க்ஷோணிபதி ஸுதனெனிஸி கை து3
க்3கா3ணிகொ3ட்டுவ தெரதி3 ஸுமனஸ
தே4னு மனெயொளகி3ரலு கோ3மய ப3யஸுவந்த3த3லி |
வேணுகா3னப்ரியன அஹிக ஸு
கா2னுப4வ பே3ட3த3லெ லகுமி
ப்ராண நாத2ன பாத3ப4கு3தி1ய பே3டு3 கொண்டா3டு3 ||21
க்ஷோணிபதி = பூமியை ஆளும் மகாராஜனின்
ஸுதனெனிஸி = மனம் என்று நினைத்துக் கொண்டு
துக்காணிகெ = பணத்திற்காக
கையொட்டுவ தெரதி = அவனை ஆதரித்து, கை தட்டுவதைப் போல
ஸுமனஸதேனு = தேவப்பசுவான காமதேனு
மனெயொளகிரலு = வீட்டில் இருக்கையில்
கோமய = மாட்டுச் சாணியை
பயசுவந்ததலி = விரும்புவதைப் போல
வேணுகானப்ரியன = வேணுகான ப்ரியனான ஸ்ரீகிருஷ்ணனை
(வேண்டாமல்)
அஹிக சுகானுபவ பேடதலெ = விஷய போகாதிகளைக் கொடு என்று
வேண்டாமல்
லகுமிபிராண நாதன = லட்சுமிதேவிக்கும், முக்யப்ராண தேவருக்கும் கூட ஸ்வாமியான ஸ்ரீபரமாத்மனின்
பாதபகுதிய = பாதாரவிந்தங்களில் பக்தியை
பேடு = கொடு என்று வேண்டு
கொண்டாடு = அந்த பரமாத்மனையே ஸ்தோத்திரம் செய்.
மகாராஜனின் மகனாக இருந்து, இரு காசுக்காக இன்னொருவரை ஆதரித்து கை தட்டுவது எப்படியோ; அல்லது, வீட்டில் காமதேனுவே இருந்தாலும், சாணி வேண்டும் என்று பல
வீடுகளுக்குச் செல்பவனின் யோக்யதை எப்படி இருக்குமோ; அப்படியே, லட்சுமிபதியான பகவந்தனின் அருளைப் பெற்று அஹிக சுகங்களை வேண்டுபவர்களும்
இருக்கிறார்கள்.
மகாராஜனின் மகனுக்கு வீட்டில் குறைதான் என்ன? அப்படிப்பட்டவன் இரு காசுக்காக இன்னொருவரிடம் கை தட்டினால், அவனின் யோக்யதை எவ்வளவுக்கு மற்றவர்கள் சிரிப்பதாக இருக்குமோ சிந்தியுங்கள்.
அடுத்து,
வேண்டிய அனைத்தையும் கொடுக்கும் காமதேனுவையே வீட்டில் வைத்திருப்பவன், சாணிக்காக வீடுவீடாக சென்றால் அவன் எப்படிப்பட்டவன்?
இதைப்போலவே, முக்தியைக் கொடுத்து, ஸ்வரூபானந்தத்தை தரிசனம் செய்விக்கும் பரமாத்மனிடம், அல்பமான, தற்காலிகமான ஐஹிக சுகங்களை வேண்டுபவனின் யோக்யதையும் இருக்கிறது. ஆகையால், இத்தகைய அல்பமான விஷயங்களைக் கேட்காமல் ஸ்ரீபரமாத்மனை ஆராதனை செய்து அவனிடம்
த்ருடமான பக்தியையே வேண்ட வேண்டும் என்பது கருத்து.
நந்தி3வாஹன ராத்ரி ஸாத3னெ
ப3ந்த3 த்3வாத3ஷி த3ஷமி பைத்ருக
ஸந்தி3ஸிஹ ஸமயத3லி ஸ்ரவணவ த்யஜிஸுவந்தெ ஸதா3 |
நிந்த்3யரிந்த3லி ப3ந்த3 த்3ரவ்யவ
கண்தெரெது3 நோட3த3லெ ஸ்ரீமதா3
நந்த3 தீர்த்தந்தர்க3தன ஸர்வத்ர ப4ஜிஸுதிரு ||22
நந்திவாஹன ராத்ரி = சிவராத்திரியின் நாளிலும்
ஸாதனெ பந்த த்வாதஷி = அல்ப த்வாதஷியான நாளிலும்
தஷமி = தசமி நாளிலும்
பைத்ருக = பித்ரு ஸ்ரார்த்தத்தின் நாளிலும்
ஸந்திஸித ஸமயதலி = சிரவண நட்சத்திரம் வந்த
பட்சத்திலும்
சிரவணவ = அந்த நாளில் சிரவண உபவாசத்தையும்
த்யஜிசுவந்தெ = விடுவதைப்போல
சதா = எப்போதும்
நிந்த்யதிந்தலி = தவறானவர்களிடமிருந்து
பந்த த்ரவ்யவ = வந்த பொருட்களை
கந்தெரெது நோடதலெ = கண் திறந்து பார்க்காமல்
ஸ்ரீமதானந்த தீர்த்தந்தர்கதன = ஸ்ரீமன்
மத்வாசார்யரின் அந்தர்கதனான ஸ்ரீபரமாத்மனை
சர்வத்ர பஜிஸுதிரு = எப்போதும் வணங்கிக் கொண்டிரு.
விஷ்ணு பஞ்சகம் செய்பவர்கள், சில குறிப்பிட்ட நாட்களில் சிரவண நட்சத்திரம் வந்தால் உபவாசம் செய்யக்கூடாது
என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட புராணத்தில்:
பித்ரப்தே ரௌத்ரிகாப்தேச ஸாதன த்வாதஷீதினெ |
தஷம்யாஞ்சைவ விபுதைர்னோபோஷ்யம் விஷ்ணு தத்பரை: ||
தாய், தந்தையரின் சிரார்த்த நாட்களிலும், மகா சிவராத்திரி நாளிலும், த்வாதசி 12 நாழிகைக்கு குறைவாக இருக்கும் நாளிலும், தசமியன்றும், சிரவண நட்சத்திரம் வந்தால் அன்று உபவாசம் கிடையாது என்று
சொல்லியிருக்கிறார்கள். விஷ்ணு பஞ்சக நிர்ணயத்தில்:
விஷ்ணுவ்ரதாபிமானாத்வா ஸ்ரவணேசாபிமானத: |
ய: குர்யாத் விஷ்ணு பக்தஸ்து விஷ்ணு த்ரோஹின ஸம்ஷய: ||
ஸதத்பலம் ஷிவேதத்வா யாதிகோரம் மஹத்தம: ||
விஷ்ணு விரதம் என்னும் அபிமானத்திலோ, சிரவண நட்சத்திரம் என்னும் அபிமானத்திலோ, சிவராத்திரியன்று சிரவணத்திற்கான உபவாசத்தை எந்தவொரு விஷ்ணு பக்தன் செய்கிறானோ, அவன் விஷ்ணு த்ரோகி எனப்படுகிறான். அந்த உபவாசத்தின் பலனை, ஈஸ்வரனுக்குக் கொடுத்து, இவன் கோரமான நரகத்தை அடைவான் -
என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும்:
விஷ்ணுவ்ரதஸ்தோ ராஜேந்த்ரமாதா பித்ரோர் ம்ருதிஹனி |
குர்யாத் திவிதிவச் ஸ்ரார்த்தம் சேஷம் புஞ்சீத
பந்துபி: ||
அன்யதாகர்ம லோப:ஸ்யாத் வ்ரத பங்கோபி ஜாயதே ||
விஷ்ணு பஞ்சக விரதத்தை செய்பவன், தன் தாய் தந்தைகளின் சிரார்த்த நாட்களில், சிரவண, பௌர்ணமி, அமாவாசை வந்தால், அன்று விதிப்படி சிரார்த்தம் செய்து, அந்த சேஷத்தை தன் சுற்றத்துடன்
சேர்ந்து,
தானும் உண்ண வேண்டும். அப்படியில்லை எனில், கர்ம நஷ்டம் வருகிறது. விரதபங்கம் ஆகிறது என்று சொல்கிறார்.
இதே அபிப்பிராயத்தையே தாசார்யரும் இங்கே சொல்கிறார்.
இப்படி விஷ்ணு பஞ்சகத்தில், சிரவண உபவாசம் மிக
முக்கியமேயானாலும், எப்படி சில நாட்களில் விட்டுவிடுகின்றனரோ, அப்படி, விதி நிஷேதங்களை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்வதானாலும், நீசர்களிடமிருந்து த்ரவ்யம் பெறுவதை விட்டு, அந்த த்ரவ்யத்தை கண்ணால்கூட பார்க்கக் கூடாது. இத்தகைய நியமங்களுடன்
ஸ்ரீமதானந்த தீர்த்தரின் அந்தர்யாமியான ஸ்ரீபரமாத்மனை துதிக்க வேண்டும் என்பது
கருத்து.
உத3ய வ்யாபினி த3ருஷ பௌர்ணிம
அதி4கயாம ஸ்ரவண அபி4ஜித்
ஸத3னவைதி3ரெ மாள்ப தெரத3ந்த3த3லி ஹரிஸேவெ |
விதி4 நிஷேத4க3ளேனு நோட3தெ3
விதி4ஸுதிரு நித்யத3லி தன்னய
ஸத3னதொ3ளகி3ம்பி3ட்டு ஸலஹுவ ப4க்தவத்ஸலனு ||23
உதய வியாபினி = உதய காலத்தில் வியாபித்திருக்கும்
தர்ஷ = அமாவாசை
அதிகயாமவு = ஒரு யாமத்திற்கு கொஞ்சமே அதிகம்
இருக்கும் நாழிகைகள் இருக்கும்
பௌர்ணிம = பௌர்ணமி
அபிஜித் = அபிஜித் முகூர்த்தத்தை
சதனவைதிரெ = வியாபித்திருந்தால்; அதாவது 12 நாழிகைகளுக்கு மேல் வியாபித்திருக்கும் ஸ்ரவண, முதலான நாட்களில், விஷ்ணு பஞ்சக உபவாசங்களை செய்பவர்கள்
ஹரிஸேவெ = உபவாச ரூபமான ஹரிபூஜையை
மாள்ப தெரதந்தலி = செய்வதைப் போல
விதி நிஷேதகளேனு நோடதெ = செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்று எதையும் பார்க்காமல்; இது நல்லது, இது கெட்டது என்று எதையும் யோசிக்காமல், நீ செய்த கர்மங்களை
நித்யதலி விதிஸுதிரு = பரமாத்மனுக்கு அர்ப்பித்தவாறு
இரு
பக்தவத்ஸலனு = பக்தர்களிடம் பரம வாத்ஸல்யத்தைக்
கொண்டுக்கும் ஸ்ரீஹரி
தன்னய = தனது
ஸதனதொளகெ = வீட்டில்
இம்பிட்டு = நன்றாக வைத்துக்கொண்டு
ஸலஹுவ = காப்பாற்றுவான்.
விஷ்ணு பஞ்சக உபவாசம் செய்யும்போது ஒரு மாதத்திற்கு 5 உபவாசங்களை செய்யவேண்டும். அவை இரு ஏகாதசி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் என 5 உபவாசங்கள் ஆகின்றன. ஏகாதசி விஷயத்தில், விடியற்காலையில் தசமி இருந்தாலும், அடுத்த நாளே ஏகாதசி செய்யவேண்டும்
என்று அனைத்து வைஷ்ணவர்களும் பின்பற்றுகின்றனர்.
உதய வ்யாபினி தர்ஷா பௌர்ணமா ஸேதுயாமிகா, மத்யான்ஹ வ்யாபினி ஸ்ரோணாவோ போஷ்யாவிஷ்ணதத்பரை
என்னும் தர்ம சாஸ்திரத்தின் வாக்கியத்திற்கேற்ப, சூர்யோதயத்தில் இருக்கும் அமாவாசையன்றும் (7 1/4 நாழிகை), ஒரு யாமமாவது வியாபித்திருக்கும் பௌர்ணமியன்றும், மத்யானம் என்றால் காலை 6 நாழிகை, சந்தி காலம் 7 நாழிகை என மொத்தம் 13 நாழிகைகள் கழிந்தால், மத்யானம் வருகிறது. மதியத்தில் வியாபித்திருக்கும் ஸ்ரவணத்திலும் உபவாசம்
செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியாக இந்த நாட்களில், விஷ்ணு பஞ்சகம் செய்பவர்கள், எப்படி உபவாசத்தை விடாமல்
செய்கிறார்களோ, அப்படியே நீ செய்யும் விதி, நிஷேத கர்மங்களை, கொஞ்சம் கூட சந்தேகப்படாமல், பரமாத்மனுக்கு அர்ப்பணம் செய்.
அப்படி செய்தால், பரமாத்மன் தன் உலகத்தை உனக்குக் கொடுத்து வாத்ஸல்யத்துடன் உன்னை
காப்பாற்றுவான்.
ஞான ஞேய ஞாத்ருவெம்ப3பி4
தா4ன தி3ம்பு3த்4யாதி3க3ளதி4
ஷ்டானத3லி நெலெஸித்3து3 கரெஸுவ தத்ததா3ஹ்வயதி3 |
பா4னுமண்ட3லக3 ப்ரத3ர்ஷக
தானெனலு வஷனாகு3வனு ஷுக
ஷௌனகாதி3 முனீந்த்3ர ஹ்ருத3யாகாஷ க3தசந்த்ர ||24
ஞான = அறிவு
ஞேய = அறிந்து கொள்ளவேண்டிய விஷயம்
ஞாத்ரு = விஷயத்தை அறிபவன்
எம்பபிமானதிம் = இந்த பெயர்களால்
புத்யாதிகள அதிஷ்டானதலி = புத்தி, ஞானேந்திரிய முதலான அதிஷ்டானங்களில்
நெலெசித்து = இவற்றில் நிலைத்திருந்து
தத்ததாஹ்வயதி = அந்தந்த பெயர்களில்
கரெஸுத = அழைத்துக் கொண்டு
ஷுக ஷௌனகாதி முனீந்த்ர = சுகாசார்யர், சௌனக முதலான முனிவர்கள்
ஹ்ருதயாகாஷ கதசந்திர = இவர்களின் இதயாகாஷத்தில்
வசிக்கும் சந்திரனைப் போல குளிர்ச்சி தரும் குணத்தைக் கொண்ட
பானுமண்டலக = சூர்யமண்டலவாசியாக
ப்ரதர்ஷக தானெனிஸி = ஞானோபதேசகன் என்று நினைத்து
வஷனாகுவனு = பக்தியுடன் தியானிப்பவர்களுக்கு
வசமாகிறான்.
ஸ்ரீபரமாத்மன், ஞானத்துடன் அறிந்து கொள்ளத் தகுதியான வஸ்துக்களில் அந்தந்த ரூபமாக இருந்து, அதைப்பற்றிய ஞானம் உள்ளவர்களில் வியாபித்திருந்து அந்தந்த பெயர்களில் புத்தி, ஞானேந்திரியங்களில் இருந்து, அந்தந்த வேலைகளால் அழைக்கப்பட்டு, மகா ஞானிகளான சுகாசார்யர், சௌனகாதி மஹரிஷிகள் ஆகியோரின்
ஹ்ருதயாகாஷவாசியாகி, அவருக்கு சந்திரனின் தரிசனத்தால் எப்படி குளிர்ச்சி உண்டாகிறதோ அதைப்போல
சுகத்தைக் கொடுத்தவாறு, சூர்யமண்டல மத்யவர்த்தியாகி
சவித்ரு நாமதேயத்தால் ஞான போதகன் என்று அழைத்துக்கொண்டு, தன்னை ஆராதனை செய்பவர்களின் வசமாகிறான்.
ஸ்ரீமனோரம மேரு த்ரிககு3
த்3தா4ம ஸத்கல்யாண கு3ணனி
ஸ்ஸீம பாவன நாம தி3விஜோத்தாம ரகு4ராம |
ப்ரேமபூர்வக நித்ய தன்ன ம
ஹாமஹிமெக3ள துதிஸுவரிகெ3 ஸு
தா4ம கொ3லித3ந்த3த3லி அகி2லார்த்த2க3ள கொடு3திப்ப ||25
ஸ்ரீமனோரம = லட்சுமிதேவியரின் மனதிற்கு ஆனந்தத்தை
தருபவன்
மருதேஷ = முக்யபிராணதேவருக்கு ஸ்வாமியானவன்
த்ரிககுத்தாம = ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களில் வீடு உள்ளவன்
நிஸ்ஸீம = எல்லைகள் அற்றவன்
குண = உத்தமமான மங்களகரமான குணங்களைக் கொண்டவன்
பாவனநாம = பவித்ரமான பெயருள்ளவன்
திவிஜோத்தாம = அனைத்து தேவதைகளைவிடவும் உத்தமன்
ரகுராம = ரகு வம்சத்தில் ராம நாமகனாக அவதரித்தவன்.
இத்தகைய ஸ்ரீபரமாத்மன்
ப்ரேமபூர்வக = பக்தியுடன் தன் மகாமகிமைகளை
துதிஸுவவரிகெ = ஸ்தோத்திரம் செய்பவர்களுக்கு
ஸுதாமகொலிதந்ததலி = குசேலனுக்கு அன்புடன் அனைத்து
ஐஸ்வர்யங்களையும் கொடுத்ததைப் போல
அகிலார்த்தகள கொடுதிப்ப = அனைத்து
இஷ்டார்த்தங்களையும் கொடுத்து அருள்வான்.
ஸ்ரீபரமாத்மனின் குணங்கள் மேற்கூறியவாறு உள்ளன.
அத்தகைய பரமாத்மனின் மகாமகிமைகளை பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்பவர்களுக்கு
ஸ்ரீபரமாத்மன், தான் குசேலனுக்கு அருளியதைப் போல அருளி அகிலார்த்தங்களைக் கொடுக்கிறான்.
தந்தெ3 தாய்க3ள கு3ருஹனரியத3
கந்த3 தே3ஷாந்தரதொ3ளகெ3 த
ன்னந்த3த3லி இப்பவர ஜனனி ஜனகரனு கண்டு3 |
ஹிந்தெ3 என்னனு படெ3த3வரு இவ
ரந்த3த3லி இப்பரல நானவ
ரெந்து3 காணுவெனெனுத ஹுடு3குவ தெரதி3 கோவித3ரு ||26
தந்தெ தாய்கள = பெற்றோரின்
குருஹ நரியத = அடையாளத்தை அறியாத
கந்த = குழந்தை
தேஷாந்தரதொளகெ = அவர்களை விட்டு வேறு இடங்களுக்குச்
சென்று
தன்னந்ததலி இப்பவர = தன்னைப்போல இருக்கும்
குழந்தைகளின்
ஜனனி ஜனகரனு கண்டு = அவர்களின் பெற்றோரைக் கண்டு
ஹிந்தெ என்னனு படெதவரு = முன்பு, என்னைப் பெற்றவர்களும்
இவரந்ததலி இப்பரெலை = இவர்களைப் போலவே என்னையும்
பார்த்துக் கொண்டிருப்பார்களே
நானு அவர = நான் அவர்களை
எந்து காணுவனெந்து = என்று காண்பேன் என்றவாறு
ஹுடுகுவ தெரதி = அவர்களை தேடுவதைப் போல
கோவிதரு = ஞானிகள்
இதன் விளக்கம் அடுத்த பத்யத்துடன் சேர்த்து
கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ருதி புராண சமூஹதொ3ளு பா4
ரத ப்ரதிப்ரதி பத3க3ளொளு நி
ர்ஜிதன கு3ண ரூபக3ள ஹுடு3குத பரமஹருஷத3லி |
மதிமதரு ப்ரதிதி3வஸ ஸார
ஸ்வத ஸமுத்3ரதி3 ஷபரியந்த3தி3
ஸதத ஸஞ்சரிஸுவரு காணுவ லவலவிகெயிந்த3 ||27
ஸ்ருதி புராண ஸமூஹதொளு = வேதங்களிலும், புராணங்களிலும்,
பாரத ப்ரதிபரதி பதகளொளு = பாரதத்தின் ஒவ்வொரு
பதங்களிலும்
நிர்ஜிதன = எப்போதும் வெற்றியாளனான ஸ்ரீபரமாத்மனின்
குணரூபங்களை
பரமஹருஷதலி = மிகவும் மகிழ்ச்சியுடன்
ஹுடுகுத மதிவந்தரு = புத்திவந்தர்கள்
ப்ரதி திவஸ சாரஸ்வத ஸமுத்ரதி = சரஸ்வதிக்கு
சம்பந்தப்பட்டவை சாரஸ்வத; அதாவது, பாரத பாகவதாதி சாஸ்திரங்கள் என்னும் கடலில்
ஷபரியந்ததி = மீனைப் போல இருக்கும்
லவலவிகெயிந்த = பரமாத்மனின் மகிமைகளை அறியவேண்டும்
என்னும் குதூகலத்துடன்
ஸதத = அனைத்து காலங்களிலும்
சஞ்சரிசுவரு = சஞ்சரித்துக் கொண்டிருப்பர்.
குழந்தையாக இருக்கும்போதே, தன் தாய் தந்தையரை தொலைத்துவிட்டு, வேறு இடத்திற்குப் போய், அங்கு வசிக்கும்போது, தன் வயதேயான குழந்தைகள், தங்களின் தாய் தந்தையர்களுடன் கொஞ்சப்படுவதைப் பார்த்து, தன் பெற்றோரின் அடையாளத்தை மறந்த அக்குழந்தை, எனக்கும் தாய் தந்தையர் இருப்பார்கள் அல்லவா? அவர்களை நான் எப்போது பார்ப்பேன் என்று அவர்களை தேடுவதைப் போல, ஞானிகள், பரமாத்மனைக் காணாமல், ஒவ்வொரு பதத்திற்கும் 10 அர்த்தங்களைக் கொண்ட மகாபாரதத்திலும், பாகவதாதி புராணங்களிலும், வேதங்களிலும், ஒவ்வொரு பதங்களிலும் காணும் பகவன் மகிமைகளை தேடியவாறு, கடலில் மீன்கள் ஆகாரத்தை தேடியவாறு, சஞ்சரிப்பதைப் போல, சாஸ்திரார்த்தம் என்னும் கடலில் பகவன் மகிமைகளை தேடியவாறு, இந்த பரம புருஷனான பரமாத்மனை என்று காண்போம் என்னும் எதிர்பார்ப்பில்
சஞ்சரிக்கின்றனர். அதாவது, பகவத் தரிசனத்திற்காக
சாஸ்திரார்த்த விஷயங்களில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று கருத்து.
மத்ஸ்ய கேதன ஜனக ஹரி ஸ்ரீ
வத்ஸலாஞ்சன நிஜ ஷரணஜன
வத்ஸல வராரோஹ வைகுண்டா2லய நிவாஸி |
சித்ஸுக2ப்ரத3 ஸலஹெனலு கோ3
வத்ஸ த3னி கொ3த3கு3வ தெரதி3 பர
மோத்ஸஹதி3 ப3ந்தொ3த3கு3வனு நிர்மத்ஸரர ப3ளிகெ3 ||28
மத்ஸ்ய கேதன ஜனக = மன்மதனின் தந்தையான
ஹரி = பரமாத்மனே
ஸ்ரீவத்ஸலாஞ்சன = ஸ்ரீவத்ஸ என்னும் சின்னம் உள்ளவனே
நிஜ ஷரண்ய ஜனவத்ஸல = தன்னை ஷரணன் என்று நம்பிய
மக்களிடம் வாத்ஸல்யம் உள்ளவனே
வராரோஹ = உத்தமமான வாகனத்தில் ஏறுபவனே; அல்லது லட்சுமிதேவியை துடையில் அமர்த்திக் கொண்டிருப்பவனே.
வைகுண்டாலய நிவாஸி = வைகுண்ட என்னும் வீட்டில்
வசிப்பவனே
சித்சுகப்ரத = சிதானந்தத்தை சஜ்ஜீவர்களுக்குக்
கொடுப்பவனே
ஸலஹெனலு = என்னை காப்பாற்று என்று
நிர்மத்ஸரர பளிகெ = உத்தமர்களில் வயிற்றெரிச்சல்
இல்லாதவர்களிடம்
கோ = பசு
வத்ஸ த்வனிகொதகுவ தெரதி = கன்று அழைக்கும் சத்தத்தைக்
கேட்டு பசு உடனடியாக ஓடி வருவதைப்போல
பரமோத்ஸஹதி = மிகுந்த உற்சாகத்துடன்
பந்தொதகுவனு = வந்து காப்பாற்றுவான்.
ஸ்ரீஹரே! என்னை காப்பாற்று என்று பக்தியுடன் வேண்டும்
பக்தர்களின் குரலைக் கேட்ட உடனேயே, கன்றின் குரலைக் கேட்டு ஓடி வரும்
பசுவைப் போல, ஸ்ரீஹரி அந்த பக்தரிடம் ஓடி வந்து அவனை காப்பாற்றுகிறான்.
ஸூரிக3ளிகெ3 ஸமீபக3 து3ரா
சாரிக3ளிகெ3ந்தெ3ந்து3 தூ3ரா
த்3தூ3ரதர து3ர்லபனெனிஸுவனு தை3த்யஸந்ததிகெ3 |
ஸாரிஸாரிகெ3 நெனெவவர ஸம்
ஸாரவெம்ப3 மஹோரக3கெ ஸ
ர்ப்பாரியெனிஸி ஸதா3 ஸுஸௌக்2யவனீவ ஸுஜனரிகெ3 ||29
ஸூரிகளிகெ = ஞானிகளுக்கு
ஸமீபக = எப்போதும் அருகில் இருப்பவன்
துராசாரிகளிகெ எந்தெந்து தூராத்தூரதர =
துராசாரிகளுக்கு எப்போதும் தூரம் இருப்பவன்
தைத்ய ஸந்ததிகெ = தைத்யர்களுக்கு
துர்லபனெனிஸுவனு = என்றைக்கும் கிடைக்காதவன் என்று
அழைக்கப்படுகிறான்
ஸாரிஸாரிகெ = ஒவ்வொரு கணமும்
நெனெவவர = நினைப்பவர்களின்
ஸம்ஸாரவெம்ப மஹோரககெ = சம்சாரம் என்னும் மிகப்பெரிய
பாம்பிற்கு
ஸர்ப்பாரியெனிஸி = கருடன் என்று நினைத்து
சுஜனரிகெ = சஜ்ஜனர்களுக்கு
சதா = எப்போதும்
ஸுஸௌக்யவனு = நல்லதையே
ஈவ = கொடுக்கிறான்.
ஞானிகளுக்கு பரமாத்மன் மிகவும் அருகில் இருக்கிறான்.
அதாவது,
எங்கு அழைத்தாலும் அங்கே ப்ரத்யட்சமாகிறான். பிரகலாதனுக்கு கம்பத்திலேயே
காட்சி அளித்தான். துரியோதனனை மகிழ்விப்பதற்காக, பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசர் அங்கு சென்று
திரௌபதியிடம் பிட்சை வேண்ட, அவளும் துர்வாசரின் சாபத்திற்கு
பயந்து,
ஸ்ரீகிருஷ்ணனை நினைத்த மாத்திரத்திலேயே, த்வாராவதியில் இருந்தாலும், உடனடியாக அங்கு வந்து சேர்ந்தான்
ஸ்ரீகிருஷ்ணன். இப்படியான உதாரணங்கள் பல உண்டு.
அயோக்யர்களின் ஹருதயாகாஷத்தில் இருந்தாலும்
அவர்களுக்கு மிகவும் தூரத்திலேயே இருக்கிறான். தைத்ய வம்சத்தவர்களுக்கு
என்றைக்கும் கிடைக்க மாட்டான். ஒவ்வொரு கணமும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும்
பக்தர்களுக்கு, பாம்பிற்கு கருடன் எப்படியோ அப்படி, சம்சாரப் பாம்பினை கருடன் போல
அழித்து,
ஸ்வரூபானந்தத்தைக் கொடுக்கிறான்.
சக்ர ஷங்க2 க3தா3ப்4ஜத4ர து3ர
திக்ரம து3ராவாஸ விதி4 ஷிவ
ஷக்ர ஸூர்யாத்3யமர பூஜ்யபதா3ப்ஜ நிர்லஜ்ஜ |
ஷுக்ரஸிஷ்யன அஷ்வமேத4
ப்ரக்ரியவ கெடி3ஸ்யப்3ஜ ஜாண்ட3வ
திக்ரமிஸி ஜான்ஹவிய படெ3த3 த்ரிவிக்ரமாஹ்வனு ||30
ஷங்க சக்ர கதாப்ஜதர = சங்கு, சக்கரம், கதா,
பத்ம என்னும் நான்கினையும் நான்கு கைகளில் ஏந்தியவன்
துரதிக்ரம = இவனை மீறி நடப்பதற்கு யாராலும் சாத்தியம்
இல்லாத,
அபாரமான சாமர்த்தியம் உள்ளவன்
துராவாஸ = அனைவரைவிடவும் வேறுபட்டவன்
விதி = பிரம்மதேவர்
ஷிவ = ருத்ரதேவர்
ஷக்ர = இந்திரதேவர்
ஸூர்யாத்யமர பூஜ்யபதாப்ஜ = சூர்ய முதலான தேவதைகளால்
வணங்கப்படும் பாத கமலங்களைக் கொண்டவன்
விர்லஜ்ஜ = வெட்கம் இல்லாதவன். தான் செய்யும்
செயல்கள் தோஷங்களைக் கொண்டிருந்தால், அந்த செயல்களை செய்பவர்கள் வெட்கம்
அடைகிறார்கள். பரமாத்மன் நிர்தோஷி. அவன் செய்யும் செயல்கள் நிர்தோஷமானவை. ‘யே தோஷா: இதர த்ராபி தே குணா: பரமே மதா:’ என்னும் வாக்கியத்தால், மற்றவர்களுக்கு எது தோஷம் என்று
தெரிகிறதோ, அது பரமாத்மனிடம் குணமே ஆகிறது. ஆகையால், நியாயமான செயல்களை செய்பவன் ஏன் வெட்கப் படவேண்டும்? ஆகையால், வெட்கம் இல்லாதவன் என்றார்.
ஷுக்ர சிஷ்யன = சுக்ராசார்யரின் சிஷ்யனான பலி
சக்ரவர்த்தி
அஷ்வமேத ப்ரக்ரியவ = அஷ்வமேத யாக காரியத்தை
கெடிஸி = வாமன ரூபியாக வந்து கெடுத்து
த்ரிவிக்ரமாஹ்வயனு = த்ரிவிக்ரமனாக வளர்ந்து
அப்ஜஜாண்டவ = பிரம்மாண்டத்தை
அதிக்ரமிஸி = தன் இரண்டாம் அடியால் அளந்து
ஜான்ஹவிய = கங்கையை
படெத = பாதங்களிலிருந்து ஸ்ருஷ்டித்தான்.
ஷங்க சக்ர கதா பத்ம தராஸ்சித்தா ஹரேர்புஜா - என்னும்
த்வாதஸ ஸ்தோத்திரத்தின் வாக்கியத்திற்கேற்ப, சக்ர ஷங்க கதா பத்மங்களை எப்போதும் தரித்திருக்கிறான். இத்தகைய பரமாத்மனை எந்த
காலத்திலும் எந்த தேசத்திலும், ரமா பிரம்மாதி தேவதைகளால், எந்த விஷயத்திலும் மீறி நடப்பது சாத்தியமில்லை. அயோக்யர்களான பகவத் த்வேஷிகள், பகவத் பக்தர்களின் த்வேஷிகள் ஆகியோர் என்ன செய்தாலும் அவர்களுக்கு இவனின் இருப்பு, சுகமாக இருப்பதில்லை. கிருஷ்ணனின் தரிசனங்களால், துரியோதனனுக்கு துக்கமே உண்டாயிற்று. பிரம்ம ருத்ராதி தேவதைகளால்
பூஜிக்கப்பட்ட பாத கமலங்களைக் கொண்டவன்.
எந்த வேலையை செய்தால், நான்கு பேருக்கு முன்னால், வெட்கப்பட வேண்டுமோ, அத்தகைய வேலையை எப்போதும் செய்யாதவன். ஆகையால், வெட்கம் இல்லாதவன். பலி சக்ரவர்த்தி இந்திர பதவியைப் பெறுவதற்காக 100 அஸ்வமேத யாகத்தை செய்து கொண்டிருக்கையில், அவன்,
ஸ்ரீபரமாத்மனின் பக்தனே ஆகியிருந்தாலும், ஒரு மன்வந்தரத்திற்கு ஒருவரே தலைவனாக இருக்க முடியும் என்பதாலும், பலி அடுத்த மன்வந்தரத்தில் இந்திர பதவியைப் பெறப் போகிறான் என்பதாலும், இந்த மன்வந்தரத்தில் புரந்தர என்பவரின் இந்திர பதவியை பலி பலாத்காரத்துடன்
பறித்துக் கொண்டான் ஆகையாலும், அவனின் சக்தியை, சத்தியத்தை உலகத்தில் பரவச் செய்யவேண்டும் என்பதாலும், பரமாத்மன் வாமன ரூபியாக வந்து பலியிடம் மூன்றடி மண்ணை தானம் கேட்டான்.
பின் த்ரிவிக்ரம ரூபத்தினால், ஒரு அடியால் பூமியை அளந்து, இரண்டாம் அடியை அந்தரிக்ஷத்தில் வைத்தபோது, அந்த பாதம், பிரம்மாண்டத்தின் ஓட்டினை உடைத்து, வெளியில் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் பிரம்மாண்டத்தின் உள்ளே வந்தது. அதுவே கங்கை என்னும் பெயரில் உலகத்தையே பவித்ரமாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய மகா மகிமையுள்ளவன் என்று அர்த்தம்.
No comments:
Post a Comment