ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, August 15, 2020

6-10 ஸ்வகத ஸ்வாதந்த்ர்ய சந்தி

 ஈ வித4தி3 ஸ்வாதந்த்ரியத்வவ

தே3வ மானவ தா3னவரொளு ர

மா வினோதி3 விபா43 மாடி3ட்டல்லெ ரமிஸுவனு |

மூவரொளகி3த்த3வர கர்மவ

தா விகாரவ கை33லெ க

ல்பாவஸானகெ கொடு3வனாயா வரவர க3திய ||6

 

ஈ விததி = முந்தைய பத்யங்களில் கூறிய விதமாக

ஸ்வாதந்த்ரியவ = தனக்குள் இருக்கும் ஸ்வாதந்த்ர்யத்தை

தேவ மானவ தானவரொளு = தேவதைகள், மனுஷ்யர்கள், தைத்யர்கள் இவர்களில்

ரமாவினோதி = ரமாதேவியரின் மனதிற்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் ஸ்ரீஹரி

விபாக மாடிட்டு = பிரித்துக் கொடுத்து

அல்லெ = அந்த தேவ மானவரில் இருந்து

ரமிஸுவனு = வீற்றிருக்கிறான்

அவர கர்மவ = அவர்கள் செய்யவேண்டிய கர்மங்களை

தா = தான்

விகாரகெய்ஸதலெ = வேறுபாடு பார்க்காமல்

அனாயாஸ = மிகச் சுலபமாக

கல்பாவஸானகெ = பிரம்ம கல்பத்தின் இறுதியில்

அவரவர கதிய = தேவதைகளுக்கு, தைத்யர்களுக்கு, மனுஷ்யர்களுக்கு அவரவருக்கு யோக்யதானுசாரமான கதியை

கொடுவ = கொடுக்கிறான்.

 

இப்படியாக, பரமாத்மன், தனக்குள் இருக்கும் ஸ்வாதந்த்ர்யத்தை தேவதைகளுக்கு, மானருக்கு, தானவருக்கு பிரித்துக் கொடுத்து, தானும் அவருக்குள் இருந்து, அவரவர்கள் செய்ய வேண்டிய கர்மங்களை தான் செய்து செய்விக்கிறான். பரமாத்மனால் கொடுக்கப்பட்ட ஸ்வாதந்த்ர்யத்தினால், தேவதைத்யர்கள், ஜீவர்களில் உள்ளிருந்து செய்விக்கும், புண்ய பாவ கர்மங்களுக்கு தக்க பலன்களை அனுபவிக்கின்றனர்.

 

அதாவது, புண்யத்தை செய்விக்கும் தேவதைகள் புண்ய பலனையும், பாவத்தை செய்விக்கும் தைத்யர்கள் பாவ கர்மத்தின் பலன்களையும் அனுபவிக்கின்றனர். மத்யமரான ஜீவர்கள் புண்யபாபம் என்னும் இரண்டின் பலன்களையும் அனுபவிக்கின்றனர்.

 

பிரம்மகல்பத்தின் இறுதியில் அவரவர்களின் கர்மத்திற்கேற்ப தேவதைகளுக்கும் மனுஷ்யோத்தமர்களுக்கும் முக்தியையும், மத்யம மனுஷ்யர்களுக்கு சுக துக்க மிஸ்ரமான நித்ய சம்சாரத்தையும், தைத்யர்களுக்கு அந்தம்தமஸ்ஸையும் கொடுக்கிறான். விஷ்ணு ரஹஸ்யத்தில்:

 

யதீந்த்ரியேண யத்குர்வன் புண்யம் பாபஞ்ச த்ருஷ்யதே |

தஸ்யதத் தஸ்வதந்த்ரத்வாத் பலபாஜோகிளாஹிதே ||

 

எந்த இந்திரியங்களால் புண்ய பாவ முதலான கர்மங்களை செய்கிறாரோ, அந்தந்த கர்ம பலனுக்கு அந்தந்த இந்திரிய அபிமானிகளான தேவதைத்யர்கள் பங்கு வகிக்கின்றனர். பரமாத்மன் கொடுத்த ஸ்வாதந்த்ரியத்தால், தேவ தைத்யர்களே புண்யபாவங்களை செய்விப்பதால், அந்தந்த பலன்களை அவரவர்களே அனுபவிக்க வேண்டும். இதே அர்த்தத்தையே பாகவத 11ம் ஸ்கந்தத்தின் தாத்பர்யத்தில் விளக்கியிருக்கின்றனர்.

 

ஜீவாபிமானினஸ்சைவ த்ரிவிதா: சம்ப்ரகீர்த்திதா: |

ஜீவமான்யுத்தமோ ப்ரஹ்மாமத்யம: ஸ்வய: மேவது ||

அதம: கலிருத்திஷ்ப்ரஸ்தத்ர மத்யம நீசயோ: |

ம்ருதிஜன்ம க்‌ஷுதா துக்க ப்ரப்ருத்யகிளமேவது ||

நோ த்தமஸ்யதுஜீவஸ்ய தேஹாதேஷ்சகதஞ்சன |

ஜன்மாதி க்ருத துக்கந்து தேஹமான்யஸுரஸ்யத் ||

ஸுப்தாத்யப்யயஜம் துக்கமஸுரேந்த்ரிய மானின: |

க்‌ஷுன்னிமித்தந்து யத்துக்கம் ப்ராணமான்ய ஸுரஸ்ய தத் ||

பயதர்ஷா திஜந்துக்கம் மனோமான்ய ஸுரஸ்யச ||

ஜீவமான்யஸுரஸ்ய ஸ்யாத்ஸர்வம் தத்ஸமுதாயத: ||

ஏவமேவ சுகம் தேவேஷுபயம் மத்யமேஷுச ||

இத்யாதி ||

 

ஜீவாபிமானிகள் மூன்று விதங்களாக இருக்கின்றனர். உத்தமர் பிரம்மதேவர். மத்யம ஜீவாபிமானி புரஞ்சனன் என்னும் ராஜன் ஒருவன் மற்றும் ஸ்வயம் ஜீவன். கலி அதமன். இவர்களின் பிறப்பு, இறப்பு, பசி ஆகிய துக்கங்கள் அனைத்தும், மத்யம மற்றும் அதம ஜீவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. உத்தம ஜீவர்களுக்கு இவை இல்லை.

 

* பிறப்பு இறப்பினால் ஆகும் துக்கம், தேஹமானியான தைத்யர்களுக்கு,

* பசியினால் ஆகும் துக்கம் ப்ராணமானி தைத்யனுக்கு,

* பயம், ஆசை ஆகியவற்றால் ஆகும் துக்கம் மனோபிமானி தைத்யர்களுக்கு.

* நான் நீசன். என்னைவிட அவன் நன்றாக இருக்கிறானே என்னும் சங்கடப்படும் துக்கம் சித்தமானி தைத்யருக்கு ஆகிறது.

* ஜீவமானியான தைத்யருக்கு சமுதாயத்தில் எல்லா துக்கங்களும் உண்டு.

 

இதைப்போல தேவதைகளுக்கு அந்தந்த இந்திரியங்களால் வரும் சுகங்கள், அந்தந்த இந்திரிய அபிமானிகளுக்கு ஆகிறது. மத்யமரான ஜீவருக்கு புண்ணியத்திலும் பாவத்திலும்கூட பாகம் உண்டு என்று சொல்கிறார். அந்த அபிப்பிராயத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார்.

 

ஆலயக3ளொளகி3ப்ப தீ3

ஜ்வாலெ வர்திக3ளனுரிஸி ஜன

ராலிகொ3ப்புவ தெரதி3 ஹரிதோர்ப்ப ர்வத்ர |

காலகாலதி3 ஸ்ரீத4ரா து3

ர்கா3 லலனெயர கூடி3 ஸு2மய

லீலெகை3யலு த்ரிகு3ணகார்யக3ளஹவு ஜீவரிகெ3 ||7

 

ஆலயகளொளகெ = வீடுகளில்

இப்ப = இருக்கும்

தீபஜ்வாலெ = தீபத்தின் ஒளி

வர்த்திகளனு = வத்திகளை

அனுஸரிஸி = அனுசரித்து

ஜனர = மக்களின்

அளிகளிகெ = கண்களுக்கு

ஒப்புவதெரதி = ஒளிர்வதைப் போல

ஹரி = ஸ்ரீஹரி

சர்வத்ர = அனைத்து இடங்களிலும்

தோர்ப்ப = காண்பித்துக் கொள்வான்

சுகமய = சுக ஸ்வரூபனான

பரமாத்மன்

ஸ்ரீதராதுர்கா லலனெயர கூடி = ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவிர் என்னும் மனைவியர்களுடன் சேர்ந்து

காலகாலதி = அனைத்து காலங்களிலும்

லீலெகைய்யலு = க்ரீடை செய்திருக்க (தேகங்களில் இருந்து, அவரவர்கள் செய்யவேண்டிய செயல்களை செய்வித்து க்ரீடித்திருக்க)

ஜீவரிகெ த்ரிகுண கார்யகளு = சத்வ ரஜஸ் தமோ குண சம்பந்தமான புண்ய, புண்யபாப மிஸ்ர, பாவ என்னும் மூன்று விதமான கர்மங்கள்,

அஹவு = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப ஆகிறது.

 

வீடுகளில் எண்ணெயில் திரி போட்டு, தீபத்தை ஏற்றினால், அந்த வர்த்தி சிறியதாக இருந்தால், தீபத்தின் ஒளி கம்மியாக இருக்கிறது. 10 வர்த்திகளைப் போட்டு தீபத்தை ஏற்றினால், ஒளி அதிகமாகிறது. இப்படி வீடுகளில், வர்த்திகளுக்கேற்ப தீபத்தின் ஒளி குறைவோ, அதிகமோ ஆகிறது. இதைப்போலவே, இந்த ஜீவர்களின் தேகத்தின் இதய கமலம் என்னும் வீட்டில் பரமாத்மன், அவரவர்களின் யோக்யதைக்கேற்ப தீபத்தைப் போல ஒளிர்கிறான். இந்த உவமானத்தில் ஜீவர்களின் யோக்யதையே வர்த்தி. அந்த யோக்யதைக்கேற்பவே, பகவத் ஸ்வரூபம் ஹ்ருதயாகாஷத்தில் ஒளிர்கிறது. அந்த வர்த்திக்கேற்ப தீபத்தின் ஒளி குறைவோ, அதிகமோ ஆகிறதே தவிர, தீபத்தில் எப்படி வேறுபாடுகள் இல்லையோ, அப்படியே பரமாத்மன், சிலரின் தேகத்தில், மிகுந்த ஒளியுடனும், சிலரின் தேகத்தில் சாதாரண ஒளியுடனும் இருந்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப காட்டிக் கொள்கிறான்.

 

ஜீவர்கள் மூன்று விதம். இந்த மூன்று வித ஜீவர்களிலும், மூன்று குணங்களின் காரியங்களும் ஆகின்றன. சாத்விகர்கள் - ராஜஸ தாமஸ காரியங்களையும் செய்கின்றனர். ராஜஸர்கள் - சாத்விக, தாமஸ காரியங்களையும் செய்கின்றனர். ஆனால், சாத்விகர்கள் செய்யும் தாமஸ கர்மங்கள், நிரந்தரமான அந்தம்தமஸ்ஸிற்கு சாதனையாகும் பகவன் நிந்த்யாதி கர்மங்கள் அல்ல. தாமஸர்கள் செய்யும் சாத்விக கர்மங்கள், முக்திக்கு சாதனையான கர்மங்கள் அல்ல. தாமஸர்கள் செய்யும் பாப புண்யங்கள் தத்தம் யோக்யதையை மீறி செய்த புண்ய பாபங்களை நாசம் செய்வதற்கும், ஸ்வர்க்க நரகாதிகளை அனுபவிப்பதற்கு மட்டுமே சாதனை ஆகிறது.

 

அதாவது, சாத்விகர்கள், பாவங்களை செய்தாலும், அதனால் வருத்தம் கொண்டு, அந்த பாவங்களை பரமாத்மனுக்கே அர்ப்பித்து, பக்தியால் வேண்டியவாறு, அந்த பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள். அல்லது, அவர்கள், தங்களின் யோக்யதையை மீறி புண்யங்களை செய்திருந்தால், அந்த புண்யங்களை மட்டும் போக்குகிறது. இப்படி சாத்விகர்கள் செய்த பாவங்கள் அப்படியே அழிந்து போகின்றன.

 

இதைப்போலவே, தாமஸர்கள் செய்யும் புண்ணியங்களும்கூட, அவர்கள் செய்த பாப கர்மங்கள், தம் யோக்யதைக்கு மீறியதாக இருந்தால், அந்த பாவங்களை பரிகரித்து அவரின் யோக்யதைக்கு எவ்வளவு பாவங்கள் இருக்கவேண்டுமோ, அவ்வளவு பாவங்களே இருக்கிறது. அல்லது பூமியில் கொஞ்சம் அதிகமாக சுகங்களை அனுபவிப்பர். சில காலம், ஸ்வ்ர்க்கத்திலும் அனுபவிக்கலாம். இவ்வளவு அதன் பலனே தவிர, அவை முக்திக்கு சாதனை ஆவதில்லை.

 

ஆனால், சாத்விக தாமசாதிகளுக்கு வேறுபாடு ஏன் என்றால், சாத்விகர்களுக்கு புண்ய பாகம் அதிகமாகி, பாவம் குறைவாக இருக்கும். அதுவே, தாமஸருக்கு பாப அதிகமாக இருந்து, புண்ணியம் கொஞ்சமாக இருக்கும். ராஜஸர்களுக்கு இரண்டும் சமமாக இருக்கும் என்பது கருத்து. இப்படியாக, ஜீவர்கள் த்ரிவித கர்மங்களை செய்யவேண்டுமெனில், சத்வ ரஜஸ் தமோ குணாத்மகரான ஸ்ரீபூதுர்காதேவியர்களுடன் சேர்ந்து பரமாத்மன், ஜீவர்களின் தேகத்தில் இருந்து, சத்வ குண கார்யத்தை செய்விப்பதற்கு பூதேவியரை, தமோகுண காரியங்களை செய்விப்பதற்கு துர்காதேவியையும் நியமித்து, இந்த மூவரால் அந்தந்த ஜீவர்களிடமிருந்து அந்தந்த கர்மங்களை செய்வித்து, சஞ்சரித்திருக்கிறான்.

 

இந்த்3ரியக3ளிம் மாள்ப கர்ம

த்3வந்த்3வக3ள தனக3ர்ப்பிலு கோ3

விந்த3 புண்யவ கொண்டு3 பாபவ ப4ஸ்மவனெ மாள்ப |

இந்தி3ரேஷனு ப4க்தஜனரனு

நிந்தி3ஸுவ ரொளகி3ப்ப புண்யவ

தந்து3 தன்னவகீ3வ பாபக3ளவரி கு3ணிஸுவனு ||8

 

இந்திரியங்களிம் = கண் காது முதலான இந்திரியங்களால்

மாள்ப = செய்யும்

கர்மத்வந்த்வகள = புண்ணிய பாவ ரூபங்களான இரு வித கர்மங்களை

தனகர்ப்பிஸலு = பரமாத்மனுக்கு அர்ப்பிக்க

கோவிந்த

புண்யவகொண்டு = புண்யத்தை ஏற்றுக்கொண்டு

பாபவ = அந்த பாவங்களை

பஸ்மவனெ மாள்ப = பொடிப்பொடியாக ஆக்குகிறான்

இந்திரேஷனு = லட்சுமிபதியான ஸ்ரீஹரி

பக்தஜனரன = பக்தர்களை

நிந்திஸுவரொளகெ = திட்டுபவர்களில்

இப்ப = இருக்கிறான்

புண்யவ = புண்யத்தை

தன்னவகெ = தன் பக்தர்களுக்கு

ஈவ = கொடுக்கிறான்

பாபகள = பாவங்களை

அவரிகெ உணிஸுவனு = அவர்களுக்கே கொடுக்கிறான்.

 

கண், காது முதலான இந்திரியங்களால் செய்யும் புண்ய, பாவ கர்மங்களை பரமாத்மனுக்கு அர்ப்பித்தால், பரமாத்மன், புண்ணியங்களை ஸ்வீகரித்து, பாபங்களை சுட்டுப் பொசுக்குகிறான். மற்றும், தன் த்வேஷத்தையும், தன் பக்தரின் த்வேஷத்தையும் செய்யும் பாபிகள் ஏதாவது புண்ணியம் செய்தாலும், அந்த புண்ணியத்தை எடுத்து, தன் பக்தர்களுக்குக் கொடுக்கிறான். பாவங்களை அந்த பாவிகளே அனுபவிக்குமாறு செய்கிறான்.

 

அதுபோல, தன் பக்தர்கள் செய்யும் பாவங்களை, தன்னிடமும், தன் பக்தரான பிரம்மாதிகளிலும், த்வேஷம் செய்யும் பாவிபளுக்குக் கொடுக்கிறான். விஷ்ணு ரஹஸ்யத்தில்:

 

க்ருஹ்யாதிசஹரி:புண்யம் பாபம் பஸ்மீகரோதிச |

ஸ்வஸ்யச த்ரோஹிண: கிஞ்சித் பாபாம்ஷம் ப்ரததாதி ஸ: ||12

ததைவ நிஜ பக்தானாம் பிரம்மாதினாஞ்சயேத்ருஹ: |

தேப்ய ஏவஹி தத்பாப விபாகம் ப்ரததாத்யஜ: ||13

பாபகர்மணியேபிஸ்யு: ஸஹாயா: பாபரூபிண: |

யதாபராதம் தேப்யோபி பாபானாம் விபஜத்யஸௌ ||14

தைத்யபாககதம் புண்யம் ததாபாகம் ததாதிச |

புண்யகர்ம ஸஹாயாயே தேஷாமதசயே நரா: ||15

 

என்று வரும் ஸ்லோகங்களே இந்த பத்யத்திற்கு ஆதாரமாகும்.

 

ஹொத்து ஹொத்திகெ3 பாபகர்ம ப்ர

வர்த்தகர நிந்திதெ3 தனகி3

ந்து3த்தமர கு3ண கர்மக3ள கொண்டா333லெ இப்ப |

மர்த்யரிகெ3 கோ3 பி3ராஹ்மண ஸ்த்ரி

ஹத்ய மொத3லாத3கி2ல தோ3ஷக3

ளித்தபனு ந்தே3ஹப33 ல்லகி2ஷாஸ்திரமத ||9

 

ஹொத்து ஹொத்திகெ = அனைத்து வேளைகளிலும்

பாபகர்ம = பாப கர்மங்களை

ப்ரவர்த்தகர = செய்து கொண்டிருக்கும் துஷ்டர்களை

நிந்திஸதெ = திட்டாமல்

தனகிந்துத்தமர = தன்னைவிட ஞானத்திலும், மரியாதையிலும், பகவத் பக்தியிலும், உத்தமர் ஆனவரை

குண கர்மகள = குணங்களையும் அவரின் சரித்திரங்களையும்

கொண்டாடதலெ இப்ப = அவர்களை புகழாமல் இருக்கிறான்

மர்த்யரிகெ = மனிதர்களுக்கு

கோ பிராமண ஸ்த்ரி ஹத்ய = கோ ஹத்யா, பிராமண ஹத்யா, ஸ்த்ரி ஹத்ய முதலான தோஷங்களை

இத்தபனு = கொடுக்கிறான்

ஸந்தேஹபடிசல்ல = இந்த விஷயத்தில் சந்தேகமே படவேண்டியதில்லை

இது அகிளசாஸ்திரமத = இதுவே அனைத்து சாஸ்திரங்களும் ஒப்புக்கொள்ளும் விஷயம் ஆகும்.

 

விடியலில் சந்தியாவந்தனம் எப்படி நித்யகர்மமோ அப்படி, தமோயோக்யரான பகவத் த்வேஷிகளை திட்டுவது, பக்தர்களை கொண்டாடுவதுகூட கடமையே ஆகும். இதை எவனொருவன் செய்வதில்லையோ, அவனுக்கு, ஸ்த்ரி ஹத்யா, கோ ஹத்யா, பிரம்ம ஹத்யா முதலான தோஷங்களை பரமாத்மன் கொடுக்கிறான். இந்த விஷயத்தில் சந்தேகப்படவே வேண்டியதில்லை. இது சாஸ்திரங்களால் ஒப்புக்கொண்ட விஷயமாகும்.

 

அதசயே நரா: ||15

தைத்ய நிந்தாம் நகுர்வந்தி தேபிதத்பாபபாகின: ||

என்னும் விஷ்ணு ரஹஸ்ய வாக்கியம் இதற்கு ஆதாரமாகும்.

 

தன்ன ஸ்வாதந்த்ர்ய கு3ணக3ள ஹி

ரண்ய க3ர்பா4த்3யரிகெ3 கலிமுக2

தா3னவர ந்ததிகெ3 அவரதி4காரவ நுரிஸி

புண்யபாக3ளீவ ப3ஹுகா

ருண்யஸா3ர அல்ப ஷக்திக3

ளுண்ணலரியதெ3 இரலு உணக3லிஸுவனு ர்வரிகெ3 ||10

 

தன்ன ஸ்வாதந்த்ர்ய குணகள = தன் ஸ்வாதந்த்ரியத்தின் குணங்களை

ஹிரண்ய கர்பாத்யரிகெ = பிரம்மதேவரே முதலான தேவதைகளுக்கு

கலிமுக தானவர சந்ததிகெ = கலி முதலான தைத்யர்களின் வம்சத்தினருக்கு கொடுத்து

அவரதிகாரவனுஸரிஸி = அவரவர்களின் யோக்யதையை அனுசரித்து

புண்யபாபகளீவ = புண்ய பாவங்களின் பலன்களைக் கொடுக்கிறான்

பஹு காருண்யஸாகரனு = கருணைக்கடலான ஸ்ரீஹரி

அல்பஷக்திகளு = மிகச்சிறியதான எந்த பலன்களாகட்டும் அதை அனுபவிக்கும் சக்தி இல்லாதிருக்கும் ஜீவன்

உண்ணலரியதெ இரலு = பலன்களை அனுபவிக்க அறியாதிருக்க

ஸர்வரிகெ = அனைத்து பிராணிகளுக்கும்

உணகலிஸிதனு = பலன்களை அனுபவிக்குமாறு செய்கிறான்.

 

மேற்கூறியவாறு பிரம்மாதி தேவதைகளுக்கும், கலி முதலான தைத்யர்களுக்கும், தன் ஸ்வாதந்த்ர்ய குணங்களை, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப பிரித்துக் கொடுத்து, அந்த சக்தியால் அவரவர்கள் செய்யும் புண்ய பாபாதிகளை அனுசரித்து, அவரவர்களுக்கு யோக்யதைக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறான். கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி, மிகச் சிறியதான, குறைந்த சக்தியுள்ள ஜீவர்களுக்கு எந்த விதமான போக சக்தியும் இல்லை என்பதால், அத்தகையவர்களுக்கு சக்தியைக் கொடுத்து பலன்களை உண்ணுமாறு செய்கிறான். 

No comments:

Post a Comment