ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
முந்தைய தத்த ஸ்வாதந்த்ர மற்றும் ஸ்வகத ஸ்வாதந்த்ர்ய
என்னும் இரு சந்திகளில், சர்வஸ்வதந்த்ரனான பரமாத்மன் தன்
ஸ்வாதந்த்ர்யத்தை பிரித்து, பிரம்மாதிகளுக்குக் கொடுத்து தான்
அவர்களில் இருந்து, செயல்களை செய்வித்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
பலன்களைக் கொடுக்கிறான் என்று சொல்லியிருந்தார். பரமாத்மன் ஸ்வதந்த்ரன். ஜீவன்
பரதந்த்ரன் என்னும் ஞானம் முக்திக்கு மிகவும் அவசியம் ஆகையால், விஷ்ணு ரஹஸ்யத்தின் 21 மற்றும் 30ம் அத்தியாயங்களில் விசேஷமாகவும், மற்றும் சில அத்தியாயங்களில்
சிறிது சிறிதாகவும் சொல்லியிருப்பார்கள். ‘புன:புன: கதாம் ப்ரூய: அப்யாஸாதுத்தமம் பலம்’ என்னும் வாக்கியத்திற்கேற்ப கதையை திரும்பத்திரும்ப கேட்பதால், அதுவே மனப்பாடமாகி, பலன்கள் அதிகமாகும் என்பதே இதன்
நோக்கம்.
ஆகவே, தாசராயர், விஷ்ணு ரஹஸ்யாதிகளின் ஆதாரத்தின் பேரில், முந்தைய இரு சந்திகளில் கூறிய விஷயங்களையே இங்கு விவரிக்கிறார். ‘ஆவ்ருத்தி ரஸக்ருதுபதேஷாத்’ என்னும் சூத்திர
வாக்கியத்திற்கேற்ப, 2,3 முறையாக உபதேசம் செய்யும் குருசிஷ்ய பரம்பரை முறை இருப்பதாலும், இது உபதேசத்திற்கு யோக்யமான விஷயம் என்பதாலும், இந்த விஷயத்தை மூன்று சந்திகளில் விளக்கியிருக்கிறார் என்று அறியவேண்டும்.
சந்திகள் சொல்லப்பட்டிருக்கும் முறையில், ஸ்ரீகமலாபதி தாசர் செய்திருக்கும் வியாக்கியானம், பாலபோதாக்ஷரம் அச்சிட்டிருக்கும் புத்தகத்தில், தத்த ஸ்வாதந்த்ர சந்தி 17வதும், ஸ்வகத ஸ்வாதந்த்ர்ய சந்தி 29வதும், க்ரீடாவிலாஸ சந்தி (சர்வ ஸ்வாதந்த்ர்ய சந்தி) 26வதாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி எடுத்துக் கொள்வதில் என்ன
பிரச்னை என்றால்: ஒரு முறை கேட்ட தத்த ஸ்வாதந்த்ர்ய விஷயத்தை இன்னொரு முறை
கேட்கவேண்டுமெனில், 10 சந்தியை விட்டு கேட்க வேண்டியிருக்கிறது. அதனால், முன்னர் படித்தது நினைவில் வராமல் போகலாம்.
இதே விஷயத்தை விஷ்ணு ரஹஸ்யத்தில் மூன்று இடங்களில்
சொல்லியிருப்பார்கள். ஆனால், அதையும் தொடர்ச்சியாக சொல்லவில்லை.
12ம் அத்தியாயத்தில் ஒரு முறை, 21ம் அத்தியாயத்தில் ஒரு முறை; 30ம் அத்தியாயத்தில் தத்த ஸ்வாதந்த்ர்ய விஷயத்தை சொல்லியிருப்பார்கள். பாகவத
பாரதாதிகளிலும்கூட ஒரே கதையை 3-4 முறை சொல்லியிருப்பார்கள்.
பாகவதத்தில் ஸ்ருஷ்டி ப்ரகரணத்தை 2ம் ஸ்கந்தத்தில் ஒரு முறை, 3ம் ஸ்கந்தத்தில் ஒரு முறை சொல்லியிருக்கிறார்கள்.
வர்ணாசிரம தர்மத்தை 7ம் ஸ்கந்தத்தில் ஒரு முறை, 11ம் ஸ்கந்தத்தில் ஒரு முறை
சொல்லியிருக்கிறார்கள். இதைப்போல, பாரத, ராமாயண முதலான அனைத்து கிரந்தங்களிலும் இத்தகைய சந்தர்ப்பங்கள் வருகிறது. ஒரு
கதையை,
ஒரே இடத்தில், 2-3 முறை சொல்வது என்பது எந்த கிரந்தத்திலும் காணப்படவில்லை. அதன்படியே, தாசராயரும்கூட 17-26-29 சந்திகளில் தத்த ஸ்வாதந்த்ர்ய விஷயத்தை சொல்லியிருக்கிறார் என்றால் அது சம்பிரதாயத்திற்கு
சரியாகவே பொருந்துகிறது.
ஸ்ரீனிவாஸன சரிதெக3ள பர
மானுராக3தி3 பெ3ஸகொ3ளலுமுனி
ஷௌனகாத்3யரிக3ருபித3னு ஸூதார்ய த3யதி3ந்த3 ||
ஸ்ரீனிவாஸன = லட்சுமிதேவியை தன் மார்பில்
வைத்திருக்கும் பரமாத்மனின்
சரிதெகள = கதைகளை
பரமானுராகதி = பரம பக்தியினால்
பெஸகொளலு = சொல்ல வேண்டுமென்று கேட்க
ஸூதார்ய = சூத புராணிகர்
தயதிந்த = கருணையுடன்
ஷௌனகாத்யரிகெ = ஷௌனகாதி முனிவர்களுக்கு
அருபிதனு = கூறினார்.
ஸூத புராணிகர் ஷௌனகாதி ரிஷிகளுக்கு சொல்லியிருக்கும்
விஷ்ணு ரஹஸ்யத்தில் இருக்கும் விஷயத்தையே இந்த சந்தியில் சொல்லியிருக்கிறோம் என்று
இந்த அர்த்த- பத்யத்தில் சொல்லியிருக்கிறார். ஆகையால், இந்த பத்யத்திற்கு சந்தி ஸூசனை என்று பெயர்.
பசன ப4க்ஷண க3மன போ4ஜன
வசன மைது2ன ஷயன வீக்ஷண
அசலன சலனக3ள ப்ரயத்னவு ஸாத்3யவெ ஜனகெ |
ஷுசிஸத3ன த3யதி3ந்த3 ஜீவர
நிசயதொ3ளு தானிந்து1 மாடு3வ
உசிதவனுசித கர்மக3ளனெந்த3ரிது3 கொண்டா3டு3 ||1
பசன = சமைப்பது
பக்ஷண = தின்பது
கமன = பயணம் செய்வது
போஜன = உண்ணுவது
வசன = பேசுவது
மைதுன = பெண்களுடன் சங்கமிப்பது
ஷயன = தூங்குவது
வீக்ஷண = பார்ப்பது
அசலன = அசையாமல் இருப்பது
சலன = அசைவது, இவற்றை செய்வது
ஜனகெ = மக்களுக்கு
சாத்யவெ = சாத்தியமா? இல்லை
ஷுசிஸதன = முக்யபிராணாந்தர்யாமியான ஸ்ரீபரமாத்மனின்
தயதிந்த = கருணையால்
ஜீவர நிசயதொளு = ஜீவர்களின் சங்கத்தில்
தானிந்து = தான் இருந்து
உசித = செய்யவேண்டிய கர்மங்கள்
அனுசித = செய்யக்கூடாத கர்மங்கள்
மாடுவ = செய்கிறான்
எந்தரிது = என்று அறிந்து
கொண்டாடு = துதித்திரு.
பரமாத்மனின் அருள் இல்லாமல், ஜீவர்களுக்கு ஒரு புல்லைக்கூட அசைக்கும் சக்தி இருப்பதில்லை. விஷ்ணு ரஹஸ்ய 21ம் அத்தியாயத்தில்:
பசனங்கமனம் பக்ஷ்யம் புக்திரித்யாதி கர்மஸு ||17
த்ருஷ்யதேயதன்ன ஸாத்யத்வம் தைவம் தத்ராபி சிந்தயேத் ||
பதார்த்தங்களை சமைப்பது, பயணம் செய்வது, தின்பது, அனுபவிப்பது ஆகிய கர்மங்களில் பிராணிகளின் முயற்சி தெரிகிறது. ஆனால் அது
உண்மையல்ல. அவை அனைத்தும் தெய்வ சங்கல்பத்தினாலேயே ஆகிறது என்று அறியவேண்டும் -
என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் 12ம் அத்தியாயத்தில்:
ஸர்வவஸ்துஷு யாஷக்தி: ஸாமதீயைனான்யதா ||
மயைவதத்தம் ஸ்வாதந்த்ரம் கேவலேஷ்வபி ஸர்வஸு ||
தாவன்மாத்ரேண ஸம்யுக்த: ஸ்வாதந்த்ர்யம் மன்யதேனிஜம் ||22
ஸ்வாதந்த்ர்யேப ஹ்ருதேபஷ்சா ஜானந்தி பரதந்த்ர்யதாம் ||
ஞானினோபிஹிமன்யந்தெ மன்மாயா முஷ்டசேதனா: ||23
ஸ்வாதந்த்ர்யம் ஸ்வஷரீராதௌகி முஞ்ஞானவிவர்ஜிதா: ||
த்வாமாரப்ய த்ருணம் யாவஜ்ஜகத்ஸ்தாவர ஜங்கமம் ||24
மமஷக்திம்வினா ப்ரம்மஸ்வந்திதும் நைவஷக்யதே ||
ஹயக்ரீவ தேவர், பிரம்மதேவருக்கு உபதேசம் செய்தது:
ஹே பிரம்மனே. அனைத்து பிராணிகளிலும் எந்த சக்தி
இருக்கிறதோ, அவை அனைத்தும் என் சக்தி என்று அறி. எந்த வேலை செய்வதற்கும் தகுதியற்ற
பிராணிகளுக்கும், நான் ஸ்வாதந்த்ர்யத்தைக் கொடுத்து கர்மங்களை செய்விக்கிறேன். மக்கள் அவற்றை
அறியாமல்,
தாமே ஸ்வதந்த்ரமாக காரியங்களை செய்வதாக அறிந்திருக்கின்றனர். தாம்
ஸ்வதந்த்ரனாக காரியத்தைத் துவக்கி, அதனை முடிக்க முடியாமல் போனால், அப்போதே அவர்கள் பரதந்த்ரர் என்று அறிகின்றனர்.
எத்தகைய ஞானிகளும்கூட காரியங்களை செய்யும்போது, என் மாயையால் மயங்கி, தாம் ஸ்வதந்த்ரர் என்று
அறிகின்றனர். இப்படி இருக்கையில், இன்னும் அஞ்ஞானிகள் நிலைதான் என்ன? பிரம்மனே! உன்னில் துவங்கி, கிருமி ஜீவர்கள் வரை, ஸ்தாவர ஜங்கமங்கள் நிறைந்த இந்த உலகத்தில், என் சக்தியைத் தவிர வேறு யாருக்கும் எந்த சக்தியும் இல்லை என்று அறி --
என்கிறார்.
அந்த அபிப்பிராயத்தையே இந்த பத்யத்தில் சொல்கிறார்.
பதார்த்தங்களை சமைக்கும்போது, கடித்துத் தின்னும்போது, பயணம் செய்யும்போது, உண்ணும்போது, பேசும்போது, ஸ்த்ரீயாதி போகங்களை அனுபவிக்கும்போது, பார்க்கும்போது, என அனைத்து விஷயங்களிலும், நான் தின்றேன், நான் நடந்தேன். நான் படுத்தேன் என்று மக்கள் ஸ்வதந்த்ர பாவத்தைக்
கொண்டிருக்கிறார்கள். அல்பரான ஜீவருக்கு இந்த முயற்சி சாத்தியமா? பரமாத்மனான நான் அவர்களில் இருந்து, செய்வதை அறியாமல், தாமே செய்கிறோம் என்ற மயக்கத்தில் இருக்கின்றனர்.
ஷுசிஸதன = வாயுதேவருக்கு ஷுசி என்று பெயர். அவரின்
மனெ என்றால், வாயுதேவரின் அந்தர்யாமியாகி இருக்கும் என்று பொருள். இத்தகைய பரமாத்மன்
அனைவரிலும் கருணையுடன் இருந்து, அனைத்து புண்ய பாபாதி கர்மங்களை
செய்து செய்விக்கிறான் என்று அறிந்து பரமாத்மனை துதிக்க வேண்டும் என்பது கருத்து.
விஷ்டரஸ்ரவ தே3ஹதொ3ளகெ3 ப்ர
விஷ்டனாகி3 நிரந்தரதி3 ப3ஹு
சேஷ்டக3ள மாடு3திரெ கண்டு3 ஸஜீவி எனுதிஹரு |
ஹ்ருஷ்டராகு3வர வனனோடி3 க
நிஷ்டரெல்லரு ஸேவெமாள்பரு
பி3ட்ட க்ஷணத3லி கு3ணபவெந்த3ரித3த3னு பேக்ஷிபரு ||2
விஷ்டரஸ்ரவ = விஷ்டர = வியாபித்திருக்கும்; ஸ்ரவ = கீர்த்தியுள்ள
தேஹதொளகெ = தேகத்தில்
ப்ரவிஷ்டனாகி நிரந்தரதி = ஸ்தூலதேகத்தில் நிரந்தரமாக
நுழைந்து
பஹுசேஷ்டெகள = பல விதமான கர்மங்களை
மாடுதிரெ = செய்கிறான்
கண்டு = மக்கள் அதனைக் கண்டு
சுஜீவி = உயிர் உள்ளவன்
எனுதிஹரு = என்பார்கள்
அவர நோடி = உயிர் பிழைத்திருக்கும் மக்களைப் பார்த்து
கனிஷ்டரெல்லரு = அவர்களின் கீழ் இருக்கும் மனைவி, மக்கள், சேவகர்கள் அனைவரும்
ஹ்ருஷ்டராகுவர = மகிழ்ச்சியடைவர்
ஸேவெமாள்பரு = சேவை செய்வார்கள்
பிட்ட க்ஷணதலி = பரமாத்மன் தேகத்தை விட்ட அந்த
நொடியில்
குணபனெந்தரிது = பிணம் என்று அறிந்து
உபேக்ஷிபரு = புறக்கணிக்கப்படுவார்கள்.
ஸ்ரீபரமாத்மன் அனைவரின் தேகங்களிலும் இருந்து, பற்பல கர்மங்களை செய்தால், இவன் பாக்யவந்தன், அறிஞன் என்று மனைவி, மக்கள், சேவகர்கள் ஆகியோர், மரியாதையுடன் உபசரிப்பார்கள்.
எப்போது பரமாத்மன் இவன் தேகத்தை விட்டுவிடுகிறானோ, அப்போதே இவன் பிணம் என்று அறிந்து மனைவி மக்கள்கூட இவனை பார்ப்பதற்கே
பயப்படுவர். ஆகையால், பரமாத்மன் ஒருவனே ஸ்வதந்த்ரன். ஜீவர்கள் அல்ல என்பது கருத்து.
க்ரீடெ3கோ3ஸுக2 அவரவர க3தி
நீட3லோஸுக2 தே3ஹக3ள கொ
ட்டாடு3வனு ஸ்வேச்செயலி பி3ரம்மேஷாத்3யரொளு பொக்கு |
மாடு3வனு வ்யாபார ப3ஹுவித3
மூட4தை3த்யரொளித்து3 ப்ரதிதி3ன
கேடு3 லாப4வில்லவனி க3த3ரிந்தா3வ காலத3லி ||3
க்ரீடெகோசுக = பரமாத்மன் தன் லீலைகளுக்காக
அவரவர கதி நீடலோசுக = ஜீவர்களுக்கு அவரவரின்
யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்வித்து அவரவர்களுக்கு தக்க கதியைக் கொடுப்பதற்கு
தேஹகள கொட்டு = தேகத்தைக் கொடுத்து
ஸ்வேச்செயலி = தன் விருப்பத்தால்
பிரம்மேஷாத்யரொளு = பிரம்ம ருத்ராதி தேவதைகளில்
பொக்கு = நிலைத்திருந்து
மூடதைத்யரொளித்து = பாவிகளான கலி முதலான தைத்யர்களில்
இருந்து
பஹுவித = பல விதமான
வ்யாபார = இந்திரியங்களால் செய்யும் கர்மங்களை
மாடுவனு = செய்கிறான்
கேடு லாபகளு = பரமாத்மனுக்கு சுக துக்கங்கள்
யாவகாலதலி = எந்த காலங்களிலும்
இல்ல அவனிகெ = அவனுக்கு இல்லை
அரி = அறிந்து கொள்.
ஜீவர்களுக்கு ஸ்தூல தேகத்தைக் கொடுப்ப்பதற்கு
ஸ்ருஷ்டி என்று பெயர். பூர்ணகாமனான ஸ்வாமிக்கு இந்த ஸ்ருஷ்டியால் எவ்வித
பிரயோஜனமும் இல்லை. இது அவனுக்கு ஒரு லீலை. கருணாளுவான ஸ்ரீஹரி, ஜீவர்களின் யோக்யதைக்கேற்ப கதியைக் கொடுப்பதற்காகவே அவருக்கு ஸ்தூல தேகத்தைக்
கொடுத்து,
தத்வாபிமானி தேவதைகளான பிரம்மாதி தேவதைகள், கலி முதலான தைத்யர்கள் இவர்களில் இருந்து, ஜீவர்கள் செய்ய வேண்டிய புண்யபாபாதி கர்மங்களை செய்வித்து அவரவர்களுக்குத்
தக்க கதியைக் கொடுக்கிறான். இதனால் பரமாத்மனுக்கு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை.
அக்ஷரேட்3யனு பி3ரம்ம வாயு
த்ரயக்ஷ ஸுரப ஸுராஸுரரொள
த்3யக்ஷ நாகி3த்தெ3ல்லரொளு வ்யாபார மாடு3திஹ |
அக்ஷய ஸுஸத்யாத்மக பரா
பேக்ஷெயில்லதெ3 ஸர்வரொளகெ3 வி
லக்ஷணனு தானாகி3 லோகவ ரக்ஷிஸுதலிப்ப ||4
அக்ஷரேட்யனு = அக்ஷர நாமகளான ரமாதேவியரால்
வணங்கப்படும் ஸ்ரீஹரி
பிரம்ம வாயு,
த்ர்யக்ஷ = மூன்று கண்களைக் கொண்ட ருத்ரர்
ஸுரப = தேவேந்திரன்
ஸுராதிகள = மற்றும் இதர தேவதைகளுக்கு
அத்யக்ஷனாகி = தலைவனாக
எல்லரொளு = அனைவரிலும் இருந்து
பராபேக்ஷெயில்லதெ = அவர்களிடமிருந்து எந்தவொரு
பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்
வியாபார மாடுதிஹ = கர்மங்களை செய்கிறான்
அக்ஷய = அழிவு இல்லாதவன்
ஸத்யாத்மக = சத்யஸ்வரூபனான
சர்வரொளகெ = அனைவரிலும்
விலக்ஷணனு தானாகி = அவர்களிடமிருந்து வேறாக
லோகவ = உலகத்தை
ரக்ஷிஸுதலிப்ப = காப்பாற்றுகிறான்.
அக்ஷர நாமகளான லட்சுமிதேவியரால் வணங்கப்படுவனான, அழிவில்லாதவனான, உத்தமானந்த, ஞானாத்மகனான ஸ்ரீஹரி, எந்தவித எதிர்பார்ப்புகளும்
இல்லாமல்,
பிரம்ம ருத்ராதி அனைத்து தேவதைகளிலும் இருந்து, அனைத்து கர்மங்களையும் செய்கிறான். அதாவது, பிரம்ம தேவரில் இருந்து ஸ்ருஷ்டிக்கிறான். ருத்ரதேவரில் இருந்து சம்ஹாரம்
செய்கிறான். இந்திரனில் இருந்து ஸ்வர்க்கத்தை ஆள்கிறான். இப்படி, ஸ்வதந்த்ரனாக அனைவரிலும் இருந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு அனைத்து உலகங்களையும் காப்பாற்றுகிறான்.
ஸ்ரீ ஸரஸ்வதி பா4ரதி கி3ரி
ஜா ஷசி ரதி ரோஹிணி ஸ
ஞ்ஞா ஸுஷதரூபாத்3யகி2ல ஸ்த்ரீயரொளு ஸ்த்ரீருப
வாஸவாகி3த்தெ3ல்லரிகெ3 வி
ஷ்வாஸ தன்னலி கொட்டு அவரபி4
லாஷெக3ள பூரைஸுதிப்பனு யோக்3யதெக3ளரிது ||5
ஸ்ரீ சரஸ்வதி பாரதி கிரிஜா = லட்சுமிதேவி, சரஸ்வதி, பாரதி, பார்வதி
ஷசி ரதி ரோஹிணி சஞ்ஞா = சசி (சந்திரனின் மனைவி), சஞ்ஞா (சூரியனின் மனைவி)
ஷதரூபா = ஸ்வாயம்புவ மனுவின் மனைவி
ஆதி = ஆகியோரில் துவங்கி,
அகில ஸ்த்ரீயரொளு = அனைத்து ஸ்தீரியர்களிலும்
ஸ்த்ரீரூப = ஸ்த்ரீ ரூபத்தினால்
வாசவாகித்து = நிலைத்திருந்து
எல்லரிகெ = அனைவருக்கும்
விஷ்வாஸ தன்னலி கொட்டு = அவர்களில் பக்தியை உண்டாக்கி
யோக்யதெகளரிது = அவரவர்களின் யோக்யதைகளை அறிந்து
அபிலாஷெகள = அவர்களின் விருப்பங்களை
பூரைசுதிப்பனு = நிறைவேற்றுகிறான்.
லட்சுமி, சரஸ்வதி முதலான அனைத்து
ஸ்த்ரியர்களிலும், பரமாத்மனே ஸ்த்ரீ ரூபத்தில் நிலைத்திருந்து, வணங்கப்பட்டு, தாரதம்யத்திற்கேற்ப லட்சுமிதேவியரில் சரஸ்வதி முதலானவர்களுக்கு பக்தியும், சரஸ்வதி தேவியரில் பாரதி முதலானவர்களுக்கு பக்தியும், இப்படி பகவத் பக்தர்களில் பரஸ்பர பக்தியை உண்டாக்கி, அவரவர்களின் விருப்பங்களை, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
இஹபரங்களில் நிறைவேற்றுகிறான்.
கோலுகுது3ரெய மாடி3 ஆடு3வ
பா3லகர தெரனந்தெ லகுமி
லோல ஸ்வாதந்த்ரிய கு3ணவ பி3ரம்மாத்3யரொளகி3ட்டு |
லீலெகை3வனு தன்னவரிக3னு
கூலனாகி3த் தெ3ல்ல காலதி3
கூ2ளரிகெ3 ப்ரதிகூலனாகி3ஹ ப்ரகடனாக3த3லெ ||6
கோலுகுதுரெய மாடி ஆடுவ பாலகர தெரனந்தெ = ஒரு கொம்பினை
குதிரையாக நினைத்து, அதனை தம் கால்களுக்கு நடுவில் வைத்து விளையாடும் சிறுவர்களைப் போல
லகுமிலோல = லட்சுமிதேவியின் கணவன்
ஸ்வாதந்த்ர்ய குணவ = தன் ஸ்வரூப ஸ்வாதந்த்ர்யத்தை
பிரம்மாத்யரொளகிட்டு = பிரம்மாதி தேவதைகளில்
வைக்கிறான்
லீலெகைவனு = லீலைகளை செய்து
தன்னவரிகனு கூலனாகித்து = அவனின் அந்தரங்க
பக்தர்களுக்கு உதவிகளை செய்து
எல்ல காலதி = எப்போதும்
கூளரிகெ ப்ரதிகூலனாகி = பகவத் த்வேஷிகளுக்கு துக்க
பலன்களைக் கொடுப்பவனாக
இஹ ப்ரகடனாகதலெ = தான் இருப்பதை அவர்களுக்குத்
தெரிவிக்காமலேயே அவர்களில் இருக்கிறான்.
ஒரு கொம்பினை குதிரையாக நினைத்து, அதனை தம் கால்களுக்கு நடுவில் வைத்து, அக்குதிரைகளை அடிப்பதுபோல அடித்து, தாமே அதனை எடுத்து ஓடிக்
கொண்டிருப்பர். அந்தக் கொம்பு குதிரைக்கு எவ்வளவு ஸ்வாதந்த்ர்யம் இருக்கிறதோ, அவ்வளவே ஸ்வாதந்த்ர்யம் ஜீவர்களுக்கு இருக்கிறது. கொம்பினை குதிரையாக
செய்தவர்கள் இவரே, அமர்ந்தவரும் இவரே, அதை அடிப்பவர்களும் இவரே, இழுத்துக் கொண்டு ஓடுபவரும் இவரே, என சிறுவர்கள் எப்படி
விளையாடுகிறார்களோ, அதுபோல பிரம்மாதி அனைத்து ஜீவர்களுக்கும், தன் ஸ்வாதந்த்ர்ய குணங்களைக் கொடுத்து, வணங்கப்படுபவனும் தானே ஆகி, விளையாடுகிறான். யாருக்கும் தான்
இருப்பதை தெரிவிக்காமல், பக்தர்களுக்கு அனுகூலமாக இருந்து, த்வேஷிகளுக்கு ப்ரதிகூலனாக இருக்கிறான்.
ஸௌபரணி வரவஹன நானா
ரூப நாமதி3 கரெஸுதவர ஸ
மீபத3ல்லித்த3கி2ல வ்யாபாரக3ள மாடு3வனு |
பாபபுண்யக3ளெரடு3 அவர ஸ்வ
ரூபக3ளனனுஸரிஸி உணிப ப
ரோபகாரி பரேஷ பூர்ணானந்த3 ஞானக4ன ||7
ஸௌபரணி வரவஹன = ஸௌபர்ணி தேவியின் பதியான கருடன்; அத்தகையவனை வாகனமாக வைத்திருப்பவன்
பரோபகாரி = அனைவரும் உதவுபவனான
பரேஷ = ஸர்வோத்தமனான
பூர்ணானந்த ஞானகன = பூர்ணானந்த ஞானஸ்வரூபனான
ஸ்ரீபரமாத்மன்
நானாரூப நாமதி = பிரம்ம ருத்ர சரஸ்வதி பாரதி கலி
ஷம்பர முதலான பெயர்களில் அழைத்துக்கொண்டு
அவர ஸமீபதல்லித்து = அவர்களில் இருந்து
அகிள வியாபாரகள மாடுவனு = அவர்களின் செயல்களை
செய்கிறான்
பாபபுண்யகளெரடு = பாவ புண்ணியங்கள் இரண்டையும்
அவர = தேவ தைத்ய மனுஷ்யாதிகளின்
ஸ்வரூபகளன்னனுஸரிஸி = அவர்களின் ஸ்வரூப, குணங்களை அனுசரித்து
உணிப = உண்ண வைக்கிறான்.
கருட வாகனனும், சர்வோத்தமனும், பூர்ணானந்த ஞானாத்மகனுமான ஸ்ரீஹரி, புருஷர்களிலும், ஸ்த்ரீயர்களிலும் தேவ தைத்ய மனுஷ்யாதிகளிலும் இருந்து, பற்பல வகையான கர்மங்களை செய்து, செய்விக்கிறான். புண்யபாவங்களின்
பலன்களை மட்டும் அந்த ஜீவரின் யோக்யதைக்கேற்ப கொடுக்கிறான். ஆகையால், பரமாத்மனுக்கு வைஷம்யாதிகள் இல்லை என்பது கருத்து. இந்த விஷயங்களை முன்னர் பல
பத்யங்களில் பார்த்திருக்கிறோம்.
அஹர நித்3ரா மைது2னக3ளஹ
ரஹர ப3யஸி ப3ளலுவவ லகுமி
மஹிதன மஹாமஹிமெக3ளனெந்த3ரிவ நித்யத3லி |
அஹிக ஸௌக்2யவ மரெது மனத3லி
க்3ரஹிஸி ஷாஸ்த்ரார்த்த2க3ள பரமோ
த்ஸஹதி3 கொண்டா3டு3தலி மைமரெத3வரிக3ல்லத3லெ ||8
நித்யதலி = எப்போதும்
அஹிக சௌக்யவ = உணவு, நீர்,
ஸ்த்ரீ போகம் முதலான இந்த பிரபஞ்சத்தின் சுகங்களை
மரெது = விரும்பாமல்
மனதலி = மனதில்
ஷாஸ்த்ரார்த்தகள கிரஹிஸி = நற்சாஸ்திரங்களின்
அர்த்தங்களை தன் மனதில் வாங்கி
பரமோத்ஸாஹதி = மிகவும் உற்சாகத்துடன்
கொண்டாடுதலி = பரமாத்மனின் மகிமைகளை கொண்டாடினால்
மைமரிதவரிகல்லதலெ = தங்கள் மெய்மறந்து
இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல்
அஹர = ஆகாரம்
நித்ரா = தூக்கம்
மைதுனகள = போகங்கள் ஆகியவற்றை
அஹரஹ = எப்போதும்
பயஸி = விரும்பி
பளலுவ = அதிலேயே மூழ்கியிருப்பவன்
லட்சுமிமஹிதன = லட்சுமிதேவியரால் வணங்கப்படுபவனான
பரமாத்மனின்
மஹாமஹிமகள = மகா மகிமைகளை
எந்தரிவ = (அவை பகவன் மகிமைகள்) என்று அறிவது எப்போது?
எந்த புருஷன், தற்காலிக சுகங்களை சுகம் என்று நினைக்காமல், பரமாத்மனிடம் த்ருடமான பக்தியினால் சாஸ்திரார்த்தங்களைக் கேட்டு, மனனம் செய்தவாறு, மெய்மறந்து பரமாத்மனை கொண்டாடுகின்றானோ, அவனுக்கு பரமாத்மனின் மகிமை தெரிகிறதே தவிர; உணவு,
நீர்,
ஸ்த்ரீபோகம் ஆகிய தற்காலிக சுகங்களையே எப்போதும் விரும்பியவாறு, சம்சாரத்தில் மூழ்கியிருப்பவர்களுக்கு பகவத் மகிமை தெரிவது எப்போது? என்றைக்கும் அவர்களுக்கு அது புரிவதேயில்லை என்பது கருத்து.
ப3ந்த4 மோக்ஷப்ரத3ன ஞானவு
மந்த3மதி க3ளிகெ3ந்து தொ3ரெவுது3
பி3ந்து3 மாத்ர ஸுகா2னுப4வ பர்வதகெ ஸமது3க்2க
எந்து3 திளியதெ3 அன்யதெ3ய்வக3
ளிந்த3 ஸுக2வன பேக்ஷிஸுவரு மு
குந்த3னாராத3னெய பி3ட்டவகு3ண்டெ முக்திஸுக2 ||9
பந்தமோக்ஷப்ரதன = ஜீவருக்கு பந்தனத்தையும், மோட்சத்தையும் கொடுப்பவனான ஸ்ரீபரமாத்மனின்
ஞானவு = ஞானம்
மந்தமதி களிகெந்து தொரெவுது = மந்தமதிகளுக்கு
என்றைக்கும் புரியாது
பிந்து மாத்ர சுகானுபவ = தற்காலிக விஷயங்களால்
அவர்கள் அடையும் மிகச்சிறிய சுக அனுபவங்கள்
பர்வதக்கெ சம = மலையின் அளவுக்கு பெரியதான
துக்க எந்து திளியதே = துக்கம் தரக்கூடியவை என்று
அறியாமல்
அன்யதெய்வகளிந்த சுகவன பேக்ஷிசுவரு = பிற தேவதைகளை
வேண்டி,
அவர்களிடமிருந்து சுகங்களை வேண்டுவர்
முகுந்தனாராதனெய = முகுந்தனை வழிபடாதவர்களுக்கு
முக்திசுக = முக்தியானது
உண்டே = உண்டா? (இல்லை).
அனைத்து பிராணிகளையும், சம்சாரத்தில் தள்ளுவதற்கும், சம்சாரத்திலிருந்து விடுதலை செய்து
முக்தியைக் கொடுப்பதற்கும், பரமாத்மன் மட்டுமே சமர்த்தன். வேறு
யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை. இத்தகைய பரமாத்மனைப் பற்றிய ஞானம், அல்பமதிகளுக்கு கிடைப்பது எப்போது? இவர்கள் அன்ய தேவதைகளை பூஜித்து, செல்வம், ஆயுள் ஆகியவற்றை வேண்டி, நானே தன்யர் என்பார்கள். இந்த
சம்சாரத்தில் இருக்கும் விஷய போகங்களை பார்த்தால், அது ஒரு நீர்த்துளி அளவிற்கே. அதிலிருந்து வரும் துக்கமோ மலையைப் போல
பெரியதாகும். ‘குர்வன் துக்க பிரதிகாரம் சுகவன்மன்யதேக்ருஹே’ என்னும் பாகவத வாக்கியதைப்போல, துக்கத்தை பரிகாரம் செய்வதற்கு
முயன்று,
நானே சுகி என்று நினைப்பவன், இத்தகைய அதி அல்ப சுகத்திற்காக
அன்ய தேவதைகளை துதிக்கிறான். மோட்ச பிரதனான பரமாத்மனை துதிக்காமல்
இருப்பவர்களுக்கு மோட்ச சுகம் எங்கு இருக்கிறது? என்றைக்கும் இல்லை என்பது கருத்து.
ராஜ தன்ன அமாத்ய கருணதி3
நைஜ ஜனரிகெ3 கொட்டு கார்ய நி
யோஜிஸுத மானாபமானவ மாள்ப தெரனந்தெ |
ஸ்ரீஜனார்த்த4ன ஸகலரொளக3ப
ராஜிதனு தானாகி3 ஸர்வப்ர
யோஜனவ மாடி3ஸுவ மாடு3வ ப2லகெ கு3ரிமாடி3 ||10
ராஜ = அரசன்
தன்ன = தனது
அமாத்ய = ஸ்வாதந்த்ரத்தை
கருணதி = கருணையுடன்
நைஜ ஜனரிகெ = தன் மக்களுக்கு
கொட்டு = கொடுத்து
கார்ய = காரியங்களை செய்ய
நியோஜிஸுத = ஆணை பிறப்பித்து
மானாபமானவ = அவர்கள் செய்யும் காரியங்களுக்கேற்ப
அவர்களுக்கு ஊக்கமோ தண்டனையோ
மாள்ப தெரனந்தெ = தருவதைப்போல
ஸ்ரீஜனார்த்தன,
சகலரொளகெ = அனைவரின் உள்ளும் இருந்து
அபராஜிதனு தானாகி = யாராலும் வெல்லப்பட முடியாதவனாக
தான் இருந்து
பலகெ குரிமாடி = ஜீவர்களை பலன்களுக்கு பயனாளர்களாக
ஆக்கி
சர்வ ப்ரயோஜனவ = அனைத்து புண்ய பாப கர்மங்களை
மாடிசுவ மாடுவ = செய்து செய்விக்கிறான்.
அரசன், மந்திரத்வம் முதலான ஸ்வதந்த்ர்ய
அதிகாரங்களை, தன் சேவகர்களுக்குக் கொடுத்து, செயல்களை செய்விப்பதைப் போல, அவர்களுக்கு ஆணையிட்டு, அவர்கள் செய்யும் செயல், மனதிற்கு திருப்தி அளித்தால், அவருக்கு பரிசுகளையும், செயல்கள் திருப்தி அளிக்கவில்லையெனில், தண்டனையும் கொடுக்கிறான். ஸ்ரீபரமாத்மன், பிரம்மாதிகளுக்கு ஸ்வாதந்த்ர்யத்தைக் கொடுத்து அவர்களின் உள் இருந்து
(யாராலும் வெல்லப்பட முடியாதவனாக), அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
கர்மங்களை செய்வித்து, அந்த கர்மங்களுக்கு தக்க சுக துக்க, மான அவமான முதலான பலன்களைக்
கொடுக்கிறான்.
இந்த பத்யத்தில் துவங்கி 14ம் பத்யம் வரைக்கும் இருக்கும் விஷயங்கள், 16ம் தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தியில் வியாக்யானத்தில் விஷ்ணு ரஹஸ்ய பிரமாணங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment