பாவபிரகாசிகை
: சந்தி 22 : சகல துரித நிவாரண சந்தி
/ ஆவேச அவதார சந்தி
ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
இந்த சந்தியில், ஸ்ரீபரமாத்மன் தன் பக்தர்கள், தெரியாமல் கெட்ட செயல்களை
செய்துவிட்டாலும், அவற்றை மன்னித்து அவருக்கு புண்ணிய பலன்களை கொடுக்கிறான் என்று திடமாகச்
சொல்கிறார். முதலாம் பத்யத்திலிருந்து பரமாத்மன் தயாசமுத்திரன் என்பதை சொல்கிறார்.
ஸ்ரீலகுமி வல்லபகெ சம கரு
ணாளுகள நா காணெனெல்லு கு
சேலனவலிகெ மெச்சி கொட்டனு சகலசம்பதவ |
கேளிதாக்ஷண வஸ்த்ரகள பா
ஞ்சாலிகித்தனு தைத்யனுதரவ
சீளி சந்தையிசிதனு ப்ரஹ்லாதன க்ருபாசாந்த்ர ||1
ஸ்ரீலகுமி வல்லபகெ = ஸ்ரீலட்சுமிபதியான நாராயணனுக்கு
சம = சமமான
கருணாளுகள = கருணாசாலியை
எல்லி = எந்த உலகத்திலும்
நா = நான்
காணே = கண்டதில்லை
குசேலன = சுதாமன் என்னும் பிராமணனின்
அவலிகெ = அவலுக்கு
மெச்சி = புகழ்ந்து / மகிழ்ந்து
சகல சம்பதவ = அனைத்து செல்வங்களையும் கொடுத்தான்.
கேளிதாக்ஷண = கேட்ட அதே கணத்திலேயே
வஸ்த்ரகள = எல்லையில்லா ஆடையினை
பாஞ்சாலிகித்தனு = பாஞ்சாலிக்குக் கொடுத்தான்
தைத்யன = ஹிரண்யகசிபுவைக் கொன்று
க்ருபாசாந்த்ர = கருணாளுவான ஸ்ரீஹரி
ப்ரஹ்லாதன = பிரகலாதனை
சந்தையிஸிதனு = காப்பாற்றினான்.
கருணா சமுத்திரன் என்றால் ஸ்ரீலட்சுமிபதியான ஸ்ரீமன்
நாராயணன் ஒருவனே. அவனுக்கு சமமானவர்கள் வேறு யாரும் எந்த உலகத்திலும் இல்லை. அத்தகைய
கருணையை அவன் யாரிடம் காட்டினான் என்றால்: குசேலன் என்னும் பிராமணன் தந்த 4 பிடி அவலில், ஒரு பிடி அவலை மட்டும் எடுத்துக் கொண்டு, அவனுக்கு இஹத்தில் மிகப்பெரிய செல்வத்தையும், பரலோகத்தில் முக்தியையும் கொடுத்தான். சபையில் துச்சாதனன் தன் ஆடையை
இழுத்தபோது திரௌபதி, ‘ஹே கிருஷ்ணா த்வாரகாவாசி’ என்று ஸ்ரீகிருஷ்ணனை பிரார்த்திக்க, உடனடியாக, ஸ்ரீகிருஷ்ணன் அவளுக்கு முடிவில்லா ஆடையைத் தந்து அவள் மானத்தைக்
காப்பாற்றினான். ஹிரண்யகசிபு தன் மகனான பிரகலாதனைக் கொல்வதற்காக தயாரானான்.
பரமாத்மன் நரசிம்ம அவதாரத்தை எடுத்து, ஹிரண்யனைக் கொன்று, பிரகலாதனைக் காத்தான். ஆகையால், பரமாத்மன் க்ருபாசாந்திரன் என்று
அழைக்கப்படுகிறான்.
தேவஷர்மாஹ்வய குடும்பகெ
ஜீவனோபாயவனு காணதெ
தேவதேவ ஷரண்ய ரக்ஷிஸு ரக்ஷிசெனெ கேளி |
தா ஒலிது பாலிஸித சௌக்ய க்ரு
பாவலோகனதிந்த ஈதன
சேவிசதெ சௌக்யகள பயசுவரல்ப மானவரு ||2
தேவஷர்மாஹ்வய = தேவஷர்ம என்னும் பிராமணனின்
குடும்பகெ = குடும்பத்திற்கு
ஜீவனோபாயவனு காணதெ = வாழ்க்கைக்கு தேவையான பணத்தைக்
காணாமல்
தேவதேவ! ஷரண்ய!
ரக்ஷிஸு = என்னை காப்பாற்று
ரக்ஷிஸெனெ = என்னைக் காப்பாற்று என்று
கேளி = வேண்டியதைக் கேட்டு
க்ருபாவலோகனதிந்த = மிகக் கருணையுடன்
தா ஒலிது = தான் தரிசனம் அளித்து
சௌக்ய பாலிஸித = செல்வங்களைக் கொடுத்து
காப்பாற்றினான்
ஈதன = இவனை, ஸ்ரீபரமாத்மனை
சேவிசதெ = வணங்காமல்
அல்ப மானவரு = கீழான மனிதர்கள்
சௌக்யகள பயசுவரு = தங்களின் நலன்களை விரும்புவர்
தேவஷர்மா என்னும் பிராமணன், தன் மனைவி மக்கள் ஆகியோரை காப்பாற்ற / பாதுகாக்க வழி தெரியாமல், ஏழ்மையில் இருந்து கஷ்டப்பட்டவாறு, ஸ்ரீனிவாசதேவரைக் குறித்து
பிரார்த்தனை செய்தான். அதற்கு ஸ்ரீபரமாத்மன் தரிசனம் அளித்து வரத்தைக் கொடுத்தான்.
ஆதித்ய புராண வெங்கடேச மஹாத்ம்யத்தில் இந்த கதை வருகிறது.
ஸ்ரீனிவாச உவாச ||
ப்ரீதோஹம் தே த்விஜஸ்ரேஷ்ட மதுபாஸன கர்மணா |
மஹதைஸ்வர்ய ஸம்ஸித்தி காரணம் ஸ்தோத்திர முத்தமம் |
க்ருதவானஸி தஸ்மாத்த்வம் மாப்யைஷ்டாத்ர பரத்ரஹி ||
விபன்னாஷ: ஸம்பதாப்திர்பூயாத்தே மதனுக்ரஹாத் ||
மமபக்தஸ்ய தேகேஹே ஸ்வர்ணவ்ருஷ்டிர் தினேதினே ||
தேவஷர்மாவிடம் ஸ்ரீனிவாசதேவர் சொன்னது:
‘ஹே பிராமண ஸ்ரேஷ்டனே. நீ செய்த என்
உபாசனை ரூபமான ஸ்தோத்திரத்தினால், நான் மகிழ்ந்தேன். அபாரமான
செல்வத்தை பெறக்கூடிய தகுதியுள்ள ஸ்தோத்திரத்தை நீ செய்திருக்கிறாய். ஆகையால், நீ இஹத்திலும் பரத்திலும் பயப்படத் தேவையில்லை. என் அருளால் உன் கஷ்டம்
பரிகாரம் ஆகிறது. அபாரமான செல்வம் உனக்கு கிடைக்கப் போகிறது. என் பக்தனான உன்
வீட்டில் தினமும் தங்க மழை பொழியும்’ என்று பரமாத்மன் வரம் கொடுத்தான்
-- என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சுகமிச்சந்தி மே மூடா: நீச்சந்தி சுககாரணம் --
என்னும் வாக்கியத்திற்கேற்ப அனைவருக்கும் சுகம் வேண்டும். ஆனால், என்ன செய்தால், சுகம் கிடைக்குமோ, அந்த காரணம் மட்டும் யாருக்கும் வேண்டாம். அல்ப மனிதனானவன், பரமாத்மனை வணங்காமல், சுகத்தை மட்டும் வேண்டுகிறான். அது
அவனுக்கு என்றைக்கும் கிடைக்காது என்பது கருத்து.
ஸ்ரீனிவாசன போல்வ கருணிக
ளீனலின ஜாண்டதொளு காணெ ப்ர
வீணராதவரரஸி நோள்புது ஸ்ருதி புராணதொளு |
த்ரோண பீஷ்ம க்ருபாதிகளு குரு
சேனெயொளகிரெ அவரவகுணக
ளேனு நோடதெ பாலிஸித பரமாத்ம பரகதிய ||3
ஸ்ரீனிவாசன போல்வ = ஸ்ரீனிவாசதேவருக்கு சமானர் என்று
சொல்வதற்கு தகுதியான
கருணிகள = கருணாளுகளை
ஈ நளின ஜாண்டதொளு = இந்த பிரம்மாண்டத்தில்
காணே = நான் கண்டதில்லை
ப்ரவீணராதவரரு = ஞானிகள்
ஸ்ருதி புராணதொளு = ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராணங்களில்
அரஸினோள்பரு = தேடிப் பார்க்கலாம்
த்ரோண பீஷ்ம க்ருபாதிகளு = இத்தகைய ரிஷிகள்
குருஸேனெயொளகிரெ = கௌரவர்களின் சேனையில் இருந்தாலும்
அவரவகுணகளேனு நோடதெ = அவர்களின் கெட்ட குணங்களை
கவனத்தில் கொள்ளாமல்
பரமாத்ம = ஸ்ரீகிருஷ்ணன்
பரகதிய = பரலோகத்தில் உத்தம கதியை
பாலிஸித = அவர்களுக்குக் கொடுத்தான்
ஸ்ரீஸ்ரீனிவாசனைப் போல கருணா சமுத்திரனை இந்த
பிரம்மாண்டத்தில் எங்கு தேடினாலும் அத்தகையவர் எனக்குக் கிடைக்கவில்லை. ஞானிகள்
ஆனவர்கள்,
இந்த விஷயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லாமல், ஸ்ருதிகளையும், புராணங்களையும் நன்றாக படித்து, அதில் தேடிப் பார்த்துக்
கொள்ளலாம். த்ரோணாசார்யர், பீஷ்மாசார்யர், க்ருபாசார்யர் ஆகியோர் ஸ்ரீகிருஷ்ணனுக்கு எதிரான கௌரவரின் சேனையில்
இருந்துகொண்டு, பாண்டவர்களுக்கு எதிராக போர் புரிந்தனர். அப்படி இருந்தாலும், அவர்களின் அவகுணங்களை கவனத்தில் கொள்ளாமல், அவர்கள் அனைவருக்கும் உத்தம கதியைக் கொடுத்தான்.
சண்டவிக்ரம சக்ர ஷங்கவ
தோண்டமான ந்ருபாலகித்தனு
பாண்டகாரக பீமன ம்ருதாபரணகளி கொலித |
மண்டெ ஒடெதாகாஷராஜன
ஹெண்டதிய நுடி கேளி மகளிகெ
கண்டனெனிஸித கஹனமஹிம கதாப்ஜதரபாணி ||4
சண்டவிக்ரம = புகழ்பெற்ற வீரனான ஸ்ரீஸ்ரீனிவாசன்
சக்ர ஷங்கவ = சக்ர சங்கினை
தோண்டமான ந்ருபாலகெ = தொண்டைமான் ராஜனுக்கு
இத்தனு = கொடுத்தான்
பாண்டகாரக பீமன = பீமன் என்னும் குயவன்
ம்ருதாபரணகளிகெ = மண் ஆபரணங்களுக்கு
ஒலித = மெச்சி தரிசனம் அளித்தான்
கஹன மஹிம = அறிவதற்கு சாத்தியமில்லாத மகிமை உள்ள
கதாப்ஜ தரபாணி = கதா பத்மங்களை கைகளில் தரித்துள்ள
மண்டெ ஒடெத = ஸ்ரீனிவாசனின் தலையை உடைத்த கோபாலகன்
ஹெண்டதிய = ராமாவதாரத்தில் தன் மனைவியான சீதாதேவியின்
நுடி கேளி = பேச்சைக் கேட்டு
ஆகாஷராஜன மகளிகெ = ஆகாசராஜனின் மகளுக்கு
கண்டனெனிஸித = கணவன் என்று அழைத்துக் கொண்டான்.
தொண்டைமான் ராஜனின் பக்திக்கு மெச்சி, தன் சக்க்ர சங்கினை அவனுக்குக் கொடுத்தான். கதா, பத்மங்களை மட்டும் தான் வைத்துக் கொண்டான். பீமன் என்னும் குயவனின் பக்திக்கு
மெச்சி,
அவன் சமர்ப்பித்த மண்ணினால் ஆன துளசி தளங்களை ஏற்றுக் கொண்டான். சோளராஜனின்
செல்வங்களை காத்து வந்த கோபாலகன், கோ-ரூபியான பிரம்மதேவர், ஸ்ரீனிவாசனுக்கு பால் அபிஷேகம் செய்வதைக் கண்டு பொறுக்காமல், அந்த பசுவை அடிக்க வர, தன் பக்தனுக்கு விழும் அடியை
ஸ்ரீனிவாசன் தன் தலையில் தாங்கி மண்டை உடைபட்டான்.
ராமாயணத்தில், மாயா சீதையான வேதவதி, சீதையின் ரூபத்தில் ஒரு ஆண்டு
காலம் ராவணனின் வீட்டில் கஷ்டப்பட்டதால், இந்த வேதவதியை திருமணம் செய்து
கொள்ள வேண்டுமென்று சீதை வேண்ட, இந்த அவதாரத்தில் நான் ஏகபத்னி
விரதன் என்று சொல்லி, அடுத்த ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் இவளை நான் திருமணம் செய்து கொள்வேன் என்று
சொல்லி வாக்களித்தான். மனைவியான சீதாதேவிக்குக் கொடுத்த வாக்கினை, உண்மை ஆக்குவதற்காக ஆகாசராஜனின் மகளை திருமணம் செய்து கொண்டான். ஆகாசராஜனின்
மகளான பத்மாவதியே வேதவதி என்பது கருத்து. இந்த கதை அனைத்தும் பவிஷ்யோத்தர புராண
வெங்கடேச மஹாத்ம்யத்தில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கதையை தாசார்யர்
சுருக்கமாக இங்கு சொல்லியிருக்கிறார்.
கௌதமர நிஜபத்னியனு புரு
ஹூதனைதிரெ காய்த வ்ருத்ரன
காதிசித பாபவனு நால்கு விபாக மாடிதனு |
ஷாதகும்பாத்மக கிரீடவ
கைதவதி கத்தோய்த இந்த்ரா
ராதிபாகில காய்வ பக்தத்வேன ஸ்வீகரிஸி ||5
கௌதமன நிஜபத்னியனு = கௌதமரின் மனைவியான அகலிகையை
புருஹூதனு = தேவேந்திரன்
யைதிரெ = அபகரிக்க
காய்து = அந்த பாவத்திலிருந்து இந்திரனைக் காத்து
வ்ருத்ரன = வ்ருத்ராசுரனை
காதிஸித = கொன்ற
பாபவனு = பாவத்தை
நால்கு விபாக மாடிதனு = பூமி, மரம்,
தண்ணீர், பெண் என இந்த 4 இடங்களில் பிரித்து வைத்து, இந்திரனை பாவம் இல்லாதவனாக
மாற்றினான்.
ஷாதகும்பாத்மக = தங்க மயமான
கிரீடவ = ஸ்வேதத்வீபத்தில் ஸ்ரீமன் நாராயணதேவர்
தரித்திருந்த கிரீடத்தை
கைதவதி = கள்ளதனத்தால்
கத்தொய்த = அபகரித்துப் போன
இந்திராராதி = இந்திரனின் எதிரியான பலிசக்ரவர்த்தியை
பக்தத்வேன = அவனை தன் பக்தன் என்று அங்கீகரித்து
பாகில காய்வ = அவனின் வீட்டின் வாயிலை காத்தான்.
தேவேந்திரன், கௌதமரின் மனைவியான அகலிகையை வஞ்சித்து, அவளை அபகரிக்க, அவனுக்கு வந்த மிகப்பெரிய பாவத்தை பரிகரித்து, இந்திரனைக் காத்தான். அடுத்து தேவேந்திரன் வ்ருத்ராசுரனைக் கொன்று
பிரம்மஹத்யையை அனுபவிக்கும்போது, ‘பூம்யம்புத்ருமயோஷித்ப்ய:
சதுர்தாவ்ய பஜத்தரி:’ என்னும் பாகவத வாக்கியத்தின்படி, அந்த பிரம்மஹத்யையை நான்கு
பாகங்களாக மாற்றி,
* பூமியில் ஒரு பாகத்தையும்,
* தண்ணீரில் ஒரு பாகத்தையும்,
* மரங்களில் ஒரு பாகத்தையும்,
* பெண்களில் ஒரு பாகத்தையும்
வைத்து இந்திரனை பாவங்கள் இல்லாதவனாக செய்தான். இந்த
நான்கு இடங்களில் இன்றும் பிரம்மஹத்யை 4 விதமாக இருக்கிறது. அது
எப்படியெனில்:
ஈரணம் பிரம்மஹத்யாய ரூபம் பூமௌப்ரத்ருஷ்யதே ||7
நிலத்தில் தரிசு நிலமாக ஒரு பாகம் இருக்கிறது.
தாஸு புத்புதபேனாப்யாம் த்ருஷ்டந்தத்தரிகில்பிஷம் ||10
தண்ணீரில் நுரைகள் இருக்கின்றன. இந்த ரூபத்தில்
பிரம்மஹத்யை இருக்கிறது.
தேஷாம் நிர்யாஸரூபேண பிரம்மஹத்யா ப்ரத்ருஷ்யதே ||8
மரங்களில் நெருப்பு ரூபமாக, பிரம்மஹத்யா இருக்கிறது.
ரஜோரூபேண தாஸ்வம்ஹோ மாஸிமாஸி ப்ரத்ருஷ்யதே ||9
மாதத்திற்கு ஒரு முறை ரஜஸ்வலா (விழுப்பு) ரூபமாக
பிரம்மஹத்யை பெண்களிடம் இருக்கிறது. என்று பாகவத 6ம் ஸ்கந்தம், 9ம் அத்தியாயத்தில் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்திரனின் எதிரியான பலிசக்ரவர்த்தி, பரமாத்மனின் கிரீடத்தை திருட்டுத்தனமாக அபகரித்து ஓடினான். பாகவத 10ம் ஸ்கந்தத்தில் இந்த கதை வந்திருக்கிறது. மகாபாரத தாத்பர்ய நிர்ணய 16ம் அத்தியாயத்தில் :
ததாதுக்தாப்தௌ ஸம்ஸுதிஸ்தை: ஸுராத்யை: பூஜா ஆப்தும்
ஸ்தானமேஷாஞ்ச யோக்யம் ||
முக்தஸ்தானாதாப நாராயணோஜோ பலிஸ்சாகாத்தத்ர
ஸந்த்ரஷ்டுமீஷம் ||4
தத்ராஸுராமேஷ மமுஷ்யவிஷ்ணு: ஸந்தர்ஷயன் சுப்திஹீனோபி
நித்யம் ||
ஸம்ஸுப்தவச்சேஷ்ய உதாரகர்மா சஞ்ஞாயை தேவானாம் முகமீக்ஷ்ய
ப்ரமேய: ||5
தேவாஸ்ச தத்பாவவிதோகிளாஸ்ச நிமீலிதாக்ஷா:
ஷயனேஷுஷிஷ்யரே ||
ததா பலிஸ்தஸ்ய விஷ்ணோ: கிரீடமாதாயாகாஜ்ஜ
ஹஸுஸ்ஸர்வதேவா: ||6
நாராயணே ஸர்வதேவை: ஸமேதே பிரம்மாதிபிர் ஹாஸமானே
ஸுபர்ண: ||
கத்வாபாதாலம்யுதி ஜித்வாபலிம் ச கிரீடமாதாயாப்ய
யாத்யத்ர க்ருஷ்ண: ||7
ஸ்ரீகிருஷ்ணன் ஜராசந்தனுடன் 17 முறை போர் புரிந்து அவனை வென்று, 18ம் முறையில் அவனுக்கு வெற்றியைக்
கொடுக்க நிச்சயித்து, 18ம் முறையில் போருக்கு முன்பாகவே, கோமந்த பர்வதத்திற்கு சென்றான்.
அந்த சமயத்தில், முக்த ஸ்தானத்தில் இருக்கும் ஸ்ரீ நாராயணன், அமுக்தர்களான பிரம்மாதி தேவதைகளுக்கு, தன்னை வணங்க வேண்டுமெனில் அவர்களுக்கு அங்கு பிரவேசம் இல்லாததால், அவர்களிடமிருந்து சேவை பெற்றுக் கொள்வதற்காக, பாற்கடலுக்கு நடுவில் இருக்கும் ஸ்வேதத்வீபத்திற்கு வந்தான்.
அதே சமயத்தில், பலி சக்ரவர்த்தியும் நாராயணனை வணங்குவதற்கு அங்கு வந்தான். அவனில் அசுர ஆவேசம்
இருப்பதை மக்களுக்குக் காட்டும் விதமாக, ஸ்ரீமன் நாராயணன், தேவதைகளை படுத்துத் தூங்குமாறு சைகை செய்து, என்றைக்கும் தூக்கம் இல்லாதவனான தானும் தூங்குவதாக நாடகம் ஆடினான். அங்கு வந்த
பலி சக்ரவர்த்தி, அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அசுர ஆவேசத்தைக் கொண்டிருந்ததால், பரமாத்மனின் தலையில் இருக்கும்
அற்புதமான கிரீடத்தை எடுத்து, வஸ்திரத்தில் சுற்றிக் கொண்டு
ஓடிச் சென்றான். அப்போது தேவதைகளும், பரமாத்மனும் அவனது செய்கையைக்
கண்டு சிரித்தனர்.
அப்போது கருடன், பலி சக்ரவர்த்தியை துரத்தி சுதல லோகத்திற்கு சென்று, அவனை வென்று, அந்த கிரீடத்தை திரும்பக் கொண்டு வந்து, கோமந்த பர்வதத்தில் நின்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனின் தலையில் அந்த கிரீடத்தை
வைத்து,
அவனை வணங்கினான்.
அந்த அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு
சொல்லியிருக்கிறார். இத்தகைய அபராதத்தை பலிசக்ரவர்த்தி செய்திருந்தாலும், வாமன ரூபத்தினால் அவனது வீடு, வாயில் ஆகியவற்றை காத்தவாறு அவனை
காப்பாற்றினான். ஆகையால், இத்தகைய கருணாளுவை இந்த உலகத்தில்
வேறெங்கும் நான் காணவில்லை என்று தாசார்யர் கூறுகிறார்.
நார நந்தவ்ரஜத ஸ்த்ரீயர
ஜாரகர்மகெ ஒலித அஜ சுகு
மாரனெனிசித நந்தகோபகெ நலினபவஜனக |
வைரவர்ஜித தைத்யரனு சம்
ஹாரமாடித விபகமன பெக
லேரிதனு கோபாலகர வ்ருந்தாவனதொளித்து ||6
நார = அர என்றால் தோஷம். நார என்றால் தோஷம் அற்றவன்.
இத்தகைய பரமாத்மன்
நந்தவ்ரஜத ஸ்த்ரியர = நந்தகோகுலத்தில் வசித்து வந்த
கோபிகா ஸ்த்ரியர்கள்
ஜாரகர்மகெ ஒலித = தன்னை ஜாரன் (பெண்களை மயக்குபவன்)
என்று நினைத்து, பக்தியுடன் சேவிப்பதற்காக அவர்களுக்கு தரிசனம் அளித்தான்.
அஜ = ஸ்வயம் உத்பத்தி இல்லாதவன்
நளினபவஜனக = பத்ம சம்பவரான பிரம்மதேவரின் தந்தையான
நந்தகோபகெ = நந்தகோபனுக்கு
சுகுமாரனெனிஸித = அவனின் மகன் என்று பெயர் பெற்றவன்
வைரவர்ஜித = தைத்யர்களிடம் தனக்கு த்வேஷம்
இல்லாதிருந்தாலும்
தைத்யரனு சம்ஹார மாடி = தேவதைகளை பாதுகாப்பதற்காக
தைத்யர்களைக் கொன்றான்
விபகமன = ஸ்வயம் கருட வாகனன் ஆனாலும்
வ்ருந்தாவனதொளு = விருந்தாவனத்தில்
அந்து = அன்று ஒரு நாள்
கோபாலகர பெகலேரிதனு = கோபாலகர்களின் முதுகில்
ஏறினான்.
தான் தோஷங்கள் அற்றவன். ஆனாலும், தன்னை ’பெண்களை மயக்குபவன்’ என்று நினைத்து உபாசனை செய்து
வரும் நந்தகோகுல நிவாசிகளான கோபிகா ஸ்த்ரியர்களுக்கு தரிசனம் அளித்து, அவர்களுக்கு அங்க சங்கத்தைக் கொடுத்து, அவர்களுக்கு பரலோகத்தில் திவ்ய கதியைக் கொடுத்தான். பிரம்மதேவரின் தந்தையே
ஆனாலும்,
தனக்கு பிறப்பு ஆகியவை இல்லை என்றாலும், நந்தகோபனுக்கு மகன் என்று சொல்லிக் கொண்டான். தனக்கு தைத்யர்களில் எவ்வித
த்வேஷங்களும் இல்லை என்றாலும், தேவபிராமணர்களை பாதுகாப்பதற்காக
தைத்யர்களைக் கொன்றான். தான் கருட வாகனன். ஆனாலும், தான் பாலலீலைகளைக் காட்டியவாறு, குதிரை விளையாட்டினைப் போல, ஸ்ரீதாம என்னும் கோபாலகனின் முதுகில் ஏறி பாண்டீரக என்னும் மரத்தின் அடியில்
விளையாடினான்.
உவாஹக்ருஷ்ணோ பகவான் ஸ்ரீதாமானம்பராஜித: -- என்னும்
பாகவத 10ம் ஸ்கந்த வாக்கியத்தின் வியாக்யானத்தில் ‘ஸ்ரீதாமா பராஜித: ஸம் க்ருஷ்ணமுவாஹ’ என்று அர்த்தம்
சொல்லியிருக்கின்றனர். அதாவது, மூலத்தில், ஸ்ரீகிருஷ்ணன் தான் தோற்று, ஸ்ரீதாமனை தான் முதுகில் ஏற்றிக்
கொண்டான் என்று அர்த்தம் வருகிறது. இந்த வாக்கியம் ஹரிவம்சம் ஆகியவற்றிற்கு
விரோதம் ஆகிறது. அதற்காக ‘பஹுமான விரோதேன வ்யத்யாஸ:
ஷப்ததோர்த்தத:’ என்னும் பாகவத தாத்பர்யத்திற்கு ஏற்றவாறு, மகா கிரந்தங்களுக்கு விரோதம் வந்தால், ஷப்தத்தினாலோ, அர்த்தத்தினாலோ வேறுபட்டு அர்த்தத்தை சொல்ல வேண்டும் என்னும் ஆதாரத்தின்
பேரில்,
ஸ்ரீதாமன், கிருஷ்ணனை தூக்கிக் கொண்டான் என்று அர்த்தம் செய்தார்.
அதே அபிப்பிராயத்தையே தாசார்யரும் இங்கு
சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீகரார்ச்சித பாதபல்லவ
கோகுலத கொல்லதியரொலிஸித
பாகஷாசன பூஜ்ய கோ கோவத்ஸகள காய்த |
ஓகரிஸி குருபதிய போஜன
ஸ்வீகரிஸிதனு விதுரனௌதண
பாகுலிக நந்ததலி தோரித பக்தவத்ஸலனு ||7
ஸ்ரீ = லட்சுமிதேவி
கர = கரங்களால்
அர்ச்சித = பூஜித்த
பாதபல்லவ = கோமலமான பாதங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
கோகுலத கொல்லதியரன்னு = கோகுலத்தின் கோபிகையர்களின்
ஒலிஸித = பக்திக்கு மெச்சினான்
பாகஷாஸன பூஜ்ய = இந்திரனால் வணங்கப்படும் ஹரி
கோகோவத்ஸகள காய்த = பசுக்களை, கன்றுகளை (மேய்த்தான்) காத்தான்.
குருபதிய = மகாராஜனான துரியோதனின்
போஜன = ம்ருஷ்டான்னத்தை
ஓகரிஸி (நீகரிஸி) = புறக்கணித்து
விதுரன = விதுரனின்
ஔதன = விருந்தினை
ஸ்வீகரிஸிதனு = அவனின் வீட்டில் உண்டான்
பக்தவத்ஸல = பக்தர்களில் வாத்ஸல்யம் கொண்ட ஸ்ரீஹரி
பாகுலிக நந்ததலி = பாண்டவர்களின் தூதனைப் போல
தோரித = காட்டிக் கொண்டான்.
ஸ்ரீபரமாத்மன் பக்தவத்ஸலன் என்பதை விளக்குகிறார்.
ஸ்வயம் லட்சுமிதேவியரால் பூஜிக்கப்படும் பாதங்களைக் கொண்டவன். அல்பரான கொல்லர்களான
கோபிகா ஸ்த்ரியர்களின் பக்திக்கு மெச்சி, அவருக்கு அங்கசங்கத்தை அளித்தான். தேவேந்திரன்
ஆகியோரால் பூஜிக்கப்படுபவன் ஆனாலும், கோபாலகர்களின் அன்பில் மயங்கி, பசுக்களை, கன்றுகளை காத்தான் (மேய்த்தான்). பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சமாதானம்
பேசும் பொருட்டு, பாண்டவ தூதன் என்று சொல்லிக் கொண்டு, துரியோதனின் வீட்டிற்கு வந்தபோது, அவன் ஸ்ரீகிருஷ்ணனுக்காக ம்ருஷ்டான்னத்தைக் கொடுத்தான்.
த்வஷதன்னம் நபோக்தவ்யம் த்விஷந்தம் நைவபோஜயேத் ||
அப்போது ஸ்ரீகிருஷ்ணன் சொன்னது:
‘த்வேஷிகளின் வீட்டில் உணவு உண்ணக்
கூடாது. த்வேஷிகளை உணவிற்கு அழைத்து, அவர்களுக்கு உணவும் வழங்கக்
கூடாது. நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய். பாண்டவர்கள் என் நண்பர்கள் (பக்தர்கள்).
அவரின் த்வேஷம் என் த்வேஷமே. நீ டாம்பீகத்திற்காக என்னை அழைக்கிறாய். உலகத்தில்
ஒருவரின் வீட்டிற்கு இன்னொருவர் வரவேண்டுமெனில் இரு வித காரணத்தால் வருவார்கள்.
அன்புடன் மரியாதை செய்து அழைத்தால், அவரின் வீட்டிற்கு உணவிற்கு
வரலாம். அல்லது, வழி தவறி வந்து, உணவிற்கு வழியில்லாமல் ஒருவர் வீட்டிற்கு உணவிற்கு வரலாம். அத்தகைய இரு
விதங்களும் எனக்கு இப்போது இல்லை.
நச ஸம்ப்ரீயஸே ராஜன், நசைவாபத்கதாவயம் -- எனக்கு உன்னிடம் அன்பும் இல்லை. உணவிற்கு வழியில்லாமல்
வேறு வழியின்றி வந்தேன் என்பதும் இல்லை. ஆகையால், உன் வீட்டில் நான் உணவு உண்பதில்லை’ என்று சொல்லி, தன்னுடன் வந்த பிராமணர்களுடன் விதுரனின் வீட்டிற்கு சென்று உணவு உண்டான் என்று
பாரத உத்யோக பர்வத்திலும், பாரத தாத்பர்ய நிர்ணயத்திலும்
சொல்லப்பட்டிருக்கிறது.
அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு
சொல்லியிருக்கிறார். பரமாத்மன் பிரம்மாதிகளால் வணங்கப்பட்டு, பாண்டவர்களின் தூதன் எனப்படுகிறான். ஆகையால், பக்தவத்ஸலன் என்னும் பெயர் பரமாத்மனுக்கு பொருத்தமே என்பது கருத்து.
புத்ரனெனிஸித கோபிதேவிகெ
பர்த்ருவெனிஸித வ்ரஜதனாரிய
உத்ரலாலிஸி பர்வதவ நெகஹித க்ருபாசாந்த்ர |
ஷத்ருதாபனு யக்ஞபுருஷன
புத்ரியர தந்தாள்த த்ரிஜக
த்தாத்ர மங்கலகாத்ர பரமபவித்ர சுரமித்ர ||8
கோபிதேவிகெ = யசோதாதேவிக்கு (வேறு பாடத்தில்: நந்த
கோபனுக்கு)
புத்ரனெனிஸித = மகன் என்று அழைத்துக் கொண்டான்
வ்ரஜதனாரிய = கோபிகா ஸ்த்ரியரின்
உக்திலாலிஸி = பிரார்த்தனையை ஏற்று
பர்த்ருவெனிஸித = பதி என்று அழைத்துக் கொண்டான்
க்ருபாஸாந்த்ர = கருணாளுவான ஸ்ரீஹரி
பர்வதவ = கோவர்த்தன மலையை
நெகஹித = தூக்கினான்
ஷத்ருதாபனு = எதிரிகளுக்கு கஷ்டத்தைக் கொடுப்பவனான
ஸ்ரீகிருஷ்ணன்
யஞ்ஞபுருஷன = அக்னிதேவரின்
புத்ரியர = புத்ரிகளான 16,100 பேர் ஸ்த்ரியர்களை
தந்து = நரகாசுரனின் வீட்டில் இருந்தவர்களை கொண்டு
வந்து
ஆள்த = அவர்களுக்கு பதியாகி, காத்தான்
த்ரிஜகத்தாத்ர = வெறும் அக்னி புத்ரிகளை மட்டும்
காக்கிறவன் அல்ல. மூன்று உலகங்களையும் காப்பாற்றுபவன்.
மங்கலகாத்ர = பரம மங்களகரமான சரீரம் கொண்டவன்
பரமபவித்ர = பவித்ரன்
ஸுரமித்ர = தேவதைகளின் நண்பன்.
நந்தகோப யசோதைக்கு மகன் என்று உலகப் புகழ் பெற்றான்.
கோபிகா ஸ்த்ரியருக்கு பதி ஆனான். அல்லது, நீலா என்னும் கோப கன்னிகையின் பதி
எனப்படுகிறான். இந்த பத்யத்தில் ‘வ்ரஜதனாரிய உக்திலாலிஸி
பர்த்ருவெனிஸித’ என்று இருப்பதால், கோபிகா ஸ்த்ரியரின் பிரார்த்தனையின்படி, அவருக்கு பதி ஆனான் என்று அர்த்தம் வருகிறது.
ஆனால், கோபிகா ஸ்த்ரியருக்கு வேறு
கணவர்கள் இருந்ததால், இவனை,
‘ஜார’
என்று சொன்னாலும், ‘பர்த்ரு’ என்றாலும், கணவன் என்று மட்டும் சொல்ல முடியாது. ஏனெனில் ‘பரணாத் பர்த்தா பாலனாத் பதி:’ என்னும் வாக்கியத்தின்படி, வீட்டிலேயே வைத்துக்கொண்டு அன்னாதிகளைக் கொடுத்து காப்பவன் மட்டுமே பர்த்தா
என்றும் பதி என்றும் அழைக்கப்படுகிறான்.
யாரை திருமணம் செய்து கொள்கிறானோ அவளுக்கு பதி என்று
சொல்ல வேண்டும். கோபிகா ஸ்த்ரியர்களை இவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகையால், இந்த பத்யத்தில் இருக்கும் ‘பர்த்ருவெனிஸித வ்ரஜதனாரிய
உக்திலாலிஸி’ என்பதில் ர-ல-ள இந்த எழுத்துக்களுக்கு வேறுபாடுகள் இல்லை என்று பாகவதாதிகளில் ‘தபோரராடம்’ என்னும் வாக்கியத்தால் லலாட என்னும் சொல்லுக்கு ரராட என்றும் சொல்லலாம்
என்கிறார்.
அதைப்போலவே இங்கும் நாரியருக்தி என்னும் இடத்தில், ரு க்கு பதில் ளு என்ற எழுத்தைப் போட்டு படிக்கலாம். நாரியளுக்தி என்றால், அந்த பெண்களில் ஒருவளுக்கு பதியாக இருந்தான் என்று அர்த்தம் வருகிறது. அந்த
ஒரு பெண்,
நீலா என்னும் பெயருள்ள கோபிகா ஸ்த்ரி என்று நிர்ணயத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது. மகாபாரத தாத்பர்ய நிர்ணய 13ம் அத்தியாயத்தில்:
ஸப்தோக்ஷணோதி பலவீர்ய யுதானதர்யா ஸர்வேகிரீஷவரதோ
திதிஜப்ரதானாம்
ஹத்வாஸுதாமலபதாஷு விபுர்யஷோதா ப்ராது:
ஸகும்பகஸமாஹ்வயினோபி நீலாம் ||49
யா பூர்வஜன்மனி தப: ப்ரதமைவபார்யா பூயாஸமித்யசரதஸ்ய
ஹி ஸங்கவோமே ||
ஸ்யாத்க்ருஷ்ண ஜன்மனி ஸமஸ்த வராம்கனாப்ய:
பூர்வம்த்விதி ஸ்ம ததிமாம் ப்ரதமம் ஸ ஆப ||50
அக்ரெத்விஜத்வத உபாவஹதேவ நீலாம் கோபாங்கனா அபி
புராவரமாபிரெ யத் ||
ஸம்ஸ்காரத: ப்ரதமமேவ ஸுசங்கமோனோ பூயாத்தவேதி
பரமாத்ஸரஸ: புராயா: ||51
இந்த ஸ்லோகங்களின் சாராம்சம் என்னவெனில்:
யசோதாதேவிக்கு அண்ணனான கும்பக என்னும் கோபாலகனுக்கு
நீலா என்னும் ஒரு பெண் இருந்தாள். அந்த கும்பகன், அந்தப் பெண்ணின், ரூப,
குண,
சௌந்தர்யத்திற்கு ஏற்ற வரனைத் தேடுவதற்காக காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும்
ஏழு எருதுகளைப் பிடித்து, அவற்றை அடக்கிக் கொடுப்பவனுக்கே
தன் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தான். அந்த ஏழு எருதுகளும் சாதாரணமானவை அல்ல.
ருத்ரதேவரின் வரத்தினால் வெல்லப்பட முடியாததாக, மகா தைத்யரே அந்த ரூபத்தில் இருந்தனர். அவற்றின் எதிரில் கூட யாராலும் நிற்க
முடியவில்லை. அத்தகைய எருதுகளை பிடிப்பது யாராலும் சாத்தியமில்லை. ஸ்ரீகிருஷ்ணன் 6 வயது குழந்தையாக இருந்தபோதே, அந்த எருதுகளைப் பிடித்து, கொன்று நீலா என்னும் கன்யையை திருமணம் செய்து கொண்டான்.
இவள் முந்தைய பிறவியில் தவம் செய்து, நீ கிருஷ்ணாவதாரத்தில், உப நயனம் செய்து கொள்வதற்கு
முன்னரே,
என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வரம் பெற்றிருந்தாள். அதற்கேற்ப
பரமாத்மன் வரம் கொடுத்திருந்தான். அதனை உண்மையாக்குவதற்காக முதலில் நீலாவை
திருமணம் செய்து கொண்டான். இதே நீலா, நக்னஜித் ராஜனின் மகளாகப் பிறந்து, அங்கும் இதே மாதிரி ஸ்வயம்வரத்தில் கிருஷ்ணனின் மனைவி ஆனாள்.
அவளின் திருமணம் ஆனபிறகு, அந்த நீலையில் இந்த நீலா சேர்ந்தாள். கிருஷ்ணனின் அஷ்ட மஹிஷியர்களில் நீலா
என்பவள் கோப கன்னிகை என்று அறியவேண்டும்.
தேவேந்திரனுக்கு வந்த கர்வத்தை அடக்குவதற்காக, இந்திர யாகத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த கோபாலகர்களை ஸ்ரீகிருஷ்ணன் அழைத்து, கிரி-யக்ஞ என்னும், மலைக்கு பலி ரூபமான யாகத்தை
செய்விக்க, அதனால் கோபம் கொண்ட இந்திரன், கோகுலத்தையே மூழ்கடிக்குமாறு மழை
பெய்விக்க, கோவர்த்தன மலையையே குடை போல தூக்கி, பசுக்களை, கோபாலகர்களை ஸ்ரீகிருஷ்ணன் காப்பாற்றினான்.
அக்னிதேவரின் மக்களான 16,100 ரிஷிகள் தவம் செய்து, கிருஷ்ணனின் அங்க சங்கத்திற்காக
அப்ஸர ஸ்த்ரியர்களாகப் பிறந்து சில காலம் இருந்து, பின் ராஜகுமாரிகளாகப் பிறந்து, நரகாசுரனிடம் சேர்ந்து அவன் வீட்டில்
சிறைபட்டிருந்தனர். கிருஷ்ணன், நரகாசுரனைக் கொன்று அவர்களை
திருமணம் செய்துகொண்டான். அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு சொல்கிறார்.
16,100 பேர் மனைவியரை காப்பாற்றினான்
என்பது ஒன்றும் வியப்பான விஷய்ம் அல்ல என்று காட்டுவதற்காக ‘த்ரிஜகத்தாத்ர’ என்றார். மூன்று உலகத்தையே காப்பாற்றுபவனுக்கு, 16,100 எண்ணிக்கையில் இருப்பவர்களை காப்பாற்ற முடியாதா? அதில் என்ன ஆச்சரியம்? உபநயனத்திற்கு முன்னரே நீலாவை
திருமணம் செய்தான் என்றும், கோபிகா ஸ்த்ரியர்களுக்கு ‘ஜார’
ஆனான் என்பதாலும் பரமாத்மனுக்கு தோஷம் வந்திருக்குமோ என்னும் சந்தேகம் வந்தால், அதை ‘மங்களகாத்ர பரமபவித்ர’ என்று சொல்கிறார்.
சுரமித்ர என்ற பதத்திலிருந்து, தேவதைகள், தேவ ஸ்த்ரியர்கள் ஆகியோர் பரமாத்மனுக்கு ப்ரியமானவர்கள், ஆகையால் கோப கன்னிகையர்கள் அனைவரும் அப்ஸர ஸ்த்ரியர் ஆகையால், அவர்களின் தவத்திற்கு மெச்சி, முன்னர் அவர்களுக்குக்
கொடுத்திருந்த வரத்தை உண்மை ஆக்குவதற்காக, சிறு வயதிலேயே அவர்களுடன் திருமணம் செய்தானே தவிர, இந்திரிய சுகத்திற்காக அல்ல என்பதை குறிப்பிடுகிறார்.
ரூப நாமவிஹீன கர்கா
ரோபித சுனாமதலி கரெசித
வ்யாபக பரிச்சின்னரூபதி தோர்த லோகரிகெ |
த்வாபராந்த்யதி தைத்யரனு ச
ந்தாபகொளிசுவெனெந்து ஷ்வேத
த்வீப மந்திரனவதரிஸி சலஹிதனு தன்னவர ||9
ரூப நாமவிஹீன = ஸ்ரீபரமாத்மன், ப்ராக்ருதமான பாஞ்சபௌதிக சரீரம் இல்லாதவன். அத்தகைய ரூபமே இல்லாதபோது, அதற்கு பெயர் எங்கிருந்து வந்தது? ஆகையால், ப்ராக்ருதமான ரூப நாமங்கள் இல்லாதவன் என்று அர்த்தம். அப்படி இருந்தாலும், கிருஷ்ணாதி அவதாரங்களில் தன் ரூபங்களை மனிதர்களைப் போல காட்டினான். ப்ராக்ருத
பெயர் இல்லாதவன் ஆனாலும்,
கர்காரோபித = கர்காசார்யரால் வைக்கப்பட்ட
சுனாமதலி = சிறந்த (அப்ராக்ருதமான) கிருஷ்ண என்னும்
பெயரில்
கரெஸித = மக்களால் அழைக்கப்பட்டான்
வியாபக = அனைத்து இடங்களிலும் வியாப்தன் ஆனாலும்
பரிச்சின்ன ரூபதி = இவனே கிருஷ்ணன். வேறு யாரும்
இல்லை. இவன் இங்கு இருக்கிறான். வேறு எங்கும் இல்லை.
என்பது போன்ற எல்லைகள் உள்ள ரூபங்களில்
லோகரிகெ = மக்களுக்கு
தோர்த = காட்டிக் கொண்டான்.
த்வாபராந்ததி = த்வாபர யுகத்தின் இறுதியில்
தைத்யரனு சந்தாபகொளிசுவெனெந்து = பூமிக்கு பாரமாக
இருப்பவர்களில், தைத்யர்களை கொல்வேன் என்று
ஸ்வேதத்வீப மந்திரனு = ஸ்வேதத்வீபத்தில் வசிப்பவனான
ஸ்ரீநாராயணன்,
அவதரிஸி = பூமியில் கிருஷ்ணன் என்று அவதரித்து
தன்னவர = தன் பக்தர்களான தேவதைகள் மற்றும் தேவாம்சம்
பொருந்தியவர்களை
ஸலஹிதனு = காப்பாற்றினான்.
ஸ்ரீபரமாத்மனுக்கு, சாதாரண மனிதர்களைப் போல, கண் காது முதலான இந்திரியங்கள்
கொண்ட ப்ராக்ருதமான, பாஞ்ச பௌதிக சரீரம் இல்லை. அப்ராக்ருதமான, ஆனந்தமயமான, கர,
சரணாதிகளைக் கொண்ட சரீரத்தைக் கொண்டவன். ஆனந்தஞானாதி பெயர்களைக் கொண்டவன்.
ஆனாலும்,
தேவ காரியங்களுக்காக மனிதர்களைப் போல அவதரித்து, அந்தந்த குலாசாரத்தின்படி கிடைத்த பெயர்களை வைத்துக் கொண்டான்.
கிருஷ்ணாவதாரத்தில், கர்காசார்யர் செய்த நாமகரணத்தில் கிருஷ்ண என்ற பெயர் பெற்றான். அந்த கிருஷ்ண
என்னும் பெயரும் அப்ராக்ருதமானதே. கிருஷ்ண என்னும் பெயர் இருந்தாலும், அதுவும் அப்ராக்ருதமான நாராயணனின் பெயரே ஆகியிருக்கிறது.
பாரத ஆதி மங்களாசரணத்தில் ‘கிருஷ்ணோ முக்த்யைரிஜ்யதெவீத மோஹை:’ கிருஷ்ணன் முக்தர்களாலும்
பூஜிக்கப்படுகிறான் என்னும் வாக்கியத்தால், நாராயணனுக்கும் கிருஷ்ணன் என்று ‘க்ருஷதி தாரயதி பாபானீதி கிருஷ்ண:’ - பாவங்களைப் போக்கி விடுபவன் ஆகையால் நாராயணனுக்கு கிருஷ்ணன் என்று பெயர்.
அதையே கர்காசார்யர், நாமகரணம் செய்தார். ஆகையால், ப்ராக்ருத ரூப நாமங்களால்
அழைக்கப்பட்டான் என்பது கருத்து.
அனைத்து இடங்களிலும் வியாப்தன் ஆனாலும், மனுஷ்யாதி அவதாரத்தில் அவர்களைப் போலவே காட்டிக் கொண்டான். த்வாபராந்த்யத்தில் ராஜனாக பிறந்து பூமிக்கு பாரமாக இருக்கையில், ஸ்ரீஹரி, பிரம்மாதிகளால் வேண்டப்பட்டு, தைத்யர்களைக் கொல்வதற்காக, பூமியில் கிருஷ்ணாவதாரம் செய்து, கம்சாதிகளைக் கொன்று, தேவதைகளைக் காப்பாற்றினான்.
ஸ்ரீவிரிஞ்சாத்யமரனுத நா
நாவதாரவ மாடி சலஹித
தேவதெகளனு ருஷிகளனு க்ஷிதிபரனு மானவர
சேவெகள கைகொண்டு பலகள
நீவ நித்யானந்தமய சு
க்ரீவ த்ருவமொதலாத பகுதரிகித்த புருஷார்த்த ||10
ஸ்ரீவிரிஞ்சாத்யமரனுத = லட்சுமிதேவியர், பிரம்மாதி தேவதைகள் இவர்களால் வணங்கப்படுபவனான ஸ்ரீமன் நாராயணன்
நானாவதார = மத்ஸ்ய, கூர்ம, வேதவ்யாஸ முதலான நானா வித அவதாரங்களை எடுத்து,
தேவதெகளனு = தேவதைகளை
ரிஷிகளனு = ரிஷிகளை
க்ஷிதிபரனு = அரசர்களை
மானவர = மனிதர்களை
சலஹித = காத்தான்
நிந்த்யானந்தமய = நித்யமான ஆனந்தமயன் ஆனாலும்
சேவெகள கைகொண்டு = பக்தர்கள் செய்யும் சேவைகளை
ஏற்றுக்கொண்டு
பலகளனீவ = பலன்களைக் கொடுக்கிறான்
சுக்ரீவ, த்ருவ மொதலாத பக்தரிகெ = சுக்ரீவ, த்ருவ முதலான பக்தர்களுக்கு
புருஷார்த்த = புருஷார்த்தங்களை
இத்த = கொடுத்தான்.
லட்சுமி, பிரம்மாதி தேவர்களால்
வணங்கப்படுபவனான ஸ்ரீமன் நாராயணன், மத்ஸ்யாதி அனந்த அவதாரங்களை
எடுத்து,
அஜித,
வாமன முதலான அவதாரங்களால் தேவதைகளையும், வியாஸ, கபிலாதி ரூபங்களால் ரிஷிகளையும், ரிஷபாதி அவதாரங்களால் அரசர்களையும், ராம கிருஷ்ணாதி ரூபங்களால் மனிதர்களையும் காத்தான் என்பது கருத்து.
அந்தந்த காலத்தில் இருந்த மனிதர்களால் நேரடியாகவும், மற்ற காலங்களில் பிரதிமாதி ரூபங்களால் மற்ற மக்களிடமிருந்து சேவைகளை
ஏற்றுக்கொண்டு, அவரவர்களுக்கு சுக்ரீவ, த்ருவ ஆகியோருக்குக் கொடுத்ததைப்
போன்ற புருஷார்த்தங்களை கொடுப்பான் என்பது கருத்து.
துஷ்டதானவ ஹரண சர்வோ
த்க்ருஷ்ட சத்குணபரித பக்தா
பீஷ்டதாயக பவவினாஷக விகதபயஷோக |
நஷ்டதுஷ்டிகளில்ல ஸ்ருஷ்ட்யா
த்யஷ்ட கர்தனிகாவ காலதி
ஹ்ருஷ்டனாகுவ ஸ்மரணெ மாத்ரதி ஹ்ருத்குஹாவாஸி ||11
(ஸ்ரீபரமாத்மன்)
துஷ்டதானவ ஹரண = துஷ்டர்களான கம்ஸ, ஸ்ருகாள, பௌண்ட்ரக வாசுதேவன், நரகாசுரன் முதலான தானவர்களைக்
கொல்கிறான்
சர்வோத்க்ருஷ்ட = அனைவரைவிட சிறந்தவன்
சத்குணபரித = சர்வோத்தமாதி நற்குணங்கள் நிரம்பியவன்
பக்தாபீஷ்டதாயக = பக்தர்களின் அபீஷ்டங்களை
நிறைவேற்றுபவன்
பவவினாஷக = சம்சாரம் என்னும் நோயினை நாசம் செய்பவன்
விகதபயஷோக = எந்த காலத்திலும் பயமோ, துக்கங்களோ இல்லாதவன்
ஸ்ருஷ்ட்யாத்யஷ்ட கர்தனிகெ = ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, நியமன, ஞான,
அஞ்ஞான, பந்த,
மோக்ஷ என்னும் 8 கர்த்ருத்வ உள்ள ஸ்ரீபரமாத்மனுக்கு
ஆவகாலதலி = எந்த காலங்களிலும்
நஷ்டதுஷ்டிகளில்ல = ஆனந்தாதிகளில் குறைவு / அதிகம்
ஏற்படுவதில்லை (ஆவதில்லை)
ஹ்ருத்குஹாவாசி = அனைவரின் இதய கமலத்திலும்
வசிப்பவனான ஸ்ரீஹரி
ஸ்மரணெ மாத்ரதி = அவனை நினைத்த அந்த கணத்திலேயே
ஹ்ருஷ்டனாகுவ = மகிழ்வான் (தரிசனம் அளிப்பான் என்பது
கருத்து).
ஸ்ரீபரமாத்மன், பற்பல அவதாரங்களை எடுத்தான் என்பதை முந்தைய பத்யத்தில் பார்த்தோம். அதனால், பகவந்தனுக்கும் நம்மைப் போலவே பலவந்தமான பிறவிகள் வருகிறதோ என்னமோ என்னும்
சந்தேகத்தைப் போக்குவதற்காக, துஷ்டதானவஹரண என்றார். ஒவ்வொரு
அவதாரத்திலும், வெறும் தன்னுடைய லாபத்திற்காக, செயல்களை செய்வதற்காக, பிறந்தவன் அல்ல. பிரம்மாதிகளால் வேண்டப்பட்டு, மனிதர்களான ராவணன், கம்ஸ, ஆகியோரின் சம்ஹாரத்திற்காக, தன் விருப்பப்படி அவதாரம் செய்தான்
என்பது கருத்து.
தைத்யர்களின் சம்ஹாரம், தேவதைகளின் பாதுகாப்பு செய்தவன் ஆகையால், பரமாத்மனுக்கு மனிதர்களைப் போல வைஷம்யாதி தோஷங்கள் இருக்கிறதோ என்றால், இல்லை என்று அவன் ‘சர்வோத்க்ருஷ்ட சத்குணபரித’ என்றார்.
சர்வோத்தமனான நற்குணங்களைக் கொண்டவன் என்றபிறகு
வைஷம்யாதி தோஷங்கள் இல்லை என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை என்பது கருத்து.
அப்படியெனில், தைத்யர்களை ஏன் கொன்றான் என்றால், ‘பக்தாபீஷ்டதாயகன்’ என்றார். பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கி, அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுவதற்காக அவர்களை கொன்றான் என்பது
கருத்து.
அது மட்டுமல்லாமல், சம்சாரத்திலிருந்தும் அவர்களைக் காக்கிறான். தைத்யர்களின் மேல் உள்ள பயத்தாலோ, அவர்கள் தன் மேல் காட்டிய த்வேஷத்தாலோ, பரமாத்மனுக்கு அவர்களில் வெறுப்பு உண்டாகி; அல்லது, தன் லாப நஷ்டங்களைப் பார்த்து அந்த தைத்யர்களை கொல்லவில்லை. அவரவர்களின்
கர்மங்களுக்கேற்ப அவரவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறான் ஆகையால், தேவதைகளின் பாதுகாப்பிற்காக தைத்யர்களைக் கொன்றானே தவிர, தன் பயனுக்காக அல்ல என்பதை ‘விகதபயஷோக நஷ்டதுஷ்டிகளில்ல’ என்னும் பதங்களால் சொல்கிறார்.
இத்தகைய, அனைத்து ஜீவர்களின் இதய
கமலத்திலும் இருப்பவனான ஸ்ரீபரமாத்மன், தன்னை நினைத்த அந்த நொடியிலேயே
தரிசனம் அளிக்கிறான். பக்தியால் அவனை நினைக்க வேண்டும். அபக்தர்கள் செய்யும்
ஸ்மரணைக்கு பலன் இல்லை என்பது ‘அபக்தோதாஹ்ருஷம் நைவ பலதாத்ரு
பவிஷ்யதி’
என்னும் ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தால் தெளிவாகிறது.
ஹிந்தெ ப்ரலயோதகதி தாவரெ
கந்தனஞ்சிஸி காய்த தலெயொளு
பாந்தொரெய பொத்தவகொலிது பரியங்கபதவித்த |
பந்திசித வ்ருந்தாரகர ச
த்வ்ருந்தகுணிசித சுதெய கருணா
சிந்து கமலாகாந்த பஹுநிஸ்சிந்த ஜயவந்த ||12
ஹிந்தெ பிரளயோதகதி = பிந்தைய பிரளய கல்பத்தின் நீரில்
தாவரெகந்தன = கமலத்தில் உதித்தவனான பிரம்மதேவரை
அஞ்சிஸி = பயப்படுத்தி
காய்த = காத்தான்
தலெயொளு = தலையில்
பாந்தொரெய பொத்தவகெ = ஆகாய கங்கையைப் பெற்ற
ருத்ரதேவருக்கு
ஒலிது = அவரின் தவத்திற்கு மெச்சி
பர்யங்க பதவித்த = சேஷ பதவியைக் கொடுத்தான்
வந்திஸித = தங்கள் இடத்தை இழந்து, துக்கமடைந்த தேவதைகள், பரமாத்மனை வேண்ட
வ்ருந்தாரகர ஸத்வ்ருந்தகெ = அந்த தேவதைகளின் உத்தமமான
சமூகத்திற்கு
கருணாஸிந்து = கருணா சமுத்திரனான
பஹுனிஷ்சிந்த = என்றைக்கும் கவலை இல்லாதவனான
ஜயவந்த = எப்போதும் வெற்றியாளனான
கமலாகாந்த = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணன்
ஸுதேய = அமிர்தத்தை
உணிஸித = குடிக்கக் கொடுத்தான்.
பிந்தைய பிரம்ம கல்பத்தின் முடிவில், பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்த பிரம்ம தேவரை காத்தான். விஷ்ணு ரஹஸ்ய
24ம் அத்தியாயத்தில்:
ஸவிஷ்ணு: பத்மனாபாக்ய: தன்னாபி கமலாதபூத் ||
ஹிரண்யகர்ப்பனாமாஸௌ ஸஜாதோ தத்ருஷீதிஷ: ||36
சதுர்திக்ஷுச சத்வாரி முகான்யாஸன் மஹாத்மன: ||
பத்மஸ்ய கர்ணிகாமத்யே நிஷண்ண: ஸ்வஸ்திகாஸனெ ||
ததா விஷ்ண்வஞ்ஞயா துர்கா ஜலபிந்துபிரன்விதம் ||
விஸ்ஸர்ஜ மஹாவாதம் தேனாபூத் பீடிதோவிதி: ||40
ததா காடாந்தகாரே ஸ்வமஸஹாயம் விலோக்யஸ: ||
வீட்யமானோ வர்ஷவாதை: க்ஷணம் பீதோஸ்மரத்தரிம் ||41
ததஸ்தபஸ்தபேத்யாஸீத் ஷரீரைவ பாரதீ ||
ஸமாதி யோகமாஸ்தாய விருச்ஸ்வாஸோ பயத்தத ||42
தத்யாவாந்தரமாத்மானம் பிரம்மா ரூபம் ஸதாஸிவம் ||
திவ்யவர்ஷாயுதம் பஸ்சாதுத்தித: ஸஸமாதித: ||43
ப்ரீதோத தபஸாதேன பத்மனாபோ ஹரி: ஸ்வயம் ||
கௌமாரம் ரூபமாஸ்தாய நிஜரூபமதர்ஷயத் ||44
நாபியில் கமலம் இருந்ததால், விஷ்ணுக்கு பத்பனாப என்னும் பெயர் வந்தது. அந்த நாபிக் கமலத்திலிருந்து
ஹிரண்யகர்ப்ப என்னும் பெயருள்ள பிரம்மதேவர் பிறந்தார். அவர் நான்கு திசைகளில்
பார்க்கும்போது 4 முகங்களைப் பெற்றார். பத்மத்தின் நடுவில், பத்மாசனத்தில் (ஸ்வஸ்திகாசன) அமர்ந்திருந்த தன்னை தானே பார்த்தார். அந்த
சமயத்தில் துர்கா தேவியர் ஸ்ரீவிஷ்ணுவின் ஆணையின்படி மிகப்பெரிய சூறாவளியை
உண்டுபண்ண, அதனால் பிரம்மதேவர் துன்பப்பட்டார். கும்மிருட்டு பரவியது. வேறு யாரின்
உதவியும் கிடைக்காமல், தண்ணீர் துளிகள் தெறிக்கும் அந்த இரவில் பிரம்மதேவர் சிறிது பயந்தார். பின்
ஸ்ரீபரமாத்மனை சிந்தித்தார்.
அந்த சமயத்தில் ‘தப தப’ என்று 2 முறை சத்தம் கேட்டது. அப்போது பிரம்மதேவர் சமாதி நிலையில் மூச்சினை அடக்கி, இதயகமலத்தில், சதா மங்கள மூர்த்தியான ஸ்ரீபரமாத்மனை தியானம் செய்தவாறு, தேவதா நாளின்படி 10,000 ஆண்டுகள் வரை தியானத்தில் இருந்து, பின் வெளி வந்தார். அப்போது
பரமாத்மன் அவரது தவத்திற்கு மகிழ்ந்து, திவ்யமான கௌமார ரூபத்தை தரித்து, அந்த ரூபத்தை பிரம்மதேவருக்குக் காட்டினான் என்று சொல்லியிருக்கிறார்.
அந்த அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு ‘தாவரெ கந்தனஞிஸி காய்த’ என்று சொல்கிறார். ருத்ரதேவரின்
தவத்திற்கு மெச்சி, அவருக்கு சேஷ பதவியைக் கொடுத்தார். துர்வாசரின் சாபத்தினால், தேவதைகள் அவர்களின் ராஜ்யத்தை இழந்து, பரமாத்மனை வேண்ட, பரமாத்மன், தேவ-தைத்யர்களுடன் பாற்கடலைக் கடைய, அதிலிருந்து அமிர்தம் கிடைத்தது.
தைத்யர்கள் அந்த அமிர்த கலசத்தை அபகரித்தனர். பரமாத்மன் மோகினி ரூபத்தை தரித்து, தைத்யர்களை ஏமாற்றி, தேவதைகளுக்கு அமிர்தத்தைக் கொடுத்தான்.
இந்த கதை பாகவத 10ம் ஸ்கந்தத்திலும்,
மகாபாரத தாத்பர்ய நிர்ணய 10ம் அத்தியாயத்திலும் வருகிறது. இதனால் பரமாத்மனுக்கு எவ்விதமான பலனும்
இருக்கவில்லை. கவலை இல்லாதவன். சாட்சாத் லட்சுமிபதி. இப்படி இருக்கையில், தேவதைகளால் இவனுக்கு ஆவதுதான் என்ன? தைத்யர்களால் இவனுக்கு வரப்போகும்
கஷ்டம்தான் என்ன? எதுவும் இல்லை. ஆனாலும், அவன் கருணா சமுத்திரன் ஆகையால், பக்தர்களாக தன்னை வேண்டியதால், அவர்களின் பாதுகாப்பிற்காக
அமிர்தத்தைக் கொடுத்தான் என்பது கருத்து.
சத்யசங்கல்பானுசார ப்ர
வர்த்திசுவ ப்ரபு தனகெ தானெ
ப்ருத்யனெனிசுவ போக்த்ரு போக்ய பதார்த்ததொளகித்து |
தத்ததாஹ்வயனாகி தர்பக
த்ருப்திபடிசுவ தத்வபதிகள
மத்தராதசுரர்கெ அசமீசீன பலவீவ ||13
சத்ய சங்கல்பானுசார ப்ரவர்த்திசுவனு = தன் இஷ்டப்படி, தான் நினைத்ததைப் போல நடப்பவன்.
தனகெ தானெ பிரபு = சர்வோத்தமன். தனக்கு தானே தலைவன்.
ஒப்புமைக்கும் யாரும் இல்லாதவன்
ப்ருத்யனெனிஸுவ = சேவகன் என அழைக்கப்படுகிறான்
போக்த்ரு போக்ய பதார்த்ததொளகித்து =
அனுபவிப்பவர்களிலும், அனுபவிக்கத் தகுந்த பதார்த்தங்களிலும் தானே இருந்து
தத்ததாஹ்வயனாகி = அந்தந்த பெயர்களில் அழைக்கப்பட்டு
தர்பக = தர்பக என்று அழைத்துக் கொண்டு
தத்வபதிகள = அனுபவிப்பவர்களின் தேகத்தில் இருக்கும்
தத்வாபிமானி தேவதைகளை
த்ருப்திபடுசுவ = திருப்திப்படுத்துவான்
மத்தராத = த்வேஷிகளான
அசுரர்கெ = தைத்யர்களுக்கு
அஸமீசீன பலவீவ = பாவ பலன்களைக் கொடுக்கிறான்.
முந்தைய பத்யத்தில், தைத்யர்களை வஞ்சித்து, தேவதைகளுக்கு அமிர்தத்தைக்
கொடுத்தார் என்று வந்தது. அதனால், பகவந்தனுக்கு வைஷயம்யாதி தோஷம்
வருகிறதோ என்று சந்தேகம் வந்தால், அதை இங்கு பரிகரிக்கிறார்.
ஸத்ய ஸங்கல்பதோ விஷ்ணுர் நான்யதாது கரிஷ்யதி --
என்னும் வாக்கியத்தின்படி பரமாத்மன் சத்ய சங்கல்பன். அதற்கு எதிராக அவன் எப்போதும்
நடப்பதில்லை. தன் பக்தர்களுக்கு வரும் கஷ்டங்களை பரிகரித்து, அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுவதே இவனின் சங்கல்பம். ஆகையால், தேவதைகளுக்கு அனுகூலமாகவும், தைத்யர்களுக்கு ப்ரதிகூலனாகவும்
இருக்கிறானே தவிர, தனக்கு யாராலும் ஆவதென்ன? ப்ரபுகளில் இருந்து பிரபு என்று
அழைத்துக் கொள்கிறான். ப்ருத்யர்களில் இருந்து, ப்ருத்ய காரியங்களை செய்து, ப்ருத்ய என்று அழைத்துக்
கொள்கிறான். சுகாதிகளை அனுபவிக்கும் மக்களில் அவர்கள் போகிக்க தகுதியான
பதார்த்தங்களில் தானே இருந்து, அந்தந்த பெயர்களால் தர்பக என்று
அழைத்துக் கொண்டு தத்வாபிமானி தேவதைகளை திருப்திப்படுத்துகிறான். தைத்யர்களுக்கு
பாவ பலன்களைக் கொடுக்கிறான்.
பிட்டிகள நெவதிந்தலாகலி
ஹொட்டெகோசுக வாதராகலி
கெட்டரோக ப்ரயுக்தவாகலி அணகதிந்தொம்மெ |
நிட்டுசிரினிம் பாய்தெரது ஹரி
விட்டலா சலஹெந்தெனலு கை
கொட்டு காவ க்ருபாலு சந்தத தன்ன பகுதரனு ||14
பிட்டிகள நெவதிந்தலாகலி = முதலாளியானவன் எந்த பணமும்
கொடுக்காமல் வேலை செய்யச் சொல்லும் சந்தர்ப்பத்தில், கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்யும்போதோ
ஹொட்டெகோசுக வாதராகலி = இவன் பக்தன் என்று அறிந்து, மக்கள் தனக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று வயிறு வளர்க்கும் ஆசையினாலோ
கெட்ட ரோக ப்ரயுக்தவாகலி = கெட்ட நோய்களை
அனுபவிக்கும்போது, அதனை சகிக்கமுடியாமலோ
அணகதிந்தொம்மெ = பக்தி மரியாதையுடன், ஒரு மனதுடன்
நிட்டுசுரினிம் = பெருமூச்சுடன்
பாய்தெரெது = வாய் திறந்து
ஹரி விட்டலா சலஹெந்தெனலு = ஹரி விட்டலா, என்னைக் காப்பாற்று என்றால்
க்ருபாளு = கருணாளுவான ஸ்ரீஹரி
சந்தத = சர்வ காலத்திலும்
தன்ன பகுதரன = தன் பக்தர்களை
கைகொட்டுகாவ = கை கொடுத்து அவர்களைக் காக்கிறான்
சம்பளமே இல்லாமல் வேலைகளை இலவசமாக செய்யும்போது வரும்
கஷ்ட காலங்களிலோ, வயிற்றுக்கு இல்லாமல் கஷ்டப்படும்போதோ, நோயின் தாக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதபோதோ, பக்தி வைராக்கியத்தினால், ஒரு மனத்துடன், பெருமூச்சு விட்டு, வாய் திறந்து, அய்யோ அப்பா என்று சொல்லாமல், ஹரே, விட்டலா, என்னைக் காப்பாற்று என்று நினைத்தால் போதும். கருணாளுவான ஸ்ரீஹரி, தன் பக்தர்களின் சிந்தனையை மெச்சி, அவர்களை கை கொடுத்து காக்கிறான்.
ஈ வசுந்தரெயொளகெ ஸ்ரீ பூ
தேவியரசன சுகுண கர்மக
ளாவ பகெயிந்தாதராகலி கீர்த்திசுவ நரர
காவ கமலதலாயதாக்ஷ க்ரு
பாவலோகனதிந்த கபிசு
க்ரீவகொலிதந்ததலி ஒலிதபிலாஷெ பூரயிப || 15
கமலதளாயதாக்ஷ = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி
ஈவசுந்தரெயொளகெ = இந்த பூமியில்
ஸ்ரீபூதேவியரஸன = ஸ்ரீதேவி பூதேவியருக்கு தலைவனான
ஸ்ரீபரமாத்மனின்
சுகுணகர்மகள = உத்தமமான குண கர்மங்களை
ஆவ பகெயிந்தாதராகலி = ஏதோ ஒரு வழியில்
கீர்த்திஸுவ நரர = வாயில் சொல்லி, காதில் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை
காவ = காக்கிறான்
க்ருபாவலோகனதிந்த = தன் கருணைப் பார்வையால் பார்த்து
கபி சுக்ரீவ கொலிதந்ததலி = கபி சுக்ரீவனுக்கு உதவி, இஹத்தில் வாலியைக் கொன்று ராஜ்யத்தை அவனுக்குக் கொடுத்து, பரத்தில் திவ்ய கதியைக் கொடுத்ததைப் போல
ஒலிது = பக்தர்களுக்கு தரிசனம் அளித்து
அபிலாஷெபூரயிப = அவர்களின் மனோபீஷ்டங்களை
நிறைவேற்றுகிறான்.
இந்த பூமியில், ஸ்ரீதேவி பூதேவியின் அரசனான ஸ்ரீமன் நாராயணனின் குண கர்மங்களை ஏதோ ஒரு வகையில்
சொல்லிக் கொண்டிருந்தால், தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி, அவர்களுக்கு தரிசனம் அளித்து, தன் கருணைப் பார்வையால் அவர்களைக் காத்தவாறு, கபியான சுக்ரீவனுக்கு உதவியதைப் போல, உதவி செய்து, அவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகிறான்.
சேதனாந்தர்யாமி லகுமி
நாத கர்மகளனுசரிஸி ஜனி
தோதவிஷ்ணோ எம்ப ஸ்ருதிபிரதிபாத்ய எம்மொடனெ |
ஜாதனாகுவ ஜன்மரஹித அ
கூதினந்தன பக்தரிந்தா
ஹூதனாகி மனோரதவ பேடிசிகொளதலீவ ||16
சேதனாந்தர்யாமி = அனைத்து பிராணிகளின் அந்தர்யாமியான
லகுமி நாத = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணன்
ஜனிதோத விஷ்ணோ எம்ப ஸ்ருதிபிரதிபாத்ய = ஜனிதோதவிஷ்ணோ
என்னும் ஸ்ருதியில் சொல்லப்பட்டதைப் போல
எம்மொடனெ = நம்முடன்
கர்மகளனுஸரிஸி = நம் கர்மங்களுக்கேற்ப
ஜன்மரஹித = பிறப்பு இல்லாதவனாக இருந்தாலும்
ஜாதனாகுவ = பிறக்கிறான்
அகூதினந்தன = யக்ஞ நாமகனான ஸ்ரீஹரி
பக்தரிந்த = தன் பக்தர்கள் மூலமாக
ஆஹூதனாகி = அழைத்துக் கொண்டு
பேடிசிகொளதலீவ = அவர்களால் எந்த மனோரதங்களையும்
வேண்டிக்கொள்ளாமல்
மனோரதவ = அவர்களின் இஷ்டார்த்தங்களை
ஈவ = கொடுக்கிறான்.
ஜீவனின் கர்மத்திற்கேற்ப பூமியில் பிறக்கும்போது, அனைத்து பிராணிகளின் அந்தர்யாமியான ஸ்ரீபரமாத்மன், தானும் அந்த ஜீவனுடன் பிறக்கிறான். ’ஜனிதோதவிஷ்ணோ’ ‘அஜாயமானோ பஹுவதாவ்யஜாயதே’ - இத்தகைய ஸ்ருதிகளில் சொன்னதைப் போல, தான் பிறப்பு இல்லாதவனானாலும், ஜீவருக்கு, கர்மங்களை தானாக செய்யும் சக்தி இல்லாததாலும், அவர்களிடமிருந்து கர்மங்களை செய்விப்பதற்காக, அந்த ரூபமாக பிறக்கிறான். பக்தர்கள் தன் நாமங்களை உச்சரித்து அழைத்தால், மிகவும் மகிழ்ந்து, அவன் எதை கேட்டும் /
கேட்காவிட்டாலும், தானே அவர்களின் மனோபீஷ்டங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுகிறான்.
ந்ருபது எனிசுவ மனுஜரொளு சுர
ருஷபனிந்த்ரியதொளு தத்த
த்விஷயகள புஞ்சிசுவ ஹோதாஹ்வயனு தானாகி |
ம்ருஷரஹித வேததொளு ருதுசது
பெசரினிந்தலி கரெசுத ஜக
த்ப்ரசவித நிரந்தரதி சந்தெயிசுவனு பகுதரனு ||17
சுரருஷப = தேவ ஸ்ரேஷ்டனான ஸ்ரீஹரி
மனுஜரொளு = மனிதனில் இருந்து
ந்ருபது எனிஸுவ = ந்ருபது என்று அழைத்துக் கொள்கிறான்
இந்திரிய்களொளு = பிராணிகளின் கண் முதலான
இந்திரியங்களில் இருந்து
ஹோதாஹ்வயனு தானாகி = ஹோதா என்னும் பெயர் உள்ளவனாகி
தத்தத்விஷயகள = அந்தந்த இந்திரியங்களால் ஆகும்
பார்த்தல், கேட்டல் முதலான காரியங்களை செய்வித்து
புஞ்சிசுவ = அவற்றினால் கிடைக்கும் சுகத்தை ஏற்றுக்
கொள்கிறான்
ம்ருஷரஹித = பொய் இல்லாத
வேததொளு = வேதத்தில்
ருதுசது பெசரினிந்தலி = ருதுசது என்னும் பெயரில்
கரெசுத = அழைக்கப்பட்டு
ஜகத்ப்ரஸவித = உலகத்தை படைக்கும் ஸ்ரீஹரி
நிரந்தரதி = எப்போதும்
பக்தரனு = தன் பக்தர்களை
சந்தெயிஸுவனு = சமாதானம் செய்கிறான் (அருள்கிறான்).
தேவோத்தமனான ஸ்ரீபரமாத்மன், மனிதர்களில் இருந்து, ந்ருபது என்று அழைத்துக்
கொள்கிறான். இந்திரியங்களில் இருந்து ஹோத என்னும் பெயரால் அந்தந்த விஷயங்களை
ஏற்றுக் கொள்கிறான். சத்யபூதமான வேதங்களில் இருந்து ருதுசது என்று அழைத்துக்
கொள்கிறான். ஸ்ருஷ்டிகர்த்தனான ஸ்ரீஹரி, தன் பக்தர்களை எப்போதும் சமாதானம்
செய்தவாறு, அவர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறான்.
அப்ஜபவபித ஜலதரத்ரியொ
ளப்ஜ கோஜாத்ரிஜனெனிசி ஜல
துப்பளெ பீயூஷதாவரெ ஸ்ரீ ஷஷாங்கரொளு |
கப்பு கதளி லதா த்ருண த்ரும
ஹெப்புகேய மாடுதிஹ கோஜனு
இப்பகேப்ரதீக மணி ம்ருககள ஸ்ருஜிபனத்ரிஜனு ||18
அப்ஜபவபித = பிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன்
ஜல = தண்ணீரிலும்
தரெ = பூமியிலும்
அத்ரியொளு = பர்வதத்திலும், முறையே
அப்ஜ, கோஜ, அத்ரிஜ நெனிஸி = இந்த பெயர்களில் அழைத்துக் கொண்டு
ஜலதுப்பளெ = நீர்க்குமிழி அல்லது அலைகள் - இவற்றிலும்
பீயூஷ = தண்ணீரில் அல்லது பாறகடலில் பிறந்த
அமிர்தத்திலும்
தாவரெ = தாமரைப் பூவில்
ஸ்ரீ = ஒளியிலும்
ஷஷாங்கரொளு = சந்திர மண்டலத்திலும்
அப்ஜ நாமக பரமாத்மன் இருக்கிறான்
கப்பு கதளி = கரும்பு, வாழை,
லதா = கொடிகளில்
த்ருண = புல்
த்ரும = மரம், முதலானவைகளில்
கோஜனு = கோஜ நாமகனாக
ஹெப்புகெய = வளர்ச்சியைக்
மாடுதிஹ = கொடுக்கிறான்
அத்ரிஜனு = மலையில் வசிப்பவனான அத்ரிஜ நாமகன்
யெப்பகெ ப்ரதீகதொளு = ஜடசேதன ரூபமான இரு வித ப்ரதிமைகளில்
இருந்து
மணி = ஜடமான மாணிக்கம் முதலானவற்றில் இருந்து
ம்ருக = மலை, காடுகளில் சஞ்சரிக்கும் விலங்குகளை
ஸ்ருஜிப = ஸ்ருஷ்டிக்கிறான்
ஸ்ரீபிரம்மதேவரின் தந்தையான ஸ்ரீபத்பனாபன், தண்ணீரில் அப்ஜ என்ற பெயரில் இருந்து நீர்க்குமிழி, அமிர்தம், தாமரை மலர், சந்திர மண்டலம் ஆகியவற்றின் ஒளியை அதிகப்படுத்துகிறான்.
பூமியில் கோஜ என்னும் பெயரில் இருந்து, கரும்பு, வாழை ஆகியவற்றிலும், கொடி, புல்,
மரம்,
செடி ஆகியவற்றை வளர்க்கிறான்.
அத்ரிஜ நாமகன், மலைகளில் கிடைக்கும் மாணிக்கம் ஆகியவற்றை ஜடபிரதிமை என்றும், மிருகங்கள் ஆகியவற்றை சேதன பிரதிமை என்றும், இரு வித பிரதிமைகளை ஸ்ருஷ்டித்து, அவற்றில் வசிக்கிறான்.
பரமாத்மன் வசிக்கத் தகுந்ததான பதார்த்தங்களுக்கு
ப்ரதிமை என்று பெயர். அவன் அனைத்து இடங்களிலும் வசிப்பதால், ஜடசேதனாத்மகமான அனைத்தும், பரமாத்மனுக்கு ப்ரதிமைகளே என்று
சிந்திக்க வேண்டும்.
ஸ்ருதிவினுத சர்வத்ரதலி பா
ரதிரமணனொளகித்து தா ஷுசி
ஷதுவெனிஸி ஜட சேதனரனு பவித்ரமாடுதிஹ |
அதுல மஹிமானந்த ரூபா
ச்யுதனெனிஸி சித்தேஹதொளு ப்ரா
க்ருத புருஷனந்ததலி நானாசேஷ்டெகள மாள்ப ||19
ஸ்ருதிவினுத = வேதங்களால் புகழப்படும் ஸ்ரீபரமாத்மன்
சர்வத்ரதலி = அனைத்து பிராணிகளிலும்
பாரதிரமணனொளகித்து = அந்தர் நியாமகராக இருக்கும்
வாயுதேவரில் இருந்து
தா = தான்
ஷுசிஷுதுவெனிஸி = ஜடசேதனர்களின்
பவித்ரமாடுதிஹ = ஜடசேதன ரூபமான அனைத்தையும் பவித்ரமாக
ஆக்குபவன்
அதுளமஹிம = ஒப்புமை இல்லாத மகிமை உள்ளவன்
அனந்தரூப = எல்லைகளற்ற ரூபங்களைக் கொண்ட ஸ்ரீஹரி
அச்யுதனெனிஸி = அச்யுதன் என்ற பெயரில்
சித்தேஹதொளு = ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் இருந்து
ப்ராக்ருதபுருஷனந்ததலி = சாதாரண ப்ராக்ருத மனிதனைப்
போல
சேஷ்டெகள மாள்ப = கர்மங்களை செய்விக்கிறான்.
வேதங்களால் வணங்கப்படும் ஸ்ரீஹரி, அனைத்து பிராணிகளின் அந்தர்யாமியாக இருக்கும், சித்தாபிமானியாக இருக்கும், பாரதி ரமண முக்ய பிராண தேவரில்
ஷுசிஷது என்னும் பெயரில் இருந்து, ஜடசேதனாத்மகமான இந்த பிரபஞ்சத்தையே
பவித்ரமாக ஆக்குகிறான். யாரையும் ஒப்புமை கொடுக்க முடியாத
மகிமைகளைக் கொண்ட, அனந்த ரூபங்களைக் கொண்ட ஸ்ரீஹரி, நாசம் இல்லாதவன் ஆகையால், அச்யுத என்ற பெயரில் அழைத்துக்கொண்டு, அனைவரின் ஸ்வரூப தேகத்தில் இருந்து, சாதாரண மனிதர்களைப் போல, பற்பல விதமான செயல்களை செய்து கொண்டிருக்கிறான் என்பது கருத்து.
அதிதி எனிசுவனன்னமய பா
ரதிரமணனொளு ப்ராணமய ப்ரா
க்ருத விஷய சிந்தனெய மாடிசுவனு மனோமயனு |
யதன விக்ஞானமய பரலத
ஜதனமாடிஸி ஆத்மஜாயா
சுதர சங்கதி சுகவனீவானந்த மயனெனிஸி ||20
அதிதி = அதிதிகளின் உள்ளிருந்து
அன்னமய = அன்னமய என்று அழைத்துக் கொள்கிறான்
பாரதிரமணனொளு = பாரதிபதியான முக்ய பிராணதேவரில்
இருந்து
ப்ராணமய = ப்ராணமய என்று அழைத்துக் கொள்கிறான்.
மனோமயனு = மனோமயனாக அனைவரின் மனதிலும் இருந்து
ப்ராக்ருதவிஷய சிந்தனெய = கண், காது,
முதலான அனைத்து இந்திரியங்களால் அனுபவிக்கும் விஷய சம்பந்தமான சிந்தனையை
செய்விப்பவன்
விக்ஞானமய = விக்ஞானமய என்று அழைத்துக் கொள்கிறான்
யதனபரலு = முயற்சி செய்யவேண்டிய சந்தர்ப்பங்கள் வந்த
காலத்தில்
அத = அதனை
ஜதனமாடிஸி = அந்த முயற்சிகளை சரியாக செய்விப்பவன்
ஆனந்தமயனெனிஸி = ஆனந்தமய என்று அழைத்துக் கொள்கிறான்
ஆத்ம = தான்
ஜாயா = மனைவி
ஸுதர = மக்கள்; இவர்களின்
ஸங்கதி = சகவாசத்தினால் அவர்களில் அபிமானத்தைக்
கொடுத்து
சுகவனீவ = சுகத்தைக் கொடுக்கிறான்.
* மதிய நேரத்தில் வீட்டிற்கு வரும்
அதிதிகளில் இருந்து, அன்னமய என்று அழைத்துக் கொள்கிறான்.
* பாரதி ரமணனான முக்யபிராணரில்
இருந்து ப்ராணமய என்று அழைத்துக் கொள்கிறான்.
* மனதில் மனோமய என்ற பெயர் உள்ளவராக
இருந்து ப்ரக்ருதி சம்பந்தமான விஷய சிந்தனையை கொடுக்கிறான்.
* விக்ஞானமய என்று சொல்லி, முயற்சி செய்யவேண்டிய காலத்தில் மக்களால் முயற்சியை செய்ய வைக்கிறான்.
* ஆனந்தமயனானவன், தான்,
தன் மனைவி, மக்கள் என்னும் அபிமானத்தை பிறக்கவைத்து, அவர்கள் மூலமாக சுகத்தைக் கொடுக்கிறான்.
இனிது ரூபாத்மனிகெ தோஷக
ளெனிது பப்பவு பேளிரை ப்ரா
ஹ்மண குலோத்தமராதவரு நிஷ்கபட புத்தியலி |
குண நியாமக தத்ததாஹ்வய
நெனிஸி கார்யவ மாள்ப தேவன
நெனெதமாத்ரதி தோஷராஷிகளெல்ல கெடுதிஹவு ||21
இனிது = இந்த விதமாக
ரூபாத்மனிகெ = அனந்தானந்த ரூபங்களால் அவரவரின்
யோக்யதைக்கேற்ப கர்மங்களை செய்து வரும் பரமாத்மனுக்கு
தோஷகளு = வைஷம்யாதி தோஷங்கள்
எனிதுபப்பவு = எப்படி வரும்?
பிராமண குலோத்தமராதவரு = உத்தமமான பிராமண குலத்தில்
பிறந்த நீங்கள்
நிஷ்கபட புத்தியலி = எவ்வித பாரபட்சமும் இன்றி, நியாயமாக
பேளிரை = சொல்லுங்கள்
குண நியாமக = சத்வ ரஜஸ் தமோ குணங்களின் ப்ரேரகனான
தத்ததாஹ்வயனெனிஸி = அந்தந்த பெயர் உள்ளவன் என்று
புகழ் பெற்று
கார்யவமாள்ப = கர்மங்களை செய்விக்கிறான்
தேவன = ஸ்ருஷ்ட்யாதி கர்த்தனான ஸ்ரீஹரி
நெனதமாத்ரதி = நினைத்த மாத்திரத்தில்
தோஷ ராஷிகளெல்ல = செய்த பாவங்கள் அனைத்தும்
கெடுதிஹவு = நாசம் அடைகின்றன.
இப்படியாக, அனந்தானந்த ரூபங்களால், சாத்விக, ராஜஸ,
தாமஸ ஜீவர்களில் இருந்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
கர்மங்களை செய்வித்து, பலன்களைக் கொடுக்கும் ஸ்ரீஹரிக்கு, வைஷம்யாதி தோஷங்கள் எப்படி இருக்கும்? உத்தமமான பிராமண குலத்தில் பிறந்துள்ள நீங்கள் அனைவரும், இதனை சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்கிறார். ஆனால், ருத்ராதி தேவதைகளில் அல்லது பிற மதங்களில் பாரபட்சம் வைத்துக் கொண்டு
பார்த்தால், சரியான நியாயம் தெரியாது. அத்தகைய பாரபட்சத்தை விட்டு, சமபுத்தியினால் பார்த்தால் இவ்விஷயம் புரியும் என்பது கருத்து. சத்வாதி
குணங்களுக்கு நியாமகனாக, சாத்விகாதி பெயர்களால் செயல்களை
செய்து செய்விக்கும் ஸ்ரீபரமாத்மனின் ஸ்மரணையால் மட்டுமே தோஷ ராசிகள் அனைத்தும்
நாசம் அடைகின்றன.
குஸ்தனெனிஸுவ பூமியொளு ஆ
ஷஸ்தனெனிசுவ திக்வலயதொளு
ஸ்வஸ்தனெனிபா காஷாதொளு ஒப்பொப்பரொளகித்து
வ்யஸ்தனெனிஸுவ சர்வரொளகெ ச
மஸ்தனெனிசுவ பளியலித்து உ
பஸ்தனெனிப விஷோதன விஷுத்தாத்ம லோகதொளு ||22
பூமியொளு = பூமியிலிருந்து
குஸ்தனெனிஸுவனு = குஸ்த என்று அழைத்துக் கொள்கிறான்
திக்வலயதொளு = திக் மண்டலங்களில் இருந்து
ஆஷஸ்தனெனிஸுவ = ஆஷஸ்த என்று அழைத்துக் கொள்கிறான்
ஆகாஷதொளு கஸ்தனெனிப = ஆகாயத்தில் இருந்து கஸ்த என்று
அழைத்துக் கொள்கிறான்
ஒப்பொப்பரொளகித்து = அனைத்து பிராணிகளிலும்
தனித்தனியாக ரூபங்களில் இருந்து
வ்யஸ்தனெனிஸுவனு = வ்யஸ்த என்று அழைத்துக் கொள்கிறான்
சமஸ்தரொளகெ = அனைவரிலும் வியாப்தனான ரூபத்தினால்
சமஸ்த என்று அழைத்துக் கொள்கிறான்
பளியலித்து = பக்கத்தில் இருந்து
உபஸ்தனெனிப = உபஸ்த என்று அழைத்துக் கொள்கிறான்
லோகதொளு = இப்படியாக உலகத்தில்
விஷோதன = அனைத்தையும் தூய்மையாக்குபவன் என்றும்
விஷுத்தாத்ம = தூய்மையானவன் என்றும்
சிந்திக்க வேண்டும் என்று அர்த்தம்.
பூமியில் இருக்கும் பரமாத்மனுக்கு குஸ்த என்று பெயர்.
‘கோத்ராகும் ப்ருதிவி ப்ருத்வீ’ என்னும் அமரகோச வாக்கியத்தைப் போல, கு என்றால் பூமி. ‘கௌஸ்தீயதெ இதி குஸ்த:’ என்னும் நிர்ணயத்தின்படி பூமியில் இருப்பதால், குஸ்த என்று பெயர். திசைகளுக்கு ஆஷா என்று பெயர். அங்கு இருப்பதால், ஆஷஸ்த என்று பெயர். ஆகாயத்திற்கு கம் என்று பெயர். ஆகாயத்தில் இருப்பதால், கஸ்த என்று பெயர். ஒவ்வொருவரிலும் தனித்தனியான ரூபங்களில் இருப்பதால், வ்யஸ்த என்று பெயர். அனைத்து இடங்களிலும் நிலைத்திருக்கும் ரூபத்திற்கு சமஸ்த
என்று பெயர்.
அருகிலேயே இருப்பதால் உபஸ்த என்று பெயர். இப்படியாக, விசேஷமான தூய்மையாக்குபவன் ஆகையால், தூய்மையான ஸ்வரூபம் கொண்டவனாக
இருக்கும் ஸ்ரீஹரி, உலகத்தில் இத்தகைய அனேக ரூபங்களால், அனேக பெயர்களால் வசிக்கிறான் என்று
சிந்திக்க வேண்டும் என்பது கருத்து.
ஞானதனு எந்தெனிப ஷாஸ்த்ரதி
மானதனு எந்தெனிப வசனதி
தானஷீல சுபுத்தியொளகெ வதான்யனெனிசுவனு |
வைனதேயவரூத தத்த
த் ஸ்தானதலி தத்தத்ஸ்வபாவக
ளானுசார சரித்ரெ மாடுத நித்ய நெலெசிப்ப ||23
ஷாஸ்திரதி = சாஸ்திரத்தில்
ஞானதனு எந்தெனிப = ஞானதன் என்று அழைத்துக் கொள்கிறான்
வஸனதி = வஸ்திரங்களில்
மானதனு = மானதன
எந்தெனிப = என்று அழைத்துக் கொள்கிறான்
தானஷீல சுபுத்தியொளகெ = தானத்தை எப்போதும் செய்து
கொண்டிருக்க வேண்டும் என்னும் புத்தியில்
வதான்யனெனிஸுவனு = வதான்ய என்று அழைத்துக் கொள்கிறான்
வைனதேயவரூத = கருடனே த்வஜமாக உள்ள ஸ்ரீஹரி
தத்தத் ஸ்தானதலி = அந்தந்த இடங்களில்
தத்தத் ஸ்வபாவகளானுசார = அந்தந்த பொருட்களின்
ஸ்வபாவத்திற்கேற்ப
சரித்ரெகள = கர்மங்களை
மாடுத = செய்தவாறு
நெலெசிப்ப = வசிக்கிறான்.
* சாஸ்திரங்களில் இருந்து ஞானத்தைக்
கொடுப்பவன் ஆகையால், ஞானத என்று அழைத்துக் கொள்கிறான்.
* வஸ்திரங்களில் இருந்து மானத்தைக்
காப்பவன் ஆகையால், மானத என்று அழைத்துக் கொள்கிறான்.
* வதான்ய என்றால் வீரர்களுக்குப்
பெயர். தானசீலர்களில் இருந்து வதான்ய என்று அழைத்துக் கொள்கிறான்.
இப்படி கருட வாகனனான ஸ்ரீபரமாத்மன், அந்தந்த இடங்களில் இருந்து, அந்தந்த ஸ்வபாவங்களை அனுசரித்து, செயல்களை செய்தவாறு எப்போதும் அங்கு வசிக்கிறான்.
க்ராமபனொளக்ரணி எனிசுவனு
க்ராமிணி எனிசுவனு ஜனரொளு
க்ராமுமக்ராமகளொளகெ ஸ்ரீமான்யனெனிசுவனு |
ஸ்ரீமனோரம தானெ யோக
க்ஷேம நாமகனாகி சலஹுவ
ஈ மஹிமெ மிக்காத தேவரிகுண்டெ லோகதொளு ||24
க்ராமபனொளு = கிராம அதிபதியில்
அக்ரணியெனிஸுவனு = அக்ரணி என்று அழைத்துக் கொள்கிறான்
ஜனரொளு = ஊர் மக்களில் இருந்து
க்ராமணி எனிஸுவனு = கிராமணி என்று அழைத்துக்
கொள்கிறான்
க்ராம, உபக்ராமகளொளகெ = கிராமங்கள், சிற்றூர்களில் இருந்து
ஸ்ரீமான்யனெனிஸுவனு = ஸ்ரீமான் என்று அழைத்துக்
கொள்கிறான்
ஸ்ரீமனோரம = லட்சுமி மனோரமனான (மனதிற்கு அபிமானியான)
ஸ்ரீபரமாத்மன்
யோகஷேம நாமகனாகி = யோகஷேம என்னும் பெயரில்
சலஹுவ = காக்கிறான்
ஈ மஹிமெ = இத்தகைய மகிமை
லோகதொளு = இந்த உலகத்தில்
மிக்காத தேவரிகுண்டெ = மற்ற எந்த தேவதைகளுக்காவது
உண்டா?
இல்லை என்பது கருத்து.
கிராமாதிபதி என்றால், தேசாதிபதி, மகாராஜா, சக்ரவர்த்திகள் என அனைவரையும் சொல்லலாம். இவர்களில் இருந்து, அக்ரணி என்று அழைத்துக் கொள்கிறான். ப்ரபு என்று அழைத்துக் கொள்கிறான் என்று
அர்த்தம். மக்களில் இருந்து கொண்டு, க்ராமணி என்று அழைத்துக்
கொள்கிறான். க்ராமங்களிலும், உப-கிராமங்களிலும் இருந்து
ஸ்ரீமந்த என்று அழைத்துக் கொள்கிறான்.
இதன் அபிப்பிராயம் என்னவெனில்: விபூதியை சிந்திப்பது
போல, கிராமங்களில் கிராமாதிபதியில் இருந்து, பிரபு என்று அழைத்துக் கொள்கிறான். சாமான்ய பிரஜைகளில், ராஜர்களில் இருந்து ப்ரபு என்று அழைத்துக் கொள்கிறான். ராஜர்களில்
சக்ரவர்த்தியில் இருந்து பிரபு என்று அழைத்துக் கொள்கிறான். அதாவது அந்தந்த
குழுக்களில் அதிபதி ஸ்தானத்தில் இருந்து, அந்த பிரபு காரியத்தை தான்
செய்கிறான் என்று பொருள். லட்சுமி மனோகரனான ஸ்ரீமன் நாராயணன், அனைத்து பிரஜைகளிலும், யோகக்ஷேம என்னும் பெயரில் தான்
இருந்து,
யோகஷேமத்தை தான் வகித்து அவர்களை காக்கிறான். இத்தகைய மகிமை, மற்ற எந்த தேவதைகளுக்கு இருக்கிறது? என்றைக்கும் இல்லை என்பது கருத்து.
விஜயசாரதி எந்து கருட
த்வஜன மூர்த்திய பக்திபூர்வக
பஜிசுதிப்ப மஹாத்மரிகெ சர்வத்ரதலி ஒலிது |
விஜயதனு தானாகி சலஹுவ
புஜகபூஷண பூஜ்யசரணா
ம்புஜ விபூதித புவனமோஹனரூப நிர்லேப ||25
விஜயசாரதி எந்து = அர்ஜுனனின் சாரதி என்று
(பார்த்தசாரதி என்று)
கருடத்வஜன மூர்த்திய = கருடத்வஜனின் மூர்த்தியை
பக்திபூர்வக = பக்தியுடன்
பஜிசுதிப்ப = துதித்துக் கொண்டிருக்கும்
மஹாத்மரிகெ = பக்தர்களுக்கு
புஜகபூஷண பூஜ்ய சரணாம்புஜ = பாம்பினை தரித்திருக்கும்
ருத்ரதேவர் வணங்கும் கால்களை உடைய
விபூதித = பக்தர்களுக்கு அபாரமான செல்வத்தைத்
தரக்கூடியவனான
புவனமோஹனரூப = உலகத்தை மயக்கும் ரூபத்தைக் கொண்ட
நிர்லேப = நிர்லிப்தனான ஸ்ரீஹரி
ஸர்வத்ரதலி = எல்லா இடங்களிலும், அனைத்து காலங்களிலும்
ஒலிது = மகிழ்ந்து தரிசனம் அளித்து
விஜயதனு தானாகி = விசேஷமான வெற்றியை தருபவனாக இருந்து
சலஹுவ = காக்கிறான்.
கருடத்வஜனான ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியை, பார்த்தசாரதி என்று பக்தியுடன் பூஜிக்கும் பக்தர்களுக்கு பரமாத்மன் தரிசனம்
அளித்து,
அவர்களுக்கு அனைத்து செயல்களிலும் வெற்றியைக் கொடுத்து காக்கிறான். ருத்ராதி
தேவதைகளை பஜித்தால், இத்தகைய வரங்கள் கிடைக்குமென்றால், ருத்ரதேவர் பரமாத்மனுக்கு பக்தராக
இருப்பதால், மகாராஜனின் சாட்சாத் பிரசாதத்திற்கும், அவனின் சேவகனின் பிரசாதத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, இங்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக - புஜகபூஷண
பூஜ்யசரணாம்புஜ - என்றார். ருத்ரதேவர் சேவகர் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா? ஆகையால், விபூதித என்றார். பரமாத்மன் கொடுக்கும் செல்வத்திற்கு, இஹ பரங்களிலும் நஷ்டம் இல்லை.
மற்றவர்கள் கொடுத்தாலும் அல்ப பலன்களையே
கொடுப்பார்கள். பரமாத்மன் மகா பலன்களையே கொடுக்கிறான் என்பது கருத்து. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் மூவரும் வரங்களை கொடுப்பவர்களே.
பாகவத 10ம் ஸ்கந்தம் 61ம் அத்தியாயத்தில்)
ஸத்ய: ஷாபப்ரஸாதோங்க ஷீவோ ப்ரம்மா நசாச்யுத: ||
ருத்ரதேவரோ, பிரம்மதேவரோ, இவர்கள் மகிழவேண்டுமெனில், கோபம் கொள்ளவேண்டுமெனில், உடனுக்குடன் ஆகிறார்கள். எனில், சிறிதளவிலான தவத்திற்கு மெச்சி, உடனடியாக வரத்தைக் கொடுக்கின்றனர். சிறிய தவறுக்கும் கோபம் கொண்டு சாபம் கொடுக்கின்றனர்.
இந்த இரண்டுமே ஸ்திரமானதல்ல. ருத்ரதேவர் கொடுத்த வரத்தை, வாயுதேவரும், ஸ்ரீபரமாத்மனும் அழிக்கின்றனர். பிரம்மதேவர் கொடுத்த வரத்தை, சில சமயங்களில் வாயுதேவரும், சில இடங்களில் பரமாத்மனும்
த்வம்சம் செய்கின்றனர். பரமாத்மன் கொடுத்த வரத்திற்கு எவ்வித பிரச்னை / நஷ்டம்
இல்லை என்று பாகவதாதி வசனங்களில் இருப்பதால், அந்த ஆதாரங்களின் மேல், இந்த அர்த்தம் இங்கு
எழுதப்பட்டிருக்கிறது.
அனபிமத கர்மப்ரவஹதொளகெ
அனிமேஷாதி சமஸ்தசேதன
கணவிஹுது தத்பலகளுண்ணதெ ஸ்ருஷ்டிசுவ முன்ன |
வனிதெயிந்தொடகூடி கருணா
வனதி நிர்மிஸெ தம்ம தம்மய
அனுசிதோசித கர்மபலகள உணுத சரிசுவரு ||26
ஸ்ருஷ்டிசுவ முன்ன = ஜீவர்களை ஸ்ருஷ்டிக்குக் கொண்டு
வரும் முன்னர்
ஆனபிமத கர்ம ப்ரவஹதொளகெ = அவரவர்கள் தத்தம் கர்மங்கள்
இத்தகையது என்று தெரியாமல், அந்த கர்மங்களை செய்ய விரும்பாமல்,
தத்பலகளுணதெ = அந்த கர்ம பலன்களை அனுபவிக்காமல்
அனிமிஷாதி = தேவதைகளே முதலான
சமஸ்த சேதனகணவிஹுது = அனைத்து ஜீவராசிகளும்
இருக்கின்றன.
வனிதெயிந்தொடகூடி = ஸ்ரீலட்சுமி தேவியருடன் சேர்ந்து
கருணாவனதி = கருணா சமுத்திரன்
நிர்மிஸெ = ஸ்ருஷ்டிக்க
தம்ம தம்மய = தத்தம்
அனுசிதோசித கர்மகள = நல்ல மற்றும் கெட்ட (அல்லது
புண்ய பாவங்களை) கர்மங்கள், இவற்றை
உணுத = அதன் பலன்களை உண்டு
சரிசுவரு = பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்கி
நகர்வார்கள்.
ஜீவர்கள் ஸ்ருஷ்டிக்கு வருவதற்கு முன்னர், அனாதி காலத்திலிருந்து வரும் கர்மத்திற்கு கட்டுப்பட்டு இருந்தாலும், அந்த கர்மங்களை செய்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. கர்மபலன்களை
அனுபவிப்பதில்லை. தம் யோக்யதை இத்தகையது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இத்தகைய
ஜீவர்கள் ஸாத்விக, ராஜஸ,
தாமஸ பேதத்தினால், தேவதைகள், தைத்யர்கள், மனிதர்கள் முதலான ஜாதியில் பிறந்து, கர்மங்களை செய்வதற்கு
தகுதியானவர்கள் பலர் இருக்கின்றனர். கருணா சமுத்திரனான ஸ்ரீஹரி, தன் மனைவியான ரமாதேவியுடன் சேர்ந்து, தேவ தைத்ய மனுஷ்யாதிகளை
ஸ்ருஷ்டிக்க, அவரவரின் யோக்யதைக்கேற்ப, புண்ய பாபாதி கர்மங்களை செய்து, பலன்களை ஏற்றுக் கொண்டு, பூமி, ஸ்வர்க்க, நரகாதிகளில் சஞ்சரிக்கின்றனர்.
ஜல்லடிய நெளலந்தெ தோர்புது
எல்லகாலதி பவதசௌக்யவு
எல்லி பொக்கரு பிடதெ பெம்பத்திஹுது ஜீவரிகெ |
ஒல்லெனெந்தரெ பிடது ஹரி நி
ர்மால்ய நைவேத்யவனு புஞ்சிஸு
பல்லவரகூடாடு பவதுக்ககள நீடாடு ||27
ஜல்லடிய நெளலந்தெ = சல்லடையின் நிழலைப் போல
தோர்புது = தெரிகிறது
எல்ல காலதி = ஸ்ருஷ்டி ஸ்திதி முதலான அனைத்து
காலங்களிலும்
பவதசௌக்யவு = சம்சார சுகமானது
எல்லி பொக்கரு பிடதெ = எங்கு சென்றாலும் விடாது
பெம்பத்திஹுது ஜீவரிகெ = ஜீவர்களை துரத்தும்
ஒல்லெனெந்தரெ பிடதெ = வேண்டாம் என்றாலும் விடாமல்
ஹரி நிர்மால்ய நைவேத்யவனு புஞ்சிஸு = ஸ்ரீஹரிக்கு
சமர்ப்பித்த நிர்மால்யங்களை (பூ, துளசி, தீர்த்தம்), நைவேத்தியங்களை எடுத்துக் கொள்
பல்லவரகூடாடு = ஞானிகளுடன் பழகு
பவதுக்ககள நீடாடு = இந்த சம்சார துக்கத்தினை தாண்டு.
இந்த சம்சார சுகமானது சல்லடையின் நிழலைப் போல மிகவும்
அத்யல்ப சுக, மிகவும் அதிகமான துக்கங்களைக் கொண்டதாகும். ஆகையால், பாகவத 7ம் ஸ்கந்தம் 9ம் அத்தியாயத்தில், பிரகலாதன் ஸ்தோத்திரம்
செய்யும்போது:
கண்டோயனேன கரயோரிவ துக்க துக்கம் ||45
த்ரஸ்தோஸ்ம்யஹம் க்ருபண வத்ஸல துஸ்ஸஹோக்ர
ஸம்சார சக்ரகதனாத்ம்யஷ தாம் ப்ரணேத: || 16
யஸ்மாத்ப்ரியாப்ரியவியோக ஸயோகஜன்ம ஷோகாக்னினா சகல
யோனிஷு தஹ்யமான: ||
துக்கௌஷதம் ததபி துக்கமதத்தியாஹம் பூமன் ப்ரமாமி வத
மே தவ தாஸ்ய யோகம் ||17
கையில் அரிப்பு வரும்போது, அதை கொஞ்சம் சொறிந்து கொண்டால், சிறிது சுகமாக இருக்கும். ஆனால்
அதையே தொடர்ந்து செய்ய, வாய் விட்டு அழுமாறு துக்கம்
அதிகமாகும். அத்தகைய சுக துக்கங்களே சம்சாரத்தில் காணப்படுகிறது. ‘ஹே நரசிம்மனே! உன் இந்த பயங்கரமான ரூபத்தைக் கண்டு நான் பயப்படுவதில்லை. மஹா
உக்ரமான,
சகிக்கமுடியாத சம்சார சக்கரத்தில் சிக்கி, எங்கு கஷ்டப்பட வேண்டி வருமோ என்று அந்த ஒன்றிற்கே நான் மிகவும்
பயப்படுகிறேன். அதில் அதிக துக்கம் என்னவெனில், எந்தப் பொருள் நமக்கு மிகவும் இஷ்டம் என்று, நாம் அதை விடக்கூடாது என்றிருக்கிறோமோ, அதுவே நம்மை விட்டுப் போகிறது. எது நமக்கு வேண்டாம் என்று நாம்
நிராகரிக்கிறோமோ, அது நம்மை விட்டுப் போவதில்லை.
இதைத்தவிர, பிறப்பு இறப்பு போன்ற துக்கங்கள்.
இப்படி எந்த யோனியில் பிறந்தாலும், சோக அக்னியில் தகித்து, கஷ்டத்தையே படவேண்டும். அந்த துக்க பரிகாரத்திற்கு ஏதாவது ஒரு வழி செய்தாலும், அதிலிருந்தும் துக்கமே வருகிறது. ஆகையால், இந்த சம்சாரத்திற்கு பயந்து நான் உன்னிடம் முறையிடுகிறேன். ஹே பிரபோ! உன்
தாஸ்யத்தைக் கொடுத்து என்னை காத்தருள்வாய்.’ என்று வேண்டிக்கொண்டான்.
ஆகையால், தாசார்யர் சம்சாரம் மிகவும்
துக்கமயமானது என்றார். இதனை உடனடியாக தீர்த்துக் கொள்வது என்பது சாத்தியமல்ல.
சுகதுக்க ரூபமான பழைய கர்மங்கள், இவன் எங்கு சென்றாலும் விடாமல்
துரத்திக் கொண்டே வரும்.
ஆகையால் தாசார்யர் ‘ப்ராசீனகர்மவிது சின்னபிடது’ என்று கூறுகிறார். ஆகையால், தற்காலிக சுகத்திற்கு ஆசைப்படாமல், நிரந்தர சுக ரூபமான முக்திக்காக, பரமாத்மனின் பாதங்களுக்கு அர்ப்பித்த துளசி, புஷ்பங்களை பயன்படுத்தி, ஹரி நைவேத்தியங்களை உண்டவாறு, சஜ்ஜனர்களின் சங்கத்தினால் காலம் கழித்தவாறு, ஹரிகதா ஸ்ரவணங்களை செய்து, சம்சாரத்திலிருந்து முக்தர்
ஆகவேண்டும் என்பது கருத்து.
நிர்மால்யங்களை பயன்படுத்துவது. நைவேத்தியங்களை
உண்பது. இந்த இரண்டு மட்டுமே அல்ல. கர, சரணாதி அனைத்து இந்திரியங்களையும்
பகவத் சேவைக்காகவே பயன்படுத்த வேண்டும் என்பது கருத்து. பாகவத 9ம் ஸ்கந்தத்தில் இந்திரியங்களை பயன்படுத்தும் விதத்தை சொல்கிறார்.
ஸவைமன: க்ருஷ்ணபதாரவிந்தயோர் வசாம்ஸி வைகுண்ட குணானு
வர்ணனே ||
கரௌஹரேர் மந்திர மார்ஜனாதிஷு ஸ்ருதீ சகாராசைதுஸத்
கதோதயே ||
முகுந்த லிங்காலய தர்ஷனே த்ருஷௌதத் ப்ருத்ய காத்ர
ஸ்பர்ஷேங்க சங்கம் ||
ப்ராணாஞ்ச தத்பாத ஸரோஜ சௌரப ஸ்ரீமத்துலஸ்யாம் ரஸனாம்
ததர்ப்பிதே ||
பாதௌஹரே: க்ஷேத்ர பதானுஸர்பணி ஷிரோஹ்யஷீகேஷ
பதாபிமந்தனெ ||
காமந்துதாஸ்யேனது காமகாம்யயா ததோத்தம ஸ்லோக
ஜனாஸ்ரயாம்ரதிம் ||
அம்பரீஷ ராஜன் இருந்த நிலையைக் கூறுகிறார்.
* மனதை கிருஷ்ணனின்
பாதாரவிந்தங்களில் வைத்திருந்தான்.
* வாக்கியத்தை வைகுண்ட நாமக
பரமாத்மனின் குணங்களை சொல்வதற்கு பயன்படுத்தினான்.
* கரங்களை பரமாத்மனின் வீட்டின்
குப்பையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தினான்.
* காதுகளை பரமாத்மனின் கதா
ஸ்ரவணத்திலும்,
* கண்களை பிரதிமாதிகளின்
தரிசனத்திற்கும்,
* பரமாத்மனின் சேவகர்களை தொடுவதற்காக,
* மூக்கினை பரமாத்மனுக்கு
சமர்ப்பித்த துளசி முதலானவற்றை முகர்வதற்கும்
* நாக்கினை பரமாத்மனின்
நைவேத்தியங்களை உண்பதற்கும்
* பாதங்களை ஸ்ரீஹரியின் தீர்த்தக்ஷேத்திர
சஞ்சாரத்திற்கும்
* தலையை ஹ்ருஷிகேசனின் பாதங்களில்
நமஸ்காரம் செய்வதற்கும்
பயன்படுத்தினான்.
* காமதன்னு என்றால் விருப்பத்தை
பரமாத்மனின் தாஸ்யத்தில் வைத்திருந்தான்.
ரதிசுக என்றால், உத்தம ஸ்லோகனான ஸ்ரீபரமாத்மனின் பக்த ஜனர்களின் சகவாசத்தினாலேயே சுகத்தை
அடைந்திருந்தான் என்று சொல்கிறார். இப்படி அனைத்து இந்திரியங்களையும் பகவத்
சேவைக்கே பயன்படுத்தினான் என்று அறிய வேண்டும்.
குட்டி கொயிதுதனட்டு இட்டுத
சுட்டு கொட்டுத முட்டலக ஹி
த்திட்டு மாள்புது விட்டலுண்டுச்சிஷ்ட சஜ்ஜனர
பிட்டு தன்னய ஹொட்டெகோசுக
தட்டனுணுதிஹ கெட்ட மனுஜர
கட்டி ஒய்தெம பட்டண தொளொத்தட்ட லிடுதிஹரு ||28
கொய்துதன = நெல் பறித்த பிறகு
குட்டி = அதனை புடைத்து, அரிசி எடுத்த பிறகு
அட்டு = சமையல் செய்து
இட்டத = நைவேத்தியத்திற்கு வைத்ததை
சுட்டு = வைஸ்வதேவம் செய்து
கொட்டத = பிராமண அந்தர்யாமியான ஸ்ரீபரமாத்மனுக்கு
சமர்ப்பண்ம் செய்ததை, பிராமணர்களுக்கு உணவு உண்ணக் கொடுத்த பின் அதன் மிச்சத்தை
புஞ்சிஸலு = நாம் உண்ண
விட்டல = ஸ்ரீஹரி உண்ட
உச்சிஷ்ட = சேஷ (மிச்சம்)
சஜ்ஜனர = பகவத் பக்தர்களின்
அக = பாவங்களை
ஹிட்டிட்டுமாள்புது = பொடிப்பொடி ஆக்குவது
பிட்டு = நைவேத்ய வைஷ்வதேவ இல்லாமல், அதிதிகளுக்கு வைக்காமல், அப்படியே
உணுதிய = உண்ணும்
கெட்டமனுஜர = கெட்டவர்களை
கட்டி ஒய்து = கட்டி இழுத்து
யம பட்டணதொளு = யம பட்டணத்தில்
ஒத்தட்டலி = ஒரு நரகத்தில்
இடுதிஹரு = போட்டு விடுவார்கள்.
நாம் சமையல் செய்யும் அன்னத்தில் 5 விதமான ஹத்யா தோஷங்கள் இருக்கின்றன.
1. நெல்லினை பறிப்பது
2. கழுவுவது
3. புடைப்பது
4. பிரிப்பது
5. வேக வைப்பது
என்னும் இந்த பஞ்ச ஸூனா தோஷங்கள் வருகின்றன. அந்த
தோஷங்களின் பரிகாரத்திற்காக, சமையல் செய்தபிறகு, தேவரின் நைவேத்தியம் செய்து, வைஷ்வதேவம் செய்ய வேண்டும். பின், அதிதிகளுக்கு உணவளித்து விட்டு, பிராமணாந்தர்கத ஸ்ரீபரமாத்மனுக்கு
அதை சமர்ப்பித்து, அந்த சேஷ அன்னத்தை, நாம் உண்டால், அந்த பாவ கர்மங்கள் அனைத்தும் பரிகாரம் ஆகின்றன.
நைவேத்ய வைஷ்வதேவ இல்லாமல் செய்த சமையலை தானே உண்டால், ‘ஆத்மார்த்தம் பாசிதமன்னம் ஆமிஷமித்குச்யதே’ தனக்காக செய்த சமையல், மாமிசத்திற்கு சமம் என்று தர்ம
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகையால், எந்த நீச மனிதனும், தான் உண்ட சமையலை உடனே தின்று விடுகிறானோ, அவனை யமதூதர்கள், திட்டி, நரகத்தில் தள்ளி விடுகிறார்கள். ஆகையால், வைஷ்வதேவ முதலானவைகளை செய்தே உண்ண வேண்டும் என்பது கருத்து.
ஜல்லடிய நெளலந்தெ பவசுக
தல்லணவகொளிசுவுது நிஸ்சய
வல்ல சாலவமாடி சக்கரெ மெத்த தெரனந்தெ |
க்ஷுல்லகர கூடாடதலெ ஸ்ரீ
வல்லபன சத்குணகணங்கள
பல்லவர கூடாடி சம்பாதிஸு பரம்பதவ ||29
ஜல்லடிய நெளலந்தெ = சல்லடையின் நிழலைப் போல
பவசுக = சம்சார சுகம்
தல்லணவ கொளிஸுவுது = துக்கமே அதிகமாக இருக்கிறது
நிஸ்சயவல்ல = அந்த சிறியதான சுகமும் நிரந்தரமல்ல
ஸாலவமாடி ச்க்கரெ மெத்த தெரனந்தெ = கடன் வாங்கி
சர்க்கரை தின்றால், அது சாப்பிடும்போது சிறிது சுகம் ஏற்படும்.
ஆனால், பின்னர் கடன்காரர் வந்து கடனைக்
கேட்கும்போது துக்கமே ஏற்படும். அதைப்போல, சம்சாரத்தில் ஸ்த்ரீயாதி போகங்களால் சிறிது சுகம் வந்தாலும், பிறகு அனந்த துக்கங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அர்த்தம்.
இத்தகைய சம்சாரத்தில்,
க்ஷுல்லகர கூடாடதலெ = அல்பமான மனிதர்களுடன் சேராமல், அல்லது, தமோ யோக்ய மக்களுடன் சேராமல்
பல்லவரகூடாடி = ஞானிகளின் சகவாசத்தை செய்தவாறு, அவர்களின் முகத்திலிருந்து ஹரிகதா ஸ்ரவணங்களைக் கேட்டவாறு
பரம்பதவ = உத்தமமான பரமாத்மனின் பரம பதவியை
சம்பாதிஸு = சம்பாதி.
சல்லடையில் ஓட்டைகள் நிறைய இருப்பதால், வெயில் அதிகமாகவும், நிழல் குறைவாகவுமே விழும்.
அதைப்போலவே, சம்சாரத்தில் துக்கம் அதிகமாகவும், சுகம் சிறிதாகவும் இருக்கும்
என்பது கருத்து. அந்த சிறிதளவு சுகமும் நிச்சயமல்ல. இதனால் உண்டாகும் சுகம்
எத்தகையது என்றால், கடன் வாங்கி சர்க்கரை தின்றால், அது சாப்பிடும்போது சிறிது சுகம்
ஏற்படும். ஆனால், பின்னர் கடன்காரர் வந்து கடனைக் கேட்கும்போது துக்கமே ஏற்படும். அதைப்போல, சம்சாரத்தில் ஸ்த்ரீயாதி போகங்களால் சிறிது சுகம் வந்தாலும், பிறகு அனந்த துக்கங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அர்த்தம். ஆகையால், அயோக்யர்களின் சகவாசத்தை, பேச்சுவார்த்தையை விட்டு, ஞானிகளின் சகவாசத்தை செய்து, ஸ்ரீலட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்
குணங்களைக் கேட்டு, பரம பதவியை சம்பாதி.
ஜாகு3மாட3தெ3 போ4க3தா3ஷெய
நீகி3 பரமனுராக3தலி வர
போ4கி3ஷயனன ஆக3ரத3 ஹெப்3பா3கி3லலி நிந்து3 |
கூகு3தலி ஷிரபாகி3 கருணா
ஸாக3ரனே ப4வரோக3பே3ஷஜ
கைகொடெ3ந்தெ3னெ பே3க3னொத3கு3வ பா4க3வதரரஸ ||30
ஜாகுமாடதெ = சோம்பல் இல்லாமல்
போகதாஷெய = அல்பமான விஷய சுக போகத்தின் ஆசையை
நீகி = விட்டு
பரமனுராகதலி = பரம பக்தியால்
வரபோகிஷயனன = உத்தமமான சர்வஷயனனான (சேஷசாயியான)
ஸ்ரீபரமாத்மனின்
ஆகரத = வீட்டின்
ஹெப்பாகிலலி நிந்து = வாயிலில் நின்று
ஷிரபாகி = நமஸ்கரித்து
கருணா சாகரனே = கருணைக்கடலே
பவரோக பேஷஜ = சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே என்று
கூகுதலி = உச்ச ஸ்வரத்தில் கூப்பிட்டால்
பாகவதரரஸ = பகவத் பக்தர்களின் பிரபுவான ஸ்ரீஹரி
பேகனொதகுவ = அதி வேகமாக வந்து அவர்களுக்கு அருள்வான்.
சம்சாரத்தில் ஆசையை விட்டு, விஷய சுகங்களைத் துறந்து, சோம்பல் இல்லாமல், பரம பக்தியுடன் சேஷசாயியான
ஸ்ரீபரமாத்மனின் வீட்டின் வாயிலில் நின்று, வணங்கி, உச்ச ஸ்வரத்தில் அவனை ‘ஹே கருணா சமுத்திரனே, பவரோக பேஷஜனே, என்னைக் காத்தருள்’ என்று வேண்டினால், பக்தர்களுக்கு அரசனான ஸ்ரீஹரி, அந்த நொடியே வந்து அவர்களைக் காப்பான்.
ஏனு கருணவோ தன்னவரலி த3
யாநிதி4கெ3 ஸத்ப4க்தஜனரதி3
ஹீனகர்மவ மாடி3த3ரு ஸரி ஸ்வீகரிஸி பொரெவ |
ப்ராணஹிம்ஸக லுப்தககெ3 ஸு
க்3ஞான ப4க்திக3ளித்து த3ஷரத2
ஸூனு வால்மீகிரிஷிய மாடி3த3 பரமகருணாளு ||31
தயாநிதிகெ = தயாநிதியான ஸ்ரீஹரிக்கு
தன்னவரலி = தன் பக்தர்களில்
ஏனுகருணவோ = என்ன கருணையோ
சத்பக்த ஜனரு = அவன் பக்தர்கள்
அதி ஹீன கர்மவ மாடிதரு = எந்த நீசமான கர்மங்களை
செய்தாலும்
ஸ்வீகரிஸி = அவற்றை ஏற்றுக்கொண்டு
பொரெவ = காப்பான்.
ப்ராணஹிம்ஸக = அனேக பிராணிகளைக் கொல்லும்; வழிகாட்டிகளான பிராமணாதி மக்களை அடித்து, அவர்களிடம் இருக்கும் பொருட்களை அபகரிக்கும்
லுப்தககெ = வேடர்களுக்கு
சுக்ஞான பக்திகளித்து = உத்தமமான ஞான, பக்திகளைக் கொடுத்து
தஷரதஸூனு = ரகுவம்சத்தில், தசரதனின் மகனாக அவதரித்த ஸ்ரீராமசந்திரதேவர்
வால்மிகிரிஷிய = அந்த வேடனை, வால்மிகி ரிஷியாக
மாடித = மாற்றிய
பரமகருணாளு = கருணைக்கடல் ஆனவன்.
தயாநிதியான ஸ்ரீஹரிக்கு தன் பக்தர்களிடம் இருக்கும்
காருண்யத்தை என்னவென்று வர்ணிப்பேன்? அவர்கள் என்ன நீச கர்மங்களை செய்திருந்தாலும், அவற்றை மன்னித்து, அந்த பாவங்களை பஸ்மம் செய்து, அவர்களைக் காப்பான். அப்படி யாரை காத்தான் என்றால், வால்மிகி ரிஷிகள் முன்பு வேடனாக இருந்தபோது, அவ்வழியில் வந்த மக்களை அடித்து, துன்புறுத்தி அவர்களிடமிருந்து பொருட்களை அபகரித்து வந்தார். வயிற்றுப்
பசிக்காக பல மிருகங்களை கொன்று வந்தார்.
இத்தகையவருக்கு திவ்ய ஞானத்தைக் கொடுத்தான். அது
எப்படியெனில், வழிப்போக்கர்களை
துன்புறுத்தும்போது, அங்கு ஒரு ரிஷி வரவும், அவரின் தரிசனத்தால் மட்டுமே அவனுக்கு சத்புத்தி பிறக்குமாறு செய்து, தனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று வேண்டிய வேடனுக்கு, அந்த ரிஷியும் அவனுக்கு உபதேசம் செய்ய இஷ்டமில்லாமல் ராம ராம என்னும்
மந்திரத்தை மரா மரா என்று உபதேசம் செய்ய, அவனும் மரா மரா மரா என்றே ஜெபிக்கத் துவங்கினான்.
அதன் மூலமாகவே பரமாத்மன் அவனுக்கு பரமானுக்கிரகத்தை
செய்து, திவ்ய ஞானத்தைக் கொடுத்து, இறுதியில் நாரதரின் முகத்திலிருந்து ராம சரித்திரத்தைக் கேட்டு, பிரம்மதேவரின் ஆணைப்படி 7 காண்ட ராமாயணத்தை இயற்றினான். அதுவே, வால்மிகி ராமாயணம் என்று பெயர் பெற்றது. இத்தகைய நீச ஜாதியில் பிறந்தவனுக்கு, இத்தகைய ஞானம் வரவேண்டுமெனில், முழுமையான பகவத் அருளைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? ஆகையாலேயே, அவனை பரமகருணாளு என்று பாடினார்.
மூட3மானவ எல்லகாலதி3
பே3டி3கொம்பி3னிதெந்து3 தைன்யதி3
பேடத3ந்த3தி3 மாடு3 புருஷார்த்த2க3ள ஸ்வப்னத3ளு |
நீடு3வரெ நின்னமலகு3ண கொ
ண்டா3டி3 ஹிக்கு3வ பா4க3வதரொட3
நாடி3ஸென்னனு ஜனும ஜனுமக3ளல்லி த3யதி3ந்த3 ||32
மூடமானவனு = அஞ்ஞானியானவன்
இனிதெந்து = இது வேண்டும், அது வேண்டும் என்று
தைன்யதி = பக்தி / மரியாதையுடன்
பேடிகொம்பனு = வேண்டுவான், ஆனால் நான் அப்படி வேண்டுவதில்லை
நீடுவரெ = நீயே கொடுப்பதானால்
புருஷார்த்தகள = தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் 4 வித புருஷார்த்தங்களை
ஸ்வப்னதலி = கனவிலும்
பேடதந்ததி = வேண்டாதவாறு செய்
ஜன்ம ஜன்மகளல்லி = ஒவ்வொரு பிறவியிலும்
மரெயதலெ = மறக்காமல்
நின்னமலகுணகொண்டாடி ஹிக்குவ = உன் தோஷமற்ற குணங்களைக்
கொண்டாடி, மகிழும்
பாகவதரொடனெ = பகவத் பக்தர்களுடன்
என்னனு = என்னை
ஆடிஸு = பழக்கத்தில் இருக்குமாறு செய்.
அஞ்ஞானிகள் மட்டுமே தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று விஷய சுகங்களை வேண்டுவார்கள். ஞானிகள் 4 புருஷார்த்தங்களில் ஒன்றான முக்தியையாவது வேண்டுவார்களா? பாகவத 3ம் ஸ்கந்தத்தில்:
ஸாலோக்ய ஸார்ஷ்டி ஸாமீப்ய ஸாரூப்யைகத்வ மித்யுத ||
தீயமானம் ந க்ருண்ஹந்தி வினாமத்ஸேவனம் ஜனா: ||
ஸாலோக்ய = பரமாத்மனின் உலகத்தில் எங்காவது ஒரு
இடத்தில் இருப்பர்
ஸார்ஷ்டி = பரமாத்மனுக்கு சமானமான செல்வத்தைப்
பெறுவது
ஸாமீப்ய = பரமாத்மனின் சமீபத்தில் வசிப்பது
ஸாரூப்ய = பரமாத்மனைப் போலவே ரூபத்தைப் பெறுவது
ஏகத்வ = பரமாத்மனின் சரீரத்தில் பிரவேசம் செய்து
ஏதாவது ஒரு அங்கத்தின் சுகத்தை அனுபவிப்பது
என்னும் 5 வித முக்தியைக் கூட தன் ஏகாந்த பக்தர்கள் வேண்டுவதில்லை. என் சேவையை மட்டுமே
வேண்டுவர் என்று, தேவஹூதிக்கு கபில நாமக பரமாத்மன்
சொல்கிறான்.
அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு குறிப்பிடுகிறார்.
விஷய சுகமாகட்டும், புருஷார்த்தமாகட்டும் உன்னை
வேண்டாதவாறு செய் என்று ஒரு வரத்தையும், உன் தோஷங்களற்ற மகிமையை கொண்டாடி வரும் பாகவதர்களின் சகவாசத்தை எப்போதும் கொடு
என்று இரு வரங்களை மட்டும் கேட்கிறார். இதிலிருந்து இந்த இரு வரங்களும் அனைவரும்
கேட்க வேண்டியதே என்று அறியவேண்டும்.
சதுரவித3 புருஷார்த்த2ரூபனு
சதுர மூர்த்யாத்மகனிரலு ம
த்திதர புருஷார்த்த2க3ள ப4யஸுவரேனு ப3ல்லவரு |
மதிவிஹீனரு அஹிகஸுக2 ஷா
ஷ்வதவிதெந்த3ரி த3னுதி3னதி3 க3ண
பதியெ மொத3லாத3ன்ய தே3வதெக3ளனெ ப4ஜிஸுவரு ||33
சதுரவித புருஷார்த்தரூபனு = தர்ம முதலான 4 வித புருஷார்த்த ஸ்வரூபனாக,
சதுர மூர்த்யாத்மனிரலு = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் 4 ரூபியான பரமாத்மன் இருக்கையில்
பல்லவரு = ஞானிகள்
மத்திரத புருஷார்த்தகள பயசுவரேனு = மற்ற
புருஷார்த்தங்களை வேண்டுவார்களா என்ன? (இல்லை என்று அர்த்தம்)
மதிவிஹீனரு = புத்தி இல்லாதவர்கள்
அஹிகஸுக = அல்பமான, தற்காலிகமான விஷய சுகங்களையே
ஷாஷ்வதவிதெந்து = இது நிரந்தரமானது என்று
அரிது = நினைத்து
அனுதினதி = தினந்தோறும்
கணபதியெ மொதலாத = கணபதி முதலான
அன்ய தேவதெகளனெ = தாரதம்யத்தில் கீழ் இருக்கும் பிற
தேவதைகளை
பஜிஸுவரு = வணங்குவார்கள்.
தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் சதுர்வித புருஷார்த்த ஸ்வரூபனான, அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் 4 ரூபாத்மகனான பரமாத்மன் இருக்கையில், ஞானிகள் இதர புருஷார்த்தங்களை வேண்டுவார்களா என்ன? புத்தி இல்லாதவர்கள், ஐஹிக சுகங்களையே நிரந்தரமானவை என்று நினைத்து, தினந்தோறும் கணபதி முதலான பிற தேவதைகளை வணங்கி, அல்பமான, தற்காலிகமான சுகத்தை
வேண்டுவார்கள். ஞானிகள் என்றும் அப்படி செய்ய மாட்டார்கள் என்பது கருத்து.
த்ருஹிண மொத3லாத3மர க3ணஸ
ன்மஹித ஸர்வப்ராணிக3ள ஹ்ரு
த்கு3ஹ நிவாஸி க3பீ4ர ஸர்வார்த்த2 ப்ரதா3யகனு |
அஹிக பாரத்ரத3லி விஹிதா
விஹித கர்மக3ளரிது ப2ல ஸ
ன்னிஹிதனாகி3த் தெ3ல்லரிகெ3 கொடு3திப்ப ஸர்வக்3ஞ ||34
த்ருஹிண மொதலாத = பிரம்மதேவரே முதலான
அமரகண = தேவதா கணங்களால்
ஸன்மஹித = பூஜிக்கப்படும்
ஸர்வபிராணிகள ஹ்ருத்குஹ நிவாஸி = அனைத்து பிராணிகளின்
இதயத்தில் வசிப்பவனான
கபீர = மஹா கௌரவத்தைக் கொண்டவனான (மரியாதைக்குரியவன்)
ஸர்வார்த்த பிரதாயகனு = ஸர்வார்த்தங்களைக் கொடுக்கும்
ஸ்வபாவம் உள்ள
சர்வக்ஞ = சர்வக்ஞனான
ஹரி = ஸ்ரீஹரி
ஸன்னிஹிதனாகி = அனைவரிலும் அந்தர்யாமியாக இருந்து
அஹிகபாரத்ரதலி = இஹ லோகத்திலும், பர லோகத்திலும்
விஹிதா விஹித கர்மகளரிது = புண்ய பாவ கர்மங்களை
அறிந்து
எல்லரிகெ = அனைவருக்கும்
சன்னிஹிதனாகித்து = அருகில் இருந்துகொண்டு
பல = பலன்களைக் கொடுக்கிறான்.
பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவனான, அனைத்து பிராணிகளின் இதய கமலத்தில் இருப்பவனான, அனைவரின் அனைத்து மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவனான, சர்வக்ஞனான, ஸ்ரீஹரி, அனைத்து பிராணிகளின் புண்ய பாப கர்மங்களை அறிந்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப, அவரவர்களில் நிலைத்திருந்து பலன்களைக் கொடுக்கிறான்.
ஒம்மெகா3தரு ஜீவரொளு வை
ஷம்ய த்3வேஷாஸுயெ இல்ல ஸு
த4ர்ம நாமக ஸந்தயிஸுவனு ஸர்வரனு நித்ய |
பி3ரம்ம கல்பாந்தத3லி வேதா3
க3ம்ய ஸ்ரீஜக3ன்னாத2 விட்ட2ல
ஸும்மனீவனு த்ரிவித3ரிகெ3 அவரவர நிஜக3திய ||35
ஒம்மெகாதரு = எந்த காலத்திலாகட்டும்
வைஷம்ய த்வேஷாஸுயெ இல்ல =
வைஷம்ய = ஒருவரிடம் அன்பு; இன்னொருவரிடம் வெறுப்பு காட்டுவது
த்வேஷ = ஒருவரை எதிரியாக நினைப்பது
அஸூயெ = வயிற்றெரிச்சல்
இல்ல = ஆகியவை இல்லை
ஸுதர்ம நாமக = சுதர்ம என்னும் பெயருள்ள ஸ்ரீஹரி
சர்வரனு = அனைவரையும்
நித்ய = எப்போதும்
ஸந்தயிஸுவனு = காப்பாற்றுவான்
பிரம்மகல்பாந்ததலி = பிரம்ம கல்பத்தின் இறுதிப்
பகுதியில்
வேதாகம்ய = வேதங்களாலும் முழுமையாக அறியப்பட
முடியாதவன்
ஸ்ரீஜகன்னாதவிட்டல = ஜகன்னாத விட்டலன்
த்ரிவிதரிகெ = மூன்று வித ஜீவராசிகளுக்கும்
அவரவர நிஜகதிய = அவரவர்களின் தகுதிக்கேற்ப கதியை
ஸும்மனீவனு = அவரவர்களுக்கு தெரிவிக்காமல் மௌனத்துடன்
கொடுக்கிறான்.
பரமாத்மனுக்கு எந்த காலத்திலும், ஜீவர்களிடம் த்வேஷமோ, அஸூயையோ, வஞ்சனையோ இல்லை. அனைவரையும்
சமமாகவே அறிந்து, அவர்களைக் காக்கிறான்.
அப்படியெனில், தமோயோக்யர்கள், முக்தி யோக்யர்கள் இவர்களின் கதி என்ன? இவர்களில் வேறுபாடு என்ன? என்றால், தன் வஞ்சனையால் பலன்களின் வேறுபாடு
செய்வதில்லை. அவரவர்கள் செய்யும் புண்ய, பாவ கர்மங்களை அனுசரித்து, முக்தி யோக்யர்களுக்கு முக்தியையும், மத்யமர்களுக்கு நித்ய சம்சாரத்தையும், தமோ யோக்யர்களுக்கு தமஸ்ஸையும், மூவரின் யோக்யதைக்கேற்ப, பிரம்ம கல்பத்தின் இறுதியில், அவரவர்களுக்குக் கொடுக்கிறான். இத்தகைய ஸ்ரீஜகன்னாத விட்டலன், வேதங்களாலும் கூட முழுமையாக அறியப்பட முடியாத மகிமைகளைக் கொண்டவன்.
பக்தாபராதசஹிஷ்ணு சந்தி என்னும் 22ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment