் செய்யாததால் சோர்வோ, உடல் குன்றிவிடுகிறதோ, பலத்தை இழக்கிறான் என்பதோ இல்லை.
உண்பதால்,
வளர்கிறானா என்றால் அதுவும் இல்லை. சக்தி பெறுகிறான் என்றும் இல்லை. எப்போதும்
ஒரே மாதிரியாகவே இருக்கிறான். தேவதாகணத்தில் இவனுக்கு சமம் என்று சொல்லி, ஒப்புமை கொடுக்க வேறு யாரும் இல்லை. இவனுக்கு பிறப்பு, இறப்பு என்பது இல்லை. இப்படி, எல்லைகள் அற்ற மகாமகிமைகளைக்
கொண்டவன். க்ருபணவத்ஸலனான ஸ்ரீஹரி, தன்னை நம்பியவர்களுக்கு முக்தியைக்
கொடுத்து,
அவர்கள் மறுபடி பிறந்து வராமல் இருக்கச் செய்கிறான்.
பி3த்திபீ4ஜவ பூ4மியொளு நீ
ரெத்தி பெ3ளெஸித3 பெ3ளஸு ப்ராந்தகெ3
கித்தி மெலுவந்த3த3லி லகுமீரமண லோகக3ள |
மத்தெ ஜீவர கர்ம காலோ
த்பத்தி ஸ்தி2தி லய மாடு3தலி ஸம
வர்த்தி எனிஸுவ கே2த மோத3க3ளில்ல த3னவரத ||53
பூமியொளு = பூமியில்
பீஜவபித்தி = விதையை விதைத்து
நீரெத்தி = நீர் ஊற்றி
பெளஸித பெளஸு = வளர்த்த தானியங்கள்
ப்ராந்தகெ = விளைந்த பிறகு
கித்து = இறுதியில் அவற்றை அவனே அறுவடை செய்து
மெலுவந்ததலி = தானே அவற்றை அன்னம் ஆகியவற்றை செய்து
உண்பதைப் போல
லகுமிரமண = ஸ்ரீபரமாத்மன்
லோககள = 14 உலகங்களையும்
மத்தெ ஜீவர = மற்றும் ஜீவர்களையும்
கர்மகால = அவர்களின் கர்மங்கள், காலம் இவற்றை அனுசரித்து
உத்பத்தி = ஸ்ருஷ்டியை
ஸ்திதி = காத்தலையும்
லய = சம்ஹாரத்தையும் (ப்ரளயத்தையும்)
அனவரத = அனைத்து கல்பங்களிலும்
கேத = துக்கமோ
மோதகளில்ல = மகிழ்ச்சியோ, இந்த இரண்டும் இல்லாமல்
சமவர்த்தி = ஜீவர்களில் இருந்து அவர்களின்
யோக்யதைக்கேற்ப பலன்களை சமமாகக் கொடுப்பவன்
எனிஸுவ = என்று சொல்லிக் கொள்கிறான்.
விவசாயம் செய்பவர்கள் பூமியில் விதையை விதைத்து, அவற்றிற்கு சரியான நேரத்திற்கு நீர் ஊற்றி, வளர்த்த தானியங்களைப் பறித்து, அவற்றை தாமே உண்பர். அவர்களுக்கு
விதை விதைக்கையில் மகிழ்ச்சியோ, அவற்றை பறிக்கையில் துக்கமோ
இருப்பதில்லை. அதுபோலவே, பரமாத்மன் உலகத்தில் அனைத்து
ஜீவர்களையும் படைத்து, காப்பாற்றி, இறுதியில் அழிப்பான். இந்த செயல்களால் அவனுக்கு மகிழ்ச்சியும் இல்லை.
துக்கமும் இல்லை. எப்போதும் சமநிலையிலேயே இருக்கிறான் என்று அர்த்தம்.
ஷ்வஸன ருத்3ரேந்த்ர ப்ரமுக ஸும
நஸரொளித்3த3ரு க்ஷுத்பிபாஸவு
வஷதொ3ளிப்புவு ஸகலபோக3கெ ஸாத3னக3ளாகி3 |
அஸுர ப்ரேத பிஷாசிக3ள பா3
தி3ஸுதலிப்புவு தி3னதி3னதி3 மா
நிஸரொளகெ3 ம்ருக3 பக்ஷிஜீவரொளித்து3 போகு3வுவு ||54
ஷ்வஸன = வாயுதேவர்
ருத்ர = ருத்ரதேவர்
இந்திர = இந்திரதேவர்
ப்ரமுக = முதலான
சுமனஸரொளு = தேவதைகளில்
க்ஷுத்பிபாஸவு = பசி, தாகம் ஆகியவை
சகலபோககெ = அவர்களுக்குத் தகுதியான போகங்களுக்கு
சாதனகளாகி = அவற்றைப் பெற்றுத் தருபவர்களாக
ஒஷதொளிப்பவு = அவர்களின் அதினத்தில் இருக்கிறது
அசுர = தைத்யர்கள், தானவர்கள், ராட்சசர்கள் முதலானவர்கள்
ப்ரேத பிஷாசிகள = பேய், பிசாசு இவர்களை
பாதிசுதலிப்புவு = அனைத்து காலங்களிலும் பாதிக்கின்றன
மானிஸரொளகெ = மனிதர்களிலும்
ம்ருக பக்ஷி ஜீவரொளு = மிருகம், பறவை ஆகிய ஜீவர்களிலும்
இத்து போகுவுவு = பசி, தாகம் ஆகியவை ஆகின்றன. அன்னம் உண்டு, நீர் குடித்தால், அவை போய்விடுகின்றன.
வாயுதேவர், ருத்ரதேவர், இந்திரதேவரே முதலான அனைத்து தேவதைகளுக்கும் பசி, தாகம் ஆகியவை இருக்கின்றன. ஆனாலும், அவற்றால் அவர்களுக்கு பிரச்னை
எதுவும் ஏற்படுவதில்லை. அவர்களின் இஷ்டத்திற்கேற்ப அவர்களின் கட்டுப்பாட்டிலேயே
அவை இருக்கின்றன. அதாவது, ஏதாவது உத்தமமான பலனோ, உண்ணக்கூடிய பதார்த்தமோ அவற்றை உண்ண வேண்டும் என்று நினைக்கும்போது, பசிக்கவில்லை எனில், அவற்றை எப்படி உண்பது? அந்த சமயத்தில், தமக்கு வேண்டிய அளவிற்கு மட்டும் பசி உண்டாகிறது. இதைப்போலவே, தமக்கு பானம் செய்யவேண்டும் என்னும் விருப்பம் வந்தால், தாகம் ஏற்படும். வேண்டியதை உண்டு, குடித்து திருப்தி அடைவார்கள்.
இத்தகைய சுக போகத்திற்கு மட்டுமே அவர்களுக்கு பசி, தாகம் ஆகியவை ஆகின்றன என்பது கருத்து.
தைத்யர்கள், தானவர்கள், ராட்சசர்கள், பிரேதங்கள், பிஷாசிகள் இவைகளுக்கு எப்போதும் பாதித்துக் கொண்டே இருக்கும்.
மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் இவற்றிற்கு பசி, தாகம் ஆகிறது. உடனடியாக உணவு உண்டு, தண்ணீர் குடித்தால் அவை பரிகாரம் ஆகிறது.
வாஸுதே3வனு ஸ்வப்ன ஸுப்தி பி
பாசெ க்ஷுத்ப4ய ஷோக மோஹா
யாஸ விஸ்ம்ருதி மாத்ஸர்ய மத3 புண்ய பாபாதி3 |
தோ3ஷ வர்ஜிதனெந்து3 பி3ரம்ம ஸ
தா3ஷிவாதி3 ஸமஸ்த தி3விஜரு
பாஸனெய கை3தெல்லகாலதி3 முக்தராகி3ஹரு ||55
வாசுதேவனு
ஸ்வப்ன ஸுப்தி = கனவு, தூக்கம்
பிபாஸெ = தாகம்
க்ஷுத் = பசி
பய = பயம்
ஷோக, மோஹ, ஆயாஸ,
விஸ்ம்ருதி = மறதி
மாத்ஸர்ய = வயிற்றெரிச்சல்
மத புண்ய பாப,
ஆதி = ஆகியவை
தோஷவர்ஜிதனெந்து = தோஷங்கள் அற்றவன் என்று
பிரம்ம = பிரம்மதேவர்
சதாஷிவாதி = ருத்ரதேவர் முதலான
சமஸ்த திவிஜரு = அனைத்து தேவதைகளும்
எல்லகாலதி = அனைத்து காலங்களிலும்
உபாஸனெயகெய்து = உபாசனையை செய்து
முக்தராகிஹரு = முக்தர்கள் ஆகின்றனர்.
கனவு நிலை, தூக்க நிலை, பசி,
தாகம், பயம்,
சோகம், மோகம், சோர்வு, மறதி,
வயிற்றெரிச்சல், கர்வம், புண்யம், பாவம் - ஆகிய எந்த தோஷங்களும் அற்றவன் வாசுதேவன் என்று அறிந்து, பிரம்ம ருத்ராதி தேவதைகள், அனைத்து காலங்களிலும் உபாசனையை
செய்து,
முக்தியை அடைகின்றனர்.
பரமஸூக்ஷ்ம க்ஷண அயிது3 த்ருடி
கரெஸுவுது3 ஐவத்து த்ருடி லவ
எரடு3 லவக3ளு நிமேஷ நிமிஷக3ளெண்டு மாத்ர யுக3 |
கு3ருத3ஷ ப்ராணாரு ப3ள ஹ
ந்னெரடு3 பா3ணவு க4ளிகெ3 த்ரிம்ஷதி3
இருளு ஹக3லரவத்து க4ளிகெ3க3ளு அஹோராத்ரிக3ளு ||56
பரமசூக்ஷ்ம க்ஷண = க்ஷண என்பது மிகவும் சிறிய
அளவைக் கொண்ட காலமாகும்
ஐது த்ருடி கரெசுவுது = 5 க்ஷண காலம் ஆனால், 1 த்ருடி எனப்படுகிறது
ஐவத்து த்ருடி லவ = 50 த்ருடிகள் ஆனால், அது 1 லவ எனப்படுகிறது
எரடு லவ நிமேஷ = 2 லவ காலம் ஆனால், அது 1 நிமேஷ எனப்படுகிறது
நிமேஷகளெண்டு மாத்ர = 8 நிமேஷங்கள் ஆனால் அது 1 மாத்ர எனப்படுகிறது
மாத்ர யுககுரு = 2 மாத்ரங்கள் ஆனால் அது 1 குருகாலம் எனப்படுகிறது
குருதஷ ப்ராண = 10 குருகாலங்கள் ஆனால் அது 1 ப்ராண காலம் எனப்படுகிறது
ப்ராணாரு பளவு = 6 ப்ராண காலங்கள் ஆனால் அது 1 பள காலம் எனப்படுகிறது
பள ஹன்னெரடு பாணவுகளிகெ = 12*5 = 60 பளங்கள், 1 கடிகை (நாழிகை) எனப்படுகிறது.
களிகெ த்ரிம்ஷதி இருளு ஹகலு = 30 நாழிகைகள் என்பது 1 இரவு அல்லது 1 பகல்
அரவத்து களிகெகளு அஹோராத்ரிகளு = 60 நாழிகைகள் என்பது ஒரு நாள் (இரவும் பகலும் சேர்ந்த ஒரு நாள்).
ஈ தி3வாராத்ரிக3 ளெரடு3 ஹதி3
நைது3 பக்ஷக3ளெரடு3 மாஸக3
ளாத3பவு மாஸத்4வய ருது ருதுத்ரயக3ளயன |
ஐது3வவு அயனத்3வயாப்த4 க்ரு
தாதி3 யுக3க3ளு தே3வமானதி3
த்3வாத3ஷ ஸஹஸ்ர வருஷக3ளஹவத3னு பேளுவேனு ||57
ஈ திவாராத்ரிகளெரடு = மேற்கூறியவாறு பகல், இரவுகள் இரண்டும்
ஹதினைது பக்ஷ = 15 நாட்கள் ஆனால் அது ஒரு பட்சம் எனப்படுகிறது
பக்ஷகளெரடு மாசகளாதபவு = 2 பட்சங்கள் சேர்ந்தது ஒரு மாதம் எனப்படுகிறது
மாசத்வய ருது = இரு மாதங்கள் சேர்ந்தது 1 ருது எனப்படுகிறது
ருதுத்ரயகளயன = மூன்று ருதுக்கள் சேர்ந்தது 1 அயனம் எனப்படுகிறது
அயனத்வயவு = 2 அயனங்கள்
அப்த ஐதுவரு = 1 ஆண்டு எனப்படுகிறது
க்ருதாதியுககளு = க்ருத, த்ரேதா, த்வாபர, கலி முதலான 4 யுகங்கள் ஆகவேண்டுமெனில்
தேவமானதி = தேவமான காலத்தின்படி
த்வாதஷ சஹஸ்ர வருஷகளஹவு = 12,000 ஆண்டுகள் ஆகின்றன
அதனு பேளுவேனு = தேவமான ஆண்டுகளின் லட்சணத்தையும், ஒவ்வொரு யுகத்தின் காலத்தையும் விவரமாக சொல்கிறேன்.
சதுர ஸாவிரதெ3ண்டு நூரிவு
க்ருதயுக3கெ3 த்ரிஸஹஸ்ர ஸலே ஷட்
ஷத3வு த்ரேதெகெ3 த்3வாபரகெ த்3விஸஹஸ்ரனானூரு |
தி3திஜபதி கலியுக3க்கெ ஸாவிர
ஷதக3ளத்3வய கூடி3 ஈ தே3
வதெக3ளிகெ3 ஹன்னெரடு ஸாவிரவஹவு வருஷக3ளு ||58
சதுர சாவிரதெண்டு நூரு = 4,800 தேவ ஆண்டுகள்
அவு க்ருதயுகக்கெ = க்ருதயுகத்திற்கு இந்த
எண்ணிக்கையுள்ள ஆண்டுகள் ஆகின்றன என்று அர்த்தம்
த்ரேதெகெ = த்ரேதா யுகத்திற்கு
த்ரிஸஹஸ்ர சலெஷட் = 3600 தேவ ஆண்டுகள்
த்வாபரக்கெ = த்வாபர யுகத்திற்கு
த்விசஹஸ்ரனானூரு = 2400 தேவ ஆண்டுகள்
திதிஜபதி கலியுககெ = தைத்யராஜனான கலியுகத்திற்கு
ஸாவிர ஷதகளத்வய = 1200 தேவ ஆண்டுகள்
கூடி = இந்த அனைத்து ஆண்டுகளையும் ஒன்று கூட்டினால்
தேவதெகளிகெ = தேவமானத்தினால்
ஹன்னெரடு சாவிரவஹவு வருஷகளு = 12000 தேவ ஆண்டுகள் ஆகின்றன.
ப்ரத2மயுக3 கேளதிக3 அரெ விம்
ஷதி ஸுலக்ஷாஷ் டோத்தரத3 விம்
ஷதி ஸஹஸ்ர மனுஷ்யமானாப்3த3க3ளு ஷண்ணவதி
மிதஸஹஸ்ரத3 லக்ஷத்3வாத3ஷ
த்3விதிய த்ருதியகெ3 எண்டுலக்ஷத3
சது: ஸஷ்டிஸஹஸ்ர கலிகி3த3ரர்த்த சிந்திபுது3 ||59
ப்ரதம யுககெ = க்ருத யுகத்திற்கு
ஏளதிகவரெவிம்ஷதி லக்ஷ = 7+ 20ல் பாதி=10 = 17 லட்சம் என்று அர்த்தம்
அஷ்டோத்தர மேலே விம்ஷதி சஹஸ்ர = 8 + 20,000 =
28,000.
மனுஷ்யமானாப்தகளு = மனுஷ்யமானத்தின்படி ஆண்டுகள் 17,28,000 என்று அர்த்தம்.
த்விதிய = இரண்டாம் த்ரேதாயுகத்திற்கு
லக்ஷத்வாதஷ = 12 லட்சத்து
ஷண்ணவதி மித சஹஸ்ர = 96,000; மொத்தம் 12,96,000 ஆண்டுகள்
த்ருதியகெ = மூன்றாவது த்வாபர யுகத்திற்கு
எண்டு லட்சத சது: சஷ்டிசஹஸ்ர = 8,64,000
கலிகெ = கலியுகத்திற்கு
இததர்த்த = 4,32,000
சிந்திபுது = என்று சிந்திக்க வேண்டும்.
மேற்கண்ட 56ம் பத்யத்திலிருந்து துவங்கி இந்த
பத்யம் வரைக்குமான அர்த்தத்தை மறுபடி இங்கு துவக்கி விளக்கினால், கிரந்தம் பெரிதாகிவிடும் என்பதால், அதை செய்யவில்லை. ஆனால், க்ஷண காலம் துவங்கி, தின காலம் வரைக்கும் சொல்லப்பட்ட
துடி, லவ முதலான காலங்களை, ஒவ்வொரு புராணங்களில் ஒவ்வொரு
விதமாக சொல்லியிருக்கின்றனர். ஒரு நாளுக்கு 60 நாழிகைகள் என்று சொல்லும்போது, அனைத்து எண்ணிக்கைகளும் சரியாகப்
பொருந்தி விடுகின்றன.
தாசார்யர் இங்கு சொல்லியிருக்கும் எண்ணிக்கைகள், விஷ்ணு ரஹஸ்ய கிரந்தத்தின்படி சொல்லியிருக்கிறார். அந்த மூலத்தை அனுசரித்து, இந்த பத்ய அர்த்தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. விஷ்ணு ரஹஸ்ய ஸ்லோகங்கள்:
அதிஸூக்ஷ்மஸ்துய: கால: ஸக்ஷண: பரிகீர்த்தித: ||
க்ஷணா: பஞ்சத்ருடி: ப்ரோக்தா பஞ்சாஷத்தாலவ: ஸ்ம்ருத:
||
லவத்வயம் நிமேஷ: ஸ்யான்மாத்ராஸ்யாத் அஷ்டபிஸ்சதை: ||
யஞ்ஞாயம் வததே ஜாஷோ மாத்ரயேர் த்விதயம் குரு: ||
குரூணாம் தஷகம் ப்ராண: ப்ராணஷட்கம்பளம் பவேத் ||
பளஷஷ்டிர் கடீ ப்ரோக்தா தா:ஷஷ்டிர் தினமுச்யதே ||
இத்யாதி வாக்கியங்கள் மேற்சொன்ன பத்யங்களுக்கு
ஆதாரமாகும்.
தேவமான கணக்கின்படி, 12,000 ஆண்டுகள் ஆனால் அதுவே ஒரு மஹாயுகம் எனப்படும். மஹாயுகம் என்றால் க்ருத, த்ரேதா, த்வாபர, கலி ஆகிய நான்கும் சேர்ந்ததாகும்.
க்ருதம் த்ரேதா த்வாபரஸ்ச கலிஸ்சேதி சதுர்யுகம் |
திவ்யை:த்வாதஷ ஸாஹஸ்ரைஸ் ஸாவதானம் நிரூபிதம் ||
என்னும் பாகவத 3ம் ஸ்கந்தம் வாக்கியம் இருக்கிறது. ஒவ்வொரு யுகத்திற்கும் எவ்வளவு ஆண்டுகள்
என்று பத்யார்த்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 4,800 + 3,600 + 2,400 + 1,200 என மொத்தம் 12,000 ஆண்டுகள் ஆகின்றன. இவை தேவமானத்தின்படி என்று அறியவேண்டும்.
தேவமான என்றால் என்ன? மனுஷ்யமானத்தின்படி ஒரு ஆண்டு என்றால், அது தேவமானத்தின்படி ஒரு நாள் ஆகிறது. உத்தராயணம் பகல்; தக்ஷிணாயனம் இரவு என்று அறியவேண்டும். அதாவது மனுஷ்ய மானத்தின்படி 360 ஆண்டுகள் ஆனால், தேவமானத்தின்படி அதுவே 1 ஆண்டு. இதற்கு தேவமான ஆண்டு என்று
பெயர்.
மேற்கூறிய தேவமான எண்ணிக்கையை 360ஆல் பெருக்கினால், மனுஷ்யமான ஆண்டுகள் வரும். க்ருத யுகத்தின் ஆண்டுகள் தேவமானத்தின்படி 4,800 ஆண்டுகள். இதை 360ல் பெருக்கினால், 4,800 * 360 = 17,28,000 ஆண்டுகள் என வருகின்றது.
இதைப்போலவே அனைத்து யுகங்களின் மனுஷ்யமான ஆண்டுகளையும் பார்த்துக் கொள்ளலாம்.
மூரதி4க நால்வத்து லக்ஷத3
ஆருமூரெரட3தி4க ஸாவிர
ஈரெரடு3யுக3 வருஷ ஸங்க்2யெய கை3யலினிதிஹுது3 |
ஸாரி பெச்சிஸெ ஸாவிரத3 நா
ந்னூரு மூவத்தெரடு3 கோடி ஸ
ரோருஹாஸனகிது3 தி3வஸவெம்ப3ரு விபஸ்சிதரு ||60
மூரதிக நால்வத்து லக்ஷதி = 3+40 = 43 லட்சம்
ஆருமூரெரடதிக சாவிர = ((6*3)+2)*1000 = 20,000 மொத்தம் 43,20,000
ஈரெரடுயுக = 4 யுகங்கள் ஆகின்றன
வர்ஷ சங்க்யெய கெயெ = இதுவே நான்கு யுகங்களின்
எண்ணிக்கை ஆகும் (43,20,000)
சாவிரத பெச்சிஸெ = 1,000த்தால் பெருக்கினால் (4320000 * 1000 = 4320000000
நானூரு மூவத்தெரடு கோடி = அதுவே 432 கோடி ஆகின்றன
விபஸ்சிதரு = ஞானிகள்
இது = இந்த எண்ணிக்கை
ஸரோருஹாஸனகெ = பிரம்ம தேவருக்கு
திவஸவெம்பரு = பகல் என்பார்கள்
நான்கு யுகங்களின் ஆண்டு எண்ணிக்கை மொத்தம் 43,20,000 ஆண்டுகள். ‘சதுர்யுக சஹஸ்ராணி பிரம்மணோ தினமுச்யதே’ என்னும் பிரமாணத்தினால், 4 யுகங்கள் ஓராயிரம் வரை தொடர்ந்து
வந்தால்,
அதுவே பிரம்மதேவருக்கு ஒரு பகல் எனப்படுகிறது. மறுபடி அவ்வளவு ஆனால், ஒரு இரவு ஆகிறது.
ஆக 4 யுகங்களும் 1,000 முறை திரும்பத் திரும்ப வந்தால், பிரம்மதேவருக்கு அது ஒரு பகல்
என்றாகிறது. பிரம்மதேவரின் நாள் ஒன்றிற்கு மனுஷ்யமான ஆண்டுகள் எவ்வளவு என்றால்: 43,20,000 * 1,000 =
4320000000. இது 432 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டுகளே பிரம்மதேவருக்கு ஒரு பகல் என்று
அர்த்தம்.
ஷதத்3ருதிய ஈ தி3வஸக3ள த்ரிம்
ஷதியு மாஸ த்3வாத3ஷாப்த3வு
ஷதவெரட3ரொளு ஸர்வஜீவோத்பத்தி ஸ்தி2தி லயவு |
ஸ்ருதியுஸ்ம்ருதியு பேளுதி3ஹவ
ச்யுதகெ3 நிமேஷவிதெந்து3 ஸுக2ஷா
ஷ்வதகெ பாஸடி எம்ப3ரெ பி3ரம்மாதி3 தி3விஜரன ||61
ஷதத்ருதிகெ = பிரம்மதேவருக்கு
ஈ திவஸகள = மேற்கூறிய 432 கோடி ஆண்டுகள் கொண்ட ஒரு நாளின்
த்ரிம்ஷதியு மாஸ = 30ல் பெருக்கினால் அதுவே ஒரு மாதம்
த்வாதஷாப்தவு = அதை 12ல் பெருக்கினால் அதுவே ஒரு ஆண்டு
ஷதவெரடரொளு = 200 ஆண்டுகளில்
சர்வஜீவோத்பத்தி = அனைத்து ஜீவர்களின் உற்பத்தி
ஸ்திதி = காத்தல்
லயவு = அழித்தல், ப்ரளயம் ஆகியவை ஆகின்றன.
அச்யுதகெ = நாசம் இல்லாதவனான ஸ்ரீஹரிக்கு
இது = பிரம்மதேவரின் ஆயுளான ஆண்டுகள், ஒரு நிமிடத்திற்கு சமானம் என்று
ஸ்ருதியுஸ்ம்ருதியு பேளுதிஹவு = ஸ்ருதி, ஸ்ம்ருதிகள் சொல்கின்றன
ஸுகஷாஷ்வதகெ = சுகஸ்வரூபமான பரமாத்மனுக்கு
பிரம்மாதிதிவிஜரனு = பிரம்ம முதலான தேவதைகளை
பாசடி எம்பரெ = சோர்வுற்றிருக்கிறான் என்று சொல்ல
முடியுமா?
(இல்லை என்று அர்த்தம்)
பிரம்மதேவருக்கு மேற்கூறிய எண்ணிக்கையிலான நாட்கள் 30 ஆனால் ஒரு மாதம். 12 மாதங்களுக்கு 1 ஆண்டு. இத்தகைய ஆண்டுகள் 100, பிரம்மதேவருக்கு ஆயுட்காலம் என்று
அர்த்தம். இந்த பிரம்ம ஆயுளில், அதாவது பிரம்மதேவரின் 100 ஆண்டுகளில், ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய ஆகின்றன.
பிரம்மமான ஆண்டுகள் 100. அதன்பிறகு, பிரம்மகல்பம் முடிந்து மஹாபிரளயம் ஆகின்றது. அதன் காலம் 100 ஆண்டுகள். மொத்தம் 200 ஆண்டுகளுக்கு ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரளயம் ஆகிறது. பரமாத்மனுக்கு பிரம்ம கல்பம் ஒரு ஆண்டு என்று ஸ்ருதி, ஸ்ம்ருதிகள் சொல்கின்றன. இத்தகைய மஹா மகிமையுள்ள பரமாத்மனுக்கு சமமானவர் என்று
பிரம்மாதிகளையும் சொல்லமுடியாது என்பது கருத்து.
ஆதி3மத்4யாந்தக3ளு இல்லத3
மாத4வகி3 து3பசாரவெந்து3 ரு
கா3தி3 வேத3புராணக3ளு பேளுவுவு நித்யத3லி |
மோத3மயன அனுக்3ரஹவ ஸ
ம்பாதி4ஸி ரமா பி3ரம்ம ருத்3ரே
ந்த்3ராதி3க3ளு தமதம்ம பத3வியனைதி3 ஸுகி2ஸுவரு ||62
ஆதிமத்யாந்தகளு = ஆதி, மத்ய,
அந்த்யங்கள் (+பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவை)
இல்லத மாதவகெ = இல்லாத லட்சுமிபதியான
ஸ்ரீபரமாத்மனுக்கு
இது = பிரம்ம கல்பத்தை 1 நிமிடம் என்று சொல்வது
உபசாரவெந்து = வெறும் உபசாரம் என்று
ருகாதி வேதபுராணகளு = ருகாதி வேதங்கள், பாகவதாதி புராணங்கள்
நித்யதலி = எல்லா காலங்களிலும்
பேளுவுவு = சொல்கின்றன
மோதமயன = ஆனந்த ஸ்வரூபனான ஸ்ரீஹரியின்
அனுக்ரஹவ = அருளை
சம்பாதிஸி = பெற்று
ரமா பிரம்ம ருத்ரேந்திராதிகளு = ரமா, பிரம்ம, ருத்ர, இந்திர முதலான தேவதைகள்
தமதம்ம = தத்தம்
பதவியனைதி = பதவிகளைப் பெற்று
சுகிசுவரு = சுகப்படுவார்கள்.
ஸ்ரீபரமாத்மன் சில காலங்களுக்கு முன்னர்
இருக்கவில்லை. அதன் பிறகு அவன் பிறந்தான், இத்தகைய ஆதி இல்லை. பிறந்து, தினம்தினம் வளர்ந்து பெரியவனானான்
என்னும் வளர்ச்சியும் இல்லை. அவனுக்கு வயதாகிவிட்டது. மரணத்தை அடைந்தான் என்பதும்
இல்லை. அனாதி காலத்திலிருந்தும் அவன் இருந்தே இருக்கிறான். ஜீவர்களும் அனாதியாக
இருந்தே இருக்கின்றனர்.
ஜீவனுக்கு, சரீரம் கிடைத்தால் பிறந்தான்
என்றும்,
அது வளர்ந்தது என்றும், சரீரத்தை விட்டதால் இறந்தான்
என்றும் சொல்வது உண்டு. ஆனால், பரமாத்மனுக்கு இந்த மாதிரியான சரீர
சம்பந்தம் இல்லை.
இத்தகைய பரமாத்மனுக்கு நிமிஷ காலம் என்று கூறுகிறார்.
‘நிமேஷ உபசர்யதெ’ நிமிடம் என்று பிரம்மகல்பத்தை ஒரு குறியீடாக ஆக்கிக் கொண்டானே தவிர, 30 நிமிடமானால், 2.5 நாழிகை என்னும்படியான கணக்குகள், பரமாத்மனுக்கு பிரளயத்தை
செய்வதற்கும், ஸ்ருஷ்டி செய்வதற்குமான ஒரு கால நிர்ணயம் ஆக வேண்டியிருப்பதால், நிமிஷ காலத்தை, பிரம்ம கல்பத்திற்குக் குறியீடாக வைத்துக் கொண்டான்.
ஆகையால், இந்த ஆயுள்மானங்கள் சொன்னார்
என்பது கருத்து. இப்படியாக ரிக்வேத முதலான வேதங்களிலும், பாகவதாதி புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. நித்யானந்த ஸ்வரூபனான
ஸ்ரீபரமாத்மனின் அருளைப் பெற்று, ரமா பிரம்மாதி தேவதைகள், தத்தம் பதவியைப் பெற்று, சுகப்படுகின்றனர்.
ஈ கதா2ம்ருத பானஸுக2 ஸுவி
வேகிக3ளிக3ல்லத3லெ விஷயிக3
வ்யாகுல குசித்தரிகெ3 தொ3ரெவுதெ3 ஆவகாலத3லி |
லோகவார்த்தெய பி3ட்டு இத3னவ
லோகிஸுத மோதி3பரிகொ3லிது3 க்ரு
பாகர ஜக3ன்னாத2விட்ட2ல காய்வ கருணத3லி ||63
ஈ கதாம்ருதபான சுக = இந்த பகவத்கதை என்னும்
அமிர்தத்தைக் குடிக்கும் சுகமானது
சுவிவேகிகளிகல்லதலெ = உத்தமரான விவேகிகளுக்கு அல்ல
விஷயிக = விஷய சுகங்களை விரும்புபவர்களாக
வியாகுல குசித்தரிகெ = துக்கப்படும் நீச புத்தி
உள்ளவர்களுக்கு
தொரெவுதெ = கிடைக்குமா?
ஆவகாலதலி = எந்த காலத்திலும்?
லோகவார்த்தெய பிட்டு = லௌகிக அரட்டையை விட்டு
இதனு = இந்த கிரந்தத்தை
அவலோகிஸுத = பார்த்து
மோதிபரிகெ = மகிழ்ச்சி அடைபவர்களுக்கு
க்ருபாகர = கருணாளுவான
ஜகன்னாதவிட்டல = ஜகன்னாதவிட்டலன்
ஒலிது = தரிசனம் அளித்து
கருணதலி = கருணையுடன்
காய்வ = காப்பான்
இந்த கதாம்ருதத்தின் பானத்தின் சுவையை மஹா விவேகிகளும், ஞானிகளுமான, பகவத் பக்தர்களுக்கு மட்டும் தெரியுமே தவிர, வெறும் விஷய சுகங்களில் ஈடுபட்டு, அனைத்து காலங்களிலும் துக்கப்பட்டு
காலத்தைக் கழித்து வரும் நீச புத்தி உள்ளவர்களுக்கு, இந்த சுவை தெரியுமா? தெரியாது. வீண் அரட்டையை விட்டு, இந்த கிரந்தத்தைப் படித்து, மகிழ்ச்சி அடைபவர்களுக்கு, க்ருபாளுவான ஸ்ரீஜகன்னாதவிட்டலன், தரிசனம் அளித்து, எப்போதும் அவர்களைக் காப்பான்.
கல்பசாதன சந்தி என்னும் 23ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிந்தது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment