ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, August 21, 2020

1-10 கர்ம விமோசன சந்தி

 ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

இந்த சந்தியில், மனிதர்கள் செய்யும் துஷ்கர்மங்களை பரிகாரம் செய்வதற்குத் தேவையான முக்கிய சாதனையை சொல்லியவாறு, முதலில் கர்மத்தை செய்விப்பவன் யார்? எந்தெந்த ரூபங்களால் பரமாத்மன் கர்மங்களை செய்விக்கிறான் என்னும் விஷய ஞானம் நமக்கு அவசியமாகையால், அனைத்து சேதனர்களில் வியாப்தனாக இருக்கும் பகவத்ரூபங்களை இந்த பத்யத்தில் சொல்கிறார்:

 

மூல நாராயணனு மாயா

லோலனந்தா வதார நாமக

வ்யாலரூப ஜயாரமணனாவேஷ னெனிஸுவனு |

லீலெகை3வானந்த சேதன

ஜாலதொ3ளு ப்ரத்4யும்ன பி3ரம்மா

ண்டா3லயத3 ஒளஹொரகு3 நெலெஸிஹ ஷாந்தி அனிருத்34 ||1

 

மூல நாராயணனு = அனைத்து உலகங்களுக்கும் மூலரூபனான நாராயணன்

மாயாலோல = மாயா நாமக லட்சுமிதேவியின் கணவனான வாசுதேவன்

அனந்தாவதார நாமக = அனந்தாவதாரங்களுக்கு பீஜமாக இருப்பவன்

வ்யாளரூப = சர்ப்பத்தின் உருவத்தைக் கொண்டவன்

ஜயாரமணனு = ஜயா நாமகளான லட்சுமிதேவியின் பதியான சங்கர்ஷணன்

ஆவேஷனெனிஸுவனு = அனைத்து சேதனர்களில் ஆவிஷ்ட நாமகத்தால் ஆவேஷ எனப்படுபவன்

அனந்த சேதன ஜாலதொளு = அனந்தானந்த ஜீவர்களில்

ப்ரத்யும்ன = பிரத்யும்ன ரூபி

லீலெகெய்வ = கர்மங்களை செய்து செய்வித்து லீலைகளை செய்கிறான்

ஷாந்தியனிருத்த = ஷாந்தி ரமணனான அனிருத்தன்

பிரம்மாண்டாலயத = பிரம்மாண்டம் என்னும் வீட்டின்

ஒள ஹொரகெ = உள்ளும் வெளியேயும்

நெலஸிஹ = நிலைத்திருக்கிறான்.

 

பிரளய காலத்தில் ஸ்ரீமன் நாராயணன், லட்சுமி சமேதனாக ஒரே ரூபத்தில் இருக்கிறான். அவனே உலகத்திற்கு மூல காரணனாக இருக்கிறான். ஸ்ருஷ்டி காலத்தில் வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 4 ரூபங்களை தரிக்கிறான். இந்த 4 ரூபங்களுக்கும் மனைவியாக இருப்பதற்காக, லட்சுமிதேவியும் மாயா, ஜயா, க்ருதி, ஷாந்தி என்னும் 4 ரூபங்களை தரித்து, மேலே கூறிய வாசுதேவாதி 4 ரூபங்களுக்கு மனைவியாகிறார்.

 

இந்த 4 ரூபங்களில்

* மாயாபதியான வாசுதேவன், அனந்தானந்தமான பகவத் அவதாரங்களுக்கு மூலகாரணனாக இருக்கிறான்.

* ஜயா பதியான சங்கர்ஷணன், சேஷ ரூபத்தினால் சேஷாந்தர்கதனாக, அனைத்து சேதனர்களிலும் நிலைத்திருந்து அம்ஷரூபி என்று அழைத்துக் கொள்கிறான்.

* க்ருதிபதி பிரத்யும்னன் அனைத்து சேதனர்களில் இருந்து, நானாவித கர்மங்களை செய்து செய்வித்து லீலைகளை செய்கிறான்.

* பிரம்மாண்டத்தின் உள்ளும் வெளியேயும் சாந்திபதியான அனிருத்தன் வசிக்கிறான்.

 

ஐது3 காரணரூப இப்ப

த்தைது3 கார்யக3ளெனிஸுவுவு ஆ

ரைது3 ரூபதி3 ரமிஸுதிப்பனு ஈ சராசரதி3 |

பே43வர்ஜித3 மூர்ஜக3ஜ்ஜ

ன்மாதி3 காரண முக்திதா3யக3

ஸ்வோத3ரதொ3 ளிட்டெல்லரனு ந்தெயிப ர்வக்3||2

 

ஐது காரணரூப = மேலே பார்த்த நாராயணாதி 5 ரூபங்கள், உலகிற்கு காரணரூபங்களாக இருக்கின்றன.

இப்பத்தைது கார்யகளெனிஸுவுவு = இந்த நாராயணாதி 5 ரூபங்களில் ஒவ்வொரு ரூபத்தில் 5-5 ரூபங்களால்;

 

அதாவது, நாராயணனில்,

* நாராயண நாராயண

* நாராயண வாசுதேவ

* நாராயண சங்கர்ஷண

* நாராயண ப்ரத்யும்ன

* நாராயண அனிருத்த என்று 5 ரூபங்கள்.

 

இதைப்போல வாசுதேவாதி 4 ரூபங்களிலும்,

* வாசுதேவ நாராயண

* வாசுதேவ வாசுதேவ

* வாசுதேவ சங்கர்ஷண

* வாசுதேவ ப்ரத்யும்ன

* வாசுதேவ அனிருத்த ;

 

இதேபோல 5 ரூபங்களிலும், 5-5 ரூபங்கள் என்று மொத்தம் 25 ரூபங்கள், கார்ய ரூபமான ஜகத்தில் கார்ய ரூபங்களாக இருக்கின்றன.

 

ஈ சராசரதி = சராசரங்கள் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில்

ஆரைது ரூபதி = காரண ரூபங்கள் 5; காரிய ரூபங்கள் 25, என மொத்தம் 30 ரூபங்கள்

ரமிஸுதிப்பனு = அனைத்து இடங்களிலும் வியாப்தனாகி லீலைகளை செய்கிறான்

பேதவர்ஜித = இந்த ரூபங்களில் ஒன்றுக்கொன்று பேதங்கள் இல்லாதவன்

மூஜக ஜன்மாதிகாரண = இந்த மூன்று உலகத்து ஸ்ருஷ்டியாதிகளுக்கு காரணன்

முக்திதாயக = முக்தியைக் கொடுப்பவன்

ஸர்வக்ஞ = அனைத்தும் அறிந்தவன். இத்தகைய ஸ்வாமி

ஸ்வோததொளிட்டு எல்லரனு = அனைவரையும் தன் வயிற்றில் வைத்துக்கொண்டு

ஸந்தெயிப = காப்பாற்றுகிறான்.

 

முந்தைய பத்யத்தில் கூறிய நாராயண, வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்னும் 5 ரூபங்கள் காரண ரூபங்கள் எனப்படுபவை. பானை செய்வதற்கு எப்படி மண் தேவையோ அப்படியே, ஜகத் ஸ்ருஷ்டிக்கு இந்த ரூபங்கள் காரணம் ஆனவை. நாராயணாதி ஒவ்வொரு ரூபத்திலும் நாராயணாதி 5 ரூபங்கள் இருந்து கார்ய ரூபமான ஜகத்தில், கார்ய ரூபங்களாக இருக்கின்றன. அதாவது, நாராயணாதி 5 காரண ரூபத்தின் ஒவ்வொன்றிலும், 5-5 என, காரிய ரூபங்கள் 25; இப்படி மொத்தம் 30 ரூபங்களால், பிரபஞ்சத்தில் வியாப்தனாகி ஆனந்தப்படுகிறான்.

 

இந்த அனைத்து ரூபங்களுக்கும் பேதம் இல்லாதவன். அதாவது, குண பேதங்கள் இல்லாதவன். ரூப, நாம பேதங்கள் மட்டும் உண்டு. தங்கத்தால் பல்வேறு வித ஆபரணங்களை செய்தால், அந்த ஆபரணங்களின் ரூப, நாம பேதங்கள் மட்டுமே இருக்குமே தவிர, தங்கத்தில் எப்படி பேதம் இருப்பதில்லையோ, அப்படியே, மூலரூப அம்ச ரூப முதலான காரண கார்ய ரூபங்களுக்கோ, ராம, கிருஷ்ண, மத்ஸ்ய, கூர்ம முதலான அவதார ரூபங்களுக்கோ ரூப பேதத்தினால், நாம பேதம் மட்டும் இருக்கிறதே தவிர, ஆனந்தாதி குணங்களில் பரஸ்பரம் பேதம் இல்லை என்று அறியவேண்டும்.

 

ஸ்ருஷ்ட்யாதி கர்தனு. ஆதி ஷப்தத்தினால் சங்கர்ஷணன்; சம்ஹார முதலானவற்றை செய்கிறான் என்று அறியவேண்டும். முக்தியைக் கொடுக்கிறான். அனைவரையும் தன் வயிற்றில் வைத்துக்கொண்டு பிரளய காலத்திலும் அனைத்து ஜீவர்களையும் காப்பாற்றுகிறான்.

 

கார்ய காரண கர்த்ருக3ளொளு ஸ்வ

பா4ர்யரிந்தொ33கூ3டி3 கபிலா

சார்ய க்ரீடி3ஸுதிப்ப தன்னொளு தானெ ஸ்வேச்செயலி |

ப்ரேர்ய நல்ல ரமாப்3ஜப4வ ப4

ரார்ய ரக்‌ஷிஸி ஸிக்‌ஷிஸுவனு ஸ்வ

வீர்யதி3ந்த3லி தி3விஜ தா3னவததிய நனுதி3னதி3 ||3

 

கார்ய காரண கர்த்ருகளொளு = கார்ய வஸ்துகளிலும், கர்த்ருகளிலும்

ஸ்வபார்யரிந்தொடகூடி = தன் மனைவியர்களுடன் சேர்ந்து

கபிலாசார்ய = கம் சுகம் பிபதீதி கபி: காதீதி ல: லோக குருத்வாதாசார்ய: = ஸசாஸௌ கபிலாசார்யஎன்ற வாக்கியத்தால், சுகத்தை பானம் செய்வதாலும், அனைவரையும் பாதுகாப்பதாலும், பரமாத்மனுக்கு கபில என்று பெயர். பிரம்மாதிகளுக்கும் உபதேசம் செய்பவன் ஆகையால், ஆசார்ய என்று பெயர். ஆகையால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் மஹர்ஷி: கபிலாசார்ய:என்று வந்திருக்கிறது.

தன்னொளு தானே = தனக்குள் தானே

ஸ்வேச்செயலி = தன் விருப்பப்படி

க்ரீடிசுதிப்ப = லீலைகளை செய்கிறான்

ப்ரேர்யனல்ல = தான் அனைவருக்கும் ப்ரேரகனே தவிர, ப்ரேர்யன் அல்ல; அதாவது அவனுக்கு யாரும் தேவையில்லை

ரமாப்ஜபவ பவர = ரமாதேவி, பிரம்மதேவர், ருத்ரர் இவர்களுக்கு

ஆர்ய = பெரியவன் என்று அழைத்துக்கொண்டு

ஸ்வவீர்யதிந்தலி = தனது சாமர்த்தியத்தாலேயே

திவிஜ = தேவதைகள்

தானவ = தைத்யர்கள்

ததிய = சமூகத்தை

தினதினதி = எப்போதும் காப்பாற்றி திருத்துகிறான். தேவர்கள் குழுவை காப்பாற்றுகிறான். தைத்ய குழுவை திருத்துகிறான் என்று அர்த்தம்.

 

கார்யமான ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும், காரண கர்த்ருகள் இருந்தே இருக்கிறார்கள்.

* பானை காரியம் இதற்கு மண் காரணம். குயவன் கர்தா. அவன் பயன்படுத்தும் குச்சி - உபகாரணம்.

* மக்களுக்கு ரேதஸ் காரணம். ஸ்த்ரி உப-காரணம். புருஷன் கர்தா.

என சிந்திக்க வேண்டும்.

 

இப்படியாக கார்ய வஸ்து, காரண வஸ்து, கர்த்ருகள் இவர்களில் இருந்து, ஸ்ரீஹரி தன் விருப்பப்படி லீலைகளை செய்கிறான். பிரம்மாதி அனைவருக்கும் தானே தலைவன். தனக்கு தலைவன் என்று யாரும் இல்லை. லட்சுமி, பிரம்மா, வாயு, ருத்ர ஆகியோருக்கு ஸ்வாமி என்று அழைத்துக்கொள்ளும் ஸ்ரீஹரி, தேவர்கள் குழுவை காப்பாற்றியவாறும், தைத்யர்கள் குழுவை தண்டித்தவாறும் தன் லீலைகளை செய்கிறான்.

 

மஸ்த ஜக3த்தினொளகா3

காஷதோ3லிருதிப்ப வ்யாப்தா

வேஷ அவதாரந்த ராத்மகனாகி3 பரமாத்ம |

நாஷரஹித ஜக3த்தினொளகா3

காஷதனு தானாகி3 யோகி3

ஷாஷயஸ்தி2த தன்னொ ளெல்லரனிட்டு லஹுவனு ||4

 

ஈ சமஸ்த ஜகத்தினொளகெ = இந்த அனைத்து பிரபஞ்சங்களில் இருக்கும் ; பிரம்மதேவர் முதற்கொண்டு கிருமி வரை அனைத்து சேதனர்களிலும் இருந்து; பானை முதலான ஜட பொருட்களிலும் இருந்து

ஆகாஷதொளு = இடம் இருக்கும் அனைத்து பொருட்களிலும் (ஜடமான தண்ணீர் முதலானவற்றையும் எடுத்துக் கொள்ளவேண்டும்), இப்படி அனைத்து இடங்களிலும்

வியாப்த = வியாப்தனாகவும்

ஆவேஷனு = ஆவேச ரூபத்தினாலும்

அவதார = அவதார ரூபனாகவும்

அந்தராத்மனாகி = அந்தர்யாமி ரூபனாகவும்

நாஷரஹித = ஜீவர்களைப் போல ஸ்தூல தேக நாசமாகட்டும், லிங்கதேக பங்கமாகட்டும், இல்லாதவன்

யோகீஷாஷயஸ்தித = யோகிகளின் ஹ்ருதயாகாஷங்களில் வசிப்பவனான ஸ்ரீபரமாத்மன்

ஜகத்தினொளகெ = உலகத்தில்

அவகாஷதனு தானாகி = அனைத்து பிராணிகளுக்கும் வசிப்பதற்கு அவகாசம் கொடுப்பவனாக

எல்லர = அனைத்து பிராணிகளையும்

தன்னொளகிட்டு = தனக்குள் வைத்துக்கொண்டு

சலஹுவனு = காப்பாற்றுகிறான்.

 

* தண்ணீர், ஆகாயம், மலை முதலான ஜடங்களிலும், பிரம்மதேவரில் துவங்கி, கிருமி வரையிலான ஜீவர்களிலும், எல்லா சேதனர்களிலும், தத்ரூப, ததாகாரமாக வியாபித்திருக்கும் ரூபத்திற்கு, வியாப்தரூபம் என்று பெயர்.

* பலராம, ப்ரத்யும்ன, ஸாம்ப ஆகியோரில் நிலைத்திருக்கும் ஸ்ரீஹரியின் பின்னாம்சர்களுக்கு ஆவேச ரூபங்கள் என்று பெயர்.

* ராம, கிருஷ்ணர்கள் அவதார ரூபங்கள்

* அனைத்து பிராணிகளிலும் அந்தர்யாமியாக இருக்கும் ரூபம் அந்தராத்மக ரூபம்.

 

இப்படி 4 விதங்களில், இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறான். ஆனாலும், யாரின் கண்களுக்கும் தெரியமாட்டான். கண்ணுக்குத் தெரியாததால், ஏன் இல்லை என்று சொல்லக்கூடாது என்றால், ‘யோகிஷாஷய ஸ்திதன்என்றார்கள். யோகிகள் தம் ஹ்ருதயாகாஷங்களில் பரமாத்மனை பார்க்கிறார்கள். நாம் காணாததால் பரமாத்மனே இல்லை என்று சொல்லலாமா? இந்திய நாட்டின் சக்ரவர்த்தியை நாம் பார்க்காததால், சக்ரவர்த்தியே இல்லை என்று சொல்லாமா? அவரை பார்த்திருப்பவர்கள் பலர் இருப்பதால், அப்படி சொல்லமுடியாது. சக்ரவர்த்தியை பார்க்கவேண்டுமெனில், அதற்குத் தக்க முயற்சியை எடுக்க வேண்டும். அதுபோலவே, பரமாத்மனை பார்ப்பதற்குத் தேவையான தபஸ் முதலானவற்றை செய்து, சாதனைகளை செய்யவேண்டும் என்பது கருத்து.

 

நாசம் இல்லாதவன் என்றால் ஜீவனுக்கும் நாசம் இல்லை. பரமாத்மனுக்கும் நாசம் இல்லை. பரமாத்மனிடம் இதில் விசேஷம் என்னவென்றால், ஜீவனுக்கு நாசம் இல்லையென்றாலும், அவனுக்கு வரக்கூடிய ஸ்தூல சரீரங்களுக்கு நாசம் உண்டு. இறுதியில் லிங்க சரீரம் பங்கம் ஆகிறது. பரமாத்மனுக்கு இத்தகைய நாசங்களும் இல்லை. பரமாத்மனின் சரீரத்திற்கும், பரமாத்மனுக்கும் பேதம் இல்லை. ஜீவருக்கும் ஜட தேகங்களுக்கும் பேதம் உண்டு. ஆகையால், ஜீவருக்கு தேக நாசம் உண்டு. பரமாத்மனுக்கு அது இல்லை. இத்தகைய ஸ்ரீபரமாத்மன் அனைவருக்கும் தனக்குள் வசிப்பதற்கு அவகாசம் செய்து கொடுத்து, அவர்களை காப்பாற்றுகிறான்.

 

தா3ரு பாஷாணக3த பாவக

பே3ரே பே3ரிப்பந்தெ காரண

கார்யக3ள வொளகி3த்து காரண கார்யனெந்தெ3னிஸி |

தோரிகொள்ளதெ3 எல்லரொளு வ்யா

பார மாடு3வ யோக்3யதெக3ளனு

ஸார ப2லக3ளனுணிஸி ந்தெயிஸுவ க்ருபாஸாந்த்3||5

 

தாரு = கட்டைக்குள்ளும்

பாஷாணகத = கற்களுக்குள்ளும் இருக்கும்

பாவக = அக்னி

பேரெபேரிப்பந்தெ = வெவ்வேறாக இருப்பதைப்போல

காரண = காரண வஸ்துகள்

கார்யகள = கார்ய வஸ்துகள்

இவுகள = இவற்றின்

ஒளகித்து = உள்ளே இருந்து

காரண கார்யனெந்தெனிஸி = தானே காரணன், தானே கார்ய என்று சொல்லிக்கொண்டு

தோரிகொள்ளதே = யார் கண்ணிற்கும் தெரியாமல்

க்ருபாசாந்த்ர = தயாபூர்ணனான ஸ்ரீஹரி

எல்லரொளு = அனைவரிலும்

வியாபார மாடுவ = எல்லா காரியங்களையும் செய்து செய்விக்கிறான்

யோக்யதெகளனுசார = அவரவர்களின் யோக்யதைகளுக்கேற்ப

பலகளனுணிஸி = பலன்களை அவர்களுக்குக் கொடுத்து

சந்தெயிஸுவ = காப்பாற்றுகிறான்.

 

கட்டைகளிலும், கற்களிலும் நெருப்பு இருக்கிறது. ஆனால் அது அனைவருக்கும் தெரிவதில்லை. காஷ்டத்தை மதனம் செய்தால் நெருப்பு தெரிகிறது. இரு கற்களை தேய்த்தால் நெருப்பு வருகிறது. இவற்றில் கட்டை காரண. அக்னி கார்ய. இதைப் போலவே, கல் காரண. அக்னி கார்ய. இந்த இரு நெருப்புகளுக்கு பரஸ்பர பேதம் இல்லை. காரண வஸ்து வேறு, கார்ய வஸ்து வேறு என தெரிகிறது. கட்டையில் இருக்கும் நெருப்பு, அந்த கட்டைக்கு சம்பந்தப்படாமல் எப்படி வேறுபட்டு இருக்கிறதோ, அப்படியே பரமாத்மனும், காரண கார்ய வஸ்துகளில் நிர்லிப்தனாக இருக்கிறான்.

 

கட்டையில் இருக்கும் நெருப்பை யாரும் பார்க்கமுடிவதில்லை. மதனம் செய்தாலே அது தெரியவருகிறது. அதைப்போலவே, பரமாத்மனை யாரும் பார்க்கமுடிவதில்லை. யோகிகள் யோகத்தில் அமர்ந்து தங்களின் ஹ்ருதயாகாஷத்தில் அவனை காண்கின்றனர்.

 

இப்படியாக ஒவ்வொரு காரண வஸ்துவிலும், கார்ய வஸ்துவிலும், அந்தந்த உருவத்தைப் பெற்று, அந்த பெயரால் அழைக்கப்பட்டு, அவரவர்களின் கர்மங்களை தான் செய்து, அவரிடமும் செய்விக்கிறான். அந்த கர்ம சம்பந்தமான பலன்களை, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவர்களுக்கே கொடுக்கிறான். ஆகையாலேயே, கருணாளு எனப்படுகிறான். ஜீவர்களின் நலனுக்காக, கர்மங்களை தான் செய்து, அதன் பலன்களை ஜீவருக்குக் கொடுப்பதால், கருணாபூர்ணன் என்று அவனை அழைக்கிறோம்.

 

ஊர்மிக3ளவோலிப்ப கர்ம வி

கர்மஜன்ய ப2லாப2லங்க3

நிர்மலாத்மனு மாடி3 மாடி3ஸி உண்டு3ணிஸுதிப்ப |

நிர்மம நிராமய நிராஸ்ரய

4ர்மவித் த4ர்மாத்ம த4ர்மக3

து3ர்மதி ஜனரொல்லன ப்ரதிமல்ல ஸ்ரீனல்ல ||6

 

ஊர்மிகளவோலிப்ப = கடல் அலைகளைப்போல ஒன்றன்பின் ஒன்றாக வருகிறான்

கர்ம = செய்ய வேண்டிய கர்மங்களை செய்வது

விகர்ம = செய்ய வேண்டிய கர்மங்களை செய்யாமல் விடுவது; அல்லது செய்யக்கூடாத செயல்களை செய்வது

ஜன்ய = இத்தகைய புண்ய, பாவ கர்மங்களிலிருந்து பிறக்கும்

பலாபலங்கள = சுக, துக்க பலன்கள்

நிர்மலாத்மனு = சுத்த ஸ்வரூபன்

மாடி மாடிஸி = தான் செய்து, பிராணிகளால் செய்வித்து

உணிஸுதிப்ப = ஜீவர்களுக்கு அவற்றை உண்ண வைக்கிறான்

நிர்மம = தன் மனைவி, தன் மக்கள் எனும் அபிமானம் இல்லாதவன்

நிராமய = எந்தவிதமான ரோகாதிகள், எந்த காலத்திலும் இல்லாதவன்

நிராஸ்ரய = யாரையும் எக்காலத்திலும் ஆதரவு கேட்காதவன்

தர்மவித் = தர்ம சூக்‌ஷ்மங்களை அறிந்தவன்

தர்மாத்ம = தர்ம ஸ்வரூபன்

தர்மக = தர்மாத்மர்களால் வணங்கப்படுபவன்

அப்ரதிமல்ல = யாராலும் வெல்லப்பட முடியாதவன்

ஸ்ரீனல்ல = லட்சுமிபதியான இத்தகைய ஸ்வாமி

துர்மதிஜனர = மித்யாஞான முதலான துர்மதிகளை

ஒல்லரு = அவர்கள் செய்யும் பூஜாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை.

 

கடல் அலைகள் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றனவோ, அதைப்போல, ஜீவர்கள் ஒவ்வொரு நொடியும், அபாரமான கர்மாகர்மங்களை, செய்து வருகின்றனர். கர்ம என்றால் சத்கர்மங்களை செய்கிறார்கள் என்று பொருள். அகர்ம என்றால், செய்யக்கூடாதவற்றை செய்வது மற்றும் செய்யவேண்டியதை விடுவது என்று பொருள். கர்மாகர்ம என்றால், புண்ய பாபங்கள் என்று அர்த்தம். அப்படியே, பலாபலன்கள் என்றால், சுகதுக்கங்கள் என்று பொருள். பலம் என்றால் புண்யபலம். அபல என்றால் சுகம் இல்லாமல் என்று பொருள். அதாவது துக்கம் என்று பொருள்.

 

நிர்தோஷியான ஸ்ரீஹரி, அனைத்து பிராணிகளிலும் இருந்து, புண்யபாப கர்மங்களை செய்து, செய்வித்து, அதிலிருந்து வரும் பலாபலன்களை தான் உண்டு, ஜீவருக்கும் உண்ண வைக்கிறான். பரமாத்மன், ஜீவனின் யோக்யதைக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறானே தவிர, இவர்கள் நம்மவர்கள், இவர் மற்றவர்கள் என்னும் சிந்தனையில், சுகதுக்கங்களைக் கொடுப்பதில்லை. அவன் எப்போதும், எவ்விதமான ரோகங்களையும் அனுபவிப்பவன் அல்ல. தானே அனைவருக்கும் ஆதாரமே தவிர, மற்றவர்களின் ஆதரவு பரமாத்மனுக்கு எப்போதும் தேவையில்லை. தர்ம சூக்‌ஷ்மத்தை அறிந்தவன்.

 

ஆசையை துறப்பது என்பது சாமான்யரான பகவத் பக்தர்களில் இருந்தே இருக்கிறது. பரமாத்மனிடம் இந்த குணத்தை சொல்வதன் சிறப்பு என்னவெனில்: பகவத் பக்தர்களில் இந்த குணங்கள் அவனது அருளால் வருகின்றன. பரமாத்மனிடம் இந்த குணம் சாதாரணமாகவே இருக்கிறது என்பது கருத்து. தர்ம சூக்‌ஷ்மத்தை பரமாத்மனே அறிந்தவன். அவனின் உபதேசத்தினால் மற்றவர்கள் அறியவேண்டும். இந்த விஷயத்தில், பாரத, கர்ண பர்வத்தில் ஒரு கதையை உதாரணமாக சொல்லலாம். அது என்னவெனில்:

 

தர்மராஜன், கர்ணனுடன் போர் புரிந்து, தோற்று, ஒவ்வொரு அங்கங்களிலும் கர்ணனின் அம்புகளால் அடிபட்டு, அவனால் அவமானப்படுத்தப்பட்டு, தன் கூடாரத்தை அடைந்து அங்கு படுத்தான். தன் சைன்யத்துடன் போர் புரிந்திருந்த அர்ஜுனன், தன் அண்ணனைக் காணாமல், உடனடியாக ஸ்ரீகிருஷ்ணனுடன் கூடாரத்தை அடைந்து தன் அண்ணனை அங்கு கண்டான். தர்மராஜன், கர்ணனிடமிருந்து பல திட்டுகளை வாங்கியிருந்ததால், அதைப் பொறுக்காத அர்ஜுனன், கர்ணனைக் கொன்றுவிட்டு, அந்த சுப செய்தியை தன்னிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறான் என்று எண்ணி, தர்மராஜன், அர்ஜுனனை பலவாறு புகழ்ந்து அவனை வரவேற்றான்.

 

அர்ஜுனன் உன்னை போர்க்களத்தில் காணாததால், உடனடியாக இங்கு வந்திருக்கிறேன். இனிமேல்தான் போய் கர்ணனை கொல்லவேண்டும்என்றான். தர்மராஜன் உடனே கோபத்துடன் எதற்கும் வேலைக்காகாத உனக்கு எதற்கு இந்த காண்டீப தனுஸ்? அதை கிருஷ்ணனிடம் கொடு. ராதேயனை அவன் கொல்வான். அல்லது, நீ போர் செய்யவில்லையெனில், பீமசேனனாவது கர்ணனைக் கொல்வான். நீ குந்தியிடம் வீணாகப் பிறந்தாய், பொய் சபதம் போட்டாய்என்று பலவாறு சொற்களால், அர்ஜுனனை திட்டினான்.

 

உடனே அர்ஜுனன் கையில் கத்தியை எடுத்தான். இதைக்கண்ட ஸ்ரீகிருஷ்ணன், இது என்ன? கத்தியினால் என்ன செய்வாய்? என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன் இவ்வாறு கூறினான்.

 

மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் 27ம் அத்தியாயம்:

தமாஹகாம்டிவம் தாதும்யோ வதேத்தத்வதோமயா ||

ப்ரதிஞ்ஞாதஸ்ததோ ஹஸ்மின்ருபமித்யாஹ தம் ஹரி: || 120

ஸத்யஸ்ய வசனம் ஸ்ரேய: ஸத்யஞ்ஞானந்து துஷ்கரம் ||

மத்ஸதாம் ஹிதமத்யந்தம் தத்ஸத்ய மிதி நிஷ்சய: ||121

தர்மஸ்யாசரணம் ஸ்ரேயோதர்ம ஞ்ஞானந்து துஷ்கரம் |

ய: ஸதாம் தாரகோ நித்யம் ஸதர்ம இதி நிஷ்சய: ||122

கௌஷிகாக்யே ப்ராம்ஹணோஹி லீனம் க்ராமஜனம் க்வசித் |

தஸ்கரேஷ்வபிதார்யைவ நிரயம் ப்ரத்ய பத்யத ||123

கஸ்சித்வ்யாதோ ம்ருகம் ஹத்வா மாதா பித்ரு நிமித்தத: ||

பக்‌ஷார்த்தமப்யகாத் ஸ்வர்க்கமசுரோஸௌ ம்ருகோயத: ||124

உபத்ருவாய லோகஸ்ய தபஸ்சரதிதுர்மதி: |

தஸ்மாத்ஸத்தாரகோ தர்ம: இதி க்ருத்வா வினிஷ்சயம் ||125

மா ந்ருபஞ்சஹி ஸத்யாந்த்வம் குரு வாசம் திரஸ்குரு |

இத்யுக்தோ பஹுதாsனிந்தத் க்ரோதாதேவார்ஜுனோ ந்ருபம் ||126

 

இத்யுக்த்வா சாத்மனாஷாய விகோஷம் க்ருதவானஸிம் |

புன: க்ருஷ்ணேன ப்ருஷ்டஸ்ஸன் ஸ்வாபிப்ராயமுவாசஸ: ||129

தச்ஸ்ருத்வாகர்ஹயித்வேனம் புனராஹ ஜனார்த்தன: |

மதிபூர்வம் தேஹ நாஷாத்பபம் மஹதவாப்யதே ||130

அதோமாத்யஜ தேஹந்து குருஜாத்ம ப்ரஷம்ஸனம் ||131

ததோகுரூணாம் த்வம்கார: ஸ்வப்ரஷம்ஸ்யைவ சாத்மன: ||

இத்யுக்த ஸத்வஹம் காராச்சஷம்ஸ ஸ்வகுணானலம் ||132

குருனிந்தாத்மபூஜாச தர்மாயன பவேத் க்வசித் |

ததாப்யர்ஜுனஹார்தம் தத்ஸம் ப்ரகாஷ்யஜனார்த்தன: ||133

தஸ்யலஜ்ஜாம்ஸமுத்பாத்ய நாஷயித்வாசதம் மதம் ||

நாஹம் வேத பரந்தர்மம் க்ருஷ்ண ஏவகதிர்மம ||134

இதிபாவம் ஸமுத்பாத்ய தோஷான்னாஷயிதும் ஹரி: ||

காரயாமாஸ தத்ஸர்வம் அர்ஜுனேன ஜகத்பதி: ||135

 

அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணனிடம் : கிருஷ்ணா, காண்டீவத்தை இன்னொருவரிடம் கொடு என்று யார் என்னிடம் சொல்கிறானோ, அவனை நான் கொல்வேன் என்று முன்னர் ஒரு முறை சபதம் செய்திருந்தேன். அதனை உண்மையாக்குவதற்கு, தர்மராஜனைக் கொல்வேன்என்றான்.

 

கிருஷ்ணன்: ஹே பார்த்தா, சத்யத்தைக் காப்பது என்னமோ தேவையானதே. ஆனால், சத்யம் என்றால் என்ன? அதை அறிவாயா? சத்யத்தின் அர்த்த, ஞானத்தை மட்டும் அறிவது மிகவும் கஷ்டம். கண்டதை அப்படியே சொல்வது சத்யம் அல்ல. எதை செய்தால் அதனால் சஜ்ஜனர்களுக்கு ஹிதம் ஆகிறதோ, அதனை செய்வதும், அல்லது சொல்வதும் சத்யம் ஆகிறது. இதைப் போல, தர்மத்தை பின்பற்றுவதும் புண்யசாதனமே ஆகிறது. தர்மத்தின் அர்த்த, ஞானம் மட்டும் கிடைப்பது கஷ்டம். கேள்! முன்னர் ஒரு காலத்தில் கௌஷிக என்னும் ஒரு பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் சத்யவாதி என்று புகழ்பெற்றிருந்தான்.

 

இப்படியிருக்கையில், ஒரு நாள், அவன் வழியில் சென்று கொண்டிருக்கும்போது, தம்மைத் துரத்தி வந்த கள்வர்களிடமிருந்து தப்பி வந்த சில பிராமணர்கள், இந்த பிராமணனின் ஆசிரமத்தில் வந்து பதுங்கினர். பின்னாலேயே வந்த கள்வர்கள், இந்த சத்யவாதி பிராமணனிடம் - இங்கு ஓடிவந்த பிராமணர்கள் எங்கே என்று கேட்க, இவனும் அந்த பிராமணர்கள் மறைந்திருந்த இடத்தை அந்த கள்வர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டான். கள்வர்கள் அந்த பிராமணர்களை அடித்து, அவர்களின் பொருட்களை கவர்ந்து சென்றனர். இந்த பாவம் அந்த சத்யவாதிக்கு வந்தது. அவனும் கோரமான நரகத்திற்குச் சென்றான்.

 

ஒரு வேடன், தன் பெற்றோர் உண்ணவேண்டுமென்று ஒரு மிருகத்தைக் கொன்றான். அந்த மிருகம் உண்மையில் ஒரு அசுரன். லோக-ஹிம்ஸைக்காக தவம் செய்துகொண்டிருந்தான். அவனைக் கொன்றதால், இந்த வேடனுக்கு ஸ்வர்க்கம் கிட்டியது.

 

ஆகையால், சஜ்ஜனர்களை மேம்படுத்துவதே தர்மம். ஆகவே, அண்ணனை கொல்லாமல், அவனை நன்றாக திட்டி விடு. பெரியவர்களை திட்டினால், அது அவர்களை கொல்வதற்கு சமம். இதனால் உன்னுடைய சபதத்திற்கும் கேடு வராதுஎன்றான்.

 

அர்ஜுனன் : கிருஷ்ணனின் இந்த பேச்சினைக் கேட்டு தர்மராஜனிடம் நீ திட்டத்தக்க சூது போன்ற விஷயங்களை செய்திருக்கிறாய். நீயே கையாலாகாதவன். மற்றவர்களை திட்டிக் கொண்டிருக்கிறாய். போரில் பயந்து புறமுதுகு காட்டி ஓடிவந்திருக்கிறாய். என்னைத் திட்டுவதற்கு உனக்கு அருகதையில்லைஎன்று பலவாறு திட்டிவிட்டு, மறுபடி தன் கத்தியை எடுத்தான்.

 

கிருஷ்ணன்: மறுபடி என்ன செய்யப்போகிறாய்?

 

அர்ஜுனன்: கிருஷ்ணா. அண்ணனை நான் திட்டியதால் அதனால் வந்த பாவத்திற்கு ஆளானேன். அதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.

 

கிருஷ்ணன்: பைத்தியக்காரனைப் போல செய்கிறாய். மனப்பூர்வமாக தற்கொலை செய்துகொண்டால், மிகப்பெரிய பாவத்திற்கு ஆளாவாய். ஆகையால் இந்த முடிவை கைவிடு. உன்னை நீயே புகழ்ந்துகொள். அதனால் நீ தற்கொலை செய்து கொண்டாற்போல ஆயிற்று.

 

கிருஷ்ணனின் இந்த பேச்சைக் கேட்ட அர்ஜுனன், கர்வத்தினால் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டான். இப்படியாக கிருஷ்ணன் அர்ஜுனனின் கர்வத்தையும் அடக்கினான்.

 

எனக்கு எந்த தர்மமும் தெரியாது. கிருஷ்ணா. நீயே எனக்கு கதிஎன்றான் அர்ஜுனன். அவன் சொல்வதைப்போல கேட்பதே நமக்கு தர்மம் என்னும் ஞானம் பிறந்தது. இத்தகைய ஞானத்தை அர்ஜுனனுக்குக் கொடுத்து, அவனின் தோஷத்தை பரிகரிப்பதற்காக, கிருஷ்ணன் அர்ஜுனன் மூலமாக இத்தகைய செயல்களை செய்யவைத்தான் என்று இந்த கதை சொல்கிறது.

 

இத்தகைய சூக்‌ஷ்மமான தர்மங்களை அறிந்தவன் பரமாத்மன் ஒருவனே. வேறு யாரும் இல்லை. ஆகையால் தர்மவித்என்றார். மற்றும், ஸ்வயம் தர்ம ஸ்வரூபன், தர்மாத்மர்களால் வணங்கப்படுபவன், யாராலும் வெல்லப்பட முடியாதவன், லட்சுமிபதி, மித்யாஞானம், தவறான ஞானம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் துர்மதிகள் ஆவர். (இந்த விஷயத்தில் பாகவத தாத்பர்ய வாக்கியங்கள், முந்தைய சந்தியில் அங்கங்கு உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இங்கு அந்த பிரமாணங்கள் கொடுக்கப்படவில்லை). இத்தகைய துர்மதிகள் செய்த பூஜாதிகளை பரமாத்மன் ஏற்றுக் கொள்வதில்லை.

 

ஜலத3 வடபா3னலக3ளம்பு3தி4

ஜலவனும்பு3வுத3ப்த3 மளெக3ரெ

திளெகெ3 ஷாந்திய  நீவுத3னலன தானெ பு4ஞ்சிபுது3 |

திளிவுதீ3பரியல்லி லகுமி

நிலய கு3ணக்ருத கர்மஜ ப2லா

2லக3ளு ண்டுணிஸுவனு ர்வக3 ர்வஜீவரிகெ3 ||7

 

ஜலத = மேகங்கள்

படவானலகளு = கடலில் இருக்கும் படவாக்னி இவை இரண்டும்

அம்புதி ஜலவனு = கடல் நீரை

உம்புவுவு = குடிக்கின்றன

அப்த = மேகங்கள்

மளெகரெது = மழை பெய்து

இளெகெ = பூமிக்கு

ஷாந்திய நீவுது = குளிர்ச்சியைத் தருகிறது

அனலனு = அக்னி

தானெ புஞ்சிபுது = தனது கடல் நீரை தானே குடித்துவிடுகிறான் (சுட்டு விடுகிறான்)

ஈ பரியல்லி = இப்படியாக

திளிவுது = அறிந்து

லட்சுமி நிலய = லட்சுமிதேவியருக்கு வீடாக இருக்கும்

ஸர்வக = அனைத்து இடங்களிலும் வியாப்தனான ஸ்ரீபரமாத்மன்

குணக்ருத = சத்ய ரஜஸ் தமோ குணங்களின் சம்பந்தத்தினால் செய்யப்பட்ட

கர்மஜ = கர்மங்களால் பிறந்த

பலாபலங்கள = சுக துக்கங்களை

ஸர்வஜீவரிகெ = அனைத்து ஜீவர்களுக்கும்

உண்டுணிஸுவனு = தானும் உண்டு மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுக்கிறான்

 

கடலில் இருக்கும் நீரினை, மேகங்கள் மற்றும் படவாக்னி இந்த இரண்டும் குடிக்கின்றன. மேகமானது, தான் குடித்த நீரினை, மழையாக பொழிந்து பூமிக்கு குளிர்ச்சியை தந்து மக்களை மகிழ்விக்கிறது. படவாக்னி, தான் குடித்த நீரினை தானே ஜீர்ணம் செய்துகொள்கிறது. அதாவது, அந்த நீரினை சுட்டுவிடுகிறது. இப்படி மேகத்திலும், படவாக்னியிலும் இருக்கும் இரு தனித்தனியான குணங்கள், பரமாத்மன் ஒருவனிடமே இருக்கிறது. இதற்கு இரு உவமைகளை சொல்கிறார்.

 

கடல் நீரைக் குடித்த மேகம், பூமியில் அதனை மழையாகப் பொழிந்து, மக்களுக்கு குளிர்ச்சியைத் தருவதைப்போல, ஜீவர்கள் செய்யும் கர்மங்களிலிருந்து வரும் சுப பலன்களை பரமாத்மன் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு இரு மடங்கான சுகங்களைத் தருகிறான்.

 

படவாக்னி தான் குடித்த தண்ணீரை சுட்டுவிடுவதைப்போல, பரமாத்மன் தான் ஸ்வீகரித்த பாவ பலன்களை சுட்டுவிடுகிறான். பாபிகளில் இருக்கும் பாப கர்மங்களை, அங்கேயே விட்டு, புண்யங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, அந்த புண்யங்களை சஜ்ஜனர்களுக்குக் கொடுக்கிறான்.

 

இந்த விஷயத்திலும் மேகத்தின் உபமானத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். மேகமானது, கடலில் இருக்கும் அனைத்து நீரினையும் எடுத்துக் கொள்வதில்லை. கடலின் யோக்யதையை மீறி வரும் தண்ணீரை குடிக்கிறது. பரமாத்மனும் அப்படியே, பாவங்களை தைத்யர்களில் விட்டு, அவருக்கு மீறிய புண்யத்தை கிரகித்து, மேகம் மழை பொழிந்து மக்களை சுகப்படுத்துவதைப்போல, சஜ்ஜனர்களுக்கு அந்த புண்யத்தை கொடுக்கிறான் என்பது கருத்து.

 

புஸ்தகக3ள வலோகிஸுத ம

ந்த்ர ஸ்துதிக3ளனலேனு ரவியுத3

யஸ்தமன பரியந்த ஜபதப மாடி32லவேனு |

ஹ்ருத்ஸ்த பரமாத்மனெ மஸ்தா

வஸ்தெ23ளொளித் தெ3ல்லரொளகெ3 நி

ரஸ்தகா3மனு மாடி3 மாடி3பனெந்து3 திளியத3||8

 

நிரஸ்தகாமனு = பலன்களை விரும்பாத

ஹ்ருஸ்த = அனைவரின் இதயங்களில் வசிப்பவனான பரமாத்மனே

எல்லரொளகெ = அனைத்து பிராணிகளுக்குள்ளும்

ஸமஸ்தாவஸ்தெகளொளு = ஜாக்ர, ஸ்வப்ன, சுஷுப்தி ஆகிய அனைத்து நிலைகளிலும் இருந்து

மாடி மாடிபனெந்து = அனைத்து கர்மங்களையும் தான் செய்து, ப்ராணிகளால் செய்விக்கிறான் என்பதை

திளியதவ = அறியாதவன்

புஸ்தககள = புத்தகங்களை

அவலோகிஸுத = பார்த்தவாறு

மந்திர ஸ்துதிகளனு = மந்திர துதிகளை

எனலு = வாயால் உச்சரித்தால்

ஏனு = என்ன பலன்?

ரவிஉதய = சூர்யோதயத்திலிருந்து

அஸ்தமய பர்யந்த = மாலையில் சூர்ய அஸ்தமனம் வரைக்கும்

ஜபதப மாடி = ஜபங்களை செய்து

பலவேனு = என்ன பலன்? எதுவும் இல்லை என்று பொருள்.

 

எவ்வித பலன்களையும் எதிர்பாராமல், அனைவரின் இதயாகாஷத்தில் இருக்கும் பரமாத்மனே அனைத்து பிராணிகளிலும் இருந்து, முழிப்பு, கனவு, தூக்கம் ஆகிய அனைத்து நிலைகளிலும், அனைத்து கர்மங்களையும், தான் செய்து செய்விக்கிறான் என்று சிந்திக்காதவன், புத்தகங்களைப் படித்து, பாராயணங்களை செய்து, மந்திர ஸ்தோத்திரங்களை மனனம் செய்து, சூர்யோதயத்திலிருந்து சூர்ய அஸ்தமனம் வரை, ஜபதபங்களை செய்து - என இவை அனைத்துமே நிஷ்பலன்களே ஆகின்றன. (எவ்வித பலன்களையும் கொடுப்பதில்லை).

 

மத்3யபா4ண்டவ தே3வனதி3யொள

3த்தி3 தொளெயலு நித்யத3லி பரி

ஷுத்34வாஹுதெ3 எந்தி3கா33ரு ஹரிபதாப்3ஜக3

பு3த்3தி4பூர்வக ப4ஜி3வகெ3 வி

ருத்34 வெனிஸுவுவெல்ல கர்ம

ம்ருத்3தி43ளு து3க்க2வனெ கொடுதிஹவத4ம ஜீவரிகெ3 ||9

 

மத்யபாண்டவ = கள் ஊற்றிய மண் பானையை

தேவ நதியொளகெ = கங்கையில்

நித்யதலி = தினந்தோறும்

அத்தி தொளெயலு = அமிழ்த்தி கழுவினால்

எந்திகாதரு = என்றைக்காவது ஒரு நாள்

பரிஷுத்தவாஹுதெ = பரிசுத்தம் ஆகிறதோ? (இல்லை)

ஹரிபதாப்ஜகள = பரமாத்மனின் பாதாரவிந்தங்களை

புத்திபூர்வக = அனுசந்தான பூர்வகமாக

அவன், பஜிஸதவகெ = துதிக்காதவனுக்கு

எல்ல கர்ம = அனைத்து கர்மங்களும்

விருத்த வெனிஸுவுவு = எதிர்பதமாக நடக்கும் (புண்ணிய கர்மங்கள் பாப பலன்களைக் கொடுக்கும். பாப பலன்கள் அதிகரிக்கும்)

அதம ஜீவரிகெ = அதம ஜீவர்களுக்கு

ஸம்ருத்திகள துக்கவனெ = சம்பூர்ணமான துக்கத்தையே

கொடுதிஹவு = கொடுக்கின்றன.

 

மேலே சொன்னதைப்போல, பரமாத்மனின் பாத கமலங்களை அனுசந்தானத்துடன் துதிக்காமல், ஜப, தப, முதலான எந்த கர்மங்களை செய்தாலும், அது இவனை மேம்படுத்தாது. பாகவத 6ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயத்தில் :

 

ப்ராயஸ்சித்தானி சீர்ணானி நாராயண பராங்மகை |

நவை புனந்தி ராஜேந்திர ஸுரா கும்பமிவாபகா: ||

 

நாராயணனிடம் பக்தி இல்லாதோர், தங்கள் பாப பரிகாரத்திற்காக பிராயச்சித்த ரூபங்களாக எந்த கர்மங்களை செய்தாலும், கள் நிரம்பியிருந்த பானையை, கங்கை எப்படி சுத்தம் செய்யாதோ, அப்படியே இவையும் இவனை சுத்தப்படுத்தாது என்கிறார்கள்.

 

இதே அர்த்தத்தையே தாசார்யரும் இங்கு சொல்கிறார். கங்கை அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தும் தகுதி கொண்டதானாலும், கள் பானையை எப்படி சுத்தம் செய்யாதோ, அப்படி, சத்கர்மங்கள் அவை உத்தமமானாலும், அவற்றை பரமாத்மனே செய்வித்தான் என்னும் அனுசந்தானம் இல்லாமல், நானே அவற்றை செய்தேன் என்று அறிந்து, அதம ஜீவர்கள் செய்த கர்மங்கள், எதிர்ப்பதமான பலன்களையே கொடுக்கின்றன. அதாவது, அதிகமான பாவங்களையே கொடுக்கின்றன.

 

4க்திபூர்வகவாகி3 முக்தா

முக்த நிய்யாமகன ர்வோ

த்ரிக்த மஹிமெக3ளனவரத கொண்டா3டு3 மரெயத3லெ |

க்தனாக3தெ3 லோகவார்த்தெ ப்ர

க்திக3ளனீடா3டி3 ஸ்ருதிஸ்ம்ரு

த்யுக்த கர்மவ மாடு3திரு ஹரியாக்3ஞெ எந்த3ரிது3 ||10

 

முக்தாமுக்த நீயாமகன = முக்தர்களுக்கும், அமுக்தர்களான அனைத்து பிராணிகளுக்கும் தலைவனான ஸ்ரீபரமாத்மன்

சர்வோத்ரிக்த மஹிமெகள = அனைவரையும்விட அதிக மகிமைகளைக் கொண்டவனை

மரெயதலெ = மறக்காமல்

அனவரத = தினந்தோறும்

கொண்டாடு = துதி

ஸக்தனாகதெ = சம்சாரத்தில் மூழ்கிவிடாமல்

லோகவார்த்தெ ப்ரசக்திகள = லௌகிக சம்பந்தமான அரட்டைகளை

ஈடாடி = விட்டு

ஸ்ருதிஸ்ம்ருத்யுக்த கர்மவ = ஸ்ருதி, ஸ்ம்ருதிகளில் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்ட கர்மங்களை

ஹரியாக்ஞெ = ஹரியின் ஆணை

எந்தரிது = என்று அறிந்து

மாடுதிரு = செய்து கொண்டிரு.

 

முக்தர்களுக்கும், அமுக்தர்களுக்கும் தலைவனான ஸ்ரீபரமாத்மனின் மிகச்சிறந்த மகிமைகளை மறக்காமல் தினந்தோறும் பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். சம்சாரத்தில் மயங்கிவிட வேண்டாம். லௌகிகமான வீண் அரட்டைகளை விட்டு, ஸ்ருதி ஸ்ம்ருதியில் செய்யவேண்டும் என்று சொன்னவற்றை ஹரியின் ஆணை என்று அறிந்து அவற்றை செய்துகொண்டிரு. 

No comments:

Post a Comment