ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, August 25, 2020

குண தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 20 : குண தாரதம்ய சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

சந்தி ஸூசனை: (சந்தியின் நோக்கம்):

 

சர்வேஷாஞ்ச ஹரிர் நித்யம் நியந்தா தத்வஷா: பரே |

தாரதம்யம் ததோஞ்ஞேயம் சர்வோச்சத்வம் ஹரேஸ்ததா ||

ஏதத்வினா ந கஸ்யாபி விமுக்தி: ஸ்யாத்கதஞ்சன ||

 

மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்வது:

அனைத்து பிராணிகளுக்கும் ஸ்ரீபரமாத்மனே ப்ரேரகன். ரமா பிரம்மாதி அனைவரும் அவனுக்கு கீழே. ஆகையால், பரமாத்மனை சர்வோத்தமன் என்று அறிந்து, ரமா பிரம்மாதிகளில் தாரதம்யத்தை அறியவேண்டும். இதனை அறியாமல் யாருக்கும் முக்தி கிடைப்பதில்லை என்று கூறியிருக்கிறார். ஆகையால், பரமாத்மனிலிருந்து துவங்கி மனுஷ்யோத்தமர் வரைக்கும் யார் யார் எவ்வளவு குணங்கள் கம்மியானவர்கள் என்னும் தாரதம்ய ஞானம் மிகவும் அவசியம். அதையே குண தாரதம்ய சந்தி என்னும் இந்த சந்தியில் சொல்லியிருக்கிறார்.

 

முதல் இரு பத்யங்களில், இந்த குண தாரதம்ய சந்தியை, தம் அந்தர்யாமி பகவந்தனின் அருளால் மட்டுமே முடிப்பதற்கு சாத்தியமே தவிர, தன் முயற்சியால் மட்டும் சாத்தியம் இல்லை என்று அறிந்து, பரமாத்மனை வணங்கியவாறு, ஸ்ரீபரமாத்மன் சர்வோத்தமன் என்பதை நிரூபிக்கிறார்.

 

ஸ்ரீத4ரா து3ர்கா3 மனோரம

வேத3முக2 ஸுமன3மா

ராதி3த பதா3ம்போ4ஜ ஜக33ந்தர் ப3ஹிர்வ்யாப்த |

கோ34ர ப2ணிவராதபத்ர நி

ஷே24தூ3ர விசித்ரகர்ம ஸு

போ44 ஸு2மயகா3த்ர பரமபவித்ர ஸுசரித்ர ||1

 

ஸ்ரீதரா துர்கா மனோரம = ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி என்னும் மூவரின் மனதிற்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவன். அதாவது, அந்த மூவருக்கும் கணவன் என்று அர்த்தம்.

வேதமுக = பிரம்மதேவரே முதலான

சுமனஸகண = தேவதா கணத்தினால்

ஸமாராதித பதாம்போஜ = நன்றாக வணங்கப்படக்கூடிய கால்களைக் கொண்டவன்

ஜகதந்தர்பஹிர்வ்யாப்த = ஜகத்தில் உள்ளேயும் வெளியேயும் வியாப்தனாக இருப்பவன்

கோதர = பூ மண்டலத்தை தன் தலையில் தாங்கியவன்

பணிவர = சர்வஸ்ரேஷ்டனான சேஷதேவரின் தலைகள் என்னும்

ஆதபத்ர = குடை உள்ளவன்

நிஷேத தோஷ விசித்ர கர்ம = செய்யக்கூடாத செயல்கள், பாவம் தரக்கூடிய செயல்கள் என்று எவ்வித பிரச்னைகளும் இல்லாத விசித்திரமான செயல்களைக் கொண்டவன்.

சுபோத சுகமய காத்ர = உத்தமமான ஞானானந்த ஸ்வரூபம் கொண்டவன்

பரம பவித்ர சுசரித்ர = பரம மங்களகரமான உத்தமமான சரித்திரங்களைக் கொண்டவன்

 

ஸ்ரீபூதுர்கா என்னும் மூன்று ரூபங்களாலான ரமாதேவியருக்கு பதியானவன். பிரம்மாதி தேவதா கணத்தால் நன்றாக பூஜிக்கப்படுவதான பாத கமலங்களைக் கொண்டவன். ஜகத்தின் உள்ளேயும் வெளியேயும் வியாப்தனாக இருப்பவன். ஆயிரம் தலைகளுள்ள சேஷதேவர், அந்த ஒரு தலையின் மேல் ஒரு கடுகினைப் போல உள்ள இந்த பூமண்டலம், யாரின் தலையின் மேல் ஷோபித்திருக்கிறதோ, அத்தகைய சேஷதேவரின் தலைகளே, பரமாத்மனுக்கு வெள்ளைக் குடையாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

 

இது செய்யக்கூடாதது, இது செய்தால் தோஷம் வருவது என்ற கர்மங்களெல்லாம் பரமாத்மனுக்கு இல்லை. யே தோஷா இதரத்ராபி தேகுணா: பரமே மதா:என்று மற்றவர்களில் எதெது தோஷங்களாக தெரிகிறதோ, அவை அனைத்தும் பரமாத்மனிடம் குணமாகவே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்று ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பதால், கிருஷ்ணாவதாரத்தில், பிறர் மனைவிகளான கோபிகா ஸ்த்ரீயர்களுக்கு தன் அங்க-சங்கத்தைக் கொடுத்திருக்கிறான்.

 

பர-ஸ்த்ரி-கமனம் என்பது மிகப்பெரிய தோஷம் என்று சாஸ்திரங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், பரமாத்மனின் கோபிகா ஸ்த்ரீயர்களின் கதையை யார் கேட்டு, படித்து, சொல்கிறார்களோ அவர்களுக்கு பரம மங்களத்தையே கொடுக்கிறான். யாரைக் கொல்வது மகா பாதகம் என்று அறிகிறோமோ, அத்தகைய கம்சனைக் கொன்ற கிருஷ்ணனின் கதை, புண்ய சரித்திரம் எனப்படுகிறது. ஆகையால், அவன் விசித்ர கர்மன் எனப்படுகிறான். உத்தம ஞானானந்த ஸ்வரூபன். அவனின் கதைகளை கேட்டல், படித்தல் ஆகியவற்றை செய்வோர், அனைத்து பாவங்களிலிருந்து முக்தர்களாகி, பரம பவித்ரராகி திவ்ய கதியை அடைகின்றனர்.

 

நித்ய நிர்மல நிக3மவேத்3யோ

த்பத்தி ஸ்தி2தி லய தோ3ஷவர்ஜித

ஸ்துத்ய பூஜ்ய ப்ரஸித்34 முக்தாமுக்த க3ஸேவ்ய |

த்யகாம ஷரண்ய ஷாஸ்வத

ப்4ருத்யவத்ஸல ப4ய நிவாரண

அத்யதி4ம்ப்ரியதம ஜக3ன்னாத2 மாம் பாஹி ||2

 

நித்ய நிர்மல = எப்போதும் தோஷங்கள் அற்றவனான

நிகமவேத்ய = வேதங்களால் அறியப்படுபவன்; அல்லது,

நித்ய நிர்மல நிகம வேத்ய = நித்ய நிர்தோஷமான, அபௌருஷேயமான வேதங்களால் அறியப்படுபவன் (என்று ஒரே பதமாகவும் அர்த்தம் கொள்ளலாம்).

உத்பத்தி ஸ்திதி லய தோஷவர்ஜித = பிறப்பு, வளர்தல், இறப்பு ஆகிய தோஷங்கள் இல்லாதவன்

ஸ்துத்ய பூஜ்ய = அனைவராலும் வணங்கப்படுபவன்

ப்ரசித்த = சர்வ அந்தர்யாமியானதால் பரமாத்மன் என்று புகழ் பெற்றவன்.

முக்தாமுக்த கணஸேவ்ய = முக்தர்களாலும், அமுக்தர்களான பிரம்மாதி அனைத்து தேவதா கணங்களாலும், மனுஷ்யோத்தமர் முதலான யோக்ய கணத்தவர்களாலும் வணங்கப்படுபவன்

ஸத்யகாம = சத்ய சங்கல்பன்

ஷாஷ்வத = நிரந்தரமானவன்

ஷரண்ய = வணங்கப்பட தகுதியானவன்

பக்தவத்ஸல பய நிவாரண = பக்தவத்ஸலன், பக்தர்களின் பயங்களை போக்குபவன்

அத்யதிக சம்ப்ரியதமனு = மிகுந்த அதிகமான அன்பு கொண்டவன்

இத்தகைய ஜகன்னாத

மாம் = என்னை

பாஹி = காப்பாற்று

 

பதங்களின் பொருளே விளக்கமாக இருப்பதால், மறுபடி அதை விளக்கவில்லை.

 

பரமபுருஷன ரூப கு3ணவனு

ரிஸி காம்ப3ளு ப்ரவஹத3ந்த3தி3

நிருபமளு நிர்து3ஷ்ட ஸு2ம்பூர்ண ளெனிஸுவளு |

ஹரிகெ3 தா4மத்ரயவெனிஸி ஆ

4ரண வனாயுத43ளாகி3

த்33ரிக3ளனு ம்ஹரிஸுவளு அக்‌ஷரளெனிஸிகொண்டு3 ||3

 

பரமபுருஷன = க்‌ஷர அக்‌ஷர புருஷர்களில் சிறந்தவனான ஸ்ரீபரமாத்மனின்

ரூப குணவனு = அனந்தானந்த குணங்களை

அரஸி = பட்டத்து ராணியான ரமாதேவி

ப்ரவஹதந்ததி = கங்காதி மகா நதிகளின் பிரவாகத்தைப்போல (அதாவது முன்னர் சென்ற நீர் எப்படி திரும்ப வராதோ; அதைப்போல ஒரு முறை கண்ட குணங்களை மறுபடி காணாமல் புதுப்புது குணங்களாகப் பார்ப்பது)

காம்பளு = காண்கிறாள்

நிருபமளு = ஒப்புமை இல்லாதவள்

நிர்துஷ்ட சுக சம்பூர்ணளெனிஸுவளு = தோஷங்கள் அற்றவள்; சுக சம்பூர்ணள்; எனப்படுகிறாள்

ஹரிகெ = பதியான ஸ்ரீபரமாத்மனுக்கு

தாமத்ரயவெனிஸி = ஸ்வேதத்வீப அனந்தாஸன வைகுண்ட என்னும் மூன்று விதமான வீடுகள் என்று நினைத்து

ஆபரண வசனாயுதகளாகி = ஸ்ரீபரமாத்மன் தரித்திருக்கும் ஆபரணங்கள், சக்ர, கதா முதலான ஆயுதங்களாகவும் இருந்து

அக்‌ஷரனெனிஸிகொண்டு = அழிவு இல்லாதவளாகையால் அக்‌ஷர என்று அழைத்துக் கொண்டு

அரிகளனெ = எதிரிகளை

ஸம்ஹரிஸுவளு = சம்ஹாரம் செய்கிறாள்.

 

பரமாத்மனின் பட்டத்து அரசியான ரமாதேவி பரமாத்மனின் ரூபகுணங்களை, கங்கா பிரவாகத்தில் எப்படி ஒரு முறை பாய்ந்த நீர் மறுபடி காணப்படுவதில்லையோ, எப்படி புதிய நீரே ஒவ்வொரு முறையும் காணப்படுகிறதோ, அப்படியே, எவ்வளவு ரூப குணங்களைக் கண்டாலும் மேலும் அபரிமிதமான குணரூபங்களை தேடியவாறு பார்த்திருக்கிறாள். பரமாத்மனுக்கு ஒப்புமை கொடுப்பதற்கு எப்படி சாத்தியம் இல்லையோ, அப்படியே ரமாதேவியருக்கும் ஒப்புமை கொடுக்க சாத்தியம் இல்லை.

 

எப்படியெனில், ரமாதேவியரைவிட பரமாத்மன் உத்தமன். பிரம்மாதிகள் அனைவரும் அதமர். அப்படி இருக்கையில், இவளுக்கு சமம் யார்? யாரும் இல்லை. பரமாத்மனின் அருளால், பிரம்மாதிகளைவிட, மிகவும் அதிகமான ஆனந்தத்தை அடைந்து கொண்டிருக்கிறாள். பரமாத்மன் வசிக்கும் ஸ்வேதத்வீபாதி மூன்று லோகங்களிலும், வீடுகளாக தாமே நிலைத்திருக்கிறார். பரமாத்மன் தரித்திருக்கும் வஸ்திரங்கள், ஆடைகள், ஆபரணங்கள் இவை அனைத்தும் ரமா ஸ்வரூபமே ஆகிறது. அதாவது, அந்தந்த ரூபங்களால் ரமாதேவியரே இருந்து, பகவந்தனின் சேவை செய்தவாறு, கதை, சக்ராதி ரூபங்களில் இருந்து, எதிரிகளை சம்ஹரிக்கிறாள். எப்போதும் அழிவு இல்லாத காரணத்தால் அக்‌ஷர புருஷஎன்று ரமாதேவி அழைக்கப்படுகிறார்.

 

ஈதகி3ந்தானந்த கு3ணத3லி

ஸ்ரீதருணி தா கடி3மெ எனிபளு

நித்யமுக்தளு நிர்விகாரளு த்ரிகு3ணவர்ஜிதளு |

தௌ3தபாப விரிஞ்சி பவனர

மாதெ எனிப மஹாலகுமி வி

க்2யாதளாகி3ஹளெல்ல காலதி3 ஸ்ருதி புராணதொ3ளு ||4

 

நித்யமுக்தளு = சில காலம் அமுக்தராக இருந்து, பிரம்மாதிகளைப் போல முக்தர் ஆனவள் என்றில்லாமல், எப்போதும் முக்தள் என்று பெயர் பெற்றவள்

நிர்விகாரளு = விகாரம் (தோற்ற வளர்ச்சி, குறைவு) இல்லாதவள்

த்ரிகுண வர்ஜிதளு = சத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு கட்டுப்படாதவள்

தௌதபாப விரஞ்சி பவனர = பாவங்கள் அற்றவர்களான பிரம்மா வாயுகளுக்கு

மாதெயெனிப = தாய் எனப்படுபவள்

ஸ்ரீதருணி = யௌவனத்தால் கூடிய ஒளி பொருந்தியவள்

மஹாலகுமி = மகா லட்சுமிதேவி

எல்லகாலதி = அனைத்து காலங்களிலும்

ஈதனிந்த = இந்த பரமாத்மனைவிட

அனந்தகுணதலி = அனந்த குணங்களில்

கடிமெ எனிபளு = தாரதம்யத்தில் குறைவு எனப்படுகிறாள்

ஸ்ருதி புராணதொளு = வேதங்களிலும், புராணங்களிலும்

விக்யாதளாகிஹ = இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

 

பரமாத்மனைவிட அனந்த குணங்களில் குறைவு எனப்படுகிறார் ரமாதேவி. இவர் நித்ய முக்தர் என்றும், நிர்விகாரர் என்றும் பெயர் பெற்றவர். குணாத்மகரே ஆனாலும், அந்த குணங்களால் கட்டுப்பட்டவர் அல்ல. பாவங்கள் இல்லாதவர்களான பிரம்ம வாயுகளுக்கு தாய் எனப்படுகிறார். இப்படியாகவே, அனைத்து வேதங்களிலும், புராணங்களிலும் புகழப்பட்டிருக்கிறார்.

 

1மலம்ப4வ பவனரீர்வரு

மரு மவர்த்திக3ளு ருத்3ரா

த்3யமர 3ஸேவிதரு அபரபி3ரம்ம நாமகரு |

யமளரிகெ3 மஹலகுமி தானு

த்தமளு கோடி சஜாதிகு3ணதி3

ந்த3மித ஸுவிஜாத்ய த4மரெனிபரு பி3ரம்ம வாயுக3ளு ||5

 

கமலசம்பவ = பிரம்மதேவர்

பவன = வாயுதேவர்

ஈர்வரு = இருவரும்

சமரு = சமமானவர்கள்

சமவர்த்திகளு = பகவந்தனின் குணங்களை சமமாக அறிந்து, சமமாக உபாசனை செய்கிறார்கள்

ருத்ராத்யமரகண சம்ஸேவிதரு = ருத்ராதி தேவதைகளால் நன்றாக சேவை பெற்றுக் கொள்வதற்காக

அபரபிரம்ம நாமகரு = பிரம்மனான பரமாத்மனுக்கு இரண்டாவதாக ஸ்ருஷ்டியாதிகளை செய்வதால், பரபிரம்ம என்னும் பெயர் பெற்றிருக்கார்கள்.

யமளரிகெ = பிரம்ம வாயு என்னும் இந்த இருவருக்கு

மஹலகுமி தானு = மகாலட்சுமிதேவியரான தான்

கோடி சஜாதி குணதி = லட்சுமிதேவியரின் குணங்களின் ஜாதியைச் சேர்ந்த கோடி குணங்களால்

உத்தமளு = உத்தமர் எனப்படுகின்றனர்

பிரம்ம வாயுகளு

மித சுவிஜாத்யதமரெனிபரு = லட்சுமிதேவியர் எவ்வளவு குணங்களால் உத்தமர் என்று சொல்லியிருக்கிறாரோ, அவ்வளவு ; அதாவது கோடி குணங்களால். விஜாதி என்றால் லட்சுமிதேவியரின் குணங்களின் அனைத்து ஜாதிகள். இதுவே விஜாதி என்று பெயர். இப்படி, கோடி விஜாதி ரூபங்களால் குறைவானவர்கள்.

 

வாயுதேவரே அடுத்த கல்பத்தில் பிரம்மபதவிக்கு வரப்போகிறார். பிரம்மதேவரிடம் இருக்கும் குணங்கள் அனைத்தும் வாயுதேவரிடமும் இருக்கிறது. ஆனால், ருஜுகணத்தில் சேர்ந்தவர்களில், 99ம் கல்பத்தில் வாயுதேவராகி அவதார த்ரயத்தினால், பகவத் சேவாதிகளை செய்து, 100வது கல்பத்தில் பிரம்ம பதவியை அடைவார். முந்தைய கல்பத்து வாயுதேவரே தற்போது பிரம்மதேவராக இருக்கிறார். ஆகையால், வாயுதேவர் பிரம்மதேவரைவிட ஒரு கல்ப சாதனை மட்டுமே குறைவானவர்; மற்ற அனைத்து குணங்களிலும் பிரம்மதேவருக்கு சமமானவரே ஆவார்.

 

ருத்ராதி அனைத்து தேவதைகளைவிட உத்தமர். பரபிரம்ம பரமாத்மன் என்றும், அதே பரபிரம்ம பிரம்ம வாயுகள் என்றும் பெயர் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இருவரை விடவும், கோடி சஜாதி குணங்களால், ரமாதேவியர் உத்தமர். சஜாதி என்றால் சமமான ஜாதி என்று அர்த்தம். விஜாதி என்றால் அந்த ஜாதி இல்லாமல் வேறு ஜாதி என்று பொருள். ரமாதேவியரிடம் இருக்கும் குணங்கள், ரமாதேவியரின் யோக்யதைக்குத் தக்க அதே ஜாதியை சேர்ந்த குணங்களே கோடி குணங்கள் பிரம்ம வாயுகளைவிட அதிகமாக இருக்கிறது என்பது கருத்து.

 

மிதசுவிஜாத்யதமரு = ரமாதேவியரில் எவ்வளவு குணங்கள் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு குறைவு என்று அர்த்தம். அதாவது கோடி குணங்களால் பிரம்மவாயுகள், லட்சுமிதேவியரை விட குறைவு என்று அர்த்தம். குணங்கள் விஜாதியமானவை. லட்சுமிதேவியரின் குணங்களின் ஜாதிக்கு சேர்ந்த குணங்கள் அல்ல என்பது கருத்து.

 

பதிக3ளிந்த3 ரஸ்வதி பா4

ரதிக3ளத3மரு நூருகு3ணபரி

மித விஜாத்3யவரரு ப3ல ஞானாதி3 கு3ணதி3ந்த3 |

அதிஷயளு வாக்தே3வி ஸ்ரீபா4

ரதிகெ3 பத33 ப்ரயுக்த விதி4மா

ருதரவோல் சிந்திபரு த்ப4க்தியலி கோவித3ரு ||6

 

பதிகளிந்த = பிரம்ம வாயுகளைவிட

ஸரஸ்வதி பாரதிகளு = சரஸ்வதி பாரதிதேவியர்

அதமரு = குறைந்தவர்கள்

எவ்வளவு குணங்களில்? எத்தகைய குணங்களில்?

பல ஞானாதி குணகளிந்த = பல, ஞான முதலான ஒவ்வொரு குணங்களிலும்

பிரம்ம வாயுகளின் குணங்களின் ஜாதியைச் சேர்ந்த,

நூருகுணபரிமித = நூறு குணங்கள் குறைவு

விஜாத்யமரரு = விஜாதி குணங்களில் குறைவானவர்

வாக்தேவி = சரஸ்வதி தேவியர்

ஸ்ரீபாரதிகெ = ஸ்ரீபாரதி தேவியரைவிட

விதிமாருதரவோல் = பிரம்ம வாயுகளைப் போல

பதத ப்ரயுக்த = அதிகாரத்தில்

அதிஷயளு = கொஞ்சம் அதிகமானவர்

இப்படியாக

ஸத்பக்தியலி = உத்தமமான பக்தியால்

கோவிதரு = ஞானிகள்

சிந்திபுது = சிந்திக்க வேண்டும்.

 

பிரம்ம வாயுகளைவிட அவர்களின் மனைவியரான சரஸ்வதி பாரதியர் பலத்திலும், ஞானத்திலும் 100 விஜாதி குணங்களால் குறைவானவர்கள். பிரம்மதேவர் எப்படி வாயுதேவரைவிட ஒரு கல்ப சாதனை அதிகம் மற்றும் பதவியில் சிறிது உத்தமரோ, அதுபோலவே வாயுதேவரின் பத்னியான பாரதி தேவியரைவிட, பிரம்மதேவரின் மனைவியான சரஸ்வதி தேவியர், பதவியில் சிறிது உத்தமர் என்று ஞானிகள் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

 

23ப ப2ணிபதி ம்ருட3ரு ம வா

ணிகெ3 ஷதகு3ணாவரரு மூவரு

மிகி3லெனிஸுவனு ஸேஷ பத3தி3ந்த3லி த்ரியம்ப3ககெ3 |

நக34ரன ஷண்மஹிஷியரு ப

ன்னக3 விபூ4ஷணகை3து3 மேனகெ

மக3ளு வாருணி ஸௌபரணிக3ளி க3தி4கவெரடு3 கு3||7

 

கக பணிபதி ம்ருடரு = கருட, சேஷ, ருத்ரர் ஆகியோர்

சம = சமமானவர்கள்

மூவரு = இந்த மூன்று பேரும்

வாணிகெ = சரஸ்வதி தேவிக்கு

ஷதகுணாதமரு = 100 குணங்களால் குறைவானவர்கள்

த்ரியம்பககெ = ருத்ரதேவருக்கு

சேஷ = சேஷதேவர்

பததிந்தலி = (ருத்ரதேவரே அடுத்த கல்பத்தில் சேஷதேவராக ஆகிறார்) பதவியால்

மிகிலெனிஸுவரு = உத்தமர் எனப்படுகிறார்

நகதரன = கோவர்த்தன மலையை தூக்கிய ஸ்ரீகிருஷ்ணனின்

ஷண்மஹிஷியரு = ஜாம்பவதி முதலான 6 பேர் மனைவியர்

பன்னக விபூஷணன = சர்ப்பத்தை தரித்தவனான ருத்ரதேவருக்கு

ஐது = ஐந்து குணங்கள் குறைவானவர்கள்

மேனகெ மகளு = மேனகையின் மகளான பார்வதி தேவி

வாருணி = வருணனின் மகளாகையால் வாருணி என்று பெயர் பெற்ற சேஷதேவரின் மனைவி

ஸௌபரணிகளிகெ = கருடனின் மனைவியான சௌபர்ணிதேவி

இவர்களைவிட

அதிக எரடு குண = இரு குணங்கள் அதிகம்.

 

கருட, சேஷ ருத்ரர்கள் சமமானவர்கள். சரஸ்வதி பாரதி தேவியரைவிட 100 குணங்கள் குறைவானவர்கள். இந்த மூவரும் சமமானாலும், ருத்ரதேவரை விட சேஷதேவர் பதவியின்படி கொஞ்சம் அதிகமானவர். ருத்ரரோ, 39 கல்ப சாதனைகளை செய்துகொண்டு, ருத்ரபதவியை அடைந்து, அடுத்த கல்பத்தில் சேஷ பதவிக்கு வரப்போகிறவர் ஆகையால், ருத்ரதேவர், சேஷதேவரைவிட சிறிது குறைவானவர். கிருஷ்ணனின் மனைவியரான ஜாம்பவதி, மித்ரவிந்தா, நீலா, பத்ரா, லட்சணா, காளிந்தி என்னும் 6 மஹிஷியர்கள் ருத்ராதிகளைவிட 5 குணங்கள் குறைவானவர்கள். பார்வதி, வாருணி, சௌபர்ணி என்னும் ருத்ர, சேஷ, கருடரின் மனைவியரைவிட இரு குணங்களால் உத்தமர் என்று அறியவேண்டும்.

 

3ருட3 ஸேஷ மஹேஷரிகெ3 ஸௌ

பரணி வாருணி பார்வதியு மூ

வரு தஷாத3ம வாருணிகெ3 கடி3மெயெனிபளு கௌ3ரி |

ஹரனமட3தி3கெ3 ஹத்துகு3ணத3லி

ஸுரப காமரு கடி3மெ இந்த்3ரகெ3

கொரதெயெனிஸுவ மன்மத2னு பத3தி3ந்த3 ஆவாக3 ||8

 

கருட சேஷ மஹேஷரிகெ = கருட சேஷ ருத்ரருக்கு

சௌபர்ணி வாருணி பார்வதியு மூவரு = இவர்கள் மூவரும்

தஷாதம = 10 குணங்கள் குறைவானவர்கள்

வாருணிகெ = சேஷதேவரின் மனைவியான வாருணிதேவியைவிட

கௌரி = பார்வதிதேவி

கடிமெயெனிபளு = சேஷதேவரைவிட ருத்ரதேவர் பதவியால் எப்படி குறைவானவரோ, அப்படியே, சேஷதேவரின் மனைவியைவிட ருத்ரதேவரின் மனைவியான பார்வதியும் சிறிது குறைவானவர்.

ஹரன மடதிகெ = ருத்ரதேவரின் மனைவியான பார்வதிதேவியரைவிட

சுரப காமரு = இந்திர மன்மதன்

கடிமெ = குறைவு

இந்திரகெ = இந்திரனைவிட

ஆவாக = எப்போதும்

பததிந்த = பதவியால்

மன்மதன்,

கொரதெயெனிஸுவ = குறைவு என்று சொல்லப்படுகிறான்.

 

சௌபர்ணி, வாருணி, பார்வதி இந்த மூவரும் தம் பதிகளான கருட, சேஷ, ருத்ர தேவர்களைவிட 10 குணங்கள் குறைவானவர்கள். பதவியின் பொருட்டு, சேஷதேவரைவிட ருத்ரதேவர் எப்படி குறைவோ, அப்படியே, சேஷபதியான வாருணியைவிட ருத்ரபத்னியான பார்வதி சிறிது குறைவானவர். பார்வதிதேவியைவிட இந்திர மன்மதர்கள் 10 குணங்களால் குறைவானவர்கள். பதவியின் பொருட்டு இந்திரனைவிட மன்மதன் சிறிது குறைவானவன்.

 

ஈரய்து3 கு3ண கடி3மெயாஹ

ங்காரிக ப்ராணனு மனோஜ ந

காரிக3ளிக3னிருத்34 ரதி மனு த3க்‌ஷ கு3ரு சசியு |

ஆரு ஜன ம ப்ராணனிந்த3லி

ஹௌரபெனிபரு ஹத்து கு3ணத3லி

மாரஜாத்3யரிகை3து3 கு3ணதி3ந்த33ம ப்ரவஹாக்ய ||9

 

மனோஜ நகாரிகளிகெ = மன்மத, இந்திரன் இவர்கள் இருவரைவிட

அஹங்காரிக பிராணனு,

ஈரைதுகுண கடிமெ = 10 குணங்கள் குறைவானவன்

அனிருத்த ரதி மனு (ஸ்வாயம்புவ மனு), தக்‌ஷகுரு (பிருஹஸ்பத்யாசார்யர்) சசி (இந்திரனின் மனைவி)

ஆரு ஜன சம = இவர்கள் ஆறு பேரும் சமமானவர்கள்

ப்ராணனிந்தலி = அஹங்காரிக பிராணனைவிட

ஹத்து குணதலி = 10 குணங்களில்

ஹௌரகெனிபரு = குறைவானவர்கள்

மாரஜாத்யரிகெ = மன்மதனின் மகனான அனிருத்த முதலான 6 பேர்களைவிட

ப்ரவஹாக்ய = கோணாதிபனான ப்ரவஹ வாயு

ஐதுகுணதிந்ததம = ஐந்து குணங்களால் குறைவு

 

இந்திரன், மன்மதன் இவர்கள் இருவரைவிட அஹங்காரிக பிராணன் 10 குணங்களால் குறைவானவர். 49 மருத்கணர் என்னும் வாயுகளில் சேர்ந்தவர் இந்த அஹங்காரிக பிராணன். இந்த பிராணனைவிட 10 குணங்களால் குறைவானவர், பிரத்யும்னனின் மகனான அனிருத்தன். மன்மதனின் மனைவி ரதி. ஸ்வாயம்புவ மனு, தக்‌ஷப்ரஜாபதி, பிருஹஸ்பத்யாசார்யர், இந்திரனின் மனைவி சசி, இவர்கள் ஆறு பேரும் குணங்களில் சமமானவர்கள். இவர்களைவிட, 5 குணங்களில் குறைவானவன் ப்ரவஹவாயு.

 

மரீசி நாமாந்தரவான் ப்ரவஹோ முக்யவாயுஜ: |

கோணாதிபஸ் ஸஏவோக்த நாசிக்யோ பௌதிகஸ் ததா ||

 

என்னும் தாரதம்ய கௌஸ்துபத்தின் வியாக்யானத்திற்கேற்ப, இந்த பிரவஹ வாயுவிற்கு மரீசி என்னும் பெயரும் உண்டு. ப்ரதான வாயுவின் மகன், வாயவ்ய திசைக்கு அபிமானி, பஞ்சபூதங்களில் சம்பந்தப்பட்ட அனைவரிடம் ஸ்வாச ரூபனாக இருக்கிறான் என்று அறியவேண்டும்.

 

கு3ணத்3வயதி3ம் கடி3மெ ப்ரவஹகெ3

இன ஷஷாங்க யம ஸ்வயம்பு4

மனுமட3தி ஷதரூப நால்வரு பாத3 பாதா3ர்த்34 |

வனதி4 நீச பதா3ர்த்34 நாரத3

முனிகெ3 ப்ருக்3வக்3னி ப்ரஸூதிக3

ளெனிஸுவரு பாதா3ர்த்34 கு3ணதி3ந்த34மரஹுதெ3ந்து3 ||10

 

ப்ரவஹகெ = ப்ரவஹ வாயுவைவிட

இன = விவஸ்வான் என்னும் சூரியன்

ஷஷாங்க = சந்திரன்

யம = யமதேவர்

ஸ்வயம்புவ மனுவின மடதி = ஸ்வயம்புவ மனுவின் மனைவியான ஷதரூபாதேவி

நால்வரு = இந்த நால்வரும்

குணத்வயதிம் கடிமெ = இரு குணங்களால் குறைவு

வனதி = சமுத்ர ராஜனான வருணன்

பாத பாதார்த்த = கால் பாகம்; மற்றும் அதில் அரை பாகம்

நீச = சூரியாதிகளைவிட குறைவானவர்கள்

நாரத = நாரத முனிவர்

பாதார்த்த நீச = வருணனைவிட அர்த்த பாகம் குறைவு

நாரதனிகெ = நாரதனைவிட

ப்ருக்வக்னி ப்ரசூதிகளு = ப்ருகு ரிஷிகள், அக்னி தக்‌ஷ ப்ரஜாபதியின் மனைவியான ப்ரஸூதி என்னும் இந்த மூவரும்

பாதார்த்த குணதிந்த = அரைக்கால் பாக குணத்தினால்

அதமரஹுதெந்து = குறைவானவர்கள் என்று

எனிஸுவரு = சொல்லப்படுகிறார்கள்.

 

49 மருத்கணத்தில் சேர்ந்த ப்ரவஹ வாயுவைவிட சூரியன், சந்திரன், ஸ்வாயம்புவ மனுவின் மனைவி ஷதரூபாதேவி, யம இந்த நால்வரும் 2 குணங்களால் குறைவானவர்கள். சூரியாதிகளைவிட பாத பாதார்த்த (கால் பாகம் மற்றும் அதில் அரை பாகம்) குறைவானவர்கள். வருணன் = வருணனைவிட அரை பாகம் குணத்தால் நாரதர் குறைவானவர். நாரத முனிவரைவிட ப்ருகு ரிஷிகள், அக்னி, தக்‌ஷ ப்ரஜாபதியின் மனைவியான ப்ரஸூதி இவர்கள் மூவரும் அரைக்கால் பாகம் குறைவானவர்கள்.

 

ஹுதவஹகெ3 த்3வி கு3ணாத4மரு விதி4

ஸுதமரீச்யாதி33ளு வைவ

ஸ்வதனு விஷ்வாமித்ரனிகெ3 கிஞ்சித் கு3ணாத4மனு |

வ்ரதிவர ஜக3ன்மித்ர வரனி

ர்ருதியு ப்ராவஹி தாரரிகெ3 கி

ஞ்சிது கு3ணாத4ம த4னப விஷ்வக் ஸேனரெனிஸுவரு ||11

 

விதிஸுத = பிரம்மதேவரின் மக்களான

மரீச்யாதிகளு = மரீசி ரிஷி முதலான 7 பேர்,

வைவஸ்வதமனு விஷ்வாமித்ரனிகெ = 7 + இந்த இருவர் மொத்தம் 9 பேர்

ஹுதஹவகெ = அக்னியைவிட

த்விகுணாதமரு = இரு குணங்களால் குறைவானவர்கள்

வ்ரதிவர = விஷ்ணு விரதத்தில் சிறந்தவனான

ஜகன்மித்ர = ஜகத்திற்கு மித்ரன் எனப்படும் சூரியன்

கிஞ்சித் குணாதமனு = சிறிது குணம் குறைவானவன்

நிரருதி = அசுர ஸ்ரேஷ்டனான கோணாதிபனான நிரருதி

ப்ரவாஹ வாயு, தார = இவர்கள் இருவரும் சமமானவர்கள்

மித்ரவர நிரருதி, ப்ராவஹி, தாரெ (பிருஹஸ்பத்யாசார்யரின் மனைவி தாரை) = இவர்களைவிட

தனப விஷ்வக்சேனரு = குபேரன், விஷ்வக்சேன இவர்கள் இருவரும்

கிஞ்சித் குணாதம ரெனிஸுவரு = சிறிது குணங்கள் குறைவு எனப்படுகிறார்கள்

கணேசனும், குபேர விஷ்வக்சேனர்களுக்கு சமமானவரே என்று அறியவேண்டும்.

 

பிரம்மதேவரின் மக்களான மரீசி, அத்ரி, அங்கிரஸ, புலஹ, க்ரது, வசிஷ்ட இவர்கள் ஏழு பேர். இவர்களுடன் வைவஸ்த மனு, விஷ்வாமித்ரர் இவர்கள் 9 பேர்களும், அக்னியைவிட 2 குணங்கள் குறைவானவர்கள். மித்ர என்னும் சூரியன், திக்பாலகனான நிரருதி, ப்ராவஹி என்னும் வாயு, ப்ருஹஸ்பத்யாசார்யரின் மனைவி தாரை -- இவர்கள் நால்வரும் விஷ்வாமித்ராதிகளைவிட சிறிது குறைவானவர்கள். குபேரன் மற்றும் விஷ்வக்சேனன் இவர்கள் இருவரும், தாரை முதலானவர்களைவிட சிறிது குறைவானவர்கள்.

 

4னப விஷ்வக்ஸேன கௌ3ரி

தனயரிகெ3 உக்தேதரரு

ரெனிஸுவரு எம்ப3த்தயிது3 ஜன ஸேஷஷதரெந்து3 |

தி4னபராரேளதி4க நால்வ

த்தனிலரேள்வ ஸுருத்3ரரீரை

3னிது விஷ்வேதே3வ த்4யாவாஷ்வினி ருபு4 ப்ருத்2வி ||12

 

தனப விஷ்வக்சேன கௌரீதனயரிகெ = குபேர, விஷ்வக்சேன, கணேச இவர்களுக்கு

உக்தேதரரு = மேலே தாரதம்யத்தில் கூறியவர்களைத் தவிர மற்றவர்கள்

சேஷஷதரெந்து = 100ல் மிச்சம் இருப்பவர்கள் என்று சொல்லப்படும்

எம்பத்தயிது ஜன = 85 பேர்

அவர்கள் யார் என்றால்:

தினபராரு = 12 சூரியர்களில் மேலே சொன்ன 6 பேரைத் தவிர அடுத்த 6 பேர்

ஏளதிக நால்வத்தனெலரு = 49 மருத்கணர்களில் மேலே சொன்ன 2 பேரைத் தவிர, 47 பேர் மருத்கள் (வாயுகள்)

ஏள்வஸு = 8 வசுக்களில் முன்னர் சொன்ன ஒருவரைத் தவிர மிச்ச 7 பேர்

ருத்ரரீரைது = 10 ருத்ரர்கள்

அனிது விஷ்வேதேவ = அதே எண்ணிக்கையுள்ள - 10 விஷ்வேதேவ,

ருஜுகண 1

அஷ்வினிகளெரடு = அஸ்வினி தேவதைகள் இருவர்

பித்ருகண மூவரில் முன்னர் சொன்ன 2 பேரைத் தவிர ஒருவர்,

பூமி 1

என்று மொத்தம் 85 பேர் என்று அறியவேண்டும்.

(மேலே சொன்னபடி, 6+47+7+10+10+1+2+1+1 = 85)

 

குபேரன், விஷ்வக்சேன, கணேசன் ஆகியோர் இவர்களுக்கு சமம்.

 

100 தேவதைகளில், மேலே பார்த்த 15 பேரை விட்டு, பாக்கி 85 பேர் என்று அறியவேண்டும். தாரதம்ய கௌஸ்துப என்னும் கிரந்தத்தில் :

 

நவகோட்யோஹி தேவானாம் தேஷாம் மத்யேஷதஸ்யது |

ஸோமாதிகாரோ வேதோக்த: ||

 

ஒருவரில் தேவதைகள் 9 கோடி எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களில் சோமபானத்திற்கு தகுதியானவர்கள் என்று 100 தேவதைகளை மட்டும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். அவர்கள் யார் என்றால், :

 

ப்ரதான வாயுர்வஸ்வோ ருத்ராதித்யமருத்கணா: |

ப்ருஹஸ்பதி ருபுர்த்யாவா ப்ருதிவ்யாவஷ்வஸௌததா |

விஷ்வேதேவாஷ்ச பிதர: ஷதஸ்தா தேவதாமதா: ||

 

இந்த 100 பேர் தேவதைகளின் விவரம்.

 

1. பிரதான வாயுதேவர்

 

8 - அஷ்ட வசுக்கள்

 

1. த்ரோண

5. அக்னி

2. ப்ராண

6. தோஷாவஸு

3. த்ருவ

7. விபாவஸு

4. அர்க்க

8. த்யு

 

11 ருத்ரர்கள்

 

1. ரைவத

7. வ்ருஷாகபி

2. அஜ

8. அஜைகபாத்

3. பவ

9. அஹிர்புத்ன

4. பீம

10. பஹுரூப

5. வாம

11. மர்ஹா

6. உக்ர

 

 

12 ஆதித்யர்கள்

 

1. விவஸ்வான்

7. தாதா

2. ஆர்யமா

8. பர்ஜன்ய

3. பூஷா

9. வருண

4. த்ருஷ்டா

10. மித்ர

5. ஸவிதா

11. ஷக்ர (இந்திர)

6. பக

12. உருக்ரம

 

3 பித்ருகள் -- கவ்யவாஹ, யம, ஸோம

2 அஸ்வினி தேவதைகள் - நாஸத்ய, தஸ்ர

 

 

 

49 மருத்கணர்கள்

 

1. ப்ராண

11. ப்ரவஹ

21. நல

31. ஸம்வர்தக

41. க்ருஷ்ண

2. அபான

12. விவஹ

22. அனில

32. கால

42. கபி

3. வியான

13. ஷம்பு

23. ப்ரதிப

33. ஜித

43. ஷுக

4. உதான

14. ஸம்வஹ

24. குமுத

34. ஸௌம்ய

44. யதி

5. ஸமான

15. பராவஹ

25. காந்த

35. கபி

45. பீம

6. நாக

16. உத்வஹ

26. ஷுசி

36. ஜட

46. ஹனு

7. க்ருதல

17. வஹ

27. ஷ்வேத

37. மண்டூக

47. பிங்க

8. கூர்ம

18. ஷங்கு

28. அஜித

38. ஸம்ஹத

48. அஹங் காரிக ப்ராண

9. தேவதத்த

19. கல

29. குரு

39. ஸித்த

10. தனஞ்சய

20. ஷ்வாஸ

30. ஸஞ்ஞா

40. ரத்த

49. கம்பன

 

விஸ்வேதேவதைகள் 10

 

1. புரூரவ

6. லோசன

2. ஆர்த்ர

7. தக்

3. காம

8. க்ரது

4. கால

9. வசு

5. துரி

10. ஸத்ய

 

ப்ருஹஸ்பதி - 1

ருபு - 1

த்யாவா - 1

ப்ருதிவி - 1

 

இந்த 100 தேவதைகள், ஸோமபானத்தைக் குடிக்கும் தகுதி பெற்றவர்கள். இவர்களில் 15 பேரை, மேலே கூறிய தாரதம்யத்தில் சேர்த்திருக்கின்றனர். அவர்களின் விவரம்:

 

* சூரியர்களில் 6 பேர்

(உருக்ரம என்னும் சூரியன் ஸ்ரீவிஷ்ணுவே ஆனதால், தாரதம்யத்தில் சேர்க்கவில்லை)

* ப்ரதானாக்னி (வசு)

* பார்வதி பதியான பவ (ருத்ர)

* ப்ருஹஸ்பதி

* பித்ருகளில் யம, சந்திர

* 2 மருத்கணர்கள் (அஹங்காரிக பிராண, ப்ரவஹ)

* த்யாவா

* பிரதான வாயுதேவர்

 

என இவர்கள் 15 பேரைத் தவிர, மற்ற 85 பேர் என்று தாசார்யர் கூறுகிறார்.

 

85 பேர்களின் விவரம்:

 

சூரியர் 6

மருத்கணர் 47

வசுகள் 7

ருத்ரர் 10

விஷ்வேதேவதைகள் 10

ருபு 1

அஷ்வினி 2

பித்ரு 1

பூமி 1

 

என மொத்தம் 85 பேர் தேவதைகள்.

 

விஷ்வக்சேன, குபேர, கணேசர்கள் சமம் என்பது கருத்து.

 

இவரிகி3ந்தலி கொரதெ எனிபரு

ச்யவன னகாதி33ளு பாவக

கவி உசத்2ய ஜயந்த கஷ்யப மனுக3ளேகத3|

த்4ருவ நஹுஷ ஷஷபி3ந்து3 ஹைஹய

3வுஷ்ந்தி விரோசனன நிஜ

குவர ப3லி மொத3லாத3 ப்தேந்த்3ரரு ககுத்ஸ்த23||13

 

இவரிகிந்தலி = 100 பேர்களில் 85 பேர்களைத் தவிர

ச்யவன ஸனகாதிகளு = ச்யவன மற்றும் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத என்னும் நால்வர்

பாவக = பாவக நாமக அக்னி

கவி = சுக்ராசார்யர்

உசித்ய,

ஜயந்த = இந்திரனின் மகன் ஜயந்தன்

கஷ்யப,

மனுகளேகாதஷ = வைவஸ்வத மனு, ஸ்வாயம்புவ மனு இவர்கள் இருவரையும் தாரதம்யத்தில் சேர்த்திருக்கிறார்கள். தாபஸ என்னும் மனு, ஸ்ரீபரமாத்மனின் அவதாரமே. ஆக இந்த மூவரையும் விட்டு, மற்றவர்கள் 11 பேர்.

த்ருவ, நஹுஷ, ஷஷிபிந்து, ஹைஹய = கார்த்தவீர்யார்ஜுன,

துவுஷ்ஷந்த = துஷ்யந்த ராஜன்

விரோசனன நிஜகுவர பலி = பிரகலாதனின் மகன் விரோசனன். அவனது நிஜ குவர என்றால் பலிசக்ரவர்த்தி

மொதலாத = முதலானவர்கள்

ஸப்தேந்த்ரரு = முந்தைய தாரதம்யத்தில் சேர்த்த 7 பேர் இந்திரர்கள். இவர்களைத் தவிர, பாக்கி 7 பேர்.

ககுஸ்த, கய = இவர்கள் இருவரும்

கொரதெ எனிபரு = குறைவானவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.

 

(ஸனாதனர் மற்றும் ஸனத்ஸுஜாதர் இருவரும் வெவ்வேறானவர்கள் இல்லை என்று பல்வேறு கிரந்தங்களிலிருந்து தெரியவருகிறது - கன்னட உரையை அச்சிட்டவரின் கருத்து).

 

ப்ருது24ரத மாந்தா4த ப்ரீயா

வ்ரத மருத ப்ரஹ்லாத3 ஸுபரி

க்‌ஷித ஹரிஸ்சந்தி3ராம் ப3ரீஷோத்தானபாத3 முக2

ஷத ஸுபுண்ய ஸ்லோகரு க3தா3

ப்4ருதக3தி4ஷ்டா2னரு ஸுப்ரீயா

வ்ரதகெ3 த்3விகு3ணாத4மரு கர்மஜரெந்து3 கரெஸுவரு ||14

 

ப்ருது, பரத, மாந்தாத, ப்ரியவ்ரத, மருத, ப்ரகலாத, பரீக்‌ஷித், ஹரிச்சந்திரன், அம்பரீஷ, உத்தானபாத, முக = இந்த அரசர்களே முதலான

ஷத சுபுண்யஸ்லோகரு = 100 பேர் புண்ய கீர்த்தி பெற்ற ராஜர்கள் இவர்கள் அனைவரும்

கர்மரெந்து கரெஸுவரு = கர்மஜர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்

 

13, 14 இந்த இரு பத்யங்களில் சொல்லப்பட்டிருக்கும் அரசர்கள், ரிஷி முதலான அனைவரும் கர்ம தேவதைகள் எனப்படுகின்றனர். இவர்கள் சேஷ ஷதஸ்தர்களான 85 தேவதைகளைவிட குணத்தால் சிறிது குறைவானவர்கள். இந்த இரு பத்யங்களில் சொன்னவர்கள் அனைவரும், சமமே ஆனாலும், பகவத் ஆவேச பலத்தினால் சிறிது அதிக, குறைவாக இருக்கிறார்கள்.

 

விப்ரத்வாச்சாவனோசிதை தன்மத்யே கிஞ்சிதுத்தமௌ || என்னும் தாரதம்ய கௌஸ்துப வாக்கியத்திற்கேற்ப, பிராமணர் ஆனதால் ச்யவனர், உசித்யர் இவர்கள் இருவரும் சிறிது உத்தமர்கள் எனப்படுகிறார்கள். 100 புண்யஸ்லோக ராஜர்களில், ப்ரியவ்ரதனை சேர்த்து, அவர்கள் சுப்ரியவ்ரதனைவிட இரு குணங்கள் குறைவு என்கிறார்கள் என்றார் தாசார்யர்.

 

ஷதஸு புண்யஸ்லோகரு = 100 பேர் புண்ய கீர்த்தி ராஜர்கள்.

கதாப்ருதகதிஷ்டானரு = கதாதாரியான பரமாத்மனின் அம்சத்தைக் கொண்ட

கர்மஜரு = கர்ம தேவதைகளிலும்

ஸுப்ரியவ்ரதகெ = புண்யகீர்த்தியான ப்ரியவ்ரத ராஜனுக்கு

த்விகுணாதமரெந்து = இரு குணங்களால் குறைவு என்று அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்.

 

பாகவத 5ம் ஸ்கந்த தாத்பர்யத்தில்: ப்ரியவ்ரதோ கயஸ்சைவ கர்ம தேவ ஸமௌகுணை:’. ப்ரியவ்ரத ராஜன், கயா ராஜன், இவர்கள் இருவரும் குணத்தில் கர்ம தேவதைகளுக்கு சமம் என்று சொல்கிறார். இப்படியிருக்கையில், ப்ரியவ்ரதனை முதலில் கர்மஜரில் சேர்த்து, பின் மற்றவர்கள் இவனைவிட இரு குணங்கள் குறைவு என்று எப்படி சொல்கிறார்கள் என்றால்:

 

ப்ரியவ்ரதன் குணத்தில் கர்ம தேவதைகளுக்கு சமம் என்று சேர்த்திருந்தாலும், அவனில் இருந்த சிறப்பான பகவத் அம்சம், மற்ற அனைவரைவிட அதிகமாக இருந்ததால், 2 குணத்தால் உத்தமன் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டும். விசேஷமான பகவதம்சம் இவனில் இருந்தது என்பதற்கு பாகவத 5ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயம் 39ம் ஸ்லோகத்தில் ஒரு வசனம் வருகிறது.

 

ப்ரியவ்ரத க்ருதம் கர்மகோனு குர்யாத்வினேஷ்வரம் |

யோனேமினிமைரகரோச்சாயம் க்னஸப்தவாரிதீன் ||

 

ப்ரியவ்ரத ராஜன் செய்த காரியத்தை செய்வதற்கு, பரமாத்மனை விட்டு வேறு யாரால் சாத்தியம்? எந்த ப்ரியவ்ரத ராஜன், இரவு நேரங்களில், மலையில் நிழலால் இருட்டு ஆவதை பரிகரித்து, பகலைப் போல செய்வதற்காக, ஒரு சக்கரம் கொண்ட ரதத்தில் ஏறி, மேரு பர்வதத்தை பிரதட்சிணை செய்தபோது, தன் ரதத்தின் சக்கரத்தால் ஏழு கடல்களை உருவாக்கினானோ - என்னும் வாக்கியங்களால், சப்த த்வீப, சப்த சமுத்திரம் ஆகியவற்றை உருவாக்கும் செயல்கள், பரமாத்மனை விட்டு வேறொருவரால் சாத்தியம் இல்லாத காரணத்தால், ப்ரியவ்ரதனில் பரமாத்மனின் விசேஷ ஆவேசம் இருந்தது என்பது தெளிவாகிறது.

 

ஆகையால், புண்ய ஸ்லோகர்களான 100 பேர் அரசர்களில் இவனும் ஒருவன் என்றாலும், மற்றவர்கள் இவனைவிட 2 குணங்கள் குறைவானவர்கள் என்று தாசார்யர் தெளிவுபடுத்துகிறார். இந்த பத்யத்தில் இருக்கும் ப்ரியவ்ரதகெஎன்னும் சொல்லை, முந்தைய பத்யத்தில் சேர்த்தால், விஷயம் சரியாகிவிடும். அது எப்படியெனில்: உத்தானபாத முக ஷதகதிஷ்டானரு, கர்மஜரெந்து கரெஸுவரு. இவர்கள் அனைவரும் த்விகுண அதமர்கள். இவர்கள் 85 தேவதைகளைவிட 2குணங்கள் குறைவு என்னும் அர்த்தம் வருகிறது. ப்ரியவ்ரதனுக்கு என்னும் பதத்தை நளனிஸஞ்ஞாரோஹிணி என்னும் பத்யத்தில் சேர்த்துக் கொண்டால், நளனி என்றால் கங்கை. கங்கை முதலானவர்கள் சுப்ரியவ்ரதனுக்கு அதமர்கள் என்னும் அர்த்தம் செய்தாலும், அது சித்தாந்தத்திற்கும், தாசார்யரின் வாக்கியத்திற்கும் அவிரோதம் ஆகிறது (சரியாகப் பொருந்துகிறது)..

 

ளினி ங்ஞா ரோஹிணி ஷ்யா

மல விராட் பர்ஜன்யரத4மரு

எலரு மித்ரன மட3தி3 த்3வி கு3ணாத4மளு பா3ம்பொ3ளெகெ3 |

ஜலமய பு3தா44மனு த்3வி கு3ணதி3

கெளகெ3னிஸுவளுஷா ஷனைஸ்சர

ரிளெயு ஈரு கு3ணாத4ம ருஷாதே3வி தெ3ஷெயிந்த3 ||15

 

நளனி = கங்கை

சஞ்ஞா = விவஸ்வான் என்னும் சூரியனின் மனைவியான சஞ்ஞாதேவி

ரோஹிணி = சந்திரனின் மனைவி

ஷாமலா = யமதேவனின் மனைவி

விராட் = அனிருத்தனின் மனைவியான உஷாதேவி

பர்ஜன்ய = பர்ஜன்ய என்னும் சூரியன்

இவர்கள் ஐந்து பேரும் சமமானவர்கள்

ஸுப்ரியவ்ரதகெ = உத்தமனான ப்ரியவ்ரத ராஜனைவிட (இந்த சொல் முந்தைய பத்யத்திலிருந்து வந்துள்ளது)

அதமரு = இரு குணங்களால் குறைவானவர்கள்

ப்ரியவ்ரதகெ என்று சொன்னதால், அவனுக்கு சமமான கர்மதேவதைகள் அனைவரைவிடவும் என்று அர்த்தம்.

பாம்பொளெகெ = கங்கையைவிட

எலமித்ரன = வாயுவிற்கு மித்ரனான அக்னி

மடதி = மனைவியான ஸ்வாஹா தேவி

த்விகுணாதமளு = இரு குணங்களால் குறைவு எனப்படுகிறாள்

ஜலமய = தண்ணீரின் அபிமானினியான

புத = சந்திரனின் மகனான புதன்

த்விகுணதி = ஸ்வாஹாவைவிட இரு குணங்கள் அதமன்

உஷா = அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவி

இளியு = பூமிக்கு அபிமானினியான

ஷனைஸ்சரர் = இவர்கள் இருவரும்

ஈருகுணாதமரு = இரு குணத்தால் குறைவானவர்கள்

உஷாதேவி தெஷெயிந்த = இந்த பதம் அடுத்த பத்யத்துடன் சேர்த்து படிக்க வேண்டும்.

 

கங்கை, விவஸ்வான் என்னும் சூரியனின் மனைவியான சஞ்ஞாதேவி, சந்திரனின் மனைவியான ரோஹிணி தேவி, யமதேவரின் மனைவி ஷாமலாதேவி, அனிருத்தனின் மனைவியான பாணாசுரனின் மகள் உஷாதேவிக்கு விராட் என்று பெயர். இவர்கள் ஆறு பேரும் சமமானவர்கள். இவர்கள் ப்ரியவ்ரதாதிகளைவிட இரு குணங்கள் குறைவானவர்கள். அக்னி தேவரின் மனைவி ஸ்வாஹாதேவி. கங்காதிகளைவிட இரு குணம் குறைவானவள்.

 

தண்ணீருக்கு அபிமானியான புதன் ஸ்வாஹாதேவியரைவிட இரு குணங்கள் குறைவு. அஸ்வினி தேவதைகளின் மனைவியான உஷாதேவி, ப்ருத்வி அபிமானியான சனைஸ்வரர், புதனைவிட இரு குணங்கள் குறைவானவர்.

 

எரடு கு3ண கர்மாதி4பதி பு

ஷ்கர கடி3மெ ஆஜானதி3விஜரு

சிரபித்ருக3ளிந்து3த்தமரு கிங்கரரு புஷ்கரகெ3 |

ஸுரபனாலய கா3யகோத்தம

ரெரடயிது3 கு3ணதி3ந்த34ம து

ம்பு3ரகெ3 ம ஷதகோடி ருஷிக3ளு நூருஜனருளிது3 ||16

 

கர்மாதிபதி புஷ்கர = கர்மாபிமானியான புஷ்கரன்

உஷாதேவி தெஷெயிந்த = உஷாதேவியை விட

எரடு குண கடிமெ = இரு குணங்கள் குறைவு

அஜானதிவிஜரு = அஜான தேவதைகள்

சிரபித்ருகளிந்துத்தமரு = சிரபித்ருகளைவிட உத்தமர்கள்

எரடைது குணதிந்ததம = 2*5=10 குணங்களால் குறைந்தவர்கள்

புஷ்கரகெ = புஷ்கரனைவிட குறைந்தவர்கள்.

அஜானஜர் யார் என்றால் =

சுரபனாலய கயகோத்தம = தேவேந்திரனின் வீட்டில் பாடல் பாடுபவர்களில் சிறந்தவனான தும்புரு முதலான 100 கந்தர்வர்கள்

தும்பரகெ சம = தும்புரு முதலானவர்களுக்கு சமமானவர்கள்

நூருஜனருளிது = 100 ஜன உத்தம குணங்களில் சேர்ந்தவர்களை விட்டு

நவகோடி ரிஷிகளு = 9 கோடி ரிஷிகள்; இவர்கள் இருவரும் அஜாஜனர்கள் என்பது கருத்து

 

உஷாதேவியரைவிட கர்மாபிமானியான புஷ்கரன் இரு குணங்கள் குறைவு எனப்படுகிறான். சிரபித்ருகளைவிட உத்தமர் என்று சொல்லப்படும் அஜானஜர், புஷ்கரனைவிட 10 குணங்கள் குறைவு. அஜானஜர் என்றால், தாரதம்ய கௌஸ்துபத்தின்படி:

 

அனாக்யாதா தேவதாஸ்து ஜாதா தேவகுலெச யா: |

கந்தர்வாஸ்தும்புருமுகா: ஷதமப்ஸரஸாம் ஷதம் ||

நாரதாதீனுசித்யம் தாம் வினாது ருஷயோகிலா: ||

ஆஜானஜா தேவதாஸ்தே ||

 

தேவதா குலத்தில் பிறந்து, தேவதைகள் என்று கணக்கிற்கு வராதவர்கள். தும்புரு முதலான 100 கந்தர்வர், அப்ஸர ஸ்த்ரீயர் 100, நாரதரில் துவங்கி உசித்யர் வரை இருக்கும் ரிஷிகளை விட்டு, மற்ற அனைத்து ரிஷிகள் -- இவர்களுக்கு அஜானஜ தேவதைகள் என்று பெயர்.

 

இவர்கள் அனைவரும் புஷ்கரனைவிட 10 குணங்கள் குறைவு.

 

அவரவர பத்னியரு அப்

யுவதியரு ம உத்தமரனுளி

3வரரெனிபரு மனுஜ க3ந்த3ர்வரு த்3வி ஷட்கு3ணதி3 |

குவலயாதி4பரீரயிது3 கு3

அவனிபஸ்த்ரீயரு த3ஷோத்தர

நவதி கு3ணதி3ந்த34ம ரெனிபரு மானுஷோத்தமரு ||17

 

அவரவர = தும்புரு முதலான கந்தர்வர் 9 கோடிக்கு 100 பேர் குறைவான ரிஷிகள். இவர்களின்

பத்னியரு = மனைவிகள்

அப்ஸர யுவதியரு = அபஸர ஸ்த்ரீயர்கள்

உத்தமரனுளிது = மேலே உத்தமர் என்று சொல்லப்பட்ட ரிஷிபத்னி ஆகியோரை விட்டு, சமம் எனப்படுகின்றனர்.

மனுஜ கந்தர்வர் த்விஷட்குணதி = மேலே கூறப்பட்ட தேவ கந்தர்வர்களைவிட 12 குணங்களால்

அவரரெனிபரு = குறைவு எனப்படுகிறார்கள்

குவலயாதிபரு = பூமியில் சக்ரவர்த்திகள் என்று புகழ்பெற்றவர்கள்

அவனிபர ஸ்த்ரியரு = சக்ரவர்த்திகள் மனைவிகள்

அவரு ஈரைதுகுண = 10 குணங்களால்

அதமரெனிஸுவரு = குறைவு எனப்படுகிறார்கள்

மானுஷோத்தமரு = மனிதர்களில் உத்தமர்கள்

சக்ரவர்த்திகளைவிட

தஷோத்தர நவதி குணதிந்ததம = 100 குணங்களால் குறைவானவர்கள்.

 

* 100 கந்தர்வர்கள். 100 அப்சரஸ்த்ரியர்கள். 9 கோடிக்கு 100 பேர் குறைவான ரிஷிகள். இவர்கள் அனைவரும் புஷ்கரனைவிட 10 குணங்கள் குறைவானவர்கள்.

* தேவ கந்தர்வாதிகளைவிட மனுஷ்ய கந்தர்வர்கள் 12 குணங்களால் குறைவானவர்கள்.

* சக்ரவர்த்திகள் மற்றும் அவர்களின் மனைவிகள், மனுஷ்ய கந்தர்வர்களைவிட 10 குணங்கள் குறைவானவர்கள்.

 

இவர்களைவிட மனுஷ்யோத்தமர்கள் 100 குணங்கள் குறைவு என்று அர்த்தம் வருகிறது. இதைப்போலவே, மேலே பத்யார்த்தத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தாரதம்ய கௌஸ்துப வசனத்திற்கும், தாசார்யரின் வசனத்திற்கும் பரஸ்பர விரோதம் வருகிறது.

 

ஆஜானே ப்யோஷதம் ந்யூனா: பித்ருப்யஸ்ச ஷதாதமா: ||

உக்தான்யே தேவகந்தர்வா ஸ்தச்சதோனான்ருகாயாகா: ||

கந்தர்வேப்யோ மானுஷோய: ஷதோனாஸ்சக்ரவர்த்தின: ||

க்‌ஷிதிபேப்யோ ஷதாம்ஷோனா ஈரிதாமானுஷோத்தமா: ||

 

* அஜான தேவதைகளைவிட மற்றும் சிரபித்ருகளைவிட மேலே கூறிய கந்தர்வர்களைத் தவிர மற்ற தேவகந்தர்வர்கள் 100 குணங்களால் குறைவானவர்கள்.

* அவர்களைவிட மனுஷ்ய கந்தர்வர்கள் 100 குணங்கள் குறைவானவர்கள்.

* அவர்களைவிட சக்ரவர்த்திகள் 100 குணங்கள் குறைவானவர்கள்.

* அவர்களைவிட மனுஷ்யோத்தமர்கள் 100 குணங்கள் குறைவானவர்கள்.

இந்த ஆதாரத்தின்படி, மேற்கண்ட பத்யத்திற்கு அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த பத்யத்தின் சாராம்சம்:

மேலே தாரதம்யத்தில் கூறிய உத்தமர்களைவிட்டு, மற்ற உத்தமர்கள் மற்றும் அவரவர்களின் மனைவியர்,

அப்ஸர ஸ்த்ரீயர்,

ஸம = சமமானவர்கள்

த்விஷட்குணதி = 12 குணங்களால்

குறைவானவர்கள் = தங்களின் கணவர்களைவிட குறைவானவர்கள்

மனுஜ கந்தர்வர், தஷோத்தரனவதி குணதிந்த = 10 அதிக 90 என்றால் 100 குணங்கள்

தேவ கந்தர்வர்களைவிட அதமர்கள் எனப்படுகிறார்கள்

குவலயாதிபரு = சக்ரவர்த்திகள், மனுஜ கந்தர்வர்களைவிட,

தஷோத்தரனவதி குணதிந்த = 100 குணங்களால் (இந்த சொல்லை 2-3 முறை சொல்லிக் கொள்ளவேண்டும்)

அவனிபரஸ்த்ரியரு = சக்ரவர்த்திகளின் மனைவியர்

ஈரைது குண = 10 குணங்களால் தங்கள் கணவர்களைவிட அதமர்கள் ஆவர்

சக்ரவர்த்திகளைவிட, மானுஷோத்தமரு, தஷோத்தர நவதி குணதிந்த = 100 குணங்களால் குறைவானவர்கள்

 

என்று அர்த்தம் சொன்னால், ஆதார ஸ்லோகத்திற்கும், மூல வாக்கியத்திற்கும் பொருந்திப் போவது போல தெரிகிறது.

 

த்வத்வரு த்வராஜ

த்வதாமஸ மூவரு ரஜ

ஸ்த்வ அதி4காரிக3ளு ப43வத்34க்தரெனிஸுவரு |

நித்யப3த்34ரு ரஜோரஜரு

த்பத்தி பூ4 ஸ்வர்க3தொ3ளு நரகதி3

ப்ருத்2வியொளு ஞ்சரிஸுதிப்பரு ரஜஸு தாமரு ||18

 

ஸத்வஸத்வரு = சாத்விக சாத்விகர்கள்

ஸத்வராஜஸ = ஸாத்விக ராஜஸர்கள்

ஸத்வ தாமஸ = சாத்விக தாமஸர்கள்

மூவரு = இந்த மூன்று பேரும், மற்றும்

ரஜஸ்ஸத்வரு = ராஜஸ சாத்விகர்

இவரெல்லரு = இவர்கள் அனைவரும்

அதிகாரிகளு = மோக்‌ஷாதிபதிகள் (முக்திக்கு யோக்யர்கள் என்று அர்த்தம்)

பகவத் பக்தரெனிஸுவரு = பகவத் பக்தர்கள் எனப்படுகிறார்கள்.

ரஜோரஜரு = ராஜஸ ராஜஸர்கள்

நித்யபத்தரு = எப்போதும் பத்தர்கள்; அதாவது நித்ய சம்சாரிகள் எனப்படுகிறார்கள்

உத்பத்தி பூ ஸ்வர்க்கதொளு = பூமியில் பிறப்பது, ஸ்வர்க்கத்திற்கு போவது என இருந்து, இறுதியில் நித்ய சம்சார என்னும் சுகதுக்க மிஸ்ரமான நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்

ரஜஸதாமஸரு = ராஜஸ தாமஸர்கள்

நரகதி = நரகத்திலும்

ப்ருதிவியொளு = பூமியிலும்

சஞ்சரிசுதிப்பரு = சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

அனாதி காலத்திலிருந்து சாத்விக, ராஜஸ, தாமஸ என்று மூன்று விதங்களாக ஜீவர்கள் இருந்து வருகின்றனர். இந்த சாத்விகாதி ஒவ்வொன்றிலும் மூன்று விதங்கள் உண்டு.

 

சாத்விகரில்:

சாத்விக சாத்விக

சாத்விக ராஜஸ

சாத்விக தாமஸ

 

இதைப்போல, ராஜஸரில்:

ராஜஸ சாத்விக

ராஜஸ ராஜஸ

ராஜஸ தாமஸ

 

தாமசரில்:

தாமஸ சாத்விக

தாமஸ ராஜஸ

தாமஸ தாமஸ

 

இவர்களில்:

* சாத்விக சாத்விகர்,

* சாத்விக ராஜஸர்,

* சாத்விக தாமஸர் என்று மூன்று வித சாத்விகர்கள்,

ராஜஸர்களில்

* ராஜஸ சாத்விகர்

ஆகியோர் பகவத் பக்தர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முக்தியோக்யர்கள் ஆவர்.

 

* ராஜஸ ராஜஸர்கள் நித்ய சம்சாரிகள். இவர்கள் ஸ்வர்க்கத்திற்கு போவது மறுபடி பூமியில் பிறப்பது என தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பர். இவர்களுக்கு நரகம் கிடையாது. முக்தியிலும்கூட இவர்களுக்கு ஸந்தானிக என்னும் உலகம் கிடைக்கிறது. அங்கும் மிஸ்ர சுகத்தையே இவர்கள் அனுபவிக்கின்றனர்.

 

* ராஜஸ தாமஸர்கள் பூமியில் பிறக்கின்றனர், நரகத்திற்கு செல்கின்றனர். இவர்கள் சுக மிஸ்ரமான துக்கத்தையே அபாரமாக அனுபவிக்கின்றனர்.

 

தமஸு ஸாத்விகரெனிஸி கொம்ப3ரு

அமிதனாக்2யாத ஸுரக3ணவிது3

தமஸு ராஜரெனிஸி கொம்ப3ரு தை3த்யமுதா3|

தமஸு தாம கலி புரந்த்3ரியு

அமித து3ர்கு3ணபூர்ண ர்வா

4மரொளத4மாத4ம து3ராத்மனு கலி எனிஸிகொம்ப3 ||19

 

தமஸ் சாத்விகரெனிஸி கொம்பரு = தாமஸ சாத்விகர் என்று அழைத்துக் கொள்ளும்

அசுரகணவு = தைத்ய கணம்

அனாக்யாத = புகழ் அடையாதவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள்

இந்தஹவரு அமிதவிதெ = இத்தகைய அசுரர்கள் பலர் இருக்கின்றனர்.

தைத்ய சமுதாய = புகழ் அடைந்திருக்கும் தைத்யர்கள்

தமோராஜஸ நெனிஸி கொம்பரு = தம்மை தமோ ராஜஸ என்று அழைத்துக் கொள்கிறார்கள்

கலி புரந்திரி = கலி மற்றும் கலியின் மனைவி புரந்த்ரி

அமித துர்குணபூர்ண = எண்ணிக்கையற்ற துர்குணங்களால் பூர்ணனாக இருப்பவர்கள்

ஸர்வாதமரொளு அதமாதம = உலகத்தில் அதமர் என்று பெயர் பெற்றவர்களைவிட அதமர் எனப்படுபவர்கள்

துராத்மனு = பாப ஸ்வரூபன் என்றும் அழைக்கப்படுகிறான்.

 

தாமஸர்கள் தைத்யர்களே ஆகியிருக்கின்றனர். அவர்களில் புகழ் பெறாதவர்கள் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அனாக்யாதர்கள் என்றால் புகழ் பெறாதவர்கள் என்று பெயர். அவர்கள் அனைவரும் தாமஸ சாத்விகர்களே ஆவர். பிரதானமான கலி முதலான தைத்யர்களின் சேவகர்கள் என்று அழைக்கப்படும் தைத்யர்கள், தாமஸ தாமஸ எனப்படுகிறார்கள். பாகவத 2ம் ஸ்கந்தம், 10ம் அத்தியாயம், 41ம் ஸ்லோகத்தின், விஜயத்வஜீய வியாக்யானத்தின்படி:

 

கல்யாதி ப்ரதானா அஸுராஸ்தாமஸ தாமஸா: |

ப்ரதானா ஸுரப்ருத்யாஸ்தாமஸ ராஜஸா: |

அப்ரஸித்தா அஸுராஸ்தாமஸ ஸாத்விகா: |

கேவல பாபசாரிணோ மனுஷ்யா ராஜஸ தாமஸா: |

மிஸ்ரகர்மக்ருதோ மனுஷ்யா ராஜஸ ராஜஸா: |

மனுஷ்யேஷு புண்யைக கர்மக்ருத:

உத்தம மனுஷ்யா: ராஜஸ ஸாத்விகா: |

ப்ருதக் ப்ரஸித்தா தேவா: ஸாத்விக தாமஸா: |

அதத்வாபிமானி நோலோகேக்யாதா: ஸாத்விக ராஜஸா: |

தத்வாபிமானினோ தேவா: ஸாத்விக ஸாத்விகா: |

ஸாத்விகேப்யோபி ஸாத்விகா: கருடாதி

த்ரிகதத்பார்யாஸ் தேப்யோபி ஸாத்விகீ

பிரம்மபார்யா ஸரஸ்வதி, ததோபி ஸாத்விகோ பிரம்மேதி ||

 

ஸத்வம் ரஜஸ்தம இதி த்ரிஸ்ர: ஸுரன்ரு நாரகா: ||

என்னும் மூல வசனத்தினால், சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூவரும், தேவலோக, மனுஷ்ய லோக, நரக வாசிகள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லும் வாக்கியத்தால், தைத்யர்கள் அனைவரும் நரகவாசிகள், தாமஸர்கள் என்று நிச்சயமாகிறது. இதில் பற்பல பேதங்கள் இருக்கின்றன.

 

* கலி முதலான பிரதான தைத்யர்கள், தாமஸ தாமஸர்கள்.

* ப்ரதான தைத்யர்களின் சேவகர்கள் தாமஸ ராஜஸர்கள்

* புகழ் பெறாத தைத்யர்கள் தாமஸ சாத்விகர்கள்.

 

ராஜஸர்கள் அனைவரும் மனிதர்கள். அவர்களில் இருக்கும் பேதங்கள் இவ்வாறு:

* வெறும் பாவங்களைக் கொண்ட மனிதர்கள், ராஜஸ தாமஸர்கள்

* புண்ய பாப மிஸ்ரமான கர்மங்களை செய்யும் மனிதர்கள் ராஜஸ ராஜஸர்கள்

* வெறும் புண்யத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கும் உத்தம மனிதர்கள், ராஜஸ ஸாத்விகர்கள்.

 

ஸாத்விகர்கள் அனைவரும் தேவதைகள். அவர்களில் இருக்கும் பேதங்கள் இவ்வாறு:

* பெயர் பெறாத தேவதைகள் ஸாத்விக தாமஸர்கள்

* தத்வாபிமானிகளாக இல்லாமல், உலகத்தில் பெயர் பெற்றிருக்கும் தேவதைகள், ஸாத்விக ராஜஸர்கள்

* தத்வாபிமானிகளான தேவதைகள், சாத்விக சாத்விகர்கள்.

 

* சாத்விகர்களில் சாத்விகர்களானவர்கள், கருட, சேஷ, ருத்ரர், இவர்களின் மனைவிகள்.

* அவர்களைவிட சாத்விகர்கள் பிரம்ம வாயுகளின் மனைவிகள்.

* அவர்களைவிட சாத்விகர்கள் பிரம்ம வாயுகள் ; என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

இந்த வாக்கியங்களுக்கேற்ப, இந்த பத்யத்திற்கு அர்த்தம் எழுதப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டும். இதைப்போல, தாமஸ தாமஸர் ப்ரதான தைத்யர்கள் ஆனாலும், அனைவரைவிடவும் தாமஸ தாமஸர்கள், கலியின் மனைவியான ஜ்யேஷ்டா என்பவள் ஆவாள். அவளைவிட மஹா தாமஸன் - கலி ஆவான்.

 

இவன போளுவ பாபிஜீவரு

பு4வன மூரரொளில்ல நோட3லு

நவவித4 த்3வேஷக3ளிகா33ரனெனிஸி கொளுதிப்ப |

3வரதொளு ப4ங்கா3ரதொ3ளு நட

யுவதி த்3யூதா பேய ம்ருஷதொ3ளு

கவிஸி மோஹிஸி கெடி3ஸுவனு எந்த3ரிது த்யஜிஸுவுது3 ||20

 

இவன = இந்த கலியை

போலுவ = ஒப்பிடத்தகுந்த பாபி ஜீவர்கள்

புவன மூரரொளில்ல = பூலோக, புவ (அந்தரிக்‌ஷ) லோக, ஸ்வர்க்க லோகம் என்று பெயர் இருந்தாலும், பூலோகத்தில், அதல சுதலாதி கீழாக இருக்கும் 7 லோகங்களும் சேர்ந்திருக்கிறது. நடுவில் அந்தரிக்‌ஷ லோகம். ஸ்வர்க்க என்றால், ஸத்யலோகம் வரைக்கும் இருக்கும் ஸ்வர்க்கத்தின் மேல் இருக்கும் அனைத்து லோகங்களும் சேர்ந்திருக்கின்றன. மொத்தத்தில் 14 உலகங்களும் என்று பொருள்.

நோடலு = எங்கு பார்த்தாலும் அங்கு

நவவித த்வேஷகளிகெ = 9 விதமான த்வேஷங்களுக்கு

ஆகரனெனிஸி கொளுதிப்ப = ஆதரவு தருபவனாக இருக்கிறான்

பவரதலி = பசுவதை ஆகும் இடங்களிலும்

பங்காரதலி = தங்கம்

நடயுவதி = வைஷ்யா ஸ்த்ரியர்கள் இருக்கும் இடங்கள்

த்யூதா = சூதாட்டம் நடக்கும் இடங்கள்

அபேயதலி = மது குடிக்கும் இடங்கள்

ம்ருஷதலி கவிஸி = பொய் முதலான தோஷங்கள் இருக்கும் இடங்களில்

மோஹதி = மயக்கி கெடுப்பவன்

எந்தரிது = என்று அறிந்து

த்யஜிஸுவரு = இந்த இடங்களை ஒதுக்க வேண்டும்.

 

இந்த கலிக்கு சமானரான பாபி ஜீவர்கள் இந்த உலகத்தில் எங்கும் யாரும் இல்லை. புண்யவந்தர்களில் எப்படி பிரம்மதேவர் உத்தமராக இருக்கிறாரோ, அப்படி பாபிகளில் கலியே உத்தமன். பகவந்தனிடம் 9 விதமான த்வேஷங்களுக்கும் இவன் ஆதரவு அளிக்கிறான். நவவித த்வேஷங்களின் விவரம், கருட புராண பிரம்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

ஜீவாபேதோ ஹரிணா ப்ராக்ருதேன ஸ்வதந்த்ரேண ஹ்யஸ்வதந்த்ரேண நித்யம் |

ஞானானந்தைர் விதுரத்வாச்சவிஷ்ணு: ஸதாஹரிர் நிர்குணஸ்சேதி சிந்தா ||

ஸதாகாம்யை: பரிபூர்ணே ஹரௌச குணைர பூர்ணோ ஹரிரித்யேவ சிந்தா ||

ஸ்ரீ பிரம்மாதி திவௌகஸாம் ஸதா ததாத்விஜானாம் ஸாம்யதாயாஷ்ச சிந்தா ||

விஷ்ணோ: ஸகாஷாத் பிரம்ம ருத்ராதிகானாம் ஸதாதிக்யாதேஸ் சிந்தனம் ச

ததோத்சத்தேர்மரண ஸ்யாபி சிந்தா ||

தத்பக்தானாம் தூஷணம் சாஹுரார்யாஸ் தத்வாக்யானாம் தூஷணம் த்வேஷ ஏவ ||

நவத்வேஷை: ஸம்யுதா ஏவலோகே த்ருஷ்யந்தே தைனது பக்தா: கலௌ ச ||

 

இதன் அர்த்தம்:

ஸ்வதந்த்ரனும், அப்ராக்ருதனுமான பரமாத்மனுக்கும், அஸ்வதந்த்ரனும், ப்ராக்ருதனும் ஆன ஜீவனுக்கும் அபேதத்தை சொல்கிறார்.

 

1. ஞானானந்தாதிகள் பரமாத்மனுக்கு இல்லை என்பதால், பரமாத்மன் நிர்குணன் என்று சிந்திப்பவர்

2. பூர்ண காமனான ஸ்ரீஹரியை அபூர்ணன் என்று சிந்திப்பவர்

3. லட்சுமிதேவியர், பிரம்மதேவர், தேவதைகள், பிராமணர் இவர்கள் அனைவரையும் சமமாக சிந்திப்பவர்

4. விஷ்ணுவைவிட பிரம்ம, ருத்ராதிகள் உத்தமர்கள் என்று சிந்திப்பவர்

5. பரமாத்மனின் கை, கால் முதலான அவயவங்களுக்கு பேதத்தை சிந்திப்பவர்

6. பரமாத்மனின் அவதாரங்களில் பரஸ்பர பேதங்களை சொல்வது மற்றும் பாணங்களால் தேகம் அடிபட்டது / காயம் பட்டது / துண்டு துண்டானது என்று சிந்திப்பவர்

7. பரமாத்மனுக்கு பிறப்பு, இறப்புகள் உண்டு என்று சிந்திப்பவர்

8. பரமாத்மனின் பக்தர்களில் த்வேஷம்

9. பரமாத்மனின் வாக்கியத்தில் த்வேஷம்

 

என ஒன்பது வகையான த்வேஷங்களைக் கொண்ட மக்களே கலியுகத்தில் இருப்பார்கள். பக்தர்களை காணவே முடியாது என்று ஸ்ரீபரமாத்மன் கருடனுக்கு உபதேசித்தார்.

 

இந்த ஒன்பது விதமான த்வேஷங்களையும் கொண்டவன் கலி. பரிக்‌ஷித் ராஜன், தன் திக்விஜயத்தில் கலியை வென்றபோது, கலியின் பிரார்த்தனையின் பேரில், கலி வசிப்பதற்காக 5 இடங்களைக் கொடுத்தார் என்று பாகவத 1ம் ஸ்கந்தத்தில் :

 

த்யூதம் பானம் ஸ்த்ரிய: ஸூனா யத்ராதர்மாஸ் சதுர்விதா: |

புனஸ்ச யாசமானாய சாதரூபமதாத் ப்ரபு: ||

 

* எங்கு சூதாட்டம் நடக்கிறதோ,

* எங்கு மது குடிக்கிறார்களோ,

* எங்கு வைஷ்யா ஸ்த்ரியர்கள் இருக்கிறார்களோ,

* எங்கு பசு வதை நடக்கிறதோ

அதர்மங்கள் நடக்கும் இந்த 4 இடங்களில் நீ வசித்திரு என்று கூறினார்.

 

இந்த இடங்கள் போதாது என்று கலி மறுபடி பரிக்‌ஷித்தினை வேண்ட, தங்கம் இருக்கும் இடத்தில் நீ இரு என ஐந்தாவதாக ஒரு இடத்தையும் கொடுத்தான்.

 

ததோன்ருதம்மத: காமோரஜோவைரஞ்ச பஞ்சமம் |

ஔத்தரீயேண தத்தானின்யவஸத்தன்னி தேஷ க்ருத் ||

 

பரிக்‌ஷித் ராஜன் கொடுத்த இந்த 5 இடங்களில், அவனின் ஆணைப்படி, கலி தன் அம்சத்தினால் வசித்து வருகிறான். எங்கெங்கு எந்தெந்த ரூபங்களில் இருக்கிறான், என்றால்:

 

* எங்கு சூதாட்டம் நடக்கிறதோ, அங்கு பொய் ரூபமாகவும்

* எங்கு மது இருக்கிறதோ, அங்கு மயக்கம் / வெறி ரூபமாகவும்

* எங்கு வைஷ்யா ஸ்த்ரீயரோ, அங்கு காம ரூபமாகவும்

* எங்கு பசு வதை நடக்கிறதோ, அங்கு பாப ரூபமாகவும்

* எங்கு தங்கம் இருக்கிறதோ, அங்கு கலக ரூபமாகவும் வசிக்கிறான் என்கிறார்.

 

அதே அபிப்பிராயத்தையே தாசார்யர் இங்கு சொல்கிறார்.

 

பவரதலிஎன்றால், போரில் என்று சிலர் வியாக்யானம் செய்கிறார்கள். தர்மோயுத்தேவ தோத்விஷாம்என்னும் பாகவத வாக்கியத்திற்கேற்ப போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது, க்‌ஷத்ரிய தர்மம் என்று சொல்லப்பட்டிருப்பதால், பவர என்பதற்கு இங்கு போர் என்று அர்த்தம் சொல்லாமல், பாகவத வாக்கியத்திற்கேற்ப போருக்கு சரிசமமான அர்த்தத்தைக் கொடுக்கும் ஸூனாஎன்னும் பதத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஸூனா என்றால், இம்சிப்பது என்று பொருள். அதற்கு வியாக்யானத்தில் பசு இம்சை (பசு வதை) என்று எடுத்திருக்கிறார்கள். ஆகையால், அதே அர்த்தத்தையே இங்கு சொல்லியிருக்கிறோம்.

 

இப்படி விளக்குவதால், பாகவதத்தில் சொல்லியிருக்கும்படியே, சூதாட்டம், பானம், பெண்கள், பசு வதை, தங்கம் என்னும் அர்த்தம் சரியாகப் பொருந்துகிறது.

 

ம்ருஷகவிஸிஎன்றால், பாகவத வாக்கியத்தின்படி, சூதாட்டம் முதலான 5 இடங்களில், பொய் முதலான 5 ரூபங்களால் இருந்து செயல்களை செய்வான் (கெடுப்பான்) என்று பொருள். இந்த பத்யத்தில் த்யூதானா பேயதொளு ம்ருஷ கவிஸிஎன்றும் ஒரு பாடம் இருக்கிறது. ம்ருஷதொளு என்னும் பாடத்தைவிட ம்ருஷகவிஸி என்னும் பாடமே சரியாக தெரிகிறது. எப்படியெனில், பாகவதத்தில், கலிக்கு 5 இடங்களே கொடுக்கப்பட்டுள்ளன என்று சொல்லி, சூதாட்டத்தில் பொய் முதலான 5 ரூபங்களாக கலி இருக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

இதனால், கலியின் ஸ்வரூபம் பொய் என்று சொல்வதாக ஆயிற்று. பொய்யே, பாப ரூபமானபிறகு, அதில் கலி பிரவேசம் எப்படி ஆகும்? இது மட்டுமல்லாமல், பாகவத வாக்கியத்தின்படி, 5 இடங்கள் உள்ளன. இங்கு அவை 5ம் சரியாகி, பொய் ஒன்று மட்டும் அதிகமாக இருக்கிறது. ஆகையால், பொய் முதலான 5 ரூபங்களால், சூதாட்டம் முதலான 5ல் கலி இருக்கிறான் என்னும் அர்த்தம் சரியாகவே பொருந்துகிறது.

 

த்ரிவித4 ஜீவ்ப்ரததிக3

க்33வொளெயாண்மாலயனு நிர்மிஸி

யுவதியரொடகூடி3 க்ரீடி3ஸுவனு க்ருபாஸாந்த்3|

தி3விஜ தா3னவ தாரதம்யத3

விவர திளிவ மஹாத்மரிகெ3 பா3

ந்னவிர 2 தானொலிது3 உத்34ரிஸுவனு ப4வதி3ந்த3 ||21

 

க்ருபா ஸாந்த்ர = கருணாளுவான

ஸக்கவொளெயாண் மாலயனு = ஸக்க = ஸ்வர்க்க, வொளெய = அங்கிருந்து வந்த கங்கை ஆண்ம = ஆதரவு கொடுக்கும், அதாவது, கங்கையின் பதியான சமுத்திரம், ஆலயனு = வீடாகக் கொண்டவன். அதாவது, பாற்கடல்வாசியான ஸ்ரீஹரி

த்ரிவித ஜீவ ப்ரததிகள = மூன்று வித ஜீவ சங்கங்களை

நிர்மிஸி = படைத்து

யுவதியர ஒடகூடி = ஸ்ரீ, பூ, துர்கா என்னும் மூன்று ரூபத்தினால் இருக்கும் ரமாதேவியுடன் சேர்ந்து

க்ரீடிசுவனு = படைத்தவர்களை காத்தல், அழித்தல் முதலான லீலைகளை செய்கிறான்.

திவிஜ தானவ தாரதம்யத = தேவ தைத்யர்களின் தாரதம்யத்தை

விவிர திளிவ மஹாத்மரிகெ = விவரங்களை அறிந்த மகாத்மருக்கு

பான்னவிர சக = பான் என்றால் ஆகாயம். நவிர என்றால் முடியாகக் கொண்ட ருத்ரதேவர். சக = ருத்ரதேவரின் நண்பனான ஸ்ரீஹரி,

தானொலிது = தான் தரிசனம் அளித்து

பவதிந்த = இந்த சம்சார வாழ்க்கையிலிருந்து

உத்தரிசுவனு = காப்பாற்றுகிறான்.

 

தேவ நதியான கங்கையின் பதியான வருணன், சமுத்ராபிமானி ஆகையால், சமுத்திரன் என்று அழைக்கப்படுகிறான். அனைத்து சமுத்திராத்மனும் வருணனே. பாற்கடலில் இருக்கும் ஸ்வேதத்வீபத்தில் வசித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஹரி, இந்த விதமாக மூன்று வித ஜீவ சங்கங்களையும் படைத்து, ஸ்ரீ பூ துர்கா ஆகிய மூவருடன் சேர்ந்து, தன் லீலைகளை செய்து கொண்டிருக்கிறான். ஆகாயத்தை தன் கேசமாகக் கொண்டவர் ருத்ரதேவர். வ்யோமகேஷ என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கும் சொல்லையே தாசார்யர், ‘பான்னவிரஎன்று சொல்லியிருக்கிறார். ருத்ர சக = ஸ்ரீஹரி. தேவ தைத்யர்களின் தாரதம்யத்தை அறிந்து உபாசனை செய்யும் மகாத்மர்களுக்கு ஸ்ரீஹரி தரிசனம் அளித்து, அவர்களை சம்சாரத்திலிருந்து காப்பாற்றி அருள்கிறான்.

 

தே3வதை3த்யர தாரதம்யவு

பாவமான மதானுக3ரிகி3து

கேவலாவஷ்யகவு திளிவது3 ர்வகாலத3லி |

தா3வஷிகி2 பாபாடவிகெ3 நவ

நாவெயெனிபுது34முத்3ரகெ

பாவடிகெ3 வைகுண்ட2லோககிதெ3ந்து3 கரெஸுவது3 ||22

 

இது = இந்த சந்தியில் கூறப்பட்டுள்ள

தேவ தைத்யர தாரதம்யவு = தேவ தைத்யர்களின் தாரதம்யம்

பாபமானி மதானுகரிகெ = வாயு மதானுகர்களுக்கு (மத்வ மதத்தை பின்பற்றுபவர்களுக்கு)

சர்வகாலதலி = அனைத்து காலங்களிலும்

கேவலாவஷ்யகவு = மிகவும் முக்கியமானது / கண்டிப்பாக தேவையானது

திளிவது = என்று அறியவேண்டும்

இது = இந்த தாரதம்ய ஞானம்

பாபாடவிகெ = பாப என்னும் கடுமையான காட்டிற்கு

தாவஷிகி = காட்டுத்தீயைப்போல இருக்கிறது

பவஸமுத்ரகெ = சம்சாரம் எனும் கடலுக்கு

நவனாவெயெனிபுது = புதியதான படகினைப் போல இருக்கிறது

வைகுண்ட லோலக்கெ = வைகுண்டத்திற்குப் போவதற்கு

பாவடிகெயெந்து = படிக்கட்டுகள் என்று

கரெசுவுது = சொல்லப்படுகிறது.

 

இந்த சந்தியில் சொல்லப்பட்டுள்ள தேவ தைத்யர்களின் தாரதம்ய ஞானமானது, மத்வ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் தேவையான விஷயம் என்று ஸ்ரீமன் மத்வாசார்யரின் வாக்கியமே உள்ளது. பஞ்சபேத ஞானம், தாரதம்ய ஞானம் இல்லாமல் முக்தி இல்லை என்னும் விஷயத்தில் ஸ்ரீமதாசார்யர் உதாரணம் கொடுத்திருக்கும் ஆதாரத்தை, இந்த சந்தியில் துவக்கத்தில் கொடுத்திருக்கிறோம். ஆகையாலேயே, தாசார்யரும் தாரதம்ய ஞானம் மிகவும் அவசியம் என்று சொல்லியிருக்கிறார். இந்த தாரதம்ய ஞானம் பாப என்னும் காட்டினை சுடும் விஷயத்தில் காட்டுத்தீயைப் போல இருக்கிறது. சம்சாரம் என்னும் சமுத்திரத்தை கடக்கும் படகாக இருக்கிறது. வைகுண்ட லோகத்திற்கு ஏறிப் போவதற்கு படிக்கட்டுகளாக இருக்கிறது. ஆகையாலேயே மத்வ மதத்தை பின்பற்றுபவர்களுக்கு தாரதம்ய ஞானம் மிகவும் அவசியம் என்று சொல்லியிருக்கிறார்.

 

தாரதம்யஞான முக்தி

த்3வாரவெனிபுது34க்தஜனரிகெ3

தோரி பேளி ஸுகா2ப்தி4யொளு லோலாடு3வுது3 பு33ரு |

க்ரூரமானவரிகி3து3 கர்ண க

டோரவெனிபுது3 நித்யத3லி அதி4

காரிக3ளிகி33னருபுவுது3 துஸ்தர்க்கிக3ள பி3ட்டு ||23

 

தாரதம்ய ஞான = மேலே பார்த்த தாரதம்ய ஞானம்

முக்தி த்வாரவெனிபுது = முக்திக்கு செல்லும் வாயில் எனப்படுகிறது

புதரு = ஞானிகள்

பக்தஜனரிகெ = பக்த ஜனர்களுக்கு

தோரி = தாரதம்ய ஞானத்தை உபதேச ரூபமாக சொல்லிக் கொடுத்து

கேளி = பெரியவர்களின் முகத்திலிருந்து தாமும் கேட்டு

சுகாப்தியொளு = சுகம் என்னும் கடலில்

லோலாடுவுது = மூழ்கி, நீச்சலடித்துக் கொண்டிருக்கலாம்

க்ரூரமானவரிகிது = மித்யா ஞானம், தவறான ஞானம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவர்களுக்கு

இது = இந்த தாரதம்ய ஞானம்

கர்ண கடோரவெனிபுது = காதுகளில் கேட்பதற்கும் சாத்தியமில்லாத பேச்சுக்களாக இருக்கிறது

துஸ்தர்க்கிகள பிட்டு = குதர்க்கம் பேசும் அயோக்யர்களுக்கு இதை சொல்லாமல்

நித்யதலி = தினந்தோறும்

அதிகாரிகளிகெ = இதைக் கேட்கும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்

இதனு = இந்த தாரதம்யத்தை

அருபுவுது = சொல்லத் தக்கது.

 

இந்த தாரதம்ய ஞானம், யோக்யர்களுக்கு மட்டுமே முக்திக்கான மார்க்கம் என்று தெரியுமே தவிர, மித்யா ஞானிகள், தவறான ஞானம் கொண்டவர்களுக்கு இது காதால் கேட்பதற்குக்கூட சாத்தியமற்ற பேச்சுக்களாக இருக்கிறது. ஆகையால், அத்தகையவர்களுக்கு இதனை உபதேசம் செய்யாமல், இதற்கு அதிகாரிகள் யாரோ, அத்தகைய முக்தி யோக்யர்களுக்கு மட்டும் உபதேசம் செய்தவாறு, தானும் பெரியவர்களின் முகங்களிலிருந்து கேட்டவாறு, சுக சமுத்திரத்தில் மூழ்கியவாறு, நீச்சல் அடித்தவாறு, இருக்க வேண்டும் என்பது கருத்து.

 

ஹரி ஸிரி விரிஞ்சீர பா4ரதி

3ருட ப2ணிபதி ஷண்மஹிஷியரு

கி3ரிஜெ நாகேஷ ஸ்மர ப்ராண அனிருத்34 ஷசி |

கு3ரு ரதி மனு த3க்‌ஷ ப்ரவஹா

மருத மானவி யம ஷஷி தி3வா

கர வருண நாரத3 ஸுராஸ்ய ப்ரஸூதி ப்ருகு3முனிப ||24

 

ஹரி = ஸ்ரீபரமாத்மன்

சிரி = ஸ்ரீலட்சுமிதேவி

விரிஞ்சி = பிரம்மதேவர்

ஈர = வாயுதேவர்

பாரதி = சரஸ்வதி பாரதியர்

கருட

பணிபதி = சேஷ (ருத்ரர்)

ஷண்மஹிஷியரு = கிருஷ்ணனின் மனைவியர்களான ஜாம்பவதி முதலான 6 பேர்

கிரிஜ = பார்வதி (இவருக்கு சமரான சௌபர்ணி வாருணி என இந்த மூவரும்)

நாகேஷ ஸ்மர = இந்திர மன்மதன்

பிராண, அனிருத்த, சசி, குரு, ரதி,

மனு = ஸ்வாயம்புவ மனு

தக்‌ஷ, ப்ரவஹா வாயு,

மானவி = ஷதரூபா

யம,

சசி = சந்திரன்

திவாகர = சூரியன்

வருண, நாரத,

சுராஸ்ய = அக்னி

ப்ரஸூதி

ப்ருகு முனிப = ப்ருகு முனிவர்

 

பத அர்த்தத்திலேயே விளக்கம் தெளிவாக உள்ளது.

 

வ்ரததிஜாஸன புத்ரரெனிஸு

வ்ரதிவரத்ரி மரீசி வைவ

ஸ்வதனு தாரா மித்ர நிர்ருதி ப்ரவஹமாருதன

தி த4னெஷாஷ்வினிக3ளிகெ33

பதியு விஷ்வக்ஸேஸேஸு

ஷதரு மனுக3ளுசத்4ய ச்யாவன முனிக3ளிகெ3மிபெ ||25

 

வ்ரததிஜாஸன = சேற்றிலிருந்து பிறந்த தாமரையையே ஆசனமாகக் கொண்ட, பிரம்மதேவரின்

புத்ரரெனிஸுவ = மக்கள் என்று அழைக்கப்படும்

வ்ரதிவர = விரதம் உள்ளவர்களில் சிறந்தவர்களான

அத்ரி, மரீசி, வைவஸ்வதனு

தாரா = பிருஹஸ்பத்யாசார்யரின் மனைவி தாரா

மித்ர = மித்ர நாமக சூரியன்

நிர்ருதி

ப்ரவஹ மாருதன சதி = ப்ரவஹ மாருதனின் மனைவி ப்ராவஹி

தனேஷ = குபேரன்

அஷ்வினிகளிர் = அஸ்வினி தேவதைகள் இருவர்

கணபதி, விஷ்வக்சேன,

சேஷ சுஷதரு = 100 பேர் தேவதைகளில் முன்னர் பார்த்தவர்களைத் தவிர மற்றவர்கள்

உசித்ய ச்யாவன முனிகளிகெ = உசித்ய, ச்யாவன முனிவர்களுக்கு

நமிபெ = முன்னர் இரு பத்யங்களில் கூறிய அனைவரையும் வணங்குகிறேன்.

 

பத அர்த்தத்திலேயே விளக்கம் தெளிவாக உள்ளது.

 

ஷத ஸுபுண்ய ஸ்லோகரெனிஸு

க்‌ஷிதிபரிகெ3 நமிஸுவெனு பா4கீ3

ரதி விராட்பர்ஜன்ய ரோஹிணி ஷ்யாமலா ஞ்ஞா |

ஹுதவஹன மஹிளா பு3தோ4ஷா

க்‌ஷிதி ஷனைஸ்சர புஷ்கரரிகா3

நதிஸி பி3ன்னைஸுவெனு ப4க்தி ஞான கொட3லெந்து3 ||26

 

ஷத சுபுண்ய ஸ்லோக ரெனிஸுவ க்‌ஷிதிபரிகெ = புண்ய கீர்த்திகள் என்று புகழ் பெற்றிருக்கும் 100 சக்ரவர்த்திகளுக்கு

பாகிரதி விராட் = அனிருத்தனின் மனைவியான உஷாதேவி

பர்ஜன்ய = பர்ஜன்ய நாமக சூரியன்

ரோஹிணி = சந்திரனின் மனைவி

ஷ்யாமலா = யமதேவரின் மனைவி

சஞ்ஞா = விவஸ்வத என்னும் சூரியனின் மனைவி

ஹுதவஹன மஹிளா = அக்னியின் மனைவி ஸ்வாஹாதேவி

புத,

உஷா = அஷ்வினி தேவதைகளின் மனைவி

க்‌ஷிதி ஷனைஸ்சர = பூமிக்கு அபிமானியான சனீஸ்வரன்

புஷ்கரரிகெ = புஷ்கரன் வரைக்குமான, மேலே கூறிய அனைவருக்கும்

நமிஸுவெனு = நமஸ்காரம் செய்கிறேன்

அனுதிஸி = நன்றாக இவர்கள் அனைவரையும் வணங்கி

பக்தி ஞான கொடலெந்து = பக்தி, ஞானத்தை எனக்குக் கொடுக்கவும் என்று

பின்னைசுவேனு = பிரார்த்திக்கிறேன்.

 

பத அர்த்தத்திலேயே விளக்கம் தெளிவாக உள்ளது.

 

நூரதி4கவாகி3ப்ப மத்ஹதி3

நாருஸாவிர நந்த3கோ3பகு

மாரனர்த்3தா4ங்கி3யர க3ஸ்த்யாதீ3 முனீஷ்வரரு |

ஊருவஷி மொத3லாத3 அப்ஸர

நாரியரு ஷத தும்பு3ரரு கம்

ஸாரி கு3ணக3ள கீர்த்தனெய மாடி3லி என்னிந்த3 ||27

 

நூரதிகவாகிப்ப = 100க்கு அதிகமான

ஹதினாரு சாவிர = 16,000 எண்ணிக்கையில் உள்ள

நந்தகோப குமாரன = ஸ்ரீகிருஷ்ணனின்

அர்த்தாங்கியரு = மனைவிகள்

அகஸ்த்யாதிக = அகஸ்திய முதலான

முனீஷ்வரரு = முனிவர்கள்

ஊர்வஷி மொதலாத அப்ஸர நாரியரு = ஊர்வசி முதலான அப்ஸர ஸ்த்ரியர்கள்

ஷத = 100 பேர் அப்ஸர ஸ்த்ரியர்கள்

தும்பரரு = 100 பேர் தும்புரு கந்தர்வர்கள், இவர்கள் அனைவரும்

என்னிந்த = என்னிடமிருந்து

கம்ஸாரி குணகள = ஸ்ரீகிருஷ்ணனின் குணங்களை

கீர்த்தனெய மாடிஸலி = கீர்த்தனையை செய்விக்கட்டும்.

 

பத அர்த்தத்திலேயே விளக்கம் தெளிவாக உள்ளது.

 

பாவரு ஷுசி ஷுத்34 நாமக

தே3வதெக3ளாஜான சிரபித்ரு

தே3வனர க3ந்த4ர்வர வனிப மானுஷோத்தமரு |

ஈ வஸுமதியொளுள்ள வைஷ்ணவ

ராவளியொளி ஹரெந்து3 நித்யதி3

ஸேவிபுது3 ந்தோஷதி3ம் ர்வப்ரகாரத3லி ||28

 

பாவனரு ஷுசி சுத்த நாமக = இந்த பெயர்களைக் கொண்ட,

தேவதெகளாஜான = சோம பானத்திற்கு தகுதியற்ற தேவதைகள்

சிரபித்ரு = சிரபித்ருகள்

தேவனர கந்தர்வர = தேவ கந்தர்வர்கள், மனுஷ்ய கந்தர்வர்கள்

அவனிப = ராஜர்கள்

மானுஷோத்தமரு

ஈ வசுமதியொளுள்ள = இந்த பூமியில் இருக்கும்

வைஷ்ணவரு = விஷ்ணு பக்தர்கள்

அவளியொளு = மேற்கூறிய மானுஷோத்தமர்களை

இஹரெந்து = சேர்ந்தவர்கள் என்று

நித்யதி சந்தோஷதிம் = தினந்தோறும் சிந்தித்து, மகிழ்ச்சியுடன்

சேவிபுது = வணங்க வேண்டும்.

 

இந்த காலத்திலும், இந்த பூமியில், மனுஷ்யோத்தமர்கள் கணத்தை சேர்ந்தவர்கள், பாகவதோத்தமர்கள், எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து, தாரதம்யத்தின்படி, அனைவரையும், அனைத்து விதங்களிலும், தினமும் சேவை செய்தால், அதுவே முக்திக்கு சாதனையாகிறது என்பது கருத்து.

 

மானுஷோத்தமரனு பிடி3து3 சது

ரானனாந்த3 ஷதோத்தமத்வ க்ர

மேண சிந்திப ப4குதரிகெ3 சதுரவித4 புருஷார்த்த2 |

ஸ்ரீநிதி4 ஜகன்னாத2விட்ட2

தானெ ஒலிதீ3வனு நிரந்தர

ஸானுராக3தி3 படிஸுவுது3 ப்ராக்ஞரித3 மரெயத3லெ ||29

 

மானுஷோத்தமரனு = மனுஷ்யோத்தமர்களை

பிடிது = அவர்களில் இருந்து துவங்கி

சதுரானனாந்த = பிரம்மதேவர் வரையிலும்

ஷதோத்தமத்வ க்ரமேண = 100-100 குணங்கள் சிறந்தவர்கள் என்ற விதத்தில்

சிந்திப = அறியும்

பக்தரிகெ = பக்தர்களுக்கு

ஸ்ரீனிதி ஜகன்னாதவிட்டல = ஸ்ரீதேவி என்னும் நிதி உள்ள ஜகன்னாத விட்டலன் என்னும் பெயரைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்

தானே ஒலிது = தானாகவே மகிழ்ந்து

சதுரவித புருஷார்த்த = தர்ம, அர்த்த, காம, மோக்‌ஷ என்னும் 4 வித புருஷார்த்தங்களை

ஈவனு = கொடுக்கிறான்.

இது = இந்த தாரதம்ய சந்தியை

மரியதலெ = மறக்காமல் (சிந்தனையில் வைத்துக் கொண்டு)

ப்ராஞ்ஞரு = பகவத் பக்தர்களான ஞானிகள்

நிரந்தர = தினந்தோறும்

ஸானுராகதி = பக்தியுடன்

படிசுவுது = படிக்க வேண்டும்.

 

மனுஷ்யோத்தமரில் துவங்கி, பிரம்மதேவர் வரைக்கும், ஒருவரைவிட மற்றொருவர் 100 குணங்கள் உத்தமர் என்ற கிரமத்தில் அதாவது, சிலரின் மனைவிகளுக்கு 10 குணங்கள் உச்ச / நீச கிரமத்தையும் சொல்லியிருக்கிறார். இங்கு 100 குணங்கள் என்று சொன்னது, பொதுவாக என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

 

ஆகமொத்தம், இந்த சந்தியில் கூறிய கிரமத்தில் யார் தினமும் சிந்திக்கின்றனரோ, அவருக்கு ஸ்ரீஹரி, தானாகவே மகிழ்ந்து, சதுர்வித புருஷார்த்தங்களை கொடுக்கிறான். ஆகையால், இதனை மறக்காமல் தினமும் இந்த சந்தியை, பக்தி மரியாதைகளுடன் படிக்க வேண்டும்.

 

குணதாரதம்ய சந்தி என்னும் 20ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***

 

 

No comments:

Post a Comment