ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, August 1, 2020

1-5 ஸ்வாச சந்தி

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

கிரந்தத்தில் இதுவரை அங்கங்கு, வாயுதேவர் ஒரு நாளுக்கு 21,600 ஸ்வாச ரூபமான ஜபங்களை செய்விக்கிறார் என்று சொல்லியிருக்கிறார் தாசராயர். ஸங்கோச விஸ்தராப்யாஞ்ச கதயந்தி புனீஷிண:என்று சொல்வதைப் போல முதலில் சுருக்கமாக சொல்லிவிட்டு, பின்னர் அதையே விளக்கமாக சொல்வது ஞானிகளின் வழக்கம். அதுபோலவே, தாசராயரும் ஒரு நாழிகை முதல் ஒரு ஆண்டு வரை ஒவ்வொரு கால அளவிற்கும் எவ்வளவு ஸ்வாச ஜபங்கள் ஆகிறது என்னும் விவரத்தை இந்த சந்தியில் தெரிவிக்கிறார்.

 

பா4ரதீனு க4ளிகெ3யொளு மு

ந்னூரு அரவத்துஸிரு ஜபக3

தா ரசிஸுவனு ர்வஜீவரொளித்து3 பே3ரதெ3 |

காருணிகனவரவர ஸா4

பூரயிஸி பூ4 ஸ்வர்க3 நரகவ

ஸேரிஸுர்வக்3கலேஷ்ட ப்ரதா3யகனு ||1

 

பாரதீசனு = பாரதிபதியான முக்யபிராணதேவர்

களிகெயொளு = ஒரு நாழிகையில்

முன்னூரு அரவத்துஸிரு ஜபகள = 360 ஸ்வாச ஜபங்களை

சர்வ ஜீவரொளித்து = அனைத்து ஜீவர்களிலும் இருந்து

பேஸரதெ = சோர்வு இல்லாமல்

தா = தான்

ரசிஸுவனு = செய்கிறான்

சர்வக்ஞ = அனைத்தும் அறிந்தவனான

சகலேஷ்ட ப்ரதாயகனு = அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவனான

காருணிகனு = கருளாளுவான ஸ்ரீமுக்யபிராணதேவர்

அவரவர சாதன பூரயிஸி = சாத்விக ராஜஸ தாமஸர் ஆன, அனைவரின் சாதனைகளை நிறைவேற்றி

பூ ஸ்வர்க நரகவ = ராஜசர்களுக்கு பூமி, ஸாத்விகர்களுக்கு ஸ்வர்க்கம், தாமசர்களுக்கு நரகம் என அவரவர்களின் யோக்யதைக்கேற்ப

ஸேரிசுவ = இடங்களைக் கொடுக்கிறான்.

 

ஸ்ரீபாரதிபதியான முக்யபிராண தேவர், அனைத்து பிராணிகளுக்குள்ளும் இருந்து, ஒரு நாழிகையில் 360 ஸ்வாஸ ஜபங்களை தாம் செய்து, செய்வித்து, மஹா கருணாளுகளான சர்வக்ஞரான, அனைத்து மனோபீஷ்டங்களையும் நிறைவேற்றுபவரான முக்யபிராணதேவர், மூன்றுவித ஜீவராசிகளின் யோக்யதைகளுக்கேற்ப சாதனைகளை செய்வித்து, ராஜஸர்களை பூலோகத்திற்கும், சாத்விகர்களை ஸ்வர்க்க லோகத்திற்கும், தாமசர்களை நரகலோகத்திற்கும் அனுப்புகிறார்.

 

இங்கு பூலோக என்றால் சுகதுக்க மிஸ்ரமான நித்ய சம்சாரிகள் வசிக்கும் உலகத்தை குறிப்பிடுகிறார். ஸ்வர்க்க என்றால் முக்தி ஸ்தானத்தையும், நரக என்றால் தமஸ்ஸையும் அறியவேண்டும்.

 

தாஸிகொ3ம்பை3னூரு ஷ்வாசோ

ஸ்வாஸக3ள நடெ3ஸுதலி சேதன

ராஷியொளு ஹக3லிருளு ஜாக்3ருதனாகி3 நித்யத3லி |

ஸுமனஸோத்தம் லேஷா

யாவில்லதெ3 போஷிஸுத மூ

லேஷனங்க்3ரி ரோஜ மூலத3லிப்ப காணிதெ3 ||2

 

தாஸிகெ = ஒரு மணி நேரத்தில் (2.5 நாழிகையில்)

ஒம்பைனூரு ஸ்வாசோ ஸ்வாஸகள = 900 ஸ்வாச உஸ்வாஸங்களை (மூச்சு விடுவது + மூச்சு உள்ளிழுப்பது இந்த இரண்டும் சேர்ந்தால், அது ஒரு ஸ்வாஸ).

நித்யதலி = எப்போதும்

ஹகலிருளு = இரவும் பகலும்

நடெஸுத்தலி = செய்வித்து

ஈ ஸுமனஸோத்தம்ஸ = தேவர்களில் சிறந்தவரான இந்த வாயுதேவர்

லேஷாயாஸவில்லதெ = கொஞ்சம்கூட சோர்வு இல்லாமல்

ஜாக்ருதனாகி = விழிப்புடன் இருந்து

போஷிஸுத = ஜீவராசிகளை அருளியவாறு

சேதனராஷியொளு = அந்த சேதனர்களில் இருந்து

மூலேஷனங்க்ரி சரோஜ மூலதலி = மூலேஷ நாமக பரமாத்மனின் பாத கமலத்தின் மூலப் பகுதியில்

காணிஸதெ = யாருக்கும் காட்டிக் கொள்ளாமல்

இப்ப = இருக்கிறான்.

 

ஸ்ரீவாயுதேவர், அனைத்து ஜீவராசிகளின் இதய கமலத்தில் இருக்கும் மூலேஷ நாமக ஸ்ரீபரமாத்மனின் பாத கமலத்தில் இருந்துகொண்டு, தினமும் ஒரு நாழிகைக்கு 360 ஸ்வாசங்களையும், ஒரு மணி நேரத்திற்கு 900 ஸ்வாசங்களையும் (1 மணி = 2.5 நாழிகை; 360*2 + 180 = 900) ஸ்வாச உஸ்வாஸ ரூபமான ஹம்ஸ மந்திர ஜபத்தை செய்து செய்வித்து, தான் கொஞ்சம்கூட சோர்வு இல்லாமல், இரவும் பகலும், விழிப்புடன் இருந்து, வேறு யாருக்கும் காட்டிக்கொள்ளாமல், ஜீவராசிகளுக்கு அருள்கிறார்.

 

அரிவுதொந்த் யாமதொ3ளு ஷ்வாஸக3

ளெரடு3 ஸாவிரதே3ளு நூரனு

ஷர சஹஸ்ரத3 மேலே நானூரஹவு த்3விதியக்கெ |

மரளி யாமத்ரயகெ வஸு ஸா

விரத3 மேல்னூரெணிகெயலி ஹ

ந்னெரடு3 தாஸிகெ3 ஹத்துஸாவிர தெ3ண்டு3னூரஹவு ||3

 

ஒரு யாமதொளு = 1 யாமத்திற்கு (3 மணி நேரத்திற்கு)

எரடு சாவிரதேளு நாரனு = 2700

ஸ்வாஸ = ஸ்வாசங்களை

அரிவுது = தெரிந்து கொள்ளவேண்டும்

த்விதியக்கெ = இரு யாமங்களுக்கு (6 மணி நேரத்திற்கு)

ஷர சஹஸ்ரதமேலே நானூரஹவு = 5000 + 400 = 5400

மரளி = மற்றும்

யாமத்ரயக்கெ = 3 யாமத்திற்கு

வசுசாவிரத மேல்னூரைணிகெயலி = 8000+100= 8100 எண்ணிக்கையில்

ஹன்னிரடு தாசிகெ = 12 மணி நேரத்திற்கு

ஹத்துசாவிரதெண்டு நூரஹவு = 10000+800=12800

 

மூன்று மணி நேரத்திற்கு 1 யாமம் என்று பெயர். ஆக,

* 1 மணி நேரத்திற்கு 900 ஸ்வாச ஜெபங்கள் என்றால்,

* 1 யாமத்திற்கு 900 * 3 = 2700 ஆகிறது.

* 6 மணி நேரத்திற்கு அதுவே 5400 எனவும்,

* 3 யாமத்திற்கு (அதாவது 9மணி நேரங்களுக்கு) 8100 ஸ்வாச ஜபங்கள் என்றும்,

* 12 மணி நேரத்திற்கு 12800 ஸ்வாச ஜபங்கள் என்றும் அறியவேண்டும்.

 

ஒந்து3 தி3னதொ3ளக3னிலனிப்ப

த்தொந்து3 ஸாவிரதா3ருனூரு மு

குந்த3னாக்யதி3 மாடி3 மாடி3ஸி லோகக3ள பொரெவ

நெந்து3 பவனன பொக3ளுதிரு எ

ந்தெ3ந்து3 மரெயதெ ஈ மஹிமெ

ங்க்3ரந்தனாத்3யரிகு3ண்டெ நோட3லு ர்வகாலத3லி ||4

 

அனில = முக்யபிராணதேவர்

ஒந்து தினதொளகெ இப்பத்தொந்து சாவிரதாருனூரு = 1 நாளுக்கு 21,600 ஸ்வாச ஜபங்களை

முகுந்தனாக்யதி = மோட்சத்தைக் கொடுக்கும் ஸ்ரீபரமாத்மனின் ஆணையின்படி

மாடி மாடிஸி = இந்த ஸ்வாசங்களை செய்து, செய்வித்து

லோககள பொரெவ = உலகத்தை அருள்கிறான்.

எந்து = என்று

பவனன = முக்யபிராணதேவரை

பொகளுதிரு = வணங்கிக் கொண்டிரு

எந்தெந்து மரெயதெ = என்றைக்கும் மறக்காமல்

ஈ மஹிமெ = இத்தகைய அவரின் மகிமை

ஸங்க்ரந்தனாத்யரிகுண்டெ = இந்திரதேவரே முதலான தேவதைகளுக்கு உண்டா?

சர்வகாதலி = எப்போதும்

நோடலு = சரியாக சிந்தித்துப் பார்.

 

ஏகவிம்ஷத் ஸஹஸ்ராத்மா ஸஷட் ஷதமஹர்னிஷம்என்னும் தந்த்ரசார வாக்கியத்திற்கேற்ப ஒரு நாளைக்கு 21,600 ஸ்வாச ஜபங்களை ஸ்ரீவாயுதேவர் செய்து, பகவந்தனின் ஆணைக்கேற்ப, ஜீவர்களில் இருந்து அதை செய்வித்து, உலகங்களை - அதாவது, அனைத்து பிராணிகளையும் காப்பாற்றுகிறார் என்பதால், ஸ்ரீவாயுதேவரை என்றைக்கும் மறக்காமல், வணங்கிக் கொண்டிரு. இத்தகைய இவரது மகிமை எந்த காலத்திலும், இந்திராதி தேவதைகளுக்கு இல்லை என்றும் அறியவேண்டும்.

 

மூருலக்‌ஷத3 மேலே விம்ஷதி

ஈரெரடு3 ஸாவிரவு பக்‌ஷக்கெ

ஆருலக்‌ஷத3 மேலே நால்வத்தெண்டு ஸாவிரவு |

மாருதனு மாக்கெ ஜபிஸி ம்

ஸா ஸா3ரதி3ந்த3 ஸுஜனர

பாருகா3ணிஸி ஸலஹுவனு ப3ஹுபோ433ளனித்து ||5

 

மூருலக்‌ஷத மேலே விம்ஷதி ஈரெரடு சாவிரவு = 3,00,000+ (20+(2*2))*1000 = 3,24,000

பக்‌ஷக்கெ = 1 பட்சத்திற்கு (15 நாட்களுக்கு)

ஆரு லக்‌ஷத மேலே நால்வத்தெண்டு சாவிரவு = 6,00,000 + 48,000 = 6,48,000

மாசக்கெ = 1 மாதத்திற்கு

மாருதனு ஜெபிஸி = வாயுதேவர் ஜெபித்து

சம்சார சாகரதிந்த = பிறப்பு இறப்பு என்னும் சம்சாரத்திலிருந்து

சுஜனர பாருகாணிஸி = சஜ்ஜனர்களை காப்பாற்றி

பஹு போககளனித்து = ஞான, பக்தி, வைராக்கியம் முதலான பல போகங்களைக் கொடுத்து

சலஹுவனு = காப்பாற்றுகிறார்

 

15 நாட்களுக்கு 3,24,000 ஸ்வாச ஜெபங்களும், 1 மாதத்திற்கு 6,48,000 ஸ்வாச ஜெபங்களும் என வாயுதேவர் அனைத்து ஜீவர்களிலும் ஜெபித்து, சஜ்ஜனர்களை பிறப்பு இறப்பு என்னும் சம்சார சாகரத்திலிருந்து காப்பாற்றி, அவர்களுக்கு ஞான பக்தி வைராக்கியம் போன்ற பல போகங்களைக் கொடுத்து காப்பாற்றுகிறார். 

No comments:

Post a Comment