ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, August 30, 2020

25 - ஆரோகண தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 25 : ஆரோஹண தாரதம்ய சந்தி

/ ஆரோஹண அனுக்ரமணிகா சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

முன்னர் தாரதம்யத்தை விளக்கியிருந்தாலும், அது மிகவும் நீண்டதாக (விளக்கமாக) இருந்ததால், மனனம் செய்வதற்கு முடியாததால், அதை இங்கு மறுபடி, த்ருண ஜீவர்களில் துவங்கி ஸ்ரீஹரி வரைக்குமான ஆரோகண தாரதம்யதை சொல்கிறார்.

 

சந்தியின் சுருக்கம்:

 

4க்தரெனிஸுவ தி3வ்யபுருஷர

உக்திலாலிஸி பேள்த3முக்தா

முக்தஜீவர தாரதம்யவ முனிப ஷாண்டி3ல்ய ||

 

பொருள்:

பக்தரெனிஸுவ = பக்தர்கள் எனப்படும்

திவ்ய புருஷர = திவ்ய புருஷர்களின் ;

உக்தலாலிஸி = கேள்விகளைக் கேட்டு,

ஷாண்டில்ய முனிப = ஷாண்டில்ய ரிஷிகள்;

முக்தாமுக்தஜீவர = முக்தர்கள், அமுக்தர்கள் ஆகியோரின்

தாரதம்யவ = தாரதம்யத்தை

பேள்த = சொல்லியிருக்கிறார்.

 

விளக்கம்:

இது வாயுபுராணத்தில் சொல்லப்பட்ட கதை. செய்த பாவத்தினால் பிசாசாக மாறி, பின் முக்தர்களான சில பக்தர்களுக்கும், சாண்டில்யருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், அவரால் சொல்லப்பட்ட, முக்தாமுக்தர்களின் தாரதம்யத்தை இங்கு சொல்கிறேன் என்று தாசராயர் சொல்கிறார்.

 

ஸ்தா2வரர நோட3ல்கெ த்ருண க்ரிமி

ஜீவருத்தம க்ரிமிக3ளிந்த3

ஜாவி கோ33ஜ வ்யாக்4ஸிம்ஹக3ளிந்த3 ஷூத்3ராதி3 |

மூவருத்தம கர்மிகரு பூ4

தே3வருத்தம கர்மி நோட3லு

கோவிதோ3த்தம கவிக3ளிந்த3லி க்‌ஷிதிப ருத்தமரு ||1

 

விளக்கம்:

ஸ்தாவரர நோடல்கெ = ஸ்தாவரர்களைவிட

த்ருண் கிரிமி ஜீவருத்தம = கிருமிகள் உத்தமர்கள்.

கிருமிகளிந்த = க்ருமி ஜீவர்களைவிட;

அஜ = ஆடு.

ஆவி = பன்றி,

கோவு = பசு,

கஜ = யானை,

வ்யாக்ர = புலி,

சிம்ஹகளு = சிங்கங்கள் இந்த ஜீவர்கள் உத்தமர்கள். இவர்களைவிட

சுத்ராதி கர்மிகரு = நற்செயல்களை செய்யும் சூத்ரர்கள் உத்தமர்கள். அவர்களைவிட வைஸ்யர்கள் உத்தமர்கள். அவர்களைவிட க்‌ஷத்ரியர்கள் உத்தமர்கள். இந்த மூவர்களைவிட,

பூதேவரு = பிராமணர்கள் உத்தமர்கள். சத்கர்மங்களை செய்யும் பிராமணர்களைவிட கோவிதோத்தமரு = ஞானிகளான பிராமணர்கள் உத்தமர்கள்.

கவிகளிந்தலி = அவர்களைவிட

க்‌ஷிதிபருத்தமரு = பூபதிகள் உத்தமர்கள்.

 

4ரணிபர நோட3ல்கெ நர க3

ந்த3ருவருத்தம தே3வக3ந்த3

ர்வர க3ணோத்தம ரிவரிகி3ந்த ஷதோன ஷதகோடி |

பரமரிஷிக3ளு அப்ரஸ்த்ரி

யரு ஸமானரு இவரிகி3ந்தலி

சிரபித்ருக3ளுத்தமரு சிர நாமக பித்ருக3ளிந்த3 ||2

 

தரணிபர நோடல்கெ = பூபாலர்களான சக்ரவர்த்திகளைவிட, நரகந்தர்வர்கள் உத்தமர்கள்.

தேவகந்தர்வர = இவர்களைவிட தேவகந்தர்வர்கள் உத்தமர்கள்.

இவரிகிந்த = இவர்களைவிட

ஷதோனஷதகோடி = 100 கோடிக்கு 100 பேர் குறைவாக இருக்கும் ரிஷிகள் உத்தமர்கள்.

அப்ஸர ஸ்த்ரியரு = கோபியர்களாக கோகுலத்தில் பிறந்து கிருஷ்ணனின் அன்பிறகு பாத்திரராகி வளர்ந்த அப்ஸர ஸ்த்ரீயர்கள், 100 கோடிக்கு 100 பேர் குறைவாக இருக்கும் ரிஷிகளுக்கு

சமானரு = சமமானவர்கள்.

இவரிகிந்தலி = இவர்களைவிட,

சிரபித்ருகளுத்தமரு = சிரபித்ருகள் உத்தமர்கள்,

 

எரடை3து3 எம்ப3த்து ரிஷி தும்

பு3 ஷதோர்வரப்ஸரஸ்த்ரி

யரு ஷதாஜானஜரு உத்தம சிரபித்ருக3ளிந்த3 |

வரரு ஊர்வஷிகி3ந்த வைஷ்வா

நரன ஸுதரீரெண்டு ஸாவிர

ஹரதெ3யரொளுத்தம க3ஷெர்யெப்பத்து நால்கு ஜன ||3

 

எரடயிது எம்பத்து ரிஷிகள் = 90 ரிஷிகள்;

தும்புருஷத = தும்புரு முதலான கந்தர்வர்கள் 100 பேர்;

ஊர்வஷியப்ஸர ஸ்த்ரீயரு ஷத = ஊர்வசி முதலான அப்ஸர ஸ்த்ரீயர் 100 பேர்;

அஜானஜரு = இவர்கள் சிரபித்ருகளைவிட உத்தமர்கள்.

வைஷ்வானரரு = அக்னியு

சுதரு = முக்தளான

ஈரெண்டு சாவிர = 16,000 ரிஷிகள் தவம் செய்து பெண்மை பெற்று ஸ்ரீகிருஷ்ணனின் மனைவிகளானவர்கள்;

சிரபித்ருகளிந்த, அவரரு = சிறிது குறைவானவர்கள்.

ஊர்வஷிகிந்த = ஊர்வசி முதலானவர்களைவிட சிறிது உத்தமர்கள் என்று அறியவேண்டும்.

அஜானஜ தேவதைகளில் சேர்ந்த 84 பேர் அவர்களுக்கு சமம் என்று அறியவேண்டும்.

 

ரியெனிபரு வ்ரஜௌகஸ்த்ரி

யரு ஸுராஸ்யாத்மஜரிகி3ம் பு

ஷ்கரனு கர்மப புஷ்கரனிகெ3 ஷனைஸ்சருத்தமனு |

1ரணிஜனி கு3த்தமளுஷா ஸ்வினி

ஸுரரரசிகு3த்தம ஜலப பு34

ஷரதி4ஜாத்மஜ கு3த்தம ஸ்வஹதே3வி எனிஸுவளு ||4

 

வ்ரஜௌகஸ்த்ரீயரு = கோபிகா ஸ்த்ரீகள்,

சுராஸ்யாத்மஜரிகெ = அக்னியின் மக்களான 16,000 பெண்களுக்கு சமமானவர்கள். இவர்களைவிட

கர்மப புஷ்கரனிகெ = கர்மாபிமானியான புஷ்கரன் உத்தமன்.

ஷனைஸ்சருத்தமனு = புஷ்கரனுக்கு சனீஸ்வரன் உத்தமன்.

தரணிஜனிகெ = சூர்ய புத்திரனான சனீஸ்வரனுக்கு,

அஸ்வினிசுரர = அஸ்வினி தேவதைகளின்;

அரசி உஷா = மனைவியான உஷா உத்தமள். அவளைவிட

ஜலப = ஜலாபிமானியான புதன் உத்தமன்.

ஷரதிஜ = சமுத்திரத்தில் பிறந்த சந்திரன்.

ஆத்மஜகெ = மகனான புதனுக்கு,

ஸ்வாஹா தேவி உத்தமள் ஆகின்றாள்.

 

அனலபா4ர்யளி கி3ந்தனாக்2யா

தனிமிஷோத்தம ரிவரிகி3ந்தலி

4னப பர்ஜன்யானிருத்34ன ஸ்த்ரி உஷாதே3வி |

த்3யுனதி3 ஞ்ஞா ஷ்யாமலா ரோ

ஹிணிக3ளார்வரு மரனாக்2யா

3னிமிஷோத்த மரிவரிகி3ந்தலி நூரு கர்மஜரு ||5

 

அனல பார்யளிகிந்த = அக்னிதேவரின் மனைவியான ஸ்வாஹா தேவியைவிட,

அனாக்யாதானிமிஷரு = தேவதைகளில் பிரபலமாகாதவர்கள் அனாக்யாதர், இவர்கள் உத்தமர்கள்.

அனாக்யாதரிந்தலி = அனாக்யாதர்களைவிட

கனப = மேகத்துக்கு அபிமானியான பர்ஜன்யன் உத்தமன்.

அனிருத்தன ஸ்த்ரி உஷாதேவி = இவனுக்கு அனிருத்தனின் மனைவி உஷாதேவி,

த்யுனதி = கங்கா,

சங்ஞா = சூர்யனின் மனைவி,

ஷாமளா = யமனின் மனைவி,

ரோஹிணி = சந்திரனின் மனைவி, இவர்கள் அனைவரும் சமம். அனாக்யாத தேவதைகளைவிட உத்தமர்கள். இவர்களைவிட,

100 கர்மஜர்கள் = கர்மங்களை சரியாக செய்து பதவியைப் பெற்ற தேவதைகள் கர்மதேவதைகள் - அவர்கள் மொத்தம் 100 பேர், இவர்கள் உத்தமர்கள்.

 

ப்ருது2 நஹுஷ ஷஷபி3ந்து3 ப்ரீய

வ்ரத பரீக்‌ஷித ந்ருபரு பா4கீ3

ரதி2ய நோட3ல்கதி4க ப3லியாதி3ந்த்3ப்தகரு |

பித்ருக3ளெண் டெண்டதி4க வப்ஸர

தியரீரைதொ3ந்து3 மனுக3ளு

தி3திஜகு3ரு ச்யாவன உசத்யரு கர்மஜரு மரு ||6

 

ப்ருது, நஹுஷ, ஷஷபிந்து, ப்ரியவ்ரத, பரீக்‌ஷித ந்ருபரு = இந்த ராஜர்கள்,

பாகீரதிய நோடல்கதிக = தாரதம்யத்தின்படி கங்கை முதலானவரகளைவிட உத்தமர்கள்;

பல்யாதிந்த்ர சப்தகரு = பலிசக்ரவர்த்தி முதலான ஏழு இந்திரர்கள்,

பித்ருகளெண்டு = எட்டு பித்ருகள்,

எண்டதிக அப்ஸர சதியரு = எட்டு அப்ஸர ஸ்த்ரியர்கள், இந்த எட்டு பித்ருகளைவிட உத்தமர்கள்

ஈரைதொந்து மனுகளு = (2*5)+1 = 11 மனுகள்,

திதிஜகுரு = சுக்ராசார்யர்;

ச்யாவன உசித்யரு கர்மஜரு சமரு = ச்யாவன ரிஷி, உசித்ய ரிஷி, கர்மஜ தேவதைகள் - இவர்கள் அனைவரும் சமமானவர்கள்.

 

4னப விஷ்வக்ஸேன க3ணபா

ஷ்வினிக3 ளெம்பத்தைது3 ஸேஷரி

கெ3ணெ எனிஸுவரு மித்ர தாரா நிர்ருதி ப்ராவாஹி |

கு3ணக3ளிந்தை33தி4க எம்ப

த்தெனிப ஸேஷரிகு3த்தமரு

ந்முனி மரீசி புலஸ்த்ய புலஹ க்ரது வஸிஷ்டமுக2 ||7

 

தனப = குபேரன்;

விஷ்வக்சேன = பிரதான வாயுதேவரின் புத்ரன்; கணபதி,

அஸ்வினி தேவதைகள், ஆகியோர்

எம்பத்தைது சேஷரிகெணெ எனிஸுவரு =  85 சேஷ சதஸ்கர்களுக்கு சமம் எனப்படுகிறார்கள். (சேஷ சதஸ்தர்கள் ஆகியோரை ப்ருஹத் தாரதம்ய சந்தியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார் ஆகையால் இங்கு மறுபடி விளக்கவில்லை).

மித்ர = சூர்ய;

தாரா = ப்ருஹஸ்பத்யாசார்யரின் மனைவி;

நிருருதி = திக்பாலகர்;

ப்ரவஹி = ப்ரவஹ வாயுவின் மனைவி; இவர்கள் குணங்களால் ஐதெனிப எம்பத்தெனிப சேஷரிகெ = 85 சேஷசதஸ்தர்களைவிட உத்தமர்கள்.

சன்முனி = உத்தம ரிஷிகளான பிரம்ம தேவரின் மக்களான மரீசி, புலஸ்த்ய, புலஹ, க்ருது;

வசிஷ்டமுக = இவர்களே முதலானவர்கள்.

 

அத்ரி அங்கி3ரரேளு பி3ரம்மன

புத்ரரிவரிகெ3 மரு விஷ்வா

மித்ர வைவஸ்வதரு ஈஷாவேஷ ப3லதி3ந்த3 |

மித்ரகி3ந்துத்தமரு ஸ்வாஹா

4ர்த்ரு ப்4ருகு3வு ப்ரஸூதி விஷ்வா

மித்ர மொத3லாத3வரிகி3ந்த3லி மூவருத்தமரு ||8

 

அத்ரி, அங்கிரரு = முந்தைய பத்யத்தில் கூறிய மரீசியிலிருந்து அங்கிரரு வரையிலான ஏழு பேர்,

பிரம்மன புத்ரரு = பிரம்மனின் மக்களாவர்.

இவரிகெ ஈஷாவேஷ பலதிந்த = பரமாத்மனின் ஆவேச பலத்தினால்;

விஸ்வாமித்ரர், வைவஸ்வத மனு இவர்கள் சமமானவர்கள். மொத்தம் 9 பேர். மித்ரரிம்துத்தமரு = மித்ர முதலானவர்களைவிட, உத்தமர்கள். விஸ்வாமித்ர முதலானவர்களைவிட

ஸ்வாஹாபர்த்ரு = அக்னிதேவன், ப்ருகு ரிஷிகள், தக்‌ஷப்ரஜேஷ்வரனின் மனைவி ப்ரசூதி, இவர்கள் மூவர் உத்தமர்கள்.

 

மரீசி, புலஸ்த்ய, புலஹ, க்ரது, வசிஷ்ட, அத்ரி, அங்கிரர் என்னும் ஏழு பேர் பிரம்ம தேவரின் மக்கள். விஸ்வாமித்ரர், வைவஸ்வதமனு இவர்களுடன் இந்த ஒன்பது பேரும் சமமானவர்கள். மித்ரர் முதலானவர்களைவிட உத்தமர்கள். இவர்களைவிட அக்னி, ப்ருகு, ப்ரசூதி இந்த மூவரும் உத்தமர்கள்.

 

நாரதோ3த்தம நக்3னிகி3ந்தலி

வாரிநி3தி4 பாதோ3த்தமனு யம

தாரகேஷ தி3வாகரரு ஷதரூபருத்தமரு |

வாரிஜாப்தனிகி3ந்த3லி ப்ரவஹ

மாருதோத்தம ப்ரவஹகி3ந்தலி

மாரபுத்ர அனிருத்த3 கு3ரு மனு த3க்‌ஷ சசி ரதியு ||9

 

அக்னிகிந்தலி = அக்னியைவிட,

நாரதோத்தம = நாரதர் உத்தமர்.

வாரிநிதி பாதோத்தமனு = அவரைவிட கால்பாகம் மட்டும் வருணன் உத்தமன்.

இவரைவிட் யம,

தாரகேஷ = சந்திரன்,

திவாகரன் = சூர்ய,

ஷதகூப = ஸ்வாயம்புவ மனுவின் மனைவி, இவர்கள் உத்தமர்கள்.

வாரிஜாப்தனிகிந்த = சூர்யர்களைவிட

ப்ரவஹ மாருதோத்தம = ப்ரவஹ மாருதன் உத்தமன்.

ப்ரவஹகனைவிட,

மாரபுத்ர = மன்மதன்,

பிரத்யும்னனின் மகன் அனிருத்தன்,

குரு = பிருகஸ்பதி,

ஸ்வாயம்புவ மனு,

தக்‌ஷ,

சசிதேவி = இந்திரனின் மனைவி ரதிதேவி;

இவர்கள் ஆறு பேரும் உத்தமர்கள்.

 

ஆருஜனக3ளி கி3ந்தலி அஹ

ங்காரிக ப்ராணோத்த மகி2ல ஷ

ரீரமானி ப்ராணகி3ந்தலி காம இந்த்3ரரிகெ3 |

கௌரி வாருணி க23பராணிகெ3

ஷௌரி மஹிஷியரொளகெ3 ஜாம்பவ

தி ரமாயுதளாத3 காரண அதி4களெனிஸுவளு ||10

 

ஆருஜனகளிகிந்தலி = முந்தைய பத்யத்தில் கூறிய அனிருத்தாதி ஆறு பேர்களைவிட;

அஹங்காரிக பிராணன் உத்தமன்.

அகில சரீரமானியான அஹங்காரிக பிராணனைவிட,

காம = மன்மதன், இந்திரன் உத்தமன்.

காம, இந்திரனைவிட

கௌரி,

வாருணி = சேஷதேவரின் மனைவி,

ககபராணி = கருடனின் மனைவி,

சௌபர்ணி - ஆகிய மூவர் உத்தமர்கள்.

கௌரி வாருணி ககபராணிகளைவிட

சௌரி மஹிஷியரு = கிருஷ்ணனின் ஷண் மஹிஷியர்கள், ஜாம்பவதி மித்ரவிந்தா முதலான ஆறு பேர்கள் உத்தமர்கள்.

இவர்களில் ஜாம்பவதி,

ரமாயுதளாத காரண = லட்சுமிதேவியின் ஆவேசத்தின் விசேஷ பலத்தினால் அதிகள் (சிறந்தவள்) என்று கூறப்படுகிறாள்.

 

ஹர ப2ணிப விஹகே3ந்த்3ர மூவரு

ஹரிமட3தி3யரி கு3த்தமரு ஸௌ

பரணிபதி கு3த்தமரு பா4ரதி வாணி ஈர்வரிகெ3 |

மருத பி3ரம்மரு உத்தமரு இந்தி3ரெயு

பரமோத்தமளு லக்‌ஷ்மிகெ3

ரியெனிஸுவ வரில்லவெந்தி3கு3 தே3ஷகாலதொ3ளு ||11

 

ஹர, பணிப = சேஷதேவர்,

விஹகேந்த்ர = கருடன், இவர்கள் மூவரும்

ஹரிமடதியரிகெ = கிருஷ்ணனின் மனைவியரைவிட உத்தமர்கள்.

சௌபர்ணிபதிகெ = கருடன் முதலானவர்களைவிட

பாரதி தேவியர்,

வாணி = சரஸ்வதி தேவியர் உத்தமர்கள்.

ஈர்வரிகெ = இவர்கள் இருவரைவிட,

மருத பிரம்மரு = வாயு தேவரு, பிரம்ம தேவர் உத்தமர்கள்.

இவர்களைவிட

இந்திரெயு = ரமா தேவி, பரம உத்தமள்.

லட்சுமி தேவியைவிட

தேசகாலதொளு = எந்த தேசத்திலாகட்டும் எந்த காலத்திலாகட்டும் என்றைக்கும் சமம் என்போர் யாரும் இல்லை.

 

ஸ்ரீமுகுந்த3ன மஹிளெ லகுமி ம

ஹாமஹிமெ கே3னெம்பெ3 பி3ரம்மே

ஷாமரேந்த்ரர ஸ்ருஷ்டி ஸ்தி2தி லயகை3ஸி அவரவர |

தா4மக3ள கல்பிஸி கொடு3வள ஜ

ரா மரணளாகி3த்து ர்வ

ஸ்வாமி மம கு3ருவெந்து3பாஸனெ மாள்பள ச்யுதன ||12

 

ஸ்ரீமுகுந்தன,

மஹிஷி = மனைவியான லட்சுமிதேவி,

பிரம்மேஷாமரேந்திர = பிரம்ம, சிவ, இந்திர ஆகியோரின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயங்களை செய்து அவரவர்களுக்கு அவரவர் இடங்களைக் கொடுப்பது. அஜராமரணளாகித்து = முதுமை, மரணம் ஆகிய நிலைகள் இல்லாமல்;

சர்வஸ்வாமி,

மம = என் குருவான அச்யுதனின் உபாசனையை செய்வர். இத்தகைய மகாலட்சுமியின்

மஹாமஹிமெ கேனெம்பெ = எவ்வளவு வர்ணிப்பது?

 

லட்சுமிதேவியானவர், சத்வ ரஜோ தமோ குணங்களாலான ப்ரக்ருதி ஸ்வரூபமானவர். மூன்று குணாத்மகராகி, ஸ்ரீ பூ துர்கா ரூபமாக இருப்பவர். பரமாத்மனின் ப்ரக்ருதி சம்பந்தமான ரஜோ குணத்தினால் ஸ்ருஷ்டி, சத்வகுணத்தினால் காத்தல், தமோ குணத்தினால் அழித்தல் ஆகியவற்றை செய்கிறார். அவரவரின் பதவியை பெறவேண்டுமானாலும் லட்சுமிதேவியின் அருளாலேயே அது ஆகவேண்டும்.

 

முக்தி ஸ்தானத்திற்கு போகவேண்டியவர்கள் ஸ்ரீமன் ப்ராப்யானுமோதிதா:என்னும் பாகவத தாத்பர்ய வாக்கியத்திற்கேற்ப லட்சுமிதேவியரின் அனுமதியுடனேயே முக்தியை பெறவேண்டும். பிறப்பு இறப்பு ஆகியவை இல்லாமல், பிரளய காலத்திலும் கூட, பரமாத்மனின் சேவையை செய்து கொண்டிருப்பார். எப்போதும் எந்நேரமும், சர்வஸ்வாமி, என் குருவென்று பரமாத்மனின் உபாசனையை செய்து கொண்டிருப்பார். இத்தகைய மகாலட்சுமியின் மகா மகிமைகளை என்னவென்று சொல்லி வர்ணிப்பேன்?

 

ஈஸு மஹிமெக3ளுள்ள லகுமி ப

ரேஷனானந்தா3ம்ஷ கு3ணதொ3ளு

லேஷலேஷக்கெ ரியெனிளாவாவ காலத3லி |

தே3ஷகாலாதீ3த லகுமிகெ3

கேஷவன வக்‌ஷஸ்த2லவெ அவ

காஷவாயிது இவன மஹிமெகெ3 வ்யாப்திகெ3ணெயுண்டெ ||13

 

ஈசுமஹிமெகளுள்ள = இவ்வளவு மகிமைகளைக் கொண்ட ரமாதேவி,

பரேஷன = சர்வோத்தமனான பரமாத்மனின் குணங்களுக்கு,

அனந்தாம்ஷதொளு = எந்தவொரு காலத்திலும் சரியானவளாக மாட்டாள். பரமாத்மனின் அனந்த குணங்களின் அம்சங்களில் ஒரு சிறிய அம்சத்திற்கும்கூட சமமாக மாட்டாள் என்று பொருள்.

தேஷகாலாதீத லகுமிகெ = ஏதாவதொரு காலத்தில் சமமில்லை என்று பொருளில்லை. அனைத்து இடங்களிலும், காலங்களிலும் சமமில்லை என்று பொருள். இத்தகைய லட்சுமிதேவிக்கு,

கேஷவன வக்‌ஷஸ்தலவே = கேசவனின் மார்பே

அவகாஷவாயிது = இருப்பிடமாயிற்று.

இப்படி விளக்கியபிறகு,

இவன = இந்த பரமாத்மனின்

மஹிமெகெ = மகிமைகளுக்கும்,

வியாப்திகெணெயுண்டெ = வியாப்திக்கும் இணையுண்டா?

 

ஒந்து3 ரூபதொ3 ளொந்த3வயவதொ3

ளொந்து3 ரோமதொ3ளொந்து3 தே3ஷதி3

பொந்தி3 கொண்டி3ஹவஜ ப4வாதி3 மஸ்த ஜீவக3|

ஸிந்து4 ப்தத்3வீப மேரு ஸு

மந்த3ராத்3யத்ரிக3ளு பி3ரம்ம பு

ரந்தராதி3 மஸ்த லோக பராலயக3 ளெல்ல ||14

 

ஒரு ரூபத்தில், ஒரு தேக உறுப்பில், ஒரு முடியில்,

ஒரு தேஷதி = அந்த முடியின் ஒரு பாகத்தில்,

அஜபவாதி = பிரம்ம ருத்ராதி அனைத்து ஜீவகணங்கள்,

சிந்து = ஏழு கடல்கள்,

சப்தத்வீப = ஏழு தீவுகள்,

மேரு = மேரு பர்வதம்,

சுமந்தராத்யத்ரிகளு = மந்தர முதலான மலைகள்,

பிரம்மபுரந்தராதி = பிரம்ம இந்திர முதலான,

சமஸ்தலோகபர = உலகத்தை காப்பவர்களின்,

ஆலயகளெல்ல = வீடுகள் அனைத்தும்

பொந்திகொண்டிஹவு = சேர்ந்திருக்கிறது.

 

ர்வதே3வோத்தமனு ர்வக3

ர்வகு3ம்பூர்ண ர்வத3

ர்வதந்த்ர ஸ்வதந்த்ர ர்வாதா4ர்வாத்ம |

ர்வதோமுக2 ர்வ நாமக

ர்வஜனம்பூஜ்ய ஷாஸ்வத

ர்வகாமத3 ர்வஸாக்‌ஷிக3 ர்வஜித்ர்வ ||15

 

சர்வதேவோத்தமன் = பரமாத்மன் சர்வதேவோத்தமன்,

சர்வக = எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவன்,

சர்வகுண சம்பூர்ணன் = அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றவன்

எப்போதும் சர்வதந்த்ர ஸ்வதந்திரன்.

சர்வாதார = அனைவருக்கும் ஆதாரமானவன்.

சர்வாத்மகன்.

சர்வதோமுக = அனைத்து இடங்களிலும் உள்ளவன்.

அனைத்து பெயர்களையும் கொண்டவன்.

அனைவராலும் பூஜிக்கப்படுபவன்.

ஷாஸ்வத = நிரந்தரமானவன்.

சர்வகாமத = அனைவரின் மனதின் ஆசைகளையும் நிறைவேற்றுபவன்.

சர்வசாக்‌ஷிக = அனைவரையும் தேர்ச்சியடைய வைப்பவன்.

ஆகையாலேயே, சர்வ என்று பெயர் பெற்றவன் ஆகிறான்.

 

தாரதம்யா ரோஹணவ பரெ

தா3ரு படிஸுவரவர லக்‌ஷ்மி

நாரசிம்ஹ மஸ்த தே3வக3ணாந்தராத்மகனு |

பூரயிஸுவ மனோரத2ங்க3

காருணிக கை1வல்யதா3யக

தூரகை3மஸ்தது3ரிதவ வீதப4ய ஷோக ||16

 

இந்த ஆரோகண தாரதம்யத்தை

பரெதாரு படிசுவர = யார் எழுதுவரோ, யார் படிப்பரோ,

அவர = அவரின்

மனோரதங்கள = மனோபீஷ்டங்களை,

சமஸ்த தேவகணாந்தராத்மகனு = அனைத்து தேவதைகளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருப்பவனும்,

காருணிக = கருணா சமுத்திரனும்,

கைவல்ய தாயக = முக்தியைக் கொடுப்பவனும்,

வீதபய ஷோக = பயம் / சோகங்கள் இல்லாதவனுமான ஸ்ரீலட்சுமி நரசிம்மன் நிறைவேற்றுவான். அவர்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து பாவங்களையும், அனைத்து கஷ்டங்களையும் பரிகரிப்பான்.

 

ப்ரணத காமத3னங்க்4ரி ந்த3ரு

ஷன தபேக்‌ஷெக3 ளுள்ளவகெ3 நி

ச்சணிகெ யெனிபுது3 ஜட3மொத3லு பி3ரம்மாந்த11ரத1மவு |

மன வசனதி3ம் ஸ்மரிஸுவர ப4

வனதி4 ஷோஷிஸி போ1கு3வுது3 கா

ரணவெனிஸுவுது3 ஞான ப4க்தி விரக்தி ம்பத3கெ ||17

 

ப்ரணத காமதன = தன்னை வணங்குபவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றும் ஸ்ரீஹரி,

அங்க்ரி = ஸ்ரீஹரியின் பாதங்களை

சந்தர்ஷனத அபேக்‌ஷெகளுள்ளவகெ = தரிசிக்க விரும்புபவர்கள்

தரதமவு = இந்த சந்தியில் சொல்லப்பட்டுள்ள,

ஜடமொதலு பிரம்மாந்த = ஜட முதல் பிரம்மதேவர் வரைக்குமான தாரதம்ய ஞானம்;

நிச்சணிகெ யெனிபுது = (இந்த ஞானம்) ஒரு ஏணியாக கருதப்படுகிறது

மனவசனதிம் = மனதினாலும் வாக்கினாலும் நினைப்பவர்களின் ;

பவவனதி = சம்சார சாகரம்

ஷோஷிஸி போகுவுது = வறண்டு போகும், மற்றும் அவர்களின்

ஞான பக்தி விரக்தி செல்வத்திற்கு (இந்த ஞானமே) காரணமாகும்.

 

அனலனொளு ஹோமிஸுவ ஹரிச

ந்தனவெ மொத3லாது33ஸுவா

னெயு ப்ரத்ப்ரத்யேக தோர்புது3 எல்லகாலத3லி |

3னுஜ மானவ தி3விஜ ரவரவ

ர னுசிதோசித கர்ம வ்ருஜினா

ர்த்த4னனு வ்யக்திய மாள்ப த்ரிகு3ணாதீத விக்2யாத ||18

 

அனலனொளு = அக்னியில்

ஹோமிஸுவ = ஹோமம் செய்யப்படும்

சந்தனவே மொதலாதுதர = சந்தனம் முதலான சுகந்த திரவ்யங்களின்

சுவாசனெயு = நறுமணமானது

எல்லகாலதலி =  அனைத்து காலங்களிலும்

ப்ரத்ப்ரத்யேக தோர்புது = தனித்தனியாக தெரியும்.

தனுஜ = தைத்யர்கள்,

மானவ = மனிதர்கள்,

திவிஜரு = தேவதைகள்

அவரவர = அவரவர்களின்

அனுசிதோசிதகர்ம = புண்ய பாவம் முதலான கர்மங்கள்,

த்ரிகுணாதீஷ = ப்ராக்ருத குணங்களுக்கும் அப்பாற்பட்ட (அவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பவன்),

விக்யாத = உலகப் புகழ்பெற்ற, கஷ்டங்களை பரிகரிப்பவனான ஸ்ரீஹரி, பிரித்துக் கொடுப்பான்.

 

சந்தனக்கட்டை முதலான வாசனைத் திரவியங்களை, நெருப்பில் (ஹோமத்தில்) இட்டால், எப்படி அதற்கான வாசனைகள் தனித்தனியாக தெரியுமோ, அதுபோலவே, தைத்யர், மனுஷ்யர், தேவதைகள் ஆகியோர் செய்யும் பாப புண்ணியங்களை தனித்தனியாக பிரித்துக் காட்டுவான், ஸ்ரீஹரி.

 

4க்தவத்ஸல பா4க்யபுருஷ வி

விக்த விஷ்வாதா4ர்வோ

த்ரிக்த த்ருஷ்டாத்ருஷ்ட து3ர்க3ம து3ர்விபா4க்ய ஸ்வஹி |

ஷக்த ஷாஷ்வத கலவேதை3

கோக்த மானத3 மான்ய மாத4

ஸூக்த ஸூக்‌ஷ்ம ஸ்தூ2ல த்ரிஜக3ன்னாத2விட்ட2லனு ||19

 

பக்தவத்ஸலன்;

பாக்யபுருஷன்;

விவிக்த = ஏகாந்தவாசி;

விஷ்வாதார = உலகத்திற்கே ஆதாரமானவன்;

சர்வோத்ரிக்த = சர்வோத்தமன்,

தோஷவிதூர = தோஷங்கள் இல்லாதவன்,

துர்கம = கட்டுப்படுத்த முடியாதவன்;

துர்விபாவ்ய = புரிந்து கொள்ள முடியாதவன்;

ஸ்வஹி = தன்னால் தானே புகழ்பெற்றவன் அல்லது ஸ்வதந்திரன்;

ஷக்த = சாமர்த்தியம் கொண்டவன்;

சாஸ்வத = நித்யன்;

சகலவேதைகோக்த = அனைத்து வேதங்களால், முக்கியமாக சர்வோத்தமன் என்று புகழப்பட்டவன்;

மானத = பக்தர்களுக்கு வரங்களைக் கொடுப்பவன்;

மான்ய = அனைவராலும் போற்றப்படுபவன்;

மாதவ = லட்சுமிபதி;

சூக்த = நன்றாக புகழப்படுபவன்;

சூக்‌ஷ்ம = அணுவைப் போன்ற உருவம் கொண்டவன்;

ஸ்தூல = பிரம்மாண்டத்தைப் போன்ற ரூபம் கொண்டவன்; பெரியதை விட பெரியதானவன்; இத்தகைய மகாமகிமைகளைக் கொண்டவன் ஸ்ரீஜகன்னாதவிட்டலன்.

 

ஆரோஹண தாரதம்ய சந்தி என்னும் 25ம் சந்தியின் தாத்பர்யம் இங்கு முடிந்தது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment