வாஸுதே3வ ஸ்வதந்த்ர்யவ ஸரோ
ஜாஸனாத்3ய மராஸுரரிகி3ய
லோஸுக2ர்த4வ தெகெ3த3த3ரொளர்த்த4வ சதுர்பா4க3
கை3ஸி ஒந்த3னு ஷதவித3 த்3விப
ஞ்சாஷத3ப்ஜ ஜகஷ்ட சத்வா
ரிம்ஷதி அனிலகி3த்த வாணி பா4ரதீக3ர்த்த4 ||11
வாசுதேவ = ஸ்ரீமன் நாராயணன்
ஸ்வதந்த்ரவ = தன் ஸ்வாதந்த்ர்யத்தை
ஸரோஜாஸனாதி = தாமரையில் அமர்ந்திருப்பவரான பிரம்மதேவரே
முதலான
அமர = தேவதைகளுக்கும்
அசுரரிகெ = கலி முதலான அசுரர்களுக்கும்
ஈயலோசுக = கொடுப்பதற்காக
அதரொளகெ = ஸ்வாதந்த்ர்யத்தில்
அர்த்தவ = பாதி பாகத்தை
தெகெது = எடுத்து
சதுர்ப்பாக கைஸி = அதை நான்கு பாகங்களாக மாற்றி
ஒந்தனு = அதில் ஒன்றினை
ஷதவிதகெய்ஸி = 100 பாகங்களாக ஆக்கி
த்விபஞ்சாஷத = 52 பாகங்களை
அப்ஜஜகெ = பிரம்ம தேவருக்கும்
அஷ்ட சத்வாரிம்ஷத = 48 பாகங்களை
அனிலகெ = வாயுதேவருக்கும்
இத்து = கொடுத்து
வாணி = சரஸ்வதி தேவியருக்கு
பாரதி = பாரதி தேவியருக்கு
அர்த்த = அவரவர்களின் கணவர்களின் பாகங்களில் அர்த்த
பாகத்தைக் கொடுத்தான்.
சர்வ ஸ்வதந்த்ரனான ஸ்ரீபரமாத்மன், அபாரமான தன் ஸ்வாதந்த்ர்ய குணங்களில் பாதியை எடுத்து, அதனை 4 பாகங்களாக ஆக்கி, அதில் 1 பாகத்தை 100 பாகங்களாக்கி, அவற்றில் 52 பாகங்களை பிரம்மதேவருக்கும், 48 பாகங்களை வாயுதேவருக்கும்
கொடுத்தான். அந்த பிரம்ம வாயுதேவர்களுக்குக் கொடுத்த பாகங்களில் பிரம்மதேவரின்
பாகத்தில் பாதி 26 பாகங்களை சரஸ்வதி தேவியருக்கும், வாயுதேவரின் பாகங்களில் பாதி 24 பாகங்களை பாரதிதேவியருக்கும் கொடுத்தான்.
த்3விதிய பாத3வ தெகெ3துகொண்ட3த3
ஷத விபா4க3வ மாடி3 தா விம்
ஷதி உமேஷனொளிட்ட இந்த்3ரனொளைத3தி3க ஹத்து |
ரதிபனொளகி3னி தி3ட்டகி2ல தே3
வதெக3ளொளகீ3ரைது3 ஜீவ
ப்ரததியொளு த3ஷ ஐத3தி3கனால்வத்து தை3த்யரொளு ||12
த்விதிய பாதவ = இரண்டாம் கால் பாகத்தை எடுத்து
அதனு = அதனை
ஷதவிபாகவ மாடி = 100 பாகங்களாக மாற்றி
தா = தான்
விம்ஷதி = 20 பாகங்களை
உமேஷனொளு = ருத்ரதேவரில்
இட்டு = வைத்து
இந்திரனொளு = இந்திரனில்
ஐரதிக ஹத்து = 15 பாகங்களை
ரதிபனொளகெ = ரதிபதியான மன்மதனில்
இனிதிட்ட = இந்திரனுக்குக் கொடுத்த பாகத்தையே
இந்திரனுடனே அனுபவிக்குமாறு செய்து
அகிள தேவதெகளொளு = அனைத்து தேவதைகளில்
ஈரைது = 10 பாகங்களை
ஜீவப்ரததியொளு = ஜீவரின் சங்கத்தில்
தஷ = 10 பாகங்களை
ஐததிக நால்வத்து = 45 பாகங்களை
தைத்யரொளு = கலி முதலான தைத்யர்களில் வைத்தான்.
முதல் கால் பாகத்தை 100 பாகங்களாக மாற்றி, பிரம்ம வாயுவிற்குக் கொடுத்திருந்தான்.
இரண்டாம் கால் பாகத்தை எடுத்து, அதை 100 பாகங்களாக மாற்றி,
* 20 பாகங்களை ருத்ரதேவருக்கும்
* 15 பாகங்களை இந்திர மன்மதனுக்கும்
* 10 பாகங்களை மற்ற தேவதைகளுக்கும்
* 10 பாகங்களை அனைத்து ஜீவர்களுக்கும்
* 45 பாகங்களை கலி முதலான தைத்ய
சமூகத்திற்கும் கொடுத்தான்.
காருணிக ஸ்வாதந்த்ரியத்வவ
மூரு வித3கை3ஸெரடு3 தன்னொளு
நாரிகொந்த3னு கொட்ட ஸ்வாதந்த்ர்யவனு ஸர்வரிகெ3 |
தா4ருணிப தன்னனுக3ரிகெ3 வ்யா
பாரகொட்டு கு3ணவகு3ணகள வி
சார மாடு3வ தெரதி3 த்ரிகு3ணவ வ்யக்தவனு மாள்ப ||13
காருணிக = கருணாளுவான ஸ்ரீஹரி
ஸ்வாதந்த்ரியத்வவ = மிச்சமிருந்த பாதி
ஸ்வாதந்த்ர்யத்தை
மூரு விதகைஸி = மூன்று பாகங்களாக ஆக்கி
எரடு தன்னொளு = இரண்டினை தன்னில் வைத்துக் கொண்டு
ஒந்தனு = ஒன்றினை
நாரிகெ கொட்ட = மனைவியான லட்சுமிதேவிக்குக்
கொடுத்தான்
தாருணிப = மகாராஜன்
தன்னனுகரிகெ = தன் சேவகர்களுக்கு
வ்யாபார கொட்டு = செயல்களைக் கொடுத்து, சுதந்திரமாக அவற்றை செய்யுமாறு, அதிகாரத்தைக் கொடுத்து
குணாவகுணகள = அவர் செய்த செயல்களின் திறனைப் பார்த்து
விசார மாடுவ தெரதி = முடிவெடுப்பதைப் போல
த்ரிகுணவ = சத்வ ரஜஸ் தமோ குணங்களை
வ்யக்தவனு மாள்ப = பிரித்துப் பார்க்கிறான்.
மற்ற இரு பாகங்களை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் இரண்டினை தான் வைத்துக்கொண்டு, லட்சுமிதேவியருக்கு ஒரு பாகத்தைக்
கொடுத்தான். இப்படி, ஸ்வாதந்த்ர்யத்தை அவரவர்களுக்குக் கொடுத்து, ஒரு அரசன் தன் சேவகர்களுக்கு, செயல்களை செய்யும் ஸ்வாதந்த்ர்யத்தைக்
கொடுத்து,
அவர்கள் செய்த செயல்களின் முடிவினைப் பார்த்து, அவரவர்களின் வேலைக்கேற்ப அவரவர்களின் யோக்யதையை முடிவெடுப்பதைப் போல, பரமாத்மன் ஜீவர்களின் யோக்யதையை, அவர்கள் மூலமாக செய்விக்கும்
செயல்களால், இவர்கள் சாத்விகர், இவர்கள் ராஜஸர், இவர்கள் தாமஸர் என்று அவர்களின் யோக்யதையை வெளிப்படுத்துகிறான்.
புண்யகர்மகெ ஸஹயவாகு3வ
த4ன்யரிகெ3 கல்யாதி3 தை3த்யர
புண்யப2லக3ளனீவ திவிஜர பாபகர்மப2ல
அன்ய கர்மவ மாள்பரிகெ3 அனு
கு3ண்ய ஜனரிகெ3 கொடு3வ ப3ஹுகா
ருண்ய ஸாக3ரனீதெரதி3 ப4க்தரனு ஸந்தெயிப ||14
புண்யகர்மகெ சஹாயவாகுவ = புண்ய கர்மங்களுக்கு உதவி
செய்யும்
தன்யரிகெ = புண்யபுருஷர்களுக்கு
கல்யாதி தைத்யர = கலி முதலான தைத்யர்களின்
புண்பபலகளனீவ = அவர்கள் செய்த புண்ய பலன்களைக்
கொடுக்கிறான்
அதிதிஜர = தேவதைகளின்
பாபகர்மபல = பாப கர்மங்களின் பலனை
அன்ய கர்மவ மாள்பரிகெ = பாவ கர்மங்களை செய்பவர்களுக்கு
அனுகுண்ய ஜனரிகெ = உதவி செய்பவர்களுக்கு
கொடுவ = கொடுக்கிறான்
காருண்யசாகர = கருணைக்கடலான
ஈ தெரதி = இப்படியாக
பக்தரனு சந்தெயிப = பக்தர்களை காக்கிறான்.
புண்ய கர்மங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு, கலி முதலானவர்கள் செய்யும் புண்ய பலன்களை கொடுக்கிறான். தேவதைகள் செய்யும் பாப
கர்ம பலன்களை பாபம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரோ, அவர்களுக்குக் கொடுக்கிறான். இப்படியாக, கருணைக்கடலான ஸ்ரீஹரி, பக்தர்களை அனைத்து விதங்களிலும்
காப்பாற்றுகிறான்.
தான் கொடுத்த ஸ்வாதந்த்ர்யத்தால், ஜீவர்கள் தாம் செய்யும் கர்மங்களுக்கேற்ப த்ரிவித ஜீவர்களின் யோக்யதையை
வெளிப்படுத்துகிறான் என்று முந்தைய பத்யத்தில் சொல்லியிருந்தார். இவர் சாத்விகர், இவர் ராஜஸர், இவர் தாமஸர் என்று சொல்வதற்காக 5 பத்யங்களாக த்ரிவித ஜீவர்களின்
லட்சணங்களை சொல்கிறார்.
(15 முதல் 17 பத்யங்கள் வரை, 17ம் பத்யத்தில் இறுதியில் இருக்கும் ‘தமவெ வர்த்திபுது’ என்னும் காரணி பொருந்துகிறது என்று அறியவேண்டும்).
நிருபமகெ3 ஸரியுண்டு எந்து3
ச்சரிஸுவவ தத்ப4க்தரொளு ம
த்ஸரிஸுவவ கு3ணிகு3ணக3ளிகெ3 பே4த3க3ள பேளுவவ |
த3ர ஸுத3ர்ஷன ஊர்த்4வபுண்ட்3ரவ
த4ரிஸித3வரனு த்3வேஷிபன ஹரி
சரிதெக3ள கேளத3லெ லோக3ரவார்த்தெ கேளுவவ ||15
நிருபமகெ = உவமைகளுக்குப் பொருந்தாத பரமாத்மனுக்கு
சரியுண்டு எந்து = பிரம்மா வாயு முதலான தேவதைகள்
பரமாத்மனுக்கு சமமாகலாம் என்று
உச்சரிசுவவ = சொல்பவன்
தத்பக்தரொளு = பரமாத்மனின் பக்தர்களில்
மத்ஸரிஸுவவ = பொறாமை கொண்டவன்
குணகளிகெ = பரமாத்மனின் ஆனந்தாதி குண சமூகங்களுக்கு
பேதகள பேளுவவ = வேறுபாடு இருக்கிறது என்று சொல்பவன்
தர = சங்கு
சுதர்சன = சக்கர
ஊர்த்வபுண்ட்ரவ,
தரிசிதவரனு த்வேஷிபன = பகவத் பக்தர்களை த்வேஷிப்பவன்
ஹரி சரிதெகள கேளதலெ = ஸ்ரீஹரியின் சரித்திரங்களை கேட்காமலேயே
லோகவார்த்தெ கேளுவவ = லௌகிக சம்பந்தமான அரட்டைகளை
மட்டுமே கேட்பவன்
தமோ யோக்யர்களின் குணங்களை சொல்கிறார்.
* சர்வோத்தமனான ஸ்ரீஹரியை, பிரம்மா வாயுவிற்கு சமமாக சொல்வர்
* பரமாத்மனின் பக்தர்களில் பொறாமை
கொண்டவர்
* பரமாத்மனின் குணங்களில் வேறுபாடு
காண்பர்
* ஊர்த்வ புண்ட்ர, சங்கு சக்கர முத்திரகளை தரித்து வரும் பகவத் பக்தர்களை த்வேஷிப்பவர்
* ஸ்ரீஹரியின் சரித்திரங்களை
கேட்கமாட்டார்
* லௌகிக சம்பந்தமான அரட்டைகளில்
நேரம் செலவழிப்பார்.
ஏவமாதி3 த்3வேஷவுள்ள கு
ஜீவரெல்லரு தை3த்யரெனிபரு
கோவித3ர விக்ஞான கர்மவ நோடி3 நிந்தி3பரு |
தே3வதே3வன பி3ட்டு3 யாவ
ஜ்ஜீவபரியந்தரதி3 துச்சர
ஸேவெயிந்து3ப ஜீவிஸுவரக் ஞானகொளகா3கி3 ||16
ஏவமாதி = இதுவே முதலான
த்வேஷவுள்ள = த்வேஷங்களைக் கொண்ட
குஜீவரெல்லரு = பாபி ஜீவர்கள் அனைவரும்
தைத்யரெனிபரு = தைத்யர்கள் எனப்படுகிறார்கள்
கோவிதர = ஞானிகளின்
விக்ஞான கர்மவ நோடி = விசேஷமான ஞானம், அவர்களின் செயல்களைப் பார்த்து
நிந்திபரு = திட்டுபவர்கள்
தேவதேவன = தேவதைகளுக்கு தேவனான ஸ்ரீஹரியை
பிட்டு = விட்டு
யாவஜ்ஜீவ பரியந்தரதி = தாம் உயிரோடு இருக்கும்வரை
துச்சர சேவெயிந்த = நீசரான தமோயோக்யரின் சேவையால்
அக்ஞானக்கொளகாகி = அஞ்ஞானத்தில் ஆழ்ந்து
உபஜீவசுரு = வாழ்ந்து வருவார்கள்.
தமோ யோக்யர்களின் குணங்களை மேலும் விவரிக்கிறார்.
இத்தகைய குணங்களைக் கொண்டவர்கள் தைத்யர்கள் எனப்படுகின்றனர். கற்றறிந்த ஞானிகளின்
விசேஷமான ஞானத்தை, அவர்களின் செயல்களைப் பார்த்து அவர்களை நிந்திப்பவர்கள், தேவதைகளுக்கு தேவனான ஸ்ரீஹரியை விட்டு, பிற தேவதைகளை பூஜிப்பவர்கள். நீசரான தமோயோக்யர்களின் தயவுக்காக, கருணைக்காக அவர்களை அண்டி, புகழ்ந்து வாழ்ந்து அஞ்ஞானத்தில்
வாழ்ந்து வருவார்கள் இத்தகைய தமோ யோக்யர்கள்.
விஷ்ணு ரஹஸ்யத்தில்:
தம்போமானோ மதோஹிம்ஸா பாருஷ்டம் கபட்யான்ய தே |
ஜாயந்தி தமஸோவ்ருத்தை கலிஸ்த த்ராதிதேவ்தா ||
தாமஸான்னஸ்யபோகேன தாமஸானாஞ்ச ஸங்கதி |
தாமஸேன ஸ்வபாவேன தமோவ்ருத்தி: ப்ரஜாயதி ||
இந்த ஸ்லோகத்தில் சொல்லியிருப்பதையே, முந்தைய இரண்டு பத்யங்களில் + அடுத்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார் தாசராயர்.
காம லோப4 க்ரோத4 மத3 ஹிம்
ஸாமயான்ருத த3ம்ப4 கபட த்ரி
தா4மனவதாரக3ள பே4த3 அபூர்ண ஸுக2ப3த்த4 |
ஆமிஷனிவேதி3த அபோ4ஜ்யதி3
தா4மஸான்னவனும்ப3 தாமஸ
ஸ்ரீ மதா3ந்த4ர ஸங்க3தி3ந்த3லி தமவெ வர்த்தி4புது3 ||17
காம = ஆசை
லோப = கஞ்சத்தனம்
க்ரோத = கோபம்
மத = கர்வம்
ஹிம்ஸாமய = பிராணிகளை இம்சித்தல்
அன்ருத = பொய் பேசுதல்
தம்ப = கர்வம்
கபவ = ஏமாற்றுவது / தந்திரமாக செயல்படுவது
த்ரிதாமன = ஸ்வேதத்வீப, அனந்தாசன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களில் வீடுள்ள
அவதாரகள பேத = ராம கிருஷ்ணாதி ரூபங்களில் பேதங்களை சொல்வது
அபூர்ணசுக = பரமாத்மன் பூர்ண சுகன் அல்ல என்பது
பத்த = அவன் சுக துக்கங்களுக்குக் கட்டுப்பட்டவன்
என்பது
ஆமிஷ = மாமிசங்களை மற்றும் தர்ம சாஸ்திரங்களில் தடை
செய்யப்பட்டிருக்கும் உணவுகளை தின்பது.
அனிவேதித அபோஜ்யதி = நிவேதனம் செய்யப்படாத உணவுகளை
உண்பது
தாமஸான்னவனும்ப = தாமஸ அன்னம் என்றால் வெங்காயம், பூண்டு முதலான பதார்த்தங்களை தின்பது
ஸ்ரீ மதாந்தர = செல்வத்தினால் வந்த கர்வம்
தாமஸ சங்கதிந்தலி = தாமஸ மக்களின் நட்பில் இருந்து
தமவெ வர்த்திபுது = இத்தகைய செயல்களை செய்தால், தமோகுணமே வளர்கிறது.
காம, க்ரோத முதலான குணங்களைக்
கொண்டிருத்தல், ராமகிருஷ்ணாதி ரூபங்களில் பேதம் சொல்லுதல், மாமிசங்களை, நைவேத்தியம் செய்யப்படாதவற்றை தின்பது, தாமசர்களின் வீட்டில் உண்பது, தாமசர்களின் நட்பில் இருப்பது இவை
அனைத்தும் தமோகுணம் வளர்வதற்கு காரணங்கள் ஆகும். இந்த குணங்கள் உள்ளவர்கள் அனைவரும்
தாமசர் என்று அறியவேண்டும்.
ஞான ப4க்தி விரக்தி வினய புராண
ஷாஸ்திர ஸ்ரவண சிந்தன
தா3ன ஷம த3ம யக்ஞ ஸத்ய அஹிம்ஸ பூ4தத3ய |
த்3யான ப4க3வன்னாம கீர்த்தன
மௌன ஜப தப வ்ரத ஸுதீர்த்த2
ஸ்னான மந்த்ர ஸ்தோத்திர வந்த3ன ஸஜ்ஜனர கு3ணவு ||18
சொற்களின் விளக்கம்: படித்தாலே புரிகிறது என்பதால், தனித்தனியாக அர்த்தங்களை கொடுக்கவில்லை.
பகவந்தனைப் பற்றிய ஞானம், பரமாத்மனிடம் பக்தி, சம்சாரத்தில் விரக்தி, பெரியவர்களிடம் மரியாதை, பாகவதாதி புராணங்கள், பிரம்ம சூத்ர பாஷ்ய முதலான நற்சாஸ்திரங்களைக் கேட்பது, படிப்பது. ஷம என்றால் ‘ஷமோமன்னிஷ்டதா புத்தே:தம இந்த்ரிய
நிக்ரஹ:’
என்னும் பாகவத 11ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, பகவன் இஷ்டமான புத்தியே ஷம.
இந்திரிய நிக்ரஹமே தம. யாகம் செய்வது, சத்யம், அஹிம்ஸை, பூத-தயை, பரமாத்மனின் தியானம், பகவன் நாமகீர்த்தனை, வீண் அரட்டைகளில் மௌனம், அஷ்டாக்ஷராதி மஹாமந்திரங்களின்
ஜெபம்,
தபஸ் என்றால் பகவந்தனின் ஆனந்தாதி குணங்களை ஆலோசிப்பது, விஷ்ணு சம்பந்தமான விரதங்களை விஷ்ணு ப்ரீதிக்காக செய்வது, உத்தமமான தீர்த்தங்களில் ஸ்னானம் செய்வது, புருஷ சூக்தாதி மந்திரங்களை படிப்பது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது என இவை
அனைத்தும் சஜ்ஜனர்களின் ஸ்வபாவமாகும்.
லேஷ ஸ்வாதந்த்ர்ய கு3ணவனு ப்ர
வேஷகை3ஸித3 காரணதி3 கு3ண
தோ3ஷக3ளு தோருவுது3 ஸத்வாஸத்வ ஜீவரொளு |
ஷ்வாஸ போ4ஜன பான ஷயன வி
லாஸ மைது2ன க3மன ஹருஷ
க்லேஷ ஸ்வப்ன ஸுஷுப்தி ஜாக்3ரதியஹவு சேதனகெ ||19
லேஷ ஸ்வாதந்த்ர்ய குணவனு = பரமாத்மனின்
ஸ்வாதந்த்ர்யத்தில் அல்பாம்ஷமான ஸ்வாதந்த்ர குணத்தை
ப்ரவேஷகைஸித காரண = ஜீவர்களில் வைத்த காரணத்தால்
குணதோஷகளு = புண்ய பாப கர்மங்களின் சம்பந்தமான
குணதோஷங்கள்
தோருவுது = தெரிகிறது.
சேதனகெ = ஜீவர்களுக்கு
ஷ்வாஸ = மூச்சு விடுவது
போஜன பான ஷயன = சாப்பிடுதல், குடித்தல், தூங்குதல்
விலாச மைதுன = மனைவியுடன் தனிமையில் பேசுவது; போகிப்பது
கமன = நடப்பது
ஹர்ஷ = மகிழ்வது
க்லேஷ = துக்கத்தை அனுபவிப்பது
ஸ்வப்ன = கனவு காண்பது
சுஷுப்தி = தூங்குவது
ஜாக்ரதி = முழிப்பது ஆகியவை
அஹவு = ஆகிறது
ஸ்வாதந்த்ர்ய லேஷதானேன ஜீவ ஷ்வஸதி ஜ்ரும்பதி ||44
இத்யாதி விஷ்ணு ரஹஸ்யத்தின் 21ம் அத்தியாயத்தின் வியாக்கியானத்தின்படி, ஸ்ரீபரமாத்மன் ஜீவருக்குக் கொடுத்த அல்ப ஸ்வாதந்த்ர்யத்தினாலேயே சாத்விக, ராஜஸ,
தாமஸ ஜீவர்களின் யோக்யதைக்கேற்ப குணதோஷங்கள் தெரிகின்றன. ஜீவர்கள் மூச்சு
விடுவது,
உண்பது, குடிப்பது, படுப்பது, மனைவியுடன் தனிமையில் பேசுவது, போகிப்பது, நடப்பது, மகிழ்வது, துக்கத்தை அனுபவிப்பது, கனவு காண்பது, தூங்குவது, முழிப்பது ஆகியவை நடக்கின்றன. பரமாத்மன் கொடுத்திருக்கும்
ஸ்வாதந்த்ர்யத்தினாலேயே இவை ஆவதால், ஜீவன் ஸ்வதந்த்ர கர்த்தனல்ல என்று
அறியவேண்டும்.
அர்த்த4 தன்னொளகி3ரிஸி உளிதொ3
ந்த3ர்த்த4வ விபா4க3க3யிஸி வ்ருஜி
நார்த்3த4னனு பூர்வத3லி ஸ்வாதந்த்ர்யவனு கொட்டந்தெ |
ஸ்வர்து3னீபித கொடு3வவர ஸுக2
வ்ருத்தி3கோ3ஸுக3 பி3ரம்ம வாயு க
பர்த்தி3 மொத3லாத3வரொளித்த3வர யோக்3யதெயனரிது ||20
அர்த்த தன்னொளகிரிஸி = தன் ஸ்வாதந்த்ர்யத்தின் 4 பாகங்களில் இரு பாகங்களை தான் வைத்துக்கொண்டு,
உளிதொந்தர்த்தவ = மிச்ச இரு பாகங்களை
விபாககெயிஸி = பிரித்துக் கொடுத்து
வ்ருஜினார்த்தனனு = கஷ்டங்களை பரிகரிக்கும் ஸ்ரீஹரி
பூர்வதலி = இதன் முன் 11-12ம் பத்யங்களில் விளக்கியதைப்போல
ஸ்வாதந்த்ர்யவனு கொட்டந்தெ = அவரவர்களின்
யோக்யதைக்கேற்ப ஸ்வதந்த்ரயத்தை, எப்படி பிரித்துக்
கொடுத்திருக்கிறானோ, அதன்படியே,
ஸ்வர்த்துனீபித = கங்கையைப் பெற்ற ஸ்ரீஹரி
பிரம்ம வாயு கபர்த்தி மொதலாதவரொளு = பிரம்ம வாயு
ருத்ர முதலான தேவதைகளில்
அவர யோக்யதெயனரிது = பிரம்மாதி தேவதைகளின் யோக்யதையை
அறிந்து,
அதற்கேற்ப
சுக வ்ருத்திகோசுக = தாரதம்யத்தின்படி சுகத்தைக்
கொடுவ = கொடுக்கிறான்.
இந்த
சந்தியின் 11-12ம் பத்யங்களில்
விளக்கியதைப்போல, தன் ஸ்வாதந்த்ரியத்தின் பாதி பாகத்தை; 52, 48, 20, 15, 10 இந்த விதமாக பிரம்ம வாயு ருத்ர இந்திர முதலானவர்களுக்கு கொடுத்து, அந்த ஸ்வாதந்த்ர்யத்தின் தாரதம்யத்திற்கேற்ப அவர்களில் இருந்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப ஞான பக்திகளைக் கொடுத்து, அதன்படியே அவர்களுக்கு முக்தியில் ஆனந்தத்தையும் கொடுக்கிறார்.
அதாவது, பிரம்மதேவருக்கு 52 பாக ஸ்வாதந்த்ர்யம் இருப்பதால், அவர் அதிக சாதனையை செய்கிறார். ருத்ரதேவருக்கு 20 பாகங்கள், இந்திர காமனுக்கு 15 பாகங்கள் இருப்பதால், அந்த தாரதம்யத்திற்கேற்ப அவர்களின் சாதனையும் ஆகிறது. இதைப்போலவே ஸ்வாதந்த்ர்ய பாகங்களுக்கேற்ப, ஆனந்தமும் இருக்கிறது. பரமாத்மனின் ஸ்வரூபத்தில் பேதங்கள் இல்லாததால், ஸ்வதந்த்ர ரூபத்தால் பிரம்மாதிகளில் இருக்கும்போது தேஜோ விசேஷத்திலும், ஞானாதிகளை காட்டுவதில், தீபத்தில் ஒரேயொரு வர்த்தி போட்டால் அதற்குத் தகுந்தவாறு ஒளி வருகிறதோ, 10 வர்த்திகள் போட்டால் அதற்குத் தக்க ஒளி வருமோ, அப்படியே, பல ஞானாதிகளில் தாரதம்யத்தை காட்டியவாறு பிரம்மாதிகளில் இருக்கிறார். அதைப்போல ஸாதனங்களை செய்விக்கிறார். அந்த சாதனைக்கேற்ப ஆனந்தத்தில் தாரதம்யத்தைக் கொடுத்து அவரவரின் யோக்யதைக்கேற்ப சுகத்தைக் கொடுக்கிறான் என்பது கருத்து.
No comments:
Post a Comment