எரடு3 திங்க3ளிக3ஹவு ருது பூ4
ஸுரரு திளிவரு ஷ்வாஸஜப ஹ
ந்னெரடு3லக்ஷத3 மேலே தொம்ப3த்தாரு ஸாஹஸ்ர |
கரெஸுவது3 அயனாஹ்வய தொ3ளரெ
வருஷ மூவத்தெண்டு லக்ஷோ
பரி திளிவரெம்ப3த்த எண்டுசஹஸ்ர கோவித3ரு ||6
எரடு திங்களிகெ ஒந்து ருது = இரு மாதங்களுக்கு 1 ருது என்று
அஹவு = ஆகிறது என்று
பூசுரரு திளிவரு = ஜீவர்கள் அறிவர்
ஸ்வாசஜப = இந்த ருது ஒன்றிற்கு
ஹன்னெரடு லக்ஷத மேலே தொம்பத்தாரு சாஹஸ்ர = 12,96,000
அயனாஹ்வயதொளு = 1 அயனத்திற்கு
அரெ வருஷ = 6 மாதங்கள்
மூவத்தெண்டு லக்ஷோபரி எம்பத்தெண்டு சஹஸ்ர = 38,88,000
கோவிதரு = அறிஞர்கள்
திளிவரு = அறிவார்கள்
இரு மாதங்கள் சேர்ந்தால் ஒரு ருது என்கிறோம். ஒரு
ருது காலத்திற்கு 12,96,000 ஸ்வாச ஜபங்களை வாயுதேவர் செய்கிறார் என்று ஜீவர்கள் அறிவார்கள். 6 மாதங்கள் சேர்ந்தால் ஒரு அயனம் ஆகிறது. ஒரு அயன காலத்திற்கு 38,88,000 ஸ்வாச ஜெபங்களை வாயுதேவர் செய்கிறார் என்று அறிஞர்கள் அறிவார்கள்.
வருஷகித3ரிம்மடி3 ஜபங்க3ள
கு3ருவரிய தா மாடி3 மாடி3ஸி
து3ரிதக3ள பரிஹரிஸுவனு சிந்திஸுவ சஜ்ஜனர |
ஸுரவிரோதி4க3ளொளகெ3 நெலெஸி
த்த3ரவிதூ3ர தமோதி4காரிக3
ளிரவரிது ஸோஹம்முபாஸனெ மாள்பனவரந்தெ ||7
வருஷகெ = 1 ஆண்டிற்கு
இதரிம்மடி ஜபங்கள = இதன் இரண்டு மடங்கு ஜபங்களை
குருவர்ய = குருவர்யரான ஸ்ரீமுக்யபிராணதேவர்
தா மாடி மாடிஸி = தான் செய்து, செய்வித்து
சிந்திஸுவ சஜ்ஜனரா = ஹம்ஸ: ஸோஹம் ஸ்வாஹா என்னும்
மந்திரத்தின் அர்த்தத்தை அறிந்து ஜெபிக்கும் சஜ்ஜனர்களின்
துரிதகள பரிஹரிஸுவனு = கஷ்டங்களை பரிகரிக்கிறான்
அரவிதூரனு = தோஷங்கள் அற்றவரான ஸ்ரீவாயுதேவர்
ஸுரவிரோதிகளொளகெ = சுரர்களுக்கு விரோதிகளான
தைத்யர்களில்
நெலெஸி = நிலைத்திருந்து
தமோதிகாரிகள = தமோ யோக்யர்களின்
இரவரிது = யோக்யதையை அறிந்து
அவரந்தெ = அவர்களைப் போலவே
ஸோஹமுபாஸனெ = அவனே நான் என்னும் (பரமாத்மனே நான்
என்னும்) உபாசனையை
மாள்ப = செய்விக்கிறான்.
6 மாதங்களுக்கு 38,88,000 ஸ்வாச ஜபங்கள் என்றால், அதுவே ஒரு ஆண்டிற்கு இரு மடங்கு
ஆகிறது. அதாவது, 77,76,000 ஆகிறது. இவ்வளவு ஸ்வாச ஜபங்களை முக்யபிராணதேவர்
பிராணிகளில் இருந்து செய்கிறார். யோக்யஜீவர்கள், ஹம்ஸ: ஸோஹம் ஸ்வாஹா என்னும் ஹம்ஸ மந்திர ஜபத்தின் அர்த்தத்தை அறிந்து - அதாவது,
* துக்கங்களை நாசம் செய்வதால்
பரமாத்மனுக்கு ஹம்ஸ என்று பெயர்.
* ஸோஹம் என்றால் அவனே நான் - அதாவது, அவனே என் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று அர்த்தம்.
பிரம்மசூத்ர பாஷ்யத்தில்:
அந்தர்யாமிண மீஷேஷம பேக்ஷ்யா ஹந்த்வமித்யபி |
ஸர்வேஷப்தா: ப்ரயுஜ்யந்தே ஸதிபேதேபி வஸ்துஷு ||
என்று பரமாத்மனைக் குறித்து, நீயே பரபிரம்மன்; நீனே நான் என்னும் வாக்கியங்களை பயன்படுத்துபவர்கள் உண்டு.
சாட்சாத் பரபிரம்மனே உன் அந்தர்யாமி ஆனவர்; அவனே எனக்குள்ளும் இருக்கிறான் என்ற சிந்தனையுடன், அவனே நான் என்னும் வாக்கியங்கள் வந்திருக்கின்றன என்று அறியவேண்டும்.
இப்படியாக அறிந்து, உபாசனை செய்யும் சஜ்ஜனர்களின் கஷ்டங்களை பரிகரித்து, அவர்களுக்கு அருள்வான்.
தேவர்களின் எதிரிகளான, தமோ யோக்யர்களான, தைத்யர்களின் யோக்யதைக்கேற்ப, அவனே நான் என்னும் உபாசனையை செய்து
செய்வித்து, ஜகதீஸ்வரனான பரமாத்மனுக்கும் தனக்கும் பேதம் இல்லை என்று உபாசனை செய்ததால், அதன் பலனாக அவர்களுக்கு தமஸ்ஸையே அளிக்கிறான்.
இனிதுபாஸனெ ஸர்வஜீவரொ
ளனிலதே3வனு மாடு3திரெ சி
ந்தனெய மாட3தெ3 கண்ட3னீரொளு முளுகி3 நித்யத3லி |
மனெயொளகெ3 க்ருஷ்ணாஜினாத்3யா
ஸனதி3 குளிது விஸிஷ்ட பஹுஸ
ஜ்ஜனனெனிஸி ஜபமணிக3ளெணிஸித3ரேனு பே3ஸரதெ3 ||8
இனிது = முந்தைய பத்யங்களில் சொன்னதைப்போல
உபாஸனெ = ஹம்ஸ மந்திர ஜப உபாசனையை
சர்வஜீவரொளு = அனைத்து ஜீவர்களிலும்
அனிலதேவனு = வாயுதேவர்
மாடுதிரெ = செய்து வருகிறார்
சிந்தனெய மாடதெ = (ஸ்வாஸமே ஹம்ஸ மந்திர ஜபம் என்று
நினைத்து) உபாசனையை செய்யாமல்
கண்டனீரொளு முளுகி = தீர்த்த ஸ்னானங்களை செய்து
நித்யதலி = தினந்தோறும்
மனெயொளகெ = வீட்டில்
கிருஷ்ணாஜினாத்யாஸனதி = கிருஷ்ணாஞ்சினம் போன்ற
ஆசனங்களை போட்டு
குளிது = அதில் அமர்ந்து
விசிஷ்ட = அதிகமான செல்வத்தை
பஹு சஜ்ஜனரு = சஜ்ஜனர்கள்
எனிஸி = என்று தன்னை சொல்லிக்கொண்டு
பேஸரதெ = சோர்வு இல்லாமல் (தொடர்ச்சியாக)
ஜபமணிகளெனிஸிதரேனு = ஜப மணிகளை எண்ணினால் என்ன? (எந்தவொரு பலனும் இல்லை என்று அர்த்தம்).
முந்தைய பத்யங்களில் கூறியதைப்போல, வாயுதேவர் ஸ்வாசரூப ஹம்ஸமந்திர ஜபங்களை அனைத்து ஜீவர்களிலும் இருந்து, செய்விக்கிறார் என்று ஜப உபாசனையை செய்யாமல், கண்ட தண்ணீரில் தினந்தோறும் மூழ்கி, வீட்டில் கிருஷ்ணாஞ்சின முதலான
ஆசனங்களின் மேல் அமர்ந்து, தன்னையே அனைத்தும் அறிந்த சஜ்ஜனர்
என்று சொல்லிக்கொண்டு, ஜபமணிகளை எண்ணிக் கொண்டிருந்தால், அதனால் கிடைக்கும் பலன் ஒன்றும்
இல்லை.
வாயுதேவரே அனைத்தையும் செய்விக்கிறார் என்று அறியாமல்
தானே ஜப அனுஷ்டாங்களை செய்கிறேன் என்று அறிந்து செய்வது அனைத்தும் பலன்களைக்
கொடுக்காது என்கிறார்.
ஓத3னோத3க3வெரடு3 தேஜதொ3
ளைது3வுவு லய தத3பி4மானிக3
ளாத3 ஷிவ பவனரு ரமாதீ4னத்வ வைது3வரு |
ஈ தி3விஜரொட3கூ3டி3 ஸ்ரீ மது
ஸூத3னனனைது3வளு எந்த3ரி
தா3த3ரதி3 அன்னோத3கவ கொடு3துணுத ஸுகி2ஸுதிரு ||9
ஓதனோதகவெரடு = நாம் உண்ணும் அன்னம், குடிக்கும் நீர் இந்த இரண்டும்
தேஜதொளு = அக்னியில்
லயவைதுவவு = சேர்கிறது (ஜீர்ணம் ஆகிறது)
ததபிமானிகளாத = அன்ன, பான ஆகியவற்றின் அபிமானிகளான
ஷிவபவனரு = ருத்ரதேவர், வாயுதேவர்
ரமாதீனத்வயைதுவரு = ரமாதேவியரிடம் சென்று
சேர்கின்றனர்.
ஈ திவிஜரொடகூடி = இந்த சிவ, வாயுகள் என்னும் தேவதைகளுடன் சேர்ந்து
ஸ்ரீமதுசூதனன = மது நாமக தைத்யனைக் கொன்ற
ஸ்ரீபரமாத்மன்
ஐதுவளு = ரமாதேவியர் சேர்கின்றனர்
எந்தரிது = என்று அறிந்து
ஆதரதி = பக்தியுடன்
அன்னோதகவ = அன்ன, பானங்களை
கொடுத = பிராமணாதிகளுக்குக் கொடுத்து
உணுத = நீ உண்டு
சுகிசுதிரு = மகிழ்ச்சியாக இரு.
நாம் உண்ணும் அன்னம், தண்ணீர் இந்த இரண்டும், வயிற்றில் இருக்கும் ஜடராக்னியில்
சென்று சேர்கிறது. அன்ன, தண்ணீருக்கு அபிமானிகள் ருத்ரதேவர்
மற்றும் வாயுதேவர். இவர்கள் இருவரும் அன்ன, உதக ரூபமாக ரமாதேவியரில் சென்று சேர்கின்றனர். ரமாதேவியர், அன்னோதக ரூபமான சிவ வாயுகளுடன் சேர்ந்து, ஸ்ரீபரமாத்மனிடம் சேர்கிறார்.
இப்படி நாம் உண்ட, குடித்த அன்ன, தண்ணீர் ஆகியவை பரமாத்மனிடம் சேர்ந்து அர்த்தமுள்ளதாக ஆகிறது என்று அறிந்து, பிராமணாதிகளுக்கு அன்னங்களைக் கொடுத்து, நீயும் இதே அனுசந்தானத்துடன் உண்டு, மகிழ்ச்சியுடன் இரு என்பது கருத்து.
ஜாலிதொப்பல ஜாவிக3ளு மெ
த்3தா3லயதி3 ஸ்வேச்சானுஸாரதி3
பாலு க3ரெவந்த3த3லி லகுமீரமண தன்னவர |
கீளுகர்மவ ஸ்வீகரிஸி த
ந்னாலயதொ3ளிட்டவர பொரெவ க்ரு
பாளு காமத3 கைரவத3ளஷ்யாம ஸ்ரீராம ||10
அஜா = செம்மறி ஆடுகள்
அவிகளு = ஆடுகள்
ஜாலிகொப்பல = வழியில் இருக்கும் இலைகளை
மெத்து = தின்று
ஆலயதி = வீட்டில்
ஸ்வேச்சானுசாரதி = தன் இஷ்டத்திற்கு
பாலகரெவந்ததலி = பால் கொடுக்கின்றன
லக்ஷ்மிரமண = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
தன்னவர = தன் பக்தர்கள் செய்யும்
கீளுகர்மவ = பாப கர்மங்களை
ஸ்வீகரிஸி = ஏற்றுக்கொண்டு
தன்னாலயதொளிட்டவர = தன் உலகத்தில் அவரை வைத்து
க்ருபாளு = கருணாமயியான
காமத = அனைவரின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றும்
கைரவதஸ்யாம = நீல தாமரையின் வர்ணனான
ஸ்ரீராம = ஸ்ரீபரமாத்மன்
அவர = அந்த பக்தர்களை
பொரெவ = அருள்வான்
ஆடுகள், செம்மறி ஆடுகள் ஆகியவை வழியில், ஓரத்தில் கிடைக்கும் செடி கொடிகளை தின்று, பின் வீட்டுக்கு வந்து, பால் கொடுக்கின்றன. பசு, எருமைகளைப் போல தவிடு ஆகிய எதையும் தின்னாமல், தெருவோரங்களில் கிடைக்கும் செடிகளை உண்டே பால் கறக்கின்றன. அதைப்போலவே, பரமாத்மன், பக்தர்கள் செய்யும் அல்பமான சிறு பூஜைகளை, ப்ராக்ருதமான அன்ன உதகங்களை ஏற்றுக்கொண்டு, அதன் பலன் ரூபமாக எதேஷ்டையான ஸ்வரூபானந்தத்தைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறான்.
No comments:
Post a Comment