ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, August 8, 2020

6-10 தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி

மாணிகவ கொண்ட3ங்க3டி3யொளஜி

வான கொட்டாபுருஷன மா

தா3ன மாடு3வதெரதி3 தை3த்யரு நித்யத3லி மாள்ப |

தா3ன யக்ஞாதிக3ள ப2ல பவ

மானபிதன பஹரிஸி அமீ

சீன ஸு23ள கொட்டு அஸுரர மத்தரனு மாள்ப ||6

 

மாணிகவகொண்டு = மாணிக்கத்தைக் கொண்டு வந்து

அங்கடியொளு யஜமானனு = கடையில் கடைக்காரர்

ஔஜிவான கொட்டு = ஓமத்தைக் கொடுத்து

ஆ புருஷன = அதைக் கொண்டு வந்து கொடுத்தவனை

சமாதான மாடுவ தெரதி = ஏமாற்றுவதைப் போல

தைத்யரு நித்யதலி மாள்ப = தைத்யர்கள் தினமும் செய்யும்

தான யக்ஞாதிகள பல = தான யக்ஞாதிகளின் பலன்களை

பவமானபிதனு = ஸ்ரீபரமாத்மன்

அபஹரிஸி = அபகரித்து

அசமீசீன சுககள கொட்டு = தற்காலிக சுகங்களைக் கொடுத்து

அசுரர = அந்த அசுரர்களை

மத்தரன மாள்ப = கர்வம் கொண்டவர்களாக மாற்றுகிறான்.

 

மாணிக்கத்தின் சரியான மதிப்பு தெரியாத முட்டாள் ஒருவன், அதை கடையில் கொடுக்க, அந்த கடைக்காரர் இவனை ஏமாற்றி, சிறிது ஓமத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டால் எப்படியோ அப்படியே அபக்தர்கள், இந்த ப்ரபஞ்சத்தின் சுகரூபமான அல்ப பலன்களைப் பெறுவதற்காக யாக தானங்களை செய்தால், அந்த கர்மங்களில் வரும் உத்தம பலன்களை தேவதைகளுக்குக் கொடுத்து, தைத்யர்களுக்கு அவர்கள் வேண்டும் விஷயாதி போகங்களையோ, ஸ்வர்க்காதிகளையோ சிறிது காலத்திற்கு கொடுக்கிறான். இதன்படி, கடைக்காரரைப் போல பரமாத்மனும் அவர்களை ஏமாற்றுகிறார் என்று நினைக்கக்கூடாது. இந்த சந்தேகத்தை மேற்கூறிய பத்யத்திலேயே போக்கியிருக்கிறோம்.

 

தேவதைகளின் ப்ரேரணையின்படி இவர்கள் இந்த கர்மங்களை செய்தால், அதன் பலன்கள் தேவதைகளுக்குப் போய் சேர்வது நியாயமே என்று அர்த்தம். இவர்களே யாகாதிகளை எவ்வித பலன்களையும் எதிர்பார்க்காமல் செய்தால், மாணிக்கத்தைப் போன்ற மிகச்சிறந்த முக்திக்கு அதுவே சாதனையாகிறது. காம்ய பலன்களைப் பெறுவதற்காக செய்தால், ஓமப்பொடியைப் போல அல்ப பலன்களே கிடைக்கிறது. அந்த பலன்களை அசுரர்கள் உள்ளிருக்கும் தேவதைகள் அனுபவிக்கின்றனர் என்று முந்தைய பத்யத்தில் உள்ள உதாரணத்தினால் தெளிவாகிறது.

 

தைத்யானாம் தத்ரனைவாஸ்தி புண்யகர்மவிபாகத: |

புண்யபகம் ஹரத்யேஷாம் ஸ்வயமேவ ஜனார்த்தன: ||48

 

விஷ்ணு ரஹஸ்யத்தில் கூறுவதைப்போல: தைத்யர்களுக்கு புண்ணியத்தில் பாகம் இல்லை. அவர்களின் புண்ணிய பாகங்களை பரமாத்மனே அவருக்குக் கிடைக்காதவாறு செய்கிறான் -- என்கிறார். இந்த அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார்.

 

ஏண லாஞ்சன நமலகிரண க்ர

மேண வ்ருத்தி3யனெய்தி3 லோகர

காணகொட3தி3ஹ கத்தலெய ப4ங்கி3ஸுவ தெரனந்தெ |

வைனதேயாம்2ன மூர்த்தி

த்3யான உள்ள மஹாத்மரிகெ3 ஸு

க்ஞான ப4க்த்யாதிக3ளு வர்த்தி4ஸி ஸு2வ கொடு3திஹவு ||7

 

ஏண லாஞ்சனன = சந்திரனின்

அமல கிரமேண = தூய்மையான கிரணங்கள்

க்ரமேண = சுக்ல பட்சத்தில் படிப்படியாக

வ்ருத்தியனெய்தி = வளர்ந்தவாறு

லோகர = உலகத்தில் இருக்கும் மக்களை

காணகொடதிஹ = கண்ணுக்குத் தெரியாமல் செய்யும்

கத்தலெய = இருட்டினை

பங்கிசுவ தெரனந்தெ = நாசப்படுத்துவதைப் போல

வைனதேயாம்ஸகன = கருடனின் மேல் அமர்ந்து பயணிக்கும் ஸ்ரீபரமத்மனின்

மூர்த்தி தியான உள்ள = மூர்த்தியை தியானிக்கும்

மஹாத்மரிகெ = மகாத்மருக்கு

சுக்ஞான பக்த்யாதிகளு = தெளிவான ஞானம், பக்தி ஆகியவற்றை

வர்த்திஸி = வளர்த்து

சுகவ கொடுதிஹவு = சுகங்களைக் கொடுக்கிறான்.

 

சுக்லபட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் படிப்படியாக வளர்ந்து வந்து, ஒளி அதிகமாகி, உலகத்தில் மக்கள் இருட்டில், பார்க்கமுடியாதிருந்த பதார்த்தங்களை தன் ஒளியினால், தெரியுமாறு செய்வான். அதைப்போலவே, பரமாத்மனின் பக்தர்கள் செய்யும் தியானாதிகள் வளர்ந்து கொண்டே வந்தால், பரமாத்மன், இதயாகாஷத்தில் அதிக ஒளியைக் கொடுக்கிறான். அதனால், இவர்களின் அஞ்ஞான இருட்டு பரிகாரம் ஆகி, ஞான பக்த்யாதிகள் வளர்கின்றன.

 

இந்த உவமையில், பரமாத்மனை சந்திரனைப்போல அறியவேண்டும். பக்தர்கள் செய்யும் தியானாதிகளே கிரணங்கள். இதனால், அவர்களின் இதயத்தில் பகவத்-களா-விசேஷம் வளர்கிறது ஆகையால் அஞ்ஞானம் என்னும் இருட்டு பரிகாரமாகி ஞானபக்தி வளர்கிறது என்பது கருத்து.

 

ஜனபனரிகெய சோர பொளலொளு

4னவ கத்தொயிதீ3யலவனவ

கு3ணக3ளெனிதெ3 பொரெவ கொட3தி3ரெ ஸிக்‌ஷிஸுவதெரதி3 |

அனுசிதோசித கர்ம க்ருஷ்ணா

ர்ப்பணவெனலு கைகொண்டு3 தன்னர

மனெயொளிட்டானந்த33டி3ஸுவ மாத4வானதர ||8

 

ஜனபன = மக்களைக் காக்கும் அரசனின்

அரிகெய = பார்வைக்கு வந்த

சோர = திருடன்

பொளலொளு = தன் பட்டணத்தில்

கத்தொய்து = திருடி வந்த

தனவ = செல்வத்தை

ஈயலு = ராஜனிடம் கொடுத்து தன்னை மன்னிக்க வேண்டினால்

அவன = அந்த திருடனின்

அவகுணகள = கெட்ட குணங்களை

எணிஸதெ = நினைக்காமல்

பொரெவ = அவனை காப்பாற்றுவான்

கொடதிரெ = பணத்தை அரசனிடம் கொடுக்காமல் இருந்தால்

சிக்‌ஷிசுவதெரதி = அவனுக்கு தண்டனை கொடுப்பான். இதைப்போல

அனுசித = செய்யத்தகாத (செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட) செயல்களை

உசிதகர்ம = செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்ட கர்மங்கள்; அதாவது, பாப புண்ணிய கர்மங்கள் அனைத்தும்

கிருஷ்ணார்ப்பண வெனலு = பக்தியுடனும், பச்சாதாபத்துடனும் புண்ணிய பாவங்களை பகவந்தனுக்கு அர்ப்பித்து மன்னிப்பு கேட்டால்,

கைகொண்டு = அதை ஏற்றுக்கொண்டு

மாதவ = லட்சுமிபதியான ஸ்ரீ நாராயணன்

ஆனதர = மிகவும் பக்தியுடன் தன்னை வேண்டுபவர்களை

தன்ன அரமனெயொளிட்டு = தன் வீட்டில் வைத்து

ஆனந்த படிசுவ = மகிழ்ச்சிப்படுத்துவான்.

 

ஊரில் கள்ளத்தனம் செய்யும் திருடன் இவனே என்று அரசனுக்கு தகவல் வந்தவுடனேயே, தான் இதுவரை திருடிய பொருட்கள் அனைத்தையும் ராஜனின் முன் வைத்து பிரபோ! நான் குடும்பி. தரித்திர நிலையால் இத்தகைய காரியத்தை செய்துவிட்டேன். என் தவறுகளை மன்னித்து, என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினால், ராஜன், கருணையுடன் அவனின் தவறுகளை மன்னித்து அவனை காப்பாற்றுகிறான். ஆனால், அதே திருடன் உண்மையை சொல்லாமல், தான் திருடிய பதார்த்தங்களை மறைத்து வைத்தால், அந்த அரசன் அவனை தண்டிப்பான்.

 

இதைப்போல, நாம் செய்யும் புண்ணிய பாவங்கள் பரமாத்மனின் பார்வைக்கு வராமல் இருக்குமா? நம் யோக்யதைக்கேற்ப, நம்முள் இருந்து அனைத்தையும் செய்விப்பவனே அவன். இத்தகைய கர்மங்களை தானே செய்ததாக அறிந்து பரமாத்மனுக்கு அவற்றை சமர்ப்பிக்காமல் இருந்தால், அவன் நம்மை தண்டிக்கிறான். அப்படியில்லாமல், பரம பக்தியுடன் அஸ்வதந்த்ரனான நாம் செய்தது, உன் ப்ரேரணையுடனே செய்தேன், நீ அருள்வதோ, தண்டிப்பதோ எதுவும் செய்யத்தக்க ஸ்வதந்த்ரன், என்று வேண்டி பக்தியுடன் நாம் செய்த புண்ணிய பாவங்களை பரமாத்மனுக்கு சமர்ப்பித்தால், கருணாமயியான ஹரி நம் பாவங்களை சுட்டுப் பொசுக்கி, புண்ணியங்களை இரு மடங்காக்கி அதற்கு பலன் ரூபமாக, நம்மை தன் அந்தப்புரத்தில் வைத்து, தன் ரூபத்தை தரிசனம் செய்விக்கிறான்.

 

அன்னத3ன்னாத3ன்ன நாமக

முன்னெ பேள்த3 ப்ரகார ஜீவரொ

ளன்னரூப ப்ரவேஷகை3தவரவர வ்யாபார |

3ன்னப333லெ மாடி3 மாடி3ஸி

3ன்யரிவரஹுதெ3ந்தெ3னிஸி த்ரை

கு3ண்யவர்ஜித தத்த3தா3ஹ்வயனாகி3 கரெஸுவனு ||9

 

அன்னத = அன்னத்தைக் கொடுப்பவன்

அன்னாத = அன்னத்தை உண்பவன்

அன்ன = ஸ்வயம் அன்ன ரூபன்

நாமக = இந்த காரணங்களால் அன்னத, அன்னாத, அன்ன என்னும் பெயர்களைப் பெற்று

முன்னெ பேள்த ப்ரகார = முன்னர் 14ம் சந்தியில் கூறிய விதமாக

ஜீவரொளு = ஜீவர்களில்

தன்ன ரூபப்ரவேஷகைது = தன் ரூபங்களால் நுழைந்து

அவரவர வியாபார = அந்தந்த ஜீவர்கள் செய்யும் கர்மங்களை

பன்ன படதலெ = கொஞ்சமும் சோர்வில்லாமல்

மாடி மாடிஸி = செய்து செய்வித்து

இவரு = இந்த ஜீவர்கள் தன்யர் என்று

எந்தெனிஸி = என்று சொல்லி

த்ரைகுண்யவர்ஜித = சத்வாதி ப்ராக்ருத குணங்கள் இல்லாதவனான பரமாத்மன்

தத்ததாஹ்வயனாகி = அந்தந்த பெயர்களில்

கரெசுவனு = அழைத்துக் கொள்கிறான்.

 

அன்னம்ததாதீதி அன்னத:’ - என்னும் இலக்கணத்தால் அன்னத்தைக் கொடுப்பவனாகையால் பரமாத்மனுக்கு அன்னத என்று பெயர். அன்னமதீதி அன்னாத:’ - அன்னத்தை உண்பதால் அவனுக்கு அன்னாத என்று பெயர். தைத்திரிய உப நிஷத்தில் ஆத்யதேத்திச பூதானி தஸ்மாதன்னம் ததுச்யதெ இதிஎன்று சொல்லியிருக்கின்றனர். அதன்படி அத்யத இத்யன்னம்; ஸர்வமத்தேத்யன்னம்’. உலகத்தில் தான் அன்ன ரூபத்தினால் சேதனர்களுக்கு, உபஜீவ்யனாக இருக்கும் காரணத்தாலும், பரமாத்மனுக்கு அன்ன என்று பெயர். ப்ரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் முழுங்குவதால் அன்ன என்று பெயர். ஆகையால், இப்படி, அன்னாத, அன்னத, அன்ன என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறான். முன்னர், பித்ருகண சந்தியில் சப்தான்ன பிரகரணத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியிருக்கிறோம். ஆகவே இங்கு சுருக்கமாகவே சொல்லியிருக்கிறோம்.

 

சப்தான்ன பிரகரணத்தில் சொல்லியிருப்பதைப்போல ஜீவர்களில் நுழைந்து, அவரவர்கள் செய்யவேண்டிய செயல்களை, கொஞ்சம்கூட சோர்வில்லாமல் தான் செய்து, அவர்களிடமிருந்து செய்விக்கிறான். பரமாத்மன் ராஜனிடம், சேவகனிடம், செல்வந்தரிடம், ஏழையிடம் இருந்து, தான் ப்ராக்ருத குணங்களைக் கொண்டிருக்காவிடிலும், ப்ராக்ருதத்தில் வசிப்பதால், ராஜன் என்றும், சேவகன் என்றும், செல்வந்தன் என்றும், ஏழை என்றும் அழைத்துக்கொண்டு அந்த பெயர்களை அவரவர்களுக்குக் கொடுக்கிறான்.

 

லிலபி3ந்து3 பயோப்3தி4யொளு பீ3

ளலு விகாரவனைத33ல்லுதெ3

ஜலவு தத்3ரூபவனெ ஐது3வுதெ3ல்ல காலத3லி |

கலிமலாபக3னர்ச்சிஸு

த்குலஜர குகர்மக3ளு தா நி

ஷ்கலுஷ கர்மக3ளாகி3 புருஷார்த்த23ள கொடு3திஹவு ||10

 

ஸலிலபிந்து = நீர்த்துளிகள்

பயோப்தியொளு = பாற்கடலில்

பீளலு = விழ

விகாரவனைத பல்லதெ = பாற்கடலில் இருக்கும் பால், தண்ணீராக மாறிவிடுமா?

ஜலவு = தண்ணீர் மட்டும்

தத்ரூபவனெ ஐதுவுது = பாலாக மாறிவிடுகிறது

எல்ல காலதலி = அனைத்து காலங்களிலும்

கலிமலாபஹன = கலியுக சம்பந்தமான பாவங்களை பரிகரிக்கும் ஸ்ரீஹரியை

அர்ச்சிஸுவ = பூஜிக்கும்

சத்குலஜர குகர்மகளு = சஜ்ஜனர்களின் பாவங்கள்

தா = தான்

நிஷ்கலுஷ கர்மகளாகி = சுத்தமான கர்மங்களாக மாறி

புருஷார்த்தகள = புருஷார்த்தங்களை

கொடுதிஹவு = கொடுக்கத்தக்கது.

 

பாலில் மோர் உரை ஊற்றினால், தயிர் ஆவதைப்போல, பாற்கடலில் நீர்த்துளிகள் விழுந்தால் அங்கு ஏதாவது மாற்றம் வருமோ? வராது. இந்த நீர்த்துளி மட்டும் பாலில் சேர்ந்து தானே பால் ஆகிவிடுகிறது. விஷ்ணு ரஹஸ்ய 21ம் அத்தியாயத்தில்:

 

க்‌ஷீராப்தௌபதிதம் தொயம்யதா க்‌ஷீரத்வமஷ்னுதே |

ஜீவகர்மசுகம் தத்வத்தராவானந்த தாம் பஜேத் ||

 

பாற்கடலில் விழுந்த நீர்த்துளியானது எப்படி பாலாகவே மாறிவிடுகிறதோ, அப்படி, பரமாத்மனிடம் சமர்ப்பித்த ஜீவனின் கர்மமானது, ஆனந்த ஸ்வரூபமே ஆகிறது என்று சொல்கிறார். அதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார். ஜீவன் செய்யும் கர்மங்களை பரமாத்மனுக்கு அர்ப்பித்து, எப்போதும் பரமாத்மனே கதியென்று நம்பி, அவனை ஆராதித்தால், இவன் சமர்ப்பித்த குகர்மங்களால், பாற்கடலில் விழுந்த நீர்த்துளிகளைப் போல, பரமானந்த ஸ்வரூபத்தை அடைகிறான். ஆகையால், ஸ்ரீஹரி மகிழ்ந்து, அந்த பக்தனுக்கு புருஷார்த்தங்களைக் கொடுத்து அருள்கிறான். 

No comments:

Post a Comment