ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, August 4, 2020

16-20 ஸ்வாச சந்தி

ஸ்ரீரமணனரமனெய பூர்வ

த்3வாரத3ல்லிஹ ங்க்ய ஸூர்யக3

பா4ரதிபதி ப்ராணனொளகி3ஹ லகுமி நரயணன

ஸேரி மனுஜோத்தமரு ர்வஷ

ரீரக3த நாராயணன அவ

தார கு3ணக3ள துதிஸுதலி மோதி3பரு முக்தியலி ||16

 

ஸ்ரீரமணன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்

அரமனெய = வைகுண்ட லோகத்தின்

பூர்வ த்வாரதல்லி = கிழக்கு வாசலில்

இஹ = இருக்கிறான்

சங்க்ய சூர்யக = சங்க்யா என்னும் மனைவியுடனான சூரியனின் உள் இருக்கும்

பாரதிபதி ப்ராணனொளகிஹ = பாரதிதேவியின் கணவனான வாயுதேவரில் இருக்கும்

லகுமி நரயணன = லட்சுமி நாராயணனை

மனுஜோத்தமரு = மனுஷ்யோத்தமர்கள்

ஸேரி = சேர்ந்து

சர்வஷரீரிகத = அனைத்து தேகங்களிலும் இருக்கும்

நாராயணன அவதார குணகள = நாராயணனின் அவதார குணங்களை

துதிஸுதலி = துதித்தவாறு

முக்தியலி = முக்தியில்

மோதிபரு = மகிழ்கின்றனர்.

 

ப்ராணிகளின் தேகங்களில் பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் 5 வாயுகள் வியாபித்திருக்கின்றன. இவற்றில் ப்ராணாபானாதி பெயர்களில் முக்யபிராணதேவரே, ஜடவாயுகளுக்கு ப்ரேரகராகி, அவற்றின் காரியங்களை செய்விக்கிறார். இது மட்டுமல்லாமல், ப்ராணாபானாதி ஜட வாயுகளுக்கு சூர்ய சந்திராதிகள், அபிமானிகளாக இருக்கின்றனர். அவர்களின் அந்தர்யாமியாக, ப்ராணாபானாதி பெயர்களால் வாயுதேவர் இருக்கிறார். எந்தெந்த வாயுகளுக்கு யார் அமுக்யாபிமானிகள் என்றால், பஞ்சராத்ராதிகளில்

 

ப்ராணாபிமானீ சக்‌ஷுஸ்ச சூர்ய ஏவ உதாஹ்ருத: |

தேஜோன்னாக்ய பிமானீச ப்ராக்த்வாராதிபதிர் ஹரே: ||

 

பிராணவாயுவிற்கும், கண்களுக்கும், தேஜஸ் தத்வத்திற்கும், அன்னாதிகளுக்கும், அபிமானி, சூரியன். இதே சூரியன், பரமாத்மனின் அரண்மனையின் கிழக்கு வாசலில், வாயிற்காப்பாளனாக இருக்கிறான் என்கிறார்.

 

சாந்தோக்ய பாஷ்யத்தில் ஸூர்யப்ரஸாதாத்துனரா: பூர்வத்வாரேண கேஷவம் ப்ராப்னுவந்தி’ - கிழக்கு வாசலின் அதிபதியான சூரியனின் பிரசாதத்தினால், மனுஷ்யோத்தமர்கள் கிழக்கு வாசலிலிருந்து பரமாத்மனை அடைகிறார்கள் என்கிறார்.

 

அதே அர்த்தத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். கிழக்கு வாசலில் சங்க்யா நாமகளான மனைவியுடன், பிராணாபிமானி சூரியன் இருக்கிறான். அவனுக்குள், ஸ்ரீபாரதிபதியான பிராணதேவர் ப்ராண நாமகனாக இருக்கிறார்.

மனுஷ்யோத்தமர்கள் முக்தியை அடையும்போது, சூரியன் மூலமாக பிராணதேவரை அடைந்து, அவரின் அருளால், அவரின் அந்தர்யாமியான ஸ்ரீலட்சுமி நாராயணனை அடைகிறார்கள். அப்போது அவர்கள் முக்தர்கள் ஆகின்றனர். பிறகு, விருப்பமான இடங்களுக்கு தம் விருப்பப்படி பயணம் செய்து, அனைத்து சரீரங்களில் இருக்கும் பகவத் ரூபங்களையும், அவதார ரூபங்களையும் கொண்டாடியவாறு, ஸ்வரூபானந்தத்தைப் பெற்று, சுகத்துடன் வசிக்கின்றனர்.

 

ப்ரணவ ப்ரதிபாத்3யன புரத33

க்‌ஷிண கவாடத3லிப்ப ஷஷிரோ

ஹிணிக3த வ்யானஸ்த க்ருதிப்ரத்3யும்ன ரூபவனு |

கு3ணக3ளனு ந்துதிஸுதலி பித்ரு

3ண க3தா34ரனதிவிமல ப

ட்டணதொ3ளகெ3 ஸ்வேச்சானுஸாரதி3 ஞ்சரிஸுதிஹரு ||17

 

ப்ரணவ ப்ரதிபாத்யன = ஓம்கார ப்ரதிபாத்யனான ஸ்ரீபரமாத்மனின்

புரத = வைகுண்டத்தின்

தக்‌ஷிண கவாடதலி = தெற்கு வாயிலில்

ஷஷிரோஹிணி = சந்திரன், அவர் மனைவியான ரோஹிணியுடன்

இப்ப = இருக்கிறான்

கத = இவர்கள் இருவரில்

வ்யானஸ்த = வ்யான நாமக ப்ராணதேவரின் அந்தர்யாமியான

க்ருதி = க்ருதி நாமக லட்சுமிதேவியருடன்

ப்ரத்யும்ன ரூபவனு = ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மனின்

குணகளனு = நற்குணங்களை

ஸந்துதிஸுதலி = நன்றாக துதித்து

பித்ருகண = பித்ருகணர்கள்

கதாதரன = கதையை தரித்த ஸ்ரீஹரியின்

அதிவிமல = மிகவும் தூய்மையான

பட்டணதொளகெ = வைகுண்டத்தில்

ஸ்வேச்சானுசாரதி = தன் இஷ்டத்திற்கேற்ப

சஞ்சரிசுதிஹரு = சஞ்சரிக்கின்றனர்.

 

தேகத்தில் இருக்கும் வியான நாமக ஜடவாயுவின் அதிபதி சந்திரன். காதுகளுக்கும் அவனே அதிபதியாக இருக்கிறான். அவனின் அந்தர்யாமியாக, வியான நாமகரான முக்யபிராணதேவர் இருக்கிறார். இவருடன் சேர்ந்து, பரமாத்மனின் வீட்டின் தெற்கு வாசலில் சந்திரன் அதிபதியாக இருக்கிறான்.

 

தக்‌ஷிணாதிபதி ஸ்ஸோம: வ்யான: ஸ்ரோத்ரா பிமானவான் || என்னும் பாஞ்சராத்ர ஆகமத்தின்படி இந்த அர்த்தம் வருகிறது. சாந்தோக்ய பாஷ்யத்திலும் ப்ராப்னு வந்த்யத ஸோமஸ்ய ப்ரஸாதாத் பதரஸ்ததாஎன்று சொல்லியிருக்கின்றனர்.

 

இந்த ஆதாரங்களின் அர்த்தத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார். ஓம்காரத்தின் அதிபதியான ஸ்ரீபரமாத்மனின் தெற்கு வாசலின் அதிபதி, ரோஹிணி சஹிதனான சந்திரன். இவனுக்குள் வியான நாமக வாயுதேவர். பித்ருகணர்கள் முக்தர்களாகி, பரமாத்மனின் அரண்மனையின் தெற்கு வாசலில் இருக்கும் சந்திரனின் பிரசாதத்தினால், அந்த வாயிலில் நுழைந்து, அங்கு சந்திராந்தர்கத வியான நாமக பிராணதேவரின் அந்தர்யாமியான ஸ்ரீக்ருதிதேவி சமேதனான ஸ்ரீ ப்ரத்யும்ன தேவரை உபாசனை செய்தவாறு அவனின் குணங்களை துதித்தவாறு, தம் விருப்பப்படி, செயல்களை செய்துகொண்டு ஸ்வரூப சுகங்களை அனுபவிக்கின்றனர்.

 

அமிதவிக்ரமனாலயத3

ஸ்சிம கவாடதி3 திஹித

ம்ப்4ரமதி34கவத்3கு3ண க3ளனெ பொக3ளுதலி மோதி3ஸு

ஸுமனஸாஸ்ய நொளிப்பபானக3

3மன ங்கருஷணன நிஜ ஹ்ரு

த்க1மலதொ3ளு தே4னிஸுவ ருஷிக3ணவைதி3 ஸுகி2ஸுவரு ||18

 

அமித விக்ரமன = அபரிமித பராக்ரமசாலியான ஸ்ரீபரமாத்மனின்

ஆலயத = வைகுண்டத்தின்

பஸ்சிம கவாடதி = மேற்கு வாயிலில்

ஸதிஸஹித = தன் மனைவியான ஸ்வாஹாதேவியுடன்

ஸம்ப்ரமதி = மகிழ்ச்சியுடன்

பகவத்குணகளனெ = பரமாத்மனின் குணங்களை

பொகளுதலி = புகழ்ந்தவாறு

மோதிஸுத = மகிழ்ச்சியுடன்

ஸுமனஸாஸ்யனொளு = தேவதைகளுக்கு முகம் போலிருக்கும்

அக்னியொளகெ = அக்னியில்

இப்ப = இருக்கிறான்

அபானக = அபான வாயுதேவரின் அந்தர்யாமியான

தமன = சம்ஹார ரூபகனான

சங்கர்ஷணன = சங்கர்ஷணரூபி பரமாத்மனை

நிஜஹ்ருத்கமலதொளு = தன் இதய கமலத்தில்

தேனிஸுத = தியானம் செய்தவாறு

ருஜுகண = ரிஷிகள்

யெய்தி = (அந்த மேற்கு வாசல் வழியாக முக்தர்களாக) வந்து

சுகிசுவரு = ஸ்வரூபானந்தத்தை அடிந்து, மகிழ்வர்.

 

அபான நாமக ஜடவாயுவிற்கு மற்றும் வாக்கிற்கு அபிமானியான அக்னி, தன் மனைவியான ஸ்வாஹா உடன், பரமாத்மனின் அரண்மனையின் மேற்கு வாயிலில், பரமாத்மனை துதித்தவாறு இருக்கிறார். அவரின் அந்தர்யாமி அபான நாமக வாயுதேவர். ரிஷிகணர்கள் முக்தர்களாகி, அக்னிதேவரின் பிரசாதத்தினால், மேற்கு வாயில் மூலமாக நுழைந்து, அக்னி அந்தர்கத அபானாந்தர்கத ஸங்கர்ஷணரூபியான ஸ்ரீபரமாத்மனை, தன் இதய கமலங்களில் தியானித்தவாறு, தன் இஷ்டத்திற்கேற்ப சஞ்சரித்து, ஸ்வரூபானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

 

ஸ்வரமணன கு3ண ரூப ப்த

ஸ்வரக3ளிந்த3லி பாடு3தி3ஹ து

ம்பு3ரனெ மொ3லாத3கி2ல க3ந்த4ர்வரு ரமாபதிய |

புரத3 உத்தர பா3கிலாதி4

ஸுரப ஷசிக மானவாயுக3

ஹரின்மணினிப4 ஷாந்திபதி அனிருத்த4 னைது3வரு ||19

 

ஸ்வரமணன = ஸ்ரீபரமாத்மனின்

குணரூப = குண ரூபங்களை

ஸப்த ஸ்வரகளிந்தலி = நிஷாத, ருஷப, காந்தார முதலான சப்த ஸ்வரங்களில்

பாடுதிஹ = பாடிக்கொண்டிருக்கும்

தும்பரனெ மொதலாதகில கந்தர்வரு = தும்புரு முதலான அனைத்து கந்தர்வர்களும்

ரமாபதிய புரத = லட்சுமிபதியான பரமாத்மனின் அரண்மனையின்

உத்தர பாகிலாதிப = வடக்கு வாசலில் அதிபதி

சுரப ஷசிக = ஷசிபதியான தேவேந்திரனின் அந்தர்கதனான

ஸமான வாயுக = சமான நாமக வாயுதேவரின் அந்தர்யாமியான

ஹரின்மணினிப = நீலமணியின் நீல நிறத்தில் உள்ள

ஷாந்திபதி அனிருத்தன = சாந்திபதியான அனிருத்தனை

ஐதுவரு = அடைவர்.

 

உத்தரத்வாரபஸ்த்விந்த்ர: ஸமானோ மன ஆத்மக: -- என்னும் பாஞ்சராத்ர ஆகமத்தின் ஆதாரத்தின்படி வடக்கு வாசலின் அதிபதி தேவேந்திரன். இவருக்குள், சமான நாமக வாயுதேவர், மனதில் அந்தர்யாமியாக இருக்கிறார். ஸ்ரீபரமாத்மனின் குணரூபங்களை, சப்த ஸ்வரங்களால் பாடியவாறு, தும்புரு முதலான கந்தர்வர்கள் இந்திரனின் பிரசாதத்தினால் முக்தர்களாகி, வடக்கு வாசலில் நுழைந்து, அங்கு சசி இந்திர அந்தர்யாமியான ஸமான வாயுதேவரின் அந்தர்யாமியான சாந்திதேவியின் பதியான அனிருத்த ரூபத்தை உபாசனை செய்தவாறு, தம் இஷ்டத்தின்படி அங்கு சஞ்சரித்தவாறு, ஸ்வரூபானந்தத்தை அடைந்து, மகிழ்ந்திருக்கிறார்கள்.

 

3ருட3 ஸே மரேந்த்3 முக2 பு

ஷ்கரனெ கடெ3யாகி3ப்பகி2ல நி

ர்ஜரரு ஊர்த்4வத்3வாரக3த பா4ரதி உதா3னனொளு

மெரெவ மாயாவாஸுதே3வன

பரம மங்க3லவயவக3ள ம

ந்தி3ரவனைதி3 தா3 முகுந்த3ன நோடி3 ஸுகி2ஸுவரு ||20

 

கருட சேஷ சுரேந்திரமுக = கருட, சேஷ, தேவேந்திரன் இவர்களில் துவங்கி

புஷ்கரனெ கடெயாகி = புஷ்கரன் வரைக்கும்

இப்ப = இருக்கும்

அகில நிர்ஜரரு = அனைத்து தேவதைகளும்

ஊர்த்வ த்வாரகத = மேல் வாயிலில் இருக்கும்

பாரதி உதானனொளு = பாரதி சமேதரான உதான நாமக வாயுதேவரில்

மெரெவ = ஒளிர்ந்து கொண்டிருக்கும்

மாயா வாசுதேவன = மாயாதேவியின் பதியான ஸ்ரீவாசுதேவன்

பரம மங்கல அவயவகள = மங்களங்களைக் கொண்ட அவயவங்களை

மந்திரவனு = வீட்டை

யெய்தி = அடைந்து

சதா = எப்போதும்

முகுந்தன நோடி = முகுந்தனைப் பார்த்தவாறு

சுகிசுவரு = மகிழ்ந்திருப்பர்.

 

மேல் வாயிலின் அதிபதி, பிரதான வாயுதேவர். இவர் உதான நாமகனாக, பத்னி சமேதமான இவரின் அந்தர்யாமி மாயாபதியான ஸ்ரீவாசுதேவன் இருக்கிறான். கிழக்கிலிருந்து துவங்கி அனைத்து திசைகளின் வாயிலில், ஜயவிஜயாதி திக்பாலகர்கள் இருக்கிறார்கள் என்று பாகவதாதி கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு சூரியன், சந்திரன், அக்னி முதலானவர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபாடு வருகிறதே என்றால்,

பாஞ்சராத்ர ஆகமத்தில் :

 

பரஸ்ய பிரம்மணஸ்தேதே புருஷா: பஞ்ச கீர்த்திதா:

த்வாபரா ஹ்ருதயெஞ்சைவ விஷ்ணுலோகே ச சர்வதா ||

அந்தஸ்ச த்வார பாஹ்யேதே ஜயாத்யா பாகத: ஸ்ம்ருதா: ||

 

பரபிரம்மனான ஸ்ரீமன் நாராயணனுக்கு முந்தைய பத்யங்களில் கூறியவாறு கிழக்கிலிருந்து இருக்கும் 4 திசைகளில், சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன் இவர்கள் நால்வரும், மேல் வாயிலில் உதான பிராணதேவர் என இந்த 5 தேவதைகளும் பரமாத்மனின் வீட்டிலும் மற்றும் இதயாகாஷத்திலும் வாயிற்காப்பாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் கோட்டையின் உள் வாயிலிலும், ஜயவிஜயாதிகள் கோட்டையின் வெளி வாயிலிலும் இருக்கின்றனர் என்று சொல்லியுள்ளனர். இதனால், இங்கு எவ்வித கருத்து வேறுபாடுகளும் வருவதில்லை என்பதை அறியலாம்.

 

கருட, சேஷ, இந்திரனில் துவங்கி, கர்மாபிமானியான புஷ்கரன் வரை உள்ள அனைத்து தேவதைகளும், முக்தர்களாக முக்தி ஸ்தானத்தை அடையவேண்டுமெனில், இத்தகைய மேலுள்ள வாயிலினால் உள்ளே நுழைந்து, அங்கிருக்கும் பிராண தேவரின் பிரசாதத்தினால், அவரில் அந்தர்யாமியாக இருக்கும் வாசுதேவ மூர்த்தியை எப்போதும் கண்ணால் பார்த்தவாறு, தம் ஸ்வரூபானந்தத்தை அனுபவித்தவாறு மகிழ்ச்சி அடைகிறார்கள். 

No comments:

Post a Comment