ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
சந்தி அறிமுகம்:
ஜீவனுக்கு கர்த்ருத்வமே இல்லையென்றால், புண்ய பாபங்களின் பலனும் அவனுக்கு கிடைக்காது என்றாகிறது. கர்த்ருத்வ
இருக்கிறது என்று சொன்னால், சர்வ கர்த்ரு விஷ்ணு என்னும்
வாக்கியத்திற்கு விரோதம் வருகிறது. இப்படிப்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்காக
பரமாத்மன் ஜீவருக்குக் கொடுத்திருக்கும் மிகச்சிறிய தத்த ஸ்வாதந்த்ரயத்தால் ‘ஜீவோபி கர்த்தா’ என்று பிரம்மசூத்ர பாஷ்யத்தில் சொன்னதைப்போல, ஜீவனுக்கு பராதீன கர்த்ருத்வம் உண்டு என்று சொல்லியவாறு, அதற்கு சம்பந்தமான சில விஷயங்களை இந்த சந்தியில் குறிப்பிடுகிறார்.
காருணிக ஹரி தன்னொளிப்ப அ
பார ஸ்வாதந்த்ரிய கு3ணதி3 நா
நூரு தெகெ3து3 ஸபாத3 ஆரொந்த3தி4க அரவத்து |
நாரிகி3த்து த்3வி ஷோடஷாதி4க
னூரு பாத3த்ரயவ தன்ன ஷ
ரீரதொ3ளகீபரி விபா3க3வ மாட்3த த்ரிபதா3ஹ்வ ||1
காருணிக = கருணாளுவான
ஹரி = ஸ்ரீபரமாத்மன்
தன்னொளிப்ப = தன்னில் இருக்கும்
அபார ஸ்வாதந்த்ரயகுணதி = அபரிமித ஸ்வாதந்த்ர்ய
குணங்களில்
நானூரு தெகெது = 400 எடுத்து
ஆரொந்ததிக அரவத்து = 6+1=7; 60.
ஸபாத = கால் (1/4).
நாரிகித்த = தன் மனைவியான ஸ்ரீலட்சுமிதேவிக்குக்
கொடுத்தான் (60+7+1/4 = 67 1/4)
த்விஷோடஷாதிக நூரு பாதத்ரயவ = 2*16=32 ; 100 ;
3/4. (மொத்தம் 132 3/4)
தன்ன ஷரீரதொளகெ = உலகத்தில் கர்மங்களை செய்வதற்கு
தேவையான அளவு, தன் தேகத்தில் வைத்துக் கொண்டான்
த்ரிபதாஹ்வா = ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார என்னும் மூன்று அம்சங்களால் உலகத்தை வியாபித்துக் கொண்டிருப்பதால், த்ரிபாத நாமகனான ஸ்ரீஹரி
ஈ பரி = மேற்சொன்ன ரீதியாகி
விபாகவ மாட்த = பிரித்துக் கொடுத்தான்.
மஹா கருணாளுவான ஸ்ரீபரமாத்மன், தனக்குள் இருக்கும் அபரிமிதமான ஸ்வாதந்த்ர்ய குணங்களில், ஸ்ருஷ்ட்யாதி உலக வியாபாரங்களை செய்வதற்காக 400 பாக ஸ்வதந்த்ரத்தை மட்டும் வேறாக எடுத்து, அதில் 67ஏ கால் (67 1/4) பாகங்களை லட்சுமிதேவியருக்குக் கொடுத்தான். 132ஏ முக்கால் (132 3/4) பாகங்களை தான் வைத்துக் கொண்டான். இப்படியாக அந்த 400 பாகங்களில் 200 பாகங்களை லட்சுமி நாராயணர்கள் வைத்துக்கொண்டு, மிச்ச 200 பாகங்களை பிரம்மதேவரே முதலான அனைத்து பிராணிகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.
ஒரு மனிதன் மிகச்சிறியதான ஒரு வேலையை
செய்யவேண்டுமெனில், தன்னில் இருக்கும் எந்தவொரு சக்தியையும் பயன்படுத்தத் தேவையில்லை. தன்
தகுதிக்கு மீறிய வேலையை செய்ய வேண்டும் என்றால் மட்டுமே, தன்னில் இருக்கும் அனைத்து சக்தியையும் பயன்படுத்துகிறான். அப்படியே
ஸ்ரீபரமாத்மனுக்கு, இந்த உலகத்து ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, நியமன, ஞான,
அஞ்ஞான, பந்த,
மோட்ச என்னும் அஷ்ட கர்த்ருத்வ காரியத்தை தான் செய்யவேண்டுமெனில் அது ஒன்றும்
பெரிய விஷயமல்ல. அவனைப் பொறுத்தவரை அது மிகவும் சிறியதான அல்பமான வேலையே. இவற்றை
செய்வதற்கு, தன் சக்தி அனைத்தும் பயன்படுத்தத் தேவையில்லை. பரமாத்மனுக்கு இருக்கும்
ஸ்வாதந்த்ர்யாதி குணங்கள் அபரிமிதமானவை. ஆனால் இவற்றை செய்வதற்கு மிகச்சிறிய
அளவிலான ஸ்வாதந்த்ர்ய மட்டுமே போதுமானவை.
ஆகையால், அமரிமித ஸ்வாதந்த்ர்ய குணங்களில், 400 பாகங்கள் இருந்தால் அனைத்து ஜகத் வியாபாரங்களும் செய்ய முடியும் என்று
நிச்சயித்து, அவ்வளவே பாகங்களை எடுத்து, அவற்றில் லட்சுமிஸமேத தான் செய்ய
வேண்டிய வேலைகளுக்கு 200 பாகங்களை தமக்காக வைத்துக் கொண்டான். ஸாத்விகாதி ஜீவர்கள், தத்தம் யோக்யதைக்கேற்ப கதி அடையவேண்டுமெனில், அவரவர்கள் கொஞ்சமாவது கர்மங்களை செய்யவேண்டும். மற்றும் அவர்கள் அந்த பலன்களை
அனுபவிக்க வேண்டும் என்று நிச்சயித்து, தன் பிரதிபிம்பர்களான பிரம்மாதி
அனைத்து ஜீவர்களுக்கும் 200 பாகங்களை பிரித்துக் கொடுத்தான்
என்பது கருத்து.
த்ரிபதாஹ்வ = பாத என்றால் அம்ச என்று அர்த்தம் என்று
பாகவத 2ம் ஸ்கந்தத்தின் வியாக்யானத்தில் சொல்லியிருக்கின்றனர். ‘பாதோஸ்ய விஷ்வா பூதானி த்ரிபதஸ்யாsம்ருதம் திவி’ என்னும் புருஷ சூக்த வாக்கியத்தால், இந்த பிரபஞ்ச ஆதி அந்தம், த்ரிபாத நாமக பரமாத்மனுக்கு ஒரு பாதம் என்றால், பரமாத்மனின் ஒரு அம்சம் என்று அர்த்தம். ‘மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூத: ஸனாதன:’ என்னும் கீதை வாக்கியத்திற்கேற்ப
அம்ச என்றால் ப்ரதிபிம்பம் என்று அர்த்தம்.
ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்டத்தில் இருக்கும் நாராயணாதி ரூபங்கள், ராமகிருஷ்ணாதி அவதார ரூபங்கள், இவற்றிற்கு ஸ்வாம்ஷ என்று பெயர்.
நர, ப்ரத்யும்ன, ஸாம்ப, லக்ஷ்மண ஆகியோரில் இருக்கும் அம்ச ரூபத்திற்கு பின்னாம்ஷ என்று பெயர்.
இப்படியாக மூன்று அம்ஷ ரூபங்களால் ஜகத் காரியங்களை செய்வதற்கு 400 ஸ்வாதந்த்ர்ய பாகங்களைவிட அதிகம் தேவையில்லை. ஆகையால், அவ்வளவு மட்டும் எடுத்துக் கொண்டான் என்பது கருத்து.
ஸத்யலோகாதி3ப னொளகெ3 ஐ
வத்தெரடு3 பவமானனொளு நா
ல்வத்து மேலெண்டதி4க ஷிவனொளகி3ட்டனிப்பத்து |
சித்தஜேந்த்3ரரொளை த3தி4க த3ஷ
த1த்வமானிக3ளெனிப ஸுரரொளு
ஹத்து ஈரைத3கி2ல ஜீவரொளிட்ட நிரவத்3ய ||2
ஸத்யலோகாதிபனொளகெ = பிரம்மதேவரில்
ஐவத்தெரடு = 52
பவமானனொளு = வாயுதேவரில்
நால்வத்து மேலெண்டதிக = 40+8=48 பாகங்கள்
ஷிவனொளு = ருத்ரதேவரில்
இப்பத்து = 20 பாகங்கள்
சித்தஜேந்த்ரரொள = மன்மத மற்றும் இந்திரனில்
ஐததிக தஷ = 15 பாகங்கள்
தத்வமானிகளெனிப சுரரொளு = தத்வாபிமானி தேவதைகளில்
ஹத்து = 10 பாகங்கள்
நிரவத்ய = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி
அகிள ஜீவரொளித்து = அனைத்து பிராணிகளிலும்
ஈரைது = 2*5=10 பாகங்களை
இப்ப = இப்படியாக பாகங்களைப் பிரித்து, வைக்கிறான்.
* பிரம்மதேவரில் 52 பாகங்கள்
* வாயுதேவரில் 48 பாகங்கள்
* ருத்ரதேவரில் 20 பாகங்கள்
* இந்திர மற்றும் மன்மதனில் 15 பாகங்கள்
* தத்வாபிமானி தேவதைகளில் 10 பாகங்கள்
* மற்ற அனைத்து ஜீவர்களுக்கு 10 பாகங்கள் வைத்தான்.
கலி மொத3லுகொ3ண்டகி2ல தா3னவ
ரொளகெ3 நால்வத்தை3து3 ஈ பரி
திளிது3பாஸனெ மாடு3 மரெயதெ3 பரமப4கு3தி1யலி |
இளெயொளகெ3 ஸஞ்சரிஸு லகுமி
நிலயனாளானெந்து3 ஸர்வ
ஸ்த2லக3ளலி ஸந்தெயிஸுதிப்பனு கெ3ளெயனந்த3த3லி ||3
கலி மொதலுகொண்டு = கலியிலிருந்து துவங்கி
அகிள தானவரொளகெ = அனைத்து தைத்யர்களிலும்
நால்வத்தைது = 45 பாகங்களை வைத்தான்
ஈ பரி திளிது = இப்படியாக அறிந்து
மரெயதெ = இதை மறக்காமல்
பரமபகுதியலி = மிகுந்த பக்தியுடன்
உபாசனெ மாடு = ஸ்ரீபரமாத்மனை துதி.
இளெயொளகெ = பூமியில்
லகுமி நிலயன = ஸ்ரீனிவாசனின்
ஆளுனானெந்து = பக்தன் நான் என்று
சஞ்சரிஸு = சஞ்சரித்து வா
ஸ்ரீஹரி
கெளெயனந்ததலி = நண்பனைப் போல
ஸந்தெயிஸுதிப்பனு = சமாதானம் செய்கிறான்.
கலி முதலான தைத்யர்களில் 45 பாகங்களை வைத்தான். முந்தைய பத்யத்தில் கூறியபடி, பிரம்ம தேவரே முதலான அனைத்து ஜீவர்களிலும் வைத்த மொத்த பாகங்கள் 155. இங்கு சொன்னது கலி முதலான தைத்யர்களில் 45. ஆக மொத்தம் 200 பாகங்கள் ஆயிற்று. இப்படி பரமாத்மனிடம் 200, மற்றவர்களில் 200 ஆக மொத்தம் 400 பாகங்கள் என்று அறிந்து, மறக்காமல், பரம பக்தியுடன் உபாசனை செய். பரமாத்மன் எனக்கு ஸ்வாமி; நான் அவனது சேவகன் என்று சிந்தித்து, பூமியில் சஞ்சரித்திரு. ஸ்ரீஹரி, ஒரு நண்பனைப் போல உன்னை காப்பாற்றுவான்.
இந்த விஷயத்தில், விஷ்ணு ரஹஸ்ய, 21ம் அத்தியாயத்தில்:
ஸ்வஸ்மின்னர்த்த ஸ்வதந்த்ருத்வம் ஸமாதாய ததர்தகம் |
விபஜ்யஷததா பூயோஷ்டா சத்வாரிம்ஷ தம்ஷர்கா |32
ப்ராணே ஸ்வாதந்த்ர்யமாதாய த்விபஞ்சா ஷத்துவேதஸி |
பாதம் சதுர்த்தம் ஷததா விபஜ்ய தஷபாகர்கா ||33
ஜீவே ஸ்வாதந்த்ர்யமாதாய ததோவிம்ஷதி பாகர்கா |
அஹம்காராத்மகே ருத்ரேததா புத்தௌ நிதாயச ||34
மனோதேவேதத: ஷக்ரேபாகான்பஞ்ச தஷைவது |
தத்வதேவே தஷாம் ஷாந்த்வ ஸ்வாதந்த்ர்யம் நிததேஹரி: ||35
பஞ்சசத்வாரிம்ஷதம் தான்கலி முக்யேஷ்வதாத் ஸ்வயம் |
விஷ்ணோ: பரோனசானோஸ்தி ஸ்வதந்த்ர: கோபிசேதன: ||36
இவையே முந்தைய பத்யங்களின் ஆதாரம் ஆகும். இந்த
ஸ்லோகங்களின் அர்த்தத்தையே பத்ய விளக்கமாக பார்த்திருப்பதால், இவற்றை மறுபடி விளக்கவில்லை.
200 பாகங்களில் லட்சுமிதேவியருக்கு 67 1/4 பாகங்கள் என்றும் ஸ்ரீபரமாத்மன் வைத்துக் கொண்டது 132 3/4 என்று தாசராயர் கூறியிருந்தார். இவற்றில் இருக்கும் கால், முக்கால் என்ன என்பதை விஷ்ணு ரஹஸ்ய வாக்கியத்தில் பார்க்கலாம். பரமாத்மன் 400 பாக ஸ்வதந்த்ர்யத்தை எடுத்து, அதில் பாதியை தான் வைத்துக்கொண்டு, மிச்ச பாதியில் ஒரு நூறினை, பிரம்மதேவருக்கு 52, வாயுதேவருக்கு 48 என்று பிரித்துக் கொடுத்தான். அடுத்த நூறினை மேற்சொன்ன பத்ய அர்த்தங்களில்
கூறியவாறு ருத்ரருக்கு 20, இந்திர காமனுக்கு 15, அனைத்து ஜீவர்களுக்கு 10. கல்யாதி தைத்யகளுக்கு 45 என 100 பாகங்களைக் கொடுத்தான்.
தான் வைத்துக்கொண்ட 200 பாகங்களை மூன்று பாகங்கள் ஆக்கினான்.
தௌவிதாய த்ரிதத்ரம்ஷம் மாயாயை ப்ரததௌஸ்வயம் |
சேஷபாக த்வயம் ஸ்வஸ்மிஸ் ஸ்தாபர்யத்ஸ நிஜேச்சயா ||
என்ற ஸ்லோகத்தின் அடிப்படையில், அந்த 200 பாகங்களை, மூன்றாகப் பிரித்தால், 66*3 = 198 வருகிறது. இதில்
ஒன்றினை (அதாவது 66) லட்சுமிதேவியருக்குக் கொடுத்தான். மற்ற இரண்டினை அதாவது 132 பாகங்களை தான் வைத்துக்கொண்டான். மிச்சம் இருந்த 2 பாகங்களில், தன்னுடன் சுகானுபவத்தின் ஸ்வாதந்த்ர்யத்திற்காக 1-1/4 பாகத்தை லட்சுமிதேவியருக்குக் கொடுத்து, மற்ற 3/4 பாகத்தை தானே வைத்துக் கொண்டான். ஆகையால், லட்சுமிதேவியருக்கு 1/4 வந்து, மொத்தம் 66 + 1 + 1/4 = 67 1/4 ஆயிற்று.
அவனிப ஸ்வாமித்வ த4ர்மவ
ஸ்வவஷமாத்3யரிதித்து தா ம
த்தவர முக2த3லி ராஜகார்யவ மாடி3ஸுவ தெரதி3 |
கவிபி3ரீடித தன்ன கலெக3ள
தி3விஜ தா3னவ மானவரொளி
ட்டவிரத கு3ணத்ரயஜக3ர்மவ மாடி3 மாடி3ஸுவ ||4
அவனிப = அரசன்
ஸ்வாமித்வ தர்மவ = தனக்குள் இருக்கும் அரசனின்
அதிகாரங்களை
ஸ்வவஷ = தன் வசத்தில் இருக்கும்
அமாத்யரிகித்து = மந்திரிகளுக்குக் கொடுத்து
தா = தான்
மத்தே = அடுத்து
அவர முதலி = அவர்களிடமிருந்து
ராஜகார்யவ மாடிசுவ தெரதி = ராஜ கார்யங்களை
செய்விப்பது போல
கவிபிரீடித = ஞானிகளால் வணங்கப்படும் ஸ்ரீஹரி
தன்ன களெகள = தன் ஸ்வாதந்த்ர்யாதி சக்தி அம்சங்களை
திவிஜ = தேவதைகள்
தானவ = தைத்யர்கள்
மானவரொளு = மனிதர்களில்
இட்டு = வைத்து
அவிரத = ஒரு நொடியும் விடாமல்
குணத்ரயஜ = மூன்று குணங்களின் சம்பந்தமான
கர்மவ = கர்மங்களை
மாடி மாடிஸுவ = செய்து செய்விக்கிறான்.
மகாராஜனானவன், கிராம அதிகாரி, நகர அதிகாரி போன்ற பதவிகளை ஏற்படுத்தி, நீங்கள் இத்தகைய வேலைகளை செய்யவேண்டும் என்று ஆணையிட்டு, அவர்களிடமிருந்து ராஜ காரியங்களை செய்வித்து, அவர் செய்த காரியங்களை ஏற்றுக்கொள்கிறான். விஷ்ணு ரஹஸ்ய 21ம் அத்தியாயத்தில் :
பிரம்மாணஞ்ச ததாப்ராணம் ததா ந்யாஸ்தத்வ தேவதா: |
தேஹேனியோஜயாம் சக்ரே ததாகல்யாதி காஸுரா ||27
ஸ்வாதந்த்ர்யம் வ்யஜபஜஸ்தேஷு ததாஜீவேஷு பாகஷ: ||28
யதா ராஜானிஜாமாத்யான் தத்வாஸ்வாதந்த்ர்ய மாத்மன: |
கார்யேனியோஜ்ய தத்ரத்யா குணதோஷாம்ஸ்ச ப்ருச்சதி ||
தத்தத்கார்ய க்ருதௌ ஷக்தி: ஸ்வாதந்த்ர்யம்
ஹிபரம்ஸ்ம்ருதம் ||29
தத்காஸ்வ தத்தயாமாத்யை: க்ருதேகார்யேஸதுஷ்யதி |
ஸத்யாம் ஷக்தௌ கார்யனாஷே ஸ்வாஜ்ஜா முல்லங்க்ய வரஸ்தே ||30
குபித்வா தண்டயே தேவம் யதாக்ரீடத்யயம் ஹரி: ||31
ஜீவர்களிடமிருந்து அவரவர் யோக்யதைக்கேற்ப கர்மங்களை
செய்விப்பதற்காக, ஜீவர்களுக்கு ஸ்தூல தேகத்தைக் கொடுத்து, பிரம்மதேவர், வாயுதேவர் மற்றும் தத்வாபிமானி தேவதைகள், கலி முதலான தைத்யர்கள் இவர்கள் அனைவரையும் அந்த ஜீவரின் ஸ்தூல தேகத்தில்
இருக்கச் செய்து, அந்த பிரம்மாதிகளுக்கும், ஜீவருக்கும், கலி முதலானவருக்கும் அவரவரின் யோக்யதைக்கேற்ப, தன் ஸ்வாதந்த்ர்யத்தை பிரித்துக்கொடுத்து, காரியங்களை செய்து, செய்விக்கிறார்.
அது எப்படியெனில், மகாராஜன், தன் மந்திரி முதலானவர்களுக்கு அவரவரின் தகுதிக்கேற்ப ஸ்வாதந்த்ர்யத்தை
பிரித்துக் கொடுத்து, அவர்களிடமிருந்து வேலை வாங்குவார். அதாவது, சர்வ தேசத்திற்கும் ஒருவனை அதிபதியாக ஆக்கி, அவன் வசத்தில் தேசாதிபதிகளை வைத்திருப்பார். இந்த தேசாதிபதிகளின் வசத்தில், நகராதிபதி. இவரின் கீழ் கிராமாதிபதி என அவரவர்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து, கிராமாதிகாரி தன் வேலையை சரியாக செய்கிறாரா இல்லையா என்னும் விஷயத்தை, நகராதிபதி சரிபார்த்து, அவன் தனக்கு இருக்கும் ஸ்வதந்த்ர்ய
சக்தியை மீறாமல், சரியாக வேலையை செய்தால், அவனுக்கு சம்பளங்களைக் கொடுத்தும், வேலைகளை சரியாக செய்யவில்லையெனில், அவனை தண்டிப்பதற்கும், நகராதிபதிகளுக்கு அதிகாரம் கொடுத்திருப்பர்.
இந்த நகராதிபதிகளை வேலை வாங்குவதற்கும், தண்டிப்பதற்கும், தேசாதிபதிகள் அதிகாரம் வைத்திருப்பர். இதைப்போலவே, இவருக்கு மேல், தேசாதிபதி, மந்திரி என அரசன் வரையிலும் அதிகாரம் வைத்திருப்பர். இப்படியாக, ராஜ காரியங்கள் நடைபெறுகின்றன.
இதைப்போலவே, பரமாத்மனும், பிரம்மாதி தேவதைகளுக்கும், தத்வாபிமானி தேவதைகளுக்கும், கலி தைத்யர்களுக்கும் ஸ்வாதந்த்ர்யத்தைக் கொடுத்து அவரவரின் தகுதிக்கேற்ப, பிரம்ம தேவருக்கு 52 ஸ்வாதந்த்ர பாகங்களையும், ருத்ரதேவருக்கு 20, இந்திரனுக்கு 15 என ஸ்வாதந்த்ர்யத்தை பிரித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்போது உலகத்தில் சில நீதிபதிகளுக்கு ஆயுள்தண்டனை
கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது. சிலருக்கு 3ஆண்டுவரை தண்டனையும் சிலருக்கு 6மாதம் வரை தண்டனை கொடுக்கக்கூடிய
அதிகாரமும் இருக்கிறது. அதுபோலவே, பிரம்மாதி தேவதைகளுக்கும், தாரதம்யத்திற்கேற்ப ஸ்வாதந்த்ர்யத்தை கொடுத்திருக்கிறான். பிரம்ம வாயுகளின்
அதீனத்தில் ருத்ராதிகள், அவரின் அதினத்தில் தத்வாபிமானிகள், கலிக்கு தைத்யர்களின் மேல் அதிகாரமும் இருக்கின்றன. இந்த தேவதைகள், கலி முதலான தைத்யர்கள் - இவரின் அதினத்தில் சாமான்ய ஜீவர்கள் இருக்கின்றனர்.
புண்ணியம் செய்விக்க தேவதைகள்; பாவம் செய்விக்க தேவதைகள்; என ஜீவர்கள் தத்தம் யோக்யதைக்கேற்ப, தேவ தைத்யர்கள் செய்விக்கும்
புண்ணிய பாவங்களை செய்யவேண்டும். புண்ணிய பாவங்களை செய்விக்கும் ஸ்வதந்த்ர்யத்தை
பரமாத்மன், தத்வாபிமானி தேவதைகளுக்கும், தைத்யர்களுக்கும்
கொடுத்திருக்கிறான்.
‘யேனவினா த்ருணமபி ந சலதி’ என்னும் நியாயத்தால், பிரம்மாதி தேவதைகளே ஆனாலும், புல்லைக்கூட அசைக்கும் சக்தி பரமாத்மனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இவர்கள்
அனைவருக்கும், அவரவர்களின் யோக்யதைக்கேற்ப, இச்சா சக்தி மட்டும் இருக்கிறது.
ஒவ்வொருகணமும் பரமாத்மனே இருந்து அதனை நினைவுபடுத்துகிறார். ஸ்வாதந்த்ர்யம்
இருந்தாலும், அது இச்சா மாத்ர சக்தியே தவிர, காரியம் செய்யும் சக்தி யாருக்கும்
இல்லை. தத்வாபிமானி தேவதைகளில் இருந்து, இந்திரியங்களால் செய்யமுடிந்த
பார்ப்பது, கேட்பது முதலான காரியங்களை செய்விக்கிறார்கள். ஜீவர்களில் இருந்து
செய்விக்கிறார்.
இப்படியாக, சர்வ ஸ்வதந்த்ரன் ஒருவனே தவிர, வேறு யாரும் ஸ்வதந்த்ர கர்த்தர் இல்லை என்கிறார். இதைப்போலவே, பரமாத்மன், தேவதைகள், தானவர், மானவர் என இவர்களில் தன் ஸ்வாதந்த்ர்யத்தை அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
பிரித்துக் கொடுத்து, சாத்விக, ராஜஸ,
தாமஸ சம்பந்தமான கர்மங்களை செய்து செய்விக்கிறான்.
புண்யபாபவனீதெரதி3 கா
ருண்யஸாக3ர தே3வ தா3னவ
மானவரொளிட்டவர ப2ல வ்யத்யாஸவனெ மாடி3 |
ப3ன்னப3டிஸுவ ப4க்திஹீனர
ஸன்னுத ஸுக2ர்மப2ல தெகெ3து3 ப்ர
பன்னரிகெ3 கொட்டவர ஸுக2படிஸுவனு ஸுபுஜாஹ்வ ||5
காருண்யசாகர = கருணைக்கடலான ஸ்ரீபரமாத்மன்
ஈ தெரதி = இந்த விதமாக
புண்யபாபகள = புண்ணிய பாவங்களை
தேவதானவ மானவரொளு = தேவ தானவர்கள் மானவர்களில்
இட்டு = வைத்து
அவர பலவ்யத்யாசவனெ மாடி = தேவதைகளுக்கு புண்ணிய
பலன்களையும், தானவர்களுக்கு பாப பலன்களையும், மானவர்களுக்கு கலவையான பலன்களையும்
என பலன்களில் வித்தியாசங்களை செய்து
பக்திஹீனர = பக்தி இல்லாதவர்களை
பன்னபடிசுவ = கஷ்டப்படுத்துகிறான்
ஸன்னுத = சஜ்ஜனர்களால் வணங்கப்படுபவன்
சுகர்மபல தெகெது = (தானவர்கள் செய்யும்) புண்ணிய
கர்மங்களின் பலன்களை எடுத்து
ப்ரபன்னரிகெ = தன்னை சரணடைந்தவர்களுக்குக் கொடுத்து
சுபுஜாஹ்வ = உத்தமமான ரசத்தை மட்டும் ஸ்வீகரிப்பவனான
ஸ்ரீஹரி;
அல்லது மஹாபாஹு எனப்படும் ஸ்ரீஹரி
அவர = தன் பக்தர்களை
சுகபடுசுவனு = மகிழ்ச்சிப்படுத்துகிறான்.
கருணைக்கடலான ஸ்ரீஹரி, தேவதைகளிடமிருந்து புண்ணியத்தை; தானவர்களிடமிருந்து பாபங்களை; மானவர்களிடமிருந்து புண்யபாபங்களை செய்வித்து, தேவதைகளுக்கு / மனுஷ்யோத்தமர்களுக்கு முக்தியையும், தானவருக்கு தமஸ்ஸையும், மனுஷ்யருக்கு மிஸ்ர-உலகத்தையும்
கொடுக்கிறான். அபக்தரான தானவர் செய்யும் யக்ஞ தானாதி பலன்களை எடுத்து, அதை தேவதைகளுக்குக் கொடுக்கிறான். தேவதைகள் செய்யும் பாபங்களை தைத்யர்களுக்கே
கொடுக்கிறான். இதனால், பரமாத்மனுக்கு வைஷம்ய தோஷம் வருவதில்லையா என்று கேட்டால், தேவதைகளிடம் அசுராவேஷம் இருக்கும்போது, தேவதைகள் தைத்யர்களின் ப்ரேரணையினாலேயே பாபங்களை செய்கின்றனர். ஆகையால், அந்த பலன்கள் தைத்யர்களுக்கே போகின்றன.
தைத்யர்கள் புண்யத்தை செய்தாலும், உள்ளே இருக்கும் தேவதைகளின் ப்ரேரணையினாலேயே அவற்றை செய்கின்றனர். ஆகையால், அந்த புண்ய பலன்களை தேவதைகளுக்கே கொடுக்கிறான். தேவதைகளுக்கு சில காலம், கஷ்டம் வந்தாலும், அது தேவதைகளின் சரீரத்தில் இருக்கும் தைத்யர்களுக்கே ஆகிறது. அசுரர்களுக்கு, சுகம் வந்தால், அது தேவாவேஷத்தினால் வருவது என்று பாகவத 11ம் ஸ்கந்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
தேஷாம் துக்காதிகம் கிஞ்சித் அசுராவேஷ தோபவேத் |
அசுராணாம் ஸுகாத்யாஸ்ச தேவாவேஷாதுதீரிதா: ||
இத்தகைய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையால், பரமாத்மனுக்கு வைஷம்யாதி குணங்கள் என்றைக்கும் இல்லை என்பது நிச்சயம்.
இதைத்தவிர, தைத்யர்களின், புண்ய பாகங்களை தேவதைகளுக்கு மட்டுமே கொடுக்கிறான் என்று இல்லை. பக்தர்கள்
அனைவருக்குமே அதைக் கொடுக்கிறான்.
விஷ்ணு ரஹஸ்யத்தில் (21ம் அத்தியாயம்):
புண்யகர்ம ஸஹாயாயே புண்யாத்மான ஸ்துயேனரா: |
தைத்யபாக கதாத்புண்யாத் தேப்யோஷந்தத தேஹரி: ||
பாபகர்ம ஸஹாயாயே பாபாத்மானஸ்து யே நரா: |
தேவபாககதாத் பாபாத் தேப்யோம்ஷந் தததே ஹரி: |
புண்ய கர்மங்களுக்கு உதவி செய்பவர்களுக்கும், புண்யாத்மராக இருக்கும் மனுஷ்யருக்கும் தைத்யரில் இருக்கும் புண்ய பாகங்களின்
பலாம்ஷத்தை கொடுக்கிறான். பாப கர்மத்திற்கு உதவி செய்பவர்களுக்கு, தேவதைகளில் இருக்கும் பாப பாக பலன்களை கொடுக்கிறான் என்று
சொல்லியிருக்கிறார்கள். அதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment