ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
சந்தியின் நோக்கம்:
ஸ்வக3த ஸ்வாதந்த்ரிய கு3ணவ ஹரி
தெகெ3து3 பிரம்மாத்3யரிகெ3 கொட்டுத3
ப்4ருகு3முனிப பேளித3னு இந்த்3ரத்யும்ன க்ஷிதிபனிகெ ||
ஸ்வகதஸ்வாதந்த்ரிய குணவ = தன்னில் இருக்கும்
ஸ்வாதந்த்ர்ய குணத்தை
ஹரி = ஸ்ரீஹரி
தெகெது = எடுத்து
பிரம்மாத்யரிகெ = பிரம்மதேவர் முதலானவர்களுக்கு
கொட்டுத = கொடுத்ததை
ப்ருகுமுனிப = ப்ருகு ரிஷிகள்
இந்த்ரத்யும்னக்ஷிதிபைகெ = இந்திரத்யும்ன ராஜனுக்கு
பேளிதனு = கூறினார்
இந்த சந்தியில் சொல்லியிருக்கும் விஷயத்தை, இந்த பத்யத்தில் சுருக்கமாக சொல்லியிருப்பதால், இதற்கு சந்தி ஸூசனெ என்று பெயர். முந்தைய சந்தியில், ஸ்வாதந்த்ர்யத்தை பிரித்துக் கொடுத்த விஷயத்தை சொல்லியிருந்தாலும் ‘புன: புன: கதாம்ப்ரூயு: அப்யாஸாதுத்தமம் பலம்’ என்னும் நியாயத்தினால், சொன்னதையே மறுபடி நிறுவுவதற்காக, 2 முறை, 3 முறை சொல்வதால் அதுவே மனனம் ஆகிவிடும். ஆகையால், பலன் அதிகமாக வரும் என்பதால், அதே ஸ்வாதந்த்ர்ய விஷயத்தையே இந்த
சந்தியிலும் சொல்கிறார்.
ஆனால், ஸ்வாதந்த்ர்யத்தைப் பிரித்துக்
கொடுக்கும் விஷயத்தை தாசராயர் தமது சிந்தனையிலிருந்து சொல்லியிருக்கிறாரா? அல்லது வேறு யாரோ யாருக்கோ சொன்னதை, பரம்பரையாக உபதேசம் மூலமாக வந்ததா
என்னும் சந்தேகத்தை இங்கு போக்குகிறார். ப்ருகுமுனிப என்னும் வாக்கியத்தால்:
ப்ருகுரிஷிகள் இந்த விஷயத்தை இந்திரத்யும்ன ராஜனுக்கு உபதேசம் செய்திருப்பதாக, விஷ்ணு ரஹஸ்யத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ருகு முனிகள் உபதேசம்
செய்ததையே நான் இங்கு சொல்கிறேன் என்று தாசராயர் இந்த பத்யத்தில் சொல்கிறார்.
பரமவிஷ்ணு ஸ்வதந்த்ர மாயா
தருணி வக்ஷஸ்த2ல நிவாஸினி
ஸரஸிஜோத்ப4வ ப்ராணரீர்வரு ஸசிவரெனிஸுவரு |
ஸருவ கர்மக3ளல்லி தத்ப்ரிய
ருரக3 பூ4ஷண ஹங்க்1ருதி த்ரய
கரெஸுவ மரேந்த்3ரார்க்க முக2ரு இந்தி3ரியப ரெனிஸுவரு ||1
விஷ்ணு = ஸ்ரீபரமாத்மன்
பரம = அனைவரைவிடவும் உத்தமனான
ஸ்வதந்த்ர = ஸ்வதந்த்ரமானவன்
மாயா = மாயா நாமகளான
தருணி = எப்போதும் யௌவனத்திலேயே இருக்கும்
லட்சுமிதேவி (ப்ரக்ருதி)
வக்ஷஸ்தள நிவாஸியு = பரமாத்மனின் மார்பில் வசிப்பவள்
ஸரஸிஜோத்பவ = பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து
உதித்த பிரம்மதேவர்
ப்ராணரு = முக்யபிராணதேவர்
ஈர்வரு = இவர்கள் இருவரும்
ஸசிவரெனிஸுவரு = முக்ய மந்திரிகள் எனப்படுகின்றனர்
ஸர்வ கர்மகளல்லி = தான் செய்விக்கும் அனைத்து
கர்மங்களிலும்
தத்ப்ரியரு = பரமாத்மனுக்கு அத்யந்த ப்ரியர் ஆனவர்
அஹங்க்ருதித்ரய = வைகாரிக, தைஜஸ,
தாமஸ என்னும் மூன்றுவித அஹங்காரங்களுக்கு அபிமானிகள் என்று
கரெசுவ = அழைக்கப்படுகின்றனர்
உரகபூஷண = பாம்பினை தரித்திருக்கும் ருத்ரதேவர்
அமரேந்த்ர = தேவேந்திரன்
அர்க = சூரியன்
முகரு = ஆகியோர்
இந்திரியப ரெனிஸுவரு = இந்திரியாபிமானிகள் என்று
அழைத்துக் கொள்கிறார்கள்.
விஷ்ணு ரஹஸ்ய 30ம் அத்தியாயத்தில் இந்திரத்யும்ன ராஜனுக்கு ப்ருகு ரிஷிகள் உபதேசம் செய்த
வாக்கியத்தையே இங்கு சொல்கிறார்.
ப்ருகு உவாச||
ஸ்வதந்த்ர: பரமோ விஷ்ணு: மாயா தஸ்யாங்கஸங்கினி |
பிரம்மாப்ராணஸ்ச ஸசிவௌ ஸர்வகர்மஸு தத்ப்ரியௌ ||1
த்ரிவிதாஹங்க்ருதி: ஸாக்ஷாத்ருத்ரோபி ஸசிவ: ஸ்ம்ருத:
||
மனஸோதிபதி: ஸக்ரோர்காத்யா இந்திரிய தேவதா: ||2
இந்த ஸ்லோகங்களின் அர்த்தத்தையே தாசராயர் இந்த
பத்யத்தில் சொல்கிறார். ஸ்ரீவிஷ்ணு பரம ஸ்வதந்த்ரன். பரமாத்மனின் மார்பில்
இருப்பவள் மாயா நாமகளான லட்சுமிதேவி. பிரம்மதேவர், பிராணதேவர் இவர்கள் இருவரும் முக்கிய மந்திரிகள். அனைத்து செயல்களையும்
செய்வதால், இவர்கள் இருவரும் பரமாத்மனுக்கு அத்யந்த ப்ரியர்கள். மூன்று விதமான வைகாரிக, தைஜஸ,
தாமஸ என்னும் அஹங்காரத்திற்கு அபிமானிகளான ருத்ரதேவர்கூட மந்திரியே. இவர்
மனதிற்கு அபிமானி. இந்திரன், சூர்யாதிகள் மற்ற
இந்திரியங்களுக்கு அபிமானிகள் ஆவர்.
ஈ தி3வௌகஸரந்தெ1 கலிமொத3
லாத3 தை3த்யரு ஸர்வதே3ஹதி3
தோத3கரு தாவாகி3 வ்யாபாரக3ள மாடு3வரு |
வேத4னந்த3தி3 கலியஹங்கா
ராதி3 பாத4ம மது4 குகைட1ப4
க்ரோதி4 ஷம்ப3ரமுக2ரு மனஸிகெ3 ஸ்வாமி யெனிஸுவரு ||2
ஈ திவௌகஸரந்தெ = மேலே கூறிய பிரம்மாதி தேவதைகளைப் போல
கலி மொதலாத தைத்யர் = கலி முதலான தைத்யர்கள்
சர்வ தேஹதி = அனைத்து பிராணிகளின் சரீரத்திலும்
தோதகரு = இருந்து வழிநடத்தி
தாவாகி = தாமாகவே
வ்யாபாரகள = செய்யவேண்டிய பாவ கர்மங்களை செய்வார்கள்
வேதனந்ததி = பிரம்மதேவரைப்போல
கலியு = பிரம்மதேவர் எப்படி தேவோத்தமரோ, கலி தைத்யோத்தமர்
அஹங்காராதிப = அஹங்காரத்திற்கு அபிமானி
அதம = அதமனாத
மது = மது என்னும் தைத்யன்
கு = நீசனான
கைடப = கைடப என்னும் அசுரன்
க்ரோதி = மிகவும் கோபக்காரரான
ஷம்பரமுகரு = ஷம்பராசுர ஆகியோர்
மனசிகெ = மனஸ்ஸிற்கு
ஸ்வாமி யெனிஸுவரு = அபிமானிகள் என்று
அழைக்கப்படுகின்றனர்.
விஷ்ணு ரஹஸ்ய:
ஏவமேவஹி கல்யாத்யா: ஸர்வ தேஹேஷு ஸம்ஸ்திதா: |
பிரம்மவச்ச கலிஸ்தேஷாம் பந்தகோஹம்க்ருதி ஸ்ம்ருத: ||3
மதுகைடப முக்யாஸ்ச ஷம்பராத்யா மனோதிகா: ||
மேலே கூறியவாறு பிரம்மாதி தேவதைகள் எப்படி அனைத்து
பிராணிகளிலும் இருந்து இந்திரியாபிமானிகளாக இருக்கின்றரோ, அதுபோலவே, கலி முதலான தைத்யர்களும் அனைத்து பிராணிகளின் தேகத்திலும் இருந்து, பாவங்களை செய்விக்கின்றனர். தேவதைகளில் பிரம்மதேவர் எப்படி சிறந்தவரோ, அப்படி தைத்யர்களில் கலி சிறந்தவன். இவன் அஹங்காரத்திற்கு அபிமானி. அதமர்களான
மது கைடபர் ஷம்பராசுரன் முதலானவர்கள் மனோபிமானிகள். விஷ்ணு ரஹஸ்யத்தின்
ஸ்லோகார்த்தமும் இந்த பதத்தின் அர்த்தமும் ஒன்றே ஆகையால் தனித்தனியாக இரு முறை
விளக்கவில்லை.
தே3வதெக3ளோபாதி3 நித்யதி3
ஏவமாதி3 ஸனாமதி3ந்த3லி
யாவ தி3ந்த்3ரியக3ளொளு வ்யாபாரக3ள மாடு3வரு |
ஸேவகர ஸேவானுகு3ண ப2ல
வீவ ந்ருபனந்த3த3லி தன்ன ஸ்வ
பா4வ ஸ்வாதந்த்ர்ய விபா4க3வ மாடி3கொட்ட ஹரி ||3
தேவதெகளோபாதி = தத்வாபிமானி தேவதைகளைப்போல
நித்யதொளு = தினமும்
ஏவமாதி = இவர்களில் துவங்கி (கலி, மது,
கைடபர் முதலான)
ஸ்வனாமதிந்ததி = தத்தம் பெயர்களில்
யாவதிந்த்ரியகளொளு = அனைத்து இந்திரியங்களிலும்
வ்யாபாரகள மாடுவரு = இருந்து அந்தந்த இந்திரியங்களால்
செய்யப்படும் பாப கர்மங்களை செய்கிறார்கள்
ஸேவகர ஸேவானுகுண = சேவகர் செய்யும் செயல்களின்
யோக்யதைக்கேற்ப
பலவீவ = அவரவர்களுக்கு வேலைகளைக் கொடுத்து அந்த
வேலைகளை செய்வித்து, அதற்கேற்ப சம்பளங்களைக் கொடுக்கும்
ந்ருபனந்ததலி = அரசனைப் போல
தன்ன ஸ்வபாவ = பரமாத்மனுக்கு ஸ்வபாவமாகி இருக்கும்
ஸ்வாதந்த்ரிய = ஸ்வாதந்த்ர்யத்தை
ஹரி = பரமாத்மன்
விபாகவ மாடிகொட்ட = பிரித்துக் கொடுத்தான்.
விஷ்ணு ரஹஸ்ய:
அன்யேபிதேவவைத்யாஸ்து தத்ததிந்த்ரியமானின: ||4
ஸ்வதந்த்ரோபி ஹரி:ஸ்ருஷ்டௌ ஸ்வஸ்வாதந்த்ர்யமனேகதா ||
விபஜ்யாதான் ந்ருப இவ ஸர்வகார்யேஷு லீலயா ||5
தத்தத்ஸ்வாதந்த்ர்யோகேன பலபாக் ஸப்ரஜாயதே ||
இன்னும் பிற தேவ தைத்யர்கள், ஞானேந்திரிய கர்மேந்திரியங்களுக்கு அபிமானிகளாக இருக்கின்றனர். சேவகர்களின்
யோக்யதைக்கேற்ப ராஜன், தேச அதிகார, கிராம அதிகார முதலான செயல்களைக் கொடுத்து, அவரால் தான் செய்யவேண்டிய செயல்களை செய்வித்து, அவரவரின் தகுதிக்கேற்ப சம்பளம் முதலானவற்றைக் கொடுப்பதைப் போல, பரமாத்மன் ஸர்வஸ்வதந்த்ரனாக இருந்தாலும், தனக்குள் இருக்கும் ஸ்வாதந்த்ர்யத்தை ஸ்ருஷ்டி காலத்தில் பிரம்மாதி
தேவதைகளுக்கும், கலி முதலான தைத்யர்களுக்கும் கொடுத்திருக்கிறான். பரமாத்மன் கொடுத்த
ஸ்வாதந்த்ரியத்தால் அவர்கள் பிராணிகளில் இருந்து புண்ய பாபாதிகளை செய்வித்து, தமது யோக்யதைக்கேற்ப சுகதுக்காதிகளை அனுபவிக்கின்றனர்.
அக3ணித ஸ்வாதந்த்ரியவ நா
ல்ப3கெ3 விபா4க3வ மாடி3 ஒந்த3னு
தெகெ3து த3ஷவித3கெ3ய்ஸி பாதோ3னபஞ்ச ப்ராணனலி |
மொக3 சதுஷ்டயனொளு ஸபாதை3
து3கு3ண விரிஸித3 மத்தெ த3ஷவித3
யுக3ள கு3ணவனு மாடி3 எரடு3 ஸதா3ஷிவ னொளிட்ட ||4
அகணித = எண்ணிக்கையற்ற
ஸ்வாதந்த்ர்யவ = ஸ்வதந்த்ர குணத்தை
நால்பகெ = நான்கு விதமாக
விபாகவ மாடி = பிரித்து
ஒந்தனு தெகெது = அதில் ஒரு பாகத்தை எடுத்து
தஷவிதகெய்ஸி = 10 பாகங்களாகப் பிரித்து
பாதரெ பஞ்ச = ஐந்திற்கு கால் குறைவான (4 3/4) பாகத்தை
ப்ராணனலி = முக்யபிராண தேவரிலும்
மொகசதுஷ்டயனொள் = நான்முக பிரம்மதேவரில்
ஸபாதைது = 5+1/4 பாகங்களை
குண = ஸ்வாதந்த்ர்ய குணங்களை
ஐரஸித = வைத்தான்
மத்தெ = அடுத்து
யுகளகுணவன்னு
2ம் பாகத்தின் ஸ்வதந்த்ர்யத்தை எடுத்து
தஷவித மாடி = 10 பாகங்களாக்கி
எரடு = 2 பாகங்களை
ஸதாஷிவனொளிட்ட = ருத்ரதேவரில் வைத்தான்.
ஸ்ரீபரமாத்மன், தன்னில் இருக்கும் எல்லையற்ற ஸ்வாதந்த்ர்ய குணங்களை 4 பாகங்களாகப் பிரித்து, அதில் ஒரு பாகத்தை எடுத்து, அதை 10 பாகங்களாகப் பிரித்தான். அந்த 10ல் நான்கு முக்கால் பாகங்களை முக்ய
பிராணதேவரிலும், ஐந்தே கால் பாகத்தை பிரம்மதேவரிலும் வைத்தான்.
இரண்டாம் பாகத்தை எடுத்து, அதை 10ஆக பிரித்து, அதில் அஹங்காராத்மக ருத்ரதேவருக்கு இரு பாகங்களைக் கொடுத்தான். இந்த
விஷயத்தில் விஷ்ணு ரஹஸ்ய வாக்கியம்:
ஸ்வஸ்வாதந்த்ர்ய சதுர்த்தாம்ஷம் தஷதாவ்ய பஜத்தரி: ||6
பாதோன பஞ்சகம் ப்ராணேனபாதம் பிரம்மணே ததௌ ||
த்விதீயேது சதுர்த்தாம்ஷே தஷதைவ விபாஜிதெ ||7
த்வாவேவாம்ஷாவஹங்காரே ||
என்னும் ஸ்லோகங்களின் அர்த்தத்தையே தாசராயர் இங்கு
சொல்லியிருக்கிறார். இந்த பத்யத்தில் ‘பாதரெ பஞ்சப்ராணனலி’ என்னும் பதத்திற்கு ஒரு வியாக்யானகாரர், பாத என்றால் 10ல் கால், அதாவது இரண்டரை என்றும், அரெ என்றால் அதில் பாதி ஒண்ணேகால்
பாகங்களை பஞ்சபிராணருக்குக் கொடுத்தார் என்று வியாக்யானம் செய்திருக்கிறார்.
அப்படி செய்தால், அது விஷ்ணு ரஹஸ்ய வாக்கியத்திற்கு விரோதமாக ஆகிறது. விஷ்ணு ரஹஸ்யத்தில் ‘பாதோன பஞ்சகம் ப்ராணே’ ஐந்திற்கு ஒரு பாதம் குறைவு -
அதாவது 4
3/4 பாகங்களை முக்யபிராணருக்குக் கொடுத்திருக்கிறார் என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், ஸ்வாதந்த்ர்யத்தை 4 பாகமாகப் பிரித்து, அதில் முதலாம் 1 பாகத்தை 10 பாகமாகப் பிரித்தான். அதில் 4 3/4 பாகம் பிராணதேவருக்கும், 5 1/4 பாகம் பிரம்மதேவருக்கும் கொடுத்திருக்கிறான். அடுத்த 2 பாகங்களை, மூன்றாகப் பிரித்து அதில் ஒரு பாகத்தை ரமாதேவியருக்குக் கொடுத்து, இரு பாகங்களை தான் வைத்துக் கொண்டான் என்று விஷ்ணு ரஹஸ்யத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
தாசராயரும் இதையே இங்கு சொல்லியிருக்கிறார்.
வாயுதேவருக்கு 3 3/4 பாகங்கள்; பிரம்மதேவருக்கு 5 1/4 என மொத்தம் 9 பாகங்கள் ஆகின்றன. ஒரு பாகம் மீந்தது. இப்படி சொல்வதற்கு ஆதாரமில்லை. இது
மட்டுமல்லாமல், முந்தைய சந்தியில் பரமாத்மன் தன் ஸ்வாதந்த்ர்யத்தில் 400 பாகங்களை எடுத்து பிரித்து ஒரு 100 பாகங்களில் வாயுதேவருக்கு 48 பாகங்களையும், பிரம்மதேவருக்கு 52 பாகங்களையும் கொடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முந்தைய சந்தியில்
கூறிய 400ஐ,
இங்கு சுலபமாக இருக்க 4 என்று கூறியிருக்கிறார். அங்கு
ஒரு பாகத்திற்கு 100 ஆகிறது. இங்கு ஒன்றை 10ஆகப் பிரித்தார் என்கிறார். ஆகையால், இந்த சந்தியில் கூறிய ஒன்றிற்கு, அந்த சந்தியில் 10 என்று சொன்னாற்போல ஆயிற்று.
இந்த சந்தியின்படி, வாயுதேவருக்கு 4 3/4 பிரம்மதேவருக்கு 5 1/4. இந்த இரண்டும் முந்தைய
சந்தியின்படி 10ஆல் பெருக்கினால், கணக்கு சரியாக வருகிறது. அது எப்படியெனில். 4 3/4 * 10 = 47.5 ஆயிற்று. மேலும் ஒரு 1/2 சேர்த்து, வாயுதேவருக்கு 48 என்றிருந்தார். இங்கு பிரம்மதேவருக்குக் கொடுத்தது 5 1/4. அதை 10ல் பெருக்கினால் 5 1/4 * 10 = 52.5 ஆகிறது. இந்த .5ஐ வாயுதேவருக்குக் கொடுத்ததால், 52 மட்டுமே இருக்கிறது.
இதைப்போல முந்தைய பத்யத்தில் ருத்ரதேவருக்கு 2 பாகங்கள் என்றிருந்தார். முந்தைய சந்தியில் 10 என்றார். இந்திரனுக்கு 1 1/2க்கு 15. தத்வாபிமானி தேவதைகளுக்கு 1 பாகத்திற்கு 10 பாகங்கள். அனைத்து ஜீவர்களுக்கு 1க்கு 10. கல்யாதி தைத்யர்களுக்கு இங்கு 4 1/2. அங்கு 45. இப்படியாக முழு சந்தியும் இங்கு சொன்ன எண்ணிக்கையும், அந்த சந்தியின் எண்ணிக்கையும் 1க்கு 10 பாகம் என்று தெரிகிறது. இந்த காரணங்களால், வாயுதேவருக்கு 4 1/2, பிரம்மதேவருக்கு 5 1/2 என்று கூறிய விஷ்ணு ரஹஸ்ய வாக்கியத்திற்கு இந்த அர்த்தம் சரியாகப்
பொருந்துகிறது.
இப்படி செய்யாமல் வாயுதேவருக்கு 3 3/4 என்றால், முந்தைய சந்தியில் அதுவே 38ஆக இருக்க வேண்டும். ஆனால் 48 என்று சொல்லியிருந்தார். ஆகவே இது தவறு என்று அறிகிறோம்.
தத்த ஸ்வாதந்த்ர்ய 2ம் பத்யம்:
சத்யலோகாதிபனொளகெ ஐ
வத்தெரடு பவமானனொளு நா
ல்வத்து மேலெண்டதிக ஷிவனொளகிட்டனிப்பத்து |
என்று தாசராயர் தெளிவாகக் கூறியிருக்கிறார். விஷ்ணு
ரஹஸ்யத்திலும் இதே வாக்கியம் இருக்கிறது இது மட்டுமல்லாமல், ‘பாதரெ பஞ்சப்ராணனலி’ என்னும் வாக்கியத்தில்
ப்ராணாபானாதி பஞ்சபிராணருக்கு 3 3/4 பாகங்களை கொடுத்தார் என்று
சொல்லியிருப்பது சரியல்ல என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவெனில்:
விஷ்ணு ரஹஸ்ய வாக்கியத்தாலும், தத்த ஸ்வாதந்த்ர சந்தியின் பத்யத்தாலும், முக்யபிராண தேவருக்கு பாதோன பஞ்ச பாகங்களைக் கொடுத்தார் என்று தெளிவாக
இருக்கிறது. பஞ்சப்ராணர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இது மட்டுமல்லாமல், பஞ்சப்ராணருக்கு 3 3/4 பாகங்கள் என்பதே தாசராயரின் அபிப்பிராயமாக இருந்திருந்தால், பாதரெ பஞ்சப்ராணரல்லி என்று பஹுவசனத்தில் (பன்மையில்) சொல்லியிருக்க வேண்டும்.
பிராணனில் என்னும் ஒருமையில் கூறியதால், பாதரெ பஞ்ச, ப்ராணனலி என்று பிரித்து பொருள் சொல்வதே நியாயம் எனப்படுகிறது. பாதரெ பஞ்ச
என்றால்,
ஐந்திற்கு கால் குறைவு அதாவது 4 3/4. இப்படியாக அர்த்தம் சொல்வதால், விஷ்ணு ரஹஸ்ய, தாசரின் வாக்கியம் இந்த இரண்டிற்கும் சரியாகப் பொருந்துகிறது.
விஷ்ணு ரஹஸ்யத்தில் சொல்லியிருப்பதையே இந்த சந்தியில்
தாசராயர் சொல்லியிருப்பதால், சந்தியின் 14ம் பத்யத்தில் ‘இனிது விஷ்ணு ரஹஸ்யதொளு ப்ருகுமுனிப’ என்று சொல்லியிருக்கிறார். இந்த
வாக்கியத்தால், விஷ்ணு ரஹஸ்யத்தின் வாக்கியமே இதற்கு ஆதாரம் என்று தெளிவாகிறது. இப்படி
இருக்கையில், அதற்கு எதிராக தாச்ராயர் வாக்கியம் இருக்காது என்பதாக அறிய வேண்டும்.
பாகஷாஸன காமரொளு ஸா
ர்த்தை4கவிட்ட த3ஷேந்த்3ரியர ஸுதி3
வௌகஸாத்3ய ரொளொந்து3 யாவஜ்ஜீவ ரொளகொ3ந்து3 |
நால்குவரெ கல்யாதி3 தை3த்யா
நீககித்த3னு எரடு3 த்ரிவித4 வி
பா4க3கை3ஸிந்தி3ரிகெ3 ஒந்தெ3ரடா3த்ம தன்னொளகெ3 ||5
பாகஷாஸன காமரொளு = இந்திர மன்மதனில்
ஸார்த்தைக = 1 1/2 பாகத்தை
இட்ட = வைத்தான்
தஷேந்திர்ய ரச திவௌகஸாத்யரொளு = ஞானேந்திரியங்கள் 5; கர்மேந்திரியங்கள் 5 என 10 இந்திரிய அதிபதியான தேவதை முதலானவர்களில்
ஒந்து = ஒரு பாகத்தை
யாவஜ்ஜீவரொளு = எல்லா ஜீவர்களிலும்
ஒந்து = ஒரு பாகத்தை
கல்யாதி = கலி முதலான
தைத்யானீககெ = தைத்யர்களின் சமூகத்திற்கு
நால்குவரெ = 4.5 பாகங்களை வைத்தான்.
எரடு = மிச்ச இரு பாகங்களை
த்ரிவித விவேககைஸி = மூன்று விதமாகப் பிரித்து
ஆத்ம = பரமாத்மன்
இந்திரேகெ = லட்சுமிதேவியருக்கு
ஒந்து = ஒரு பாகத்தை
கொட்டு = கொடுத்து
எரடு = இரு பாகங்களை
தன்னொளகெ = தனக்குள் வைத்துக் கொண்டான்.
இரண்டாம் 1 பாகத்தை 10 பாகங்களாக மாற்றி, அதில் 2 பாகங்களை ருத்ரதேவருக்குக் கொடுத்தான் என்று முந்தைய பத்யத்தில் கூறினார்.
மிச்ச 8 பாகங்களை
பிரித்த விதத்தை இங்கு சொல்கிறார். இந்திர
மன்மதனுக்கு 1.5 பாகங்கள், தத்வாபிமானி தேவதைகளுக்கு 1 பாகம், யாவஜ்ஜீவர்களுக்கு 1 பாகம்; 4.5 பாகங்களை கலி முதலான தைத்யர்களுக்குக் கொடுத்தான். இப்படியாக, ஸ்வதந்த்ரத்தின் 4 பாகங்களில், 1 பாகத்தை பிரம்ம வாயுகளுக்கும், மற்றொரு பாகத்தை தேவதைகளுக்கும், மனுஷர்ய, கலி முதலான தைத்யர்களுக்கும் கொடுத்தான். இப்படியாக 2 பாகங்கள் ஆனால், இன்னும் இரு பாகங்கள் இருக்கின்றன. அந்த இரு பாகங்களை மூன்றாகப் பிரித்து, 1 பாகத்தை ரமாதேவியருக்குக் கொடுத்து, 2 பாகங்களை தான் வைத்துக் கொண்டான்.
இதில் சிறிது விசேஷம் இருக்கிறது. அது என்னவெனில்:
முந்தைய சந்தியில் ஸ்வாதந்த்ர்ய விபாகத்தை
சொல்லும்போது, 400 பாகங்களை எடுத்து பிரம்மாதிகளுக்கு 100; ருத்ராதிகளுக்கு, கலி முதலானவர்களுக்கு 100; என 200 ஆனால், மற்ற 200ல் 67
1/4 பாகத்தை ரமாதேவியருக்குக் கொடுத்து, தான் 132 3/4 பாகத்தை வைத்துக் கொண்டான் என்று கூறியிருந்தார். 200ஐ மூன்றாகப் பிரித்தால், 66 வருகிறது. 66*3 = 198. 66ரினை ரமாதேவியருக்குக் கொடுத்து, தான் 132 வைத்துக் கொண்டான். மொத்தம் 198 ஆனது. மிச்ச 2 பாகத்தை, தன்னுடன் அங்கசங்க யோக்கியம் ரமாதேவியருக்கு வருவதற்காக, 1 1/4 பாகத்தை அவளுக்குக் கொடுத்து முக்கால் பாகத்தை தான் வைத்துக் கொண்டான் என்று
அந்த சந்தியில் கூறியிருந்தார்.
இங்கு அதைப்போலவே, 2டினை 3றாகப் பிரிக்க வேண்டும். இந்த பாகத்தை சுலபமாக புரிந்து கொள்வோம். 2 பாகத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமெனில், ஒன்றிற்கு .66 வருகிறது. அதை லட்சுமிதேவிக்குக் கொடுத்துவிட்டு, மிச்ச 2டினை .66 * 2 = 1.33 பரமாத்மன் தன்னுடனே வைத்துக் கொள்கிறான்.
இதே அர்த்தத்தையே விஷ்ணு ரஹஸ்யத்தில்:
ஸார்த்யைகஞ்சித்த தைவதே |
பகவான் ப்ரததாவிந்த்ரே ஏகமேவேந்த்ரியாதிபே ||8
ஏவமேவ ததௌஜீவே தைத்யேப்ய: ஸார்த்த சாதுர்யா ||
அதத்வௌது துரீயாங்கௌ ஸ்வாதந்த்ர ஸ்யாவஷேஷிதௌ ||
தௌவிதாயத்ரிதாத்ர்யம் ஷம் மாயாயை த்ரததௌஸ்வயம் ||
சேஷம் பாகத்வயம் ஸ்வர்ஸ்மி ஸ்தாபயேத் ஸனிசீச்சயா ||10
என்னும் ஸ்லோகங்கள் சொல்கின்றன.
No comments:
Post a Comment