ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, August 10, 2020

16-20 தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி

தூ3ரத3ல்லிஹ பர்வத க4னா

கார தோர்புது3 நோள்ப ஜனரிகெ3

ஸாரெகை3யலு ர்ப்ப வ்யாக்4ரக3ளிந்த ப4விஹுது3 |

கோ4ரதர ம்ஸாஸு2வு அ

ஸாரதரவெந்த3ரிது நித்ய ர

மாரமண நாராதி3ஸுவரத3ரிந்த33ல்லவரு ||16

 

தூரதில்லிஹ = தூரத்தில் தெரியும்

பர்வத = மலை

கனாகார = மேகத்தைப் போல மென்மையாக

நோள்ப ஜனரிகெ = பார்ப்பவர்களுக்கு

தோர்புது = தெரிகிறது

ஸாரெகையலு = அருகில் சென்று பார்த்தால்

ஸர்வ = பாம்புகள்

வ்யாக்ரகளிந்த = புலிகள் இருந்து

பயவிஹது = பயங்கரமாக இருக்கிறது

கோரதர சம்சார சுகவு = பயங்கரமான சம்சார சுகத்தை

அஸாரதரவெந்தரிது = பிரயோஜனம் இல்லாதது என்று அறிந்து

அதரிந்த = அந்த காரணத்தாலேயே

பல்லவரு = ஞானிகள்

ரமாரமணன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனை

ஆராதிஸுவரு = பூஜிக்கின்றனர்.

 

தூரத: பர்வதோரம்ய:’ - மலைகள் தூரத்திலிருந்து பார்த்தால், மேகங்களைப் போல மென்மையாக, அழகாக தெரிகிறது. ஆனால் அதையே பக்கத்தில் சென்று பார்த்தால், பாம்பு, புலி முதலான துஷ்ட பிராணிகளுடன் பயங்கரமாக இருக்கிறது.

 

அதைப் போலவே, சம்சாரத்திலும், மிகப்பெரிய மாளிகையை வைத்துக்கொண்டு, மனைவி, மக்கள் ஆகியவர்களுடன் இருப்பவர்களைப் பார்த்து, இவர்கள் சம்சாரத்தில் இவ்வளவு சுகப்படுகிறார்கள் என்று நினைத்து, நாமும் அவர்களைப்போல சுகப்படவேண்டும் என்று மயங்கி, சம்சாரத்தில் மூழ்கி பற்பல துக்கங்களை அனுபவித்த பிறகு, இனி எப்பிறவியிலும் இந்த சம்சாரம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தோன்றும். ஆகையால், ஞானிகள், பிரயோஜனம் இல்லாத இந்த சம்சாரத்தில் பரமாத்மனின் ஆராதனை ஒன்றே பலன் உள்ளது என்று அறிந்து ஸ்ரீரமாரமணனை ஆராதிக்கின்றனர்.

 

கெரக4டக3ல மாடி3 பே3ஸிகெ3

பி3ஸிலொளிட்டொ ணகி3ஸி3து34

வ தும்ப3லு ப3ஹுதெ3 ர்வ ஸ்வதந்த்ர தானெம்ப3

பஷுப நரனேனெனு மாள்ப அ

நஷன தா3ன ஸ்னான கர்மக3

ளொரிபோபுவு ப3ரிதெ3 தே3ஹாயாஸவனெ கொட்டு ||17

 

கெசரகடகல மாடி = மண் பானை செய்து

பேஷிகெ பிஸிலொளு இட்டு = க்ரீஷ்ம ருதுவின் வெய்யிலில் அவற்றை வைத்து

ஒணகிஸிதரெ அவு = உலர வைத்தால், அவை

கனரஸவ = நீர் முதலான திரவ்யங்களை

தும்பலு பஹுதெ = அதில் நிரப்ப முடியுமா?

சர்வ ஸ்வதந்த்ர தானெம்ப = தானே ஸ்வதந்த்ரனாகி அனைத்து செயல்களையும் செய்கிறேன் என்னும்

பஷுப நர = மிருகங்களைப் போல தின்பவன்

ஏனேனு மாள்ப = எந்தெந்த செயல்களை செய்கிறானோ

அனஷன தான ஸ்னான கர்மகளு = உபவாச, தான, ஸ்னான முதலான கர்மங்கள்

பரிதெ = எவ்வித பலன்களையும் கொடுக்காமல்

ஒசரி போபுவு = வெளியேறி விடுகிறது

தேஹாயாஸவனெ = உடலுக்கு சோர்வினை மட்டும்

கொட்டு = கொடுக்கின்றன

 

மண்ணால் பானையை செய்து, அதை சுடும் வெய்யிலில் வைத்து உலர்த்தி, பின் அதில் நீர் நிரப்பினால், அந்த நீர் அதில் தங்காது. வெளியேறிவிடும். அதே பானையை நன்றாக சுட்டு, பின் நீர் நிரப்பினால், அந்த நீர் அதிலேயே தங்குகிறது. அதுபோலவே, தேகம் என்னும் பானையில் இருக்கும் புருஷன், தானே ஸ்வதந்த்ரத்தினால் கர்மங்களை செய்கிறேன் என்றால், இந்த தேகம் பிறந்தபோது இருந்த மாதிரியே இருந்து, செய்த புண்ணியங்கள் அனைத்தும் எவ்வித பலன்களைக் கொடுக்காமலேயே போய்விடுகின்றன.

 

பானையை நெருப்பில் சுட்டதைப்போல, சரீரத்திற்கு பகவந்தனே ஸ்வதந்த்ரகர்த்தன், ஸர்வோத்தமன் என்னும் ஞானமே நெருப்பு ஆகிறது. அந்த ஞானம் என்னும் நெருப்பால் சுட்டு, சுட்ட-பானை எப்படி நீரை தக்க வைத்துக் கொள்கிறதோ, அது போல, தேகம் செய்த புண்ணியங்களை வெளியே விடாமல் காப்பாற்றுகிறது. ஆகையால், ஸ்வதந்த்ர கர்த்தன் பரமாத்மன் என்று, நாம் செய்த புண்யபாபங்களை பரமாத்மனுக்கு சமர்ப்பித்தால், தானே ஸ்வதந்த்ர கர்த்தன் என்று நினைக்கும், மிருகங்களைப் போல தின்பவன் செய்யும் ஸ்னான, தானாதி அனைத்தும் அவனுக்கு வெறும் உடற் சோர்வினைக் கொடுக்கின்றன என்பது கருத்து.

 

எரடு3 தீ3க்‌ஷெக3ளிவு பா3ஹ்யா

ந்தரவெனிப நாமத3லி பு34ரி

ந்த3ரிது தீ3க்‌ஷிதனாகு3 தீர்க்க4 த்3வேஷ23ள பி3ட்டு |

ஹரியே ர்வோத்தம க்‌ஷராக்‌ஷர

புருஷபூஜிதபாத3 ஜன்மா

த்3யரவிதூ3ஸுகா2த்ம சர்வக3னெந்து3 ஸ்மரிஸுதிரு ||18

 

பாஹ்யா = வெளிப்புற

அந்தர = உட்புற

நாமதலி = என்ற பெயர்களில்

எரடு தீக்‌ஷெகளிகவு = இரு தீட்சைகள் இருக்கின்றன

புதரிந்த = ஞானிகளிடமிருந்து

அரிது = (இந்த தீக்‌ஷைகளின் கிரமத்தை) அறிந்து கொண்டு

தீக்‌ஷிதனாகு = தீட்சைகளை அனுசரித்து வா

தீர்க்கத்வேஷகள பிட்டு = யாரிடமும் த்வேஷங்களை செய்யாமல்

ஹரியே சர்வோத்தம = ஸ்ரீஹரியே சர்வோத்தமன் என்றும்

க்‌ஷராக்‌ஷர = அக்‌ஷர நாமக ரமாதேவியாலும், க்‌ஷர எனப்படும் பிரம்மாதி தேவதைகளாலும்

புருஷ பூஜித பாத = இப்படியான ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவன்

ஜன்மாத்யரவிதூர = பிறப்பு முதலான தோஷங்கள் அற்றவன்

சுகாத்ம = சுக ஸ்வரூபன்

சர்வகனு = அனைத்து இடங்களிலும் வசிப்பவன்

ஸ்மரிஸுதிரு = என்று நினைத்து அவனை வணங்கிக் கொண்டிரு.

 

வைஷ்ணவர்களுக்கு முக்கியமானது தீக்‌ஷா- ஸ்வீகாரம். விஷ்ணு தீக்‌ஷியை ஸ்வீகரிக்காதவன், வைஷ்ணவனே இல்லை. விஷ்ணு ரஹஸ்ய 7ம் அத்தியாயத்தில்:

 

ஸர்வாஸாமபி தீக்‌ஷாணாம் விஷ்ணு தீக்‌ஷாதிகாமதா |

யத: ஸர்வேஷ்வரோ விஷ்ணுர் தேவானாமபி தேவதா ||53

யஸ்யஸ்யாத்வைஷ்ணவீ தீக்‌ஷா ஸர்வைர்மான்ய: ஸதீக்‌ஷித: |

அவஜானாதி யஸ்தந்து ஸோவஜானாதி கேஷவம் ||55

அங்கிதம் ஷங்கசக்ராத்யைர் விஷ்ணு தீக்‌ஷான்விதம் நரம் |

யோனிந்ததி விமூடாத்மா ஸர்வேஷ்டா விஷ்ணு மேவஹி ||56

நீச வர்ணோபியோ விஷ்ணு தீக்‌ஷாவான் ஸஹிபந்துவத் |

வினாப்ரணாமம் மான்யே ஸ ராமக்ருஷ்ணாதி நாமபி: ||58

உச்சவர்ணோபி யே விப்ரோ: வேத வேதங்க பாரக: |

ஸதாசார ரதோபிஸ்யாத்விஷ்ணு தீக்‌ஷா விவர்ஜித: ||59

ஸஜோரவத்பஹிஷ்கார்யஸ்த ஸ்ம்ருததஞ்ச நிஷ்பலம் |

பாத்ரம் ஹி பரமம் ப்ரோக்தம் ஹவ்யகவ்யாதித: ஸதா ||60

யஸ்யஸ்யாத் வைஷ்ணவே தீக்‌ஷாதத்தம் பவதி சாக்‌ஷயம் ||

 

உலகத்தில் பிற தேவதைகளை உபாசனை செய்தவாறு, அந்த தீக்‌ஷையை ஸ்வீகரிப்பவர்கள் பலர் உண்டு. சைவ தீக்‌ஷை முதலான அனைத்து தீக்‌ஷைகளைவிட விஷ்ணு தீக்‌ஷை மிகச் சிறந்தது. ஏனெனில், பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும் விஷ்ணுவே ஸ்வாமியானவன். தேவதைகளுக்கெல்லாம் தேவதை எனப்படுபவன். ஆகையால், விஷ்ணு தீக்‌ஷையே உத்தமமானது ஆகும். யார் விஷ்ணு தீக்‌ஷையை ஏற்றிருக்கிறாரோ, அவன் அனைவராலும் புகழப்படுகிறான். அவனை வேறு யாராவது திட்டினால், அது விஷ்ணுவையே அவமானம் செய்ததைப் போலாகிறது. நீச வர்ணத்தவனாக இருந்தாலும்கூட ஒருவன் விஷ்ணு தீக்‌ஷையை ஏற்றுக்கொண்டால், அவனை நம் உற்றார் போல நினைக்க வேண்டும். ராமகிருஷ்ணாதி பெயர்களால் அவனை கௌரவிக்க வேண்டும்.

 

பிராமணனாக பிறந்து, வேத வேதாங்கங்களில் தேர்ச்சி பெற்று, சதாசாரங்களை பின்பற்றுபவனாக இருந்தாலும், விஷ்ணு தீக்‌ஷையைப் பெறவில்லையெனில், அவனை, திருடனை வெளியில் தள்ளுவதைப் போல வெளியில் தள்ள வேண்டும். அவனுக்கு எவ்வித தானங்களைக் கொடுத்தாலும், அது எவ்வித பலன்களையும் கொடுப்பதில்லை.

 

யார் வைஷ்ண தீக்‌ஷை பெற்றிருக்கிறானோ, அவனே சத்பாத்ரன் ஆகிறான். பகவத் பிரசாதங்களை இவனுக்கு கொஞ்சம் கொடுத்தாலும் கூட, அது அக்‌ஷயமாகிறது -- என்னும் பல வாக்கியங்களால், விஷ்ணு தீக்‌ஷைக்கு மகாமகிமைகளை சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷ்ணு தீக்‌ஷையில், பாஹ்ய தீக்‌ஷை, அந்தர தீக்‌ஷை என்று இரு விதங்கள். விஷ்ணு ரஹஸ்யத்தின் 7ம் அத்தியாயத்தில்:

 

தீக்‌ஷாஹி த்விவிதாப்ரோக்தா பாஹ்யாப்யந்தர பேதஷ:

ஞானினா முபயம் தத்ர பாஹ்யோவாsங்ஞானினாம் பவேத் ||39

அயம் ஸர்வேஷ்டதாதா மே ஸர்வானிஷ்ட நிவாரக: |

ஸர்வோத் க்ருஷ்டோsய மேவைகஸ்ததீயோ ஹம்ஸமேபதி: ||40

இதி ஞானம் நிஸ்சிதம் யத்ஸா தீக்‌ஷாப்யந்தராமதா ||

 

தீக்‌ஷையில் புற, அக என்று இரு விதங்கள் உண்டு. ஞானிகளுக்கு இந்த இருவித தீக்‌ஷையும் பொருந்தும். அஞ்ஞானிகளுக்கு என்றால், சிறிய குழந்தைகள் முதலானவர்களுக்கு புற தீட்சை கண்டிப்பாக இருக்கவேண்டும். இவற்றில் அக தீட்சை என்னவென்றால், ஸ்ரீபரமாத்மன், எனக்கு அனைத்து செல்வங்களையும் கொடுப்பவன். அனைத்து துன்பங்களையும் போக்குபவன். பரமாத்மன் ஒருவனே சர்வோத்தமன். நான் எப்போதும் அவன் அதீனமே. எனக்கு அவன் ஸ்வாமி என்னும் ஞானம் திடமாக (சந்தேகமில்லாமல்) இருப்பதே அக தீட்சை என்கிறார்.

 

இதே அபிப்பிராயத்தையே தாசராயரும் இங்கு சொல்கிறார். ஹரியே சர்வோத்தமன். க்‌ஷராக்‌ஷர புருஷர்களான பிரம்மாதிகளால் பூஜிக்கப்படுபவனான பாத கமலங்களைக் கொண்டவன். பிறப்பு இறப்பு முதலான தோஷங்கள் இல்லாதவன், ஆனந்த ஸ்வரூபன். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவன் என்று அறிந்து எப்போதும் அவனை வணங்கிக் கொண்டிருப்பதே அக தீட்சை.

 

ஹேயவஸ்துக3ளில்ல ஊபா

தே3யவஸ்துக3ளில்ல ந்யாயா

ன்யாய த4ர்மக3ளில்ல த்3வேஷாஸுயே மொத3லில்ல |

தாயிதந்தெ33ளில்ல க1மலத3

லாயதாக்‌ஷகெ3 எனலு ஈஸு

காயியந்த3தி3 முளுக3கொட3தெ34வாப்3தி4 தா3டிஸு||19

 

கமலதலாயதாக்‌ஷகெ = தாமரையைப் போல கண்களை உடைய ஸ்ரீபரமாத்மனுக்கு

ஹேய வஸ்துகளல்ல = எந்த பொருள் நம்மிடம் இருப்பதால் நமக்கு மிகவும் துக்கம் வருகிறதோ, அத்தகைய பொருள் நம்மை விட்டு விலகினால் போதும் என்று நினைக்கிறோமோ, அத்தகைய பொருட்கள் பரமாத்மனுக்கு இருப்பதில்லை.

உபாதேய வஸ்துகளில்ல = எந்த பொருட்கள் இல்லை என்றாலும் சுகமாக இருக்கிறதோ, அத்தகைய பொருட்களும் இல்லை.

ந்யாயான்யாய தர்மகளல்ல = இது நியாயம், இது அ நியாயம் என்னும் தர்மபேதங்கள் இல்லை

த்வேஷாஸூயே மொதலில்ல = ஒருவரிடம் த்வேஷம், மற்றொருவரிடம் வயிற்றெரிச்சல் என்பவை இல்லை

தாயிதந்தெகளில்ல = அவனுக்கு தாய் தந்தைகள் இல்லை

யெனலு = என்று உபாசனை செய்தால்

ஈஸோகாயியந்ததி = சுரைக்காய் எப்படி மூழ்காமல் இருக்குமோ அப்படி

பவாப்தி = சம்சார சாகரத்தை

தாடிசுவ = தாண்ட வைப்பான்.

 

வாழ்க்கையில் மக்களுக்கு இரு வகை துக்கங்கள் உண்டு. பாகவத 7ம் ஸ்கந்தத்தில்:

யஸ்மாத்ப்ரியாப்ரிய வியோக ஸயோக ஜன்மஷோகாக்னினா ஸகல யோனிஷு தஹ்யமான: |

 

எந்தப் பொருள் நமக்கு மிகவும் பிடிக்குமோ, எந்தப் பொருளை விட்டு நாம் ஒரு கணமும் இருக்க முடியாது என்று நினைக்கிறோமோ, அத்தகைய வஸ்துவே நம்மை விட்டு போய்விடும். மற்றும், எந்த பொருட்களை நாம் தேவையில்லை என்று அறிந்து, இந்தப் பொருள் என்றும் நம்மிடம் வரக்கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தப் பொருள் நம்மை அடைந்து நம்மிடமே இருக்கும். இந்த இரண்டைவிட அதிக துக்கம் வேறெது? பரமாத்மன், ஜகத்குடும்பி ஆனாலும், இது வேண்டிய பொருள், இது தேவையில்லாத பொருள் என்னும் நினைப்பே அவனுக்கு இல்லை. மேலும், இது நியாயம், இது அநியாயம் என்னும் சிந்தனையும் அவனுக்கு இல்லை.

 

யேதோஷா இதரத்ராபிதேகுணா: பரமேமதா: -- என்னும் நியாயத்தால் மற்றவர்களிடம் எது தோஷம் என்று தோன்றுகிறதோ, அது பரமாத்மனிடம் குணமாகவே இருக்கும் என்கிறார். பரமாத்மனுக்கு ஒருவனிடமும் த்வேஷம் இல்லை. யாரிடமும் வயிற்றெரிச்சல் இல்லை. அவனுக்கு தாய் தந்தையர் இல்லை. என்று அறிந்து உபாசனை செய்வது, ஒரு அக தீட்சையாகும். இவ்விதமாக, உபாசனையை செய்தால், காய்ந்த சுரைக்காயை வயிற்றில் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்தாலும், அந்த சுரைக்காய் நீரில் மூழ்காமல் எப்படி மிதக்குமோ, அப்படியே ஸ்ரீபரமாத்மன், அக தீட்சையினால் தன்னை உபாசனை செய்பவரை, சம்சார சாகரத்தில், மூழ்கவிடாமல் மிதக்க வைத்து காப்பாற்றுவான்.

 

மந்த3னாத3ரு ரியே கோ3பி

சந்த3ன ஸ்ரீமுத்3ரெக3ள நல

விந்த34ரிஸுத ஸ்ரீதுளஸி பத்3மாக்‌ஷ ரக3ளனு |

கந்த4ரத3 மத்4யத3லி த4ரிஸி மு

குந்த ஸ்ரீ பூ4ரமண த்ரிஜக

த்வந்த்3ர்வஸ்வாமி மமகுலதெ3ய்வ எனெ பொரெவ ||20

 

மந்தனாதரு சரியே = அஞ்ஞானியானாலும் சரியே

கோபிசந்தன ஸ்ரீமுத்ரெகள = கோபிசந்தன, ஸ்ரீமுத்திரைகளை

நலுவிந்த = மகிழ்ச்சியுடன்

தரிசுத = தரித்து

ஸ்ரீதுளசி பத்மாக்‌ஷ சரகளனு = ஸ்ரீதுளசி, பத்மாக்‌ஷ மாலைகளை

கந்தரத = கழுத்தைச் சுற்றி

மத்யதலி தரிஸி = தரித்து

முகுந்த = மோட்சத்தைக் கொடுப்பவனான

ஸ்ரீபூரமண = ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருக்கு தலைவனான

த்ரிஜகத்வந்த்ய = மூன்று உலகத்து மக்களாலும் வணங்கப்படுபவனான

ஸர்வஸ்வாமி = அனைத்து உலகங்களுக்கும் ஸ்வாமியான

மமகுலதெய்வ = என் குலதெய்வமான

எனெ = இப்படியாக தியானித்தால்

பொரெவ = காப்பாற்றுவான்.

 

ஒருவன் அஞ்ஞானியானாலும், விஷ்ணு தீக்‌ஷையைப் பெற வேண்டும்.

 

நாமசின்ஹாதினா தேஹே வன்ஹினாமாம்ருதாங்கனம் |

ஸாபாஹ்யப்ரோச்யதீ தீக்‌ஷா ஹ்யஞ்ஞானாம் ஞானினாமபி |

ஷிஷவ: பஷவோன்னானி பாத்ராண்யாபரணானிச ||42

ரதத்வஜ பதாகாதி ஸர்வமஞ்ஞான முச்யதே |

ஏதேஷாம் ஹிமதீயத்வ ஞாபனாய லிகேத்ஸ்வயம் ||

 

கோபிசந்தனத்தால் 12 ஊர்த்வ புண்ட்ரங்களை தரித்து சங்கு, சக்கரம், கதா, பத்ம, நாராயண முத்திரைகளை தரிப்பது மற்றும் தப்த முத்ராதாரணங்களை தரிப்பது, ஆகியவை புற தீக்‌ஷைகள். இந்த தீக்‌ஷை ஞானிகளுக்கும், அஞ்ஞானிகளுக்கும் பொதுவானவை. ஆகையால், அனைவரும் இவற்றை தரிக்க வேண்டும். அஞ்ஞானிகள் என்றால் சிறிய குழந்தைகள், பசுக்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவை. ரத, த்வஜ, பதாகைகள் ஆகிய அனைத்தும் அஞ்ஞானிகளில் சேர்ந்தவை. இந்த பொருட்களின் மேல் இவை அனைத்தும் பகவத் சம்பந்தமானவை என்று தெரிவிப்பதற்காக 12 நாம புண்ட்ரங்களை, முத்திரைகளை இட வேண்டும். ஆகையால், அதன் மேல் அவை எப்போதும் விஷ்ணு தீக்‌ஷையைப் பெற்றிருப்பவை என்று காட்டுவதற்காக, சுண்ணாம்பினாலோ, வர்ணத்தினாலோ, அடையாளமாக காட்டுவதைப் போல நாமங்களை இட வேண்டும் என்பது கருத்து.

 

மேற்சொன்ன விஷ்ணு ரஹஸ்ய வாக்கியத்தை மனதில் வைத்து, தாசராயர் இங்கு இவ்வாறாக சொல்லியிருக்கிறார். இப்படியாக கோபிசந்தன முத்திரைகளை தரித்து, கழுத்தில் துளசிமணி மாலைகளை, கமலாக்‌ஷ சரங்களை தரித்தால், புற தீக்‌ஷையை ஏற்றுக் கொண்டதாக ஆயிற்று. பின், முகுந்த, மூன்று உலகங்களால் வணங்கப்படுபவன், சர்வஸ்வாமி, நம் குலதெய்வம் என்று உபாசனை செய்வது அக தீட்சை. இந்த இரண்டினால், தீக்‌ஷிதன் என்று சொல்லிக் கொள்பவனை, ஸ்ரீபரமாத்மன் காப்பாற்றுகிறான் என்பது கருத்து. 

No comments:

Post a Comment