ஆஸெகொ3ளகா3த3வனு ஜனரிகெ3
தா3ஸனெனிஸுவனாஸெயனு நிஜ
தா3ஸிகை3தி3ஹ பும்ஸரெல்லரு தா3ஸரெனிஸுவரு |
ஸ்ரீஷனங்க்4ரி ஸரோஜயுக3ள நி
ராஸெயிந்த3லி ப4ஜிஸெ ஒலிது3 ர
மாஸஹித தன்னனெ கொடு3வ கருணாஸமுத்3ர ஹரி ||26
ஆசெகெ = தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்னும்
ஆசைக்கு
ஒளகாதவனு = மயங்கியவன்
ஜனரிகெ தாசனெனிசுவனு = மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பான்
ஆஷெயனு = இத்தகைய ஆசையை
நிஜ தாசகைதிஹ = தன் தாசனாக மாற்றிக்கொண்ட
பும்ஸகெ = புருஷனுக்கு
எல்லரு = உலக மக்கள் அனைவரும்
தாசரெனிஸுவரு = அதீனராகி இருப்பர்
ஸ்ரீஷனங்க்ரி ஸரோஜயுகள = லட்சுமிபதியான ஸ்ரீஹரியின்
பாத கமலங்களை
நிராசெயிந்தலி = எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
பஜிஸெ = துதித்து
கருணாசமுத்ர = கருணைக்கடலான
ஹரி = ஸ்ரீஹரி
ரமாஸஹித = லட்சுமிதேவியுடன்
தன்னனெ = தன் ரூபத்தையே
கொடுவ = கொடுப்பான் (அபரோக்ஷத்தில் தரிசனம்
கொடுப்பான், முக்தியில் தன் தேகத்தில் இடம் கொடுப்பான்).
நிஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜகத் - உலகத்தில் எவ்வித
பதார்த்தங்களிலும் ஒருவனுக்கு ஆசை இல்லையெனில், அவனுக்கு மகாராஜாவிடமிருந்தும் ஆவது என்ன?
ஆஷானாமஹி லோகேஸ்மின் காசிதாஷ்சர்ய ஸ்ருங்கலா |
யயாபத்தா: ப்ரதாவந்தி முக்தாஸ்திஷ்டந்தி பங்குவத் ||
ஆசை என்பது ஒருவனுக்கு காலில் கட்டிய சங்கிலியைப் போன்றதாகும்.
ஏனெனில்,
கட்டியவுடன் அவனுக்கு கால் இருந்தாலும், அவன் எங்கும் போகாமல் அமர்ந்து விடுவான். அந்த சங்கிலியை அவிழ்த்தவுடன், மிகவும் மகிழ்ச்சியுடன் ஓடிவிடுவான்.
ஆசையும் அப்படியே. ஆசைக்கு மயங்கியவன், கண்டவர்களுக்கு தாசனாகி, அவர்களிடம் வேண்டி, தன் ஆசை பூர்த்தி ஆகாமல் கஷ்டப்படுவான். யார் ஒருவனுக்கு ஆசையே இல்லையோ, அந்த ஆசையை அவன் தன் தாசனாக ஆக்கிக் கொள்வான். இவன் சொல்வதைப்போல அந்த ஆசை
கேட்குமே தவிர, தான் ஆசைக்கு அடிமை ஆகமாட்டான். ஆசையை விட்டவன் எவனோ, அவனுக்கு இந்த உலகத்தில் எதனாலும், யாராலும் ஆவதென்ன? உலகத்தில் இருக்கும் அனைத்தும் கிருமி போன்றதே. ஆகையால், இத்தகைய ஆசையை விட்டு, எவ்வித பலன்களையும் எதிர்பாராமல், பரமாத்மனை வேண்டினால், கருணைக்கடலான ஸ்ரீஹரி ரமா சமேதனாகி, தானே தரிசனம் அளித்து, தன்னையே கொடுக்கிறான்.
பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தானே தாசனாக ஆகவில்லையா? பலிசக்ரவர்த்தியின் வீட்டில் வாமன ரூபத்தினால் தானே வீட்டை
பாதுகாத்திருந்தான். அப்படியே, நிஷ்காம பக்தர்களுக்கு தரிசனம்
அளித்து,
இஹபரங்களில் அனைத்து விதங்களிலும் அவர்களுக்கு அருள்கிறான்.
த்3யுனதி3யாத்3யந்தவனு காணதெ3
மனுஜனேகத்ரத3லி தா ம
ஜ்ஜனவகை3து3 ஸமஸ்த தோ3ஷதி3 முக்தனஹதெரதி3 |
அனக4ன மலானந்தனந்த ஸு
கு3ணக3ளொளகொ3ந்தெ3 கு3ணத3 உபா
ஸனவகை3வ மஹாத்ம த4ன்ய க்ருதார்த்தனெனிஸுவனு ||27
மனுஜனு = மனிதன்
த்யுனதிய = கங்கையின்
ஆத்யந்தவனு = ஆதி, அந்தத்தை
காணதே = பார்க்கமுடியாமல்
ஏகத்ரதலி = ஒரே இடத்தில்
தா = தான்
மஜ்ஜனவ = ஸ்னானத்தை
கைஸி = செய்ய
சமஸ்ததோஷதி = எல்லா தோஷங்களில் இருந்தும்
முக்தனஹதெரதி = முக்தன் ஆவதைப்போல
அனகன = தோஷங்கள் இல்லாதவனான பரமாத்மனின்
அமல = நிர்மலமான
அனந்தானந்த = எண்ணிக்கையில் அடங்காத
சுகுணகளொளகெ = நற்குணங்களில்
ஒன்றே குணத உபாசனவகைவ = ஒரேயொரு குணத்தை உபாசனை
செய்தால்
மஹாத்ம = மகாத்மன்
தன்ய = தன்யன் எனப்படுகிறான்.
கங்கையின் ஆதி, அந்தத்தை காண முற்படாமல், பக்தியுடன் ஏதோ ஒரு இடத்தில்
ஸ்னானம் செய்பவர், அனைத்து பாவங்களிலிருந்து முக்தர் ஆகின்றனர். கங்கையின் மஹாத்ம்ய ஞானம்
ஒன்றிருந்தால் போதும். அதன் ஆதி, அந்தம் அறியவேண்டியது அவசியம்
இல்லை.
அதுபோலவே, தோஷங்கள் அற்றவனான பரமாத்மனின்
அனந்தானந்த குணங்களில் ஒரு குணத்தின் மிகச்சிறிய பாகத்தையாவது அறிந்து, அதனை பக்தியுடன் உபாசனை செய்தால், அவனே தன்யன் ஆகிறான்.
க்ருதார்த்தன் என்று உலகில் புகழ்பெறுகிறான்.
வாஸுதே3வனு கரெஸுவனு கா
ர்ப்பாஸனாமதி3 ஸங்கருஷணனு
வாஸவாகி3ஹ தூலதொ3ளு தந்துக3னு ப்ரத்3யும்ன |
வாஸரூபனிருத்3த4 தே3வனு
பூ4ஷணனு தானாகி3 தோர்ப்ப ப
ரேஷ நாராயணனு ஸர்வத3 மான்ய மானத3னு ||28
வாசுதேவனு = வாசுதேவ நாமக ஸ்ரீபரமாத்மன்
கார்ப்பாஸனாமதி = பஞ்சு (விதைகளைக் கொண்ட) என்னும்
பெயரில்
கரெசுவனு = அழைத்துக் கொண்டு
சங்கர்ஷணன்
தூலதொளு = பஞ்சு (விதைகள் இல்லாதவை)
வாஸவாகிஹ = வசிக்கிறான்.
ப்ரத்யும்ன,
தந்துகனு = நூல்களில்
அனிருத்த தேவன்,
வாஸரூபனு = வஸ்திர ரூபமாக
தோர்ப்ப = தோன்றுகிறான்.
பரேஷ நாராயணனு = நாராயணரூபி பரமாத்மன்
ஸர்வதாமான்ய = பூஜ்யனாகவும்
மான்ய மானதனு = மரியாதை கொடுத்தும், மரியாதை பெற்றுக்கொண்டும்
பூஷணனு தானாகி = அலங்கரிக்கப்பட்டவனாக இருக்கிறான்.
* வாசுதேவன், பஞ்சு என்னும் பெயரில், (விதைகளைக் கொண்ட) பஞ்சில்
இருக்கிறான்.
* சங்கர்ஷணன் விதைகளைப் பிரித்த
பஞ்சில் அந்தப் பெயரில் இருக்கிறான்.
* பிரத்யும்னன், நூல்களில், தார என்னும் பெயரில் இருக்கிறான்.
* அனிருத்தன், வஸ்திர ரூபத்தினால், வஸ்திர என்னும் பெயரில்
வஸ்திரத்தில் இருக்கிறான்.
* அலங்காரங்களில் முக்கியமானது
வஸ்திரம் என்று அறிவோம். அத்தகைய பூஷண ஸ்தானத்தில் பரேஷனான ஸ்ரீமன் நாராயணன்
இருக்கிறான்.
இப்படியாக அனுசந்தானத்துடன் வஸ்திரத்தை அணிந்தால், அவன் தன்யன் ஆகிறான். வஸ்திரத்தை தரிப்பவனில் இருந்து, அனைவராலும் புகழப்படுவான். அதே நாராயணனே, பார்ப்பவர்களில் இருந்து, மரியாதையைக் கொடுக்கிறான்.
லலனெயிந்3தொ3ட3கூடி3 சைலக3
ளொளகெ3 ஓதப்ரோத ரூபதி3
நெலெஸிஹனு சதுராத்மக ஜக3ன்னாத2 விட்டலனு |
சளி பி3ஸிலு மளெ கா3ளியெந்த3ரெ
க4ளிகெ3 பி3ட3த3லெ காவனெந்த3ரி
தி3ளெயொளர்ச்சிஸுதிரு ஸதா3 ஸர்வாந்தராத்மகன ||29
சதுராத்மக = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் 4 ரூபங்களைக் கொண்ட
ஜகன்னாதவிட்டலனு = தாசராயரின் பிம்பமூர்த்தியான
ஜகன்னாத விட்டல என்னும் ஸ்ரீ நாராயணன்
லலனெயிந்தொடகூடி = தன் மனைவியுடன் சேர்ந்து
சீலகளொளகெ = வஸ்திரங்களில்
ஓதப்ரோத ரூபதி = குறுக்கும் நெடுக்குமாக நூல்களாக
நெலெஸிஹனு = நிலைத்திருக்கிறான்.
சளி பிசிலு மளெ காளி எந்து = குளிர், வெயில், மழை,
காற்று என்று ஏதோ ஒரு காரணத்தாலும்
அரெ களிகெ பிடதலெ = அரை நாழிகைகூட விடாமல்
காவனெந்து = காக்கிறான் என்று
அரிது = அறிந்து
இளெயொளு = பூமியில்
ஸதா = எப்போதும்
ஸர்வாந்தராத்மகன = அனைவரிலும் அந்தர்யாமியாக
ஸ்ரீபரமத்மனை
அர்ச்சிஸுதிரு = பூஜித்திரு.
அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ எனும் 5 மூர்த்திகளின் ஸ்வரூபபூதனான ஜகன்னாத விட்டலாத்மக ஸ்ரீமன் நாராயணன், வஸ்திரங்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் நூல்களின் ரூபத்தில் இருந்து, குளிர், வெயில், மழை,
காற்று என என்ன வந்தாலும், அரை நாழிகையும் விடாமல், எப்போதும் நம்மை காக்கிறான் என்று அறிந்து அவனை வணங்கிக் கொண்டிரு. அந்த
நூல்களைப் போலவே பரமாத்மனின் ரூபங்களும், நம் சரீரத்தில் உள்ளேயும்
வெளியேயும் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பது கருத்து.
ஸ்வாச சந்தி என்னும் 15ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment