லோபவாத3ரு ஸரியெ கர்மஜ
பாப புண்யக3ளெரடு3 நின்னனு
லேபிஸவு நிஷ்காமகனு நீனாகி3 மாடு3திரெ |
ஸௌபரணி வரவஹன நின்ன ம
ஹாப1ராத4க ளெணிஸத3லெ ஸ்வ
ர்க்கா3 பவர்க3தொ3ளிட்டு ஸலஹுவ ஸத1த1 ஸுக2ஸாந்த்3ர ||11
நீனு = நீ
நிஷ்காமகனாகி = பலன்களை எதிர்பார்க்காமல், பகவத் ப்ரீதிக்காக மட்டும்
மாடுதிரெ = கர்மங்களை செய்தால்
லோபவாதரு சரியெ = செய்யும் கர்மங்களில் சிறிது
குறையிலிருந்தாலும் சரி
கர்மஜ = காம்ய கர்ம சம்பந்தமான
பாப புண்யகளெரடு = பாப புண்ணியங்கள் இவை இரண்டும்
நின்னனு லேபிஸவு = உன்னை சேராது
நித்ய சுகஸாந்த்ர = நித்யானந்த பூர்ணனான
ஸௌபர்ணி வரவஹன = ஸௌபர்ணி தேவிக்கு பதியான கருடனை
வாகனமாக வைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீஹரி
நின்ன மஹாபராதகளெனிஸதலெ = உன் மிகப்பெரிய தவறுகளை
எண்ணாமல்
ஸ்வர்க்க = இஹத்தில் ஸ்வர்க்கத்திற்கு இணையான
சுகத்தைக் கொடுத்து;
அல்லது,
ஸ்வதந்த்ரனாகையால், பரமாத்மனுக்கு ஸ்வ என்று பெயர். அவரின் அருளாலேயே கிடைப்பதால், வைகுண்டத்திற்கு, ஸ்வ்ர்க்க என்று பெயர்.
அல்லது,
’ஸ்வரதோ விஷ்ணு: தேன கதோலோக:
வைகுண்டாக்ய:’ - ஸ்வரதன் ஆகையால் விஷ்ணுவிற்கு ஸ்வ என்று பெயர். அவன் வசிக்கும் உலகத்திற்கு
ஸ்வர்க்கம் என்று பெயர்.
அல்லது
ஸதானந்த ஞான மூர்த்தித்வாத்ஸ்வர்கோ: விஷ்ணு: -
எப்போதும் ஞானானந்த ஸ்வரூபன் ஆகையால், விஷ்ணுக்கு ஸ்வர்க்க என்று பெயர்.
இத்தகைய ஸ்வர்க்க நாமகனான பரமாத்மனின் லோகமான
அபவர்கதொளித்து = முக்த ஸ்தானத்தில் அல்லது ஸ்வர்க
நாமகமான வைகுண்டத்தில் வைத்து
ஸலஹுவ = ஸ்வரூபானந்தத்தைக் கொடுத்து காப்பாற்றுவான்.
கர்மண்யே வாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன - என்னும் கீதை
வாக்கியத்திற்கேற்ப, கர்மங்களை செய்யும்போது, பரமாத்மனே செய்விக்கிறான் என்று
அனுசந்தானத்துடன், பலன்களை எதிர்பார்க்காமல், பகவத் ப்ரீதிக்காகவே கர்மங்களை
செய்யவேண்டும். அப்படி சத்கர்மங்களை செய்யும்போது தெய்வ சங்கல்பத்தினால், செய்ய வேண்டிய சத்கர்மங்களுக்கு தடை / குறை வந்தாலும், அந்த அபராதங்களை பரமாத்மன் மன்னிக்கிறான்.
ஸ்வரத ஸுக2மய ஸுலப4 விஷ்வ
ம்ப4ர விஷோக ஸுராஸுரார்ச்சித
சரணயுக3 சார்வங்க3 ஷார்ங்க3 ஷரண்ய ஜிதமன்யு |
பரம ஸுந்த3ரதர பராத்பர
ஷரணஜன ஸுரதே4னு ஷாஷ்வத
கருணி கஞ்சத3லாக்ஷ காயெனெ கங்கொ3ளிப ஷீக்4ர ||12
ஸ்வரத = ஸ்வரமணனான
சுகமய = ஆனந்த ஸ்வரூபனான
சுலப = பக்தர்களுக்கு சுலபனான
விஷ்வம்பர = பிரபஞ்சத்தையே தரித்திருப்பவன்
விஷோக = சோகங்கள் இல்லாதவன்
ஸுராசுரார்ச்சித = ருத்ராதி தேவதைகளைவிட, முக்யபிராண தேவரைவிட, ‘அசுஷுரதத்வாத ஸுரோமுக்ய ப்ராண:’ பிராணகளில் ரதனாக இருப்பதால், முக்யபிராணனுக்கு அசுர என்று
பெயர். அல்லது, பிராணமதத்தை பின்பற்றுவோர் என்று அர்த்தம். 12ம் சந்தி, 30ம் பத்யத்தின் வியாக்யானத்தில், அசுர சொல்லுக்கு விளக்கம்
சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய மத்வ மதத்தை பின்பற்றுவோராலும்,
அர்ச்சித = பூஜிக்கப்படும்
சரணயுக = பாதங்களைக் கொண்ட
சார்வங்க = அழகான அங்கங்களைக் கொண்டவன்
ஷார்ங்க ஷரண்ய = ஷார்ங்க என்னும் தனுஸ்ஸின் ரூபத்தைக்
கொண்ட,
வித்யா நாமக ரமாதேவியருக்கு ஆதரவு அளிக்கக்கூடியவனான
ஜிதமன்யு = வெல்லப்பட்ட கோபத்தை உடைய
பரம சுந்தரதர = பரம சுந்தரர்களான பிரம்மாதிகளைவிட
சுந்தரனான
பராத்பர = பிரம்மாதிகளைவிட உத்தமனான
ஷரணஜன ஸுரதேனு = தன்னை வணங்கும் பக்தர்களுக்கு
காமதேனு என்றிருக்கும்
ஷாஷ்வதகருணி = நிரந்தரமான தயா பூர்ணனான
கஞ்சதளாக்ஷ = தாமரைக் கண்ணன்
ஸ்ரீஹரியே
காயெனெ = என்னை காப்பாற்று என்று ஸ்தோத்திரம் செய்ய
ஸித்த = தயாராகி
கங்கொளிப = அபரோக்ஷத்தில் தரிசனம் கொடுக்கிறான்
பரதல்லி = முக்தியில் எப்போதும் தரிசனம் அளிப்பவன்
இந்த பத்யத்தின் அர்த்தம் அப்படியே புரிகிறது. சுராசுரார்ச்சித
என்னும் இடத்தில், அசுரர் என்றால் தைத்யர் என்று அர்த்தம், தைத்ய குலத்தில் பிறந்த பிரகலாதன், பலி சக்ரவர்த்தி முதலான
தைத்யர்களால் பூஜிதனான பாத கமலங்களைக் கொண்டவன் என்று அர்த்தம். பத்ய அர்த்தத்தில்
கூறியிருப்பதைப்போல, முக்ய பிராணதேவர் என்று ஒரு அர்த்தம். மத்வ மதத்தைப் பின்பற்றுவோர் என்றும்
ஒரு அர்த்தம் உள்ளது. ஷார்ங்க ஷரண்ய என்னும் இடத்தில், ஷார்ங்க என்னும் தனுஸ் உள்ளவனுக்கு ஷார்ங்க என்று பெயர். இங்கு ஷார்ங்க்யஷரண்ய
என்பது ஒரே பதமாக பார்க்க வேண்டும்.
மகாபாரத தாத்பர்ய நிர்ணய 3ம் அத்தியாயத்தில், 76ம் ஸ்லோகம்:
கதாதுவாயுர் பலஸம்விதாத்மா ஷார்ங்கஸ்ச வித்யேதிரமைவ
கட்க: |
துர்காத்மிகாஸைவச சர்மனாம்னி: ||
என்று சொல்லியிருக்கிறார்.
பல ஞானாத்மகமான வாயுதேவரே, பரமாத்மனின் கையில் தரித்திருக்கும் கதையாக இருக்கிறார். ஷார்ங்க நாமக
தனுஸ்ஸின் ரூபமாக வித்யா நாமகளான ரமாதேவி இருக்கிறார். துர்காதேவி கட்க மற்றும்
சர்ம ரூபமாக இருக்கிறார். இதனால் ரமாதேவியையே, ஷார்ங்க என்று சொன்னதாக ஆயிற்று. இத்தகைய ரமாதேவியருக்கு ஷரண்ய என்றால் வீடாக
இருப்பவன் என்று அர்த்தம்.
நிர்மலனு நீனாகி3 கர்ம வி
கர்மக3ளனு நிரந்தரத3லி ஸு
த4ர்ம நாமகக3ர்ப்பிஸுத நிஷ்கலுஷ நீனாகு3 |
ப4ர்மக3ர்ப்ப4ன ஜனக த3யத3லி
து3ர்மதிக3ளனு கொட3தெ3 தன்னய
ஹர்ம்யதொ3ளகி3ட்டெல்ல காலதி3 காவ க்ருபெயிந்த3 ||13
நீனு = நீ
நிர்மலனாகி = அகத்தில் தூய்மையானவனாக
கர்ம விகர்மகளனு = புண்யபாப கர்மங்களை
நிரந்தரதலி = நிரந்தரமாக
சுதர்ம நாமககெ = சுதர்ம நாமகனான பரமாத்மனுக்கு
அர்ப்பிசுத = அர்ப்பித்தவாறு
நீனு நிஷ்கலுஷனாகு = பாபங்கள் இல்லாதவனாகு
பர்மகர்ப்பன = ஹிரண்யகர்ப்ப என்று அழைக்கப்படுபவரான
பிரம்மதேவரின்
ஜனக = தந்தையான ஸ்ரீஹரி
தயதலி = தயையால்
துர்மதிகளனு = மித்யாஞான முதலான துர்புத்திகளை கொடுக்காமல்
எல்லகாலதலி = அனைத்து காலங்களிலும்
தன்னஹர்ம்யதொளகெ = தன் வீட்டில்
இட்டு = வைத்து
க்ருபெயிந்த = கருணையுடன்
காவ = காக்கிறான்.
நீ எப்போதும் தூய்மையான மனதுடன் புண்ய பாவங்களை
தினந்தோறும் சுதர்ம நாமக பரமாத்மனுக்கு அர்ப்பித்து வா. அதாவது, தர்ம என்றால் ‘தாரகத்வாத்தர்ம:’ ப்ரபஞ்சத்தை தரித்திருக்கிறான் ஆகையால் பரமாத்மனுக்கு தர்ம என்று பெயர்.
அனைத்தையும், இத்தகைய பரமாத்மனுக்கு, அர்ப்பிப்பதால், நீ பாபங்கள் இல்லாதவனாகிறாய். பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன் தன்
கருணையால், உனக்கு கெட்ட புத்திகள் உருவாகாதவாறு செய்வான். மற்றும், தன் வீட்டில் வைத்து எப்போதும் ஸ்வரூப ஆனந்தத்தைக் கொடுக்கிறான்.
கல்பகல்பதி3 ஷரணஜனவர
கல்பவ்ருக்ஷனு தன்ன நிஜ ஸ
ங்கல்ப த3னுஸாரத3லி கொடு3திப்பனு ப2லாப2லவ |
அல்பஸுக2தா3 பேக்ஷெயிந்த3ஹி
த3ல்ப நாராதி4ஸதி3ரெந்தி3கு3
ஷில்பிக3ன கை ஸிலுகி3தா ஷிலெயந்தெ ஸந்தயிப ||14
ஷரணஜனவர கல்பவ்ருக்ஷனு = சரணாகதி அடைந்த
பக்தர்களுக்கு உத்தமமான கல்பவ்ருக்ஷத்தைப் போலிருக்கும் ஸ்ரீஹரி
தன்ன நிஜ சங்கல்பதனுசாரதலி = அனாதியான
சத்யசங்கல்பத்திற்கு ஏற்ப
கல்பகல்பதி = ஒவ்வொரு பிரம்ம கல்பத்திலும்
பலாபலவ = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப, மூன்றுவித ஜீவர்களில் முக்தியோக்யர்களுக்கு முக்தியையும், தமோ யோக்யர்களுக்கு அந்தம் தமஸ்ஸையும், மத்யமருக்கு சுகதுக்க மிஸ்ரமான பலன்களையும் கொடுக்கிறான்.
அஹிதல்பன = சேஷதேவரை படுக்கையாகக் கொண்ட
ஸ்ரீபரமாத்மனை
அல்பசுகத = தற்காலிக சுகத்தை விரும்பி
எந்திகு = என்றைக்கும்
ஆராதிஸதிரு = ஆராதனை செய்யாதே.
ஷில்பிகன = ஒரு சிற்பியின்
கைஷிக்க = கைக்கு சிக்கிய
ஷிலெயந்ததலி = கல்லைப் போல
சந்தைப = சுகத்தைக் கொடுப்பான்.
சரணாகதி அடைந்தவர்களை அருளும் விஷயத்தில் கல்பவ்ருக்ஷத்தைப்
போலிருக்கும் ஸ்ரீஹரி, தன் சத்யசங்கல்பத்திற்கேற்ப, ஒவ்வொரு பிரம்ம கல்பத்திலும், ஸ்ருஷ்டிக்கு வந்திருக்கும் மூன்றுவித ஜீவராசிகளில், முக்தி யோக்யர்களுக்கு முக்தியையும், தமோ யோக்யர்களுக்கு
அந்தம்தமஸ்ஸையும், மத்யமருக்கு சுகதுக்க மிஸ்ரமான நித்ய
சம்சாரத்தையும் கொடுக்கிறான். இத்தகைய சேஷசாயியான பரமாத்மனை, தற்காலிக சுகங்களுக்காக என்றும் வேண்டாதே. பரமாத்மன் மகிழட்டும் என்று
துதித்தால், உன் துதிக்கு மெச்சி உனக்கு சுகத்தைக் கொடுக்கிறான்.
ஒரு சிற்பியின் கைக்கு சிக்கிய கல், என்னை ஒரு சிற்பமாக மாற்றி, பூஜாதிகளை செய் என்று அவனை
வேண்டிக் கொள்கிறதா? எப்படி சிற்பியே தானாகவே கல்லினை பிரதிமையாக மாற்றி பூஜாதிகளை செய்யுமாறு
ஆக்குகிறானோ, அப்படி பரமாத்மன், நீ எதை விரும்பினாலும் தானாகவே உன் யோக்யதைக்கேற்ப சுகத்தைக் கொடுக்கிறான்.
தே3ஷபே4தா3 காஷத3ந்த3தி3
வாஸுதே3வனு ஸர்வபூ4த நி
வாஸி எனிஸி சராசராத்மகனெந்து3 கரெஸுவனு |
த்3வேஷ ஸ்னேஹோதா3ஸினக3ள
ல்லீ ஷரீரிக3ளொளகெ3 அவர உ
பாஸனக3ளந்த3த3லி ப2லக3ளனீவ பரபி3ரம்ம ||15
தேஷபேதா காஷதந்ததி = இட பேதத்தினால் ஒரே ஆகாயம், எப்படி வெவ்வேறாக தெரிகிறதோ
வாசுதேவனு
ஸர்வபூத நிவாஸி எனிஸி = அனைத்து பிராணிகளிலும் வசிப்பவன்
என்று நினைத்து
சராசராத்மகனெந்து = சராசராத்மகமான ப்ரபஞ்சத்தில்
அந்தந்த உருவங்களாக இருந்து சராசர ப்ராணிகளின் பெயர்களில் அழைத்துக் கொள்கிறான்
பரமாத்மன்
ஈ ஷரீரதொளகெ = இந்த சரீரத்தில்
த்வேஷ ஸ்னேஹோதாஸீனகளல்லி = த்வேஷ, ஸ்னேஹ, உதாசீன என்னும் மூன்று வித உபாசனைகளின் நடுவில்
அவர = த்ரிவித ஜீவர்களின்
உபாசனெகளந்ததலி = த்வேஷம் செய்பவர், ஸ்னேகம் செய்பவர், உதாசீனம் செய்பவர் என மூன்று வித உபாசனைகளுக்கேற்ப
பலவீவனு = பலன்களைக் கொடுக்கிறான்.
அனைத்து இடங்களிலும் ஒரே ஆகாயம் வியாபித்திருப்பதைப்
போல, சராசராத்மக இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் பரமாத்மன் வியாப்தனாக
இருப்பதால், பரமாத்மனுக்கு சர்வபூத நிவாச என்று பெயர். இப்படி சராசர பிராணிகளில் அந்த
உருவமாக இருந்து, அந்த பிராணிகளின் பெயர்களை தானே தரித்திருக்கிறான். சரீரம் பெற்றிருக்கும்
ஜீவர்களில், த்வேஷம் செய்பவர்கள் என்றும், நட்பு செய்பவர்கள் என்றும், உதாசீன செய்பவர்கள் என்றும், மூன்று வித உபாசகர்கள் உண்டு.
இவர்களில், அவரவர் செய்யும் உபாசனைகளுக்கேற்ப, நட்பு செலுத்துபவர்களுக்கு
முக்தியையும், த்வேஷிகளுக்கு அந்தம்தமஸ்ஸையும், உதாசீனம் செய்பவர்களுக்கு நித்ய
சம்சாரத்தையும் கொடுக்கிறான்.
இதனால், பரமாத்மனுக்கு ஜீவரின் தேகங்களில்
வைஷம்ய தோஷம் வருகிறது என்று அர்த்தமல்ல. அவரவர்களின் உபாசனைகளுக்கேற்பவே
பலன்களைக் கொடுக்கிறான் என்று அறிய வேண்டும்.
ஸஞ்சிதாகா3மிக3ள கர்ம வி
ரிஞ்சி ஜனகன ப4ஜிஸெ கெடு3வுவு
மிஞ்சினந்த3தி3 பொளெவ புருஷோத்தம ஹ்ருத3ம்ப3ரதி3 |
வஞ்சிஸுவ ஜனரொல்ல ஸ்ரீவ
த்ஸாஞ்சித ஸுஸத்3வக்ஷ தா னி
ஷ்கஞ்சன ஜனப்ரீய ஸுரமுனிகே3ய ஷுப4காய ||16
விரிஞ்சி ஜனகன = பிரம்மதேவரின் தந்தையான
ஸ்ரீபரமாத்மனை
பஜிஸெ = துதித்தால்
சஞ்சிதாகாமிகள கர்ம =
* சஞ்சித = முந்தைய பிறவிகளில் சம்பாதித்த
கர்மங்களுக்காக இந்த பிறவியில் அனுபவிப்பவை
* ஆகாமி = இந்த பிறவியில் செய்த, செய்யப்போகும் கர்மங்களுக்காக, அடுத்த பிறவிகளில் அனுபவிக்க
வேண்டிய
* இந்த இரு கர்மங்களும்,
கெடுவுவு = நாசம் அடைகின்றன
புருஷோத்தமனு = க்ஷாக்ஷர புருஷர்களில் சிறந்தவனான
ஸ்ரீபரமாத்மன்
ஹ்ருதயாம்பரதி = உங்கள் ஹ்ருதயாகாஷத்தில்
மிஞ்சினந்ததி பொளெவ = அபரோக்ஷத்தில் மின்னலைப் போல
காட்சியளிக்கிறான்
ஸ்ரீவத்ஸாங்கித சுசத்வ்யக்ஷ = ஸ்ரீதேவியையும், கௌஸ்துப மணியையும் தன் மார்பில் தரித்திருப்பவனான
வஞ்சிஸுவ ஜனர = டாம்பீக பக்தி காட்டுபவர்களுக்கு
ஒல்ல = அத்தகையவர்களுக்கு தரிசனம் அளிப்பதில்லை
நிஷ்கிஞ்சன ஜனப்ரிய = பரமாத்மனைத் தவிர மற்ற
வஸ்துக்கள் நமது அல்ல என்று அறிந்தவன் நிஷ்கிஞ்சனன். இத்தகையவனுக்கு ப்ரியனான
அல்லது;
நிஷ்கிஞ்சன மக்களை விரும்புகிற பரமாத்மன்
ஸுரமுனிகேய = தேவதைகளாலும் ரிஷிகளாலும்
வணங்கப்படுபவன்
ஷுபகாய = மங்கள ஸ்வரூபன், ஸ்ரீபரமாத்மன்.
ப்ராரப்த கர்மணொன்யஸ்ய ஞானாதேவ பரிக்ஷய - என்னும்
அணுபாஷ்ய வாக்கியத்தில் ப்ராரப்த கர்மத்தை தவிர, ஆகாமி, சஞ்சித என்னும் இரு கர்மங்களும், அபரோக்ஷ ஞானம் ஆன உடனேயே நாசம்
அடைகிறது. ப்ராரப்த கர்மம் மட்டும் அனுபவித்தே ஆகவேண்டும் என்றிருப்பார். மற்றும்:
பித்யதே ஹ்ருதயக்ரந்தி பித்யந்தே ஸர்வஸம்ஷயா: |
க்ஷேயந்தே ஞாஸ்ய கர்மாணித்ருஷ்ட ஏகாத்மனீஷ்வரே ||
என்னும் பாகவத 1ம் ஸ்கந்த வாக்கியத்திற்கேற்ப அபரோக்ஷத்தில் பரமாத்மனை கண்ட உடனேயே மன
அழுக்குகள் பரிகாரம் ஆகின்றன. அதனால், மனதின் அனைத்து சந்தேகங்களும்
பரிகாரம் ஆகின்றன. மற்றும் இவனின் ஆகாமி, சஞ்சித கர்மங்கள் அனைத்தும் நாசம்
அடைகின்றன என்று நிச்சயம் ஆகின்றது. இந்த அர்த்தத்தையே தாசார்யரும் இங்கு
சொல்லியிருக்கிறார்.
பரமாத்மனை விடாமல் துதித்தால், மனதை நிஸ்சலமாக பரமாத்மனிடம் நிலைத்து வைத்தால், தன்னை நம்பிய மக்களில் அன்பு காட்டும் பரமாத்மன், அவர்களின் ஹ்ருதயாகாஷத்தில் மின்னலைப் போல ஒளியுடன் தரிசனம் அளிக்கிறான்.
பரமாத்மனை கண்ட உடனேயே இவனின் ஆகாமி, சஞ்சித என்னும் இரு விதமான
கர்மங்கள் நாசமாகி, முக்தியில் பரம சுகத்தை அடைகிறான் என்பது கருத்து.
கால த்3ரவ்ய ஸுகர்ம ஷுத்தி3ய
பேளுவரு அல்பரிகெ3 இவு நி
ர்மூலகை3ஸுவு எல்ல பாபக3ளெல்ல காலத3லி |
தைலதா4ரெயந்த3வன பத3
ஓலயிஸி துதிஸத3லெ நித்யதி3
பாலிஷரு கர்மக3ளெ தாரகவெந்து3 பேளுவரு ||17
கால த்ரவ்ய சுகர்ம ஷுத்திய = கர்மங்களை செய்வதற்கு
யோக்யமான காலத்திற்கு ஷுத்தியான காலம் என்பர். த்ரவ்ய ஷுத்தி என்றால், பாத்திரம் முதலானவற்றிற்கு புளி முதலானவற்றால் செய்யும் ஷுத்தி. ஷுத்தமான
காலத்தில், ஷுத்தமான த்ரவ்யங்களால், சத்கர்மங்களை செய்வதே அந்த
கர்மத்திற்கு ஷுத்தி என்று பாகவதாதிகளில் சொல்லியிருக்கின்றனர்.
அல்பரிகெ = அல்ப ஞானிகளுக்கு
அவு = அகால கர்மாதி ஷுத்திகள்
எல்லகாலதலி = எந்த காலத்திலும்
பாபகள = எல்லா பாபங்களையும்
நிர்மல கைஸுவவல்ல = முழுமையாக நாசம் செய்வதில்லை.
தைலதாரியந்தெ = எண்ணையை ஊற்றுவதைப் போல தொடர்ச்சியாக
அவனபதவ = அந்த பரமாத்மனின் பாதாரவிந்தத்தை
நித்யதி ஆலயிஸி = சித்தத்தில் வைத்து
ஸ்துதிஸதலெ = ஸ்தோத்திரம் செய்யாமல்
பாலிஷரு = சிறு புத்தி உடையவர்கள் (மூர்க்கர்கள்)
கர்மாதிகளே தாரகவெந்து = நம்மை மேம்படுத்துவன என்பார்கள்.
‘கால த்ரவ்ய சுகர்ம ஷுத்திய பேளுவரு’ என்னும் சொற்களின் அர்த்தத்திற்கேற்ப, கால ஷுத்தி, த்ரவ்ய ஷுத்தி, கர்ம ஷுத்தி விஷயங்களை பாகவதம் 11ம் ஸ்கந்தம் 21ம் அத்தியத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே,
தேஷகாலாதி பாவானாம் வசனான்மம ஸத்தம |
குணதோஷௌ விதீயேதே நியமார்த்தம் ஹிகர்மணாம் ||7
(ஸ்ரீகிருஷ்ணன் உத்தவனுக்கு உபதேசம்
செய்தது)
ஹே உத்தவனே. இந்த தேசத்தில், இந்த காலத்தில், இந்த த்ரவ்யத்தினால் செய்யும் கர்மங்கள் யோக்யமானவை. அப்படி இல்லையெனில், அது அயோக்யம் எனப்படுகிறது. என்றும் கர்மங்களின் நியமத்திற்காக என் வசனத்தின்
மேல் குணதோஷங்கள் விதிக்கப்படுகின்றன. தேசத்தில் எந்த தேசம் சுத்தமானது என்றால்:
கிருஷ்ண சாரோத தேஷானாம் பிராம்மணானாம் ஷுசிர்பவேத் |
கிருஷ்ண ஸாரோபி ஸௌவீர கீகடா ஸம்ஸ்க்ருதேரிண: ||8
இதன் அர்த்தம் விஜயத்வஜீய வியாக்யானத்திற்கேற்ப
எழுதப்படுகிறது.
எந்த தேசத்தில் மான்கள் தாமாகவே வந்து வசிக்கின்றனவோ, அந்த தேசமே பிராமணர்கள் கர்மம் செய்வதற்கு ஏற்ற தேசம் என்று அறியவேண்டும்.
இந்த ஸ்லோகத்தில் இருக்கும் ‘அத’ என்னும் சொல், மான்கள் வசிக்கும் இடங்களைத் தவிர வேறு சில வகையான தேசங்களும் சுத்தமானவை
என்று குறிப்பிடுகிறது. (வியாக்யான, ஸ்லோக, தாத்பர்யத்திலிருந்து உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன).
நதி சமுத்ர கிரய ஆஸ்ரயாஸ்சவனானிச |
நகராணிச திவ்யானி ஸாலக்ராமாதயஸ்ததா |
தேஷாம் ஸமீப காஸ்சைவ தேஷாயோ ஜனமாத்ரத: |
கர்மண்யாஸ்து ஸயாக்யாதாஸ் ததன்யே கீகடா: ஸ்ம்ருதா: ||
ததன்யேபிது ஏதேஷாம் கிருஷ்ணஸாரோஷிதா: ஸ்வத: |
கர்மண்யா ஏவதேஞ்ஞேயா: இதிவசனாத் ||
என்னும் வாக்கியத்தால் நதி, கடல்,
மலை,
ஆசிரமம், தோட்டம், புண்யகரமான அயோத்யா முதலான நகரங்கள், சாலிகிராமம் இவை இருக்கும்
தேசங்கள்,
இவற்றை சுற்றிலும் இருக்கும் தேசங்கள், கர்மங்களை செய்வதற்கு ஏற்றவை. இவை இல்லாதிருந்தாலும், மான்கள் வசிக்கும் இடமாக இருந்தால் அவை தகுந்த இடம் என்பது கருத்து.
இந்த ஸ்லோகத்தின் பின்பகுதியில் இதற்கு எதிர்ப்பதமான
வாக்கியங்களை சொல்கிறார். மான்களே வசித்து வந்தாலும், ஸௌவீர, கீகட,
அஸம்ஸ்ம்ருத, ஈரண முதலான தேசங்கள் மட்டும் எப்போதும் அசுத்தமானவை என்று அறியவேண்டும்.
ஸௌவீர என்னும் தேசம் 56 தேசங்களில் ஒன்று.
கீகட என்றால் நதி, சாலிகிராமம், மலை இவை எதுவுமே இல்லாத தேசமாகும்.
அஸம்ஸ்ம்ருத என்பது எப்போதும் மதவெறியர்கள் வசிக்கும்
ஊராகும்
ஈரண என்பது கடலில் நடுவே இருக்கும் சிறு தீவுகள்.
இவை அனைத்தும் கர்மங்களை செய்வதற்கு தகுதியற்ற
தேசங்கள் ஆகும்.
என்றால், நதி, கடல்,
ஆகியவை இருந்தாலும் ‘யதினாத்யுஷிதா:கல்யை’ அங்கத்திய மனிதர்கள் அனைவரும் தமோ யோக்யர்களே ஆகியிருக்கிறார்கள். அங்கு
வசிப்பதற்கும் யோக்யமில்லை என்றபின், கர்ம செய்வதற்கு கண்டிப்பாக
தகுதியில்லை என்பது கருத்து. இதில் ஒரு சிறப்பு உண்டு.
கலைரத்யுஷிதாஷ்சாபியதி ஸத்பிரதிஷ்டிதா: |
கர்மண்யா ஏவதேஞ்ஞேயா விஷ்ணு லிங்கானி யத்ரச ||
அயோக்யர்கள் வசித்தாலும், சஜ்ஜனர்கள் அந்த இடத்தில் வசித்திருந்தால் அது சிறந்த இடமேயாகும். மற்றும் விஷ்ணு
மூர்த்திகள் இருக்கும் இடங்களும் கர்மங்களை செய்வதற்கு ஏற்ற இடமாகும். தேசங்களை
சொன்னபிறகு, கர்ம யோக்யமான காலத்தை சொல்கிறார்.
கர்மண்யோ குணர்வாகாயோ த்ரவ்யத: ஸ்வத ஏவவா |
யதோ நிவர்ததெ கர்மஸதோஷோ கர்மக: ஸ்ம்ருத: ||9
யாகாதி கர்மங்களை செய்வதற்கு யோக்யமான காலமே சுத்தமான
காலமாகும். காலத்தினால் சுத்தி என்றும் த்ரவ்யத்தினால் சுத்தி என்றும் இவை இரு
விதங்கள். அவற்றில், சந்த்யாகாலம் ஆகியவை கர்மங்களை செய்வதற்கான சுத்தமான காலம். த்ரவ்யத்தினால்
காலத்திற்கு கர்மண்ய (தகுதி / உறுதி) என்றால், வசந்த காலம் ஆகியவற்றை யாக காலம் என்றனர். வசந்த ருதுவின் சம்பந்தத்தினால்
இந்த காலத்திற்கு கர்மண்ய என்னும் நிலை கிடைத்தது. எந்த காலத்தில் கர்மங்களை
செய்யக்கூடாதென்று தடை இருக்கிறதோ அக்காலத்திற்கு சதோஷ (அசுத்தி) காலம் என்று
அறியவேண்டும். அது என்னவெனில்: ‘நிஷேதோமத்ய்மாராத்ரி: ராக்ஷஸானந்துகோசர:’. தடை செய்யப்பட்ட அர்த்த ராத்திரியில் கர்மங்களை செய்தல், அசுரர்களின் பலன் ஆகிறது. அது அசுர யோக்யமான காலம் என்று சொல்வதனால் அந்த
காலத்தை அசுத்தி என்று கூறினர். அதாவது கர்மம் செய்வதற்கு தகுதியான காலம் இல்லை
என்று பொருள்.
த்ரவ்ய சுத்தி பல வகைப்படும் என்று சொல்கின்றனர்.
த்ரவ்யஸ்ய ஷுத்யைஷுதீச த்ரவ்யேண வசனேனவா |
ஸம்ஸ்காரேணாதகாலேன மஹத்வால்பதயாதவா || 10
ஷக்த்யாஷக்த்யாச வாக்புத்யா ஸம்ருத்யா வாததாத்மன: |
அன்யேஷுத்யந்தி ஹி ததாதேஷா வஸ்தானுஸாரத: |11
தான்யதார்வஸ்தி தந்தூனாம் ரஸதைஜஸ சர்மணாம் |
காலவாய்வக்னி ம்ருத்தோயை: பார்திவானாயுதாயுதை: |12
த்ரவ்யங்களை சுத்தி செய்வதற்கு: வேறு சில
த்ரவ்யங்களாலும், வாக்கியத்தாலும், ஸம்ஸ்காரத்தாலும், காலத்தினாலும் பெரிய பொருள் சிறிய பொருள் ஆகிய பேதத்தினாலும் என பல விதங்களாக
சுத்தியை அறியலாம். இதன் விவரம்:
தாமிரம் முதலான பாத்திரங்களுக்கு எச்சில், கழிவு ஆகியவற்றால் அசுத்தி உண்டாகிறது. அது புளி போன்ற பதார்த்தங்களால் சுத்தி
ஆகிறது. மிகப்பெரிய பாத்திரங்கள் அசுத்தி ஆனால், அவை பெரியவர்களின் வாக்கினால் சுத்தி ஆகிறது. அந்த பாத்திரங்களை
தூக்குவதற்கும், கழுவுவதற்கும் சாத்தியம் இல்லையென்றால் மட்டுமே, அவை பெரியவர்களின் வாக்கினால் சுத்தம் ஆகிறது. சில பதார்த்தங்கள் கழுவுவதால்
மட்டுமே சுத்தி ஆகிறது. பூ, பித்தளை, தாமிரம் ஆகியவை கழுவினால் மட்டுமே சுத்தம் ஆகின்றன. இல்லையெனில் அவை அசுத்தமே.
சில எப்போதும் அசுத்தமே. அதாவது: பகவத் சம்பந்தமல்லாத
எவையும் அசுத்தமே என்று பொருள். மிலேச்சர்களின் வீடுகள் அசுத்தமே. ஆனால் அவை
காலப்போக்கில் சுத்தமாகின்றன. அது எப்படியெனில், சில காலம் அந்த வீட்டினை காலியாக விட்டிருந்தால், அவற்றை சுத்தம் எனக் கருதலாம். அன்னாதிகள் செய்தபிறகு, ஒரு யாமம் வரை அவை சுத்தியாகும். ஒரு யாமத்திற்குப் பிறகு அன்னத்திற்கு
அசுத்தி வருகிறது. அன்னம் என்று சொன்னதால், பக்ஷ்யாதிகள் இதில் சேர்ந்ததில்லை.
வினோதகேன யத்பக்வம் யத்பக்வம் சக்ருதாதினா |
ஸர்வம் தத்பலவத்க்ராஹ்யம் ||
என்னும் தர்ம சாஸ்திர வாக்கியத்தால், நீர் சேர்க்காத பால், நெய்யினால் செய்யப்பட்ட
பதார்த்தங்கள், பழங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.
அன்னாதீனாம் மஹத்வேஷ்வாதி ஸ்பர்ஷேஸ் புஷ்பாம்ஷத்
யாகேன ஸிஷ்டஸ்ய ஷுத்தி: |
அதவான்னஸ்ய அல்பதயா ஷுனாஸ்ப்ருஷ்டஸ்யத ஸ்காஷுத்தி: ||
அன்னாதிகளை (பல பாத்திரங்களில்) சமைத்து
வைத்திருந்தால், அதன் ஏதாவது ஒரு பாகத்தை (பாத்திரத்தை), நாய் தொட்டு விட்டால், அந்த பாகத்தை (பாத்திரத்தை)
மட்டும் விட்டுவிட்டு, மிச்ச பாகங்களை (பாத்திரங்களை) நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில்
அன்னம் இருந்து, அந்த பாத்திரத்தை நாய் தொட்டுவிட்டால், அது முழுக்க அசுத்தி ஆகிறது. மிகச் சிறியதான எறும்பு போன்றவை சமையல்
பதார்த்தங்களை தொட்டுவிட்டால், அப்பதார்த்தங்கள் அசுத்தி
ஆவதில்லை. பெரியதான பிராணிகள் சமையல் பதார்த்தங்களை தொட்டுவிட்டால், அவை அசுத்தி ஆகின்றன.
இத்தகைய அசுத்தி ஆனால், கால,
த்ரவ்ய சக்தி உள்ளவர்கள், தீர்த்த யாத்திரை, சந்திராயன விரதம் முதலானவற்றை பிராயச்சித்த ரூபமாக செய்தால், அவன் சுத்தமாகிறான். நோய்களால் நோயாளி ஆனவன், தேவதா ஆராதனை, நித்ய கர்மானுஷ்டானங்களை செய்வதால், சுத்தமாகிறான். மகாத்மரின்
வசனத்தாலும் அவன் சுத்தமாகிறான். இப்படி அவன் சுத்தமானாலும், மகாத்மர், இவன் அசுத்தமானவர் என்றால், அவன் அசுத்தமானவனே.
புத்திக்கு சுத்தி / அசுத்தியை இவ்வாறு அறியவேண்டும்.
சுராபானங்களில் புத்தி நுழைந்தால், புத்திற்கு அசுத்தி வந்திருக்கிறது
என்று பொருள். ஹரிகதா ஸ்ரவணாதி புண்ய கர்மங்களால் புத்திக்கு சுத்தி ஆகிறது.
ஒருவனுக்கு இருக்கும் செல்வத்தினால் அவனுக்கு சுத்தி / அசுத்தி ஆகிறது.
எப்படியெனில், தன்னிடம் இருக்கும் த்ரவ்யத்தை, சத்பாத்ரர்களில் தானம் செய்தால், அவன் சுத்தனாகிறான். அசத்பாத்ரர்களுக்கு தானம், வைஷ்யா முதலானவர்களுக்கு பணம் செலவழித்தால் அசுத்தி ஆகிறான்.
ஸ்னானதான தபோவஸ்தாவீர்ய சம்ஸ்கார கர்மபி: |
மதப்யாஸான்மன: ஷௌசம்க்ருத்வா கர்மாசரேத்விஜ: ||14
மந்த்ரஸ்ய ச பரிஞானம் கர்ம ஷுத்திர்மதர்பணம் |
தர்ம: ஸம்பாத்ய தேஸத்பி: அதர்மஸ்து விபர்யயை: ||15
ஸ்னானம், தானம், தவம் இவற்றை யோக்யதைக்கேற்ப செய்ய வேண்டும். ஊர்த்வ புண்ட்ர தாரணம், சந்தியாவந்தனம் ஆகியவற்றுடன், என் பூஜை வரைக்குமான கர்மங்களை
செய்து,
இதனால் மனதை தூய்மையாக்கிக் கொண்டபிறகு, தன் இஷ்டமான விசேஷ கர்மங்களை செய்யவேண்டும். மந்திரங்களை ஜெபித்து, சாதனைகளை செய்யவேண்டுமெனில், மந்திரார்த்த ஞானத்தை சம்பாதிக்க
வேண்டும். செய்த கர்மங்கள் மறுபடி சுத்தி ஆகவேண்டுமெனில், அவற்றை எனக்கு அர்ப்பிக்க வேண்டும். அதாவது, ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து என்று அர்ப்பித்தால், கர்ம சுத்தி ஆகிறது என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான்.
மேலும் அதிக விவரங்களை அறியவேண்டுமெனில், பாகவத 11ம் ஸ்கந்தத்தை பார்க்கலாம். இங்கு பிராயச்சித்த ரூபமான, கர்மங்களின் சுத்தியை, கால த்ரவ்ய சுத்தியை
சொல்லியிருக்கின்றனர். ஆனாலும், வெறும் பிராயச்சித்த ரூபமான
கர்மங்களை செய்து கொண்டாலும், அஞ்ஞானிகளுக்கு அவர்களின் அனைத்து
பாவங்களும் பரிகாரம் ஆவதில்லை. பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் திடமாக மனதை வைத்து
பஜனைகளை செய்யாமல், வெறும் கர்மங்களை மட்டும் செய்தால், அதிலிருந்து எந்த பலன்களும்
கிடைப்பதில்லை. இதனால் நித்ய கர்மங்கள், சந்த்யா வந்தனங்கள் ஆகியவற்றை
செய்தே ஆகவேண்டும். அந்த கர்மங்கள் பகவந்தனின் அர்ப்பணையால் சுத்தி ஆகிறது.
நைமித்திக கர்மங்கள், தானாதிகளை செய்தால், ஸ்வர்க்காதி போகங்களுக்கு அவை
பயன்படுகிறதே தவிர, முக்திக்கு அவை சாதனமல்ல. ஆகையாலேயே, தாசார்யர், ‘கர்மமே தாரகம் என்பவர்கள் மூர்க்கர்’ என்று சொல்கிறார்.
ஆகையால், கர்ம மார்க்கத்தைவிட ஞான மார்க்கமே
உத்தமம் என்று அறியவேண்டும். மற்றும் ‘கெசரினிந்த கெசரு தொளெவந்தெ கர்மத
பல’ என்னும் வாக்கியத்தை தாசார்யர் சொல்கிறார்.
க1மலஸம்ப4வ ஷர்வ ஷக்ராதி3
அமரரெல்லரு இவன து3ரதி3
க்ரம மஹிமெக3ள மன வசனதி3ம் ப்ராந்தகா3ணத3லெ |
ஸ்ரமிதராகி3 பதா3ப்3ஜகல்ப
த்3ருமத நெளலா ஸ்ரயிஸி லக்ஷ்மீ
ரமண ஸந்தெயிஸெந்து3 ப்ரார்த்தி2பரதி1 ப4கு3தி1யிந்த3 ||18
கமலசம்பவ = பிரம்மதேவர்
ஷர்வ = ருத்ரதேவர்
ஷக்ராதி = இந்திரன் முதலான
அமரரெல்லரு = தேவதைகள் அனைவரும்
இவன = இந்த பரமாத்மனின்
துரதிக்ரம = அபாரமான மகிமைகளை
மனவசனதிம் = மனதாலும், வசனத்தாலும்
ப்ராந்தகாணதலெ = எல்லைகளை காணமுடியாமல்
ஸ்ரமிதராகி = கஷ்டங்களை அடைந்து
பதாப்ஜ கல்பத்ரும = பாதாரவிந்தம் என்னும் கல்பவ்ருக்ஷத்தின்
நெளல = நிழலை
ஆஸ்ரயிஸி = அடைந்து
லட்சுமிரமண = ஹே லட்சுமிபதியே
ஸந்தெயிஸெந்து = என்னை காப்பாற்று என்று
அதி பகுதியிந்த = மிகுந்த பக்தியுடன்
ப்ரார்த்திபரு = பிரார்த்திக்கின்றனர்.
லோகேஷரான பிரம்மதேவர், ருத்ரதேவர், இந்திரதேவரே முதலான மகானுபாவர்கள் அனைவரும், இந்த பரமாத்மனின் அபாரமான மகாமகிமைகளை, மனோ,
வாக்,
காயங்களால் ஸ்தோத்திரம் செய்து, அவற்றின் எல்லை
களை காணமுடியாமல், அவனின் பாதாரவிந்தங்கள் என்னும் கல்பவ்ருக்ஷத்தின் நிழலை அடைந்து, ஹே லட்சுமிகாந்தனே, நம்மை காப்பாற்று என்று பரம
பக்தியுடன் பிரார்த்திக்கின்றனர். இப்படியிருக்கையில், மற்ற மக்கள் பகவந்தனை ஆராதிக்காமல் இருந்தால், அவர்களின் கதி என்ன என்று சொல்லவும் வேண்டுமோ? என்றைக்கும் நற்கதி கிடைக்காது என்பது கருத்து.
வாரிசரக3ளெனிஸுவ த3ர்து3ர
தாரகக3ளெந்த3ரிது3 பே4க3வ
நேரி ஜலதி4ய தா3டுவேனு எம்பு3வன தெரனந்தெ |
தாரதம்யஞான ஷூன்யரு
ஸூரிக3ம்யன திளியலரியதெ3
ஸௌர ஷைவ மதானுக3ர நனுஸரிஸி கெடு3திஹரு ||19
தர்மர = தவளைகள்
வாரிசரகளெனிஸுவ = தண்ணீரில் வசிக்கும் பிராணிகள்
என்று அழைக்கப்படுகின்றன
தாரககளெந்தரிது = அந்த தவளைகளே நம்மை
இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றன என்று நினைத்து
பேகவனேரி = அந்த தவளையின் மேல் ஏறி அமர்ந்து
ஜலதிய = கடலை
தாடுவேனு எம்புவன தெரனந்தெ = தாண்டுவேன் என்பவனைப்
போல
தாரதம்ய ஞானஷூன்யனு = தாரதம்ய ஞானம் இல்லாதவன்
ஸூரிகம்யன = ஞானிகளிடமிருந்து அறியப்படும்
மகிமைகளைக்கொண்ட ஸ்ரீபரமாத்மனை
திளியலரியதெ = ஹரியே சர்வோத்தமன், பிரம்மாதி அனைத்து சேதனர்களும் அவனின் அதீனர்கள் என்று அறியும் தகுதி இல்லாமல்
ஸௌர ஷைவ மதானுகர = ஸௌர = சூரியனே சர்வோத்தமன் என்று
வணங்குபவர்களின் மதம்
உலகத்தில் கடல் முதலான நீர்நிலைகளை தாண்ட
வேண்டுமெனில், படகுகள், தோணிகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இதனை அறியாமல், படகுகளும் தண்ணீரில் மிதக்கின்றன, தவளைகளும் தண்ணீரில் மிதக்கின்றன
ஆகையால் நான் தவளையின் மீதேறி ஏன் கடலை தாண்டக்கூடாது என்று கேட்டு, அவற்றின் மேல் அமர முயல்பவன் எப்படி தோல்வியடைகிறானோ, அப்படியே, பலரும், ஹரி சர்வோத்தமன், அவனைவிட லட்சுமிதேவியர் பற்பல குணங்கள் குறைவானவர், பிரம்ம வாயுகள் அவர்களைவிட குறைவானவர்கள் என்னும் தாரதம்யத்தை போதிக்கும் மத்வ
மதத்தை விட்டு, சூரியனே சர்வோத்தமன், சிவனே சர்வோத்தமன் என்று உபாசனை
செய்பவர்களின் மதங்களை பின்பற்றி, கெட்டுப் போகிறார்கள்.
க்ஷுதெ4யகோ3ஸுக2 போகி3 கானன
ப3த3ரிப2லக3ள பேக்ஷெயிந்த3லி
பொதெ3யொளகெ3 ஸிக3பி3த்து3 பா3ய்தெரெவவன தெரனந்தெ |
விதி3பிதன பூஜிஸதெ3 நின்னய
உத3ரகோ3ஸுக2 ஸாது3 லிங்க3
ப்ரத3ருஷகராராதிஸுத ப3ளலதி3ரு ப4வதொ3ளகெ3 ||20
க்ஷுதெயகோஸுக = பசியை போக்கிக் கொள்ளும் பொருட்டு
கானன பதரி பலகள = காட்டில் இருக்கும் இலந்தைப்
பழங்களை
அபேக்ஷெயிந்தலி = சாப்பிட வேண்டும் என்ற ஆசையில்
போகி = காட்டிற்குச் சென்று
பொதெயொளகெ சிகபித்து = முள் மரங்களில் சிக்கிக்கொண்டு
பாய்தெரெவவன தெரனந்தெ = தவிப்பவனைப் போல
விதிபிதன = பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மனை
பூஜிஸதெ = பூஜிக்காமல்
நின்னய உதரகோஸுக = வயிற்றுப் பாட்டிற்காக
ஸாதுலிங்க ப்ரதருஷகர = ஸாதுக்களைப் போல வேடம் பூண்ட, பகவத் பக்தி கொஞ்சமும் இல்லாத ஞான சூன்யர்களை
ஆராதிஸுத = வணங்கியவாறு
பவதொளகெ = சம்சாரத்தில்
பளலதிரு = துன்பப் படாமல் இரு.
மனிதர்கள் தமக்கு பசித்தால், ஊரிலேயே கிடைக்கும் அன்னத்தைத் தேடாமல், காட்டிற்குச் சென்று அங்கிருக்கும் இலந்தைப் பழத்தை தின்பேன் என்று சொல்லி, முட்கள் நிறைந்த மரங்களில் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். அதுபோல, பிரம்மதேவருக்குத் தந்தையான, அனைத்து உலகங்களுக்கும் தந்தையான ஸ்ரீபரமாத்மனை ஆராதிக்காமல், பார்த்தால் மிகப்பெரிய சாதுக்களைப் போல இருக்கும், வெறும் வேஷதாரிகளின் கபடத்தில் மயங்கி, அவர்களையே ஆராதித்து, உன் வயிற்றை நிரப்பிக்கொண்டு, இந்த சம்சாரத்தில் கஷ்டங்களை அனுபவிக்காதே.
No comments:
Post a Comment