ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, August 26, 2020

ப்ருஹத் தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 21 : ப்ருஹத் தாரதம்ய சந்தி

/ ஆவேச அவதார சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

முந்தைய சந்தியில் குணங்களை அனுசரித்து தாரதம்யத்தைக் கூறியிருந்தார். இந்த சந்தியில் ஸ்ரீபரமாத்மன், மற்றும் தேவதைகள் இவர்களின் அவதாரங்களை, அம்சங்களை, தாரதம்ய கிரமத்தில் சொல்கிறார்.

 

சந்தி ஸூசனை:

 

ஹரி ஷிரி விரஞ்சீரமுக2 நிர்ஜர

ராவேஷாவதாரக3ள ஸ்மரிஸு கு3ணக3

ஸர்வகாலதி34க்தி பூர்வகதி3 ||

 

ஹரி

ஷிரி = லட்சுமிதேவி

விரிஞ்சி = பிரம்மதேவர்

ஈர = வாயுதேவர்

முக = இவர்களில் துவங்கி

நிர்ஜரர = தேவதைகளின்

ஆவேஷாவதாரகள = ஆவேச, அம்ச அவதாரங்களை

குணகண =

அவர்களின் குண சமூகத்தை

சர்வகாலதி = அனைத்து காலங்களிலும்

பக்திபூர்வகதி = பக்தியுடன்

ஸ்மரிஸு = நினை.

 

ஸ்ரீபரமாத்மனின் அவதாரங்கள் அனந்தமாகையால், அனைத்து அம்சங்களையும், அவதாரங்களையும் சொல்வதற்கு சாத்தியமில்லை. ஆகையால், முக்கியமான அம்ஷாவதாரங்களை இங்கு சொல்லியிருக்கிறோம். இத்தகைய அம்சங்களை, அவதாரங்களை, பகவத் பக்தர்களான அதிகாரிகள் தினந்தோறும் நினைக்கவேண்டும் என்பது கருத்து.

 

இப்படியாக இந்த சந்தியின் அபிப்ராயத்தை இந்த பாதி பத்யத்தினால் குறிப்பிடுகிறார்.

 

மீன கூர்ம க்ரோட3 நரஹரி

மாணவக ப்4ருகு3ராம த3ஷரத2

ஸூனு யாத3வ பு3த்34 கல்கி கபில வைகுண்ட2 |

ஸ்ரீனிவா வ்யா ருஷப4

யானனா நாராயணீ ஹம்

ஸானிருத்34 த்ரிவிக்ரம ஸ்ரீத4ர ஹ்ருஷிகேஷ ||1

 

மீன = மத்ஸ்யாவதாரம்

கூர்ம = கூர்மாவதாரம்

க்ரோட = வராஹாவதாரம்

நரஹரி = நரசிம்ம அவதாரம்

மாணவக = வாமன அவதாரம்

ப்ருகுராம = பரசுராம அவதாரம்

தஷரத சூனு = தசரதனின் மகன் ராம அவதாரம்

யாதவ = கிருஷ்ண அவதாரம்

புத்த, கல்கி = ஆகிய 10 அவதாரங்கள்

கபில = தேவஹூதியிடம் கர்தமர் மூலமாக அவதரித்த கபில தேவர்

வைகுண்ட = விகுண்ட என்னும் ஸ்த்ரியரிடம் ஷுப்ரன் மூலமாக அவதரித்தவன்

பத்னி விகுண்டா ஷுப்ரஸ்ய என்று பாகவத 8ம் ஸ்கந்த வாக்கியத்தில் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ, வியாஸ,

ரிஷப = நாபிராயன் மூலமாக மேருதேவியில் அவதாரம்

ஹயானன = ஹயக்ரீவ ரூபத்தினால் அவதரித்து, ஹயக்ரீவ நாமக தைத்யனைக் கொன்றான்

நாராயணி = மோகினி ரூபத்தை தரித்து தேவதைகளுக்கு, அமிர்தத்தைக் குடிக்கும் காலத்தில், தைத்யர்களை ஏமாற்றிய ரூபம்

ஹம்ஸ = பிரம்ம தேவருக்கு தத்வோபதேசம் செய்த ரூபம்

அனிருத்த = வாசுதேவாதி 5 ரூபங்களின் வியூகத்தில் சேர்ந்த ரூபம்

த்ரிவிக்ரம,

ஸ்ரீதர = லட்சுமிதேவியரை தன் மார்பில் தரித்த அஜித அவதாரம்

ஹ்ருஷிகேஷ = இந்திரிய அபிமானிகளுக்கு அதிபதியான பகவத்ரூபம்

 

இத்தகைய அனேக அவதாரங்களைக் கொண்டவன் பரமாத்மன் என்பது கருத்து.

 

ஹரியு நாராயணனு க்ருஷ்ணா

ஸுரகுலாந்தக ஸூர்யப்ரப3

கரெஸுவனு நிர்து3ஷ்ட ஸு2பரிபூர்ண தானெந்து3 |

ருவ தே3வோத்தமனு ர்வக3

பரமபுருஷ புராதன ஜரா

மரணவர்ஜித வாஸுதே3வாத்3யமித ரூபாத்ம ||2

 

ஹரியு =

தத்ராபிஜஞ்ஞே பகவான் ஹரிண்யாம் ஹரிமேதஸ: |

ஹரிரித்யாஹுதோ யேன கஜேந்த்ரோ மோஜிதோ க்ரஹாத் ||

 

என்னும் பாகவத 8ம் ஸ்கந்த வாக்கியத்தைப் போல, மேதஸ் மற்றும் ஹரிணி என்பவர்களில் ஹரி அவதரித்து கஜேந்திரனை, முதலையிடமிருந்து விடுவித்த ரூபம்.

 

நாராயணன் = தர்மப்ரஜேஷ்வரன் மூலமாக ஸூன்ருதெயில் அவதரித்த நர நாராயண ரூபங்களில் ஒன்றான நாராயண ரூபம்.

 

கிருஷ்ண அசுரகுலாந்தக = தைத்யர்களைக் கொல்வதற்காக அவதரித்த கிருஷ்ணன்

 

இத்தகைய பரமாத்மன்

சூர்ய சப்ரப = சூரியனுக்கு சமமான காந்தி உள்ளவன்

நிர்துஷ்ட = தோஷங்கள் அற்றவன்

சுக சம்பூர்ண = சுகங்களையே முழுமையாகக் கொண்டவன்

சர்வ தேவோத்தமன் = அனைத்து தேவர்களைவிட உத்தமன்

சர்வக = அனைத்து இடங்களிலும் வியாப்தன்

பரமபுருஷ = புருஷர்களில் சிறந்தவன்

புராதன = அனாதி காலங்களிலிருந்து

ஜராமரணவர்ஜித = பிறப்பு இறப்பு இல்லாதவன்

வாசுதேவாத்யமித ரூபாத்ம = வாசுதேவ முதலான அனேக அவதார ரூபங்களைக் கொண்டவன்

கரெசுவனு = என்று அனைத்து சாஸ்திரங்களிலும் அழைக்கப்படுகிறான்.

 

ஈ நலினப4வஜனனி லகுமி

ஞான ப4ல ப4க்த்யாதி3 கு3

ம்பூர்ணளெனிபளு ர்வகாலதி3 ஹரிக்ருபாப3லதி3 |

ஹீனளெனிபள நந்த3கு3ணதி3 பு

ராணபுருஷகெ3 ப்ரக்ருதிகி3ன்னு

மானரெனிஸுவரில்ல முக்தாமுக்த ஸுரரொளகெ3 ||3

 

ஈ நலினபவ = கமலத்திலிருந்து பிறந்த பிரம்மதேவர்

ஜனனி = தாயான

லகுமி = ஸ்ரீலட்சுமிதேவி

சர்வகாலதி = பிரளய முதலான அனைத்து காலங்களிலும்

ஹரிக்ருபாபலதி = பரமாத்மனின் க்ருபா பலத்தினால்

ஞான பல பக்த்யாதி குண சம்பூர்ணளு = மற்ற பிரம்மாதி தேவதைகளைவிட, அத்யதிகமான, ஞான பல, பக்தியாதி குணங்களால் சம்பூர்ணள் எனப்படுகிறாள்.

புராண புருஷகெ = புராதன புருஷன் என்று அழைக்கப்படும் நாராயணனுக்கு

அனந்தகுணதி = அனந்தானந்த குணங்களால்

ஹீனளெனிபளு = குறைவு எனப்படுகிறாள்

ப்ரக்ருதிகெ = ஈ லட்சுமி தேவியருக்கு

முக்தாமுக்த சுரரொளகெ = முக்தர்களோ, அமுக்தர்களோ, எந்த தேவதைகளோ, இவளுக்கு

சமானரெனிஸுவரில்ல = சமானம் என்று சொல்வதற்கு யாரும் இல்லை

 

கு3ணக3ள த்ரயமானி ஸ்ரீ கு

ம்பி4னி மஹாது3ர்கா ம்ப்4ரிணி ரு

க்மிணியு ஸுஸத்யா ஷாந்தி க்ருதி ஜய மாய மஹலகுமி |

ஜனகஜா கமலாலயா த3

க்‌ஷிணெ ஸுபத்3மா த்ரிலோகேஷ்வரி

அணு மஹத்தினொளித்3து3 உபமாரஹித ளெனிஸுவளு ||4

 

குணகள த்ரயமானி = ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு அபிமானி

ஸ்ரீ = ஸ்ரீதேவி

கும்பிணி = பூதேவி

மஹாதுர்கா, அம்ப்ரிணி, ருக்மிணி,

சுசத்யா = சத்யபாமா

ஷாந்தி = அனிருத்த நாமக பரமாத்மனின் மனைவி

க்ருதி = ப்ரத்யும்ன நாமக பரமாத்மனின் மனைவி

ஜய = சங்கர்ஷண நாமக பரமாத்மனின் மனைவி

மாயா = வாசுதேவனின் மனைவி

மஹலகுமி = நாராயணனின் மனைவி

ஜனகஜா = சீதாதேவி

கமலாலயா = அஜித நாமக பரமாத்மனின் மனைவி

தக்‌ஷிணெ = யக்ஞ நாமக பரமாத்மனின் மனைவி

சுபத்மா = பார்கவி ரூபம்

த்ரிலோகேஷ்வரி = மூன்று உலகங்களுக்கும் ஈஸ்வரி எனப்படுகிறாள்

அணு மஹத்தினொளித்து = இத்தகைய ரூபங்களைக் கொண்ட மஹாலட்சுமி, சூக்‌ஷ்மமான பொருட்களில் சூக்‌ஷ்மமாக இருந்து, மிகப் பெரியதான பொருட்களில் பெரியதாக இருந்து

உபமாரஹித ளெனிஸுவளு = தனக்கு யாரும் ஒப்புமை இல்லை என்று அழைக்கப்படுகிறாள்.

 

கோ4டகாஸ்யன மட3தி3கி3ந்த3லி

ஹாடகோத3ர பவனரீர்வரு

கோடி கு3ணதி3ந்த34மரெனிபரு ஆவகாலத3லி |

கே2டபதி ஸேஷாமரேந்த்3ரர

ஸாடிமாட3தெ3 ஸ்ரீஷன க்ருபா

நோடதி3ந்த3லி ர்வரொளு வ்யாபார மாடு3வரு ||5

 

கோடகாஸ்யன = குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ தேவர்

மடதி கிந்தலி = அவன் மனைவியான லட்சுமிதேவியைவிட

ஹாடகோதர = தங்கமே உதரமாக உள்ள பிரம்மதேவர்

பவனரீர்வரு = வாயுதேவர், இவர்கள் இருவரும்

யாவகாலதலி = அனைத்து காலங்களிலும்

கோடி குணதிந்ததமரெனிபரு = ஒரு கோடி குணங்களால் குறைவு எனப்படுகிறார்கள்

ஸ்ரீஷன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்

க்ருபானோடதிந்தலி = கடைக்கண் பார்வையில்

கேடபதி = வானில் பறக்கும் பறவைகளின் தலைவனான கருட

சேஷாமரேந்த்ரர = சேஷ, தேவேந்திரனின்

ஸாடிமாடதெ = அவர்களை கவனத்தில் கொள்ளாமல்

சர்வரொளு = அனைத்து பிராணிகளிலும் இருந்து

வ்யாபார மாடுவரு = அனைத்து இந்திரியங்களின் செயல்களையும் செய்விக்கிறார்.

 

லட்சுமிதேவியரைவிட, பிரம்ம வாயுதேவர்கள், எந்த காலத்திலும், அதாவது, முக்தர்கள் ஆனபிறகும்கூட, ஒரு கோடி குணங்களால் குறைவானவர்கள். கருட, சேஷ, இந்திராதிகளை, லட்சியம் செய்யாமல், ஸ்ரீபரமாத்மனின் கடைக்கண் பார்வையின் பலத்தினால், அனைத்து பிராணிகளிலும் இருந்து, அனைத்து இந்திரியங்களின் செயல்களையும் செய்விக்கிறார்.

 

இந்த பத்யத்தில் கருடசேஷாமரேந்த்ரரஎன்று கருட, சேஷர்களை மட்டும் சொன்னதால், ருத்ர தேவரை லட்சியம் செய்வாரோ என்று சந்தேகம் வர வாய்ப்புண்டு. ருத்ரதேவரே, சேஷ பதவிக்கு வருபவராகையால், சேஷ தேவரை சொன்னபிறகு, ருத்ர தேவரும் இதிலேயே சேர்ந்துவிட்டார் என்று அறியவேண்டும்.

 

புருஷ பி3ரம்ம விரிஞ்சி மாஹ

ன்மருத முக்2யப்ராண த்4ருதி ஸ்ம்ருதி

கு3ருவர மஹாத்4யாத ப3ல விக்ஞாத விக்2யாத |

3ரளபு4க் ப4வரோக3 பே4ஷஜ

ஸ்வர வரண வேத3ஸ்த2 ஜீவே

ஷ்வர விபீ4ஷண விஸ்வசேஷ்டக வீதப4ய பீ4||6

 

விரிஞ்சியு = வாசுதேவனின் மூலமாக மாயாதேவியிடம் சூக்‌ஷ்ம தேகத்தில் பிறந்த ரூபம், புருஷ என்று பெயர் பெற்றது.

மாஹன் = அனிருத்த நாமக பரமாத்மனிடமிருந்து சாந்திதேவியிடம் பிறந்த மஹத்தத்வ அபிமானியான பிரம்மரூபம்

பிரம்மா = பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்த சதுர்முக பிரம்மரூபம்.

இப்படி பிரம்மதேவரின் ரூப நாமங்களைச் சொல்லி, அடுத்து வாயுதேவரின் ரூப நாமங்களை சொல்கிறார்.

 

மருத = 49 மருத்கணங்களில் உத்தம ரூபம்

முக்யபிராண = அனைத்து பிராணிகளுக்கும் ப்ராணனைக் கொடுப்பவன்

த்ருதி = மிகவும் அதிகமான தைரியம் உள்ளவன்

ஸ்ம்ருதி = ஒப்புமை இல்லாத நினைவு சக்தி கொண்டவன்

குருவர = குருகளில் உத்தமர் எனப்படுகிறவர்

மஹாத்யூத = ஸ்ரீபரமாத்மனை மிகவும் அதிகமாக தியானம் செய்வதால், மஹாத்யூத என்று பெயர்.

பல = அவதார த்ரய ரூபங்களிலும், மூலரூபத்திலும் ஒரே மாதிரியான பலம் கொண்டவர் ஆகையால், பல என்று பெயர்.

விக்ஞாத = விசேஷமான ஞானம் உள்ளவன். பகவத் ஸ்வரூபத்தை, கருடாதிகளைவிட அதிகமாக அறிந்தவர் என்பது கருத்து.

விக்யாத = உலகத்திலும், வேதத்திலும் புகழப்படுபவர்

கரளபுக் = விஷம் உண்டவன்

பவரோக பேஷஜ = சம்சாரம் என்னும் ரோகத்திற்கு மருந்தானவன்

வேதஸ்த = வேதத்தில் இருக்கும்

ஸ்வர வரண = எழுத்துக்களுக்கு அபிமானி. அல்லது, பரமாத்மனுக்கு அடுத்து வேதங்களில் புகழப்படுபவர்

ஜீவேஷ்வர = ஜீவோத்தமர்

விபீஷண = எதிரிகளுக்கு பயம் உண்டு பண்ணுபவர்

அல்லது;

ஜீவேஷ்வர விபீஷண = ஜீவனே ஈஸ்வரன் என்பவர்களுக்கு பயங்கரமானவர்

விஷ்வசேஷ்டக = அனைத்து பிராணிகளுக்கும் சலன சக்தியைக் கொடுப்பவர்

வீதபய = பயமே இல்லாதவர்

பீம = பகவத் த்வேஷிகளுக்கு பயங்கரர்.

 

மகாபாரத தாத்பர்ய நிர்ணய 3ம் அத்தியாயத்தில்:

வ்யோடஸ்சதுர்தா பகவான் ஸ ஏகோ மாயாம் ஸ்ரீயம் ஸ்ருஷ்டி விதித்ஸயாss|

ரூபேண் பூர்வேண ஸவாஸுதேவ நாம்னாவிரிஞ்சம் ஸஷுவேசஸாsத: ||9

ஸங்கர்ஷணாஸ்சாபி ஜயா தனோஜோபபூவ சாக்‌ஷாத்பல ஸம்விதாத்மா |

வாயுர்ய ஏவாத விரிஞ்சனாமா பவிஷ்ய அத்யோ நபரஸ்ததோஹி ||10

ஸூத்ரம் ஸவாயு: புரஷோ விரிஞ்ச: ||

 

இதன் அர்த்தம்:

 

ஸ்ரீமன் நாராயணன், வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 5 ரூபங்களை முதன்முதலில் தரித்து, ஸ்ருஷ்டி செய்யும் நோக்கத்தில், முதலாவதான வாசுதேவ ரூபத்தினால், லட்சுமிதேவியரின் முதலாம் ரூபமான மாயா தேவியை ஸ்வீகரித்தான். அந்த மாயாதேவி, வாசுதேவ நாமக பரமாத்மன் மூலமாக, விரிஞ்சனைப் பெற்றாள். ||9

 

பல, ஞானாத்மகரான வாயுதேவர், சங்கர்ஷண மற்றும் ஜயா தேவியின் குமாரனாக பிறந்தார். இந்த வாயுதேவரே, அடுத்த கல்பத்தில் விரிஞ்ச என்னும் பெயரில் வாசுதேவன் - மாயாதேவிக்கு முதலாம் குமாரராக பிறப்பார். ஆகையாலேயே, தேவதைகளில் இவரைவிட உத்தமமானவர் வேறு யாரும் இல்லை.

 

* சங்கர்ஷன மற்றும் ஜயா தேவியரில் பிறந்த ரூபத்திற்கு ஸூத்ர என்று பெயர்.

* மாயா தேவியிடம் பிறந்த விரிஞ்சனே புருஷ என்று சொல்வார்கள். இந்த புருஷ ரூபமே, பிரம்மாண்ட சரீரத்திற்கு அபிமான ரூபம்.

* அனிருத்த மற்றும் ஷாந்தி தேவியரில் இதே விரிஞ்ச நாமக பிரம்மதேவரே, மஹத் தத்வாபிமானியாகி, ஸ்தூல தேகத்தால் பிறப்பார். ஆகையால், மஹான் என்று இவருக்குப் பெயர்.

* பரமாத்மனின் நாபிக் கமலத்திலிருந்து நான்முக பிரம்மதேவர் பிறப்பார்.

 

இப்படி பிரம்மதேவருக்கு நான்கு பெயர்கள், 4 ரூபங்கள் என்று அறிய வேண்டும். இவருக்கு பூமியில் அவதாரம் இல்லை.

 

வாயுதேவர் பலஞானாத்மகர் என்று நிர்ணய வாக்கியத்தில் தெளிவாக இருக்கிறது. மேலும், நிர்ணயத்தில் 2ம் அத்தியாயத்தில்:

 

பக்திர்ஞானம் ஸவைராக்யம் ப்ரஞ்ஞாமேதா த்ருதி ஸ்ருதி: |

யோக: ப்ராணோபலஞ்சைவ வ்ருகோதர இதி ஸ்ம்ருத: ||141

ஏதத்தஷாத்மகோ வாயு: தஸ்மாத் பீமஸ்ததாத்மக: ||

 

பக்தி, ஞானம், வைராக்யம், புத்தி, நினைவுத்திறன், தைர்ய, ஸ்தைர்ய, யோக, ப்ராண, பல என இந்த பத்தும் பீமசேனனின் ஸ்வரூபம் ஆகும். ஏனெனில், வாயுதேவர், இந்த பத்து குணங்களின் ஸ்வரூபமானவர். அவரே பீமசேன ரூபம். ஆகையால், பீமசேன தேவரும் இவற்றை கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள். மருத முக்யபிராணாதி பதங்களுக்கு மேலே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

கரள புக் = விஷம் உண்டவன் என்பதற்கு என்ன ஆதாரம்? எப்போது நடந்தது இது? என்றால், பகவந்தனின் ஆணையின் பேரில், தேவ தைத்யர்கள் சேர்ந்து, பாற்கடலைக் கடைந்தபோது கடுமையான காலாஹல என்னும் விஷம் வந்தது. அப்போது பகவந்தனின் ஆணைப்படி வாயுதேவர் அந்த விஷத்தைக் குடித்தார். இதற்கு ஆதாரம், நிர்ணய 10ம் அத்தியாயத்தில்:

 

ததா ஜகத்க்ராஸி விஷம் ஸமுத்திதம் வாயுரதாத்கரேனிஜீ ||13

கலே: ஸ்வரூபம் தததீவ துஸ்ஸஹம் வராத்விதாது: ஸகல்யைஸ்ச துஸ்ப்ருஷம் ||

கரே விமத்யாஸ்த பலம் விதாய ததௌஸ கிஞ்சித் கிரிஷாய வாயு: ||14

ஸதத்பிபன் கஞ்டகதேன தேன நிபாதிதோ மூர்ச்சித ஆசுருத்ர: |

ஹரே: கரஸ்பர்ஷ பலாத்ஸதம் ஞாமவாப நீலோஸ்ய கலஸ்ததாஸீத் ||15

அதத்வதாஞாம் புரதோ நிதாய நிதாய பாத்ரே தபனீயரூபே |

ஸ்வயம்த்வனிர்மத்ய பலோ பபன்னம் பபௌஸ வாயுஸ்தது தாஸ்ய ஜீர்ணம் ||16

அத்யல்ப பானாஸ்ச பபூவ ஷூலாஷிவஸ்ய ஷீர்ணஸ்ய கராவஷிஷ்டம் ||

அபூத்கலிஸ்ஸர்வ ஜகத்ஸுபூர்ணம் பீத்வா விகாரோனபபூவ வாயோ: ||17

 

வியாசாவதாரத்திற்காக தேவதைகள் பரமாத்மனிடம் பிரார்த்தனை செய்த சந்தர்ப்பம்.

 

ஹே தேவாதி தேவா! தேவதைகளும், தைத்யர்களும் பாற்கடலை கடையும் வேலையை நிறுத்திவிட, நீ ஒருவனே மந்தர பர்வதத்தை கடைந்து கொண்டிருக்க, அங்கு உலகத்தையே விழுங்கும்படியான விஷம் வந்தது. அப்போது, உன் ஆணையின் பேரில், வாயுதேவர் அந்த விஷத்தைக் குடிக்க, கையில் எடுத்துக் கொண்டார். அந்த விஷம் கலி ஸ்வரூபமானது. பிரம்மதேவரின் வரத்தினால், யாராலும் அதை தொடக்கூட சாத்தியம் இல்லை என்பது மட்டுமல்லாமல், அதன் அருகில் போகக்கூட முடியவில்லை. அத்தகைய விஷத்தை வாயுதேவர் குடிக்கப் போகையில், தேவதைகளால் வணங்கப்பட்டு ருத்ரதேவர் அந்த விஷத்தை தான் குடிப்பேன் என்று சொல்லி அங்கு வர, வாயுதேவர் அந்த விஷத்தில் சிறிய அளவினை தன் கையில் ஊற்றி, நன்றாக கலக்கி, விஷத்தின் பலத்தை குறைத்து, அதனை ருத்ரதேவருக்குக் கொடுத்தார்’.

 

அவ்வளவே விஷத்தை குடித்தவுடன், ருத்ரதேவர், அந்த விஷத்தின் பாதிப்பால் உடனே மூர்ச்சையாகி விழுந்தார். பிறகு, ஸ்ரீபரமாத்மன் அவரை தன் கரத்தால் ஸ்பர்சிக்க, ருத்ரதேவருக்கு மயக்கம் தெளிந்தது. ஆனாலும் அவர் கழுத்தில் கருப்பு நிறம் தங்கிவிட்டதால் அவருக்கு நீலகண்ட என்னும் பெயர் வந்தது. அதன்பிறகு, வாயுதேவர் உனது ஆணையை ஏற்று, தங்க பாத்திரத்தில் அந்த விஷத்தை ஏந்திக்கொண்டு, தான் அந்த விஷத்தை அப்படியே குடித்துவிட்டார். அது வாயுதேவருக்கு ஜீர்ணம் ஆனது. மிகச்சிறிய அளவிலான விஷத்தைக் குடித்ததாலேயே ருத்ரதேவருக்கு நிரந்தரமாக தலைவலி வந்துவிட்டது. ருத்ரதேவரின் கையில் மீந்திருந்த விஷம், கலி ஸ்வரூபமாக உலகம் முழுக்க பரவியது. அத்தகைய விஷத்தை முழுமையாக குடித்தாலும் வாயுதேவருக்கு எந்த பிரச்னையும் உண்டாகவில்லைஎன்றார்.

 

அதே அபிப்பிராயத்தையே தாசார்யரும் கரள புக்என்னும் பதத்தில் சொல்லியிருக்கிறார்.

 

அனில ஸ்தி2தி வைராக்3யநிதி4 ரோ

சன விமுக்திக3னந்த த3ஷமதி

அனிமேஷேஷானித்3ர ஷுசி த்வாத்மக ஷரீர |

அணு மஹத்3ரூபாத்மகாம்ருத

ஹனுமதா3த்3யவதார பத்3மா

பத3வி ம்ப்ராப்த பரிர ஆக2ணாஷ்ம||7

 

அனில = வாயுதேவர்

ஸ்திதி = ஒரே மாதிரியான பல, ஞானாதிகளைக் கொண்டவர்

வைராக்யநிதி = வைராக்கியம் கொண்டவர்

ரோசன = வாயுதேவரின் ரூபம். இவர் இரண்டாம் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் இந்திர பதவியை வகித்தவர்

விமுக்திக = பகவந்தனின் ஆணைப்படி முக்தி கொடுப்பவர்.

அனந்த தஷமதி = மத்வாசார்யராக அவதரித்து ஆனந்ததீர்த்தர் என்றும் தஷமதி தீர்த்தர் என்றும் பூர்ணப்ரக்ஞர் என்றும் பெயர் பெற்றவர்.

அனிமிஷேஷ = தேவோத்தமர்

அனித்ர = தூக்கத்தை வென்றவர்

ஷுசி சத்வாத்மக ஷரீர = தூய்மையான சத்வ ஸ்வரூபம் கொண்டவர்.

அணுமஹத்ரூபாத்மக = அதி ஸூக்‌ஷ்ம ரூபத்தை தரிப்பதற்கும் யோக்யமான ஸ்வபாவம் கொண்டவர்

அம்ருத = போஜன காலத்தில் பஞ்ச ப்ராணாஹுதி எடுத்துக்கொள்ளும் முன்னரும், போஜனத்திற்குப் பிறகும் அம்ருத என்றால் தண்ணீர் ரூபத்தினால் அன்னத்திற்கு பாதுகாப்புடன் இருக்கும் ரூபம்.

ஹனுமதாத்யவதார = ஹனுமத் பீம மத்வாசார்யர் என்னும் மூன்று அவதாரங்களை, த்ரேதா த்வாபர கலியுகங்களில் எடுத்தவர்.

ஸம்ப்ராப்ய = பெற்றவர்

பத்மாஸனபதவி = பிரம்ம பட்டத்திற்கு வருபவர்

ஆகணாஷ்மஸம = பரமாத்மனின் ஸ்வரூபத்தை காட்டும் விஷயத்தில் உத்தமமான உரைகல்லைப் போல இருப்பவர்.

 

காற்றுக்கு அனில என்று பெயர். வாயுதேவர் அந்த ரூபத்தைக் கொண்டிருப்பவர் ஆகையால் அனில என்று அழைக்கப்படுகிறார். ரோசன என்ற பெயரால், வாயுதேவர் இந்திர பதவியை ஆண்டிருந்தார். இதற்கு ஆதாரம், விஷ்ணு ரஹஸ்ய 27ம் அத்தியாயத்தில்:

 

ஸ்வாரோசிஷோமனுர்னாம த்விதீயோக்னே: ஸுதோ மஹான் |

ருஷிர்வேதஷிரா நாம துஷிதா தஸ்ய பத்ன்ய பூத் ||1

தஸ்யாம் ரோசன நாமாஸீத் ஜ்யேஷ்ட இந்திரஷ்ச ஷோபவத் |

ய:புரா ஸூத்ர நாமாஸீத் ஸ ஏவாயமிஹாபவத் ||2

 

இரண்டாமவர் : ஸ்வாரோசிஷ என்று அக்னியின் மகன். அந்த மன்வந்தரத்தில் வேதஷிரஸ் என்று ஒரு ரிஷி இருந்தார். அவரின் மனைவி துஷிதெ. அவர்களின் மூத்த மகன் ரோசனன். அவனே அந்த மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்தான். இதற்கு முன்னர் சங்கர்ஷண - ஜயாதேவியரிடம் பிறந்திருந்த சூத்ர நாமக வாயுதேவரே தற்போது ரோசன என்னும் பெயரில் பிறந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

இத்துடன், பாரதத்தில் பாண்டவர் 5 பேரும் 5 மன்வந்தரங்களில் இந்திரர்களாக இருந்தனர் என்றும் சொல்கிறார்கள். மகாபாரத தாத்பர்ய நிர்ணய 18ம் அத்தியாயத்தில், ஸ்லோகம் #142:

 

உத்பபர்ஹ கிரிந்தந்துததர்ஷாத்ரச தாம் ஸுராம்

பூர்வேந்த்ராம் மாருதவ்ருஷனாஸத்யாம்ஸ்ச துரஸ்திதாம் ||

மானுஷேஷ்வவதாராய மந்த்ரம் ரஹஸிகுர்வத: ||

 

ருத்ரதேவரின் சாபத்தினால் தேவேந்திரன், அவர் கூறிய மலையின் வாயிலை மூடியிருந்த கல்லை எடுத்தான். அந்த குகையில் முந்தைய மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்த வாயுதேவர், யமதர்ம, நாஸத்யதஸ்ர என்னும் அஸ்வினி தேவதைகள் இருவர் - இந்த நான்கு தேவதைகளும் பூமியில் அவதாரம் செய்யும் விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தால் வாயுதேவர், இந்திரனாக இருந்தார் என்பது உறுதியாயிற்று.

 

ஆனால் பாகவத 8ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயத்தில்:

ஸ்வாரோசிஷோத்விதீயஸ்து மனுரக்னேஸ்ஸுதோபவத் |

தத்ரேந்த்ரோ ரோசனஸ்த்வாஸீத் தேவாஸ்ச துஷிதாதய: ||20

ருஷேஸ்து ஸஸ்துஷிதானாம பத்ன்யபூத் ||

தஸ்யாஞ்சக்ஞே ததோ தேவோவிபுரித்யபிவிஸ்ருத: ||21

 

ஸ்வோரோசிஷ என்னும் அக்னி குமாரனே இரண்டாம் மனு. அப்போது ரோசனன் இந்திரனாக இருந்தார். தேவதைகள் என்றால் துஷித முதலானவர்கள். வேதஷிரஸ் என்னும் ரிஷிக்கு துஷித என்னும் மனைவி இருந்தாள். அவர்களிடம் ஸ்ரீபரமாத்மன் விபு என்னும் பெயரில் அவதரித்தான் என்று கூறப்பட்டுள்ளது.

 

விஷ்ணு ரஹஸ்யத்தில் ரோசனன், வேதஷிரஸ் என்னும் ரிஷிகளிடம், துஷிதை மூலமாக பிறந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாகவதத்தில், ரோசனனின் பெற்றோர் பெயரை சொல்லாமல், விபு நாமக பரமாத்மனுக்கு, வேதஷிரஸ்ஸே தந்தை என்றும் துஷிதையே தாய் என்று சொல்லியிருக்கின்றனர். இதனால், விஷ்ணு ரஹஸ்யத்திற்கும், பாகவதத்திற்கும் விரோதம் வருகிறது என்றால், விஷ்ணு ரஹஸ்யத்தின் வாக்கியம் மூலமாக இந்த விரோதம் தீர்கிறது. அது எப்படியெனில்: 27ம் அத்தியாயம் 3ம் ஸ்லோகத்தில்:

 

தஸ்மாதனந்தரஞ்சாஹமவதீர்ணோ விபு: ஸ்வயம் ||

உபேந்திர இதி தேனாஹம் விஸ்ருதோ விதுஷாம் முகே ||3

 

வேதஷிரஸ் என்னும் ரிஷி மற்றும் துஷித இவர்களின் மூத்த மகன் ரோசனன். அவன் பிறந்தபிறகு, நான் விபு என்னும் பெயரில் அவளிடம் அவதரிக்கிறேன். ஆகையால், என்னை உபேந்திரன் என்று அழைப்பார்கள், என்று ஸ்ரீபரமாத்மன் பிரம்மதேவரிடம் கூறினார்.

 

இந்த வாக்கியத்தால், வேதஷிரஸ் ரிஷியின் மூத்த மகன் விரோசனன், இரண்டாம் மகன் விபு நாமக பரமாத்மன் என்று தெரிகிறதால், பாகவத, விஷ்ணு ரஹஸ்யத்தின் விரோதம் சரியாயிற்று என்று அறியவேண்டும்.

 

விமுக்திக என்றால், முக்தியைக் கொடுப்பவன் என்று பொருள். விஷ்ணுர்ஹி தாதா மோக்‌ஷஸ்ய வாயுஸ்து ததனுக்ஞயா’ -- என்னும் நிர்ணய வாக்கியத்தின்படி, மோட்சத்தைக் கொடுப்பவன் பரமாத்மனே ஆனாலும், பகவந்தனின் ஆணைப்படி, வாயுதேவர் முக்தியைக் கொடுக்கிறார். ஆகையால், தாசராயர், விமுக்திக என்று கூறினார். ஷுசி ஸத்வாத்மக ஷரீர என்பதற்கு விஷுத்த ஸத்வம் ப்ரம்ஹாக்யம்’ - சுத்தமான ஸத்வ ஸ்வரூபம் பிரம்மதேவருடையது என்று பாகவத 10ம் ஸ்கந்த தாத்பர்யத்தில் சொல்லியிருப்பதே ஆதாரம்.

 

அம்ருத = போஜனத்திற்கு அமரும் நேரத்தில் அம்ருத உபஸ்தரணமஸி ஸ்வாஹாஎன்றும், எழும்போது அம்ருதாபிதானமஸிஎன்று சொல்லும் மந்திரமே இதற்கு ஆதாரம். ஹே அம்ருதனே. அம்ருத ரூபியான வாயுதேவனே. நான் உண்ணும் அன்னத்திற்கு உறையாக இரு என்று சொல்வதே அந்த மந்திரத்தின் அர்த்தம். அடுத்த மந்திரம் - ஹே அம்ருதனே. நான் உண்ட அன்னத்திற்கு பாதுகாப்பாக இரு என்பதே அர்த்தம். இதிலிருந்து வாயுதேவரின் பெயரே அம்ருத என்பது தெளிவாயிற்று.

 

ஆகணாஷ்மஸம = இதற்கு ஆதாரம், பாகவத 11ம் ஸ்கந்த ஸ்லோகமே ஆதாரம். ப்ராணஸ்ய நாஸுராவேஷோ ஆகணாஷ்மஸமோஹிஸ: -- பிராணதேவருக்கு மட்டுமே அசுராவேஷம் இல்லை. பகவத் ஸ்வரூபத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில், உரைகல் எப்படி இருக்கிறதோ அப்படி வாயுதேவர் இருக்கிறார் என்கிறார். அதே அர்த்தத்தையே தாசார்யர் இங்கு சொல்லியிருப்பதாக அறியவேண்டும்.

 

மாதரிஷ்வ ப்3ரம்ஹரு ஜக3

ந்மாதெக34மாதீ4ன ரெனிபரு

ஸ்ரீதருணி வல்லப4னு ஈர்வரொளாவ காலத3லி |

நீதப4க்தி ஞான ப3ல ரூ

பாதி ஷயதி3ந்தி3த்3து3 சேதன

சேதனக3ளொளு வ்யாப்தனெனிஸுவ தத்ததா3ஹ்வயதி3 ||8

 

மாதரிஷ்வபிரம்மரு = வாயுதேவர், பிரம்மதேவர்

ஜகன்மாதெகெ = உலகத்திற்கே தாயான லட்சுமிதேவியருக்கு

அதம = கோடி குணங்களால் குறைவானவர்

அதீனரு = அவளின் அதீனத்தில் இருப்பதாக

எனிபரு = பெயர் பெற்றிருக்கிறார்

ஸ்ரீதருணிவல்லபனு = லட்சுமிதேவியர் என்னும் தருணியருக்கு பதியான ஸ்ரீபரமாத்மன்

ஆவகாலதலி = அனைத்து காலங்களிலும்

ஈர்வரொளகெ = இந்த இருவரான பிரம்ம வாயுகளில்

நீத = நிரந்தரமான

பக்தி, ஞான, பல ரூபாதிஷயதிந்த = பக்தி ஞான பல ரூபாதிகளால்

இத்து = இருந்து

சேதன = நர, பசு, பறவைகள் ஆகியவற்றில்

அசேதனகளொளு = ஜடமான மலை, நீர் ஆகியவற்றில்

தத்ததாஹ்வயதி = அந்தந்த பெயர்களில்

வ்யாப்தரு = இந்த பிரம்ம வாயுகள் இருவரும் நிலைத்திருக்கின்றனர்.

எனிஸுவ = என்று உலகத்தில் இவர்கள் பெயர் பெற்றிருக்கின்றனர்.

 

முந்தைய பத்யத்தில் கூறிய பிரம்ம வாயுகள் இருவரும், லட்சுமிதேவியரைவிட கோடி குணங்கள் குறைவானவர்கள். அவரின் அதீனத்திலேயே இருப்பவர்கள். லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன் அனைத்து காலங்களிலும் ஒரே மாதிரியான ஞான பக்தி பலங்களில், ருத்ராதி அனைத்து தேவதைகளைவிட அதிகமான பக்தி ஞான பலரூபத்தினால் இவர்கள் இருவரும் இருந்து, சேதன அசேதனாத்மகமான இந்த பிரபஞ்சத்தில், அனைத்து இடங்களிலும் அந்தந்த பெயர்களில் நிலைத்திருந்து, இவர்கள் இருவரும் பரமாத்மனைப் போல அனைத்து இடங்களிலும் இருப்பவர்கள் என்ற பெயரைப் பெற்றுத் தருகிறான்.

 

ஸம்பூர்ணா னுக்ரஹாத் விஷ்ணோ: வாயு: பூர்ணகுணாத்மக: | - என்னும் 11ம் ஸ்கந்த தாத்பர்யத்திற்கேற்ப பரமாத்மனின் சம்பூர்ண அனுக்கிரகத்தின்படியே, இவர்கள் இருவரும் வியாப்த முதலான சம்பூர்ண குணங்களைப் பெற்றிருக்கின்றனர் என்பது கருத்து.

 

சரவதி வேதா3த்மிகா பு4ஜி

நரஹரி கு3ருப4க்தி பி3ராம்ஹி

பரம ஸு23லபூர்ணெ ஸ்ரத்3தா4 ப்ரீதி கா3யத்ரி |

3ருட3 ஸேஷர ஜனனி ஸ்ரீ

ங்கருஷண ஜயாதனுஜெ வாணி

கரண நிய்யாமிகெ சதுர்த3ஷ பு4வன ன்மான்யே ||9

 

சரஸ்வதி வேதாத்மிகா = அனைத்து வேதங்களுக்கும் அபிமானியான

புஜெ = அனைத்து போகங்களையும் பகவத் ப்ரீதியாகட்டும் என்று உண்பவர்கள்

நரஹரி = நரசிம்ம என்னும் பெயரால் அவதரித்த ஸ்ரீபரமாத்மன்

குரு = பதியான பிரம்மதேவரிடமும்

பக்தி = பக்தி உள்ளவர்

பிராம்ஹி = பிரம்ம பத்னி ஆனவர்

பரம சுக பலபூர்ண = பரமானந்த, பல ஆகியவற்றால் பூர்ணமானவர்

ஸ்ரத்தா = பிரத்யும்ன - க்ருதியிடம் பிறந்த ரூபம்

காயத்ரி = சரஸ்வதி தேவியின் மற்றொரு ரூபம். பிரம்மதேவருக்கு மிகவும் பிடித்த ஸாவித்ரி என்னும் ரூபம்

கருட சேஷர ஜனனி = சரஸ்வதி பாரதி என்னும் இருவரின் பெயர்களைக் கொண்ட ப்ரக்ருதி, ஸ்ரத்தா என்பவர்களிடம், கருட சேஷர்கள் பிறந்தனர். ஆகையால், இவர் கருட சேஷரின் தாய் எனப்படுகிறார்.

ஸ்ரீசங்கருஷண ஜயாதனுஜெ வாணி = சங்கர்ஷண நாமக பரமாத்மனிடம் ஜயாதேவியிடம் பிறந்த ஸூத்ர நாமக வாயுதேவருக்கு வாக்யரூபமாக இருக்கிறார்.

கரண நியாமக = ஞானேந்திரிய கர்மேந்திரிய மனஸ் முதலான இந்திரிய பதிகளான தேவதைகளுக்கு ப்ரேரகர் (வழிநடத்துபவர்).

சதுரதஷ புவனசன்மான்யே = 14 உலகங்களிலும் இருக்கும் அனைத்து மக்களைவிடவும் அதிக மரியாதையைப் பெற்றிருப்பவர் (அனைவராலும் வணங்கப்படுபவர்).

 

அனைத்து வேதங்களுக்கும் அபிமானியானதால், சரஸ்வதிதேவிக்கு வேதாத்மிகா என்று பெயர். கருட புராண, பிரம்ம காண்டத்தின் ஸர்வவேதாபிமானி த்வாத்ஸர்வ வேதாத்மிகா ஸ்ம்ருதாஎன்னும் வாக்கியமே இதற்கு ஆதாரம். அதே கருட புராணத்தில்:

 

புஜ்யந்தே ஸர்வ போகாம்ஸ்து விஷ்ணு ப்ரீத்யர்த்த மேவச |

அதஸ்து பாரதீக்ஞேயா புஜிஸம்ஞாககோத்தம ||

 

ஹே பக்‌ஷிகளில் சிறந்தவனான கருடனே. அனைத்து போகங்களையும் ஸ்ரீவிஷ்ணுவுக்கே ப்ரீதியாகட்டும் என்று உண்பதால், ஸ்ரீபாரதிதேவிக்கு புஜி என்று பெயர் - என்று சொல்லப்பட்டிருக்கிறது. பதி அந்தர்கத பரமாத்மனைத் தவிர மற்றவர்களை சிந்திக்காமல், பதி அந்தர்கத பரமாத்மனையே திடமான பக்தியால் உபாசனை செய்வதால் நரஹரி குருபக்தி என்று பெயர். பிரம்மனின் மனைவியானதால், பிராம்ஹி என்று பெயர். பூர்ணானந்த ஸ்வருபர், பூர்ண பலம் உள்ளவர், ஆகையால் ஸ்ரத்தா என்று பெயர்.

 

மகாபாரத தாத்பர்ய நிர்ணய 3ம் அத்தியாயத்தில்:

ப்ரத்யும்ன தஸ்சாதக்ருதௌ ஸ்த்ரீயைத்வே |

ப்ரஜஞ்ஞதுர்யமளே தத்ரபூர்வா ப்ரதான ஸஞ்ஞா ப்ரக்ருதிர்ஜனித்ரே ||11

ஸ்ரத்தாத்விதீயாத தயோஸ்ச யோகோ பபூவ பும்ஸைவச சூத்ர நாம்னா ||

ஹரேர் நியோகாததஸம்ப்ரஸூதௌ சேஷ:சுபர்ணஸ்ச தயோ ஸஹைவ ||12

 

க்ருதி - பிரத்யும்னரிடம் இரு பெண் குழந்தையர்கள் (இரட்டையர்கள்) பிறந்தனர். அவற்றில் முதலாமவள், ப்ரதானா என்னும் பெயர் கொண்ட, ஸ்ருஷ்டிக்குக் காரணமான ப்ரக்ருதி. இரண்டாமவள், ஸ்ரத்தாதேவி. இவர்கள் இருவருக்கும் புருஷ நாமக பிரம்மதேவர், ஸூத்ர நாமக வாயுதேவரின் சம்பந்தம் ஆனது. அதாவது, ப்ரதான நாமகரான ப்ரக்ருதிக்கு பிரம்ம தேவர், ஸ்ரத்தாதேவிக்கு வாயுதேவர் பதிகளாயினர். இந்த இரு தம்பதிகளுக்கு, சேஷ, கருடர்கள் பிறந்தனர் என்று சொல்கிறார்.

 

இப்படி ஸ்ரத்தா என்பது வாயுதேவரின் பத்னியான பாரதிதேவியின் பெயரானாலும், சரஸ்வதிதேவிக்கும் அதே பெயரில் ஸ்ரத்தையைக் கொடுத்தார். இதே ஆதாரத்தின்படி, கருட சேஷர்களின் தாய் என்னும் அர்த்தமும் தெளிவாகிறது. பதிக்கும், உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் வாக் ரூபமாக ப்ரீதி கொண்டிருப்பதால், இவருக்கு ப்ரீதி என்று பெயர். சரஸ்வதி தேவியருக்கு மூன்று ரூபங்கள் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணு ரஹஸ்ய 16ம் அத்தியாயத்தில்:

 

அதோபசயமாபன்னா ப்ரக்ருதி ஸ்த்ரீவிதாபவத் ||15

ஸத்வாதி குணயோகேன காயத்ரீ ச சரஸ்வதி |

ஸாவித்ரீதி சதாஸ்வேகோ ப்ரம்மாவீர்யமவாஸ்ருஜத் ||16

 

பிரம்மதேவரின் பத்னியான ப்ரக்ருதி, சத்வ ரஜஸ் தமோ என்னும் மூன்று குணங்களின் பேதத்தினால் மூன்று ரூபங்களை தரித்தார். அந்த ரூபங்களின் பெயர்கள் காயத்ரி, சரஸ்வதி, சாவித்ரி. அந்த மூவரிலும் பிரம்மதேவர் வீர்யா தானம் செய்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆதாரத்தின் பேரில், சரஸ்வதி தேவிக்கு காயத்ரி என்று பெயர் என்பது தெளிவாகிறது.

 

ஸ்ரீசங்கர்ஷணஜயாதனுஜெவாணி என்று ஒரு சொல்லாக படிக்கவேண்டும். ஏனெனில், சரஸ்வதி பாரதி இருவரும் க்ருதி- பிரத்யும்னரிடம் பிறந்தனர் என்பது, நிர்ணய 3ம் அத்தியாயம் 11-12ம் ஸ்லோகங்களிலிருந்து தெளிவாகிறது. இதே ஹரிகதாம்ருதசார 1ம் சந்தியில் க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனேஎன்னும் பாரதிதேவியை ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். சரஸ்வதி பாரதிதேவி இருவரும் ப்ரத்யும்னதஸ்சாத க்ருதௌ ஸ்த்ரியௌத்வேஎன்னும் ஸ்லோகத்தினால், இரட்டையர்களாக பிறந்தவர்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

 

இப்படியே ஸ்ரீமதாசார்யரும், தாசார்யரும் சொல்லியிருப்பதாலும், சங்கர்ஷண- ஜயாதேவியிடம் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்பதாலும், சரஸ்வதிதேவி, சங்கர்ஷணஜயாதனுஜெ என்று சொல்வதற்கு சாத்தியமில்லை. வாசுதேவ - மாயாதேவியிடம், புருஷ நாமக பிரம்ம தேவர், சங்கர்ஷண - ஜயாதேவியிடம், சூத்ர நாமக வாயுதேவர் பிறந்தனர் என்பது நிர்ணயத்தால் தெளிவாகிறது. ஆகையால் ஸ்ரீசங்கர்ஷண ஜயாதனுஜவாணிஎன்று ஒரே சொல்லாக சொல்லி சங்கர்ஷண- ஜயாதேவியிடம் பிறந்த வாயுதேவருக்கு, வாணி என்றால் வாக் ரூபமானவள் என்று அர்த்தம் சொல்ல வேண்டியதாயிற்று.

 

வேதங்கள் வாயுதேவரின் முகத்திலிருந்து தொடர்ச்சியாக பரமாத்மனைப் புகழும் விதமாக வந்து கொண்டிருக்கின்றன. சரஸ்வதி, வேதாத்மிகளாகையால், வேத ஸ்வரூபளாக வாயுதேவரின் முகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறாள் என்பது கருத்து. கீர்வாக்வாணி சரஸ்வதிஎன்னும் அமரகோசத்தின்படி, வாக்கியத்திற்கும் வாணி என்னும் பெயர் உள்ளது. வாயுதேவரின் முகத்தினால் வேதங்கள் வெளிவருகின்றன என்னும் விஷயத்தில், பாகவத 10ம் ஸ்கந்த வேணுகீதையில் வனசரோ கிரிதடேஷு சரந்தீர்வேணுனாஹ்வ யதிகா: ஸயதாஹிஎன்னும் ஸ்லோகத்திற்கு விஜயத்வஜீய வியாக்யானத்தில், கோபாலகிருஷ்ணனை வைத்து ஒரு அர்த்தமும், மூலரூபியான நாராயணனை வைத்து ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கிறார். நாராயணனைக் குறித்து சொல்லப்பட்ட வியாக்யானம் இவ்வாறு உள்ளது.

 

வனசர வனே ஜலே சரணம் ஷயனம் ஜலஷயனைத்யர்த்த: |

கிரிதடேஷு சரந்தீ: வாயோ: கிரிதடத்விஸ்ம்ருயமான:

ஜலஷயன: ஆதிபுருஷ: வாயுமுகேவர்த்தமானஸ்ருதீ:

ததர்த்தகதன பூர்வக முபதிஷதி || 8

 

வனம்பாஸ்யபுஸ்கானனே என்னும் கோஷத்தின் ஆதாரத்தில், நெருப்புக்கும், தண்ணீருக்கும், காட்டிற்கும், ‘வனம்என்றே பெயர் உண்டு. இங்கு வனசர என்றால், பாற்கடலில் படுத்திருப்பவன் என்று பொருள். இத்தகைய ஆதிபுருஷன், தன் பக்தர்களான சனகாதிகளால் வணங்கப்பட்டு, வாயுதேவரின் முகத்திலிருந்து வெளிப்படும் ஸ்ருதி வாக்கியங்களை, தன்னருகில் அழைத்து, அதன் அர்த்தங்களை சனகாதிகளுக்கு உபதேசம் செய்கிறான் என்று அர்த்தம் செய்திருக்கிறார். இந்த ஆதாரத்தின்படியே, வாயுதேவரின் முகத்திலிருந்து, சரஸ்வதிதேவி, ஸ்ருதி ரூபத்தினால் வெளிப்படுகிறாள் என்னும் அர்த்தத்தையும் சொல்லலாம். அதாவது, ஆசார்யரின் வாக்கியத்திற்கும் தாசராயரின் வாக்கியத்திற்கும் பரஸ்பரம் விரோதம் இல்லை என்று அறியலாம்.

 

காளி காஷிஜெ விப்ரஜா பா

ஞ்சாலி ஷிவகன்யேந்த்3ஸேனா

காலமானி சந்த்3ர த்3யுபா3 நாம பா4ரதிகெ3 |

காளி பி3ரம்மர யுவதியரு ஏ

ளேளு ஐவத்தொந்து3 கு3ணதி3ம்

கீளரெனிபரு தம்ம பதிக3ளிகி3ந்த ஆவாக3 ||10

 

காஷிஜா = காசிராஜனின் மகளான

காளி = பீமசேனரின் மனைவியான காளி, சாட்சாத் பாரதி தேவியரின் அவதாரம்

பாஞ்சாலி = த்ருபத ராஜனின் மகளான த்ரௌபதி

சசி, ஷாமளா, உஷா, பார்வதி ஆகியோருடன் கூடி அவதரித்த பாரதிதேவி

ஷிவகன்யா = சிவ என்னும் பிராமணரிடம் அவதரித்த சசி ஆகியோருடன் இருக்கும் பாரதிரூபம்

இந்த்ரஸேனா = நள ராஜனின் மகளாக பிறந்த சசி ஆகியோருடன் கூடிய ரூபம்

காலமானி = காலாபிமானி

சந்திரா = சங்கர என்னும் பிராமணனின் வீட்டில் பிறந்த சசி ஆகியோருடன் கூடிய ரூபம்

வித்யுன்னாம = அந்தரிக்‌ஷத்திற்கும் திக்குகளுக்கும் அபிமானியரான பாரதிதேவியரின் பெயர்

இந்த ரூப நாமங்களால் கூடியவர் பாரதிதேவி என்று பொருள்.

காளி பிரம்மர யுவதியரு = வாயுதேவர் மற்றும் பிரம்மதேவர் இவர்களின் பத்னியரான பாரதி சரஸ்வதியர்கள்

ஏளேளு ஐவத்தொந்து குணதிம் = 49 மற்றும் 51, மொத்தம் 100 குணங்களால்

ஆவாக = எப்போதும்

தம்மபதிகளிந்த = வாயு, பிரம்மர்களைவிட

கீளரெனிபரு = குறைவானவர்கள்.

 

பாரதிதேவி, பீமசேனதேவரின் மனைவியாக ஆவதற்காக, காசிராஜனின் மகளாக காளி என்னும் பெயரில் பிறந்தார். மகாபாரத தாத்பர்ய நிர்ணய 20 அத்தியாயத்தில்:

 

க்ருஷ்ணாஸ்யைவாப்யன்ய ரூபேணஜாதா காஷீஷபுத்ரீம் யாம்ப்ரவதந்திகாளீம் ||

ஸாகேவலா பாரதீ நான்யதேவ்யஸ்தத்ரா விஷ்டாஸ்தத்யைதே காஷிராஜ: ||13

ஸ்வயம்வரார்த்தம் ந்ருபதீனாஜுஹாவ ஸர்வாம் ஸ்தேபிஹ்யத்ர ஹர்ஷாத்ஸமேதா: ||

தேஷாம் மத்யே பீமஸேனாம் ஸஏஷா மாலா மாதாத்தத்ர ஜராஸுதாத்யா: ||14

இத்யாதி.

 

இதே த்ரௌபதிதேவியே, காஷிராஜனின் மகளாக பிறந்தார். அவள் பெயர் காளி. ஆனால் இவள் சசி முதலான தேவிகளால் கூடிய ரூபம் இல்லை. வெறும் பாரதி அவதாரமே ஆகும். காசிராஜன் இவளின் ஸ்வயம்வரத்திற்காக ராஜர்களை அழைத்திருந்தான். அனைவரும் மகிழ்ச்சியுடன் காசிராஜனின் பட்டணத்திற்கு வந்திருந்தனர். அந்த ராஜர்களின் நடுவில் இருந்த பீமசேனதேவரின் கழுத்தில், காளி மாலையை அணிவித்தாள். அதைக்கண்டு பொறுக்காத ஜராசந்தாதி அரசர்கள், பீமசேனதேவருடன் போருக்கு வரத் தயாராயினர். அவர்களை பீமசேனதேவர் வென்று, காசிராஜனால் பூஜிக்கப்பட்டு, காளியை திருமணம் புரிந்து கொண்டு, இந்திரபிரஸ்தத்தை அடைந்தார்.

 

இதுவே இந்த பத்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் காளி அவதாரம். திரௌபதி, ஷிவகன்யா, இந்திரஸேன, சந்திரா இந்த அவதாரங்கள், இந்திரனின் மனைவியான சசி, யமதேவரின் மனைவியான ஷாமளா, அஸ்வினி தேவதைகளின் மனைவி உஷா, ருத்ரதேவரின் மனைவியான பார்வதி இந்த நால்வருடன் சேர்ந்த, பாரதிதேவியின் அவதாரம் ஆகும். இப்படி நான்கு பேருடன் சேர்ந்து அவதரிக்க என்ன காரணம் என்றால், மகாபாரத தாத்பர்ய நிர்ணய 18ம் அத்தியாயத்தில்:

 

அன்வேனம் பாரதீஸாக்‌ஷாத் வேதிமத்யாத் ஸமுத்திதா |

ப்ராணோஹி பரதோ நாமஸர்வஸ்ய பரணாச்ஸ்ருத: ||103

தத்பார்யா பாரதீனாம வேதரூபா சரஸ்வதி |

ஆவேஷயுக்தா ஷச்யாஸ்ச ஷாமளாயாஸ்ததோஷ ஸ: |

தாஸ்வேந்த்ர தர்மனாஸத்ய ஸம்ஸ்ரயாஸ்ரய ஈரிதா: ||105

ஸாக்ருஷ்ணா நாமதஸ்சாஸீ துத்க்ருஷ்டத்வாத்தியோஷிதாம் ||

...

உமாம்ஷயுக்தாதி தராம் ஸர்வலக்‌ஷண சம்யுதா |

பூர்வம்ஹ்யுமாசதேவ்யஸ்தா: கதாசித் பர்த்ருபிர்யுதா: ||108

விலாஸந்தர்ஷயாமாஸுர் பிரம்மண: பஷ்யதோதிகம் |

ஷஷாப தாஸ்ததா ப்ரம்மாமானுஷீம் யோனிமாப்ஸ்யத ||109

தத்ரான்யகாஸ்ச பவதேத்யேவம் ஷப்தா: ஸுராங்கனா: ||

விசார்ய பாரதீ மேத்ய ஸர்வமஸ்யை நிவேத்யச ||110

சஹஸ்ர வத்ஸரம் சைனாம் ஷுஷ்ருஷித்வாபபாஷிரெ |

தேவினோ மானுஷம் ப்ராப்யமன்யகாத்வஞ்ச சர்வதா ||111

தத்ராபி மாருதாதன்யம் ந ஸ்ப்ருஷேமகதாசன |

ப்ரம்மண்யைவச ஷப்தாஸ்ம: பூர்வம்ஜான்யத்ர லீலயா ||112

ஏக தேஹத்ர மாப்யேனம் யதாவஞ்சயிதும் கதா: |

ஏகதேஹா மானுஷத்வமாப்ஸ்யைதத்ரிஷ உத்ததா: ||113

த்ரிஷோ மத்யஞ்சனாயேதா இதிதேனோதிதாவயம் |

அதஸ்த்வயைக தேஹத்வ மிச்சாமோதேவிஜன்மஸு ||114

சதுர்ஷ்டபியதோன்மாகம் ஷாபத்வயனிமித்தத: |

சதுர்ஜன்ம பவேத்பூமௌ த்வாம் நான்யே மாருதாத்ப்ரஜேத் ||115

இத்யாதி...

 

த்ருபத ராஜன் யாகம் செய்யும்போது, அக்னி குண்டத்திலிருந்து த்ருஷ்டத்யும்னன் தோன்றியபிறகு, அதே குண்டத்திலிருந்து சாட்சாத் பாரதிதேவி வெளிவந்தார். அனைவரையும் காப்பதால், வாயுதேவருக்கு பரத என்று பெயர். அவரின் மனைவியானதால், இவருக்கு பாரதி என்று பெயர் வந்தது. இவர் வேத ரூபத்தைக் கொண்டிருப்பதால், சரஸ்வதி என்றும் இவருக்கு பெயர் உண்டு. த்ருபத ராஜனின் மகளாக வந்ததால், திரௌபதி என்று அழைக்கப்பட்டார். இவரில், சசி, ஷாமளா, உஷா ஆகியோரின் ஆவேசமும் இருக்கிறது. இவர்கள் மூவரும் இந்திரன், யமன், அஸ்வினி தேவதைகள் - ஆகியோரின் பத்னியர் ஆகையால், ஸ்ரீ என்னும் பெயரும் இவருக்கு வந்தது. பெண்களில் அதிக ரூபம் கொண்டவராகையாலும், கிருஷ்ண வர்ணத்தை பெற்றிருந்ததாலும், கிருஷ்ணை என்ற பெயரும் இவருக்கு உண்டு.

 

இவர் பிறந்தபோதே, சர்வக்ஞராகவும், சர்வாபரண பூஷிதராகவும், எப்போதும் முதுமையைப் பெறாமல், இளமையுடனேயே இருந்தார். சச்யாதிகளைவிட பார்வதி அம்சம் அதிகமாக இருந்தது. சர்வ லட்சணங்களும் பொருந்தியவளாக இருந்தாள். பார்வதி ஆகியோருடன் கூடி, பாரதி தேவி அவதரித்ததற்கு என்ன காரணம் என்றால்: முன்னர் ஒரு நாள், பிரம்மதேவர் அருகில் இருந்தபோது, பார்வதி, சசி, ஷாமளா, உஷா ஆகிய நால்வரும் தத்தம் பதிகளுடன் அதிக மோகம் கொண்டனர். கோபம் கொண்ட பிரம்மதேவர், இவர்கள் நால்வருக்கும் நீங்கள் நால்வரும் மனிதர்களாகப் பிறந்து, பிற புருஷனின் சம்பந்தத்தைப் பெறுவீர்கள்என்று சாபம் கொடுத்தார்.

 

பிறகு இந்த நால்வரும் சிந்தித்து, பாரதிதேவியரைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து, அவர் மகிழ்ந்த பிறகு, தங்களின் சாபத்தைப் பற்றி அவருக்குத் தெரிவித்து, இப்படியாக வேண்டிக்கொண்டனர். தேவி, நாங்கள் நால்வரும் மனிதர்களாகப் பிறந்து, அந்தப் பிறவியில் பிற புருஷனின் சம்பந்தத்தைப் பெறவேண்டும் என்பது பிரம்மதேவரின் சாபம். இது மட்டுமே சாபமல்ல. இதற்கு முன்னரும் ஒரு நாள், நாங்கள் நால்வரும் ஒரே தேகத்தில் சேர்ந்து, பிரம்மனை வஞ்சிக்கச் சென்றிருந்தோம். அப்போதும் கோபம் கொண்ட பிரம்மதேவரின் நீங்கள் நால்வரும் மூன்று முறை, ஒரே தேகத்தில் பிறந்து, பிற புருஷனின் சம்பந்தத்தைப் பெறுங்கள்என்று சாபம் கொடுத்திருந்தார். நாங்கள் பிற புருஷர்களின் சம்பந்தம் கொள்ளவேண்டுமெனில், எங்கள் பதிகளைவிட உத்தமமானவர்கள் இருந்தால் பாதகம் இல்லை. ஆகையால், வாயுதேவரைத் தவிர இன்னொருவரை நாங்கள் தொடமாட்டோம். நீங்கள் எங்களுடன் சேராவிடில், வாயுதேவரின் சம்பந்தம் கிடைக்காது. நாங்கள் இரு சாபங்களால், நான்கு பிறவிகளில் பிறக்கவேண்டியிருக்கிறது. ஆகையால், எங்களுடன் நீயும் பிறவி எடுத்தால், எங்களுக்கும் & உனக்கும் வாயுதேவரைத் தவிர வேறு சம்பந்தம் கிடைக்காது. ஆகையால், நீயும் எங்களுடன் சேர்ந்து, நான்கு பிறவிகளில் மனிதர்களாக பிறக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டனர்.

 

பாரதிதேவியும் அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தார். முதலில் சிவ என்னும் பிராமணனின் மகளாக, சிவகன்யா என்ற பெயரில் பிறந்து, பார்வதாதி நான்கு பேரும் ருத்ரதேவரைக் குறித்து தவம் செய்ய, ஒரே தேகத்தில் இவர்கள் இருப்பதால், இவர்களின் செயல்களும் ஒரே மாதிரியாகவே இருக்கவேண்டுமாகையால், பாரதிதேவி காம்யத்தை விரும்பாதவராக இருப்பதாலும், ருத்ரதேவரின் அந்தர்யாமியான பகவந்தனைக் குறித்து தவம் செய்தனர். தத்தம் பதிகளை இவர்கள் சேரவேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. அப்போது பார்வத்யாதி நால்வருக்கு ருத்ர தேவரும், பாரதி தேவியருக்கு ருத்ராந்தர்கத ஹரியும், அடுத்தடுத்த பிறவிகளில் பதி சம்பந்தமாகும் வரத்தைக் கொடுத்தார்.

 

முதல் பிறவியான சிவகன்யா, கன்யா பருவத்திலேயே மரணம் அடைந்தாள்.

 

இரண்டாம் பிறவியில், பார்வத்யாதி நால்வரும், பாரதிதேவியருடன் சேர்ந்து, நளராஜனின் மகளாக இந்திரசேனை என்னும் பெயரில் அவதரித்தனர். அப்போது  முத்கல என்னும் ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் இந்த ரிஷி புராணம் கேட்டுக்கொண்டிருந்தபோது, பிரம்மதேவர் தன் மகளை மணம் செய்ய விரும்பினார் என்ற கதையைக் கேட்டு, பிரம்மதேவரை கேலி பேசினார். நீ அதோகதியைப் பெறுவதற்காக பாரத்யாதேவியரின் சங்கத்தை அடைவாய்என்று பிரம்மன் சாபம் கொடுத்தார். அதைக்கேட்டு பயந்த முத்கலன், பிரம்மனைக் குறித்து தவம் புரிந்தான்.

 

அப்போது தரிசனம் அளித்த பிரம்மதேவர் ஹே முத்கலனே. நீ சாட்சாத்தாக அந்த தேவியரின் சம்பந்தத்தைப் பெறுவதில்லை. உன் சரீரத்தில் வாயுதேவர் நிலைத்திருந்து, அந்த தேவியரை அடைவார். அந்த சமயத்தில் நீ மயக்கமாக இருப்பாய். ஆகையால், உனக்கு அந்த தோஷம் வருவதில்லைஎன்று சொல்லி அருளினார். ஆகையால், வாயுதேவர் முத்கலனில் இருந்து, இந்திரசேனையை திருமணம் புரிந்துகொண்டார். சில காலம் கழித்து, முத்கலனுக்கு மயக்கம் தெளிவித்து, வாயுதேவர் அங்கிருந்து புறப்பட்டார். இந்திரசேனையும் அந்த தேகத்தை விட்டுப் புறப்பட்டாள்.

 

அடுத்த பிறவியில், த்ருபத ராஜனின் மகளாகப் பிறந்தாள்.

 

பிறகு, வாயுதேவர் மத்வாசார்யராக பிறந்த காலத்தில், திரௌபதி, சங்கர என்னும் பிராமணனின் வீட்டில், சந்த்ரா என்னும் பெயரில் பிறந்து, கன்யாவஸ்தையிலேயே மரணமடைந்தாள்.

 

ஆக, சசி முதலானவர்களுடன் சேர்ந்து பாரதிதேவி அவதரித்தது நான்கு முறை என்று அறியவேண்டும். ஹனுமத் அவதார காலத்தில் சிவகன்யையாக பிறந்திருந்தார். த்ரேதாயுகத்தின் முடிவில் இந்திரசேனையின் ஜனனம். பீமசேன அவதாரத்தில் திரௌபதி, மத்வாவதாரத்தில் சந்திரா என 4 அவதாரங்களின் காலத்தை கருட புராணத்தில் சொல்லியிருக்கின்றனர். அந்த பாரதிதேவியரே காலாபிமானி ஆனவர். வித்யுத் என்பது பாரதி தேவியரின் மற்றொரு பெயர். இந்த சரஸ்வதி பாரதியர், தத்தம் பதிகளைவிட 100 குணங்களால் குறைந்தவர்கள் என்று அறியவேண்டும்.

 

ஹரிமீராவேஷனர

ங்கருஷணா வேஷயுத லக்‌ஷ்மண

பரமபுருஷன ஷுக்ல கேஷாவேஷ ப3லராம |

ஹர தா3ஷிவ தப அஹங்க்ருது

மருதயுக்த ஷுகோர்த்4 பட த

த்புருஷ ஜயகீ3ஷௌர்வ த்3ரௌணி வ்யாத4 தூ3ர்வாஸ ||11

 

ஹரிஸமீராவேஷனர = பரமாத்ம மற்றும் வாயுதேவர் இவர்கள் இருவரின் ஆவேசத்தைக் கொண்ட சேஷதேவரின் அவதாரமே, நர நாராயணர்களில் நர ரூபம்.

சங்கர்ஷணா வேஷயுத லக்‌ஷ்மண = சங்கர்ஷண நாமக பரமாத்மனின் அம்சத்தைக் கொண்ட சேஷதேவரின் அவதாரம் லட்சுமண ரூபம்.

பரமபுருஷன சுக்லக்லேஷாவேஷ பலராம = பரமாத்மனின் சுக்ல கேஷாவேஷத்தினால் ஆன சேஷதேவரின் அவதாரமே பலராம ரூபம்.

ஹர = நினைத்த மாத்திரத்திலேயே அனைத்து பாவங்களையும் பரிகரிப்பதால், ருத்ரதேவருக்கு ஹர என்று பெயர்.

தப: = 10 கல்பங்கள், உப்புக் கடலில் தவம் செய்ததால், ருத்ரதேவருக்கு தப: என்று பெயர்.

அஹங்க்ருது = அஹங்கார தத்வத்திற்கு அபிமானியானதால், அஹங்க்ருது என்று பெயர்.

மருதயுக்த ஷுக = வாயுதேவரின் ஆவேசத்துடன் கூடிய ருத்ராவதாரம் - சுகாசார்யர்.

ஊர்த்வபட = அந்தரிக்‌ஷத்தையே ஆடையாக அணிந்தவன் என்று பொருள்; அல்லது, ‘படகதாவிதிதாதோ: படஅதாவது, வேகத்திற்குப் பெயர். வானில் பறக்கும் சக்தி உள்ளவன் என்று பொருள்.

தத்புருஷ = பரமாத்மனின் சேவகர்கள் ஆகையால், தத்புருஷ என்றால் அவனின் புருஷன் என்று பொருள்.

ஜைகீஷ = ஜைகீஷ என்று ரிஷிகுலத்தில் அவதரித்து, பலருக்கு தத்வோபதேசம் செய்த ரூபம்.

ஔர்வ = ப்ருகு குலத்தில், துடையிலிருந்து பிறந்த ரிஷிரூபம்.

த்ரௌணி = த்ரோண புத்ரரான அஸ்வத்தாமாசார்யர்

வ்யாத = அர்ஜுனனுடன் போரிட்ட வேட்டைக்கார ரூபம்

தூர்வாஸ = துர்வாச ரிஷிரூபம்

 

மேற்சொன்ன அனைத்தும் ருத்ரதேவரின் அவதாரங்கள் என்பது கருத்து.

 

3ருட ஸேஷ ஷஷாங்கத3ல ஷே

2ரரு தம்மொளு மரு பா4ரதி

ரசிஜான பத்னிக34மரு நூரு கு3ணதி3ந்த3 |

ஹரிமட3தி3 ஜாம்ப3வதியொளு ஸ்ரீ

தருணியாவேஷ விஹுதெ3ந்தி3கு3

கொரதெ எனிபரு க3ருட3 ஸேஷரிகை3வரைது3 கு3||12

 

கருடசேஷ ஷஷாங்கதள சேகரரு = கருட, சேஷ, ருத்ர இந்த மூவரும்

தம்மொளு சமரு = பரஸ்பரம் சம குணங்களைக் கொண்டவர்கள்

பாரதி சரசிஜாஸன பத்னிகெ = பாரதி சரஸ்வதி தேவியருக்கு

100 குணதிந்த = 100 குணங்களால்

அதமரு = குறைந்தவர்கள்

ஹரிமடதி = ஸ்ரீகிருஷ்ணனின் மனைவியான

ஜாம்பவதியொளு = ஷண்மஹிஷியரில் (ஜாம்பவதி, மித்ரவிந்தா, நீளா, பத்ர, காளிந்தி, லக்‌ஷணா) ஒருவரான ஜாம்பவதியில்

எந்திகு = என்றைக்கும்

ஸ்ரீதருணியாவேஷவிஹுது = ஸ்ரீலட்சுமிதேவியரின் ஆவேசம் இருக்கிறது

கருட சேஷரிகெ = கருட சேஷர்களைவிட

கொரதெ எனிபரு = சிறிது குறைவு எனப்படுகிறார்

ஷண்மஹிஷியரில் மற்ற ஐவர்,

ஐது குண = கருட சேஷர்களைவிட ஐந்து குணங்கள் குறைவானவர்கள்.

ஜாம்பவதியிடம் லட்சுமிதேவியின் ஆவேசம் இல்லாத காலங்களில், இந்த ஆறு பேரும் சமம் எனக் கருதவேண்டும்.

 

கருடதேவருக்கு அவதாரம் இல்லாத காரணத்தால், அவரின் விஷயத்தைப் பற்றி விளக்கவில்லை. கருட சேஷ ருத்ரர் சமமானவர்கள். பதவியின்படி, ருத்ரதேவரைவிட சேஷதேவர் கொஞ்சம் மேலானவர் என்பதை முன்னரே பார்த்தோம். இவர்கள் மூவரும் சரஸ்வதி பாரதியரைவிட 100 குணங்கள் குறைவானவர்கள். ஸ்ரீகிருஷ்ணனின் மனைவியரான ஜாம்பவதி முதலான ஆறு பேர்களும் சமமானவர்கள் ஆனாலும், லட்சுமி தேவியரின் ஆவேச பலத்தினால், ஜாம்பவதி, மற்ற ஐந்து பேர்களைவிட கொஞ்சம் மேலானவர். கருட சேஷர்களைவிட சிறிது குறைவானவர் ஆவார். நீலாதி மற்ற ஐவரும், கருட சேஷாதிகளைவிட ஐந்து குணங்கள் குறைவானவர்கள் ஆவர்.

 

நீலப3த்3ர மித்ரவிந்தா3

மேலெனிப காளிந்தி3 லக்‌ஷணெ

பா3லெயரிகி3ந்த34ம வாருணி ஸௌபரணி கி3ரிஜ |

ஸ்ரீலகுமியுத ரேவதி ஸிரி

மூலரூபதி3 பேயளெனிபளு

ஷைலஜாத்3யரு தஷகு3ணாத4ம தம்ம பதிக3ளிகெ3 ||13

 

நீலா, பத்ரா, மித்ரவிந்தா,

மேலெனிப = சிறந்தவர்கள் எனப்படும்

காளிந்தி, லக்‌ஷணா

பாலெயரிகிந்த = ஜாம்பவதி முதலான கிருஷ்ணனின் 6 மனைவியர்களைவிட

வாருணி = சேஷதேவரின் மனைவி

சௌபரணி = கருடனின் மனைவி

கிரிஜ = பார்வதி

இவர்கள் மூவரும்

அதம = குறைவானவர்கள்

அவர்களில், சேஷதேவரின் மனைவியான வாருணிதேவி

ஸ்ரீலகுமியுத = ஸ்ரீலட்சுமிதேவியரின் அம்சத்துடனான

ரேவதி = ரேவதராஜனின் மகளாகையால், ரேவதி என்ற பெயரில் பிறந்து பலராமனுக்கு மனைவியானவள்

இவளுக்கு ஸ்ரீதேவியின் அம்சம் இருப்பதால், ஸ்ரீ என்று பெயர்.

மூலரூபதி = மூலரூபமான வாருணி ரூபத்தினால்

பேயளெனிபளு = குடிக்கத் தகுந்ததான பான ரூபத்தினால், பலராமனை மகிழ்விக்கிறாள்

ஷைலஜாத்யரு = பார்வதி முதலானவர்கள்

தம்ம பதிகளிகெ = தத்தம் கணவர்களுக்கு

தஷகுணாதம = 10 குணங்கள் குறைவானவர்கள்

 

ஜாம்பவதி முதலானவர்களைவிட வாருணி, சௌபரணி, பார்வதி ஆகிய மூவரும் 5 குணங்கள் குறைவானவர்கள். ரேவதி ராஜனின் மகளான ரேவதியே பலராமனின் மனைவி ஆவார். பலராமனிடம் எப்படி பரமாத்மனின் சுக்லகேஷ ஆவேசம் இருக்கிறதோ, அப்படியே, லட்சுமிதேவியரின் அம்சத்துடன் கூடியது வாருணி ரூபம். இவளுக்கு ஸ்ரீ என்று பெயர் உண்டு. இதே வாருணி, தன் மூல ரூபத்தினால், மத்யபான ரூபமாக, பலராமனை மகிழ்விக்கிறாள். பாகவத 10ம் ஸ்கந்தம், 88ம் அத்தியாயத்தில்:

 

ராம: க்‌ஷபாஸு பகவான் கோபீனாம் ரதிமாவஹம் ||

பூர்ணசந்த்ரகராம்ருஷ்டே கௌமுதீ கந்தவாயுனா ||

யமுனோபவனேரேமே ஸேவிதே ஸ்த்ரிகணைர்வ்ருத: |18

வருணப்ரேஷிதா தேவி வாருணி வ்ருக்‌ஷகோடராத் ||

பதந்தீதத்வனம் சர்வம் ஸௌரபேணாத்யவாஸயத் ||19

தம்கந்தம் மதுதாராயா: கோபிகா வாயுனோபஹ்ருதம்பல: ||

ஆக்ராயோபகதஸ்தத்ர லலனாபி: பபௌஸமம் ||20

 

இரவு நேரங்களில் பலராமன், கோபிகா ஸ்த்ரியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தவாறு, பூரண சந்திரனின் கிரணங்களுடன் கூடிய, பூக்களின் நறுமணத்துடன் வீசும் காற்றைக் கொண்ட யமுனா நதிக்கரையில், ஸ்த்ரி கணங்களுடன் க்ரீடித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், வருணனால் அனுப்பப்பட்ட வாருணி என்னும் சேஷதேவரின் மனைவி, பலராமனுக்கு சேவை செய்வதற்காக, மரக்கிளைகளுக்கு நடுவிலிருந்து, தன் நறுமணத்தை காட்டில் முழுவதுமாக பரப்பினாள். காற்றில் மிதந்து வந்த அந்த காற்றினை சுவாசித்த பலராமன், பெண்களுடன் அங்கு வந்து, அந்த மதுவை குடித்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

அதே அபிப்பிராயத்தையே தாசார்யரும், மூல ரூபதி பேயளெனிபளு என்று சொல்லியிருக்கிறார். பார்வதி முதலான இந்த மூவரும், தத்தம் கணவர்களைவிட 10 குணங்கள் குறைவானவர்கள்.

 

நரஹரீ ராவேஷ ம்யுத

நர புரந்த3ர கா3தி4 குஷ ம

ந்த3ரத்3யுமனனு விகுக்‌ஷி வாலி இந்த்3ரனவதார |

4ரத பி3ரம்மாவிஷ்ட ஸாம்ப3 ஸு

3ருஷன பிரத்3யும்ன னகா

த்3யரொளகி3ப்ப னத்குமாரனு ஷண்முக2னு காம ||14

 

நரஹரிய = சேஷ அம்சமும், பரமாத்மனின் அம்சத்தினாலும் கூடியது நர நாராயணர்களில், நர ரூபம் என்று சேஷதேவரின் அவதாரத்தை சொல்லும்போது பார்த்தோம். அந்த நரனின் அம்சத்தினாலும், ஸ்ரீஹரியின் அம்ச விசேஷத்தினாலும் கூடிய இந்திரன், நர = அர்ஜுனன்

புரந்தர = வைவஸ்த மன்வந்தரத்தின் இந்திரனின் பெயர்

காதி = குஷ ராஜனின் மகனான காதிராஜன்

குஷ = ராமதேவரின் மகன் குஷன்

மந்தரத்யும்னனு = சாக்‌ஷுஷ மன்வந்தரத்தின் இந்திரன்

விகுக்‌ஷி = இக்‌ஷ்வாகு ராஜனின் மகன்; வாலி (சுக்ரீவனின் அண்ணன்); இவர்கள் இருவரும் இந்திரனின் அவதாரம்.

பரத = ராமதேவரின் தம்பி

பிரம்மாவிஷ்டஸாம்ப = ஜாம்பவதியின் மகனான சாம்பன், பிரம்மனின் ஆவேசத்தைப் பெற்ற மன்மதன்

சுதர்ஷன = பரமாத்மனின் கையில் இருக்கும் சக்கரம்

ப்ரத்யும்ன = ஸ்ரீகிருஷ்ண ருக்மிணியின் மகன்

ஸனகத்யதொளகிப்ப = சனக, சனந்த, சனத்குமார, சனத்சுஜாத என்னும் பிரம்ம மானஸ புத்ரர்களான நால்வரில் சேர்ந்த

ஸனத்குமாரனு, ஷண்முகனு, காம = இவர்கள் அனைவரும் மன்மதனின் அவதாரங்கள்.

 

நர அம்சத்தினாலும், பரமாத்மனின் விசேஷமான அம்சத்தினாலும் கூடிய இந்திரனின் அவதாரமே அர்ஜுனன். மகாபாரத தாத்பர்ய நிர்ணய 12ம் அத்தியாயத்தில்:

 

இதீரிதாஸாஹ்வயதாஷு வாஸவம் தத: ப்ரஜக்ஞே ஸ்வயமேவ ஷக்ர: |

ஸஜார்ஜுனோ நாமனராம்ஷயக்தோ விஷ்ண்வாவேஷீ பலவானஸ்தவேத்தா ||99

 

பாண்டுராஜனின் பேச்சைக் கேட்டு குந்திதேவி, மந்திரபலத்தினால் இந்திரனை அழைத்தாள். அப்போது, தேவேந்திரன் தானே குந்திதேவியில் அர்ஜுனன் என்ற பெயரில் பிறந்தான். அவன், நர அம்சத்தினாலும், அதாவது, ஹரி அம்சத்தினால் கூடிய சேஷாம்ச என்று பொருள் (ஹரி அம்சத்தினால் கூடிய சேஷாம்சரே நர அவதாரம் என்று 11ம் பத்யத்தில் தெளிவாக பார்த்துள்ளோம்). மற்றும் பரமாத்மனின் விசேஷமான ஆவேசத்தினாலும் சேர்ந்து, வலிமையானவனாகவும், அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தத் தெரிந்தவனாகவும் இருந்தான் என்று கூறியிருக்கிறார். இந்த வாக்கியமே நரஹரியாவேஷசம்யுத நரஎன்பதற்கு ஆதாரம் என்று அறியவேண்டும்.

 

நர அம்சம் கொண்டவன் ஆகையால், நர என்று அர்ஜுனனுக்கும், நாராயணன் என்னும் கிருஷ்ணனுக்கும் பெயர் இருக்கிறது. நர நாராயணாவேதௌஎன்னும் பாரத வாக்கியத்தால் கிருஷ்ணார்ஜுனரே நாராயண நரர் என்று தெரிகிறது. அந்த அபிப்பிராயத்திலேயே தாசராயர் அர்ஜுனனின் பெயர் நரன் என்று கூறுகிறார்.

 

நரஹரியாவேஷயுத = நர என்றால் நரஹரி என்பதற்கு பரமாத்மன் என்று அர்த்தம் சொல்லி, பரமாத்மனின் ஆவேசத்தினால் கூடிய நரனே புரந்தரன் என்று அர்த்தம் சொல்வதானால், அர்ஜுனனின் பெயரை தனியாக (வேறாக) சொல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால், அப்படி சொல்லவில்லை. ஆகையால், நரஹரி என்பதற்கு நராம்சமும், ஹரியின் அம்சமும் சேர்ந்த நர, அர்ஜுனன் என்று அர்த்தம் சொல்ல வேண்டும். புரந்தர என்றால் புரந்தரன் என்னும் தேவேந்திரன். விஷ்ணு ரஹஸ்ய 44ம் அத்தியாயத்தில்:

 

ஏஷஏவமனுர்ஜாத: ஸப்தமோஹிரவே ஸுத: ||37

இக்‌ஷ்வாகு முக்யாஸ் தஸ்யாஸு: புத்ராதஷ மஹாபலா: |

இந்திர: புரந்தரஸ்தத்ர தேவாருத்ராதயஸ்ததா ||38

 

ஆறாம் மன்வந்தரத்தின் இறுதியில், சத்யவ்ரத என்னும் ராஜனிடம் பரமாத்மன் மத்ஸ்யாவதாரத்தை எடுத்து அவனுக்கு தத்வோபதேசத்தை செய்தான். அந்த சத்யவ்ரதன் பகவந்தனின் அருளால், விவஸ்வான் என்னும் சூரியனின் மகனாக ஸ்ராத்தேவ என்றும், வைவஸ்வத என்றும் பிறந்து, இந்த மன்வந்தரத்திற்கு அதிபதியானான். அவனின் மக்களே இக்‌ஷ்வாகு முதலான 10 பேர். அந்த மன்வந்தரத்தில் புரந்தர என்னும் கஷ்யபரின் மகன் இந்திரனாக இருந்தான் என்று தெரிய வருகிறது. ஆகையால், வைவஸ்வத மன்வந்தரத்தின் இந்திரனுக்கு புரந்தர என்று பெயர்.

 

காதிராஜன் சந்திர வம்சத்தில் பிறந்தான். மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் 4ம் அத்தியாயத்தில்:

 

தத: ஸுவம்ஷேஷஷின: ப்ரஸூதோகாதீதி ஷக்ரஸ்தனுஜோஸ்யஜாஸீத் ||4

 

உத்தமமான சந்திர வம்சத்தில் தேவேந்திரன் காதி என்னும் பெயரில் பிறந்தான். அவனின் மகன் விஸ்வாமித்ர என்று சொல்கிறார். ராமதேவரின் மக்களான குஷலவர்களில் குஷனே இந்திரன். நிர்ணய அத்தியாயம் 9ல் :

 

தேவ்யாம்ஸ ஜாஜனயதிந்த்ர ஹுதாஷனௌ த்வௌ புத்ரௌயயௌ குஷலயௌ பலினௌ குணாட்யௌ ||

 

ஸ்ரீராமதேவர், சீதாதேவியரிடம் இந்திர, அக்னி இருவர் குஷ, லவ என்னும் பெயருள்ள மக்களாக பிறந்தனர். அவரில் குஷன் இந்திரன் என்பதற்கு இந்த வாக்கியமே ஆதாரம். விஷ்ணு ரஹஸ்ய 44ம் அத்தியாயம்:

 

ஷஷ்டஸ்துசக்‌ஷுஷ: புத்ர: சாக்‌ஷுஷோ மனுரீரித: |

மந்தரத்யும்ன: ஸ்வயம்ஷக்ர: இந்த்ரம்பதமஷாஸத ||8

 

ஆறாம் மனு சக்‌ஷுஷனின் மகன், சாக்‌ஷுஷன். ஸ்வயம் தேவேந்திரனே மந்தரத்யும்ன என்னும் பெயரில் இந்திர பட்டத்தை ஆண்டவன் என்று சொல்கிறார். இக்‌ஷ்வாகு ராஜனின் மகன் விகுக்‌ஷிராஜன். இந்திராவதாரன். வாலி இந்திராவதாரன்.

 

மன்மதனின் அவதாரங்களை சொல்கிறார். கைகேயியின் மகன், ராமதேவரின் தம்பி, பரதனே முன்பு மன்மதன். நிர்ணய 3ம் அத்தியாயத்தில்:

 

பூர்வம்ஹரேஸ்சக்ரம புத்திதுர்கா தம:ஸ்திதா ஸ்ரீரிதியாம்வதந்தி |

ஸத்வாத்மிகாஷங்க மதோரஜஸ்தா பூர்னாமிகாபத்மம பூத்தரேஹிம் || 75

கதாதுவாயுர்பல சம்விதாத்மா ஷார்ங்கம் ச வித்யேதிரமைவ கட்க: |

துர்காத்மிகா ஸைவசசர்மனாம்னே பஞ்சாத்மகோ மாருத ஏவபாணா: ||76

ஏவம்ஸ்திதேஷ்வேவ புராதனேஷு வராத்ரதாங்கத்வம வாபகாம: ||

தத்ஸூனு தாமாபசஸோs னிருத்தோ பிரம்மோத்பவ: ஷங்கதனு: புமாத்மா || 77

தாவேவ ஜாதௌ பரதஸ்சனாம்னா ஷத்ருக்ன இத்யேவச ராமதோsனு ||

 

முதன்முதலில், சத்வ ரஜஸ் தமோகுணாத்மகரான ஸ்ரீபூதுர்கா என்னும் லட்சுமிதேவியரின் மூன்று ரூபங்களில்

 

* தமோ குணாத்மகரான துர்காதேவி, பரமாத்மனின் சக்ர ரூபமாக இருந்தார்.

* ஸத்வ குணாத்மகரான ஸ்ரீதேவி, ஷங்க ரூபத்தில் இருந்தார்.

* ரஜோ குணாத்மகரான பூதேவி, பத்மரூபத்தில் இருந்தார்.

* பல, ஞானத்தால் கூடிய வாயுதேவர், கதா ஆயுதமாக இருந்தார்.

* வித்யா நாமக ரமாதேவி ஷார்ங்க என்னும் தனுஸ்ஸாக இருந்தார்.

* ரமாதேவியே வாளாக இருந்தார்.

* துர்காதேவி, சர்ம ரூபத்திலும்,

* பிராண அபானாதி வாயுதேவர் பாண ரூபத்தில் இருந்தார்.

 

* மன்மதன் தவம் செய்து வரத்தினால் சக்ரத்வத்தை அடைந்தான்.

* மன்மதனின் (பிரத்யும்னனின்) மகனான அனிருத்தன் தவம் செய்து வரம் பெற்று பிரம்மதேவரிடமிருந்து சங்கு ரூபத்தில் பிறந்து, பரமாத்மனின் கையில் சேர்ந்தான்.

 

அவர்கள் இருவரே, பரத, ஷத்ருக்ன என்னும் பெயரால் ராமதேவரை தொடர்ந்து, கைகேயி சுமித்ரையரின் மக்களாக பிறந்தார் என்று சொல்லியிருக்கிறார். இந்த ஆதாரத்தின் பெயரில், மன்மதனே சுதர்ஷனன் என்னும் சக்கரமாக இருந்தான். அவனே பரத, சுதர்ஷன என்னும் இரு ரூபங்கள் என்று ஆதாரம் கொடுக்கிறார்.

 

ஜாம்பவதி குமாரனான சாம்பனே பிரம்மதேவரின் அம்சத்தினால் ஆன மன்மதன். இதற்கு ஆதாரம், நிர்ணய 17ம் அத்தியாயத்தில்:

 

அதாபஸாம்பனாமகம் சுதஞ்சரோஹிணீஹரே: ||220

சதுர்முகாம்ஷ சம்யுதம் குமாரமேவஷண்முகம் ||

 

ஸ்ரீகிருஷ்ணன், ஜாம்பவதி, சத்யபாமாவை திருமணம் செய்து கொண்டபிறகு, ரோஹிணி கிருஷ்ணன் மூலமாக ஸாம்பன் என்னும் குமாரனை பெற்றெடுத்தாள். (ஜாம்பவதிக்கு ரோஹிணி என்று பெயர். ஜாம்பவந்தனின் மகளானதால், ஜாம்பவதி என்று பெயர் பெற்றாள். அவளின் முதல் பெயரே ரோஹிணி). இந்த சாம்பன் முன்பு ஷண்முகன். பிரம்மதேவரின் அம்சத்தினால் பிறந்தவன் என்று சொல்வர். இந்த ஆதாரத்தினால், மன்மதன், பிரம்மதேவரால் ஆன சாம்பன் என்றும், மன்மதனே ஷண்முகன் என்றும், இரு அவதாரங்களுக்கும் நிர்ணய வாக்கியம் உள்ளது.

 

பிரத்யும்னனே மன்மதன் என்னும் விஷயத்தில் நிர்ணய 17ம் அத்தியாயத்தில்:

 

தயார மஜ்ஜநார்தனோ வியோக ஷூன்யயாஸதா ||181

அதத்தபுத்ர முத்தமம்மனோ பவம்புராதனம் ||

சதுஸ்தர்னோஹரே ப்ரபோஸ்த்ருதீய ரூபஸம்யுத: ||182

 

ஸ்ரீகிருஷ்ணன், சாட்சாத் ரமாதேவியின் அவதாரமான ருக்மிணியை திருமணம் செய்து கொண்டான். அவளிடம் பிரத்யும்ன என்னும் மகன் பிறந்தான். அவனே முன்பு மன்மதன். பரமாத்மனின் வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 4 ரூபங்களில் மூன்றாவதான பிரத்யும்ன நாம பரமாத்மனின் அம்சத்தினால், அதே பெயரில் பிறந்தான் என்பதே இதற்கு ஆதாரம். பிரம்மதேவரின் மானஸ புத்ரரான சனகாதி நால்வரில் சனத்குமாரன், சனத்குமார நாமக பரமாத்மனின் அம்சத்தால் கூடிய மன்மதனின் அவதாரம். இவை அனைத்தும் மன்மதனின் அவதாரங்கள் என்று அறியவேண்டும்.

 

ஈரயிது3 கு3ண கடி3மெ பார்வதி

வாருணீயரிகி3ந்த்3ர காம ஷ

ரீர மானிபிராண த3ஷகு3ண அவர ஷக்ரனிகெ3 |

மாரஜா ரதி13க்‌ஷ கு3ரு வ்ரு

த்ராரி ஜாயாஷசி ஸ்வயம்பு4

ஆரு ஜன ம ப்ராணக3வரரு ஹத்து கு3ணதி3ந்த3 ||15

 

பார்வதி, வாருணியரிகெ = பார்வதி வாருணி இவர்களுக்கு

ஈரைதுகுண = 10 குணங்களால்

கடிமெ = குறைந்தவர்

ஷக்ரனிகெ = இந்திரனைவிட

ஷரீரமானி பிராண = அஹங்காரிக பிராணன்

தஷகுணவு = 10 குணங்களால்

அவர = குறைவு

மாரஜ = பிரத்யும்ன ரூபியான மன்மதனின் மகனான அனிருத்தன்

ரதி = மன்மதனின் மனைவியான ரதி

தக்‌ஷ = பிரம்மதேவரின் மகனான தக்‌ஷ ப்ரஜேஷ்வரர்

குரு = பிருஹஸ்பத்யாசார்யர்

வ்ருத்ராரிஜாயா = வ்ருத்ராசுரனின் எதிரியான தேவேந்திரனின் மனைவியான

சசி = சசிதேவி

ஸ்வயம்புவரு = ஸ்வாயம்புவ மனு, இவர்கள்

ஆரு ஜன சம = ஆறு பேரும் சமமானவர்கள்

ப்ராணகெ = அஹங்காரிக பிராணனுக்கு

ஹத்து குணதிந்த அதமரு = 10 குணங்களால் குறைவானவர்கள்.

 

பார்வதி முதலான மூன்று பேர்களைவிட, இந்திரன் மன்மதன் 10 குணங்கள் குறைவானவர்கள். இவர்களைவிட அஹங்காரிக பிராணன் 10 குணங்கள் குறைவானவன். இவனைவிட ரதி, ஸ்வாயம்புவ மனு, பிருஹஸ்பதி, சசி, தக்‌ஷ பிரஜாபதி, பிரத்யும்னனின் மகனான அனிருத்த - இவர்கள் ஆறு பேரும் 10 குணங்களால் குறைவானவர்கள். இந்த ஆறு பேரும் தமக்குள் சமமானவர்கள் ஆவர்.

 

காமபுத்ரனிருத்34 ஸீதா

ராமனானுஜ ஷத்ருஹன ப3

ராமனானுஜ பௌத்ரனனிருத்34 நொளக3னிருத்34 |

காமபா4ர்யா ருக்3மவதி

ந்னாம லக்‌ஷணெ எனிஸுவளு பௌ

லோமி சித்ராங்க3தெ3யு தாரா எரடு3 பெருக3ளு ||16

 

காமபுத்ரனிருத்த = மன்மதனின் மகனான அனிருத்தன்

சீதா ராமனானுஜ = சீதாபதியான ஸ்ரீராமதேவரின் தம்பியான

ஷத்ருஹன = ஷத்ருக்னன். அதாவது, அனிருத்த அவதாரமே ஷத்ருக்னன் என்று அர்த்தம்.

பலராமனானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீகிருஷ்ணன்

பௌத்ரனு = மகனான பிரத்யும்னனின் மகனான

அனிருத்த நொளகெ அனிருத்த = அனிருத்த நாமக பரமாத்மனின் ஆவேசம் உள்ளது

காமபார்யா = மன்மதனின் மனைவியான ரதிதேவியின் அவதாரங்கள்

ருக்மவதி = ருக்மியின் மகளான ருக்மவதி

சன்னாம = உத்தமமான பெயருள்ள

லக்‌ஷணெ = துரியோதனனின் மகளான லக்‌ஷணெ; இந்த இரண்டும் என்று அறிய வேண்டும்.

பௌலோமி = இந்திரனின் மனைவியான ஷசிதேவிக்கு

சித்ராங்கதெயு = பாண்ட்ய தேசாதிபதியான வீரசேனனின் மகளான சித்ராங்கதை

தாரா = வாலியின் மனைவியான தாரை

எரடு பெசருகளு = இந்த இரு அவதாரங்களிலும் இரு பெயர்கள் இருக்கின்றன என்று அறியவேண்டும்.

 

ப்ரத்யும்னனின் மகனான அனிருத்தனே ஷத்ருக்னன் என்னும் விஷயத்தில், மன்மதனின் அவதாரங்களை சொல்லும் சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டிருக்கும் நிர்ணய ஸ்லோகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். மன்மதன் தவம் செய்து சக்ரத்வத்தை அடைந்தான். அவனின் மகனான அனிருத்தன் சங்கு ஆனான். அவர்கள் இருவரே, பரத ஷத்ருக்னர்களாக பிறந்தனர் என்று சொல்வதால், ஷங்காத்மகனான அனிருத்தனே ஷத்ருக்னன் என்று தெளிவாகிறது. அனிருத்தனில் அனிருத்த நாமக பரமாத்மனின் அம்சம் இருக்கிறது என்ற பிறகு, அதே அனிருத்தனே ஷத்ருக்ன நாமத்தினால், ஷத்ருக்னனிலும், அனிருத்த நாமக பரமாத்மனின் அம்சம் இருக்கிறது என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.

 

மன்மதனின் மனைவியான ரதிதேவி, ருக்மிணியின் அண்ணனான ருக்மியின் மகளாக பிறந்து, பிரத்யும்னனின் மனைவியானாள். இன்னொரு ரூபமே துரியோதனின் மகளான லக்‌ஷணாதேவி. நிர்ணய 19ம் அத்தியாயத்தில் தஸ்யாம் ஸுதந்த்வஜனயத்புரு அஸயோக்‌ஷ: கன்யாம்புராப்ரியதயாம் சஷடானனஸ்ய’. முன்பு கலியின் மனைவியான அலக்‌ஷ்மி, காசிராஜனின் மகளாக பிறந்தாள். அவளை துரியோதனன் திருமணம் செய்துகொண்டு அவளிடம், முன்பு ராவணனின் மகனான அக்‌ஷயகுமாரனையே, லட்சண என்னும் பெயருள்ள மகனாகப் பெற்றான். அவர்களுக்கு இன்னொரு பெண்ணும் பிறந்தாள். அவளின் பெயர் லக்‌ஷணை. அவள் முன்பு ஷண்முகனின் மனைவியாக இருந்தவள். ஷண்முகன், மன்மத அவதாரம் என்று முன்பு பார்த்தோம். ஷண்முகனே மன்மதன் என்னும் விஷயத்தில் இன்னொரு ஆதாரம் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 22ம் அத்தியாயத்தில்:

 

துர்யோதனஸ்யாஸ புத்ரீரதிர்யா பூர்வம் நாம்னா லக்‌ஷணாகாந்தரூபா ||

ஸ்வயம்வரஸ்தாம் தாம்பலா தேவஸாம்போ ஜக்ராஹ ஸாசைனமாஸானுரக்தா ||231

 

துரியோதனனுக்கு மகளான லக்‌ஷணா என்பவள், முன்பு ரதிதேவி. அவளுக்காக ஸ்வயம்வரத்தை நடத்தியபோது, ஜாம்பவதியின் குமாரனான சாம்பன் பலாத்காரத்துடன் அபகரித்தான். அந்த லக்‌ஷணையும் இவனிடம் அன்பு கொண்டிருந்தாள் என்று சொல்கின்றனர்.

 

இந்த வாக்கியத்தினால், மேற்சொன்ன ஆதாரத்தில் ஷண்முகனின் மனைவியே லக்‌ஷணை என்றார். இந்த ஸ்லோகத்தில் அவளே ரதிதேவி என்று கூறுகிறார். ஷண்முகனின் அவதாரம் சாம்பன் என்று முன்பு கூறினார். அவனே இந்த லக்‌ஷணை என்னும் ரதிதேவியை திருமணம் செய்துகொண்டான் என்றபிறகு, ஷண்முகனே மன்மதன் என்றும், அவனே சாம்ப, மற்றும் பிரத்யும்ன என்னும் இந்த இரு ரூபங்களால் பிறந்து, ரதிக்கு முதலாம் அவதாரமான ருக்மியின் மகளான ருக்மவதியை பிரத்யும்னனும், ரதிக்கு இரண்டாம் அவதாரமான லக்‌ஷணையை, சாம்பனும் திருமணம் செய்து கொண்டனர் என்பது கருத்து.

 

சசிதேவியின் அவதாரங்களை சொல்கிறார். பாண்ட்ய தேசாதிபதியான வீரசேனனின் மகள் சித்ராங்கதை. இவளே சசிதேவியின் அவதாரம். மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 20ம் அத்தியாயத்தில்:

 

ஸம்வத்ஸராந்தே பல்குனஸ்யானுரூபா சித்ராங்கதா வீரஸேனேன தோஷாத் |

ஸவீரஸேனஸ் த்வஷ்ப்ருரம்ஷோய மஸ்யாவேஷயுக் ஸாசகன்யாஷசீஹி ||161

 

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டு பாண்டிய தேசத்திற்கு வந்தான். அந்த தேசத்தின் அதிபதியான வீரசேன ராஜன் தன் மகளான சித்ராங்கதையை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொடுத்தான். அந்த வீரசேனன், த்வஷ்டா என்னும் சூர்யனின் அம்சத்தைக் கொண்டிருந்தான். மற்றும் யமனின் ஆவேசமும் அவனில் இருந்தது. அவனின் மகளான சித்ராங்கதை, இந்திரனின் மனைவியான சசிதேவியே ஆகும். ஆனால், அவளுக்கு திருமணம் ஆகி, அவளுக்கு பப்ருவாஹனன் பிறக்கும் வரை, அவளிடம் இருந்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டான் அர்ஜுனன்.

 

நிர்ணய வாக்கியம்:

தாராதேஹே ஸூர்யஜஸ்யாங்க சங்காத் ஸ்வர்காம்னாயா தந்தரிக்‌ஷாதிஹாஸீத் |

தேனைவ ஹேதூர்னாஷி ஸாமீப்யமாஸீத் || 161

 

முன்னர் வாலியின் மனைவியாக தாரையாக இருந்தபோது, சூர்ய புத்ரனான சுக்ரீவனின் அங்க சங்கம் இவளுக்கு ஆன தோஷத்தினால், அப்போது அவள் ஸ்வர்க்கத்திற்குச் செல்லாமல், அந்தரிக்‌ஷ லோகத்தில் இருந்துவிட்டு, பின் சித்ராங்கதையாக பிறந்தாள். அந்த காரணத்தினாலேயே அர்ஜுனனுக்கும் சித்ராங்கதைக்கும் அதி சாமீப்யம் இருக்கவில்லை என்று சொல்கிறார். வாலி என்னும் கபி இந்திராவதாரி. அவன் மனைவி தாரை. அவளே சசிதேவி என்று மேலே பிரமாணத்தின் மூலம் பார்த்தோம். இப்படியாக சசிதேவிக்கு இரு ரூபங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

 

தார நாமக த்ரேதெயொளு ஸீ

தா ரமண நாராதி4ஸி3னு

மீரயுக்தோத்34வனு க்ருஷ்ணகெ3 ப்ரீயனெனிஸி3னு |

வாரிஜானயுக்த த்3ரோணனு

மூரிளெயொளு ப்3ருஹஸ்பதிகெ3 அவ

தாரவெம்ப3ரு பா4ரத மஹாதாத்பரியதொ3ளகெ3 ||17

 

தார நாமக = தார என்னும் கபி

த்ரேதெயொளு = த்ரேதா யுகத்தில்

ஸீதாரமண = சீதாபதியான ஸ்ரீராமசந்திரன்

ஆராதிசிதனு = பூஜித்தான்

ஸமீரயுக்த = வாயுதேவரின் ஆவேசத்தினால் கூடிய

உத்தவன்,

க்ருஷ்ணகெ ப்ரீயனெனிஸிதனு = கிருஷ்ணனுக்கு மிகவும் அன்பானவன்

வாரிஜாசனயுக்த = பிரம்ம ஆவேசத்தைக் கொண்ட

த்ரோணனு = த்ரோணாசார்யர்

இளியொளு = இந்த பூமியில்

ப்ருஹஸ்பதிகெ = ப்ருஹஸ்பத்யாசார்யருக்கு

மூரு அவதார = மூன்று அவதாரங்கள்

பாரத மஹாதாத்பர்யதொளகெ = மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில்

எம்பரு = என்றிருக்கிறார்

 

ப்ருஹஸ்பத்யாசார்யருக்கு மூன்று அவதாரங்கள். த்ரேதாயுகத்தில் ராமதேவரின் சேவைக்காக தார என்னும் கபியாக அவதரித்தார். மகாபாரத தாத்பர்ய நிர்ணய 3ம் அத்தியாயத்தில்:

 

ப்ருஹஸ்பதிஸ்தார உதோசசி ச ஷக்ரஸ்ய பார்யைவ பபூவதாரா ||70

ப்ருஹஸ்பதி பிரம்மசுதோபி பூர்வம் ஸஹைவஷ ச்யுமனஸோபிஜாத: |

பிரம்மோத்தவஸ்யாங்கிரஸ: ஸுதோபூன்மாரீச ஜஸ்வைவஷ சேபுலோம்ன: ||71

ஸ ஏவஷச்யா ஸஹவானரோபூத் ஸ்வஸம்பவோதேவ குருப்ருஹஸ்பதி: ||

 

ப்ருஹஸ்பத்யாசார்யர் தார என்றும், இந்திரனின் மனைவியான சசிதேவி தாரை என்றும் அண்ணன் தங்கையாக பிறந்தனர். இந்த தாரையே இந்திராவதாரனான வாலியின் மனைவி. ப்ருஹஸ்பத்யாசார்யர் முன்னர், பிரம்மதேவரின் மகனாக இருந்தாலும், பிரம்மதேவரின் மனதால் சசிதேவியுடனேயே பிறந்தார். ஆகையால், அப்போதும் அண்ணன் தங்கையாகவே பிறந்திருந்தார். நடுவில் ஒரு பிறவி வேறு சரீரமாக இருந்தார். பிரம்மதேவரின் மக்களான அங்கிரஸ என்னும் ரிஷியிடம் ப்ருஹஸ்பத்யாசார்யர் பிறந்தார். மரீசி ரிஷியின் மக்களான கஷ்யபரிடம், தனூதேவி மூலமாக பிறந்த புலோம என்னும் தானவனின் மகளாக சசிதேவி பிறந்தாள். ஆகையாலேயே, சசிதேவிக்கு பௌலோமி என்று காரணப் பெயர் வந்தது. அப்போது அதே ப்ருஹஸ்பத்யாசார்யர், சசிதேவியுடன், வானர ரூபமாக பிறந்தார்.

 

ஆகையால், தேவகுருவான ப்ருஹஸ்பத்யாசார்யரே தார என்னும் கபியாக பிறந்தாரே தவிர, ப்ருஹஸ்பத்யாசார்யரின் மகன் தார என்னும் அர்த்தம் வருவதில்லை என்பது கருத்து. வாயுதேவரின் ஆவேசத்தால், ப்ருஹஸ்பத்யாசார்யரே த்வாபர இறுதியில் ஸ்ரீகிருஷ்ணனின் சேவைக்காக பிறந்தார். மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 12ம் அத்தியாயத்தில்:

 

ப்ருஹஸ்பதி: பூர்வமபூத்தரே: பதம்ஸம்ஷேவிதும் பவனாவேஷயுக்த: ||100

ஸ உத்தவோனாம யதுப்ரவீராக்ஞதோ வித்வானுபகவ நாமதேயாத் ||

த்ரோணாத்மகம்னாதிதராம் ஸ்வஸேவகம் குர்யாத்தரிர்யாமிதி பூய ஏவ | 101

ஸ உத்தவாத்மாவததார யாதவேஷ்டா ஸேவனார்த்தம் புருஷோத்தமஸ்ய ||

 

ப்ருஹஸ்பத்யாசார்யர் பரமாத்மனின் சேவையை செய்வதற்காக த்ரோணாசார்யராக பிறந்திருந்தாலும், அதில் திருப்தி அடையாமல், வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்டு, யாதவ தலைவனான உபவகவன என்பவனிடம், உத்தவ என்னும் பெயரில் பிறந்தார். அது எதற்கு என்றால்: த்ரோண ரூபியான தன்னை ஸ்ரீஹரி தனக்கு ப்ரியமான சேவகனாக ஆக்கிக்கொள்வான் என்று நினைத்து ஸ்ரீகிருஷ்ணனுக்கு நன்றாக சேவை செய்யவேண்டும் என்னும் ஆசையில், உத்தவ என்னும் பெயரில் யாதவரிடம் பிறந்தார் -- என்று கூறியிருக்கிறார்.

 

முதலாம் அவதாரம் தார என்னும் கபி. இரண்டாவது உத்தவன். மூன்றாவது த்ரோண என்பது, உத்தவனின் அவதாரத்தை விளக்கும் சந்தர்ப்பத்தில் கொடுத்த ஆதாரத்தின்படி தெரிய வருகிறது. த்ரோண ரூபியான என்னை ஸ்ரீகிருஷ்ணன் மிகவும் அன்பான சேவகனாக ஆக்கிக்கொள்வான் என்று சிந்தித்து, யாதவர்களில் உத்தவனாக பிறந்தான் என்னும் பிரமாணத்தாலும், உத்தவனும் த்ரோணாசார்யரின் சமகாலத்தவர்கள் ஆவர். அதில் த்ரோணாசார்யர் முதலில் பிறந்தார் என்றும் உத்தவன் பின்னர் பிறந்தவர் என்றும் நிர்ணயாதி ஆதாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

 

ஆனால், தாசார்யர் ஏன் இதற்கு விரோதமாக முதலில் தார, இரண்டாவது உத்தவ, பிறகு த்ரோண என்று கூறினார் என்றால், அவரின் அபிப்பிராயம், ப்ருஹஸ்பத்யாசார்யருக்கு மூன்று அவதாரங்கள் என்று சொல்வது மட்டுமே தவிர, அந்த அவதாரத்தின் கிரமங்களை அவர் சொல்லவில்லை. ஆகையால், இதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்பது கருத்து. த்ரோணாசார்யரே ப்ருஹஸ்பத்யாசார்யர் என்பதற்கு ஆதாரம்: நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

யதைவ ஜாத: ஸக்ருத ஸ்ததைவ ப்ருஹஸ்பதே: ஸூனுரகாச்சகங்காம் |

ஸ்னாதும் ப்ருதாசீம் ஸததர்ஷதத்ர ஷ்லதத்துகூலாம் ஸுரவர்ய காமினீம் ||64

தத்தர்ஷனாத் ஸ்கன்னமதேந்த்ரியம் ஸத்ரோணே ததாராஷு ததோபவத்ஸ்வயம் |

அம்போஜஜாவேஷயுதோ ப்ருஹஸ்பதி: கர்தும் ஹரே:கர்மபுவோ பரோத்ருதௌ ||65

த்ரோணேதினாமாஸ்யச காரணாதோ ||

 

எப்போது க்ருபாசார்யர் பூமியில் பிறந்தாரோ, அதே காலத்தில் ப்ருஹஸ்பத்யாசார்யரின் மக்களான பாரத்வாஜர், ஸ்னானம் செய்வதற்காக கங்கைக்கு வந்தார். அந்த சமயத்தில், அங்கு முன்னரே வந்திருந்த, க்ருதாசி என்னும் அப்ஸர ஸ்த்ரியை பார்த்தார். ஸ்னானம் செய்வதால் அவளின் ஆடை விலகியிருந்தது. அவளை பார்த்த உடனேயே, இவருக்கு இந்திரிய ஸ்கலிதம் ஆனது. அந்த வீர்யத்தை தன் பாத்திரத்தில் பிடித்தார். அங்கிருந்தே ப்ருஹஸ்பத்யாசார்யர், பிரம்மதேவரின் ஆவேசத்தினால், ஸ்ரீபரமாத்மனின் பூபார ஹரணத்தின் காரியத்தில் உதவுவதற்காக பிறந்தார். அவரின் தந்தையான பரத்வாஜர் இவருக்கு த்ரோண என்று பெயர் வைத்தார் -- என்று கூறுகிறார்.

 

இந்த வாக்கியங்களை உத்தேசித்து தாசார்யர் இந்த அவதார ஆவேசங்களை மகாபாரத தாத்பர்யதொளகெ என்றார். அதாவது, நிர்ணயத்தில் சொல்லியிருப்பதாக கூறினார். ஆகையால், நிர்ணயத்தின் மூல ஸ்லோகங்கள் இங்கு அர்த்த சஹிதமாக எழுதியிருக்கிறோம்.

 

மனுமுகா2த்3யரிகி3ந்த ப்ரவஹ

கு3ணதி3 பஞ்சக நீசனெனிஸு

இன ஷஷாங்கதரு த4ர்ம மானவி எரடு3 கு3ணதி3ந்த3

கனியரெனிபரு ப்ரவஹகி3ந்தலி

தி3னப ஷஷி யமத4ர்ம ரூபக3

ளனுதி3னதி3 சிந்திபரு ந்தரு ர்வகாலத3லி ||18

 

மனுமுகாத்யரிகிந்த = ஸ்வாயம்புவ மனு முதலான 6 பேர்களைவிட

 

ப்ரவஹ = ப்ரவஹ வாயு

பஞ்சககுணவு = 5 குணங்கள்

நீசனெனிஸுவ = குறைவானவன்

இன = சூர்ய

ஷஷாங்ககரு = சந்திர இவர்கள் இருவரும்

தர்ம = யமதர்மன்

மானவி = மனுவின் மனைவியான ஷதரூபா; இவர்கள் அனைவரும்

ப்ரவஹகிந்தலி = ப்ரவஹ வாயுவைவிட

எரடு குணதிந்த = இரு குணங்களால்

கனீயரெனிபரு = குறைந்தவர் எனப்படுகிறார்

தினப = சூரியன்

சசி = சந்திரன்

யமதர்மரூபகளனு = இவர்களின் ரூபங்களை

சந்தரு = சஜ்ஜனர்கள்

அனுதினதி = தினந்தோறும்

ஸர்வகாலதலி = எப்போதும்

சிந்திபுது = நினைக்க வேண்டியது.

 

சங்கர்ஷண ஒடெயரின் வியாக்யானத்திலும், உடுப்பியில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும்கூட, இந்த பத்யத்தில் மனுமுக்யாத்யரகிந்த ப்ரவஹா குணகளத்வய நீசனெனிஸுவஎன்று இருக்கிறது. கமலாபதி தாசரின் வியாக்யான புத்தகத்தின் மூலத்தில் மனுமுகாத்யரகிந்த ப்ரவஹா குணவு பஞ்சக நீசனெனிஸுவஎன்று இருக்கிறது. இந்த வேறுபாட்டில், கமலாதி தாசரின் புத்தகத்தில் இருக்கும் பாடமே சரியானது என்று தோன்றுகிறது.

 

எப்படியெனில், குண தாரதம்ய சந்தி என்னும் 20ம் சந்தி, 6ம் பத்யத்தில்: மாரஜாத்யரிகைது குணதிந்தம ப்ரவஹாக்யஎன்று சொல்லியிருப்பது, அனைத்து புத்தகங்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. தற்போது தாசார்யர், அந்த சந்தியில், மாரசாத்யரு என்றால், அனிருத்த, ரதி, மனு, குரு, தக்‌ஷ, சசி என்று காம புத்ரனான அனிருத்தவில் தொடங்கி 6 பேரைவிட 5 குணங்கள் குறைவு ப்ரவாஹ வாயு என்று சொல்லியிருந்தார்.

 

இந்த சந்தியில் மனுமுக்யாத்யரிகிந்த ப்ரவஹா குணகளத்வய நீசனெனிஸுவ’ - மனு, சசி, முதலான 6 பேரைவிட இரு குணங்கள் குறைவு என்று கூறினால், தாசார்யரின் வாக்கியங்களிலேயே வேறுபாடு வந்துவிடுகிறது. ஆகையால், ‘குணகளத்வயஎன்பது பஞ்சக என்று இருக்கும் பாடமே சரியானது என்று நினைக்கிறோம்.

 

ஸ்வாயம்புவனு, ப்ருஹஸ்பத்யாசார்யர், காம புத்ரனான அனிருத்த, ரதி, சசி, தக்‌ஷ, என இவர்கள் ஆறு பேர்களைவிட ஏகோனபஞ்சாஷன் (49) மருத்கணத்தில் சேர்ந்த ப்ரவஹவாயு 5 குணங்களால் குறைவு எனப்படுகிறார். இவனைவிட சந்திரன், சூர்ய, யம, ஷதரூபாதேவி (மனு பத்னி) இவர்கள் 2 குணங்கள் குறைவு எனப்படுகிறார்கள். சூர்ய, சந்திர, யம இவர்களை தினந்தோறும் நினைத்தால், யமதேவரின் சிந்தனையால் பாப பரிகாரம் ஆவதுடன், யம-பாதெ (மரண பயம்) குறைகிறது. சூரியனின் ஜபங்களை, மந்திரங்களை சொல்வதால் அனைத்து அபீஷ்டங்களும் கிடைத்து, அனைத்து நோய்களும் கிடைப்பது மட்டுமல்லாமல், காலத்திற்கு மழையும் பொழிகிறது. சந்திரனின் ஸ்மரணையால் போகங்களை அனுபவிப்பர் என்று பற்பல பாகவத வாக்கியங்களால் தெரிய வருகிறது.

 

மருதனாவேஷயுத த4ர்மஜ

கரடி3 விது3ரனு த்யஜிது ஈ

ரெரடு34ர்மனரூப பி3ரம்மாவிஷ்ட ஸுக்3ரீவ |

ஹரிய ரூபாவிஷ்ட கர்ணனு

தரணிகெ3ரட3வதார சந்த்3ரம

ஸுரபனாவேஷயுத அங்க3த நெனிஸி கொளுதிப்ப ||19

 

தர்மன = யமதர்மனுக்கு

மருதனாவேஷயுத = வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்ட

தர்மஜ = தர்மராஜனின் அவதாரம் ஒன்று

கரடி = ஜாம்பவந்த என்னும் ரூபம் - இரண்டாவது.

விதுர - மூன்றாவது

ஸத்யஜித் = மூன்றாம் மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்தவன் - நான்காவது

இப்படி,

ஈரெரடுரூப = நான்கு அவதாரங்கள்

தரணிகெ = சூரியனுக்கு

பிரம்மாவிஷ்ட = பிரம்மதேவரின் ஆவேசத்தைக் கொண்ட

சுக்ரீவ = சூக்ரீவ என்னும் கபி ரூப ஒன்று

ஹரியரூபாவிஷ்ட கர்ணனு = பரமாத்மனின் ஆவேசத்தைக் கொண்ட கர்ண ரூப ஒன்று

எரடவதார = என்று 2 அவதாரங்கள்

சந்த்ரம = சந்திரன்

சுரபனாவேஷயுதனு = இந்திரனின் ஆவேசத்தைக் கொண்ட

அங்கதனெனிஸி கொளுதிப்ப = அங்கதன் என்று அழைக்கப்படுகிறான்.

 

யமதர்மனுக்கு 4 அவதாரங்கள். குந்தி புத்ரனான தர்மராஜனின் ரூபம் 1. இவனில் வாயுதேவரின் ஆவேசம் இருந்தது. மகாபாரத தாத்பர்ய நிர்ணய 12ம் அத்தியாயத்தில்:

 

இதீரிதேதயாயம: ஸமாகுதோகமத்ருதம் || 32

ததஸ்ச ஸத்ய ஏவஸாஸுஷாவ புத்ரமுத்தமம் |

யுதிஷ்டிரம் யமோஹிஸ: ப்ரபேத ஆத்மபுத்ரதாம் ||33

 

கணவனின் ஆணைப்படி குந்திதேவி, மந்திர பலத்தினால் யமதேவரை அழைத்தாள். உடனடியாக யமனும் அங்கு வந்தான். குந்தியும் அதே கணத்தில் யமன் மூலமாக ஒரு புத்திரனைப் பெற்றாள். அவனே யுதிஷ்டிரன். அவனே யமதர்மன். யமன், குந்தியில் தானே மகனாகப் பிறந்தான். என்னும் வாக்கியம், யமனே தர்மராஜன் என்னும் விஷயத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இவனில் வாயுதேவரின் ஆவேசம் இருக்கிறது என்னும் விஷயத்தில், மகாபாரத தாத்பர்ய நிர்ணய 12ம் அத்தியாயத்தில் 129ம் ஸ்லோகத்தில்:

 

யுதிஷ்டிராத்யேஷு சதுர்ஷுவாயு: ஸமாவிஷ்ட: பல்குனேதோவிசேஷாத் ||129

யுதிஷ்டிரே ஸௌம்யரூபேணவிஷ்ட: வீரேணரூபேண தனஞ்சயேஸௌ ||

 

தர்மராஜன் முதலான நால்வரில்; அதாவது, பீமசேனதேவர் ஸ்வயம் வாயுதேவரே ஆனதால், அவரைத் தவிர மற்ற பாண்டவர்களில், தர்மராஜ, அர்ஜுன, நகுல, சகாதேவ இந்த நால்வரில் வாயுதேவர் நிலைத்திருந்தார். அதிலும் அர்ஜுனனில் விசேஷமாக நிலைத்திருந்தார். தர்மராஜனிடம் வாயுதேவர் சௌம்ய ரூபத்தில் நிலைத்திருந்தார். அர்ஜுனனில் வீர ரூபத்தில் இருந்தார். இத்யாதி வாக்கியங்களால், தர்மராஜனில் வாயு ஆவேசம் இருந்தது என்று தெரிகிறது.

 

யமதர்மனுக்கு கரடி அவதாரம் என்றால், ஜாம்பவந்தனின் அவதாரம் ஒன்று. மகாபாரத தாத்பர்ய நிர்ணய மூன்றாம் அத்தியாயத்தில்:

 

யஏவபூர்வம் பரமேஷ்டிஸ்சவக்‌ஷ ஸஸ்வகுத்பவோதர்ம இஹாஸ்யதோ பவத் ||66

யஏவ சூர்யத்புனரேவ சஞ்ஞயாம் நாம்னாயமோதக்‌ஷிணதிக்‌ஷ ஆசீத் ||

ஸராம்பவான் தெய்வத கார்யதர்ஷினா புரைவஸ்ருஷ்டோமுகத: ஸ்வயம்புவா ||67

 

எந்த தர்மன் முன்னர், பிரம்மதேவரின் வக்‌ஷஸ்தலத்தின் ரோமத்திலிருந்து பிறந்தானோ, அதே தர்மனே மறுபடி பிரம்மதேவரின் வாயிலிருந்து தற்போது பிறந்தான். மற்றும் யார் முன்னர் விவஸ்வான் என்னும் சூரியன் - சஞ்ஞாதேவியில் யம என்று பிறந்து, தக்‌ஷிண திக்பாலகன் என்று சொல்லிக் கொள்கிறானோ, அதே யமதர்மரே தேவதா காரியங்களை முன்னரே அறிந்திருக்கும் பிரம்மதேவரின் முகத்திலிருந்து முன்னரே ஸ்ருஷ்டிக்கப்பட்டிருந்தார். அவனே ஜாம்பவந்தன். இந்த பிரமாணத்திலிருந்து ஜாம்பவந்தன், யம அவதாரி என்பது தெளிவாகிறது.

 

விதுரன் தர்மராஜன் என்னும் விஷயத்தில், மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 11ம் அத்தியாயத்தில்:

 

தஸ்யாம்ஸதேவோ ஜனிதர்மராஜோ மாண்டவ்யஷாபாத்ய உவாஹசூத்ரதாம் ||

வசிஷ்ட ஸாம்யம்ஸமபீப்ஸமானம் ப்ரச்யாவயன்னிச்சயா ஷாபமாப ||136

 

வேதவியாஸ என்றால், தாயான சத்யவதியின் வாக்கியத்திற்கேற்ப விசித்ரவீர்யனின் மனைவியரான இருவரில், அம்பிகை த்ருதராஷ்டிரன் என்னும் கண் பார்வையற்றவனையும், இரண்டாமவளான அம்பாலிகை பாண்டு மகாராஜா என்பவனையும், வேதவியாஸ தேவரின் தொடுதல் மூலமாகவே பெற்றனர். இருவரில் மூத்தவன் குருடன், அடுத்தவன் சுத்தமான வெண்மை நிறத்தவனாகவும் இருந்தார்கள். இதனைக் கண்ட சத்யவதி, நிர்தோஷியான இன்னொரு குமாரனைப் பெறவேண்டும் என்று வேதவியாசதேவரை வேண்ட, அவரின் ஒப்புதலின் பேரில் மூத்த மருமகளான அம்பிகையிடம் -- நீ வேதவியாசரைக் கண்டு பயந்து கண் மூடிவிட்டதால், உன் மகன் குருடனானான். இப்போது அப்படி செய்யாதே. வேதவியாசரை பக்தியுடன் வணங்குஎன்று கூறினாள்.

 

ஆனால் அவளோ மேலும் பயந்து, தன் தாசியான சூத்ர ஸ்த்ரியை தன்னைப் போல அலங்கரித்து வேதவியாசரிடம் அனுப்பினாள். அவளும் மிகவும் பக்தியுடன் வேதவியாசதேவரை சேவித்தாள். சூத்ர ஸ்த்ரியரில் யமன் பிறப்பதற்கு என்ன காரணம் என்றால்: மாண்டவ்ய என்னும் ஒரு ரிஷி, தான் வசிஷ்டருக்கு சமமாக வேண்டும் என்று விரும்பி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், அந்த நாட்டு ராஜனின் வீட்டில் திருடர்கள் வந்து பொருட்களை திருடிச் சென்றனர். ராஜ சேவகர்களும், அந்த திருடர்களை துரத்தி வருகையில், அந்த திருடர்கள், இந்த மாண்டவ்ய ரிஷிகளின் ஆசிரமத்தில் நுழைந்தனர்.

 

அப்போது மாண்டவ்யர், சமாதி நிலையில் தியானத்தில் இருந்ததால், சுய நினைவுடன் இருந்திருக்கவில்லை. ஆசிரமத்தில் நுழைந்த ராஜ சேவகர்கள், தியான நிலையில் மெய் மறந்திருந்த மாண்டவ்யரைப் பார்த்து, அவரும் திருடனோ என்று நினைத்து, அந்த திருடர்களுடன் இவரையும் கட்டி இழுத்துப் போனார்கள். அரசன் திருடர்களுக்கு விதித்த சிறை தண்டனை இவருக்கும் கிடைத்தது. அப்போதும் இவர் சமாதி நிலையிலேயே இருந்தார். மற்ற திருடர்கள் அனைவரும் இறந்தனர். இவர் சமாதி நிலையிலிருந்து வெளி வந்தார். தான் சிறையில் இருப்பதைக் கண்டு, அங்கிருந்த சேவகர்களை அழைத்து, உங்கள் அரசனை அழையுங்கள் என்றார்.

 

அரசனும் நடந்த தவறினை உணர்ந்து, ஓடோடி வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தான். அவர் உடலில் பாய்ந்திருந்த த்ரிசூலத்தை எடுக்க முடியாமல் போக, வெளியில் தெரிந்த சூலத்தை மட்டும் கத்தரிக்க, மிச்ச பாகங்கள் மாண்டவ்யரின் உடலிலேயே தங்கியது. இதனால் அவருக்கு அணிமாண்டவ்ய என்ற பெயர் வந்தது. மாண்டவ்யனும், இது அரசன் கொடுத்த தண்டனை அல்ல. யமதேவரின் ப்ரேரணையால் தனக்கு இந்த தண்டனை கிடைத்தது என்று எண்ணி, அரசனை மன்னித்து, அங்கிருந்து யமதேவரிடம் வந்து, தனக்கு சிறை தண்டனை கிடைத்ததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

 

தனக்கு தகுதியில்லாத வசிஷ்ட பதவியை அவர் விரும்பியதே சரியான காரணமாக இருந்தாலும், இவர் செய்த அதிக தவத்தினை குறைப்பதற்காக, யமதேவர் இவருக்கு கோபத்தை ஏற்படுத்தி, தான் சாபம் பெறுவதற்காக நீங்கள் பால்யத்தில் கிருமி, பூச்சிகளுக்கு துன்பம் ஏற்படுத்தினீர்கள். ஆகையால் உங்களுக்கு சிறை தண்டனை கிடைத்ததுஎன்று பொய் கூறினான். இது அவரின் தவ வலிமையை குறைப்பதற்காக கூறிய பொய் ஆகையால், யமதேவருக்கு பொய் கூறியதால் எந்த தோஷமும் வரவில்லை.

 

மாண்டவ்யர் கோபம் கொண்டு, ‘நான் சிறுவயதில் தவறு செய்திருந்தாலும், அதற்கான தண்டனை இதுவல்ல. நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாய். ஆகையால், நீ பூமியில் சூத்திரனாக பிறப்பாய்என்று சாபம் கொடுத்தார். ஆகையால், மாண்டவ்யரின் தவ பலன் குறைந்தது. இப்படி இவரின் தவ வலிமையை குறைப்பதற்காக, பொய் சொல்லி, அவரிடம் சாபம் பெற்றான். அதனாலேயே, வேதவியாஸ தேவரின் மூலமாக ஒரு சூத்ர ஸ்த்ரியரிடம் யமதர்மன் விதுரனாக பிறந்தார். அவர் தர்ம நிரதனாக, மகாஞானியாகவே இருந்தார். வித்யாரதேர் விதுரோனாமசாயம்’ - வித்யைகளை கற்றறிந்தவனாக இருந்தால், அவனுக்கு விதுரன் என்று பெயர் வந்தது -- என்று கூறினார்.

 

யமதர்மனுக்கு சத்யஜித் என்று ஒரு அவதாரம் உண்டு. அது எப்போது? எந்த காலத்தில்? என்றால், விஷ்ணு ரஹஸ்ய 27ம் அத்தியாயத்தில்:

 

த்ருதீயேத்வந்தரே ப்ரம்மனுத்தமோதாம வைமனு: ||4

ய:ஸ்தனாதபவத்விஷ்ணோ: ஸதமஸ்த்ரிந்த்ரதாம்கத: ||

சத்யஜின் நாமவிக்யாதோ தர்மாதஜனிய: ஸ்வயம் ||5

 

ப்ரியவ்ரத ராஜனின் மகன் உத்தவன். முன்னர் யார் தர்மஸ்தனாத்தக்‌ஷிணத:என்னும் பாகவத வாக்கியத்திற்கேற்ப பரமாத்மனின் வலது ஸ்தனத்திலிருந்து பிறந்தானோ, அதே தர்மனே, சத்யஜித் என்னும் பெயரில் பிறந்து இந்த மூன்றாம் மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்தான்.

 

சத்யஜித் என்பவன் யமனின் அவதாரம் என்பதற்கு இதுவே ஆதாரம்.

 

இப்படியாக யமதர்மனுக்கு 4 அவதாரங்கள்.

 

சூரியனுக்கு இரு அவதாரங்கள். பிரம்மதேவரின் ஆவேசத்தைக் கொண்ட சுக்ரீவ என்னும் கபியின் ரூபம் 1. இந்த விஷயத்தில் ஆதாரம், மகாபாரத தாத்பர்ய நிர்ணய மூன்றாம் அத்தியாயத்தில் : சுக்ரீவ ஆஸீத்பரமேஷ்டி தேஜஸாயுதோரவி: ||66. பிரம்மதேவரின் ஆவேசத்தைக் கொண்டு சூரியன், சுக்ரீவ என்னும் பெயரில் பிறந்தார் என்று சொல்லியிருக்கிறார். இரண்டாம் அவதாரம் கர்ணன். நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

அதாஸஸாத பாஸ்கர: ||

ஸதத்ரஜக்ஞிவான் ஸ்வயம்த்விதீய ரூபகோவிபு: ||

ஸவ்ர்மதிவ்ய குண்டலோ ஜ்வலன்னிவஸ்வதேஜஸா ||156

புராஸவாலிமாரண ப்ரபூததோஷகாரணாத் ||

ஸஹஸ்ரவர்மனாமினா சுரேணவேஷ்டிதோsஜனி ||157

யதாக்ரஹைர் விதூஷ்யதே மதிர்ன்ருணாம் ததைவஹி ||

அபூச்சதைத்ய தூஷிதாமதிர் திவாகராத்மன: ||158

ததாபி ராமஸேவனாத் தரேஷ்ச சன்னிதானயுக் ||

சுதர்ஷனீய கர்ணத: சகர்ணனாம கோபவத் ||159

 

குந்திதேவி தன் மந்திரத்தால் அழைக்க, சூரியன் அங்கு வந்து, தானே இன்னொரு ரூபத்தினால், கர்ண குண்டலங்களுடன், திவ்யமான கவசங்களுடன், தன் தேஜஸ்ஸினால் ஒளிர்ந்தவாறு, பிறந்தான். ஆனால், முந்தைய பிறவியில் சுக்ரீவனாக இருந்து, வாலியைக் கொன்ற பாவத்தினால், சஹஸ்ரவர்ம என்னும் தைத்யனின் ஆவேசத்தைக் கொண்டிருப்பதால், எப்படி மனிதர்களுக்கு பேய் பிடித்தால், புத்தி கெட்டு விடுகிறதோ, அதைப் போலவே இவனுக்கும் புத்தி கெட்டுப் போயிருந்தது. அப்படியிருந்தாலும், முந்தைய பிறவியில் ராமசேவையை செய்து புண்ணியம் பெற்றிருப்பதால், பரமாத்மனின் சன்னிதானத்தைக் கொண்டிருந்தான். இவனின் காதுகள், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்க்க அழகாக இருந்ததால், இவனுக்கு கர்ணன் என்று பெயர் வந்தது. இப்படியாக சூரியனுக்கு இரு அவதாரங்கள்.

 

சந்திரன், இந்திரனின் ஆவேசத்தைக் கொண்டு, அங்கத என்னும் கபியாக பிறந்தான். மகாபாரத தாத்பர்ய நிர்ணய 3ம் அத்தியாயத்தில்:

 

பிரம்மோத்பவ: ஸோம உதாஸ்யசூரோரத்ரேரபூத் ஸோங்கத ஏவஜாத: ||68

இந்த்ரோங்கதேச்சைவத தொங்கதோஹி பலினிதாந்தம் ஸபபூவ ஷஷ்வத் ||78

 

முன்னர் பிரம்மதேவரின் மகனாக இருந்த சந்திரனே, பிரம்மதேவரின் மக்களான அத்ரி ரிஷிகளின் மகனாகி பிறந்தான். அவனே மறுபடி அங்கதன் என்று வாலியின் மகனாகி பிறந்தான், என்று 78ம் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். அதே அத்தியாயம் 68ம் ஸ்லோகத்தில், அங்கதனில் இந்திரனின் ஆவேசமும் இருந்தது. ஆகையால், அங்கதன் மிகவும் பலசாலியாக இருந்தான் என்று சொல்லியிருக்கிறார். இந்த அபிப்பிராயத்தையே தாசார்யரும் ஸுரபனா வேஷயுதனங்கதஎன்று சொல்லியிருக்கிறார்.

 

தரணிகி3ந்த3லி பாத3 பாத3ரெ

வருணனீசனு மஹபி4ஷக் த3

ர்து3ஸுஷேணனு ஷந்துனுவு நால்வரு வருணரூப |

ஸுரமுனி நாரத3னு கிஞ்சி

த்கொரதெ வருணகெ3 அக்3னி ப்4ருகு3 அஜ

கொ3ரள பத்னி ப்ரஸுதி மூவரு நாரத3னிக34||20

 

தரணிகிந்தலி = சூரியனைவிட

பாதபாதரெ = 1/4ல் 1/8 பாகம் (அல்லது ரூபாய் கணக்கில் 6 அணா எனலாம்)

வருண நீசனு = வருணன் குறைவானவன்

மஹபிஷக் = மஹாபிஷக் என்னும் ராஜனின் அவதாரம் ஒன்று

தர்துர = தவளையின் ரூபம் ஒன்று

சுஷேண = சுஷேண என்னும் கபி ரூபம் ஒன்று

ஷந்தனுவு = ஷந்தனு சக்ரவர்த்தி ரூபம் ஒன்று

நால்வரு = இந்த நான்கு அவதாரங்கள்

வருணரூப = வருணனின் அவதாரங்கள்

ஸுரமுனி = தேவரிஷியான நாரதர்

வருணகெ = வருணனைவிட

கிஞ்சித் = சிறிது பாகம்

கொரதெ = குறைவானவர்

அக்னி, ப்ருகு,

அஜ கொரள பத்னி = ஆட்டுத் தலை கொண்ட தக்‌ஷ பிரஜேஸ்வரனின் மனைவியான ப்ரஸூதி

மூவரு = இந்த மூவரும்

நாரதனிகெ = நாரத முனிவரைவிட

அதம = குறைவானவர்கள்.

 

சூரியனைவிட 6 அணா பாகம் குணங்களால் வருணன் குறைவானவன். வருணனுக்கு 4 அவதாரங்கள். மஹாபிஷக் என்னும் அரசனாக பிறந்தது ஒரு அவதாரம். வருணன் அரசனாக பிறப்பதற்கு என்ன காரணம் என்றால்: மகாபாரத தாத்பர்ய நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

பூர்வோததேஸ்தீர கதேsப்ஜ ஸ்ம்பவே கங்காயுத: பர்வணிகூர்ணிதோப்தி: |

அவாக்‌ஷிபத்தஸ்ய தனௌ நிஜோதபிந்தும் ஷஷாபைனமதாப்ஜ யோனி: ||16

மஹாபிஷக்ஞ மனரேஷ்வரஸ்வம் பூத்வாபுன: ஷந்தனு நாமதேய: ||

ஜனிஷ்யஸே விஷ்ணுபதீததைஷா தத்ராபிபார்யாபவதோ பவிஷ்யதி ||17

ஷாந்தோபவேத்யே வமயோத்தஸ்வம் தனுத்வமாப்தோஸி ததஸ்சஷந்தனு: ||

இதீரித: ஸோதன்ருபோ பபூவ மஹாபிஷக்ஞமஹரே: பதாஸ்ரய: ||18

ஸதத்ர புக்த்வாசிரகால முர்னிந்தனும் விஹாயாப ஸதோவிதாது: ||

தத்ராபிதிர்ஷ்ட சுரவ்ருந்த சன்னிதௌ ததர்ஷகங்காம் ஷ்சதிதாம்பராம்ஸ்வகாம் ||19

அவாங்மகேஷுத்யுஸதஸ்ஸு கங்காம் நிரீக்‌ஷ்யமாணம் புனராத்மஸம்பவ: ||

உவாசபூமௌ ந்ருபதிர்பவாஷு ஷப்தோயதா த்வம் ஹி புராமதைவ ||20

இதீரிதஸ்தக்‌ஷணத: ப்ரதீபாத்பபூவ நாம்னான்ருபதிஸ்ச ஷந்தனு: ||

 

ஒரு நாள், ஒரு பர்வ காலத்தில், பிரம்மதேவர், கிழக்கு கடற்கரைக்கு வந்தார். அப்போது சமுத்திரன் (வருணன்), கங்கா சங்கமத்தினாலும், பர்வ காலமாகையாலும், அதிகமான அலைகளுடன் இருந்தான். பிரம்மதேவரின் மேல் நீர்த்துளிகளை தெளித்தான். அப்போது பிரம்மதேவர் கோபத்துடன் ஹே வருணனே. நீ பூமியில் மஹாபிஷக் என்னும் அரசனாகப் பிறந்து, சிறிது காலத்தில் அந்த தேகத்தை விட்டு, அடுத்து ஷந்தனு என்னும் பெயரால் ராஜகுமாரனாகி பிறப்பாய். அப்போதும் கங்கை உனக்கு மனைவியாவாள். ஷாந்தனாகு என்று என்னால் சொல்லப்பட்டதால், அப்போது உனக்கு ஷந்தனு என்ற பெயர் கிடைக்கும் என்று பிரம்மதேவர் சாபம் கொடுத்தார்.

 

அதன்படியே, சமுத்திரராஜனான வருணன், பரமாத்மனின் பக்தனாகி மஹாபிஷக் என்னும் பெயரில் ராஜனாகி பிறந்து, பூமியில் வெகுகாலம் அரசாண்டு வந்தான். பிறகு அந்த தேகத்தை விட்டு பிரம்மலோகத்திற்கு சென்று சேர்ந்தான். அங்கு ஒரு நாள் சபையில் அனைவரும் அமர்ந்திருக்க, மஹாபிஷக் ராஜனுக்கு மனைவியான கங்கையின் ஆடை, திடீரென்று விலக, அங்கிருந்த தேவதைகள் அனைவரும் னனக்னாம் ஸ்த்ரீயமீக்‌ஷேதவஸ்திரம் இல்லாத ஸ்த்ரியை பார்க்கக்கூடாது என்னும் பிரமாணத்திற்கேற்ப தலை குனிந்தனர். ஆனால் இந்த ராஜன் மட்டும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது பிரம்மதேவர், ‘நான் உனக்கு முன்னர் கொடுத்த சாபத்தின்படி, இப்போது நீ பூமியில் அரசனாகப் பிறஎன்று சாபம் கொடுத்தார். அதன்படி, அவன், ப்ரதீப ராஜனின் மகனாக, ஷாந்தனு என்னும் பெயரில் பிறந்து, தன் முந்தைய மனைவியான கங்கையையே மணம் புரிந்து வெகு காலம் வாழ்ந்து வந்தான் என்று சொல்லியிருக்கிறார்.

 

இந்த வாக்கியங்களால், மஹாபிஷக் 1, ஷந்தனு சக்ரவர்த்தி 2; என வருணனின் இரு அவதாரங்களின் காரணம் தெரிய வருகிறது. தர்மர என்று ஒரு அவதாரம் என்று சொல்கிறார். தர்மர என்றால் தவளை. வருணன், தவளை ரூபத்தில் பரமாத்மனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்தான் என்று மாண்டூக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மண்டூகரூபீ வருணஸ்துஷ்டவ ஹரிமவயம்’. வருணன் மண்டூக என்றால் தவளை ரூபத்தில் ஹரியை ஸ்தோத்திரம் செய்தான் என்று அர்த்தம். ஆகையால், மூன்றாம் அவதாரம் தவளை.

 

சுஷேண என்னும் கபிரூபம் ஒன்று. நிர்ணய 3ம் அத்தியாயம் 70ம் ஸ்லோகத்தில் அபூத்ஸுஷேணோவருண:வருணன், சுஷேணன் என்னும் பெயரால் பிறந்தான் என்று சொல்லியிருக்கிறார். இப்படியாக வருணனுக்கு 4 ரூபங்கள்.

 

தேவரிஷியான நாரதர், வருணனைவிட சிறிது குறைவானவர். நாரதரைவிட அக்னி, ப்ருகு ரிஷிகள், தக்‌ஷ ப்ரஜேஷ்வரனின் மனைவியான ப்ரஸூதி இவர்கள் மூவரும் குறைவானவர்கள். தக்‌ஷனுக்கு அஜகொரள என்று பெயர். ருத்ரதேவரை அவமானம் செய்வதற்காக இவன் யாகத்தை துவக்க, ருத்ரரின் மனைவியான சதிதேவி, அங்கு வந்து, தக்‌ஷன், ருத்ரதேவர் மேல் இருந்த த்வேஷத்தால் அவளை புறக்கணிக்க, அத்துடன் யாகத்தில் ருத்ரருக்கு ஆஹுதி கொடுக்காமல் அவர்களை அவமானம் செய்தான். தந்தையான தக்‌ஷனை சதிதேவி பலவிதமாக நிந்தித்து, அவள் தேகத்தை அங்கேயே விட்டுவிட்டாள்.

 

ருத்ரதேவர் இந்த சம்பவத்தை அறிந்து தக்‌ஷனின் யாகத்தை த்வம்சம் செய்து, தக்‌ஷனின் தலையை கத்தரித்து அக்னியில் ஆஹுதியைக் கொடுத்தார். அப்போது பிரம்மதேவர் வந்து, ருத்ரதேவரின் கோபத்தை அமைதிப்படுத்தி, தக்‌ஷனை மறுபடி பிழைக்க வைக்குமாறு சொல்ல, ருத்ரதேவரும் பிரம்மதேவரின் ஆணைப்படி, தக்‌ஷனை பிழைக்க வைத்தார். தலையை ஆஹுதி கொடுத்து விட்டதால், தக்‌ஷன் தலையில்லாமல் இருந்தார். ஒரு ஆட்டின் தலையை அவனுக்குக் கொடுத்து உயிரையும் கொடுத்தார். ஆகையால், அவனுக்கு அஜகொரளஎன்று பெயர் வந்தது.

 

நீல த்3ருஷ்டத்3யும்ன லவ இவு

லேலிஹானன ரூபக3ளு ப்4ருகு3

காலொத்து3த்33ரிந்த3 ஹரியனு வ்யாத4னெனிஸித3ரு |

ஏளு ரிஷிக3ளிகு3த்தமரு முனி

மௌளி நாரத334ம மூவரு

கா3ளியுத ப்ரஹ்லாத3 பாஹ்லிக ராயனெனிஸி3னு ||21

 

நீல = நீல என்னும் கபி

த்ருஷ்டத்யும்ன = த்ருபத ராஜனின் மகன்

லவ = ராமதேவரின் மகன்

ஈ = இந்த மூவரும்

லேலிஹாலன ரூபகளு = அக்னியின் அவதாரங்கள்

ப்ருகு = ப்ருகு ரிஷிகள்

ஹரியனு = ஸ்ரீமன் நாராயணனை

காலலொத்துத்தரிந்த = காலால் எட்டி உதைத்ததால்

வ்யாதனெனிஸிதரு = ஜரா என்னும் வேடனாக பிறந்தார்

மூவரு = அக்னி, ப்ருகு, ப்ரஸூதி என்னும் மூவர்

ஏளு ரிஷிகளிகெ = பிரம்மதேவரின் மக்களான மரீசி முதலான ஏழு ரிஷிகளைவிட

உத்தமரு = உத்தமர்கள்

முனிமௌளி = ரிஷிகளில் சிறந்தவரான

நாரதகெ = நாரதனுக்கு அதமர்கள்

காளியுத = வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்டு

ப்ரஹ்லாத = ப்ரகலாத ராஜர்

பாஹ்லிக ராயனெனிஸிதரு = பாஹ்லிக ராஜன் என்று அழைக்கப்பட்டார்.

 

அக்னிக்கு மூன்று அவதாரங்கள். ராமாவதாரத்தில் நீல என்னும் கபி ரூபம் 1. ‘நீலோக்னி ராஸீத்என்பது நிர்ணய வாக்கியம். இரண்டாவது த்ருஷ்டத்யும்ன ரூபம். நிர்ணய 18ம் அத்தியாயத்தில்:

 

புத்ரஞ்ச த்ரோணஹந்தார மிச்சன் விப்ரவரௌ யயௌ |

யாசோப யாஜாவா நீயாதார்புதேன கவான்ருப: ||93

சகாரேஷ்டிம் து தத்பார்ய த்விஜாப்யாமத்ர ஜாஹுதா ||

த்ருபதாத்ஸுத லப்த்யர்த்தம் பத்ன்யாப்ராஷ்யம் ஹவிஸ்ததா ||94

ஹுதேஹவிஷயம் த்ராப்யாம் வைஷ்ணவாப்யாம் ததைவஹி |

தீப்தாம் காரனிபோ வன்ஹி: குண்ட மத்யாத்ஸ முத்தித: ||95

கிரீடி குண்டலீ தீப்தோ ஹேமமாலி மஹாஸியான் ||

ரதேனாதித்ய வர்ணேன நதன் த்ருபத மத்ரவத் ||96

த்ருஷ்யத்வாத்யோதனத்வா ச்ச த்ருஷ்டத்யும்ன: இதீரித: ||

 

பீமார்ஜுனர் மூலமாக த்ரோணாசார்யர், த்ருபத ராஜனை போரில் தோற்கடித்து, அவனின் பாதி ராஜ்ஜியத்தை தான் எடுத்துக் கொண்டு அனுப்பினார். த்ருபத ராஜன், தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் இரவும் பகலுமாக துடித்து, பீமார்ஜுனர்களின் பலத்தை, அர்ஜுனனில் இருக்கும் பண்பினையும் பார்த்து, அர்ஜுனனுக்குக் கட்டி வைப்பதற்காக ஒரு பெண்ணையும், த்ரோணாசார்யரை கொல்வதற்கு ஒரு மகனையும் வேண்டி, யாஜோப யாஜ என்னும் பிராமணோத்தமரிடம் வந்து, அவருக்கு 10 கோடி பசுக்களை கொடுத்து, தன் நோக்கம் நிறைவேறுவதகான ஒரு யாகத்தை செய்தான்.

 

அந்த அண்ணன், தம்பிகளான யாஜ, உபயாஜ இருவரும், புத்ர சந்தானத்தைக் கொடுக்கக்கூடிய ஹவிஸ்ஸினை அபிமந்திரித்து, த்ருபத ராஜனின் மனைவியிடம் அதை கொடுக்கவேண்டி அவளை அழைத்தனர். அவளோ வருகிறேன் இருங்கள் என்று சொல்லி, தன் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தாள். அவளின் மனதில், அரசகுமாரர்களை தானே பெறவேண்டும் என்றும், தானோ ராணி, இவரோ சாதாரண புரோகிதர்கள், எனக்காக இவர்கள் காத்திருக்கட்டும் என்று எண்ணினாள். அந்த பிராமணோத்தமர்களோ, இவளின் கர்வத்தை அறிந்து, இவளால் நமக்கு ஆவது என்ன என்று நினைத்து, அவளுக்காக அபிமந்திரித்து வைத்திருந்த இரு ஹவிஸ்ஸினையும், விஷ்ணு மந்திரத்தை சொல்லி, அக்னியிலேயே போட்டு விட்டனர்.

 

உடனடியாக, அக்னியே அந்த குண்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டான். திவ்யமான கிரீட, குண்டலங்கள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட, கையில் வாளேந்தி, ரதத்தில் அமர்ந்தவாறு, எதிரிகளை கொன்றுவிடுவதைப் போல ஒருவன் வர, அவனுக்கு த்ருஷ்டத்யும்னன் என்று பெயர் வைத்தனர். அக்னி குண்டத்தில் இருந்த கட்டையிலிருந்து திரௌபதி பிறந்தாள். அக்னிக்கு த்ருஷ்டத்யும்ன ரூபம் இரண்டாவதாகும் என்று இதிலிருந்து தெரிகிறது.

 

அடுத்த அவதாரம் ஸ்ரீராமதேவரின் மகனான லவ. இதைப் பற்றி, முன்னர், இந்திரனின் அவதாரங்களை சொல்லும்போது, இந்திரன் குஷனாகவும், அக்னி லவனாகவும் இருவரும் இரட்டையர்களாக சீதையிடம் பிறந்தனர் என்று சொல்லி, ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே ஆதாரங்களே லவ என்னும் அக்னியின் அவதாரத்திற்கும் பொருந்தும்.

 

பிரம்மா சிவ விஷ்ணுவில் யார் உத்தமர் என்று பார்ப்பதற்காக வந்த ப்ருகு ரிஷிகள், பிரம்மதேவருக்கு நமஸ்காரம் செய்யாமல் இருக்க, பிரம்மதேவருக்கு கோபம் வந்ததையும் அதை அவர் பொறுத்துக் கொண்டார் என்பதையும் அறிந்து, அடுத்து சிவனிடம் சென்றார். அவரோ பார்வதியுடன் சம்போகத்தில் இருந்ததால், அதே சிந்தனையில் ப்ருகு ரிஷிகளையும் ஆலிங்கனம் செய்ய வந்தார். ப்ருகு ரிஷிகள் கோபம் கொள்ள, ருத்ரரும் ப்ருகுவை கொல்ல வந்தார். அடுத்து அங்கிருந்து ரிஷிகள், விஷ்ணுவின் இடத்திற்கு வந்து, அங்கு அவர் படுத்திருப்பதைக் கண்டு, அவரை காலால் உதைக்க, பரமாத்மன் உடனடியாக எழுந்து, ப்ருகு ரிஷிகளை உபசரித்தார்.

 

இதனைக் கண்ட ப்ருகு ரிஷிகள், ஹரியே சர்வோத்தமன், பிரம்மதேவர் மத்யமர் என்றும், ருத்ரதேவர் இவர்களைவிட குறைவானவர் என்றும் உலகத்தில் பெயர் பெறட்டும் என்று கூறியதாக கதைகள் சொல்கின்றன. இந்தக் கதை பாகவதத்திலும், பவிஷ்யோத்தர புராணத்திலும்கூட இருக்கிறது.

 

பாதப்ரஹாரதோஷேண ப்ருகுந்துவ்யாததாங்கதம் |

ஸ்வாஞ்ஞாப்ராப்த விமானேன திவம் நின்யே ஜநார்த்தன: ||

 

பரமாத்மனை காலால் எட்டி உதைத்த தோஷத்தால் ப்ருகு ரிஷி ஜரா என்னும் வேடனாக பிறந்ததை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், அவனை தன்னுடைய விமானத்தில் அமர்த்தி ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான் என்று பாகவத 11ம் ஸ்கந்தத்தின் இறுதி அத்தியாயத்தின் தாத்பர்யத்தில் சொல்லியிருக்கிறார். அதே அபிப்பிராயத்தையே இங்கு சொல்லியிருக்கிறார்.

 

இப்படியாக, அக்னி, ப்ருகு ரிஷி, ப்ரஸூதி இவர்கள் மூவரும் பிரம்மதேவரின் மக்களான, இதே 23ம் பத்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் மரீசி முதலான சப்த ரிஷிகளைவிட உத்தமர் எனப்படுகின்றனர். இவர்கள் நாரதரைவிட குறைவானவர்கள். இந்த மூவருக்கு சமனான பிரகலாதன், வாயுதேவரின் அம்சத்தைக் கொண்டு, பால்ஹிக ராஜராக பிறந்தார். நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

புத்ரிகாபுத்ரதாம்யாதோ பால்ஹிகோ ராஜஸத்தம: |7

ஹிரண்யகஷிபோ: புத்ர: ப்ரஹ்லாதோ பகவத்ப்ரிய: ||

பாயுனாசஸமா விஷ்ணோ மஹாபலஸன்வித: ||8

யேனைவஜாயமானேன தரஸாபூர் விதாரிதா ||

பூபாரக்‌ஷபணே விஷ்ணோ ரங்கதாமாப்துமேவஸ: ||9

ப்ரதீப புத்ரதாமாப்ய பால்ஹிகேஷ்ட பவத்பதி: ||

 

குருவம்சத்து ராஜனான ப்ரதீபனுக்கு, தேவாபி, பால்ஹிக, ஷந்தனு என்று மூன்று மக்கள் இருந்தனர். மகளைக் கொடுத்து, மருமகனை தனக்கே கொடுக்க வேண்டும் என்று முதலிலேயே நிச்சயித்து, பெண் கொடுப்பதற்கு புத்ரிகாபுத்ரதர்ம என்று பெயர். அதன்படியே, ஹஸ்தினாபுரத்து அரசனான ப்ரதீப ராஜனின் மகனான பால்ஹிக ராஜன், தன் தாயின் தந்தையான, பால்ஹிக தேஷாதிபதிக்கு புத்ரிகாபுத்ர தர்மத்தால் கொடுக்கப்பட்டு, அந்த நாட்டிற்கு அரசனானான்.

 

ஹிரண்யகஷ்யபுவின் மகனான மஹா பகவத்பக்தனான பிரகலாதன், வாயுதேவரின் ஆவேசத்தினால், மஹா வீரனாக, பால்ஹிக என்னும் பெயரில் பிறந்தார். இவன் பிறந்து, பூமியின் ஸ்பர்சம் ஆனபோது, பூமியின் அந்த பாகத்தில் பிளவு ஏற்பட்டது. பரமாத்மன் பூமியில் கிருஷ்ணாவதாரம் செய்து, பூமியின் பாரத்தைக் குறைக்கும் செயலில் ஈடுபடுவதற்கு, தன்னாலான சேவை இதுவே என்று சொல்வதைப் போல இச்செயல் இருந்தது. ப்ரதீப ராஜனின் மகனாகப் பிறந்து, பால்ஹிக தேசத்திற்கு அதிபதியானார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

ஜனப கர்மஜரொளகெ3 நாரத3

முனியனுக்3ரஹ ப3லதி3 ப்ரஹ்லா

3னல ப்4ருகு3முனி த3க்‌ஷபத்னிகெ3 மனெனிஸிகொம்ப3 |

மனு விவஸ்வான் கா3தி4ஜேர்வரு

அனலகி3ந்தலி கிஞ்சிதா14

ரெணெ எனிஸுவரு ப்தருஷிக3ளிகெ3ல்ல காலத3லி ||22

 

ஜனப கர்மஜரொளகெ = முன்னர் அரசனாக இருந்து கர்மத்தினால் தேவத்வத்தைப் பெற்றவர்கள், கர்மஜர் என்று அழைக்கப்படுகின்றனர். கர்மதேவதைகளில் ஒருவனான பிரஹ்லாதன்

நாரத முனியனுக்ரஹ பலதி = நாரத முனிவரின் உபதேசத்தின் பலனாக

அனல = அக்னி

ப்ருகுமுனி,

தக்‌ஷபத்னி = ப்ரஸூதிதேவி; இவர்களுக்கு

சமனெனிஸிகொம்ப = சமம் எனப்படுகிறார்.

மனுவிவஸ்வான் = விவஸ்வான் என்னும் சூரியனின் மகனான வைவஸ்வத என்னும் மனு

காதிஜ = காதி ராஜனின் மக்களான விஸ்வாமித்ர ரிஷிகள்

ஈர்வரு = இந்த இருவரும்

அனலதிந்தலி = அக்னியைவிட

கிஞ்சித்தமகெ = சிறிது குறைவான

ஸப்த ரிஷிகளிகெ = மரீசி முதலான ஏழு ரிஷிகளுக்கு

எல்லகாலதலி = அனாதி முதல் அனந்த காலங்களில்

எணெ எனிஸுவரு = சமம் எனப்படுகின்றனர்.

அனலகிந்தலி கிஞ்சிதாதமரெணெ எனிஸுவரு ஸப்தரிஷிகளிகெஎன்றும் ஒரு பாடம் இருக்கிறது. அந்த அர்த்தத்தில், வைவஸ்வத மனு, விஸ்வாமித்ர இவர்கள் இருவரும் அக்னியைவிட சிறிது குறைவானவர்கள்; சப்த ரிஷிகளுக்கு சமர் என்று அர்த்தம். 

 

அரசனாக இருந்து தேவத்வத்தை அடைந்த; கர்மதேவதைகளில் ஒருவனான பிரகலாதன், அக்னி முதலானவர்களுக்கு எப்படி சமம் ஆனான் என்றால், இவன் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே நாரதரின் அருளால் பகவன் மகிமைகளை உபதேசம் செய்திருந்தார். ஆகையால், அதிகமான பகவத் பக்தியால் இந்த அக்னி முதலான மூவருக்கு சமமானார் என்று அறிய வேண்டும். வைவஸ்வத மனு, விஸ்வாமித்ரர் இவர்கள் இருவரும் அக்னி முதலான மூவரைவிட சிறிது குறைவானவர்கள். மரீசி முதலான 7 ரிஷிகளுக்கு அனைத்து காலங்களிலும் சமம் எனப்படுகின்றனர்.

 

கமலம்ப4வ ப4வரெனிப ம்

யமி மரீசியு அத்ரி அங்கி3

ஸுமதிபுலஹா க்ரது வஸிஷ்ட புலஸ்த்யமுனி ஸ்வாஹா

ரமணக34மரு மித்ர நாமக

த்3யுமணி ராஹூயுக்த பீ4ஷ்மக

யமளரூபனு தார நாமகனெனிப த்ரேதெயொளு ||23

 

கமலசம்பவ = பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்த பிரம்மதேவர்

பவரெனிப = பிறந்தவர் எனப்படும்

ஸம்யம = இந்திரியங்களை வென்றவரான

மரீசியு, அத்ரி, அங்கிரஸ,

சுமதி = ஞானிகளான

புலஹ, க்ரது, வசிஷ்ட, புலஸ்த்ய, ஆகிய 7 பேர் முனிவர்களும்

ஸ்வாஹா ரமணகெ = அக்னிக்கு

அதமரு = குறைவானவர்கள்

மித்ர நாமகத்யுமணி = மித்ர என்னும் சூரியன்

ராஹுயுக்த பீஷ்மக = ராகு அம்சத்தினால் பீஷ்மக என்ற பெயரில் பிறந்தார்

த்ரைதெயொளு = த்ரேதாயுகத்தில்

தார நாமகனெனிஸி = தார நாமகளாக இருந்து

யமளரூபனு = இரு ரூபங்களைக் கொண்டிருந்தான்.

 

பிரம்மதேவரின் மக்களான மரீசி, அத்ரி, அங்கிரஸ, புலஹ, க்ரது, வசிஷ்ட, புலஸ்த்ய இந்த ஏழு பேர்களும், அக்னி முதலான மூவரைவிட குறைவானவர்கள். மித்ர என்னும் சூரியனுக்கு இரு ரூபங்கள். த்ரேதா யுகத்தில் தார நாமகனாக இருந்தான். ஆனால், ப்ருஹஸ்பத்யாசார்யர், தார என்னும் கபி ஆனார் என்று தாசார்யர் வாக்கியத்திலிருந்தும், நிர்ணய வாக்கியத்திலிருந்தும் தெரிகிறது. ஆகையால், மித்ரன், தார என்னும் இன்னொரு கபியாக இருந்தான் என்று அறிய வேண்டும். இதற்கு சரியான ஆதாரம் நமக்கு கிடைக்கவில்லை.

 

தாசார்யர், அபரோக்‌ஷ ஞானிகளாகையால், அனேக கிரந்தங்களை படித்தவராகையால், எந்த கிரந்தத்தின் ஆதாரத்தின் பேரில் இந்த அவதாரத்தை எழுதினார் என்று கண்டுபிடிப்பது, நம் போன்ற மந்த புத்திக்கு புலப்படவில்லை. ஸ்ரீசங்கர்ஷண ஒடெயரின் வியாக்யானத்திலும் தார என்னும் இவர் இன்னொருவர்; ப்ருஹஸ்பத்யாசார் ஆன தார என்னும் கபி வேறு என்று மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. அவரும் ஆதாரத்தை எழுதவில்லை.

 

கமலாபதி தாசரின் வியாக்யானத்தில் தாரனாமகனெனிஸிஎன்னும் பதத்திற்கு ப்ருஹஸ்பத்யாசார்யரின் மனைவி தாரைக்கு க்ருபி என்னும் அவதாரம் இருக்கிறது என்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கோ தார என்னும் ஆண்பால் பெயர் இருக்கிறது. வியாக்யானத்தில் தாரை என்று பெண்பால் பெயரை சொல்லியிருக்கிறார். இது மூலத்திற்கும், வியாக்யானத்திற்கும் சரியாக பொருந்துவதில்லை. வெவ்வேறு புத்தகங்களில் பாடங்கள் வேறாக இருக்கலாமோ என்னும் சந்தேகமும் வருகிறது. எப்படியோ, இதற்கான முடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

மித்ர என்னும் சூரியனுக்கு மற்றொரு அவதாரம் பீஷ்மகராஜனின் அவதாரம். இவனில் ராகுவின் ஆவேசம் இருக்கிறது. நிர்ணய 14ம் அத்தியாயத்தில்:

 

ய:பூர்வமாஸதிதி சோனரஹேல்வலாப்யோ ருக்மீதி நாமச பபூவ ஸ குண்டினேஷ: ||90

பாகேத ஏவதனயஸ்ய ஸஏவ வன்ஹேர் நாம்னா ஷுசீஸ்ஸசபிதாஸ்யஹி மித்ரபாக: ||

ராஹ்வம்ஷயுக் ததனுஜௌ க்ரதகைஷிகாக்யௌ ||

 

முன்னர் மனிதர்களைக் கொன்று வந்த இல்வல என்னும் அசுரனே, ருக்மி என்னும் பெயரில் பிறந்து, குண்டினபுர அதிபதியாக இருந்தான். இவனில் ஷுசி என்னும் அக்னியின் அம்சம் இருந்தது. இவனின் தந்தையான பீஷ்மக ராஜன், ராகு அம்சத்தைக் கொண்ட மித்ர என்னும் சூரியன் என்று அறியவேண்டும் -- என்கிறார்.

 

நிருதிகெ3ரட3வதார து3ர்முக2

ஹரயுத க4டோத்கசனு ப்ராவஹி

கு3ரு மட3தி3தாரா மரு பர்ஜன்யகு3த்தமரு |

கரிகொ3ரள ம்யுக்த ப433

த்தரஸு கத்12ன த4னபரூபக3

ளெரடு3 விக்4னப சாருதே3ஷ்ணனு அஷ்வினிக3ளு ||24

 

நிருதிகெ = நிரருதிக்கு

துர்முக = துர்முக என்னும் கபி ரூபம் ஒன்று;

ஹரயுத = ருத்ரதேவரின் ஆவேசத்தைக் கொண்ட கடோத்கஜ

எரடு அவதார = என்று இரு அவதாரங்கள்

ப்ராவஹி = ப்ரவஹ வாயுவின் மனைவியான ப்ராவஹி

குருமடதி = ப்ருஹஸ்பத்யாசார்யரின் மனைவி

தாரா = தாரா தேவி

ஸமரு = முந்தைய பத்யத்தில் பார்த்த மித்ர என்னும் சூரியன், நிரருதி, ப்ராவஹி, தாரை இந்த நால்வரும் சமர்.

பர்ஜன்யகுத்தமரு = பர்ஜன்யனை விட உத்தமர்கள்

கனப = குபேரனுக்கு

கரிகொரள = நீலகண்டன் எனப்படும்

ஹரயுக்த = ருத்ரதேவரின் அம்சத்தைக் கொண்ட

பகதத்தரஸு = நரகாசுரனின் மகனான பகதத்தன்

கத்தன = கத்தனன் என்னும் கபி ரூபம் ஒன்று; என்று இரு ரூபங்கள்

விக்னப = கணபதியின் அவதாரம்

சாருதேஷ்ண = சாருதேஷ்ண என்னும் கிருஷ்ணனின் மகனின் ரூபம்

இந்த கணபதி, குபேரன்,

அஸ்வினிகள சம = அஸ்வினி தேவதைகளுக்கு சமமானவர்கள்.

 

நிர்ருதிக்கு துர்முக என்னும் கபி ரூபம் ஒன்று. கடோத்கஜ என்னும் ரூபம் இன்னொன்று. என மொத்தம் இரு ரூபங்கள் இருக்கின்றன. பீமசேனதேவரின் மகனான கடோத்கஜனில், ருத்ரதேவரின் ஆவேசம் இருந்தது. இந்த நிரருதிக்கு சமர், ப்ரவஹ வாயுவின் மனைவி. ப்ராவஹி, ப்ருஹஸ்பத்யாசார்யரின் மனைவி தாரை. இவர்கள் இருவரும் பர்ஜன்யனைவிட 2 குணங்கள் உத்தமர்கள். தாரதம்ய கௌஸ்துபத்தில் சொல்லப்பட்டிருக்கும் :

 

மஹாபலீ ருக்முகஸ்ச ருத்ரயுக்தோ கடோத்கச: |

த்வாவேதௌனிர்ருதி: பூர்வம் ||

 

என்னும் வாக்கியம் நிர்ருதியின் அவதாரங்களுக்கு ஆதாரம் என்று அறியவேண்டும்.

 

குபேரனுக்கு கத்த என்னும் கபி ரூபம் மற்றும் நரகாசுரனின் மகன் பகதத்தனின் ரூபம் ஒன்று, என மொத்தம் இரு ரூபங்கள். ஸகத்தனோவித்தபதி:என்று நிர்ணய 8ம் அத்யாயத்தில் சொல்லியிருக்கிறார். பகதத்தனில் ருத்ரதேவரின் அம்சம் இருந்தது. நிர்ணய 11ம் அத்தியாயத்தில்

 

வித்தேஷ்வர: பூர்வமபூத்தி பௌமாந்தரே: ஸுதத்வேபி ததிச்சயாஸுராத் ||

பாபேன தேனாபஹ்ருதோ ஹி ஹஸ்தே ஷிவப்ரதத்த: ஸுப்ரதீகாபிதான: ||32

ததர்த்தமேவாஸ்ய ஸுதொபிஜாதோ தனேஷ்வரோ பகதத்தாபிதேய: ||

மஹா ஸூரஸ்யாம்ஷயுத: ஸ ஏவ ருத்ராவேஷாத் பலவானஸ்த்ரவாம்ஸ்ச ||

 

கிருஷ்ணாவதாரத்திற்கு முன்னர், தேவதைகள் அனைவரும் அவனின் சேவைகளை செய்வதற்காக அவர்களும் பிறக்க வேண்டும் என்று பிரம்மதேவரின் ஆணை வந்தது. இதற்கு என்ன காரணம் என்றால், குபேரனுக்கு ருத்ரதேவர் கொடுத்திருந்த சுப்ரதீக என்னும் யானையை, பாபியான நரகாசுரன் அபகரித்திருந்தான். அந்த யானையைப் பெறவேண்டும் என்பதற்காக, குபேரன், பகதத்தன் என்னும் பெயரில் நரகாசுரனின் மகனாகப் பிறந்தான். நரகாசுரன் உயிருடன் இருந்த வரை, பகதத்தனிடம் நரகாசுரனின் ஆவேசம் இருந்தது. நரகாசுரன் இறந்தபிறகு, அசுராவேசம் மறைந்தது. இவனில், ருத்ர ஆவேசமும் இருந்ததால், மிகப்பெரிய வீரனாக இருந்தான் என்று கூறுகிறார்.

 

இப்படி குபேரனுக்கு இரு அவதாரங்கள். விக்னேஸ்வரனுக்கு ஒரேயொரு அவதாரம். நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

பைஷ்ம்யா அபிசாருதேஷ்ண: ||

ஸசாருதேஷ்ணோபிஹி விக்னராஜ: ||

 

ஸ்ரீகிருஷ்ணன் - ருக்மிணியரிடம் சாருதேஷ்ணை என்னும் மகன் பிறந்தான். அந்த சாருதேஷ்ணையே முன்னர் விக்னேஷ்வரன் என்று சொல்கிறார். இதே வாக்கியத்தையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார். இந்த குபேரன், கணபதி, அஸ்வினி தேவதைகளுக்கு சமம் எனப்படுகிறான்.

 

த்3ரோண த்4ருவ தோ3ஷா2ர்க அக்3னி

ப்ராண த்3யு விபா4ஸு3ளெண்டு க்ரு

ஷானு ஸ்ரேஷ்ட த்3யுனாம வஸுபீ4ஷ்மார்ய பி3ரம்மயுத |

த்3ரோண நாமக நந்த3கோ3ப ப்ர

தா4ன அக்3னியனுளிது3 ஏளு

மானரெனிபரு தம்மொளகெ3 ஞானாதி3 கு3ணதி3ந்த3 ||25

 

த்ரோண, த்ருவ, தோஷ, அர்கனு, அக்னி, ப்ராண, த்யு, விபாவசு - ஆகியோர்

வசுகளெண்டு = எட்டு பேர் வசுக்கள்

க்ருஷானு ஸ்ரேஷ்ட = இவரில் முக்கியமானவன் அக்னி

த்யு நாமவஸு = த்யு என்னும் பெயருள்ள வசு

பிரம்மயுத = பிரம்மதேவரின் அம்சத்தைக் கொண்டவன்

பீஷ்மார்ய = பீஷ்மாசார்யர் என்று பிறந்தான்.

த்ரோண நாமக = த்ரோண என்னும் வசு

நந்தகோப = நந்தகோபனாக பிறந்தான்

ப்ரதான அக்னியனுளிது = எட்டு வசுக்களில் ப்ரதானனான அக்னியைத் தவிர

ஏளு = மற்ற ஏழு பேர்

தம்மொளகெ ஞானாதி குணதிந்த = ஞானாதி குணங்களால்

சமானரெனிபரு = சமம் எனப்படுகிறார்கள்

 

நவகோட்யோஹி தேவானாம் சேஷாம் மத்யேஷதத்ஸது ||

ஸோமாதிகாரோ வேதோக்தோ ||

 

என்னும் தாரதம்ய சங்க்ரஹத்தின் வாக்கியத்திற்கேற்ப, இருக்கும் 9 கோடி தேவதைகளில், வெறும் 100 பேருக்கு மட்டுமே சோமபானம் குடிப்பதற்கு தகுதி என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 100 பேரில், சிலரின் தாரதம்யம் முன்னர் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் அவதாரங்களை, தாரதம்யத்தை இங்கு சொல்கிறார். அந்த 100 பேரில் 8 பேர் வசுக்கள். த்ரோண, த்ருவ, தோஷ, அர்கனு, அக்னி, ப்ராண, த்யு, விபாவசு ஆகியோர். இவரில் அக்னி சிறந்தவன். அவனின் தாரதம்ய அவதாரங்களை இந்த சந்தியின் 21ம் பத்யத்தில் நீலத்ருஷ்டத்யும்ன லவனீலேலி ஹாலன ரூபகளுஎன்னும் பத்யத்தில் பார்த்தோம். மற்ற 7 பேர் வசுக்கள் தமக்குள் பல, ஞானாதி குணங்களால் சமானர் என்பது கருத்து.

 

இதில் த்யு நாமக வசு, பிரம்ம ஆவேசத்தைக் கொண்டு, பீஷ்மாசார்யராக பிறந்தான். நிர்ணய 11ம் அத்தியாயத்தில்: அதாஷ்டவோ வசுராஸீத்யுனாமாஎன்னும் 22ம் ஸ்லோகத்தில் துவங்கி, 37ம் ஸ்லோகம் வரைக்கும் பீஷ்மாசார்யரின் பிறப்பின் காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. கிரந்தம் பெரிதாகிவிடும் என்ற பயத்தில் அந்த ஸ்லோகங்களை இங்கு எழுதவில்லை. அதன் விளக்கங்களை மட்டும் கூறுகிறோம்.

 

அஷ்ட வசுக்களில் 8ம் வசுவான த்யு நாமக வசுவிற்கு வராங்கி என்னும் மனைவி இருந்தாள். சுவிந்தன் என்னும் ராஜனின் மனைவியான வராங்கி என்பவள் இவளுக்கு தோழியாக இருந்தாள். ராஜகுமாரியானாலும் மனித குலத்தவர் ஆகையால், அவளுக்கு முதுமை வந்தது. வசு மனைவியான வராங்கிக்கு தன் தோழியையும் தன்னைப் போலவே ஜராமரணஇல்லாமல் செய்யவேண்டும் என்னும் விருப்பம் வந்தது. அதற்காக, வசிஷ்டரிடம் இருந்த நந்தினி என்னும் காமதேனுவை இழுத்து வரவேண்டும் என்று தன் கணவனிடம் கூறினாள். ஏனெனில், காமதேனுவின் பால் அமிர்தத்திற்கு சமானமாகும். ஆகவே அதைக் குடித்தால் மரணம் வராது என்று அறிந்து, அந்த பாலை தன் தோழிக்குக் கொடுக்க வேண்டும் என்பதே அவளின் விருப்பம்.

 

மனைவியின் விருப்பத்தை நிறைவெற்ற, த்யு, மற்ற ஏழு வசுக்களின் உதவியையும் கோர, அவர்களும் இவனுடன் சேர்ந்து கொள்ள, மொத்தம் 8 வசுக்களும் வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்று காமதேனுவை இழுத்து வர முயன்றனர். அப்போது வசிஷ்டரில் பிரம்மதேவர் நிலைத்திருந்து, அவர்களை சபித்தார்.

 

நீங்கள் அனைவரும் அதர்மத்தில் ஈடுபட்டதால், உடனடியாக மனிதர்களாக பிறக்கக் கடவீர்கள். யாருக்காக நீங்கள் ஏழு பேரும் தர்மத்தை விட்டீர்களோ, அந்த ஒரு த்யு வசுவைத் தவிர மற்றவர்கள், அங்கு பிறந்தவுடன் தேகத்தை விட்டு உங்கள் இடத்தை திரும்பப் பெறுவீர்கள். த்யு வசு மட்டும் உங்கள் எட்டு பேரின் ஆயுளைப் பெறட்டும். அவனை துர்மார்க்கத்தில் தள்ளிய அவனது மனைவி வராங்கி, அம்பா என்னும் பெயரில் மனிதப்பிறவியில் பிறந்து, கணவன் இல்லாமல், புருஷ ஷரீர பிரவேசத்தால் பதியைக் கொல்வதற்கு காரணமாகட்டும். இவன் பிரம்மசர்யத்தை பின்பற்றட்டும். அந்த தம்பதிகளுக்கு விரோதம் உண்டாகட்டும். இவன் தன் இறுதிக் காலத்தில், முட்படுக்கையில் படுத்து, உங்கள் 8 பேரின் கர்ப்ப வேதனையை அனுபவிக்கட்டும். போரில் பலமான அஸ்திர சஸ்திரங்களால் அடிபட்டு, உடம்பு முழுக்க காயம் பட்டு, 8 பேரின் மரண வேதனையை அனுபவிக்கட்டும்என்று சாபம் கொடுத்தார்.

 

அப்போது அந்த எட்டு வசுக்களும், தங்களுக்கு சாபம் கொடுத்தவர் பிரம்மதேவரே என்று அறிந்து, பசுவை விடுவித்து, அவரை வணங்கி, ‘எங்களுக்கு மனுஷ்ய, ஸ்த்ரி கர்ப்ப சம்பந்தம் இல்லாதவாறு அருளுங்கள். த்யு நாமகன் புகழைப் பெற்றும், அஸ்த்ரக்ஞனாகவும், இருப்பது மட்டுமல்லாமல் உங்களின் ஆவேசமும் அவனில் இருந்து நம் அனைவரின் பலமும் அவனுக்கு இருக்குமாறு அருளவேண்டும்என்று வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும்என்று பிரம்மதேவர் வரமளித்தார்.

 

அடுத்து வசுக்கள் அனைவரும் கங்கையின் அருகில் வந்து, சாபத்தை அவளுக்கு தெரிவித்து, ‘நீங்களே நம் அனைவரையும் கர்ப்பத்தில் தரித்து, த்யு நாமகனை மட்டும் விட்டு, மற்ற 7 பேரை, நாங்கள் பிறந்த உடனேயே கொன்றுவிட வேண்டும். இப்படி செய்வதால், உங்களுக்கு சிசு ஹத்யா தோஷம் வராதவாறு நாங்கள் வரத்தைக் கொடுக்கிறோம்என்று வேண்ட, கங்கையும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.

 

குருவம்சத்து அரசனான ப்ரதீப ராஜன், மிருக வேட்டைக்கு வந்து, கங்கா தீரத்திற்கு வந்தபோது, திவ்ய ஸ்த்ரீ ரூபத்தைப் பெற்று, இவனின் வலது துடையின் மேல் அமர்ந்து நீ எனக்கு பதி ஆகுஎன்று கேட்டாள். அதற்கு அவன், ‘மனைவி அமர வேண்டியது இடது. நீயோ வலது துடையின் அமர்ந்தாய். ஆகவே நீ என் மகள் அல்லது மருமகள் ஆக வேண்டும். நீயே என் மருமகள் ஆகிறாயாஎன்று கேட்டான். இவளின் நோக்கமும் அப்படியே இருந்தது.

 

ஏனெனில், கங்கையின் பதியான வருணனே இவனது மகனாக ஷந்தனு என்ற பெயரில் பிறந்திருப்பதை அறிந்திருந்தாள். ஷந்தனுவின் மனைவியாகவே தான் வரவேண்டும் என்பதற்காகவே ப்ரதீபனின் வலது துடையில் அமர்ந்தாள். எவ்வித பிரச்னையும் இன்றி 7 குழந்தைகளையும் கொல்லும் நோக்கத்தில், ப்ரதீப ராஜன், எனது மருமகள் ஆகு என்று சொன்ன உடனேயே, ‘நான் உன் மகனை திருமணம் செய்த பிறகு, நீ யார் என்று என்னை கேட்கக்கூடாது. நான் எந்த கெட்ட செயல்களை செய்தாலும் அதை தடுக்கக்கூடாது. அதன் காரணத்தை கேட்கக்கூடாது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை செய்தாலும், நான் உன் மகனை விட்டு போய்விடுவேன். இதற்கு சம்மதமானால், நான் உனக்கு மருமகள் ஆகிறேன்என்று கூறினாள்.

 

ப்ரதீபனும் இவை அனைத்திற்கும் ஒப்புக்கொண்டு, ‘மூன்று மக்களில் உனக்கு யாரை திருமணம் செய்ய வேண்டும்என்று கேட்க, ‘நான் ஷந்தனுவை விரும்புகிறேன்என்றாள். ராஜனும், இந்த கதையை ஷந்தனுவிற்கு சொல்லி, கங்கையை அவனுக்கே திருமணம் செய்து வைத்தான். ரிஷியின் சாபத்தின்படியே இந்த 8 வசுக்களும் அவளின் கர்ப்பத்தில் பிறந்தனர். அதில் ஏழு பேரை அவள் உடனே கொன்றுவிட்டாள். எட்டாவதாக பிறந்த குழந்தையை கொல்வதற்காக, கணவனின் முன் அந்தக் குழந்தையை கொல்லப் போவதாக சொல்ல, அப்போது ஷந்தனு சக்ரவர்த்தி இவளின் கையைப் பிடித்து நிறுத்து, யார் நீ? ஏன் இப்படி எல்லா குழந்தைகளையும் கொல்கிறாய்? இதன் காரணம் என்ன? இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம்என்றான்.

 

உடனே அக்குழந்தையைக் கொல்வதை விட்டு, அனைத்து காரணங்களையும் விளக்கமாக அவனிடம் சொல்லி, தான் முன்னர் சபதம் செய்ததைப் போல, அவனை விட்டுப் புறப்பட்டாள். அந்த எட்டாவது மகனே பீஷ்மாசார்யர். பிரம்ம அம்சத்தைக் கொண்டு பிறந்தவர் என்று பாரதத்திலும், நிர்ணயத்திலும் சொல்லப்பட்ட கதையின் சாராம்சம் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

 

த்ரோண நாமக வசு நந்தகோபனாகப் பிறந்தான். நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

ததைவாயோத்ரோண நாமவஸு: ||224

ஸ்வபார்யயா தரயா த்வத்ப்த்ருத்வம் ப்ராப்த்யும் தபஸ்தேப உதாரமானஸ: ||

தஸ்ம்யை வர: ஸமயாஸன்னிஸ்ருஷ்ட: ஸஜாஸ நந்தாக்ய

உதாஸ்யபார்யா நாம்னா யஷோதா ஸச ஷூரதாதஸுதஸ்ய வைஷ்யப்ரபவோஹிகோப: ||225

(பரமாத்மனை தேவதைகள் பிரார்த்திக்கும் கட்டம்)

 

இதன்படி, த்ரோண என்னும் வசு தன் மனைவியுடன் உன் (பகவந்தனின்) தந்தையாக வேண்டும் என்று தவம் செய்தான். அதைப்போல, ‘நான் (பிரம்மதேவர்) அவனுக்கு அந்த வரத்தினைக் கொடுத்திருக்கிறேன். அவன் கோகுலத்தில் நந்தகோபன் என்றும், அவனின் மனைவி யசோதை என்றும் பிறந்திருக்கிறார்கள். நந்தகோபன் ஷூரராஜன் மூலமாக ஒரு வைஷ்ய ஸ்த்ரியிடம் பிறந்து, கோபாலகராக இருக்கிறான். நீ வசுதேவனிடம் அவதரித்து நந்தகோபனின் வீட்டுக்கு சென்று வசிக்க வேண்டும்என்று கூறினார். இப்படி த்ரோண என்னும் வசுவிற்கு ஒரு அவதாரம் என்று அறியவேண்டும்.

 

பீ4ம ரைவத ஓஜஜைகப

தா3ஹான் ப3ஹுரூபகனு ப4

வாம உக்3ர வ்ருஷாகபி அஹிர்பு3த்4னி எனுதிப்ப |

ஈ மஹாத்மர மத்3யதொ3ளகெ3

மாமனோஹர நுத்தமனு த3

நாமகரு மரெனிஸிகொம்ப3ரு தம்மொளெந்தெ3ந்து3 ||26

 

பீம, ரைவத, அஜ, அஜைகபாத், மஹான், பஹுரூபகனு, பவ, காம, உக்ர, வ்ருஷாகபி, அஹிர்புத்னி எனுதிப்ப = இப்படி 11 பேர் ருத்ரர்களாவர்.

ஈ மஹாத்மர மத்யதொளகெ = இவர்களில்

உமா மனோஹரனு = பவ நாமகரான, பார்வதி பதியானவர் சிறந்தவர்

உத்தமனு = சிறந்தவன்

தஷ நாமகரு சமரெனிஸிகொம்பரு = அவனைத் தவிர மற்றவர்கள் தங்களுக்குள் சமம் எனப்படுவர்

தம்மொளெந்தெந்து = எந்த காலத்திலும்

 

மேலே கூறிய 11 ருத்ரர்களில், பவ என்னும் பெயர் கொண்ட பார்வதி பதி உத்தமர் ஆகிறார். மற்ற 11 பேரும் தமக்குள் அனைவரும் சமமானவர்கள் என்று அறியவேண்டும்.

 

பூ4ர்யஜைக பதா3ஹ்வஹிர்பு3

த்4னியரிது3 ருத்3ரக3ம்யுத

பூ4ரிஸ்ரவனெந்தெ3னிப ஷல விருபாக்‌ஷ நாமகனு |

ஸூரிக்ருப விஷ்கம்ப4 ஹதே3

வாரணாக்3ரணி ஸோமத3த்தனு

தா ரசிஸி3 த்3விரூப த4ரெயொளு பத்ர தாபகனு ||27

 

அஜைகபதாஹ்வய = அஜைகபாத் என்னும் ருத்ரர்

பூரி = பூரி ராஜனாக பிறந்தார்

அஹிர்புத்னி = அஹிர்புத்னி என்னும் ருத்ரர்

ஈரைது ருத்ரகண சம்யுத = 10 ருத்ரர்களின் அம்சத்தைக் கொண்டு

பூரிஸ்ரவனெந்தெனிப = பூரிஸ்ரவ ராஜன் என்று அழைத்துக் கொண்டான்

விரூபாக்‌ஷ நாமகனு = விரூபாக்‌ஷ என்னும் ருத்ரன்

ஷல = ஷல ராஜன் ஆனான்

விஷ்கம்ப = அந்த பெயர் கொண்ட ருத்ரர்

ஸூரி = ஞானியான

க்ருப = க்ருபாசார்யராக பிறந்தார்

சஹதேவ = ஜராசந்தனின் மகனான சஹதேவ

ரணாக்ரணி = போர்க்களத்தில் சூரனான சோமதத்தன்

த்விரூப = என்னும் இந்த இரு ரூபங்களை

பத்ரதாபகனு = பத்ரதாபகன் என்னும் ருத்ரர்

தரெயொளு = பூமியில்

தாரசிஸித = தான் ஸ்ருஷ்டித்தான். அதாவது, இரு ரூபங்களில் அவதரித்தான்.

 

அஜைகபாத், அஹிர்புத்னி, விரூபாக்‌ஷ என்னும் மூன்று ருத்ரர்கள் சோமதத்தனின் மக்களாக பூரி, பூரிஸ்ரவ, ஷல என்னும் பெயர்களில் பிறந்தனர். இந்த மூவரின் தந்தையான (பிரகலாத ராஜனின் அம்சம், பால்ஹிக ராஜனின் மகனான) சோமதத்தன், பத்ரதாப என்னும் ருத்ரரின் அவதாரமே. நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

ப்ரதீபபுத்ர தாமாப்ய பால்ஹிகேஷ்ட பவத்பதி: |

ருத்ரேஷு பத்ரதாபாக்ய: ஸோமதத்தோஸ்ய சாத்மஜ: ||11

அஜைகபாதஹிர்புத்னிர் விரூபாக்‌ஷ இதித்ரய: |

ருத்ராணாம் ஸோமதத்தஸ்ய பபூவு: ப்ரதிதா: ஸுதா: |

விஷ்ணோரேவாங்கதா: ப்ராப்தும் பூரிர் பூரிஸ்ரவா ஷல: ||

ஷிவாதி ஸர்வருத்ராணாம் ஆவேஷாத்வரதஸ் ததா ||12

பூரிஸ்ரவா அதிபலஸ்யத்ராஸீத் பரமாஸ்த்ரவித் |

ததர்த்தம்ஹி தபஸ்சீர்ணம் ஸோமதத்தேன ஷம்பவே ||13

தத்தோ வரஸ்சதேனாஸ்ய த்வத்ப்ரதீபாபி பூதிக்ருத் ||

பலவீர்ய குணோபேதோ நாம்னா பூரிஸ்ரவா: ஸுத: ||14

பவிஷ்யதி மயாவிஷ்ணோ யக்ஞஷீல இதிஸ்மஹ ||

தேனபூரிஸ்ரவா ஜாத: ஸோமதத்த ஸுதோபலி: ||15

 

ப்ரதீப ராஜனின் மக்கள் தேவாபி, பால்ஹிக, ஷந்தனு என்னும் மூவர். அவர்களில் பிரகலாதன் பால்ஹிக ராஜனாக அவதரித்திருக்கிறான் என்று 21ம் பத்யத்தில் பார்த்தோம்.

 

ருத்ரர்களில் பத்ரதாப என்னும் ருத்ரன் ஸோமதத்தன் என்னும் பெயரில் பால்ஹிக ராஜனின் மகனாக பிறந்தான். அஜைகபாத், அஹிர்புத்னி, விரூபாக்‌ஷ என்னும் மூன்று பேர் ருத்ரர், பூரி, பூரிஸ்ரவ, ஷல என்னும் பெயர்களில் இவனின் மக்களாகப் பிறந்தனர். அவர்களில் பூரிஸ்ரவ ராஜன், உமாபதியான ஷிவ முதலான அனைத்து ருத்ரரின் ஆவேசத்தாலும், வர பலத்தாலும், மகா பலசாலியாக இருந்தான். வரபலம் என்னவெனில், முன்பு, சோமதத்தன், ருத்ரரைக் குறித்து இத்தகைய மகன் பிறக்கவேண்டும் என்று தவம் செய்தான்.

 

அப்போது ருத்ரதேவர் உன் எதிரியைக் கொல்லும் சக்தியைக் கொண்டவனான, பல, வீர்ய, குண இவற்றில் சிறந்தவனான பூரிஸ்ரவ என்னும் மகன் உனக்கு பிறப்பான். அவனில் என் ஆவேசமும் இருக்கும். நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

ஷரத்வாம்ஸ்து தப: குர்வன் ததர்ஷ ஸஹஸோர்வஷேம் |

சஸ்கந்த ரேதஸ்தஸ்யாத ஷரஸ்தம்பே ததோ பவத் ||57

விஷ்கம்போ நாமருத்ராணாம் பூபார ஹரணேsம்கதாம் ||

ஹரே: ப்ராப்தும் ததாதார பார்யாயாஹி ப்ருஹஸ்பதே: ||58

தாவுபௌ ஷந்தனுர்த்ருஷ்ட்வா க்ருபாவிஷ்ட: ஸ்வகம்க்ருஹம் ||

நினாய நாமசக்ரேத க்ருபாயாவிஷயௌ யத: ||59

க்ருப: க்ருபீதி ||

 

ஷரத்வான் என்னும் ரிஷி தவம் செய்து கொண்டிருக்கும்போது, ஊர்வசியைப் பார்க்க, இவரது வீர்யம் வெளிப்பட்டு, அது கீழே இரு பாகங்களாக விழ, அங்கிருந்து ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை பிறந்தன. அந்த ஆண் குழந்தையே விஷ்கம்ப என்னும் ருத்ரர். பரமாத்மன் பூ-பார ஹரணத்திற்காக பூமியில் பிறக்கப் போகிறான். அந்த உத்தம செயலில் நான் பங்கேற்கப் போகிறேன் என்று சொல்லி, அங்கு பிறந்தார். மகள், ப்ருஹஸ்பத்யாசார்யர், த்ரோணாசார்யராக பிறந்திருக்கிறார் என்று அறிந்து தான் அவரது மனைவியாக வேண்டும் என்பதற்காக தாரை அங்கு பெண் குழந்தையாக பிறந்தாள்.

 

மிருக வேட்டைக்கு வந்த ஷந்தனு, இந்த இரு குழந்தைகளையும் பார்த்து, அவர்களை வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கத் துவங்கினான். ஆண் குழந்தைக்கு க்ருப என்றும், பெண் குழந்தைக்கு க்ருபெ என்றும் பெயர் சூட்டினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த க்ருபாசார்யரே, விஷ்கம்ப என்னும் ருத்ரர் என்று அறியவேண்டும்.

 

110 ருத்ரரில் பத்ரதாப, விரூபாக்‌ஷ, நிஷ்கம்ப இவர்கள் சேரவில்லை. இந்த ருத்ரர் யாரென்றால், 11 ருத்ரர்களைத் தவிர, மேலும் கோடி ருத்ரர்கள் இருக்கின்றனர். அவர்களில் இவரே பிரதானமானவர் என்று அறியவேண்டும். பாகவத 6ம் ஸ்கந்தம் 9ம் அத்தியாயத்தில்:

 

பூதஸ்ய பார்யா பூதாயா ருத்ரா வேகாதஷஸ்க்ருதா: |

சுரூப்யாs ஸுத பூதஸ்ய பார்யா ருத்ராம்ஷ கோடஷ: ||17

 

தக்‌ஷப்ரஜேஷ்வரன், ப்ராசேதசனாக பிறந்து 60 பெண் குழந்தைகளைப் பெற்றான். அவர்களில் பூத என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. பூதெ மற்றும் சுரூபே என்பது அவர்களின் பெயர். இந்த பூதெயில் 11 ருத்ரர்கள் பிறந்தனர். சுரூபெயிடம் கோடி ருத்ரர்கள் பிறந்தனர் என்று சொல்கிறார்.

 

இந்த ஆதாரத்தினால் விஷ்கம்பாதிகள், அந்த ருத்ர கணத்தை சேர்ந்தவர்கள் என்று அறியவேண்டும். ருத்ரனுக்கு சோமதத்த ரூபம் மட்டுமல்லாமல், இன்னொரு அவதாரமும் உண்டு. அது என்னவெனில், ஜராசந்தனின் மகன் சஹதேவன். நிர்ணய 21ம் அத்தியாயத்தில்:

 

இதிஸ்ம பீமம்ப்ரதியோதனாய ஸங்க்ருஹ்யராஜா ஸஜராஸுதோ பலீ |

ராஜ்யே நிஜம்ஜாத்மஜ மப்ருஷிம்ஜத் புராக்யாதம் பத்ரதாபாக்யருத்ரம் ||150

 

ஜராசந்தனைக் கொல்வதற்காக, ஸ்ரீகிருஷ்ணன், பீமசேனர், அர்ஜுனன் இம்மூவரும் வந்து, ‘உன்னுடன் போர் புரிவதற்கு எங்கள் மூவரில் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுஎன்று சொல்ல, ஜராசந்தன், பீமசேனனை தேர்ந்தெடுத்தான். போருக்கு முன், ஜராசந்தன் தன் அரசில் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தான். அந்த மகனே முன்னர், பத்ரதாப என்னும் ருத்ரர் என்று சொல்லியிருக்கிறார். இப்போதைய இவன் பெயரை சொல்லவில்லை. வெறும் மகன் என்றே சொல்லியிருப்பார். ஆனால், இவனே சஹதேவன் என்று எப்படி சொல்லமுடியும் என்றால், இதே அத்தியாயம் 166ம் ஸ்லோகத்தில், ஜராசந்தனின் சம்ஹாரம் ஆனபிறகு:

 

சுதோயயௌ ஷரணம் தான் ரமேஷ பீமார்ஜுனாம் ஸஹதேவோஸ்யதீயாம் ||

 

தன் தந்தையை பீமசேனர் கொன்றுவிட, ஜராசந்தனின் மகனான சஹதேவன், கிருஷ்ண பீமார்ஜுனரிடம் முறையிட்டான். சிறந்த ஒரு ரதத்தில், தன் தங்கையை பீமசேனனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டி நினைத்தான். பீமசேனன், அந்த பெண்ணை, தன் தம்பியான சகதேவனுக்கு மணம் செய்து கொடுக்கிறேன் என்றார். இந்த ஆதாரத்தினால், சஹதேவன் என்னும் ஜராசந்தனின் மகனே, பத்ரதாப என்னும் அவதாரத்தைக் கொண்டிருக்கிறான் என்று நிச்சயமாயிற்று. அதாவது, பத்ரதாப என்னும் ருத்ரனுக்கு, சஹதேவ, சோமதத்த என்னும் இரு அவதாரங்கள் இருக்கிறது என்பதை பார்த்தாயிற்று.

 

தே3வஷக்ர உருக்ரமனு மி

த்ரா வருண பர்ஜன்ய ப43 பூ1

ஷா விவஸ்வான் வித்ரு தா4தா ஆர்யம த்வஷ்ட |

தே3வகி ஸுதனலி வித்ரு வி

பா4ஸூஸுத பா4னு எனிஸு

ஜ்யாவனபயுத வீரஸேனனு த்வஷ்ட நாமகனு ||28

 

தேவ = தேவதைகளைவிட உத்தமனான

ஷக்ர = ஷக்ர என்னும் இந்திரதேவன்

உருக்ரம, மித்ர, வருண, பர்ஜன்ய, பக, பூஷா, விவஸ்வான், ஸவிதா, தாதா, ஆர்யமா, த்வஷ்டா = என்னும் 12 ஆதித்யர்

(அதிதியின் மக்கள் என்று அர்த்தம்). இந்த 12 ஆதித்யரில்

ஸவித்ரு விபாவஸு = ஸவிதா என்னும் சூரியன்

தேவகிஸுதனல்லி = ஸ்ரீகிருஷ்ணனிடம்

ஸுத = சத்யபாமையின் மகனாகப் பிறந்து

பானுயெயிஸுவ = பானு என்னும் பெயரைக் கொண்டான்

ச்யாவனபயுத = யமதேவரின் அம்சத்தைக் கொண்டு

த்வஷ்ட்ரு நாமகனு = த்வஷ்ட்ரு என்னும் சூரியன்

வீரஸேனன் = பாண்ட்ய தேசாதிபதியான வீரசேன, அரசன் என்று சொல்லிக் கொண்டான்.

 

அதிதியின் மக்களான ஆதித்யர்கள் 11 பேர். ஷக்ர, உருக்ரம, மித்ர, வருண, பர்ஜன்ய, பக, பூஷா, விவஸ்வான், ஸவிதா, தாதா, ஆர்யமா மற்றும் த்வஷ்டா. இவர்களில் ஸவிதா என்னும் சூரியன், கிருஷ்ண - சத்யபாமா இவர்களுக்குப் பிறந்தான். நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

விவஸ்வதோயோsவரஜோsதிதே: ஸுதோ க்யாதஸ்ச நாம்னாஸ்விதேதி க்ருஷ்ணாத் ||141

ஜாத: ஸஸத்யாஜடரேத்ர நாம்னாபானுஷ்ச ||

 

விவஸ்வான் என்னும் சூரியனின் தம்பியான ஸவிதா என்னும் சூரியன், சத்யபாமையின் வயிற்றில் பானு என்னும் பெயரில் பிறந்தான் என்று சொல்கிறார். த்வஷ்டா என்னும் சூரியன், யமனின் ஆவேசத்தைக் கொண்டு, பாண்டிய தேசாதிபதியான வீரசேனனாக பிறந்தான். நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

ஸுதாபாண்ட்ய ராஜேனதத்தா ||160

ஸம்வத்ஸராந்தே பல்குனஸ்யானுரூபா சித்ராங்கதா வீரசேனேன தோஷாத் ||

ஸவீரஸேனோ த்வஷ்ட்ராரம்ஷோ யமஸ்யாப்யாவேஷயுக் ||

 

என்னும் ஸ்லோகங்களால் அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதைக்கு தந்தையான, பாண்டிய தேசாதிபாதியான வீரசேனன் என்றும், அவர் யமதேவரின் ஆவேசத்தைக் கொண்ட த்வஷ்டா என்னும் சூரியன் என்றும் இதிலிருந்து தெரிகிறது.

 

எரட3தி4கத3ஸூர்யரொளு மூ

ரெரடு3 ஜனருத்தம விவஸ்வா

ந்வருண ஷக்ர உருக்ரமனு பர்ஜன்ய மித்ராக்2|

மருதனாவேஷயுத பாண்டு3

வர பராவஹனெந்3தெ3னிப கே

ரிம்ருக3ம்பாதி3 ஷ்வேதத்ரயு மருத3ம்ஷ ||29

 

எரடதிக தஷ சூர்யரொளு = 12 சூரியர்களில்

மூரெரடு ஜனருத்தம = 3*2=6 பேர் உத்தமர்கள் (இவர்களில் இன்னொரு பாடத்தின்படி, 5 பேர் உத்தமர்கள். ஒருவன் பர்ஜன்யன், கங்கைக்கு சமமானவன். ஆக இந்த 6 பேர், மற்ற ஆறு பேருக்கு சமம் அல்ல என்பது கருத்து)

விவஸ்வான், வருண, ஷக்ர, உரு, க்ரம, மித்ர - இந்த அறுவரின் கதையை முன்னர் பார்த்திருக்கிறோம்.

பர்ஜன்யனின் விஷயத்தை முன்னரே பார்த்திருக்கிறோம்.

மற்ற 6 பேர் சூரியர்கள் சமம் என்பது கருத்து.

வரபராவஹனு = மருத்களில் சிறந்தவனான பராவஹ என்பவன்,

மருதனாவேஷயுத = வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்டு

பாண்டூ எந்தெனிப = பாண்டு ராஜனாக அவதரித்தான்.

கேஸரிம்ருகப = கேசரி என்னும் கபி

ஸம்பாதி = சம்பாதி என்னும் கபி

ஸ்வேத = ஸ்வேத என்னும் கபி

த்ரயரு = கேசரி, சம்பாதி, ஸ்வேத என்னும் இந்த மூவரும்

மருதம்ஷ = மருத்களின் அம்சத்தினால் பிறந்தனர்.

 

12 ஆதித்யரில் முன்னர் தாரதம்யத்தில் கூறப்பட்ட, விவஸ்வான், வருண, ஷக்ர, உருக்ரம, மித்ர என்னும் இந்த 5 பேர் உத்தமர்கள். பர்ஜன்யன் கங்கைக்கு சமமானவன். மற்ற 6 பேரும் அவர்களுக்குள் சமர்கள். ஏகோனபஞ்சாஷத் (49) மருத் கணர்களில் பராவஹன் என்பவன் வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்டு, பாண்டு ராஜனாக அவதரித்தான்.

நிர்ணய 8ம் அத்தியாயத்தில்:

 

பவனகணவராம்ஷௌ ஷ்வேதஸம்பாதினௌ ச ||

கேஸரீதி ப்ரமரமத மருத்ஸப்ராஸ்ய தேதான் முகேஸ: ||106

 

இந்த வாக்கியங்களால் ஸ்வேத, சம்பாதி, கேசரி இந்த மூவரும் பவனகண அம்சர்கள். அதாவது, மருத்கணர்களில் உத்தமர்களின் அம்சத்தைக் கொண்டவர்கள் என்று தெரிகிறது. இவர்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. தாசார்யரும் பெயர்களை சொல்லவில்லை என்று அறியவேண்டும். மருத்களின் அம்சத்தினால் பிறந்தவர்கள் என்பது கருத்து.

 

ப்ரதிப4னாதனு சேகிதனு வி

ப்ருது2 எனிஸுவனு ஸௌம்யமாருத

விதத ஷர்வோத்துங்க33ஜ நாமகனு ப்ராணாம்ஷ |

த்3விதியபான க3வாக்‌ஷ க3வயனு

த்ருதியவ்யான உதா3ன வ்ருஷப1

ர்வதுல ஷர்வத்ராத க3ந்த4ஸுமாதன மான ||30

 

ப்ரதிபவாதனு = ப்ரதிப என்னும் மாருதன்

சேகிதானனு = சேகிதானன என்னும் யாதவன்

ஸௌம்யமாருத = ஸௌம்ய நாமக மாருதன்

விப்ருதவெனிஸுவனு = விப்ருத என்னும் யாதவன்

விதத, ஷர்வோத்துங்க - என்னும் இருவர் யது வம்சத்தவர்கள்

கஜ நாமகனு = கஜ என்னும் கபி

இவர்கள் மூவரும் பிராணாம்ஷ = பிராண நாமக மாருதனின் அம்ஷத்தினால் பிறந்தவர்கள்

த்வீதீய = இரண்டாவதான

ஆபான = ஆபான மாருதனு

கவாக்‌ஷ = கவாக்‌ஷ என்னும் கபி ஆனான்

த்ருதீய = மூன்றாமவனான

வ்யான = வியான நாமக மாருதன்

உதான = உதான நாமகனான மாருதன்

வ்ருஷபர்வ = வ்ருஷப என்னும் கபி

அதுள = பராக்ரமசாலியான

ஷர்வத்ராத = ஷர்வத்ராத என்னும் பீமசேனதேவரின் மகன்

கந்தஸுமாதனரு = கந்தஸுமாத என்னும் கபி

இவர்கள் இருவரும்

ஸமான = சமான மாருதனின் அவதாரங்கள்.

 

49 மருத்களின் அவதாரங்களில் அனைவருக்கும் அவதாரங்கள் இல்லை. சில பேருக்கு மட்டுமே அவதாரம் இருக்கிறது. இப்படி சொல்லியதால், ஸ்வேதாதிகள் மருத்கணரில் சேர்ந்தவரோ இல்லையோ என்று சந்தேகம் வரும். ஆகையால், முதலில் 49 மருத்களின் பெயர்களை அறியவேண்டும். ஆகையால், முந்தைய தாராதம்ய விஷயத்தில் சொல்லியிருந்தாலும், இங்கு இன்னொரு முறை சொல்கிறோம்.

 

மருத்கணர்களின் பெயர்கள்:

1. ப்ராண 2. அபான 3. வியான 4. உதான 5. ஸமான 6. நாக 7. க்ருதல 8. கூர்ம 9. தேவதத்த 10. தனஞ்சய 11. ப்ரவஹ 12. விவஹ 13. ஷம்பு 14. ஸம்வஹ 15. பராவஹ 16. உத்வஹ 17. வஹ 18. ஷங்கு 19. கல 20. ஷ்வாஸ 21. நல 22. அனில 23. ப்ரதிப 24. குமுத 25. காந்த 26. ஷுசி 27. ஷ்வேத 28. அஜித 29. குரு 30. ஸஞ்ஞா 31. ஸம்வர்தக 32. கால 33. ஜித 34. ஸௌம்ய 35. கபி 36. ஜட 37. மண்டூக 38. ஸம்ஹத 39. ஸித்த 40. ரத்த 41. க்ருஷ்ண 42. கபி 43. ஷுக 44. யதி 45. பீம 46. ஹனு 47. பிங்க 48. அஹங்காரிக ப்ராண 49. கம்பன

 

இந்த 49 மருத்கணர்களில்,

* 15வதாக இருப்பவன் பராவஹ என்னும் பாண்டு ராஜன்.

* 27ம் ஸ்வேத என்பவன் சம்பாதி, கேசரி என்று இரு அவதாரங்களை எடுத்திருக்கிறான்.

* 23 ப்ரதிப என்னும் மாருதன் சேகிதானனாக அவதரித்திருக்கிறான்.

 

நிர்ணய 12ம் அத்தியாயத்தில்:

மருத்ஸுனாம ப்ரதிபோ யதுஷ்டபூத் ஸசேகிதானோ ஹரிஸேவனார்த்தம் ||103

 

மருத்களில் பிரதிப என்பவன், பரமாத்மனின் சேவை செய்வதற்காக சேகிதானன என்று யாதவரில் பிறந்தான் என்னும் வாக்கியம், முந்தைய வாக்கியத்திற்கு ஆதாரம்.

 

* ஸௌம்ய நாமகனான 34ம் மாருதன், விப்ருது என்னும் யாதவனாக பிறந்தான்.  நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

நிர்கத்யபுர்யா விப்ருதும் ததர்ஷ ராமேண புர்யா ரக்‌ஷணே சன்னியுக்தம் |

ஏகோஹ்யஸௌ மருதாம் ஸௌம்யனாமா ஷுஷ்ரூஷார்த்தம் வாஸுதேவஸ்ய ஜாத: ||193

 

சன்யாசி வேடத்தில் த்வாராவதிக்கு வந்த அர்ஜுனன், சுபத்ரையால் சேவை செய்யப்பட்டு, பலராம, கிருஷ்ண ஆகிய அனைவரும், ரைவத பர்வதத்திற்கு சென்றபோது, கிருஷ்ணனின் அனுமதியுடன், சுபத்ரையை அபகரித்து, த்வாராவதியை விட்டுப் போகும்போது, விப்ருது என்னும் யாதவன் த்வாரபாலகனாக இருப்பதைக் கண்டான். அவன் பலராமனின் ஆணையின்படி அங்கு காப்பாளனாக இருந்தான். இவனே முன்னர் 34ம் மருத்கண சௌம்ய. விப்ருது என்னும் பெயரில் கிருஷ்ணனுக்கு சேவை செய்வதற்காகப் பிறந்திருந்தான். ஆகையால், அர்ஜுனனுடன் சண்டை போடுவதாக நடித்து, அர்ஜுனனை விட்டுவிட்டான் என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து விப்ருது என்பவன் யாதவன் என்றும், ஸௌம்ய  நாமக மாருதன் என்றும் தெளிவாகிறது.

 

* விதத, ஷர்வோத்துங்க, இவர்கள் இருவரும் மற்றும் கஜ என்னும் கபி ; இந்த மூவரும் முதலாமவனான பிராண நாமக மருத்தின் அம்சத்தைக் கொண்டவர்கள் என்று அறியவேண்டும்.

* இரண்டாமவனான அபானன், கவாக்‌ஷ என்னும் கபி ஆனான்.

* மூன்றாமவனான வ்யானன் கவய என்னும் கபி

* நான்காமவனான உதானன் வ்ருஷப என்னும் கபி

* ஐந்தாமவனான சமானன், பீமசேனதேவரின் மகனான ஷர்வத்ராத என்னும் அவதாரம் ஒன்று; கந்தமாதன எனும் கபி ரூபம் ஒன்று; என இரு ரூபங்களை தரித்திருந்தான்.

 

இவற்றிற்கு ஆதாரம், நிர்ணய 8ம் அத்தியாயத்தில்:

கஜோகவாக்‌ஷோ கவயோவ்ருஷஸ்ச ஸகந்தமாதா தனதேன ஜாதா: |

ப்ராணாதய: பஞ்சமருத்ப்ரவீரா: ||

 

கஜ, கவாக்‌ஷ, கவய, வ்ருஷப, கந்தமான இந்த ஐந்து பேரும், ப்ராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து மருத்களின் அம்சத்தைக் கொண்டவர்கள் என்று சொல்கிறார். இத்துடன், சமான மாருதன், பீமசேனதேவரின் மகனான ஷர்வத்ராத என்னும் அவதாரத்தைக் கொண்டவன் ஆகிறான். நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

பீமஸேனோரதம்ஸ்வம் ||

ஆருஹ்ய காஷீஷ்வர பூஜிதஸ்ச யயௌகால்யா ஷக்ர சனாமகம் புரம் ||27

தஸ்ய த்ரிலோகாதிக ரூபஸத்குணைரா ஸம்மிதாயாம் ரமமாண: ஸுதஞ்ச ||

ஷர்வத்ராதம் நாம்னாs ஜனயத்புராய: ஸமானவாயுர் பலவீர்யயுக்த: ||28

 

பீமசேனதேவர், காளியின் ஸ்வயம்வரத்திற்காக, காஷீஷ்வரனின் பட்டணத்திற்கு வந்து, அந்த ஸ்வயம்வரத்தில் காளியை அடைந்து, அங்கு வந்திருந்த மாகதாதி அனைத்து அரசர்களையும் வென்று, சாட்சாத் பாரதிதேவியின் அவதாரளான காளியுடன், காஷீஷ்வரனால் பூஜிக்கப்பட்டு, இந்திரபிரஸ்தத்திற்கு வந்து, அவள் மூலமாக ஷர்வத்ராத என்னும் புத்ரனைப் பெற்றார். அவனே முன்பு ஸமான வாயு. சமான வாயுவே பல, வீர்யனாக இங்கு பிறந்தான் -- என்று சொல்லியிருக்கிறார். ஷர்வத்ராதன் பீமசேனதேவரின் மகன் என்பதற்கு இந்த வாக்கியமே ஆதாரமாக இருக்கிறது.

 

ஐவரொளகீ3 குந்திபோ4ஜனு

ஆவினாமக நாக3 க்ரகளனு

தே3வத3த்த த3னஞ்சயரு அவதார வர்ஜிதரு |

ஆவஹோத்3வஹ விவஹ ம்வஹ

ப்ராவஹீபதி மருத ப்ரவஹனி

கா3வகாலகு கிஞ்சித34மரு மருதக3ணவெல்ல ||31

 

ஐவரொளகெ = நாகாதி ஐந்து பேர்களில்

ஆவினாமக = கூர்ம நாமகனான 8வது மாருதன்

குந்திபோஜன = குந்திபோஜராஜனாக பிறந்தவன்

நாக, க்ரகள, தேவதத்த, தனஞ்சய  = இந்த நால்வரும்

அவதார வர்ஜிதரு = அவதாரம் இல்லாதவர்கள்

ஆவஹ, உத்வஹ, விவஹ, சம்வஹ = முதலான மருத்கணர்கள் அனைவரும்

ப்ராவஹீபதி மருதப்ரவஹனிகெ = ப்ராவஹிபதியான ப்ரவஹ மருதனுக்கு (அஹங்காரிக பிராணனைவிடவும்)

கிஞ்சித்ததமரு = கொஞ்சம் குறைவானவர்கள்.

 

மருத்கணர்களில் ஆறாவது முதலான ஐந்து நாகாதிகளில் மூன்றாமவரான கூர்மன், ஷூரராஜனின் நண்பனான குந்திபோஜனாக பிறந்தான். இவன் ஷூரராஜனின் மகளான குந்திதேவிக்கு குந்தி என்று பெயரிட்டான். அதற்கு முன்னர், குந்திக்கு ப்ருதா என்று பெயர் இருந்தது. நாக, க்ருதள, தேவதத்த, தனஞ்சய - இவர்களுக்கு அவதாரம் இல்லை. அஹங்காரிக பிராண, ப்ரவஹ வாயு (48, 11 எண்ணிக்கையுள்ளவர்கள்) இவர்கள் இருவரைவிட, மற்ற, அவஹாதி அனைத்து மருத்களும் சிறிது குறைவானவர்கள்.

 

ப்ராணபான வ்யானுதா3

மானரைவரு உளித3 மருதரு

ஊனரெனிபரு ஹத்து விஷ்வேதே3வரவரிந்த3

ஸூனுக3ளு எனிஸுவரு ஐவரு

மானினி த்3ரௌபதிகெ3 கெலவரு

க்‌ஷோணியொளு கைகேயரெனிஸுவ ரெல்ல காலத3லி ||32

 

பிராண, அபான, வியான, உதான, சமான ஐவரு = இந்த ஐந்து பேரும்

உளித = இவர்களைத் தவிர, மற்ற

மருதரு = மருதர்கள் சமம் எனப்படுகின்றனர்.

இவரிந்த = ப்ராணாபானாதி இவர்களிடம்

ஹத்து விஷ்வேதேவர் = 10 விஷ்வேதேவர்கள்

ஊனரெனிபரு = சிறிது குறைவானவர்கள்

மானினி த்ரௌபதிகெ = புகழ் பெற்ற திரௌபதிக்கு

இவரு = 10 விஷ்வேதேவர்களில், 5 பேர்

சூனுகளு எனிசுவரு = மக்கள் எனப்படுகிறார்கள்

கெலவரு = மற்ற 5 பேர்

எல்லா காலதலி = அனைத்து கல்பங்களிலும்

கைகேயரெனிபரு = கைகேய என்னும் பெயரில் பிறக்கின்றனர்.

 

49 மருத்களில் மேலே சொன்ன அஹங்காரிக பிராண, ப்ரவஹ, இவர்கள் இருவரும் உத்தமர்கள். மற்ற 47 பேர்களில் ப்ராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐவர் சிறிது உத்தமர்கள். ஆகையால், பாகவத தாத்பர்யத்தில் மருதஸ்ச ஸமா: ஸர்வேஸ்பததேஷு ப்ரதானகா:’ 49 மருத்களில் சமர்கள். அவர்களில் 7 பேர் முக்கியமானவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

இது மட்டுமல்லாமல் பவன கணவராம்ஷௌஸ்வேத் ஸம்பாதினௌச ||

கேஸரிதி ப்ரவரமதமருத்ஸு ||

 

என்னும் வாக்கியங்களால் ஷ்வேத, ஸம்பாதி, கேசரி எனும் மூன்று கபிகள் மருத்களில், சிறந்த அம்சத்தினைக் கொண்டவர்கள் என்று சொல்லியிருப்பதால், மருத்கள் அனைவரும் சமானர் அல்லர் என்றும், சிறிது தாரதம்யம் உள்ளவர்கள் என்றும் தெரிகிறது. பாகவத தாத்பர்யத்தால், ஏழு பேர் ப்ராதனர் என்றும் அறிகிறோம். அவர்கள் யார் என்றால்,

 

* ப்ராண

* ப்ரவஹ ப்ராண

* ப்ராண, அபானாதி 5

என மொத்தம் 7 பேர் என்று அறிகிறோம். மற்றவர்கள் அனைவரும் சமானர்கள்.

 

மருத்களுக்கு விஷ்வேதேவதைகள் சமானர்கள் ஆனாலும், பிராண, அபானாதி 5 பேர்களுக்கு சிறிது குறைவானவர்கள் என்பது கருத்து. விஷ்வேதேவதைகள் புரூரவ, ஆர்த்ர, கால, காம, துரி, லோசன, தக்‌ஷ, க்ரது, ஸத்ய, வசு என்று 10 பேர். இவர்களில் முதலாம் ஐவர், திரௌபதி தேவியிடம், தர்மராஜ முதலான 5 பாண்டவர்கள் மூலமாக 5 மக்களாக பிறந்தனர். மற்ற ஐவர், கைகேய என்னும் பெயரால் பிறந்தனர் என்பது கருத்து.

 

திரௌபதியின் மக்களின் விஷயத்தை அடுத்த பத்தியில் பார்க்கப் போகிறோம். விஷ்வேதேவதைகளின் அவதாரம் கைகேய என்னும் விஷயத்தில், நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

விஷ்வேஷாம் தேவானாமவதாராஹி பஞ்ச தே கைகயா: ப்ராதரோ ஸ்யா:ஹரேஸ்ச ||

பக்தானித்யம் பாண்டவானாஞ்ச ||50

 

கிருஷ்ணனின் அத்தை மக்கள், மற்றும் கிருஷ்ணனின் அஷ்ட மஹிஷியரில் ஒருவளான பத்ரையின் சகோதரர் ஆன கைகேயர் என்னும் அண்ணன் தம்பிகள் ஐந்து பேர், விஷ்வேதேவதைகளின் அவதாரர்கள். இவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு மாத்ருஷ்வஸா; அதாவது, தாயுடன் கூடப்பிறந்தவர்கள் என்று அர்த்தம். கைகேயரின் தாயும், பாண்டவர்களின் தாயுமான குந்திதேவியும் அக்கா தங்கையர். ஆகையால், பாண்டவர்களுக்கு வேண்டியவர்கள் ஆயினர்.

இவர்களின் தந்தையான ஷைப்யனும், பாண்டவர்களின் வசத்தில் இருந்தான் என்று அறிகிறோம். ஆகையால், கைகேயர் இத்தகையவர்கள் என்று தெளிவாகிறது.

 

ப்ரதிவிந்த்3ஸ்ருஸோம ஸ்ருத கீ

ருதி ஷதானிக ஸ்ருதகர்ம த்3ரௌ

பதி குவரரிவரொளகெ3 அபி4தாம்ர ப்ரமுக2 சித்ர

ரத2னு கோ3ப கிஷோர ப3லரெ

ம்ப3துலரை க3ந்த4ர்வரிந்த3லி

யுதரு த4ர்ம வ்ருகோத3ராதி3ஜரெந்து3 கரெஸுவரு ||33

 

ப்ரதிவிந்த்ய, ஸ்ருதசோம, ஸ்ருதகீர்த்தி, ஷதானீக, ஸ்ருதகர்ம என்னும் இந்த 5 பேரும்

த்ரௌபதி குவரரு = திரௌபதியின் மக்கள்

இவரொளகெ = இந்த ஐவரில்

அபிதாம்ர, ப்ரமுக = கந்தர்வ ஸ்ரேஷ்டனான சித்ரரத, அபிதாம்ர, கோப, கிஷோர, பலர் என்பவர்கள்

அதுல = கந்தர்வர்களில் இந்த ஐவர் மட்டும் சமம். மற்றவர்கள் இவர்களுக்கு சமமல்ல என்று அர்த்தம்.

ஐகந்தர்வரிந்தலி = ஐந்து கந்தர்வர்களைவிட

யுதரு = ஆவேசத்தைக் கொண்டவர்கள்

தர்ம வ்ருகோதராதிஜரெந்து = இந்த ஐவரும், தர்மராஜ, பீமசேன, அர்ஜுன, நகுல, சகதேவ இந்த ஐந்து பேர்கள் மூலமாக, திரௌபதி மூலமாக பிறந்தவர்கள்

கரெசுவரு = உலகத்தில் புகழ் பெற்றவர்கள்.

 

தர்மராஜ முதலான 5 பேர் பாண்டவர்கள் மூலமாக திரௌபதியிடம் 5 பேர் விஷ்வேதேவதைகள் ப்ரதிவிந்தியா முதலான 5 பெயர்களால் பிறந்தனர். இந்த ஐவரில் ஐந்து கந்தர்வர்களின் ஆவேசம் இருந்தது. நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

அசங்க்ருஷ்ணாயா: பஞ்சசுதா குணாட்யா: விஷ்வேதேவா: பஞ்சகந்தர்வ முக்யை: ||11

அபிஷ்டாஸ்தே சித்ரரதாபிதாம்ர கிஷோர கோபால பலை: க்ரமேண

ப்ரதிவிந்த்ய: ஸ்ருதஸோம: ஸ்ருதாக்யோகீர்த்தி ஸ்ருதானீக உதஸ்ருத க்ரிய: ||12

யுதிஷ்டிராத்யை: க்ரமஷ: ப்ரஜாதா: ||

 

திரௌபதியிடம் விஷ்வேதேவதைகள் ஐவர், 5 கந்தர்வ ஸ்ரேஷ்டர்களின் ஆவேசத்தினால் பிறந்தனர். சித்ரரத, அபிதாம்ர, கிஷோர, கோபால, பல என்னும் 5 கந்தர்வர்கள், பிரதிவிந்த்ய முதலான ஐந்து பேரில் முறையே நிலைத்திருந்தனர்.

இந்த ஐந்து பேரும் தர்மராஜ முதலான 5 பாண்டவர்களால், திரௌபதியிடம் வரிசையாக பிறந்தனர்.

 

அதாவது,

* தர்மராஜன் மூலமாக பிறந்தவன் ப்ரதிவிந்த்ய,

* பீமசேனனின் மூலமாக பிறந்தவன் ஸ்ருதசோம,

* அர்ஜுனன் மூலமாக பிறந்தவன் ஸ்ருதகீர்த்தி,

* நகுலனின் மகன் ஷதானீக மற்றும்

* சகதேவன் மூலமாக பிறந்தவன் ஸ்ருதகர்ம.

 

இவர்களில் கந்தர்வர்களின் ஆவேசம் என்றால்:

 

* பிரதிவிந்த்யனில் சித்ரரத கந்தர்வனின் ஆவேசம்

* ஸ்ருதஸோமனில் அபிதாம்ர கந்தர்வனின் ஆவேசம்

* ஸ்ருதகீர்த்தியில் கிஷோர கந்தர்வனின் ஆவேசம்

* ஷதானீகவில் கோபால கந்தர்வனின் ஆவேசம்

* ஸ்ருடகர்மனில் பல கந்தர்வனின் ஆவேசம்

 

இருந்தது.

 

ஐந்து பேர் விஷ்வேதேவதைகள், திரௌபதியின் மக்கள் என்று சொல்லியிருக்கிறார். அந்த விஷ்வேதேவதைகளின் பெயர்கள் 32ம் பத்யத்தில் பத்ய அர்த்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

விவித3 மைந்த3ரு நகுல ஹதே3

வ விபு4 த்ரிஷிகா2ஷ்வினிக3 ளிவரொளு

தி3விபனாவேஷ விஹுதெ3ந்தி3கு3 த்3யாவ ப்ருத்2வி ருபு4 |

பவனஸுத விஷ்வக்ஸேன உமா

குவர விக்4னப த4னபமொத3லா

3வரு மித்ரகெ3 கிஞ்சிதா34மரெனிஸி கொளுதிஹரு ||34

 

விவித மைந்தரு = இந்த பெயர் கொண்ட கபிகள்

நகுல சஹதேவ,

விபு த்ரிஷிகரு = இந்த அவதாரங்கள்

அஷ்வினிகளு = நாஸத்ய தஸ்ர என்னும் அஸ்வினி தேவதைகளின் அவதாரங்கள்

இவரொளு = இவர்களில்

எந்திகு = எப்போதும்

திவிபனாவேஷ = தேவேந்திரனின் ஆவேசம்

இஹது = இருக்கிறது

த்யாவா, ப்ருதிவி, ருபு,

பவனசுத விஷ்வக்சேன = வாயுகுமாரனான விஷ்வக்சேன

உமாகுவர விக்னப = பார்வதியின் மகனான விக்னேஷ்வரன்

தனப = குபேரன்

மொதலாதவரு மித்ரகெ = மித்ரன் என்னும் சூரியனுக்கு

கிஞ்சிதாதமரு = சிறிது குறைவானவர்கள்

எனிஸி கொளுதிஹரு = என்று அழைக்கப்படுகிறார்கள்.

 

ராமாவதாரத்தில், ராமனின் சேவைக்காக, அஸ்வினி தேவதைகள், விவித, மைந்த என்னும் கபிகளாக பிறந்திருந்தனர். அஸ்வினி தேவதைகள் என்பவர்கள் குதிரையின் 2 மூக்குகளிலிருந்து சமமாக பிறந்தவர்களாகையால், அவர்கள் இருவரும் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே ரூபமாக இருக்கிறார்கள். எங்கு அவதாரம் செய்தாலும், இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள். ஆகையால், நாஸத்ய, தஸ்ர என்னும் இரு அஸ்வினி தேவதைகளும், விவித மைந்தர் என பிறந்தனர்.

 

அஸ்வினௌச நாஸத்ய தஸ்ரௌ விவிதஸ்ச மைந்த: -- என்னும் நிர்ணய வாக்கியம் இதற்கு ஆதாரம். கிருஷ்ணாவதார காலத்தில், பாண்டுராஜனின் மனைவியான மாத்ரியில் அஸ்வினி தேவதைகள், நகுல சகதேவர்களாக பிறந்தனர். நிர்ணய 12ம் அத்தியாயத்தில்:

 

மந்த்ரம் ஸமாதாயச மத்ரபுரீ வ்யசிந்தயத்ஸ்யான்னு கதந்த்விபுத்ரே ||

ஸதாsவியோகௌ திவிஜேஷுதஸ்ரௌ ந சைதயோர் நாம பேத: க்வசித்தி ||124

ஏகாபார்யா த்வேதயோர ப்யுஷாஹி ததாயாத: ||

ஸக்ருதாவர்தனாத்யௌ இதீஷந்த்யாss காரிதாவஸ்வினௌதௌ |125

தாவேன தேவௌ நகுல: பூர்வ ஜாத: ஸஹதேவோபூத் பஷ்சிமஸ்தௌயமௌஹி ||

 

பாண்டு ராஜனுக்கு குந்தி தேவியிடம், தர்மராஜ, பீமசேன, அர்ஜுனன் என்னும் மூவரும், யம, வாயு, இந்திர இந்த மூவரின் மூலமாக பிறந்த பிறகு, குந்திதேவியிடம் இருக்கும் சந்தானத்தைக் கொடுக்கக்கூடிய மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசம் செய்யவும் என்று பாண்டு ராஜன் கேட்க, அது குந்திக்கு இஷ்டமில்லாத போதும், கணவனின் பேச்சைத் தட்டமுடியாமல், அந்த மந்திரம் ஒரே ஒரு முறை மட்டுமே பலிக்குமாறு, மாத்ரிக்கு உபதேசித்தாள்.

 

அஸ்வினி தேவதைகள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பர். இவர்கள் இருவரில் எவ்வித பேதமும் காணப்படுவதில்லை. இருவருக்கும் உஷா என்னும் ஒருவளே மனைவி. ஆகையால், அவர்கள் இருவரை ஒரே மந்திரத்தில் அழைத்தால், அவர்கள் ஓரிரு மக்களைக் கொடுப்பார்கள் என்று நினைத்து, அந்த மந்திரத்தால் அஸ்வினி தேவதைகளை அழைத்தாள் மாத்ரி. அதே நொடியில், நாஸத்ய தஸ்ர என்னும் அந்த அஸ்வினி தேவதைகள் அங்கு வந்து, மாத்ரையிடம் தாமே பிறந்தனர். முதலில் நகுலன், பிறகு சகதேவன் பிறந்தனர். இருவரும் இரட்டையர்கள் என்று அறியவேண்டும். இந்த ஆதாரத்தினால், நகுல சகதேவர்களே அஸ்வினி தேவதைகள் என்று நிச்சயமாயிற்று.

 

விபு த்ரிஷிக (விஷிக) இவர்கள் இருவரும் இந்திரனாக இருந்தனர். இந்த விஷயத்தில் நிர்ணய 18ம் அத்தியாயத்தில்: பூர்வேந்த்ரா மாருத வ்ருஷ நாஸத்யாம் ஸ்ச துரஸ்திதாம் ||42 ‘. முந்தைய மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்த வாயுதேவர், யமதர்ம, அஸ்வினி தேவதைகள் இருவர் - ஆக மொத்தம் நான்கு பேரும் பூமியில் பிறப்பதாக யோசித்தனர். -- என்னும் வாக்கியத்திலிருந்து அஸ்வினி தேவதைகளும் இந்திரனாக இருந்தனர் என்று தெரிகிறது. அந்த இந்திரன் யார்? அவன் பெயர் என்ன? எந்த காலம் என்பதற்கு விஷ்ணு ரஹஸ்ய வாக்கியம்: (28ம் அத்தியாயம்).

 

சதுர்த்தஸ்தாபஸோ நாம்னா ஹ்யுத்தமாஸ்யானு ஜோமனு: |

நாஸத்யோ விஷிக்யோ நாம்னா ப்ராப்த இந்த்ரபதம் ஸுரா: ||2

 

நான்காம் மனு உத்தமனின் தம்பியான தாபஸ என்பவன், அந்த மன்வந்தரத்தில் நாஸத்ய தஸ்ர என்னும் அஸ்வினி தேவதைகளில், நாஸத்ய என்பவன் விஷிக என்னும் பெயரில் பிறந்து, இந்திர பதவியைப் பெற்றான் என்று இருக்கிறது. ஆனால் தாசார்யரோ ஷிகிர என்று சொல்லியிருக்கிறார்.

 

இப்படி பெயர் வித்தியாசம் வருவதற்கு காரணம் என்ன என்று கேட்கலாம். பாகவத 8ம் ஸ்கந்தத்தில்:

 

சதுர்த்த உத்தம ப்ராதாமனுனாம்னாச தாபஸ: ||

ஸத்யாகா ஹரயோ வீராதேவாஸ்த்ரிஷிக ஈஷ்வர: ||

 

நான்காம் மனு உத்தமனின் தம்பி தாபஸ என்பவன், ஸத்யகா ஹரி, வீர ஆகியோர் தேவதாகணங்கள், த்ரிஷிக என்னும் தேவேந்திரன் என்று சொல்லியிருக்கிறார். இப்படி பாகவதத்தில் த்ரிஷிக என்றே இருக்கிறது. தாசார்யரும் த்ரிஷிக என்றே சொல்லியிருக்கிறார். விஷ்ணு ரஹஸ்யத்தில் இதே விஷயத்தில் விஷிக என்று சொல்லியிருப்பதால், புத்தகத்தில் தவறு இருந்தாலும் இருந்திருக்கலாம் அல்லது பாட பேதம் இருந்தாலும் இருக்கலாம். அல்லது, ஒருவருக்கு 2 பெயர்கள் இருக்கலாம். 5ம் மன்வந்தரத்தில் அஸ்வினிகளில் தஸ்ர என்பவன், விபு என்னும் பெயரில் இந்திரனாக இருந்தான்.

பாகவத 8ம் ஸ்கந்தம் 5ம் அத்தியாயத்தில்:

 

பஞ்ச மோரைவதோ நாம மனுஸ்தாபஸ ஸோதர: || விபுரிந்த்ர: ||

 

5ம் மனு தாபஸனின் தம்பி ரைவத என்பவன். தேவேந்திரன் விபு என்பவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆதாரங்களின் பேரிலேயே விபு த்ரிஷிகர் இருவரும் பூர்வேந்திரர் என்றும் அஸ்வினி அவதாரிகள் என்றும் தெரிய வருகிறது. இவர்களில் விவித என்னும் கபியில், இந்திரனின் ஆவேசம் இருந்தது என்று நிர்ணய 3ம் அத்தியாயத்தில்:

 

அஸ்வினௌச பபூவதுஸ்தௌ விவிதஸ்ச மைந்த: ||

ப்ரம்மோத்பவௌதௌ புனரேவ ஸூர்யாத் பபூவது ஸ்தத்ரகனீயஸஸ்து ||

ஆவேஷ இந்தொரோவரதானதோ பூத்ததோ பலீயான் விவிதோஹி மைந்தாத் ||73

 

அஸ்வினி தேவதைகள் முன்னர் பிரம்மதேவரின் மக்கள். மற்றும் சூரியனின் பெண் குதிரையின் மூக்கின் த்வாரத்திலிருந்து பிறந்தவர்கள். அவர்களே ராமாயணத்தில் மைந்த விவித என்னும் கபிகளாக பிறந்தனர். அவர்களில் சிறியவனான விவித என்பவனில் இந்திரனின் ஆவேசமும், வர பலமும் இருந்ததால், மைந்தனைவிட பலசாலியாக இருந்தான், என்பது இந்த வாக்கியத்தால் தெரியவருகிறது.

 

த்யாவா ப்ருத்வி, ருபுகணங்கள், விஸ்வக்சேன, விக்னேச, குபேர ஆகியோர், மித்ரனைவிட சிறிது குறைவானவர்கள்.

 

பாவக்4னி குமாரனெனிஸு

ச்யாவனரு த்2யமுனி சாக்‌ஷுஷ

ரைவத ஸ்வாரோசிஷோத்தம பி3ரம்ம ருத்3ரேந்த்3|

தே3வத4ர்மனு த3க்‌ஷ நாமக

ஸாவரணி ஷஷபிந்து3 ப்ருது2 ப்ரீ

யாவ்ரதனு மாந்தா4த க3யனு ககுத்ஸ்த2 தௌ3ஷ்ந்தி ||35

 

அக்னி குமாரனெனிஸுவ = அக்னியின் மூத்த மகன் என்று சொல்லப்படும்

பாவக = பாவகன்

ச்யாவன, உசித்ய என்னும்

முனி = இரு ரிஷிகள்

சாக்‌ஷுஷ மனு, ரைவத, ஸ்வாரோசிஷ, உத்தம - இந்த 4 மனுக்களும்

பிரம்ம = பிரம்ம சாவர்ணி

ருத்ர = ருத்ர சாவர்ணி

இந்த்ர = இந்திர சாவர்ணி

தேவ = தேவ சாவர்ணி

தர்மனு = தர்ம சாவர்ணி

தக்‌ஷ நாமகனு = தக்‌ஷ சாவர்ணி

சாவர்ணி, என இந்த 7 பேரும்,

ஷஷபிந்து = இந்த பெயருள்ள சக்ரவர்த்தி

ப்ருது = ப்ருது சக்ரவர்த்தி

ப்ரியவ்ரதனு, மாந்தாத, கயனு, ககுஸ்த, த்யௌஷ்யந்தி = துஷ்யந்தனின் மகனான பரதன்.

 

விளக்கம் 38ம் பத்யத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

 

4ரத ரிஷப4ஜ ஹரிணிஜ த்விஜ

4ரத மொத3லாத3கி2ல ராயரொ

ளிருதிஹுது ஸ்ரீவிஷ்ணுப்ராணாவேஷ ப்ரதிதி3னதி3 |

வரதி3வஸ்பதி ஷம்பு4 அத்3பு4

கரெஸுவனு ப3லி ஸ்ருத வித்4ருத

நெரெஷுசி ருததா4ம சப்தேந்த்3ரஷ்ட க3ந்த4ர்வ ||36

 

ருஷபஜ = ருஷபதேவரின் மகனான

பரத = பரத ராஜன்

ஹரிணிஜ = மான் பிறவியைப் பெற்ற பரதனின் இரண்டாம் ரூபம்

த்விஜ = பிராமண பிறவியை எடுத்த பரதனின் மூன்றாம் ரூபம்

என மூன்று ரூபங்களைக் கொண்ட பரத

மொதலாத = முதலான

அகில ராயரொளு = அனைத்து 100 ராஜர்களிலும்

ப்ரதிதினதி = அனைத்து காலங்களிலும்

ஸ்ரீவிஷ்ணு ப்ராணாவேஷ = ஸ்ரீபரமாத்மனின் மற்றும் வாயுதேவரின் ஆவேசம் இருந்தது.

வர = உத்தமனான

திவஸ்பதி = திவஸ்பதி என்னும் தேவேந்திரன்

ஷம்பு, அத்புத, பலி, வித்ருத, ஷுசிஸரெயெனிப = இவர்களுக்கு சமமான

ருததாம = ருததாம முதலான ஏழு பேர்கள்

கரெசுவரு = இந்திரன் எனப்படுகிறார்கள்

இந்த ஏழு இந்திரர்கள்,

அஷ்ட கந்தர்வ = 8 பேர் கந்தர்வர்கள் ஆவர்.

 

விளக்கம் 38ம் பத்யத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

 

அரஸெனிப கர்மஜரு வைஷ்வா

நரக34ம ஷதகு3ணதி3 விக்4னே

ஷ்வரகெ3 கிஞ்சித்கு3ண கடி3மெ ப3லிமுக்2ய பாவகரு |

ஷரப4 பர்ஜன்யாக்2யமே 4

தரணி பா4ர்யா ஞ்ஞெ ஷார்வரி

கரன பத்னியு ரோஹிணி ஷ்யாமலெயெ தே3வகியு ||37

 

அரஸெனிப = ஷஷிபிந்து, மாந்தாதா முதலான அரசர்கள் என்று புகழ்பெற்ற

கர்மஜரு = கர்ம தேவதைகள்

வைஷ்வானர = அக்னிக்கு

ஷதகுணதி = 100 குணங்களால்

அதம = குறைவானவர்கள்

பலிமுக்ய = பலி சக்ரவர்த்தி முதலான

இந்திர, பாவக, உசித்ய ஆகியோர்

விக்னேஷ்வரகெ = விக்னேஷ்வரனுக்கு

கிஞ்சித் குணகடிமெ = சிறிது குணம் குறைவு

ஷரப பர்ஜன்யாக்ய = ஷரப என்னும் கபிரூபத்தை தரித்த பர்ஜன்யன் என்னும்

மேகப = மேகாதிபதி

தரணி = விவஸ்வான் என்னும் சூரியனின்

பார்யா = மனைவியான

சஞ்ஞே = சஞ்ஞாதேவியும்,

ஷார்வரீகரன பத்னியு = சந்திரனின் மனைவியான ரோஹிணியும்

ஷாமலெயு = யமதேவரின் மனைவியான ஷாமலா தேவியும்.

 

விளக்கம் 38ம் பத்யத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

 

அரஸியெனிபளு த4ர்மராஜகெ3

வருண பா4ர்யோஷா2தி3 ஷட்கரு

கொரதெ எனிபரு பாவகாத்3யரிகெ3ரடு3 கு3ணதி3ந்த3 |

எரடு3 மூர்னகத4 ஸ்வாஹா

கரெஸுவளு ஷாதே3வி வைஷ்வா

நரமட3தி3கெ33ஷகு3ண அவரளு அஷ்வினீபா4ர்ய ||38

 

தேவகியு = முந்தைய பத்ய இறுதியில் சொல்லப்பட்டுள்ள தேவகியும்

ஷாமலாதேவியின் அவதாரம் எனப்படுகிறாள். இவள்

தர்மராஜகெ = தர்மராஜனுக்கு

அரஸியெனிபளு = மனைவி எனப்படுகிறாள். இந்த தேவகி,

வருண பார்யா = கங்கை

உஷாதிஷட்கரு = அனிருத்தனின் மனைவியான உஷா முதலான 6 பேர்

பாவகாத்யரிகெ = அக்னியின் மகனான பாவக முதலானவர்களைவிட

எரடு குணதிந்த = இரு குணங்களால்

கொரதெயெனிபரு = குறைவு எனப்படுகிறார்கள்

எரடு மூர்ஜனர = பர்ஜன்ய முதலான ஆறு பேர்களைவிட

ஸ்வாஹா = அக்னியின் மனைவியான ஸ்வாஹாதேவி

அதம = குறைவு

அஸ்வினீபார்யா = அஸ்வினி தேவதைகளின் மனைவியான

உஷாதேவி

கரெஸுவளு = பெயருள்ள அவள்

வைஷ்வானர மடதிகெ = அக்னி தேவனின் மனைவியான ஸ்வாஹாதேவிக்கு

தஷகுண = 10 குணங்களால்

அவரளு = குறைவு எனப்படுகிறாள்.

 

35ம் பத்யத்திலிருந்து 38ம் பத்யம் வரைக்கும் இருக்கும் 4 பத்யங்களில், பத்ய இறுதியில் க்ரியா பதங்கள் (வினைச் சொற்கள்) இல்லாத காரணத்தால் 4 பத்யங்களையும் சேர்த்து ஒன்றாகவே பார்க்க வேண்டும். ஆகையால், அந்த 4 பத்யங்களின் தாத்பர்யமும் இங்கு எழுதப்பட்டுள்ளது.

 

ப்ரதான அக்னியின் மூத்த மகனான பாவகன் என்பவன். சாவன, உசித்ய என்னும் ரிஷிகள் இருவர்.

 

சாக்‌ஷுஷ = 6ம் மன்வந்திரத்தின் அதிபதியான மனு.

ரைவத = 5ம் மனு

ஸ்வாரோசிஷ = இரண்டாமவன்.

உத்தம = மூன்றாம் மனு.

ஆகிய 4 மனுகள்

 

பிரம்ம சாவர்ணி,

ருத்ர சாவர்ணி,

இந்திர சாவர்ணி,

தேவ சாவர்ணி,

தர்ம சாவர்ணி,

தக்‌ஷ சாவர்ணி,

சாவர்ணி

என்னும் இந்த ஏழு மனுகள், அடுத்த 8ம் மன்வந்தரத்திலிருந்து துவங்கி, 14ம் மன்வந்தரத்தின் வரை இருக்கும் ஏழு மன்வந்தரங்களுக்கு அதிபதிகள் ஆவர்.

 

மொத்த மனுகள் 14 பேர். அவர்களில் 4ம் மன்வந்தராதிபதியான தாபஸ என்பவன், ஸ்ரீபரமாத்மனின் அவதாரமே ஆகும். ஸ்வாயம்புவ மனு ரதி, சசி, ப்ருஹஸ்பதி ஆகியோருக்கு சமம் என்று அங்கு சேர்க்கிறார். வைவஸ்வத மனுவை விஸ்வாமித்ர, மரீசி முதலாதவர்களின் கக்‌ஷையில் சேர்க்கிறார். இப்படி 3 பேரைத் தவிர, மற்ற 11 மனுகளை இங்கு சொல்லியிருக்கிறார்.

 

ஷஷிபிந்து ராஜன் ப்ருது சக்ரவர்த்தி, ப்ரியவ்ரத ராஜன், மாந்தாத ராஜன், கய, ககுஸ்த, துஷ்யந்த ராஜனின் மகனான பரதராஜன், ரிஷபதேவரின் மகனான பரதனுக்கு, மானின் பிறவியும், பிராமண பிறவியும் கிடைத்தது. இந்த மூன்று பிறவிகளைக் கொண்ட பரதன், இவரே முதலான அனைத்து ராஜர்களிலும் ஸ்ரீபரமாத்மன் ஆவேசமும், வாயுதேவரின் ஆவேசமும் இருக்கிறது.

 

மற்றும் இந்திரர் 14 பேர். அவர்களில் 7 இந்திரரை உத்தம கக்‌ஷையில் சேர்த்திருக்கிறார்.

 

* ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் யக்ஞ நாமகனான பரமாத்மனே இந்திரன்.

* ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் ரோசன என்னும் வாயுதேவரே இந்திரன்.

* உத்தம மன்வந்தர என்றால் மூன்றாம் மன்வந்தரத்தில் ஸத்யஜித் என்னும் யமதர்மன் இந்திரனாக இருந்தான்.

* தாபஸ, ரைவத என்னும் இந்த நான்காம், ஐந்தாம் மன்வந்தரங்களில் த்ரிஷிக, விபு என்று அஸ்வினி தேவதைகள்

இந்திரராக இருந்தனர்.

* 6ம் சாக்‌ஷுஷ மன்வந்தரத்தில் மந்த்ரத்யும்ன என்றும்,

* தற்போது நடைபெற்று வரும் ஏழாம் வைவஸ்வத மன்வந்தரத்தில் புரந்தர என்றும்,

இந்த இரு இந்திரரும் சசிபதியான புரந்தர என்றும் அறியவேண்டும்.

 

இந்த ஏழு இந்திரர்களைத் தவிர, அடுத்த ஏழு இந்திரர்கள் இருக்கின்றனர்.

 

* 8ம் மன்வந்தரத்தில் பலி சக்ரவர்த்தி இந்திரன் ஆகிறான்.

* 9ம் மன்வந்தரத்தில் அத்புத என்பவனும்,

* 10ம் மன்வந்தரத்தில் ஷம்பு என்னும் இந்திரனும்

* 11ம் மன்வந்தரத்தில் வித்ருத எனும் இந்திரனும்

* 12, 13, 14ம் இந்த மூன்று மன்வந்தரங்களில், ருததாம, திவஸ்பதி, ஷுசி என்னும் மூன்வரும் இந்திரர்கள்.

 

கந்தர்வர்களில் ப்ரதானர் 8 பேர். இவர்கள் அனைவரும் சுரர்கள். பாவகனிலிருந்து துவங்கி சாவர்ணி வரைக்குமான தேவதைகள், கர்மதேவதைகள் எனப்படும் ஷஷிபிந்து முதலான ராஜர்கள், (கர்மதேவதைகள் என்றால், முதலில் அரசர்களாக இருந்து, கர்மத்தினால் தேவத்வத்தைப் பெற்றவர்கள் என்று அர்த்தம்). மற்றும் திவஸ்பதி முதலான இந்திரர்கள் கந்தர்வர்கள். இவர்கள் அனைவரும் பிரதான அக்னிக்கு 100 குணங்களால் குறைவானவர்கள்.

 

விக்னேஸ்வரனைவிட பலி சக்ரவர்த்தி, பாவக முதலானவர்கள் சிறிது குறைவானவர்கள்.மேகாதிபதியான பர்ஜன்ய என்பவன், 12 ஆதித்யர்களில் ஒருவன். இவனுக்கு ஷரப என்னும் கபி அவதாரம் இருந்தது. ராமாயண பாலகாண்ட 17ம் சர்க்கத்தில் ஷரபஞ்சனயாமாஸ பர்ஜன்யஸ்து மஹாபல:’ . மஹா பலசாலியான பர்ஜன்யன் ஷரப என்னும் கபியை ஸ்ருஷ்டித்தான் என்னும் வாக்கியம் இதற்கு ஆதாரம்.

 

இந்த

* பர்ஜன்யன்,

* விவஸ்வான் என்னும் சூரியனின் மனைவி சஞ்ஞாதேவி,

* சந்திரனின் மனைவி ரோஹிணி

* யமதேவரின் மனைவி ஷாமலாதேவி

* வருணனின் மனைவி கங்கை

* அனிருத்தனின் மனைவி உஷெ

-- இவர்கள் ஆறு பேரும், பாவக முதலானவர்களைவிட, 2 குணங்கள் குறைவு என்று அறியவேண்டும்.

 

இவர்களில், யமனின் மனைவி ஷாமலாதேவிக்கு தேவகி என்று ஒரு அவதாரம் உண்டு. அது வசுதேவனின் மனைவி தேவகி அல்ல. இது தர்மராஜனின் மனைவி. நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

அதோபயோமே ஷிஷுபாலபுத்ரீம் யுதிஷ்டிரோ தேவகீ நாம பூர்வம் |

ஸ்த்ரீயாம்பார்யாம் ||

 

தர்மராஜன், சிசுபாலனின் மகளான தேவகியை திருமணம் செய்து கொண்டான். அவளே முன்னர் யமனின் மனைவி. யமனே தர்மராஜனாக இருந்ததால், இவனின் மனைவி என்று கூறினார். இந்த வாக்கியம், ஷாமலா, சிசுபாலனின் மகளான தேவகியின் அவதாரம் என்று சொல்வதற்கு ஆதாரமாக இருக்கிறது.

 

மேலே பார்த்த பர்ஜன்யாதி 6 பேர்களைவிட, அக்னியின் மனைவியான ஸ்வாஹாதேவி இரு குணங்களால் குறைவானவர். அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவி, ஸ்வாஹாதேவியைவிட 10 குணங்கள் குறைவானவர்.

 

ஸு3ருஷன ஷக்ராதி3 ஸுரயுத

பு34னு தானபி4மன்யு வெனிஸு

பு33னிகி3ந்த3 ஷ்வினிய பா4ர்யா ஷல்யமாக34

உத3ரஜெ உஷாதே3விகி3ந்த3லி

அத4மனெனிப ஷனைஸ்சரனு ஷனி

34ம புஷ்கர கர்மபனு எனிஸுவனு பு34ரிந்த3 ||39

 

சுதருஷன = சக்கரம்

ஷக்ராதிசுரயுத = இந்திர முதலான என்றால், யம, வாயு, இந்திர, அஸ்வினி, சந்திர இந்த தேவதைகளின் அம்சத்தைக் கொண்ட

புதனு

தானு அபிமன்யு வெனிஸுவ = அர்ஜுனனின் மகனான அபிமன்யுவாக பிறந்தான்

ஷல்யமாகதர = ஷல்ய, ஜராசந்த இவர்களின்

உதரஜா = வீர்யத்தினால் பிறந்த இரு அவதாரங்களைக் கொண்ட

அஸ்வினி பார்யா = அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவி

புதனகிந்த = புதனைவிட, குறைவு எனப்படுகிறார்

உஷாதேவிகிந்தலி = உஷாதேவியைவிட

ஷனைஸ்சரனு அதமனெனிப = சனீஸ்வரன் அதமன் எனப்படுகிறான்

புஷ்கர கர்மபனு = புஷ்கர என்னும் கர்மத்திற்கு அதிபதியான

ஷனிகெ = சனியைவிட

புதரிந்த = ஞானிகளால்

அதமனெனிஸுவனு = குறைவு எனப்படுகிறான்.

 

சந்திரனின் மகனான புதன் விசேஷமான சந்திராம்ஷத்தினாலும், சுதர்ஷன என்னும் பகவந்தனின் சக்கரத்தின் ஆவேசத்தினாலும், யம, வாயு, இந்திர, அஸ்வினி இவர்களின் ஆவேசத்தினாலும் சேர்ந்து, சுபத்திரையிடம் அர்ஜுனன் மூலமாக அபிமன்யு என்று பிறந்தான். நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

 

தேஷாம்த்வயோஷ்சவர ஜோபிமன்யு: ||

சந்த்ராம்ஷ யுக்தோ திதராம்புதோஸௌ ஜாதஸ் ஸுபத்ரா ஜடரெsர்ஜுனேன |

தர்மே ரஷக்ராம்ஷ யுதோஸ்வினோஸ்ச ததைவ க்ருஷ்ணஸ்யச சன்னிதானயுக் ||213

 

என்னும் வாக்கியமே இதற்கு ஆதாரம். அபிமன்யுவிடம் ஸ்ரீகிருஷ்ணனின் சன்னிதானம் இருக்கிறது என்று இந்த வாக்கியத்திலிருந்து தெரிகிறது.

 

அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷெ, புதனைவிட சிறிது குறைவானவள். இவளுக்கு இரு அவதாரங்கள். ஷல்யனின் மகளும், நகுலனின் மனைவியுமான கரேணுமதி அவதாரம் ஒன்று. ஜராசந்தனின் மகளும், சகதேவனின் மனைவியுமான விஜயா என்னும் ரூபம் ஒன்று. இந்த இரண்டும் உஷாதேவியின் அவதாரங்கள். அஸ்வினி தேவதைகள் இருவருக்கும் உஷே என்னும் ஒருவளே மனைவியாக இருந்ததால், அஸ்வினி தேவதைகளே நகுல சகதேவர்களாக வந்திருப்பதாலும், இவர்கள் இருவருக்கும் மனைவியாக, ஒருவளே இரு ரூபங்களில் வந்தாள்.

 

நிர்ணய 20ம் அத்தியாயத்தில்:

பீம: கன்யாம் ஸஹதேவஸ்ய ஹேதோஸ் ஸமக்ர ஹேதனுஜஸ்யாத்மன ஸ்ஸ: ||

நகுலஸ்யாதான்மத்ரராஜோஹி பூர்வம்ஸ்வீயாம் கன்யாம் ஸாததைஷாப்யுஷாஹி ||

 

பீமசேனதேவர், ஜராசந்தனைக் கொன்ற உடன், அவனின் மகனான சகதேவன், ஒரு ரதத்தில் தன் தங்கையை, பீமசேன தேவரிடம் ஒப்படைத்து, அவரிடம் வேண்டினான் என்று முந்தைய நிர்ணய ஸ்லோகத்தில் சொன்னதை பார்த்தோம்.

அந்த ஸ்லோகம், 11 ருத்ரர்களின் தாரதம்யத்தை சொல்லும் சந்தர்ப்பத்தில், பத்ரதாப என்னும் ருத்ரன், ஜராசந்தனின் மகனாக சஹதேவனாக பிறந்தார் என்று சொல்கிறது.

 

இதே சந்தி 27ம் பத்ய அர்த்தத்தில் அதனை உதாரணம் கொடுத்து, விளக்கியிருக்கிறோம். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவெனில்: ஜராசந்தனின் மகனான சஹதேவன் கொடுத்த கன்யையை, பீமசேனதேவர், தனது தம்பியான சகதேவனுக்குக்காக ஏற்றுக் கொண்டார். அவளை சகதேவனுக்கே திருமணம் செய்தார். இதற்கு முன்னர், ஷல்யன், நகுலனுக்கு தன் மகளைக் கொடுத்திருந்தான். அந்த ஷல்யனின் மகள் மற்றும் இந்த சஹதேவனின் தங்கையும் ஜராசந்தனின் மகளுமான இருவரும், முன்னர் அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவி என்று அறியவேண்டும். -- என்று இந்த வாக்கியத்தினால் அறிகிறோம்.

 

இந்த உஷாதேவியைவிட சனீஸ்வரன், அதமன். அவனைவிட கர்மத்திற்கு அபிமானியான புஷ்கரன் அதமன் எனப்படுகிறான்.

 

உத்3வஹா மருதான்விதவிரா

4 த்3விதிய ஞ்யனு தும்பு3ரு

வித்3வது3த்தம ஜனமேஜய த்வஷ்ட்ருயுத சித்ரரத2 |

த்3வினுத த3மகோ4ஷக கப3

ந்த1த்3வயரு க3ந்த4ர்வத3னு மனு

பத்3ம்ப4வயுத கிஷோரக்ரூர நெனிஸுவனு ||40

 

தும்பரு = தும்பரு என்னும் கந்தர்வனுக்கு

விராத = விராத என்னும் அசுர ரூபம் ஒன்று

த்விதிய = இரண்டாவதாக

உத்வஹாமருதான்வித = உத்வஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்ட

சஞ்சயனு = சஞ்சயனின் ரூபம் ஒன்று; என இரு ரூபங்கள்

வித்வதுத்தவ = அறிந்தவர்களில் உத்தமனான

ஜனமேஜய = ஜனமேஜய ராஜன்

த்வஷ்ட்ருயுத = த்வஷ்ட்ரு என்னும் சூரியனின் அம்சத்தைக் கொண்ட

சித்ரரத = சித்ரரத என்னும் கந்தர்வனின் அவதாரம்

ஸத்வினுத = சஜ்ஜனர்களால் வணங்கப்படும்

தமகோஷக = தமகோஷ ராயனின் அவதாரம் ஒன்று

கபந்த = கபந்த என்னும் அசுர ரூபம் ஒன்று

த்வயரு = இந்த இரு ரூபங்களும்

தனு கந்தர்வ = தனு என்னும் கந்தர்வனின் அவதாரங்கள்

மனு = ஸ்வாயம்புவ மனு

பத்மஸம்பவயுத = பிரம்மதேவரின் அம்சத்தைக் கொண்ட

கிஷோரனு = கிஷோர என்னும் கந்தர்வன்

அக்ரூரனெனிஸுவனு = அக்ரூரனாக பிறந்தான்.

 

தும்பரு என்னும் கந்தர்வனுக்கு விராத என்னும் அசுர ரூபம் ஒன்று. இரண்டாவது, சஞ்சய என்பவனின் ரூபம். இப்படியாக இரு ரூபங்கள். தும்பரு என்னும் கந்தர்வன் விராத என்னும் விஷயத்தில் நிர்ணய 5ம் அத்தியாயத்தில்:

 

ராமோபி தத்ர தத்ருஷே தனதஸ்ய ஷாபாத்கந்தர்வ முர்வஷிரதேரத யாதுதானீம் |

ப்ராப்தந்தஷாம் ஸபதிதும்பரு நாமதேயம் நாம்னா விராதமபி ஷர்வவராதவத்யம் ||20

 

ராமதேவர், சீதா லட்சுமணர்களுடன், தண்டகாரண்ய பிரவேசம் செய்தபோது, விராத என்னும் அசுரனைக் கண்டார். அவன் முன்பு தும்பரு என்னும் கந்தர்வனாக இருந்தான். ஒரு முறை ஊர்வசியானவள், குபேரனின் ஆணைப்படி அவனின் வீட்டிற்கு அவசரமாக சென்று கொண்டிருந்தபோது, அவள் வழியை மறித்த தும்பரு, அவளை சரியான நேரத்திற்கு செல்ல விடாமல் தடுத்தான். இதை அறிந்த குபேரன், தும்பருவை அசுரனாகப் பிறக்க வேண்டும் என்று சாபம் கொடுத்தார். அவனே விராத என்னும் அசுரனாகப் பிறந்து, ருத்ரதேவரின் வரத்தினால், யாராலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான் என்று இந்த ஆதார வாக்கியம் சொல்கிறது.

 

இதே தும்பரு, சஞ்சயன் என்னும் விஷயத்தில், நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

கவத்கணாதாஸ ததைவ ஸூதாத் ஸமஸ்தகந்தர்வ பதி: தும்பரு: ||

யௌத்வஹோ நாம மருத் ததம்ஷயுக்தோ வஷே சஞ்சயனமதேய: ||143

 

த்ருதராஷ்டிர ராஜனின் சாரதியான கவத்கண என்னும் பூதஜாதியைச் சேர்ந்தவனிடம், தும்பரு என்னும் கந்தர்வன், உத்வஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்டு, சஞ்சய என்னும் பெயரில் பிறந்தான் என்று இந்த ஆதார வாக்கியம் சொல்கிறது.

 

சித்ரரத என்னும் கந்தர்வன், த்வஷ்ட்ரன் என்னும் சூரியனின் ஆவேசத்தைக் கொண்டு த்ருபதராஜனின் மகனாகி, ஜனமேஜய என்னும் பெயரில் பிறந்தான். நிர்ணய 18ம் அத்தியாயத்தில்:

 

அக்ரதஸ்துஷி கண்ட்யாகாத்ரதோதார: ஷரான்க்‌ஷிபன் |

ஜனமேஜயஸ்த மன்வேவபூர்வம் சித்ரரதோஹிஸ: ||71

த்வஷ்ட்ர ராவேஷ சம்யுக்த: ஸஷரானப்யவர்ஷத ||

 

த்ரோணாசார்யரின் வாக்கியத்தின்படி, த்ருபத ராஜனை வென்று அவனை த்ரோணாசார்யரிடம் ஒப்படைப்பதற்கு, பீமார்ஜுனர்கள அவனுடன் போருக்குச் சென்றனர். த்ருபதனும் தன் படைகளுடன் போருக்கு வந்தான். ஷிகண்டியும் புறப்பட்டான். அவன் பின்னாலேயே, அவனின் தம்பியான ஜனமேஜயனும் பாணங்களை பொழிந்தவாறே வந்தான். அவன் முன்பு, சித்ரரத என்னும் கந்தர்வனாக இருந்தான். த்வஷ்ட்ர என்னும் சூரியனின் அம்சத்தைக் கொண்டவன் என்று சொல்லியிருக்கிறார். அந்த வாக்கியமே இதற்கு ஆதாரம்.

 

தமகோஷ கபந்தௌதனுகந்தர்வ உச்யதே -- என்னும் பிருஹத் தாரதம்ய வாக்கியத்தின்படி ராமாவதாரத்தில் ராமதேவரால் கொல்லப்பட்ட கபந்த என்னும் அசுரனும், ஸ்ரீகிருஷ்ணனின் அத்தையின் கணவனான தாகோஷ ராஜனும், தனு என்னும் கந்தர்வனின் ரூபங்கள்.

 

பிரம்மா ஸ்வாயம்புவாவிஷ்டோ ஹ்யக்ரூர: ப்ராக்கிஷோர: -- என்னும் ஆதாரத்தின்படி பிரம்மதேவர் மற்றும் ஸ்வாயம்புவ மனு இவர்களின் அம்சத்தைக் கொண்ட கிஷோர் என்னும் கந்தர்வன், அக்ரூரராக பிறந்திருக்கிறான் என்று தெரிகிறது.

 

வாயுயுத த்4ருதராஷ்ட்ர தி3விஜர

கா3யகனு த்3ருதராஷ்ட்ர நக்ரனு

ராயத்3ருபதா3வஹ விஸிஷ்டனு ஹூஹுக3ந்த4ர்வ |

நாயக விராட்விவஹயுத ஹஹ

ஞேய வித்3யாத4ரனெ அஜக3

தாயெனிஸுவனு உக்3ஸேனனெ உக்3ஸேனாக்2||41

 

த்ருதராஷ்ட்ர = திருதராஷ்ட்ர என்னும்

திவிஜர காயகனு = தேவ கந்தர்வன்

வாயுயுத = வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்டு

த்ருதராஷ்ட்ர = த்ருதராஷ்ட்ர ராஜன்

நக்ரனு = கஜேந்திரனை பிடித்துக் கொண்டிருந்த முதலையை

ராயத்ருபதனு = த்ருபத ராயன்

அவஹவிஷிஷ்ட = ஆவஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்ட

ஹூஹு கந்தர்வ = ஹுஹு என்னும் கந்தர்வனின் அவதாரங்கள்

நாயகவிராட = விராட ராஜன்

விவஹயுத = விவஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்ட

ஹாஹா = ஹாஹா என்னும் கந்தர்வனின் அவதாரம் ஆகும்.

கேயவித்யாதரனே = பாடகனான சுதர்ஷன என்னும் வித்யாதரன்

அஜகர = நந்தகோபனை விழுங்கிய அஜகரன்

உக்ரஸேனாக்ய = உக்ரசேன என்னும் கந்தர்வன்

உக்ரசேனனெ எனிசுவனு = உக்ரசேன ராஜன் என்று அழைக்கப்படுகிறான்.

 

அபூச்சதஸ்யாம் த்ருதராஷ்டனாமகோ கந்தர்வராட் பவனாவேஷயுக்த: ||129

 

என்னும் நிர்ணய 11ம் அத்தியாயத்தின் வாக்கியத்தின் ஆதாரத்தின்படி, த்ருதராஷ்டிரன் என்னும் கந்தர்வன், வாயுதேவரின் ஆவேசத்தைக் கொண்டு, த்ருதராஷ்டிர என்னும் ராஜனாக, அம்பிகெ என்னும் ஸ்த்ரியில் பிறந்தான் என்று தெரிகிறது.

 

ஹுஹு என்னும் கந்தர்வனே முதலையாக பிறந்தான் என்னும் விஷயத்தில், பாகவத 8ம் ஸ்கந்தத்தின்:

 

யோஸௌக்ராஹ: ஸவைஸத்ய: பரமாஸ்சர்ய ரூபத்ருக் |

முக்தோதேவல ஷாபேன ஹூஹூ கந்தர்வஸத்தம: ||

 

கஜேந்திரனை பிடித்துக் கொண்டிருந்த முதலையை, பரமாத்மன் கொன்ற உடன், அந்த முதலையாக இருந்தவன், அந்த உடலை விட்டு, ஒரு அழகான உருவம் கொண்டு நின்றான். அவன் முன்பு ஹுஹு என்னும் கந்தர்வனாக இருந்தான். பாட்டு பாடுவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்னும் கர்வத்தில், பிரம்மதேவரின் சபையில் தேவல என்னும் ரிஷிகளை உதாசீனம் செய்த காரணத்தால், அவரின் சாபத்தைப் பெற்றான். அந்த சாபத்தினால் முதலையாக இருந்தான். தற்போது அந்த சாபத்திலிருந்து மீண்டு, அழகான தன் உருவத்தை மீண்டும் பெற்றான் என்று சொல்லும் இந்த வாக்கியமே இதற்கு ஆதாரம்.

 

இதே ஹுஹு கந்தர்வனே, ஆவஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்டு, த்ருபத ராஜனாக பிறந்தான் என்னும் விஷயத்தில், நிர்ணய 11ம் அத்தியாயத்தில்:

 

காலேசதஸ்மின் ப்ருஷதோனபத்யோ வனேதுபாஞ்சால பதிஸ்சகார |

தபோ மஹத்தஸ்ய ததாவராப்ஸராவ லோகனாத்ஸ்கந்திக மாஷுரேத: ||67

ஸதத்விலஜ்ஜாவஷத: பதேன ஸமாக்ரமத்தஸ்ய பபூவஸூனு: |

ஹூஹூஸ்துனாமாஸ விரிஞ்ச காயகோ நாம்னாssவஹோயோ மருதாந்ததம்ஷயுக் ||68

பதேத்ருதத்வாத்ருபதாபிதேய: ||

 

பாஞ்சால தேசாதிபதியான த்ருபத ராஜன், தனக்கு சந்தானம் வேண்டுமென்ற விருப்பத்துடன் வனத்தில் கடும்தவம் செய்தான். அப்போது அழகான ஒரு அப்சர ஸ்த்ரியரை அங்கு கண்டவுடன், அவனுக்கு வீர்ய ஸ்கலிதம் ஆனது. அவன் வெட்கத்துடன் அந்த வீர்யத்தை தன் காலால் மிதித்து மூடினான். அதிலிருந்து மகன் பிறந்தான். காலால் (பாதத்தால்) மூடியதால், பிறந்ததால், அவனுக்கு த்ருபத என்று பெயர் வந்தது -- என்கிறார்.

 

அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு சொல்லியிருக்கிறார். விராட ராஜன், விவஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்ட ஹாஹா என்னும் கந்தர்வன். நிர்ணய 11ம் அத்தியாயத்தின்படி:

 

தேஷாம் ஸமானோவயஸா விராடஸ்த்வ பூத்தாஹா நாமவிதாத்ரு காயக: ||

மருத்ஸயோ விவஹோ நாமதஸ்யாப்யம்ஷேன யுக்தோ நிஜதர்மவர்த்தி: ||72

 

த்ருபத ராஜன் முதலானவர்களுக்கு வயதில் சமானரானவர் விராட ராஜன். இவனே முன்னர் பிரம்மதேவரின் சபையில் பாடகரான இருந்த ஹாஹா என்னும் கந்தர்வன். விவஹ என்னும் மருத்தின் அம்சத்தைக் கொண்டு பிறந்தான் என்று சொல்லிருக்கும் வாக்கியமே இதற்கு ஆதாரமாகும். பாடகரான சுதர்சன என்னும் வித்யாதரன், அஜகரனாக பிறந்தான்.

பாகவத 10ம் ஸ்கந்தம் 32ம் அத்தியாயத்தில் நந்தகோப முதலான கோபாலகர் அனைவரும், பலராம கிருஷ்ணர்களுடன் சேர்ந்து தேவ யாத்திரை என்று, சரஸ்வதி நதி தீரத்திற்கு வந்து, இரவு நேரத்தில் படுத்திருந்தபோது, இந்த அஜகரன், நந்தகோபனை விழுங்கினான். அவனை காப்பாற்ற யாராலும் முடியவில்லை. ஸ்ரீகிருஷ்ணன் தன் பாதங்களால் அந்த சர்ப்பத்தை உதைக்க, அவன் உடனே அந்த சர்ப்ப தேகத்தை விட்டு, திவ்ய ரூபத்தைத் தாங்கி நின்றான். அப்போது ஸ்ரீகிருஷ்ணன், நீ யார் என்று கேட்க:

 

அஹம் வித்யாதர: கஸ்சித்ஸுதர்ஷன இதிஸ்ருத: |

ஸ்ரியாஸ்வரூப ஸம்பத்யா வியானே நாசரந்திஷ: ||12

ரிஷீன் விரூபானன்கிரஸ: ப்ராஹஸம் ரூபதர்ஷித: ||

தைரியாம் ப்ராபிதோ யோனிம் ||

 

நான் ஒரு வித்யாதரன். என் பெயர் சுதர்சனன். செல்வத்தினால் வந்த கர்வத்தினால், விமானத்தில் ஏறி சஞ்சரித்து வந்தேன். ஒரு நாள், குரூபியான அங்கிரஸ என்னும் ரிஷிகளைக் கண்டு, அவரை கேலி செய்தேன். அவரின் சாபத்தினால் இந்த கதியை அடைந்தேன் என்று அந்த பாம்பு சொன்னது -- என்கிறார். இதிலிருந்து, சுதர்சன என்னும் வித்யாதரன் அஜகரன் என்று தெரிகிறது. உக்ரசேன என்னும் கந்தர்வன், உக்ரசேன ராஜனாக பிறந்தான்.

 

ய உக்ரசேன: சுரகாயக: ஸ ஜாதோ யதுஷ்டேவ ததாபிதேய: || -- என்னும் நிர்ணய வாக்கியம் இதற்கு ஆதாரமாகும்.

 

பி3ம்ப4வ யுக்த விஷ்வா

வஸு யுதா4மன்யுத்தமௌஜ

பி3 மித்ரார்யமயுத பராவஸு எனிஸுதிப்ப |

ம மித்ரான்விதனு த்யஜிது

ஸுதெ3யொளு சித்ரஸேனம்ருதா

ந்த4ர கா3யகரெந்து3 கரெஸுவராவகாலத3லி ||42

 

பிசஜ சம்பவயுக்த = பிரம்மதேவரின் ஆவேசத்தைக் கொண்ட

விஷ்வாவசு = விஷ்வாவசு என்னும் கந்தர்வன்

யுதாமன்யு = த்ருபத ராஜனின் மகனான யுதாமன்யு என்னும் ராஜன் ஆனான்

ஆர்யம = ஆர்யமன் என்னும்

பிஸஜமித்ரயுத = கமல நண்பனான சூரியனின் அம்சத்தைக் கொண்ட

பராவசு = இந்த பெயருள்ள கந்தர்வன்

உத்தமௌஜஸ யெனிஸுதிப்ப = இந்த பெயரைக் கொண்ட த்ருபத ராஜனின் மகன் என்று சொல்லிக் கொண்டு

அஸம = சமம் இல்லாதவனான (பலசாலியாக) சித்ரசேனனெம்ப கந்தர்வன்

மித்ரான்விதனு = மித்ர என்னும் சூரியனின் அம்சத்தைக் கொண்டு

வசுதியொளு = பூமியில்

ஸத்யஜித் = இந்த பெயரால் த்ருபத ராஜனின் மகனாக பிறந்தான்.

ஆவகாலதலி = அனாதி முதல் அனந்த காலம் வரை

மேலே கூறிய கந்தர்வர்கள் அனைவரும்

அம்ருதாந்தஸர = அமிர்தமே ஆகாரமாக உள்ள தேவதைகளின் பாடகர் என்று அழைக்கப்படுகின்றனர்.

 

இந்த பத்யத்தில் சொல்லப்பட்டுள்ள யுதாமன்யு, உத்தமௌஜஸ, ஸத்யஜித் என்னும் மூவரும் த்ருபத ராஜனின் மக்கள் ஆவர். இந்த மூவரும் பிரம்மாண்ட, ஆர்யம, மித்ரர் என்னும் சூரியன் ஆகியோரின் அம்சத்தைக் கொண்டு விஷ்வாவஸு, பராவஸு, சித்ரசேன என்னும் கந்தர்வர்கள் என்று, நிர்ணய 18ம் அத்தியாயத்தில்:

 

சக்ரரக்‌ஷௌது தஸ்யாஸ்தாம் யுதாமன்யோத்த மௌஜஸௌ |

தாத்ரர்ய மாவேஷயுதௌ விஷ்வாவசு பராவசூ ||73

ஸுதௌதஸ்ய மஹாவீர்யௌ ஸத்யஜித்ருஷ்டதோ பவத் ||69

ஸமித்ராம்ஷயுதோ வீரஸ்சித்ர சேனோ மஹாரத: ||70

 

என்னும் வாக்கியங்களால் தெரிகிறது. பிரம்ம அம்சத்தைக் கொண்ட விஷ்வாவசு என்பவன் யுதாமன்யு என்றும், ஆர்யமாவேஷத்தைக் கொண்ட பராவசு என்பவன், உத்தமௌஜஸ் என்றும், மித்ராம்ஷத்தைக் கொண்ட சித்ரசேனன் சத்யஜித் என்றும் பிறந்தனர் என்பது கருத்து. இவர்கள் அனைவரும் தேவகந்தர்வர்கள் என்று அறியவேண்டும்.

 

உளித33ந்த4ர்வருக3ளெல்லரு

3லிமொத3லு கோ3பாலரெனிபரு

இளெயொளகெ3 ஸைரெந்த்4ரி பிங்க3லெ அப்ரஸ்த்ரீயு |

திலோதமெயு பூர்வத3லி நகுலன

லலனெபார்வதி எனிஸுவளு கோ3

குலத3 கோ3பியரெல்ல ஷபரீமுக்2ய அப்ரரு ||43

 

உளித கந்தர்வருகளெல்லரு = மேலே சொன்ன கந்தர்வர்களைத் தவிர மற்ற கந்தர்வர்கள் அனைவரும்

பலிமொதலு கோபாலரெனிபரு = கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் நண்பர்களான பலி முதலான பெயர்களில் பிறந்திருக்கின்றனர்.

இளியொளகெ = பூமியில்

ஸைளேந்த்ரீ = ஸ்ரீகிருஷ்ணனுக்கு சந்தனத்தைக் கொடுத்த த்ரிவக்ர என்னும் சைரந்த்ரி, பிங்களா எனும் வைஷ்ய ஸ்த்ரி, முன்னர் அப்ஸர ஸ்த்ரீயராக இருந்தாள்.

நகுலன = நகுலனின்

லலனெ பார்வதி = மனைவியான பார்வதி

பூர்வதலி = முன்னர்

திலோதமெயு = திலோத்தமையாக இருந்தார்

கோகுலத கோபியரெல்ல = கோகுலத்து கோபியர்கள் அனைவரும்

ஷபரீ = ராமாயணத்தில் வந்த ஷபரி என்பவள்

முக்யரு = இவரே முதலாக அனைவரும்

அப்சரரு = அப்ஸரஸ ஸ்த்ரீயர்கள் ஆவர்

 

மேலே கூறிய முக்கிய கந்தர்வர்களை விட்டு, மற்ற கந்தர்வர்கள், கோகுலத்தில் பலி முதலான கோபாலகர்களாக கிருஷ்ணனின் சேவைகளை செய்வதற்காக பிறந்தனர். முன்னர், பிங்களா என்னும் வைஷ்ய ஸ்த்ரி, விதேஹ தேசத்தில் இருந்து, பிறகு வைராக்கியத்தில் வைஷ்ய வ்ருத்தியை விட்டு, தன் அந்தர்கதனான பரமாத்மனே தன் பதி என்று வரித்து, தியானம் செய்து வந்தாள். பின் அந்த தேகத்தை விட்டு, கிருஷ்ணாவதாரத்தில் த்ரிவக்ரையாகி பிறந்து, ஸ்ரீகிருஷ்ணனுக்கு சந்தனம் கொடுத்து, அவனின் அங்க சங்கத்தைப் பெற்றாள். இவள் முன்னர் அப்ஸரஸ் ஸ்த்ரி. பிங்களையின் கதையை பாகவத 11ம் ஸ்கந்தத்தில் விளக்கமாக சொல்லியிருக்கின்றனர். இதே அர்த்தத்தையே நிர்ணய 15ம் அத்தியாயத்தில் யாபிங்களான்யsபவ ஆத்மனி ஸம்ஸ்திதம் தம்ஸம்ஸ்ம்ருத காந்தமுருகாயமபூத் த்ரிவக்ராஎன்னும் 2ம் ஸ்லோகத்திலிருந்து விவரிக்கிறார்.

 

நகுலனுக்கு ஷல்யனின் மகளைத் தவிர பார்வதி என்று இன்னொரு மனைவியும் இருந்தார். அவள் முன்னர் திலோத்தமை என்னும் அப்ஸரஸ். இதன் விளக்கம் நிர்ணய 22ம் அத்தியாயம், 56ம் ஸ்லோகத்தில் வருகிறது. பார்வதீ நகுலஸ்யா ஸீத்பார்யா பூர்வந்திலோத்தமா’. கோகுலத்தின் கோபியர்கள் அனைவரும் அப்ஸர ஸ்த்ரியர்கள் என்று நிர்ணய வாக்கியத்திலிருந்தும், பாகவத 10ம் ஸ்கந்தத்திலிருந்தும், தெரிகிறது. நிர்ணய 13ம் அத்தியாயத்தில்,

 

கோபாங்கனா அபிபுரா வரமாபிரே யத் ||

ஸம்ஸ்கரத: ப்ரதமமேவ ஸுசங்க மோனோபூயாத் தவேதி வரமப்ஸரஸ: புராயா: ||51

 

கோபிகா ஸ்த்ரியர்கள் முன்னர் உத்தமமான அப்ஸரஸ் ஸ்த்ரீயர்களாக இருந்தவர்கள். இவர்கள் பரமாத்மனைக் குறித்து தவம் செய்து உனக்கு உபநயனம் ஆவதற்கு முன்னர் எங்களுக்கு உன் சங்கத்தைக் கொடுஎன்று கேட்டு, அதன்படியே வரத்தைப் பெற்றனர்.

 

இந்த வாக்கியத்தால், கோபிகா ஸ்த்ரியர்கள் அனைவரும் அப்ஸர ஸ்த்ரியர்கள் என்பது தெளிவாகிறது.

 

ஷபரி என்பவள் அப்ஸரஸ் ஸ்த்ரி என்பது நிர்ணய 5ம் அத்தியாயத்தில்:

த்ருஷ்ட்வாதமேவஷபரி பரமம் ஹரிஞ்ச ஞ்ஞாத்வாவிவேஷதஹனம் புரதோஸ்ய தஸ்யை ||

ப்ராதாத் ஸ்வலோகமிவவேவஹி ஸாப்ரதீக்‌ஷ்ய பூர்வம் மதங்க வசனேன வனெத்ர ஸாபூத் ||44

ஷாபாத்வராப்ஸரஸமே வஹிதாம் விமோச்ய ஷச்யாக்ருதாத்பதிபுரஸ்த்வ திவர்பஹேதோ: ||45

 

ஸ்ரீராமன் தண்டகாரண்யத்தில், சீதையை தேடும் சந்தர்ப்பத்தில், ஷபரி பழங்களை தான் ருசி பார்த்து, அவை ருசியானவையே என்று அறிந்து அவற்றை ஸ்ரீராமனுக்காக என்று எடுத்து வைத்ததை, அவனுக்கு சமர்ப்பித்து, பின் அக்னி பிரவேசம் செய்தாள். ஸ்ரீபரமாத்மன் அவளுக்கு தன் லோகத்தைக் கொடுத்தான். அவள் முன்னர் உத்தமளான அப்ஸரஸ் ஸ்த்ரி. ஒரு நாள் தேவேந்திரன் மற்றும் சசிதேவியின் முன்னர், இவள் தன் அதிகாரத்தைக் காட்ட, சசிதேவி  கோபத்துடன் இவளுக்கு சாபம் கொடுத்தாள். அதனால் இவள் பூமியில் பிறந்து, ஸ்ரீராமனின் தரிசனத்தால் விமோசனம் பெற்றாள் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

 

க்ருஷ்ணவர்த்மன ஸுதரொளகெ3 ஷத

த்3வயஷ்ட ஸாவிர ஸ்த்ரீயரல்லி ப்ர

விஷ்டளாகி3 ரமாம்ப4 தத்தன்னாம ரூபத3லி |

க்ருஷ்ண மஹிஷியரொளகெ3 இப்பளு

த்வஷ்ட்ரு புத்ரிக1ஷேரு இவரொளு

ஸ்ரேஷ்டளெனிபளு உளித3 ருஷிக3ண கோ3பிகாமரு ||44

 

க்ருஷ்ணவர்த்மன = அக்னி

சுதரொளகெ = மக்களில்

ஷதத்வயஷ்ட சாவிர ஸ்த்ரீயரல்லி = 16,100 கிருஷ்ணனின் மனைவியர்களில்

ரமாம்ப = ரமாதேவி

தத்தன்னாம ரூபதலி = அந்தந்த பெயர், ரூபங்களில்

இப்பளு = இருக்கிறாள்

த்வஷ்ட்ருபுத்ரி = த்வஷ்ட்ராவின் மகளான

கஷேரு = கஷேரு

இவரொளு ஸ்ரேஷ்டளெனிபளு = இவர்களில் சிறந்தவள் எனப்படுகிறாள்

உளித ருஷிகண = கஷேருவைத் தவிர மற்ற, கிருஷ்ணனின் மனைவியராக அவதரித்த அக்னி புத்ரரான ரிஷி கணர்கள்

கோபிகாசமரு = கோபிகா ஸ்த்ரீயர்களுக்கு சமமானவர்கள்.

 

கிருஷ்ண பத்னியரான 16,100 பேர், முன்னர் அக்னி புத்ரரான ரிஷிகள் ஆவர். கிருஷ்ணனின் அங்கசங்கத்தின் விருப்பத்தால், இவர்கள் தவம் செய்து, வரம் பெற்று, பெண்களாகப் பிறந்து, ஸ்ரீகிருஷ்ணனுக்கு மனைவியர் ஆயினர். இவர்களில் த்வஷ்ட்ரனின் மகளான கஷேரு என்பவள் சிறந்தவள். இவளைத் தவிர மற்றவர்கள், கோபிகா ஸ்த்ரியர்களுக்கு சமர் என்பது கருத்து.

 

இந்த அர்த்தம் நிர்ணயம் 20ம் அத்தியாயத்தில் நரகாசுரனை சம்ஹாரம் செய்து, அவனின் வீட்டில் சிறையில் இருந்த 16,100 ராஜகுமாரிகளை ஸ்ரீகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டான் என்னும் கதையில்:

 

த்வ்யஷ்டௌ ஸஹஸ்ராணி ஷதஞ்ச ரூபஷீலோதாரா: அக்‌ஷதா: ஸத்வ்ருதஸ்தா: ||

காஷ்சித்தத்ராஸன் தேவகந்தர்வ கன்யா: தாஸாம் ப்ரதானாத்வஷ்ட்ரு புதீகஷேரு: ||112

புத்ரா அக்னீ: பூர்வமஸம்ஸ்சதேsத ஸ்த்ரீத்வ ப்ராப்த்யைசக்ருருக்ரம் தபஸ்ச ||

பார்யாத்வார்த்தே வாஸுதேவஸ்யயோஷித்தனாந்தா ஸாமிச்சதீனாம் ஸமீர: ||113

அதாத்வரம் தபஸாராதித: ஸஸ்த்ரீபூதாஸ்தே பதரீம் ஸம்ப்ரஜக்மு: ||

நாராயணம் தத்ர ஷுஷ்ரூஷமாணா: ப்ராப்யாப்ஸரஸ்தம் ராஜகுலேஷுஜாதா: ||114

 

நரகாசுரனின் வீட்டில் சிறைப்பட்டிருந்த, ரூப குணங்களில் சிறந்தவர்களான 16,100 ராஜகுமாரிகளை ஸ்ரீகிருஷ்ணன் கண்டான். இவர்களில் இருந்த, த்வஷ்ட்ரா என்னும் சூரியனின் மகளான கஷேரு என்பவள் சிறந்தவளாக இருந்தாள். இவர்கள் அனைவரும் முன்னர், அக்னிதேவரின் மக்கள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு பத்னி ஆகவேண்டும் என்று, வாயுதேவரைக் குறித்து தவம் செய்தனர். வாயுதேவரும் அவர்களின் தவத்திற்கு மெச்சி, அவர்கள் விரும்பிய வரத்தைக் கொடுத்தனர்.

பின் அவர்கள் அனைவரும் ஸ்த்ரித்வத்தைப் பெற்று, பதரிகாஸ்ரமத்திற்கு வந்து, அங்கு ஸ்ரீ நாராயணதேவரை சேவை செய்து கொண்டிருந்தனர். அப்ஸரஸ் ஸ்த்ரியராகப் பிறந்து, பின், ராஜகுலத்தில் பிறந்தனர்.

 

காஸ்சித்ஸ்வர்க்கே: தானிஷாமைவ க்ருஷ்ணம் வவ்ரு: பதிம் ஸர்வகுணாபிராமம் |

அஜானதேவை: ஸர்வகுணை: ஸமாஸ்தா: ஸ்வபாவதோதேந்திராவேஷதோsத: ||115

குணாதிகாஸ்தா: ஷிகிகாஸு கிருஷ்ண: அரோபயித்வா ப்ராஹிணொத்வரவத்யை ||

 

சிலர் ஸ்வர்க்கத்தில் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணனின் மகிமைகளைக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணனை அவனே தம் பதியாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் ரமாதேவியின் விசேஷ ஆவேசத்தைக் கொண்டிருந்தனர். அஜான தேவதைகளுக்கு சமமானவர்கள். ரமா ஆவேசத்தினாலேயே இவர்கள் அனைவருக்கும் அதிகமான குணங்கள் இருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் இவர்கள் அனைவரையும் பல்லக்கில் அமர்த்தி, த்வாரகைக்கு அனுப்பினான் என்று இந்த ஸ்லோகத்திலிருந்து தெரிய வருகிறது.

 

ஸூனுக3ளு எனிஸுவரு தே3வக்ரு

ஷானுவிகெ3 க்ரது ஸிந்து3 ஷுசி பவ

மான கௌஷிகரைது3 தும்பு3ரு ஊர்வஷீஷதரு |

மேனகா ருஷிராயருக3ளா

ஜான ஸுரரிகெ3 மரெனிபரு ஸு

ராணகரனாக்யா2த தி3விஜர ஜனகரெனிஸுவரு ||45

 

தேவக்ருஷானுவிகெ = அக்னி தேவருக்கு

க்ரது, ஸிந்து, ஷுசி, பவமான, கௌஷிக - என்று

ஐது = 5 பேர்

சூனுகளு எனிசுவரு = மக்கள் இருந்தனர்

இவரைது ஜனரு = இந்த ஐந்து பேர் மற்றும்

தும்புரு ஷதரு = தும்பரு முதலான 100 கந்தர்வர்கள் மற்றும்

ஊர்வஷி ஷதரு = ஊர்வசி முதலான 100 அப்ஸரஸ்கள் மற்றும்

மேனகெ = மேனகை முதலானவர்கள்

ரிஷி = முன்னர் சொன்ன வசிஷ்டாதிகளைத் தவிர, மற்ற ரிஷிகள்

ராயருகளு = முன்னர் சொன்ன ப்ரியவ்ரதாதிகளைத் தவிர, மற்ற ராஜர்கள்

அஜானசுரரிகெ = அஜான தேவதைகளுக்கு

ஸமரெனிபரு = சமம் எனப்படுகிறார்கள்

சுராணகரு = அஜானஜரில் சிறந்தவர்கள் என்னும் தேவதா சமூகம்

அனாக்யாதிவிஜர = புகழ் பெறாத தேவதைகளின்

ஜனகரெனிஸுவரு = தந்தை எனப்படுகிறார்கள்.

 

அக்னிதேவர்களுக்கு க்ரது, ஸிந்து, ஷுசி, பவமான, கௌஷிக என்னும் 5 மக்கள் இருந்தனர்.

* இவர்கள் ஐந்து பேர்,

* தும்பரு முதலான கந்தர்வர்கள் 100 பேர்,

* ஊர்வசி முதலான அப்ஸரஸ் 100 பேர்,

* வஷிஷ்டாதிகளைத் தவிர மற்ற ரிஷிகள்,

* ப்ரியவ்ரதாதிகளைத் தவிர மற்ற ராஜர்கள்

அனைவரும் அஜானஜர் என்று அழைக்கபப்டுகின்றனர்.

 

ப்ருஹத் தாரதம்யத்தில்:

 

பவமான க்ரதௌத்வௌப்ராக் பவமானோக்னிஜ: ஸ்ம்ருத: ||

கௌஷிகோதாக்னிஜ: ஸிந்து: ஷுசி: ப்ராக்‌ஷுசிரக்னிஜ: ||

தும்பர்யாதி ஷதஞ்சைவ ஊர்வஷ்யாத் யப்ஸராஸ் ததா ||

ருஷயஷ்ச வசிஷ்டாதீன் வ்ருதே அஜானஜா: ஸ்ம்ருதா: ||

 

பவமான என்னும் அக்னிக்கு, பவமான, க்ரதர் என்னும் இரு மக்கள்.

அக்னிக்கு கௌஷிக, சிந்து என்று இரு மக்கள்.

ஷுசி என்னும் அக்னிக்கு ஷுசி என்னும் மகன் ஒருவன்

என மொத்தம் 5 பேர் அக்னி மக்கள்.

தும்பரு முதலான 100 கந்தர்வர்கள்,

ஊர்வசி, மேனகை முதலான அப்ஸர ஸ்த்ரியர்கள் 100 பேர்

வசிஷ்டாதி உத்தம குணத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற ரிஷிகள்

 

இவர்கள் அனைவரும் அஜான தேவதைகள் எனப்படுகின்றனர் என்கிறார். இந்த வாக்கியத்தால் மேற்சொன்ன அர்த்தம் தெளிவாகிறது.

 

ஸுராணகாம்ஸ்தமோனேதுந்தத்யா ஜீவஸஜானகீம்

 

சுராணர என்னும் தைத்ய சமூகத்தை தமஸ்ஸிற்கு அனுப்புவதற்காக, சீதையை தியாகம் செய்ததுபோல காட்டினான் என்னும் வசனத்தில் சொன்ன சுராணாகர்களை இங்கு சொல்லவில்லை. சுராணகா என்றால் தேவதா சமூகம் என்று அர்த்தம். இந்த தேவதா சமூகத்தவர்கள் அஜானஜரில் சம்பந்தப்பட்ட அ-ப்ரஸித்த (புகழ் பெறாத) தேவதைகளுக்கு தந்தை எனப்படுகிறார்கள். 

 

பாவகரிகி3ந்தத4ம ரெனிஸு

தே3வகுல ஜானாக்2ஸுரக3

கோவித3ரு நானா ஸுவித்3யதி3 ஸ்வோத்தமர நித்ய

ஸேவிபரு த்ப4க்திபூர்வக

ஸ்வாவரரிகு3 பதே3ஷிஸுவரு நி

ராவலம்ப3ன விமலகு3ணக3ள ப்ரதிதி33ல்லி ||46

 

தேவகுலஜ = தேவதா குலத்தில் பிறந்து தேவதைகள் என்று புகழ் பெறாதவர்கள்

பாவகரிகிந்த = மேற்கூறிய அக்னிகளைவிட

அதமரெனிஸுவ = அதமர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும்

நானஸுவித்யதி = பற்பல விதமான உத்தம வித்யையில்

கோவிதரு = ஞானிகள் எனப்படுகின்றனர்

நித்ய = தினந்தோறும்

ஸோத்தமர = தம்மைவிட உத்தமர்களை சத்பக்தியுடன் சேவிக்கிறார்கள்

நிராவலம்பன = எந்த காலத்திலும் யாரையும் எதிர்பார்க்காத ஜகதீஸ்வரனின்

விமலகுணகள = தூய்மையான குணங்களை

ப்ரதி திவசதல்லி = தினந்தோறும்

ஸ்வாவரிகெ = தம்மைவிட குறைந்தவர்களுக்கு

உபதேஷிசுவரு = உபதேசிப்பார்கள்.

 

மேலே கூறிய அக்னிகளைவிட, புகழ் பெறாத தேவதைகள், குறைவானவர்கள். இவர்கள் அனைவரும் அனைத்து வித்யைகளையும் கற்றவர்களாகவும், தம்மைவிட உத்தமர்களை, பக்தியுடன் சேவை செய்தவாறு, ஜகதீஸ்வரனான ஸ்ரீபரமாத்மனின் நிர்மலமான குணங்களை, தம்மைவிட குறைந்தவர்களுக்கு (பக்தர்களுக்கு) தொடர்ச்சியாக உபதேசம் செய்தவாறு, காலத்தைக் கழிக்கின்றனர்.

 

ஸுரரொளகெ3 வர்ணாஸ்ரமக3ளெ

ம்பெ3ரடு34ர்மக3ளில்ல தம்மொளு

நிருபமரு எந்தெ3னிஸிகொம்ப3ரு தாரதம்யத3லி |

கு3ரு ஸுஷிஷ்யத்3வவு ருஷிக3ளொள

கி3ருதிஹுது3 ஆஜானஸுரரிகெ3

சிரபித்ரு ஷதாத4ம ரெனிஸுவரு ஏளு ஜனருளிது3 ||47

 

சுரரொளகெ = தேவதைகளில்

வர்ணாஸ்ரமகளெம்ப =

வர்ண = பிராமண க்‌ஷத்ரிய முதலான வர்ணங்கள்

ஆஸ்ரம = பிரம்மசார்ய முதலான ஆசிரமங்கள்

எரடு தர்மகளில்ல = இரு தர்மங்கள் இல்லை

தம்மொளு = தமக்குள் தாரதம்யத்தில்

நிருபமரு = ஒப்புமை இல்லாதவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள்

ரிஷிகளொளு = ரிஷிகளில்

குரு சிஷ்யத்வவு இருதிஹது = குரு சிஷ்யர் என்னும் பாவம் இருக்கிறது

அஜானசுரரிகெ = அஜான தேவதைகளுக்கு

ஏளு ஜனருளிது = 7 பேர் பித்ருகளை விட்டு

சிரபித்ரு = மற்ற சிரபித்ருகள்

ஷதாதமரெனிசுவரு = 100 குணங்களால் அதமர் எனப்படுகிறார்கள்.

 

தேவதைகளில், பிராமண, க்‌ஷத்ரிய என்னும் ஜாதி பேதங்கள் இல்லை. பிரம்மசாரி, க்ருஹஸ்த என்னும் ஆசிரம பேதங்கள் இல்லை. ஆகையால், வர்ணாசிரம விஷயத்தில் இவர் உத்தமர், இவர் குறைவானவர் என்னும் பேதம் இல்லாமல், நிருபமர் எனப்படுகிறார்கள். அதாவது, அனைவரும் சமர்களே ஆகின்றனர்.

 

ஆனால், ஞான பக்தியின் அதிக / குறைவினால் தாரதம்யம் உண்டாகிறது. அதிலும், எந்த தேவதைகளுக்கு எந்த தேவதை அதிகம் / குறைவு என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர்களை விட்டால், வேறு யாருக்கும் ஒப்பிட்டு சொல்லமுடியாது.

 

அதாவது, கருட, சேஷ, ருத்ரர் சமர். இவர்களுக்கு ஒப்புமை கொடுக்க வேண்டுமெனில், வேறு யாரும் இல்லை. இந்திர மன்மதர்கள் சமர். இவர்களை மற்றவர்களுக்கு ஒப்பிட்டு சொல்ல முடியாது என்பது கருத்து. ரிஷிகளில் இவர் குரு, இவர் சிஷ்யர் என்னும் தாரதம்யம் உண்டு. பித்ருகளில் முன்னர் சொன்ன, ப்ரியவ்ரதாதி கர்ம தேவதைகளின் தாரதம்யத்தில் ஏழு பேர் என்று சொல்லி, சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர, மற்ற சிரபித்ருகள், மேலே கூறிய அஜான தேவதைகளுக்கு 100 குணங்களால் அதமர் என்பது கருத்து.

 

சிரபிதருக3ளி க34ம க3ந்த4

ர்வருக3ளெனிபரு தே3வ நாமக

கொரதெ எனிஸுவ சக்ரவர்த்திக3ளிந்த33ந்த4ர்வ

நரரு உத்தமரெனிஸுவரு ஹ

ந்னெரடு எம்பத்தெண்டு கு3ணத3லி

ஹிரியரெனிபரு க்ரமதி3 தே3வாவேஷ ப3லதி3ந்த3 ||48

 

சிரபித்ருகளிகெ = சிரபித்ருகளுக்கு

தேவ நாமக கந்தர்வரு = தேவ கந்தர்வன்

அதமரெனிபரு = அதமர் எனப்படுகிறான்

கொரதெயெனிஸுவ = தாரதம்யத்தில் குறைவு எனப்படும்

சக்ரவர்த்திகளிந்த = சக்ரவர்த்திகளைவிட

கந்தர்வ = மனுஷ்ய கந்தர்வர்கள்

ஹன்னெரடு எம்பத்தெண்டு குணதலி = 12, 88, 100 குணங்களால்

ஹிரியரெனிஸுவரு = உத்தமர் எனப்படுகிறார்கள்

நரரொளுத்தமரெனிஸுவரு = மனுஷ்யோத்தமர்கள்

இந்த மனுஷ்யோத்தமர்களைவிட

சக்ரவர்த்திகள்,

ஹிரியரெனிபரு = உத்தமர்கள் எனப்படுகிறார்கள்

க்ரமதி = மேலே கூறிய கிரமத்தில்

தேவாவேஷ பலதிந்த = தேவதைகளின் ஆவேசத்தை அனுசரித்து, ஒருவரைவிட இன்னொருவர் 100 குணங்களால் குறைவு எனப்படுகிறார்கள்.

 

* முந்தைய பத்யத்தில் சொன்ன சிரபித்ருகளைவிட தேவகந்தர்வர்கள் 100 குணங்களால் அதமர்.

* அவர்களைவிட மனுஷ்ய கந்தர்வர்கள் 100 குணங்களால் குறைவு.

* அவர்களைவிட சக்ரவர்த்திகள் 100 குணங்களால் குறைவு.

* அவர்களைவிட மனுஷ்யோத்தமர்கள் 100 குணங்களால் குறைவு.

 

இதற்கு ஆதாரம், ப்ருஹத் தாரதம்யத்தின்:

 

பித்ருப்யோ தேவகந்தர்வா அஷ்டோத்தரஷதம் வினா |

தேப்யோ மனுஷ்ய கந்தர்வாஸ் தேப்யோனாஸ் சக்ரவர்த்தின: ||

தேப்யஸ்துமானுஷ ஸ்ரேஷ்டா: க்ரமாச்சத குணாவரா: ||

 

என்னும் வாக்கியத்தால் தெளிவாகிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் தேவ கந்தர்வரில், முன்னர் கர்ம தேவதைகளின் கக்‌ஷையில் சேர்க்கப்பட்ட 108 பேர் கந்தர்வர்களை விட்டு, மற்ற கந்தர்வர்கள் என்று அர்த்தம். சக்ரவர்த்திகளில் தேவதா ஆவேசம் இருப்பதால், மனுஷ்யோத்தமர்களைவிட அவர்கள் 100 குணங்கள் உத்தமர்கள் என்பது கருத்து.

 

தே3வதெக3ளிம் ப்ரேஷ்யரெனிபரு

தே3வக3ந்த4ர்வரு க3ளவரி

ந்தா4வ காலகு ஷிக்‌ஷிதரு நரனாமக3ந்த4ர்வ |

கேவலதி3 த்ப4க்தி பூர்வக

யாவதி3ந்த்3ரியக3ள நியாமக

ஸ்ரீவரனெ எந்த3ரிது34ஜிபரு மானுஷோத்தமரு ||49

 

தேவதெகளிம் = தேவதைகளைவிட

தேவகந்தர்வரு = தேவ கந்தர்வர்கள்

ப்ரேஷ்யரெனிபரு = ஆணையைப் பெறுபவர்கள். அதாவது, தேவதைகளின் ஆணையைப்படி, நடப்பவர்கள் தேவ கந்தர்வர்கள் என்று அர்த்தம்.

அவரிந்த = தேவ கந்தர்வர்களைவிட

நரனாம கந்தர்வ = மனுஷ்ய கந்தர்வர்கள்

ஆவகாலகு = அனைத்து காலங்களிலும்

சிக்‌ஷிதரு = உபதேசம் பெறுபவர்கள்

அல்லது, அவர்களது ஆணையின்படி நடப்பவர்கள் என்று அர்த்தம்

கேவலதி சத்பக்தி பூர்வக = மற்ற அனைத்து விஷயங்களின் ஆசையை விட்டு, யோக்யதைக்கேற்ப, உத்தம பக்தியினால் யாவதிந்திரியகள நியாமக = அனைத்து இந்திரியங்களையும் வழி நடத்துபவன்

ஸ்ரீவரனெ எந்தரிது = லட்சுமிபதியே என்று அறிந்து

பஜிபரு = வணங்குவர். அவரே,

மானுஷோத்தமரு = மனிதர்களில் உத்தமர்கள்.

 

தேவதைகளுக்கு சிஷ்யர்களைப் போல, அவரின் ஆணைகளுக்கேற்ப நடப்பவர்கள் தேவ கந்தர்வர்கள். இவர்களின் சிஷ்யர்களாக, இவர்களது ஆணைப்படி நடப்பவர்கள் மனுஷ்ய கந்தர்வர்கள். இதர தற்காலிக விஷய சுகங்களை விட்டு, சத்பக்தியுடன் பரமாத்மனை வணங்கியவாறு, அனைத்து இந்திரியங்களுக்கும் நாயகன் ஸ்ரீலட்சுமிபதியே என்று அறிந்து, சிந்திப்பவர்கள் மனுஷ்யோத்தமர்கள்.

 

ப்ருஹத் தாரதம்யத்தில் வரும்:

 

ஸாக்‌ஷாத்தேவ முகாத்ப்ரேஷ்யா: தேவகந்தர்வ நாமகா: ||83

ஏகந்தர்வமுக ப்ரேஷ்யா: கந்தர்வா மானுஷாஸ்ம்ருதா: ||

 

இந்த வாக்கியம் இதற்கு ஆதாரமாக இருக்கிறது.

 

பா33ராயண பா43வத மொத3

லாத3 சாஸ்த்ரக3ளல்லி ப3ஹுவித4

த்3வாத3ஷ த3ஸுபஞ்சவிம்ஷதி ஷத ஹஸ்ரயுத |

பே433ள பேளித3ரு ஸ்வோத்தம

ராதி3தே3யாவேஷ ப3லதி3 வி

ரோத4 சிந்திஸபா3ரதி3து3 ஸாது3ஜன ம்மதவு ||50

 

பாதராயண = வேதவியாச தேவர்

பாகவத மொதலாத சாஸ்திரகளல்லி = பாகவத முதலான அனைத்து சாஸ்திரங்களில்

ஸோத்தம = அவர்களைவிட உத்தமரான

ஆடிதேயாவேஷ பலதி = தேவதைகளின் ஆவேச பலத்தினால்

பஹுவித பேதகள பேளிதரு = குண தாரதம்ய எண்ணிக்கை விஷயத்தில், ஒவ்வொரு கிரந்தத்தில் ஒவ்வொரு விதமாக - அதாவது ஒரு இடத்தில் 12 குணங்கள் குறைவு என்றும், இன்னொரு இடத்தில் 100 குணங்கள் குறைவு என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

த்வாதஷ = 12

தஷ = 10

பஞ்சவிம்ஷதி = 25

ஷத = 100

ஸஹஸ்ர = 1000

ஆயுத = 10,000

விரோத சிந்திசவாரதிது = இதில் விரோதம் பார்க்கக்கூடாது. இரு அர்த்தங்களும் ஒன்றே (சரியானதே) என்று அறியவேண்டும்.

சாதுஜன சம்மதவு = இதுவே அனைத்து அறிஞர்களும் அறிந்து ஒப்புக்கொண்ட விஷயமாகும்.

 

இந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் குண தாரதம்ய எண்ணிக்கைக்கும், விஷ்ணு ரஹஸ்யாதி கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கும் குணங்களின் எண்ணிக்கைக்கும் ஒரு வேளை அதிக / குறைவு வித்தியாசம் வரலாம். புராண வாக்கியங்களிலும் பரஸ்பர பேதங்கள் வரலாம். ஆனாலும், அந்த எண்ணிக்கைகளுக்கு பேதங்களை சிந்திக்கக் கூடாது.

ஏனெனில்: ப்ருஹத் தாரதம்ய வாக்கியம்:

 

உக்தசங்க்யாதிகத்வோக்திர் யாஸவேஷ விசேஷத: |

ஷதம்தஷ சஹஸ்ரஞ்ச நைவ தன்மாத்ர வாசகம் ||

அவிரோதஸ்த தோக்ஞேயோ நானாவாக்யேஷு ஷர்வஷ: ||

 

10, 100, 1000 முதலான எண்ணிக்கைகள், 10, 100 என்றே அர்த்தம் அல்ல. 10 என்றாலும், 100 என்றாலும் அனந்த எண்ணிக்கை என்றே ப்ரமாணம் இருப்பதால், தகுந்த எண்ணிக்கையை அந்த இடத்திற்கு ஏற்றவாறு பொருத்தி, அர்த்தம் புரிந்து கொள்வதால், பரஸ்பர விரோத சரியாகிறது. இப்படியாக அர்த்தம் செய்துகொள்வதே சாதுகள் ஒப்புக் கொண்டதாகும்.

 

இவரு முக்தீயோக்3ய ரெனிபரு

ஸ்ரவண மனனாதி33ள பரமோ

த்ஸவதி3 மாடு3த கே1ளி நலியுத த4ர்ம காமார்த்த2 |

த்ரிவித32லக3ள பேக்‌ஷிஸதெ3 ஸ்ரீ

பவனமுக2 தே3வாந்தராத்மக

ப்ரவரத4ஷிஷ்டேஷ்ட தா3யகனெந்து3 ஸ்மரிஸுவரு ||51

 

ஸ்ரவண மனனாதிகள = பரமாத்மனின் சரித்திரங்களை கேட்பது, கேட்டதை எப்போதும் மனதில் சிந்திப்பது என்னும் இந்த இரண்டினை

பரமோத்ஸவதி = பரமானந்தத்தினால் (வீட்டில் மக்களுக்கு வைபவத்துடன் திருமணம் நடந்தால், எப்படி மகிழ்ச்சி அடைவோமோ, அப்படி என்று அர்த்தம்)

மாடுத = அப்படி செய்தவாறு

கேளி = அவற்றைக் கேட்ட உடனேயே மகிழ்ச்சியுடன்

நலியுத = நடனம் ஆடியவாறு

தர்ம, காம, அர்த்த, த்ரிவிதபலகள = இந்த மூன்று விதமான பலன்களை

அபேக்‌ஷிஸதே = விரும்பாமல்

ஸ்ரீ = லட்சுமிதேவியர்

பவனமுக = வாயுதேவரே முதலான

தேவாந்தராத்மக = தேவதைகளின் அந்தர்யாமியான

ப்ரவரதம = அனைத்து தேவதைகளைவிடவும் சிறந்தவனான

அல்லது

ஸ்ரீபவனமுக தேவாந்தராத்மக ப்ரவரதம = ஸ்ரீவாயுதேவரே முதலான தத்வாபிமானி தேவதைகளுக்கு

சிஷ்டேஷ்ட தாயக = சிஷ்யரான பகவத்பக்தரின் இஷ்டங்களை நிறைவேற்றுபவன் என்று

ஸ்மரிசுவரு = புராணங்களில் சொல்லப்பட்டவாறு சிந்திப்பர்.

 

பரமாத்மனின் கதைகளை மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டவாறு, பின் அதனை மனப்பாடம் செய்து, மகிழ்ச்சியுடன் மெய்மறந்து நடனமாடியவாறு; மனனாதி என்னும் ஆதி சொல்லினால், கீர்த்தனை, ஸ்மரணை முதலான 9 வித பக்தியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்ரவணம், கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதசேவனம், அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம் ஆத்ம நிவேதனம் என்னும் 9 வித பக்தியால் பரமாத்மனை வணங்கியவாறு, தர்ம, அர்த்த, காம என்னும் மூன்று வித புருஷார்த்தங்களை வேண்டாமல், லட்சுமி பிரம்ம முதலான அனைத்து தேவதைகளின் அந்தர்யாமியான, அனைத்து தேவதைகளைவிட சிறந்தவனான ஸ்ரீபரமாத்மன், பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுவான் என்று எப்போதும் ஸ்ரீஹரியை மறக்காமல் யார் வேண்டுகிறார்களோ, அவர்களே முக்தி யோக்யர்கள் என்று விஷ்ணு ரஹஸ்ய முதலான புராணங்களில், முக்தி யோக்யரின் லட்சணங்களை சொல்லியிருக்கிறார்கள். அதே அபிப்பிராயத்தையே தாசார்யரும் இங்கு சொல்லியிருக்கிறார் என்று அறிய வேண்டும்.

 

நித்யம்ஸாரிக3ளு கு3ணதோ3

ஷாத்மகரு பி3ரம்மாதி3 ஜீவர

ப்4ருத்யரெம்ப3ரு ராஜனோபாதி3யலி ஹரி எந்து3 |

க்ருத்திவானு பி3ரம்ம ஸ்ரீவி

ஷ்ணுத்ரயரு ம து3க்க ஸு2

த்பத்தி ம்ருதி ப4ய பேளுவரு அவதாரக3ளிகெ3 தா3 ||52

 

நித்யசம்சாரிகள = ராஜஸர்களான நித்ய சம்சாரி ஜீவர்கள்

குணதோஷாத்மகரு = குணதோஷ மிஸ்ரமான ஸ்வபாவம் உள்ளவர்கள். இவர்களின் உபாசனை கிரமம் என்னவெனில்:

பிரம்மாதி ஜீவரு = பிரம்ம முதலான தேவதைகள்

ப்ருத்யரெம்பரு = பரமாத்மனின் பரிவார தேவதைகள் என்று சொல்வர்.

ராஜனோபாதியலி = ராஜன் எப்படி மக்களுக்கு அதிபதியோ, அப்படியே, பிரம்மாதி பிரஜைகளுக்கு பரமாத்மன் அதிபதி

எம்ப = என்பார்கள்

க்ருதிவாஸனு = சர்மமே வஸ்திரமாகக் கொண்ட ருத்ரதேவர்

பிரம்ம, ஸ்ரீவிஷ்ணு த்ரயர் = இந்த மூவ்ரும்

சம = சமர்

அவதாரகளிகெ = பரமாத்மனின் ராம கிருஷ்ணாதி அவதாரங்களுக்கு

சதா = எப்போதும்

துக்க சுக உத்பத்தி = பிறப்பு, இறப்பு, வளர்ச்சி

ம்ருதி = அழிவு

பய = பயம்

பேளுவரு = இவை உண்டு என்று சொல்வார்கள்

 

நித்ய சம்சாரிகள் எப்போதும், குணதோஷ மிஸ்ரமான ஸ்வபாவம் உள்ளவர்கள். இவர்களின் உபாசனை கிரமம் என்னவெனில்:

 

தத்ர ஸம்ஸ்ருதிபத்தாஸ்து குணதோஷோ பயாத்மகா: |

தத்ரோச்சா ராஜவத்விஷ்ணோ ஸர்வாதிக்யேஷு சம்ஷயா: ||

ஜானந்த்யதாபி பிரம்மாதி தேவானாம் பரிவாரதாம் ||

 

நித்ய சம்சாரிகள் என்பவர்கள் குணதோஷங்கள் என்னும் இரண்டும் கலந்த ஸ்வபாவம் உள்ளவர்கள். பரமாத்மன், ஒரு சாதாரண ராஜனைப் போல பிரஜாதிபதி என்று மட்டும் அறிவார்கள். அதாவது, ராஜர்களுக்கு மேலே சக்ரவர்த்தி எப்படி இருக்கிறானோ, அப்படியே பரமாத்மனுக்கும் வேறொருவர் தலைமை இருக்கலாம் என்று சர்வாதிக (சர்வோத்தம) விஷயத்தில் சந்தேகப் படுகிறார்கள் என்று அர்த்தம்.

 

ஆனாலும், பிரம்மாதி தேவதைகள் பரமாத்மனின் பரிவாரங்கள் என்று அறிந்திருப்பர் என்னும் சத்தத்வ ரத்ன மாலையின் வாக்கிய அர்த்தத்தையே இங்கு கொடுத்திருக்கிறார்.

 

பிரம்மதேவர், ருத்ரதேவர், ஸ்ரீவிஷ்ணு இவர்கள் மூவரும் சமம். ராமகிருஷ்ணாதி அவதாரங்களில் சுக, துக்க, வளர்ச்சி, நாசம், பயம் ஆகிய தோஷங்கள் இருக்கிறது என்று நினைப்பர். ஆகையால், இவர்களுக்கு நித்ய சம்சார ரூபமான சந்தானிக லோகம் கிடைக்கிறது. அங்கு, சுக, துக்க மிஸ்ர பலன்களை இவர்கள் அனுபவிப்பர்.

 

தாரதம்ய ஞானவில்லதெ3

ஸூரிக3ள நிந்தி3ஸுத நித்யதி3

தோருதிப்பரு ஸுஜனரோபாதி3யலி நரரொளகெ3 |

க்ரூர கர்மாக்தராகி3

ரீர போஷணெ கோ3ஸு3தி3

ஞ்சார மாள்பரு அன்யதே3வதெ நீசராலயதி3 ||53

 

தாரதம்ய ஞானவில்லதெ = இவர் உத்தமர், இவர் அதமர் என்னும் தாரதம்ய ஞானம் இல்லாமல்

சூரிகள = ஞானிகளை

நித்யதி = தினந்தோறும்

நிந்திஸுத = திட்டியவாறு

நரரொளகெ = மனுஷ்யரில்

சுஜனரோபாதியலி = வெகு யோக்யரான சாதுக்களைப் போல தெரிவான்

க்ரூர கர்மாஸக்தராகி = க்ரூர தேவதையின் பஜனை முதலான கர்மங்களில் ஈடுபட்டு

ஷரீரபோஷணெகோசுகதி = வயிற்றை நிரப்பி, தேகத்தை பார்த்துக் கொள்வதற்காக

அன்யதேவதெ நீசராலயதி = தேவதைகளில் நீசரான க்‌ஷுத்ர தேவதைகளின் ஆலயங்களிலும்; அல்லது, பிற தேவதைகளின் ஆலயங்கள்; அல்லது பணத்திற்காக நீச மக்களின் வீடுகள் இவற்றில் சஞ்சரிப்பர்.

 

மனுஷ்யாதமர்கள், தாரதம்ய ஞானமில்லாமல் பகவத் பக்தர்களை திட்டியவாறு, தன்னை ஞானி என்றும், தபஸ்வி என்றும், காட்டிக் கொள்வார்கள். க்‌ஷுத்ர தேவதைகளின் உபாசனையை செய்தவாறு, வயிற்றுப் பாட்டுக்காக, நீச மக்களின் வீட்டையே சுற்றி வருவார்கள்.

 

யஸ்தான் த்வேஷிஸமாந்த்வேஷ்டி யஸ்தானனு ஸமானனு -- என்னும் கீதா தாத்பர்யத்தின்படி, தாரதம்ய ஞானமில்லாமல் ஹரிபக்தரின் த்வேஷம் செய்பவன், பரமாத்மனிடமும் த்வேஷம் செய்தே செய்கிறான். ஆகையால், அவனுக்கு அதோகதியே கிடைக்கிறது என்பது கருத்து.

 

3ஷப்ரமதிய மதாப்3தி4யொளு ஸு

ரெனிப ரத்னக3ள அவலோ

கிஸி தெகெ3து3 ப்ராக்ருத ஸுபா4ஷாதந்துக3ள ரசிஸி |

ஸுபதி ஸ்ரீரமணகெ3

ர்ப்பிஸிதெ3 ஜ்ஜனரித3னு ந்தோ

ஷிலி தோ3ஷக3ளெணி3லெ காருண்யத3லி நித்ய ||54

 

தஷப்ரமதிய மத = பூர்ணப்ரக்ஞர் என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீமன் மத்வாசார்யரின் மதம் என்னும்

அப்தியொளு = கடலில்

சுமனஸரெனிப = தேவதைகள் என்னும் ரத்தினங்களை

அவலோகிஸி = தேடி, எடுத்து

ப்ராக்ருத சுபாஷாதந்துகள = பேசுமொழி எனப்படும் உத்தமமான கன்னட மொழி என்னும் கயிற்றில் கட்டி

ரசிஸி = மாலையாக செய்து

அஸுபதி = ப்ராணபதியான

ஸ்ரீரமணகெ = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணனுக்கு

ஸமர்ப்பிஸிதெ = சமர்ப்பித்தேன்

சஜ்ஜனரு = அறிஞர்கள்

தோஷகளெணிஸதலெ = இதிலுள்ள தோஷங்களை கவனிக்காமல்

காருண்யதலி = கருணையுடன்

நித்ய = தினந்தோறும் இதைப் பார்த்து மகிழட்டும்

 

நிருபம ஸ்ரீவிஷ்ணு லகுமி

ஸிஜோத்ப4வ வாயு வாணி

3ருட3 ஷண்மஹிஷியரு பார்வதி ஷக்ர ஸ்மர ப்ராண |

கு3ருப்3ருஹஸ்பதி ப்ரவஹ ஸூர்யனு

வருண நாரத3 வன்ஹி ப்தா

ங்கி3ரரு மித்ர க3ணேஷ ப்ருது க3ங்கா3 ஸ்வஹா பு34னு ||55

 

நிருபம = ஒப்புமை இல்லாதவனான

ஸ்ரீவிஷ்ணு, லட்சுமி,

சரசிஜோத்பவ = பிரம்மதேவர்

வாயு வாணி கருட ஷண்மஹிஷியரு பார்வதி

ஷக்ர = தேவேந்திரன்

ஸ்மர = மன்மதன்

பிராண = அஹங்காரிக பிராணன்

குரு ப்ருஹஸ்பதி ப்ரவஹ சூரியன் வருண நாரத

வன்ஹி = அக்னி

சப்தாங்கிரரு = அங்கிர, வசிஷ்ட முதலான பிரம்மதேவரின் ஏழு மக்கள்

மித்ர = மித்ர என்னும் சூரியன்

கணேஷ

ப்ருது = ப்ருது முதலான சக்ரவர்த்தி ராஜர்கள்

கங்கா ஸ்வாஹா புதன்.

 

தரணி தனய ஷனைஸ்சரனு பு

ஷ்கரனஜானஜ சிரபிதரு க3

ந்த3ருவரீர்வரு தே3வமானுஷ சக்ரவர்த்திக3ளு |

நரரொளுத்தம மத்4யமாத4

கரெஸுவரு மத்4யோத்தமரு ஈ

ரெரடு ஜன கை1வல்ய மார்க்க3ஸ்த2ரெந்தா3 நமிபெ ||56

 

தரணிதனய = சூரியனின் மகனான

ஷனைஸ்சரனு = சனீஸ்வரன்

புஷ்கர

அஜானஜ = அஜானஜ தேவதைகள்

சிரபிதரு,

கந்தர்வரீர்வரு தேவமானுஷ = தேவ கந்தர்வர், மனுஷ கந்தர்வர்

சக்ரவர்த்திகளு

நரரொளுத்தம = மனுஷ்யோத்தமர்

மத்யமரு, அதமர்,

கரெசுவரு = மனிதர்களில் இப்படி மூன்று வித ஜீவர்கள். இவர்களின் நடுவில் மனுஷ்ய கந்தர்வர்கள், மனுஷ்ய சக்ரவர்த்திகள், மனுஷ்யோத்தமர்கள், மனுஷ்ய மத்யமர்கள் என ஈரெரடு ஜன = 2+3=5 வித ஜீவர்கள்

கைவல்ய மார்க்கஸ்தரெந்து = முக்தி யோக்யர் என்று

ஆ நமிபெ = இவர்கள் அனைவருக்கும் வணங்க வேண்டும்.

 

என்று தாசார்யர் சந்தியின் முடிவில் வணங்குகிறார். இதைப்போலவே, பிருஹத் தாரதம்ய கிரந்தகாரரும் வணங்குகிறார்.

 

விஷ்ணு: ஸ்ரீபிரம்மாவாணீஷோனீ லோமேந்த்ர ஸ்மரோகுரோ: |

ப்ரவஹ ஸூர்யவருணௌ நாரதோக்னிர் வஷிஷ்டக: ||

மித்ரவிக்னேஸ்வரௌசைவ ப்ருதுர்கங்கா ச கேசன ||

ஸ்வாஹா புதோஷானனய: புஷ்கராஜான தேவதா: ||

பிதரோ தேவமனுஜ கந்தர்வாஸ்சக்ரவர்த்தின: ||

மனுஷ்யோத்தம பர்யந்தா: ப்ரீயந்தாம் குரவோமம ||

 

என்று சொல்லியிருக்கிறார். அதே அபிப்பிராயத்தையே தாசார்யரும் இங்கு சொல்லியிருக்கிறார்.

 

ஸாரப4க்திஞானதி3 ப்3ருஹ

த் தாரதம்யவனரிது படி2ஸு

ஸூரிக3ளிக3னுதி3னதி3 புருஷார்த்த23ள பூரயிஸி |

காருணிக மருந்தராத்மக

ப்ரேரக ஜக3ன்னாத2விட்ட2

தோரிகொம்ப3னு ஹ்ருத்க1மலதொ3ளு யோக்3யதெக3ளரிது ||57

 

ஸாரபக்திஞானதிம் = பரமாத்மனிடம் த்ருடமான பக்தியினாலும், ஹரி சர்வோத்தம என்னும் ஞானத்தினாலும்

ப்ருஹத்தாரதம்யவனரிது = ப்ருஹத் தாரதம்ய என்னும் இந்த சந்தியின் சாரத்தை அறிந்து

படிசுவ சூரிகளிகெ = படிக்கும் ஞானிகளுக்கு

அனுதினதி = தினந்தோறும்

புருஷார்த்தகள பூரயிஸி = அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி

காருணிக = மஹா கருணாளுவான

மருதந்தராத்மக = பாரதி ரமண முக்யபிராணாந்தர்கத

ப்ரேரக ஜகன்னாதவிட்டல = லட்சுமிபதியான ஸ்ரீ ஜகன்னாதவிட்டலன்

யோக்யதெகளரிது = அவரவர்களின் யோக்யதையை அறிந்து

ஹ்ருத்கமலதொளு = அவர்களின் இதய கமலத்தில்

தோரிகொம்பனு = அபரோக்‌ஷத்தில் தன் ரூபத்தைக் காட்டுகிறான்.

 

ஸ்ரீவிஷ்ணு சர்வோத்தமன் என்பதில் துவங்கி, மனுஷ்யோத்தமர்கள் வரை சொல்லியிருக்கும் ப்ருஹத் தாரதம்ய என்னும் இந்த சந்தியின் சாரத்தை அறிந்து, பக்தி ஞானத்தினால், அதனை படிப்பவர்களுக்கு, ஸ்ரீபாரதிரமண முக்யபிராணாந்தர்கத ஸ்ரீலட்சுமிபதியான ஜகன்னாதவிட்டலன் மகிழ்ந்து, அவர்களின் தர்ம காமாதி நான்கு வித புருஷார்த்தங்களை நிறைவேற்றி, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவர்களின் இதய கமலங்களில் தரிசனம் அளிக்கிறான். அதாவது, அபரோக்‌ஷத்தில் பரமாத்மனை காண்பர் என்று அர்த்தம்.

 

ப்ருஹத் தாரதம்ய சந்தி என்னும் 21ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***

No comments:

Post a Comment