த்3வாரபஞ்சக பாலகரொளிஹ
பா4ரதி ப்ராணாந்தராத்மக
மாரமணனைரூப தத்தத்3வாரத3லி ப3ப்ப |
மூரெரடு3வித4 முக்தியோக்3யர
தாரதம்யவனரிதவர கம்
ஸாரி ஸம்ஸாராப்3தி4 தா3டிஸி முக்தரனு மாள்ப ||21
த்வாரபஞ்சக = கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு மேலே
என்னும் இந்த 5 வாயில்களின்
பாலகரொளு = த்வார பாலகர்களில்
இஹ = இருக்கிறார்
பாரதி ப்ராணாந்தரத்மக = பாரதி ரமண முக்யபிராணாந்தர்கத
மாரமணன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்
ஐரூப = ஷாந்தி, க்ருதி, ஜயா,
மாயா,
லட்சுமி என்னும் 5 ரூபங்களைக் கொண்ட ரமாதேவியருடன் சேர்ந்துள்ள அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் 5 ரூபங்கள்
தத்தத்வாரதலி = கிழக்கு முதலான அந்தந்த வாயில்களில்
பப்ப = வரும்
மூரெரடுவித = மனுஷ்யோத்தமர்கள், பித்ருகள், ரிஷிகள், கந்தர்வர்கள், கருடாதி புஷ்கரன் வரைக்குமான தேவதைகள் -
இந்த 5 விதமான
முக்தியோக்யர = முக்தி யோக்யர்களின்
தாரதம்யவனு = தாரதம்யத்தை
அரிது = அறிந்து
அவர = இந்த 5 வித முக்தியோக்யர்களை
கம்ஸாரி = கம்சனைக் கொன்றவனான ஸ்ரீகிருஷ்ணன்
சம்சாராப்தி தாடிஸி = பிறப்பு இறப்பு என்னும் சம்சார
சாகரத்தை தாண்டவைத்து
முக்தரன = முக்தர்களாக
மாள்ப = செய்கிறான்
கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு மேலே என இருக்கும்
ஐந்து உட்புற வாயில்களில், திக்பாலகர்களாக இருக்கும் சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன், பிரதான வாயு என இந்த 5 த்வாரபாலகர்களின் அந்தர்யாமியாக
இருக்கும் வாயுதேவர், பிராண, அபான,
வ்யான, உதான,
சமான என்னும் 5 ரூபங்களால் இருக்கிறார். இவரின் மனைவியான பாரதிதேவியும் 5 ரூபங்களில் இருக்கிறார்.
ப்ருதிவி நாமிகா ஸ்ரேஸ்து த்யௌர் திஷோவித்யு தேவச |
வாயுபத்னீ ஸமுத்திஷ்டா தத்தத்வாராதி பாஸ்சதா: ||
ப்ருத்விதேவி, ஸ்ரீதேவி, த்யுதேவி, திக்தேவி, வித்யுத்தேவி என்று பாரதி தேவிக்கு 5 ரூபங்கள் இருக்கின்றன. இவர் பிராண, அபானாதி வாயுதேவரின் 5 ரூபங்களுக்கும் மனைவியராகி, தம் பதியுடன் சேர்ந்து அந்தந்த வாயில்களில் இருக்கின்றனர் என்று சாந்தோக்ய
பாஷ்யத்தில் சொல்லியிருக்கின்றனர்.
இந்த பஞ்சரூபியான பிராணதேவரின் அந்தர்யாமியான
பரமாத்மன், நாராயண, வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்னும் 5 ரூபங்களால் லட்சுமி, மாயா,
ஜயா,
க்ருதி, ஷாந்தி என்னும் 5 ரூபங்கள் உள்ள லட்சுமிதேவியுடன் சேர்ந்து, கிழக்கு வாயிலிலிருந்து தொடங்கி வரும் மனுஷ்யோத்தமர்கள், பித்ருகணர்கள், ரிஷிகணர்கள், கந்தர்வர், தேவதைகள் என்னும் 5 வித முக்தியோக்யர்களை அவரவர்களின்
தாரதம்யத்தை அறிந்து, கம்சாரியான ஸ்ரீஹரி, சம்சார சமுத்திரத்திலிருந்து
அவர்களை தாண்ட வைத்து, அவரவரின் யோக்யதைக்கேற்ப முக்தியில் அவர்களுக்கு ஸ்வரூப சுகத்தைக்
கொடுக்கிறார்.
கம்சாரி என்றால், கம்சனைக் கொன்ற கிருஷ்ண ரூபத்தினாலேயே முக்தியைக் கொடுக்கிறான் என்று அர்த்தம்
அல்ல. ‘கஸிஹிம்ஸாயா மிதிதாதோ: கம்ஸ:’ - முக்தி மார்க்கத்திற்கு தடையாக
இருந்து,
தர்மத்தைக் கெடுப்பது சம்சார வாழ்க்கை. இதற்கு கம்ச என்றும் பெயர் உண்டு.
இத்தகைய சம்சாரத்தை அழிப்பவனான ஸ்ரீஹரி என்பது கருத்து.
பெ3ளகி3த்3ஹூஜியு நோள்பரிகெ3 த2ள
த2ளிஸுதலி கங்கொ3ளிஸுவந்த3தி3
தொளெது3 தே3ஹவ நாம முத்3ரெக3ளிந்த3லங்கரிஸி |
ஒலிஸி நித்ய குதர்க்க யுக்திக3
ளலவ போ4த4ர ஷாஸ்த்ர மர்மவ
திளியதி3ஹ நர ப3ரிதெ3 இத3ரொளு ஷங்கிஸித3ரேனு ||22
பெளகித = நன்றாக கழுவிய
ஹூஜியு = சிறிய கழுத்துள்ள பாத்திரம் (சொம்பு)
நோள்பரிகெ = அதை பார்ப்பவர்களுக்கு
தளிதளிஸுதலி கங்கொளிஸுவந்ததி = பளபள என்று ஒளிர்வதைப்
போல
தேஹவ = சரீரத்தை
தொளெது = சுத்தம் செய்து
நாம முத்ரெகளிந்த = 12 நாமங்கள், முத்ரைகளால்
அலங்கரிஸி = அதனை அலங்கரித்து
நித்ய குதர்க்க யுக்திகள = ஸ்ருதி ஸ்ம்ருதிகளை
பின்பற்றாமல் வெறும் தந்திரங்களால் ஊகிக்கும் கு-தர்க்கத்தை
ஒலிஸி = படித்து
அலவபோதர = ஸ்ரீ பூர்ணப்ரக்ஞரின் (ஸ்ரீமன்
மத்வாசார்யரின்)
சாஸ்த்ர மர்மவ = சர்வமூல கிரந்தங்களின் உள்
அர்த்தத்தை
திளியதிஹ = அறியாத
நர = மனிதன்
பரிதெ = பிரயோஜனம் இல்லாமல்
இதரொளு = இந்த கிரந்தத்தில்
ஷங்கிஸிதரேனு = சந்தேகப்பட்டால்
ஏனு = என்ன பிரயோஜனம்?
சிறிய வாயுள்ள சொம்பினை, நன்றாக சுத்தமாகக் கழுவி, அதற்குள் குப்பைகளை நிரப்பி
வைத்தால்,
வெளியே பார்ப்பவர்களுக்கு அது பளபளவென்று ஒளிரும் சொம்பாக தெரியுமே தவிர, உள்ளே என்ன உள்ளது என்பது தெரியாது.
அது போலவே, நன்றாக குளித்து, 12 நாமங்களை உடம்பெங்கும் தரித்து, பெரிய பண்டிதர் என்று புகழடைந்து, தந்திரமான குதர்க்க சாஸ்திரங்களின் உதவியுடன், (அதாவது; ஸ்ருதி முதலான சாஸ்திரங்களை அனுசரிக்காமல், சொல்லும் தர்க்கத்திற்கு, குதர்க்கம் என்று பெயர்), பெயர் பெற்று, ஸ்ரீமன் மத்வ சாஸ்திரத்தின் மர்மங்களையே அறியாதிருப்பவன், இந்த கிரந்தத்தின் மேல் ஆட்சேபணை செய்தால் என்ன பயன்?
இந்த கிரந்தத்தின் யோக்யதை, பகவத்பக்தர்களுக்கு தெரியுமே தவிர, உள்ளே பக்தி இல்லாமல், வெளியே மட்டும் வேடம் தரித்து பண்டிதர் என்னும் பெயருள்ள தர்க்கம்
செய்பவர்களுக்கு என்றும் இது புரியாது. சொம்பின் உவமை எதற்குக் கொடுத்திருக்கிறார்
என்றால்,
சொம்பின் மேல் பாகத்தினை சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். உள்ளே கை போகாததால், சுத்தம் செய்வது கடினம் ஆகும். அப்படியே உள்ளே அசிங்கத்தை வைத்துக்கொண்டு, தேகத்தை மட்டும் நன்றாக சுத்தம் செய்து, அலங்கரித்துக் கொண்டால், உள்ளே இருக்கும் அசிங்கம்
போய்விடுமா? உள்ளே சுத்தமானவனாக ஆகவேண்டுமெனில், பக்தியுடன் பகவத் அனுக்கிரகத்தை
சம்பாதித்தால் மட்டுமே முடியும். அத்தகைய பக்தர்கள், என்றும் இந்த கிரந்தத்தை புறக்கணிக்க மாட்டார்கள் என்பது கருத்து.
உத3தி4யொளகூ3ர்மிக3ளு தோர்ப
ந்த3த3லி ஹம்ஸோத்3கீ3த2 ஹரி ஹய
வத3ன க்ருஷ்ணாத்3யமித அவதாரக3ளு நித்யத3லி |
பது3மனாப4னொ ளிருதிஹவு ஸ
ர்வத3 ஸமஸ்த ப்ராணிக3ள சி
த் ஹ்ருத3யக3த ரூபக3ளு அவ்யவதா3னத3லி பி3ட3தெ3 ||23
உததியொளகெ = கடலில்
ஊர்மிகளு = அலைகள்
தோர்ப்பந்ததலி = வெவ்வேறாக தெரிவதைப் போல
ஹம்ஸ, உத்கீத, ஹரி,
ஹயவதன, கிருஷ்ணாதி = இவை முதலான ரூபங்கள்
அமிதன அவதாரகளு = எண்ணிக்கை இல்லாத குணரூபங்கள் உள்ள
ஸ்ரீபரமாத்மனின் அவதாரங்கள்
நித்யதலி = தினந்தோறும்
சமஸ்த பிராணிகள = அனைத்து பிராணிகளின்
சித்ஹ்ருதயகத = ஸ்வரூப தேகத்தின் ஹ்ருதயாகாஷத்தில்
இருக்கும்
ரூபகளு = ரூபங்கள்
பிடதெ = விடாமல் (அனைத்து ரூபங்களும் சேர்ந்து)
அவ்யவதானதலி = ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டு
சர்வதா = எப்போதும்
பத்பனாபனொளு = மூலரூபியான பத்பனாப மூர்த்தியில்
இருதிஹவு = இருக்கின்றன.
கடல் அலைகளைப் பார்க்கும்போது அவை தனித்தனியாக வந்து
விழுவதைப் போல இருந்தாலும், அவற்றை கடலிலிருந்து வேறுபடுத்தி
பார்க்கமுடியாது. அகண்டமான கடல் நீரே கண்டரூபத்தில் அலைகளாக வருகிறது. இந்த
கடலுக்கும், அலைகளுக்கும் வேறுபாடு இல்லை. அப்படியே, மூலரூபமான பத்பனாப ரூபத்திலிருந்து ஹம்ஸ, ஹரி,
ஹயக்ரீவ, ராம,
கிருஷ்ணாதி ரூபங்கள், கடலிலிருந்து அலைகள் வருவதைப்போல
புறப்பட்டு வருகின்றன. அந்த அலைகள் மறுபடி கடலிலேயே போய் சேர்கின்றன. அதைப்போல, ராமகிருஷ்ணாதி ரூபங்களும்கூட பத்பனாப மூர்த்தியிலேயே போய் சேர்கின்றன.
மற்றும் அனைத்து பிராணிகளின் ஸ்வரூப தேகத்தின்
ஹ்ருதயாகாஷத்தில் ஒளிரும் அனந்தானந்த ரூபங்களும், பத்பனாப ரூபத்திலேயே இருக்கின்றன.
பாகவத 1ம் ஸ்கந்தம் 3ம் அத்தியாயத்தில்:
ஏதன்னானவதாராணாம் நிதானம் பீஜமவ்யயம் |
யஸ்யாம்ஷேன ஸ்ருஜ்யந்தே தேவதிர்யங்யனராதம: ||
இந்த பத்பனாப ரூபமே, பற்பல மத்ஸ்ய, கூர்மாதி அனைத்து அவதாரங்களுக்கும் மூலமாகும்.
நிதானம் = அந்ததோத்ர ஸர்வாவதாரானி தீயந்தே
ஏகேக்ரியந்த இதி நிதானம் ||
இறுதியில் அனைத்து ரூபங்களும் இந்த ரூபத்திலேயே
ஐக்கியம் ஆவதால், அதற்கு அவ்யய என்று பெயர். இந்த பத்பனாப தேவரின் சாமர்த்தியத்தாலேயே தேவதைகள், தானவர், மானவர் என அனைத்து பிராணிகளும் பிறந்தனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அவதாராஹ்ய ஸங்க்யேயா: ஹரே:ஸர்வ நிதீர்த்வஜா: |
யதாவிதாஸின: குல்யா: ஸரஸஸ்யு: ஸஹஸ்ரஸ: ||
ருஷயே மானவோதேவா மனுச்புத்ராமஹௌஜஸ: |
கலா: ஸர்வேஹரெரேவ ஸப்ரஜா பதய:ஸ்ம்ருதா: ||
சத்வ நிதியான பரமாத்மனின் அவதாரங்களை எண்ணுவது
யாருக்கும் சாத்தியமில்லை. உயரமான இடத்திலிருந்து விழும் நீர் எப்படி ஆறாக
பாய்கின்றதோ, அந்த ஆறுகளிலிருந்து எப்படி கால்வாய்கள் தோன்றுகின்றனவோ, அப்படியே, பகவத்ரூபங்களும் எண்ணில் அடங்காதவையாகும்.
இதுமட்டுமல்லாமல், ரிஷிகள், மனுகள், தேவதைகள், மனுபுத்ரர்கள், இவர் அனைவரும் பரமாத்மனின் பின்ன-அம்சர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்படியே,
* ஸ்வாம்ஷ ரூபங்கள்,
* பின்னாம்ஷ ரூபங்கள்
* பிம்ப ரூபங்கள்
* அந்தர்யாமி ரூபங்கள்
கடல் அலைகள் எப்படி கடலை விட்டு இருப்பதில்லையோ, அதுபோல, இவையும் பகவத்ரூபங்களே ஆகின்றன. இவை அனைத்தும் பத்பனாப ரூபத்திலேயே போய்
சேர்கின்றன.
ஷரதி4யொளு மகராதி3 ஜீவரு
இருளு ஹக3லேக ப்ரகாரதி3
சரிஸுதனு மோதி3ஸுதலிப்பந்த3தி3 ஜக3த்ரயவு
இருதிஹுது ஜக3தீஷனுத3ரதி3
கரெஸுவுது3 ப்ரதிபி3ம்ப3னாமதி3
த4ரிஸிஹுது3 ஹரிநாம ரூபங்க3ளனு அனவரத ||24
ஷரதியொளு = கடலில்
மகராதி = முதலை முதலான
ஜீவரு = ஜீவர்கள்
இருளு ஹகலு = இரவும் பகலும்
ஏக ப்ரகாரதி = ஒரே மாதிரியாக
சரிஸுத = சஞ்சரித்தவாறு
அனுமோதிஸுத = மகிழ்ந்தவாறு
இப்பந்ததி = இருப்பதைப் போல
ஜகத்ரயவு = மூன்று உலகங்களும்
ஜகதீஷன உதரதி = பரமாத்மனின் வயிற்றில்
இருதிஹுது = இருக்கின்றன
மத்து ப்ரதிபிம்பனாமதி = பிரதிபிம்ப என்னும் பெயரில்
கரெஸுவுது = அழைத்துக் கொள்கிறான்
அனவரத = எப்போதும்
ஹரிநாம ரூபங்கள = ஸ்ரீஹரியின் நாம ரூபங்களை
தரிஸிஹவு = பெற்றிருக்கிறது.
கடலில், மீன், முதலை ஆகிய அனந்தானந்த ஜீவராசிகள், இரவும் பகலும் ஒரே மாதிரியாக
சஞ்சரித்தவாறு, தத்தம் குழுவினருடன் மகிழ்ந்திருப்பதைப் போல, இந்த மூன்று உலகமும் பரமாத்மனின் பிரதிபிம்பம் என்று அழைத்துக் கொண்டு, நானாவிதமான ரூப நாம பேதங்களால் பரமாத்மனின் அம்ஷராசிரூபங்கள் ஸ்ரீபரமாத்மனின்
வயிற்றில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.
ஜனனி ஸௌஷ்ட பதா3ர்த்த2க3ள போ4
ஜனவ மாட3லு க3ர்ப்ப4க3த ஷிஷு
தி3னதி3னதி3 அபி4வ்ருத்தி3 ஐது3வ தெரதி3 ஜீவரிகெ3 |
வனஜனாப4னு ஸர்வரஸ உ
ண்டு3ணிஸி ஸம்ரக்ஷிஸுவ ஜான்ஹவி
ஜனக ஜன்மாத்யகி2ல தோ3ஷவிதூ3ர க3ம்பீ4ர ||25
ஜனனி = கர்ப்பிணியான தாய்
சௌஷ்ட பதார்த்தகள = சுவையான பதார்த்தங்களை
போஜனவ மாடலு = உண்டால்
கர்ப்பகத சிசு = கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை
அபிவ்ருத்தி ஐதுவ தெரதி = வளர்ந்து வருவதைப் போல
ஜான்ஹவி ஜனக = கங்கையைப் பெற்ற
ஜன்மாத்யகிள தோஷ விதூர = பிறப்பு முதலான எவ்வித
தோஷங்களும் அற்றவனான
கம்பீர = கம்பீர குணங்களைக் கொண்ட
வனஜனாபனு = கமலனாபன்
சர்வ ரஸ = அனைத்து பதார்த்தங்களின் ரசத்தையும்
உண்டு = ஏற்றுக்கொண்டு
உணிஸி = ஜீவர்களுக்குக் கொடுத்து
சம்ரக்ஷிசுவ = காப்பாற்றுகிறான்.
கர்ப்பிணியானவள், நல்ல சத்துள்ள உணவுகளை உண்டால், அந்த சாரமானது, அவளின் நாபியிலிருந்து வரும் நாடியின் மூலமாக அவளின் கர்ப்பத்தில் இருக்கும்
குழந்தையின் வயிற்றில் சென்று சேர்ந்து, அந்த குழந்தை நன்றாக வளர்ந்து
வருகிறது. அதைப்போலவே, பூமியில் இருக்கும் அனைத்து விதமான போஜ்ய பதார்த்தங்களின் சாறினையும் தான்
ஸ்வீகரித்து, ஜீவர்களுக்கு அதை உண்ணவைத்து அவர்களை காப்பாற்றுகிறான். பரமாத்மன், அந்த சாரத்தை, தன் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக தான் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அவனின் அருளுக்கு பாத்திரர்களான தேவதைகளுக்கே பசி, தாகம் ஆகியவை இல்லை. அப்படியிருக்கையில், பரமாத்மனுக்கு தாகம் ஏற்படுவது எப்படி? பசி எப்படி வரும்?
ஜான்ஹவி ஜனக, ஜன்மாத்யகிள தோஷவிதூர என்னும் இரு சொற்களின் மூலம் பரமாத்மனுக்கு பசி, தாகம் ஆகியவை இல்லை என்று தாசராயர் குறிப்பிடுகிறார். கங்காஜனக = கங்கையை தன்
பாதங்களிலிருந்து ஸ்ருஷ்டித்தவனுக்கு தாகம் ஏற்படாது என்பதை சொல்கிறார்.
ஜன்மாத்யகிள தோஷவிதூர = இந்த பூமியில் பிறந்தவர்களுக்கு வயிற்றை நிரப்பிக்கொண்டு, தேகத்தை வளர்க்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. மற்றும் மரண பயமும்
இருக்கிறது.
ஆனால், பகவந்தனுக்கு பிறப்பு, இறப்பு ஆகிய தோஷங்களே இல்லை என்றபிறகு, ஆசையும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆகையால், கருணையுடன் ஜீவர்களை காப்பதற்காக, தான் ரசங்களை உண்டு, ஜீவர்களுக்கு அதை உண்ணவைத்து பார்க்கிறானே தவிர, அதனால் அவனுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை.
கர்ப்பிணி உண்ணும் உணவினால் மட்டுமே வயிற்றில் இருக்கும் குழந்தை உண்ணமுடியும். இதனாலேயே அக்குழந்தை திருப்தி அடைகிறது. இதைத்தவிர அக்குழந்தையை உண்ணவைக்க வேறு வழி எதுவும் இல்லை. அதுபோலவே, பிரதிபிம்பனுக்கு திருப்தி ஆகவேண்டுமெனில், பிம்பன் உண்டால்தான் முடியும். ஆகவே பரமாத்மன், பிம்பக்ரியைகளால் அனைத்தையும் தான் உண்டு, பின் அவற்றை ஜீவர்களால் உண்ண வைக்கிறான்.
No comments:
Post a Comment