ஷஷி தி3வாகர பாவகரொளிஹ
அஸித ஸித லோஹிதக3ளலி ஷிவ
ஷ்வஸன பா4ர்க3வி மூவரொளு ஸ்ரீகிருஷ்ண ஹயவத3ன |
வஸுதி4பார்த3ன த்ரிவ்ருது எனிஸி
வஸுமதியொளன்னோத3க அனல
பெஸரினிந்த3லி ஸர்வஜீவர ஸலஹுவனு கருணி ||11
ஷஷி = சந்திரன்
திவாகர = சூரியன்
பாவகரொளகெ = அக்னி, இந்த மூவரில்
இஹ = இருக்கிறான்
அஸித = கருப்பு
ஸித = வெள்ளை
லோஹிதகளலி = சிவப்பு இந்த மூன்று வண்ணங்களில்
ஷிவ ஷ்வஸன பார்கவி = அபிமானிகளான சிவ, வாயுதேவர், லட்சுமிதேவி
மூவரொளு = இந்த மூவரில்
ஸ்ரீகிருஷ்ண ஹயவதன, நிலைத்திருந்து
வஸுதி பார்த்தன = பூ-பாலனான, துஷ்டகளை அழிப்பவனான ஜனார்த்தனன், இந்த மூவரும்
த்ரிவ்ருது எனிஸி = மூவரிலும் இருக்கிறார் என்று
நினைத்து
வசுமதியொளு = பூமியில்
அன்னோதக அனல பெசரினிந்தலி = அன்ன, தண்ணீர், அக்னி என்னும் பெயரால்
கருணி = கருணாளுவான ஸ்ரீஹரி
சர்வஜீவர சலஹுவனு = அனைத்து ஜீவர்களையும் காக்கிறான்.
பிராணிகள் உயிர் வாழவேண்டுமெனில், தேவையான முக்கிய ஆதாரம் அன்ன, தண்ணீர், அக்னி இந்த மூன்றும். இவற்றில் அன்னத்திற்குத் தேவையான பொருட்கள் என்றால் அது
அரிசி,
கோதுமை. இவை வளரவேண்டுமெனில் சந்திரன் தேவை. ஔஷத (மருந்து, மூலிகை) ஆகியவற்றிற்கு சந்திரனை அரசனாக ஆக்கினார்கள் என்று ஹரிவம்சத்தில்
தெளிவாக கூறியிருக்கின்றனர். அதிலும் முக்கியமானது, சந்திரனின் நடுப்பகுதியில் இருக்கும் இருட்டின் அடையாளமான கருப்பு. அவற்றின்
அபிமானிகள் ருத்ரதேவர். அவருக்கு தலைவர், ஸ்ரீகிருஷ்ணரூபியான பரமாத்மன்.
சூரியனின் வெண்மையான ஒளியால் தண்ணீர் பிறக்கிறது.
கடலில் இருக்கும் தண்ணீர், சூரிய கிரணங்களால் ஆவியாகி, மேகங்களாகி, மழை பெய்வித்து, பூமியில் பெய்வதால், சூரியனில் இருக்கும் வெள்ளை வண்ணமே
தண்ணீருக்குத் தேவையானது. இதற்கு அபிமானிகள், வாயுதேவர். அவரின் அந்தர்யாமி ஹயக்ரீவரூபி.தேகத்தில் இருக்கும் அக்னிக்கு
சம்பந்தப்பட்ட சிவப்பு வண்ணத்தின் அபிமானி ரமாதேவி. அவரின் அந்தர்யாமி
ஜனார்த்தனரூபி. கருணா சமுத்திரனான ஸ்ரீஹரி இப்படி அன்ன, தண்ணீருக்கு அபிமானிகளான சிவ, வாயு, லட்சுமிதேவியரின் அந்தர்யாமியாக இருந்து, அன்ன,
தண்ணீர், அக்னி என்னும் பெயரால் த்ரிவ்ருத் - அதாவது, மூன்று ரூபத்தினால் வசிக்கிறான் என்று நினைத்து ரூபத்ரயங்களால் அனைத்து
பிராணிகளையும் காக்கிறான்.
தீ3ப கரத3லி பிடிது3 காணதெ3
கூபதொ3ளு பி3த்த3ந்தெ வேத3 ம
ஹோபனிஷத3ர்த்த2க3ள நித்யதி3 பேளுவவரெல்ல |
ஸ்ரீ பவனமுக2 வினுதனமல ஸு
ரூபக3ள வ்யாபார திளியதெ3
பாப புண்யகெ ஜீவகர்த்ரு அகர்த்ரு ஹரியெந்து3 ||12
தீப = தீபங்களை
கரதலி = கைகளில்
பிடிது = பிடித்து
காணதெ = தெரியாமல்
கூபதொளு பித்தந்தெ = கிணற்றில் விழுந்ததைப்போல
மஹோபனிஷதர்த்தகள = ஐதரேயாதி மஹா உபநிஷத்களின் அர்த்தங்களை
நித்யதி = தினந்தோறும்
பேளுவவரெல்ல = பலர் சொல்வர்
ஸ்ரீ = லட்சுமிதேவி
பவன = வாயுதேவர்
முக = முதலான தேவதைகளால்
வினுதன = வணங்கப்படும் ஸ்ரீஹரி
அமல = நிர்மலமான
ஸுரூபகள = ரூபங்களை
வ்யாபார = க்ரியா விசேஷங்களை
திளியதெ = அறியாமல்
பாபபுண்யக்கெ = பாவ புண்ணியங்களுக்கு
ஜீவகர்த்ரு = ஜீவனே ஸ்வந்த கர்த்ரு
அகர்த்ருயம்ப = ஸ்ரீஹரிக்கு கர்த்ரு இல்லை என்று
நினைத்துக் கெடுவர்.
கையில் தீபத்தைப் பிடித்தவாறு, மற்றவர்களுக்கு வழி காட்டியவாறு, தான் தன் வழியைக் காணாமல், கிணற்றில் விழுபவர்கள் உண்டு. அதைப்போல, வேதவேதாந்தங்களை நன்கு படித்து, சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு
உபதேசம் செய்தவாறு, தான் அதனை சரியாக அனுசந்தானம் செய்யாமல், தனதே ஸ்வதந்த்ர கர்த்ரு என்று புரிந்து, புண்ய பாவங்கள் செய்யும் விஷயங்களில் பரமாத்மனின் ப்ரேரணை எதுவும் இல்லை என்று
அறிந்து கெடுகிறார்கள் என்பது கருத்து.
அனிலதே3வனு வாங்மனோமய
நெனெஸி பாவக வருண ஸங்க
ந்தன முகா2த்3யரொளித்து3 ப4க3வத்3ரூப கு3ணக3ளனு |
நெனெனெனெது3 உச்சரிஸுதலி ந
ம்மனு ஸதா3 ஸந்தயிஸுவனு ஸ
ந்முனி க3ணாராதி4த பதா3ம்பு4ஜ கோ3ஜ ஸுரராஜ ||13
சன்முனி கணாராதித பதாம்புஜ = உத்தமர்களான ரிஷிகளால்
வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவன்
கோஜ = வேதாந்த கிரந்தங்களை இயற்றிய
ஸுரராஜ = கருட சேஷ ருத்ரர்களுக்கு தலைவனான
அனிலதேவனு = வாயுதேவர்
வாங்மனோமய நெனிஸி = வாங்மய, மனோமய என்று சொல்லிக்கொண்டு
பாவக வருண = அக்னி, வருணர்களிலும்
ஸங்க்ரந்தனமுகாத்யரொளு = கை, கால் முதலிய இந்திரியங்களுக்கு அபிமானிகளான இந்திராதி தத்வாபிமானி தேவதைகளில்
இருந்து
பகவத்ரூப குணகளனு = பகவத்ரூப குணங்களை
நெனெனெனெது = திரும்பத்திரும்ப நினைத்து
உச்சரிஸுதலி = கூறினால்
நம்மனு = நம்மை
ஸதா = எப்போதும்
ஸந்தயிஸுவனு = காப்பாற்றுவான்.
முனி என்னும் சொல்லுக்கு ஞானி என்று பொருள். உத்தமமான
ஞானிகளால் அல்லது வசிஷ்டாதி முனிவர்களால் வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவர்
வாயுதேவர். கோஜ என்றால்: கௌ:=வேதாந்த வாக்கியங்கள் என்று அர்த்தம்.
வேதாந்த கிரந்தங்கள் யாரிடமிருந்து பிறந்ததோ அவருக்கு
கோஜ என்று பெயர். வாயுதேவரே மத்வ அவதாரத்தால் வேதாந்த கிரந்தங்களை இயற்றினார்
என்று பொருள். இவர் ருத்ரர் முதலான தேவதைகளுக்கு தலைவர். வாக்யாபிமானி அக்னி, நாக்கிற்கு அபிமானி வருண, மனோ என்றால் சித்த என்று அர்த்தம்
சொல்ல வேண்டும்.
இத்தகைய வாயுதேவர், சித்தத்திற்கு அபிமானி தாமே ஆகியிருக்கிறார். அல்லது; மனோபிமானி சந்திர இவர்களில் வாங்மய, மனோமய என்னும் பெயரில் இருப்பது
மட்டுமல்லாமல், கை,
கால் ஆகியவற்றிற்கு அபிமானிகளான இந்திராதி தத்வாபிமானி தேவதைகளிலும் இருந்து, அனைத்து காலங்களிலும், பரமாத்மனின் குணரூபங்களை
நினைத்தவாறு, வாயிலும் உச்சரித்தவாறு இருக்கிறார்.
அதாவது, நமது வாக்கில், மனஸ்ஸில் இருப்பதைப்போல, இந்திராதி தத்வாபிமானிகளின்
வாக்கிலும், மனஸ்ஸிலும் வாங்மய, மனோமய என்று அழைத்துக்கொண்டு
வசித்து,
பகவன் மஹாத்ம்யங்களை மனதால் நினைத்து, வாயால் உச்சரித்து, அனைத்து பிராணிகளும்
மனோவாக்குகளால் நினைக்குமாறும், உச்சரிக்குமாறும் செய்து, அவர்களுக்கு அருள்கிறார் என்று பொருள்.
பாத3வெனிபவு வாங்மனஸுக3ளு
பாத3ரூப த்வயக3ளொளு ப்ர
ஹ்லாத3 போஷக ஸங்கருஷணாஹ்வயதி3 நெலெஸித்து3 |
வேத3 சாஸ்திர புராணக3ள ஸம்
வாத3ரூபதி3 மனனகெ3யிஸுத
மோத3மய ஸுக2வித்து ஸலஹுவ ஸர்வஸஜ்ஜனர ||14
வாங்மனோமய = வாங்மய, மனோமய என்னும் இந்த இரண்டும்
பாதவெனிபுது = பாதங்கள் எனப்படுகின்றன
பாதரூப த்வயகளொளு = வாங்மய மனோமய என்னும் பாதரூபமான
இந்த இரண்டில்
ப்ரஹ்லாத போஷக = பிரகலாதனுக்கு அருளிய நரசிம்ம தேவர்
சங்கர்ஷணாஹ்வயதி = சங்கர்ஷண என்னும் இந்த இரு பெயர்களால்
நெலெஸித்து = நிலைத்திருந்து
வேத சாஸ்திர புராணகள = வேத சாஸ்திர புராணங்களை
ஸம்வாதரூபதி = கேட்க தகுதி உள்ளவர்களுக்கு சொல்லிக்
கொடுத்து,
கேட்டு மனனம் செய்வித்தவாறு, ஆனந்த ஸ்வரூபமான ஸ்ரீஹரி
ஸர்வசஜ்ஜனர = அனைத்து சஜ்ஜனர்களையும்
ஸலஹுவ = காப்பாற்றுவான்
நடப்பவர்களுக்கு பாதங்கள் எப்படி முக்கியமோ, அப்படியே ஞான மார்க்கத்தில் நடந்து, முக்த ஸ்தானத்தை அடைவதற்கு, வாக்,
மனஸ் இந்த இரண்டும் முக்கியமானவை. முந்தைய பத்யத்தில் வாக் மனோபிமானிகளில்
வாயுதேவரே இருக்கிறார் என்று சொல்லியிருந்தார். முக்திக்கு செல்வதற்கு, வாங்மய ஒரு பாதம், மனோமய ஒரு பாதம். வாயுதேவரே பாத-த்வய ரூபமாக இருக்கிறார். இந்த பாத-த்வயத்தில், வாங்மன ரூபத்தில் நரசிம்ம தேவர், மனோமய ரூபத்தில் சங்கர்ஷண தேவர்
இருக்கின்றனர். பாரதாதி சாஸ்திரங்கள், ரிகாதி வேதங்கள், பாகவதாதி புராணங்கள் ஆகியவற்றைக் கேட்பது, படிப்பது, மனனம் செய்வது ஆகியவையே ஞானத்திற்கு சாதனைகள் ஆகும். இவற்றைப் படிப்பது, வாங்மயத்தின் செயல்களாகும். இந்த வாங்மய ரூபியான வாயுதேவரில் நரசிம்மரூபியான
பரமாத்மன் இருந்து, வேத சாஸ்திரங்களை படிக்க வைக்கிறான். கேட்க வைத்து, அவற்றை மனனம் செய்வது மனத்தின் செயல்கள். இங்கு மனோரூபியான வாயுதேவரில், சங்கர்ஷண நாமக பரமாத்மன் இருந்து, மனனம் செய்விக்கிறான்.
பரமாத்மன் ஸ்வயம் நித்யானந்தமயமானவன். கிரந்தங்களை
படித்தல்,
மனன செயல்களை செய்வித்து, சஜ்ஜனர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, சாதனையை முழுவதுமாக செய்வித்து, அபரோக்ஷ ஞானத்தை பிறக்கச்செய்து, இறுதியில் முக்தியைக் கொடுத்து, அருள்கிறான்.
க3ந்த4வஹ த3ஷ தி3ஷக3ளொளக3ர
விந்த3 ஸௌரப4 பஸரிஸுத க்4ரா
ணேந்த்3ரியக3ளிகெ3 ஸுக2வனீவுத ஸஞ்சரிஸுவந்தெ |
இந்தி3ரேஷன ஸுகு3ணக3ள தை3
நந்தி3னதி3 துதிஸுதனு மோதி3ஸு
தந்த4 ப3தி4ர ஸுமூகனந்திரு மந்த3ஜனரொட3னெ ||15
கந்தவஹ = காற்று
தஷ திஷகளொளகெ = பத்து திசைகளிலும்
அரவிந்த = தாமரையின்
ஸௌரப = நறுமணத்தை
பஸரிஸுத = பரப்பியவாறு
க்ராணேந்தியகளிகெ = வாசனை முகரும் மூக்கிற்கு
சுகவனீவுத = சுகங்களைக் கொடுத்து
சஞ்சரிசுவந்தெ = சஞ்சரிப்பதைப் போல
இந்திரேஷனு = லட்சுமிபதியான பரமாத்மன்
சுகுணகள = நற்குணங்களை
தைனந்தினதி = தினந்தோறும்
துதிஸுத = துதித்தவாறு
அனுமோதிஸுத = ஸ்தோத்திரம் செய்பவர்களைப் பார்த்து
மகிழ்ந்தவாறு
மந்தஜனரொடனெ = அஞ்ஞானிகளில்
அந்த = குருடனைப்போல
பதிர = செவிடனைப்போல
ஸு = நல்ல
மூகனந்திரு = ஊமையைப் போல இரு.
தாமரை மலரில் இருக்கும் நறுமணத்தை, காற்றானது ஏந்தி, அங்கங்கு அமர்ந்திருக்கும் மக்களின் மூக்கிற்கு நறுமணத்தைக் கொடுத்து, அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து, தான் நிர்லிப்தனாக (அதற்கு
சம்பந்தப்படாமல்) இருக்கிறது. அதைப்போல, இந்திரேஷனின் மிகச்சிறந்த
நற்குணங்களை, நீ ஏற்றுக்கொண்டாலும், காற்று எப்படி அந்த நறுமணத்தை
பிறருக்குக் கொடுத்து தான் நிர்லிப்தனாக இருக்கிறதோ, அப்படி, பகவந்தனை நான் துதித்தேன், நான் ஞானி, நான் பக்தன், என்னும் கர்த்ருத்வ அபிமானத்தை வைத்துக்கொள்ளாமல், பரமாத்மனுக்கு அந்த ஸ்தோத்திர, பூஜைகளை சமர்ப்பித்து நிர்லிப்தனாக
இரு.
அல்லது, காற்று, பிராணேந்திரியங்களுக்கு மட்டுமே நறுமணத்தைக் கொடுத்து மகிழ்விப்பதைப் போல, நீ செய்யும் ஸ்தோத்திராதிகளை, பூஜைகளை சஜ்ஜனர்கள் மட்டும் கேட்டு மகிழுமாறு செய். பாபிகளான தமோயோக்கியர்களைப் பார்க்கும்போது குருடனைப் போல இரு. அவன் உன்னை திட்டினால், செவிடனைப் போல் இரு. அவருடன் பேச வேண்டியிருந்தால், ஊமையாக இரு. இதுவே ஞானிகளின் லட்சணம் ஆகும். ஞானிகளின் லட்சணங்களை ஜகன்னாததாசர் ‘மூகாபதிரரந் திப்பரொ னோள்பா ஜனகெ’ என்று கூறுகிறார். அதைப்போல இருக்கவேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment