ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, August 13, 2020

31-37 தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி

யுக்திமாதுக3ளல்ல ஸ்ருதி ஸ்ம்ரு

த்யுக்த மாதுக3ளிவு விசாரிஸெ

முக்திகி3வு ஸோபானவெனிபவு ப்ரதி1பதீ1பத3வு |

4க்திபூர்வக1 படி2ஸுவவரிகெ3

வ்யக்திகொடு3வ ஸ்வரூபஸு2 ப்ரவி

விக்தரனு மாடு3வனு ப4வப4யதி3ந்த34ஹுரூப1 ||31

 

இவு = மேற்சொன்ன இந்த விஷயங்கள்

யுக்தி மாதுகளல்ல = தந்திர / சாமர்த்திய வார்த்தைகள் அல்ல

ஸ்ருதி ஸ்ம்ருத்யுக்த மாதுகளு = வேதங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்ட வார்த்தைகளே இவை

விசாரிஸெ = இவற்றை யோசித்துப் பார்த்தால்

ப்ரதிபதீ பதவு = இந்த கிரந்தத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும்

முக்திகெ சோபானவெனிபுவு = முக்திக்கு செல்லும் படிக்கட்டுகள்

பஹுரூப = பஹுரூபியான ஸ்ரீஹரி

பக்தி பூர்வக படிசுவவரிகெ = இந்த கிரந்தத்தை பக்தியுடன் படிப்பவர்களுக்கு

ஸ்வரூப சுக = முக்தியில் ஸ்வரூப சுகத்தை

வ்யக்தி கொடுவ = கொடுக்கிறான்

பவபயதிந்த = சம்சாரம் என்னும் பயத்தினால்

ப்ரவிவிக்தரனு மாடுவனு = அனைத்தும் பரமாத்மனுடையது. தன் தேகம், வீடு அனைத்தும் பரமாத்மனுடையது என்னும் ஞானத்தைக் கொடுக்கிறான்.

 

இந்த சந்தியில் சொல்லப்பட்டிருக்கும் தத்த ஸ்வாதந்த்ர்ய விஷயங்கள், விஷ்ணு தீக்‌ஷையை ஏற்றுக் கொள்ளும் விஷயங்கள், இவற்றிற்கு சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் என இவை அனைத்தும் நம் சிந்தனையால் / தந்திரங்களால் நினைத்து கூறிய விஷயங்கள் அல்ல. வேதங்களிலும், விஷ்ணு ரகஸ்ய முதலான ஸ்ம்ருதிகளிலும் இருப்பதையே எடுத்து சொல்லியிருக்கும் வாக்கியங்கள் இவை. இந்த கிரந்தத்தை முழுமையாக படித்துப் பார்த்தால், இதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும், முக்தி ஸ்தானம் என்னும் வைகுண்டத்திற்கு செல்வதற்கான படிக்கட்டுகளாக இருக்கின்றன. இந்த கிரந்தத்தை கேட்பவர்கள், படிப்பவர்கள் ஆகியோரை, தேஹேந்திரியாதிகளில் வியாப்தனாகி, பற்பல ரூபங்களால் வசித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஹரி, இஹத்தில் சம்சாரத்திலிருந்து வேறுபடுத்தி, முக்தியில் அவருக்கு ஸ்வரூப ஆனந்தத்தைக் கொடுக்கிறான்.

 

ஸ்ரீனிவாஸுகு3ணமணிக3

ப்ராணமத வயுனாக்2ஸூத்ரதி3

போணிஸி3 மாலிகெய வாங்மயனம்3ர்ப்பிஸிதெ3 |

ஞானிக3ள த்ருக்3விஷய பஹுத3

ஞானிக3ளிகெ3ஹ்ய தோர்ப்புது3

மாணிகவ மர்கடன கையொளு கொட்ட தெரனந்தெ ||32

 

வாங்மனயம்ஸ = வாக்கிற்கும், மனஸ்ஸிற்கும் அபிமானிகளான உமா ருத்ரதேவருக்கு தலைவனான ஸ்ரீபரமாத்மனுக்கு

அர்ப்பிஸித = சமர்ப்பித்த

ஸ்ரீனிவாசன = லட்சுமிதேவியை தன் வக்‌ஷதளத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபரமாத்மனின்

சுகுண = உத்தமமான குணங்கள் என்னும்

மணிகள = மாணிக்கங்களை

ப்ராணமத = வாயுதேவரின் மதம் (மத்வ மதம்)

மயுனாக்ய = ஞானம் என்னும்

ஸூத்ரதி = கயிற்றில் கட்டிய

மாலிகெயு = மாலைகளை

ஞானிகள = ஞானிகளின்

த்ருக்விஷய = கண்ணுக்குத் தெரிதல்

அஹுது = ஆகிறது (இது உத்தம கிரந்தம் என்று தெரிகிறது)

மாணிகவ மர்கடன கையொளு = குரங்கின் கையில் மாணிக்கத்தை

கொட்ட தெரனந்தெ = கடித்துப் பார்த்து, சுவையற்றது என்று சொல்லி எப்படி தூக்கிப் போடுகிறதோ, அப்படி

அஞ்ஞானிகளிகெ = அஞ்ஞானிகளுக்கு

அஸஹ்ய தோர்ப்புது = அருவருப்பாக தோன்றுகிறது.

 

ஸ்ரீமன் மத்வ மதத்தின் ஞானம் என்னும் சூத்திரத்தில், பரமாத்மனின் மிகச்சிறந்த குணங்கள் என்னும் மணிகளைக் கட்டி மாலையாகக் கோர்த்து, அந்த மாலையை, வாக்கிற்கும் மனதிற்கும் அபிமானியான உமா ருத்ரருக்கு தலைவனான ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பிக்கிறேன். அதாவது, ஸ்ருதி, ஸ்ம்ருதிகளில் இருக்கும் ரகசிய அர்த்தங்கள் மக்களுக்குத் தெரியாமல், கிரந்தங்களில் அங்கங்கு வேறுபட்ட கருத்துகள் இருப்பதால், சஜ்ஜனர்கள் பல சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றனர்.

 

பகவந்தனின் ஆணைக்கேற்ப, வாயுதேவர், ஸ்ரீமத்வராக அவதரித்து, உண்மையான ஞானத்தை பரப்பினார். ஆகையால், சாஸ்திரங்களில் சந்தேகமற்ற நிச்சய ஞானம் வரவேண்டுமெனில், அது மத்வமதத்தினாலேயே ஆகவேண்டும். அதனை மனதில் வைத்துக்கொண்டு, தாசராயர் இவ்வாறு இங்கு கூறுகிறார்.

 

பரமாத்மனின் குணங்கள் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் மணிகளைப் போல தனித்தனியாக இருக்கிறது. அவற்றை, மத்வமத சித்தாந்தம் என்னும் கயிற்றில் கோர்த்திருக்கிறேன். அதாவது, மத்வாசார்யரின் சாஸ்திரங்களை அனுசரித்து, பகவந்தனின் குணங்களை வர்ணித்திருக்கிறேன் என்கிறார். இத்தகைய மாலையின் மகிமைகளை அறியவேண்டுமெனில், அது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமே தவிர, அஞ்ஞானிகளுக்கு சாத்தியமில்லை.

 

ஏனெனில், குரங்கின் கையில் மாணிக்க மாலையைக் கொடுத்தாலும், அதை அக்குரங்கு கடித்துப் பார்த்து, சுவையாக இல்லை என்று சொல்லி, தூக்கிப் போட்டுவிடும். அதுபோலவே, அஞ்ஞானிகளுக்கு இதில் இருக்கும் பகவன் மகிமை எப்படி புரியும்? இதில் ஏதாவது பெண்ணை வர்ணித்திருக்கிறேனா? ஸ்ருங்கார ரசம் இருக்கிறதா? அல்லது இது காதுகளுக்கு இனிமையைத் தரும் புனைவுக் கதையா? அஞ்ஞானிகளுக்குத் தேவையான விஷயங்கள் இதில் இல்லை ஆகையால் அவர்கள் நிராகரித்து விடுவர் என்பது கருத்து.

 

ஸ்ரீ விதீ4ர விபாஹிபேஷ ஷ

சீவராத்ம ப4வார்க்க ஷஷி தி3

க்3தே3வ ருஷி க3ந்த4ர்வ கின்னர ஸித்த3 ஸாத்4யக3

ஸேவித பதா3ம்போ4ஜ தத்பா

தா3வலம்பி33ளாத34குதர

காவ கருணாஸாந்த்3ர லக்‌ஷ்மீஹ்ருத் குமுத3சந்த்3||33

 

ஸ்ரீ = லட்சுமிதேவி

விதி = பிரம்மதேவர்

ஈர = வாயுதேவர்

விப = பக்‌ஷிகளில் சிறந்தவனான கருடன்

அஹிப = சர்வஸ்ரேஷ்டனான சேஷதேவர்

ஈஷ = ருத்ரதேவர்

சசீவர = சசிபதியான இந்திரன்

ஆத்மபவ = பரமாத்மனின் மனதிலிருந்து பிறந்த மன்மதன்

அர்க்க = சூரியன்

சசி = சந்திரன்

திக்தேவ = திக் தேவதைகள்

ரிஷி = ரிஷிகள்

கந்தர்வ, கின்னர, ஸித்த, சாத்யகண ஆகியோரிடமிருந்து

ஸேவித பதாம்போஜ = வணங்கப்படும் பாதங்களைக் கொண்ட

கருணாசாந்திர = கருணாபூர்ணனான

லட்சுமி ஹ்ருத் குமுதசந்திர = லட்சுமிதேவியின் மனஸ் என்னும் குமுத மலருக்கு சந்திரனைப் போன்ற ஸ்ரீநாராயணன்

தத்பாதாவலம்பிகளாத = மேற்சொன்ன லட்சுமி, பிரம்ம, வாயு முதலான தேவதைகளின் பாதங்களை

பகுதர = தாரதம்யத்திற்கேற்ப வணங்கும் பக்தர் யாரோ அத்தகைய தன் பக்தர்களை

காவ = காக்கிறான்

 

லட்சுமி, பிரம்ம, வாயு, கருட, சேஷ, ருத்ர, இந்திர, காம, சூர்ய, சந்திர, திக்தேவதைகள், ரிஷிகள், கந்தர்வர், கின்னரர், சித்தர், சாத்யர், ஆகியோரால் வணங்கப்படும் பாதங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், தாரதம்யத்திற்கேற்ப மேலே கூறிய தேவதைகளை நினைத்து தன்னில் பக்தி செய்கிறவர் யாரோ, அவர்களை காப்பாற்றுகிறான். தேவதைகளை புறக்கணிப்பவர்களை பரமாத்மன், தன் பக்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. இந்த விஷயத்தில், பாகவத 11ம் ஸ்கந்தம் 2ம் அத்தியாயத்தில்:

 

அர்சாயாமேவ சம்ஸ்திதம் ||

விஷ்ணும்ஞாத்வா ததன்யத்ர நைவ ஜானாதி ய: புர்மா |

தாரதம்யஞ்ச தத்பக்தேர் ஜானாதி கதஞ்சன ||

அவஜானம்ஸ்ச தத்பக்தானாத்மனோ பக்திதர்ப்பித: |

உபேக்‌ஷ கோபிதா தேஷு நஸ்மிரேததவாபிதா ||

தேது பக்தாதயா: ப்ரோக்தா: ஸ்வர்க்காதிபல போகின:

தைர்விக்னதா அதோயாந்தி தத்பக்தானாமுபேக்‌ஷகா: ||

குர்யுர்விஷ்ணாவபி த்வேஷம் தேவ தேவாவமானி ந: |

பூஜிதா விஷ்ணு பக்திஞ்ச நாவஜ்யோயாஸ்தத: ஸுரா: |

உபேக்‌ஷகஸ்து தேவானாம் பக்தினாஷம் ஸ்வயம்ஹரி: |

கரோபி தேன விப்ரஷ்டா: ஸம்ஸரம்ஷி புன: புன: |

அதோவாயாந்தி வித்வேஷாத் பூஜ்யா தேவஸ்தத: ஸதா |

யஸ்தா த்வேஷ்டிஸதம் த்வேஷ்டி யஸ்தா நனு ஸஜானுதம் ||

ஐகாத்ம்யாகதம் வித்தி தேவைஸ்தத்பக்தி பூரிதை: |

உபேக்‌ஷகஸ்து தேவானாம் யதைவ நிரயோபக: |

ததாது கிமு வக்தவ்ய முபேக்‌ஷாயம் ஜனார்த்தனே |

விஷ்ணோருபேக்‌ஷகம் ஸர்வேவித்விஷந்த்யதிகம் ஸுரா: ||

பதத்யவஷ்யம் தமபி ஹரிணா தைஸ்ச பாதித: || இத்யாதி..

 

அதம பக்தர்களின் லட்சணங்களை இங்கு சொல்கிறார்.

பரமாத்மன் அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருப்பதை அறியாமல், யாரொருவன் பிரதிமைகளில் மட்டுமே அவன் இருக்கிறான் என்று நினைத்து அதை பூஜித்திருக்கிறானோ; மற்றும் பக்தரான தேவதைகளில் தாரதம்யத்தை யார் அறிவதில்லையோ, தான் பக்தன் என்னும் கர்வத்தால் உத்தமரான தேவதைகளை யார் அவமானம் செய்கிறானோ, அல்லது அவர்களை நினைக்காமல் யார் புறக்கணிக்கிறார்களோ - இத்தவையவர்கள் அதம பக்தர்கள் ஆவர். இத்தகைய பக்தர்களுக்கு ஸ்வர்க்காதிகள் மட்டும் கிடைக்கின்றன.

 

தேவதைகளை புறக்கணிப்பவர்கள், சத்காரியங்களை செய்யும்போது தேவதைகளால் விக்னங்களை சந்தித்து, நரகாதிகளை அடைகிறார்கள். தேவதைகளை அவமானம் செய்பவர்கள், ஒரு சமயத்தில் பரமாத்மனையும் த்வேஷிப்பார்கள். தேவதைகளை பூஜித்தால் அவர்கள் விஷ்ணு பக்தியைக் கொடுக்கிறார்கள். ஆகையால், தேவதைகளை என்றும் அவமானம் செய்யக்கூடாது. தேவதைகளை யார் புறக்கணிக்கிறார்களோ, அவர் பகவத் பக்தரே ஆனாலும், அவரின் பக்தியை பரமாத்மனே நாசம் செய்கிறான். இதனால் அவர் திரும்பத்திரும்ப சம்சாரத்திற்கே வந்துவிடுவர்.

 

அல்லது, அதைவிட கீழான அதோகதியை அடைகிறார்கள். ஆகையால், எப்போதும் தேவதைகளை பூஜிக்க வேண்டும். யார் தேவதைகளை பூஜிக்கின்றனரோ, அவர் பரமாத்மனையும் பூஜிக்கிறார். யார் தேவதைகளில் பக்தி செய்கிறாரோ, அவர் பரமாத்மனிடமும் பக்தி செய்கிறார்.

 

பக்தியோ, த்வேஷமோ அதை செய்யும் விதத்தில் பக்தர்களையும், பரமாத்மனையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும். தேவதைகளை புறக்கணித்தாலே நரக ப்ராப்தி என்று சொன்னபிறகு, பரமாத்மனையே புறக்கணித்தால், அதோகதிதான் என்று சொல்கிறார். தேவதா அவமானத்தால், தேவர்கள், அவர்கள் அந்தர்யாமி பரமாத்மனும், இவரை தமஸ்ஸிற்கு அனுப்புவர். ஆகிய விஷயங்களை இங்கு சொல்கிறார்.

 

ஆகையால், தாசராயர், பிரம்மாதி தேவதைகளால் பூஜிக்கப்படும் பாத கமலங்களைக் கொண்ட ஸ்ரீஹரி தத்பாதாவலம்பிகளாத பக்தர’, அந்த தேவதைகளின் பாதசேவையில் நிரந்தரமான பக்தர்களை காக்கிறான் என்று சொல்கிறார். தாரதம்யத்தின்படி தேவதைகளை தினந்தோறும் நினைத்தவாறு அவர் அந்தர்யாமி பரமாத்மனை பூஜித்தால், அத்தகைய பக்தரை பரமாத்மன் காப்பாற்றுகிறான் என்பது கருத்து.

 

ஆத3ருஷவ க3தாக்‌ஷ பா4ஷா

பே43தி3ந்த3லி கரெயலத3னு நி

ஷேத3கை33வலோகிதெ3 பி3டு3வரெ விவேகிக3ளு |

மாத4வன கு3ணபேள்வ ப்ராக்ருத

வாத3ரெயு ரி கே1ளி பரமா

ஹ்லாத333தி3ப்பரெ நிரந்தர ப3ல்ல கோவித3ரு ||34

 

ஆதர்ஷவ = கண்ணாடியை

கதாக்‌ஷ = கத=போன அக்‌ஷ=சம்ஸ்கிருத திருஷ்டியுள்ள, என்றால், சம்ஸ்கிருத ஞானம் இல்லாத புருஷர்

பாஷாபேததிந்தலி = சம்ஸ்கிருதம் இல்லாத வேறு மொழிகளால்

அவனு = அந்த கண்ணாடியை அழைக்க

நிஷேதகைது = சரியல்ல என்று சொல்லி

அவலோகிஸிதெ = பார்க்காமல்

விவேகிகளு = ஞானிகள்

பிடுவரெ = விடுவார்களா?; அல்லது,

 

கதாக்‌ஷ = சம்ஸ்கிருதம் அறிந்து அதன் மேல் அபிமானம் வைத்த ஒரு குருடன்

பாஷா பேததிந்த = கன்னட மொழியால்

நிஷேதகெய்து கரெயலு = சரியல்ல என்று சொல்லி,

கண்ணாடி என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லாமல், இந்த புருஷர் பேசுமொழியில் (கண்ணாடியில்) சொல்லிவிட்டான். ஆகையால், கண்ணாடி அசுத்தமாகிவிட்டது திட்ட,

அவனு = அந்த கண்ணாடி

அவலோகிஸதெ = பார்க்காமல்

பிடுவரெ = விட்டுவிடுவார்களா?

 

அதரந்தெ = அதுபோலவே

மாதவன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனின்

குண = குணங்களை

பேள்வ = வர்ணிக்கும் கிரந்தம்

ப்ராக்ருதவாதரெயு சரி = பேசுமொழியில் இருந்தாலும் சரி

பல்ல கவி ஜனரு = இந்த கிரந்தத்தின் யோக்யதையை அறிந்த ஞானிகள்

நிரந்தர = எப்போதும்

கேளி = இதனைக் கேட்டு

ஆஹ்லாதபடதிப்பரெ = மகிழாமல் இருப்பாரோ?

 

கண்ணாடியை சம்ஸ்கிருதத்தில் ஆதர்ஷ என்பர். சம்ஸ்கிருதத்தை அறிந்த, அதன் மேல் அபிமானம் வைத்துள்ள ஒரு குருடன், தனக்கு கண்ணாடி பயன்படாது என்பதால், இந்த கண்ணாடியை இன்னொருவன் பேசுமொழியில் கண்ணாடி என்று அழைத்து விட்டான். இது அசுத்தமாகிவிட்டது. இதில் முகம் பார்க்கக்கூடாது என்று கூறினால், அறிஞர்கள், இந்த குருடன் கண்ணாடியை ஒதுக்கிவிட்டான், ஆகையால், நாமும் இதை பார்க்கக்கூடாது என்று கண்ணாடியை பார்க்காமல் இருப்பார்களோ? அப்படி இல்லை.

 

இதைப்போலவே, இந்த ப்ராக்ருத கிரந்தத்தின் யோக்யதை அறியாத யாரோ ஒரு சம்ஸ்கிருத பண்டிதர், இது பேசுமொழியில் இயற்றப்பட்டது என்றுவிட்டால், இதன் யோக்யதையை அறிந்த ஞானிகள், இதில் இருக்கும் பகவன் மகிமைகளைக் கேட்டு, மகிழாமல் இருப்பார்களோ? பேசுமொழியே ஒதுக்கத்தக்கது என்று எந்த ஞானிகளும் இதுவரை சொன்னதில்லை.

 

பாகவத 11ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயத்தில் ஸ்தவைருஜ்ஜாவஜை: ஸ்ரோதை: ப்ராக்ருதைரபிஉத்தமமான ஸ்ருதிகள், புராணங்கள் இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் புருஷ சூக்தம் முதலானவற்றால், அல்லது ஜிதந்தே ஸ்தோத்திரம் முதலான புராண வாக்கியங்களால், அல்லது பேசுமொழியில் இயற்றப்பட்ட ஸ்தோத்திரங்களால், அல்லது பேசுமொழியால், அல்லது தன் விருப்பப்படி பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். ஆகையால், பகவத் குணங்களையே பேசும் கிரந்தம் பேசுமொழியில் இருந்தாலும் அதனை ஒதுக்கக்கூடாது. பகவன் மகிமையை சொல்லாத எந்த கிரந்தமும், அது சமஸ்கிருதமே ஆனாலும், போற்றத்தக்கதல்ல என்பது கருத்து.

 

பா4ஸ்கரன மண்ட3லவ கண்டு3

மஸ்கரிஸி மோதி3தெ3 த்3வேஷதி3

தஸ்கரனு நிந்தி3லு குந்த3ஹுதெ3 தி3வாகரகெ3 |

ம்ஸ்க்ருத வித3ல்லெந்து3 குஹக தி

ரஸ்கரிலேனஹுது ப4க்திபு

ரஸ்கரதி3 கேள்வரிகெ3 ஒலிவனு புஷ்கராக்‌ஷஸதா3 ||35

 

பாஸ்கரன = சூரியனின்

மண்டலவ கண்டு = மண்டலத்தைக் கண்டு

நமஸ்கரிஸி = வணங்கி

மோதிஸதெ = மகிழாமல்

த்வேஷதி தஸ்கரனு = திருடன், தான் திருடுவதற்கு அது தடையாக இருக்கிறதே என்னும் த்வேஷத்தினால் திட்டினால்

திவாகரகெ = சூரியனுக்கு

குந்தஹுதெ = தோஷம் வருமோ?

குஹக = தந்திர புத்தி கொண்டவன்

இது = இந்த கிரந்தம்

சம்ஸ்கிருததல்லெந்து = சம்ஸ்கிருதத்தில் இல்லை என்று

திரஸ்கரிஸலு = ஒதுக்க

ஏனஹுது = இந்த கிரந்தத்திற்கு தோஷம் வருமோ?

பக்திபுரஸ்கரதி = பக்தி & மரியாதையுடன்

கேள்வரிகெ = இதைக் கேட்பவர்களுக்கு

புஷ்கராக்‌ஷ = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி

ஸதா = எப்போதும்

ஒலிவனு = மகிழ்ந்து தரிசனம் அளிக்கிறான்.

 

தம் திருட்டுத் தொழிலுக்கு சூரியன் தடையாக இருக்கிறான் என்று நினைத்து, சூரியனுக்கு நமஸ்காரங்களை பூஜைகளை செய்யாமல் இருந்தால், அதனால் சூரியனுக்கு ஏதேனும் தோஷங்கள் வருகிறதா? இதைப்போல, தந்திரசாலிகளான சிலர், பொறாமையால் இந்த கிரந்தம், சம்ஸ்கிருதத்தில் இல்லை என்று தூஷித்தால், அதனால் இந்த கிரந்தத்திற்கு ஏதேனும் தோஷம் வருமோ? இந்த கிரந்தத்தை பக்தியுடன் படித்து, கேட்பவர்களுக்கு ஸ்ரீபரமாத்மன் மகிழ்ந்து, தரிசனம் அளித்து, அவர்களை அருள்கிறான்.

 

பதிதன கபாலதொ3ளு பா4கீ3

ரதி2ய ஜலவிரெ பேயவெனிபுதெ3

இதர கவினிர்மித குகாவ்யாஸ்ராவ்ய பு34ரிந்த3 |

க்ருதிபதி கதா2ன்விதவெனிப ப்ரா

க்ருதவெ தா ம்ஸ்க்ருதவெனிஸி

த்கதியனீவுது ப4க்திபூர்வக கே1ளி பேள்வரிகெ3 ||36

 

பதிதன = தவறுகள் செய்த பாவியின்

கபாலதொள் = தலையில்

பாகீரதியு = கங்கை

ஜலவிரெ = நீர் இருந்தால்

பேயவெனிபுதெ = குடிப்பதற்கு தகுதியாகிறதா? இல்லை. அதைப்போல,

இதர கவினிர்மித = பகவத் த்வேஷிகள் அல்லது பகவத் பக்தரின் த்வேஷிகளான கவிகள் இயற்றிய

குகாவ்ய = புனைவு நாவல்கள்

சம்ஸ்க்ருதவாதரூ = அது சம்ஸ்கிருத மொழியாகவே இருந்தாலும்

புதரிந்த = ஞானிகளால்

அஸ்ராவ்ய = கேட்பதற்கு யோக்யமல்ல.

க்ருதிபதி = க்ருதி நாமகரான ஸ்ரீலட்சுமிதேவியின் பதியான ப்ரத்யும்ன நாமக பரமாத்மன்

கதான்விதவெனிப = சரித்திரங்களைக் கொண்ட கிரந்தம் எனப்படும்

ப்ராக்ருதவெ = பேசுமொழி எனப்படும்

தா = தான் சம்ஸ்க்ருதம் என்று

பக்தியூர்வக = பக்தியுடன்

கேளி பேள்வரிகெ = கேட்டு, சொல்பவர்களுக்கு

சத்கதியனீவுது = உத்தமமான கதியை கொடுக்கிறார்.

 

கங்கை நீர் ஸ்னான, பானாதிகளுக்கு தகுதியானதாகவே இருந்தாலும், அது ஒரு பதிதனின் (தவறுகளை செய்த ஒரு பாவியின்) தலையில் இருந்தால், அது குடிப்பதற்கு தகுதியானதா?. இங்கு தாசராயர் தலையில் என்று மட்டும் சொல்லாமல், பதிதனின் தலையில் என்று ஏன் கூறினார்? அஸ்திகளில் (எலும்புகளில்) பதிதனின் அஸ்தி, பிராமணரின் அஸ்தி என்று வேறுபாடு உண்டா என்று கேட்கலாம். அவற்றிலும் பேதங்கள் இருக்கின்றன. பாகவத 6ம் ஸ்கந்த, நாராயண வர்ம ப்ரகரணத்தில் :

 

இமாம் வித்யாம் புரா கஸ்சித் கௌஷிகோதாரய த்விஜ: |

யோகதாரணயா ஸ்வாங்கம் ஜஹௌஸ மருதன்வனி ||

தஸ்யோபரி விமானேன கந்தர்வ பதிரேகதா ||

யயௌ சித்ரரத: ஸ்த்ரீபிர்வ்ருதோயத்ர த்விஜக்‌ஷய: |

ஸாங்கனோ ந்யபதத்ஸத்ய: ஸவிமானோஹ்யவாக்மிரா: |

வித்யாமிமாம் தாரயதோ ம்ருதஸ்யாஸ்தி விலங்கனாத் |

ஸவாலகில்ய வசனாதஸ்தீன்யாதாய விஸ்மித: |

ப்ராஸ்ய ப்ராசீ சரஸ்வத்யாம் ஸ்னாத்வா தாமஸ்வமன்வகாத் ||

 

முன்னர் கௌஷிக என்னும் ஒரு பிராமணன், நாராயண வர்மத்தை ஜெபித்துக் கொண்டிருந்து, தன் யோகாப்பியாசத்தால், நீர் இல்லாத ஒரு இடத்தில் தன் உயிரை விட்டான். அதன்பிறகு ஒரு நாள், சித்ரரத என்னும் ஒரு கந்தர்வ ராஜன், விமானத்தில் பல பெண்களுடன், இந்த பிராமணன் இறந்து கிடந்த இடத்தை தாண்டிக் கொண்டு போனான். நாராயணவர்ம ஜெபித்துக் கொண்டிருந்த இறந்திருந்த பிராமணனின் அஸ்தியை (எலும்புகளை) உதாசீனப்படுத்திப் போன தோஷத்தினால், அந்த விமானம், மற்றும் பெண்களுடன் அப்படியே மேலிருந்து தலைகீழாக விழுந்துவிட்டான்.

 

பிறகு, அந்த இடத்தில் வசித்துவந்த வாலகில்ய ரிஷிகளிடமிருந்து இந்த விஷயங்களை அறிந்து வியப்படைந்து, அவரின் அனுமதியைப் பெற்று, அந்த பிராமணனின் அஸ்தியை சரஸ்வதி நதியில் சேர்த்து, ஸ்னானம் செய்து வந்தபிறகு, தன் பயணத்தை தொடங்கினான். விமானத்தில் தன் வீட்டிற்கு சென்று சேர்ந்தான் என்று கூறியுள்ளார். இப்படி அஸ்திகளுக்கும்கூட மகிமை இருப்பதால், பதிதனின் அஸ்தி என்று தாசராயர் கூறியுள்ளார்.

 

இப்படியாக, பாகிரதி உத்தமமானாலும், தவறுகள் செய்த ஒரு பாவியின் தலையில் அது இருந்தால், அதுவும் ஒதுக்கத்தக்கதே. அதுபோலவே, சம்ஸ்கிருதமானாலும், ஸ்த்ரீகளை வர்ணிப்பது ஆகியவற்றால் கூடிய புனைவுகள், நாடகங்கள் ஆகியவை ஞானிகளால் ஒதுக்கத்தகுந்தவை. கங்காஸங்கேன நைர்மல்யம் ரத்யாத்பிர்லப்யதே யதா - என்னும் தத்வபிரகாசிகையின் வாக்கியத்தைப் போல தெருவில் ஓடும் சாக்கடையின் நீர் கங்கையில் சேர்ந்ததும் எப்படி சுத்தமாகிறதோ அது போலவே, இந்த கிரந்தம் பேசுமொழியில் இருந்தாலும், பகவத் குணங்களை கொண்டிருந்தால் அது படிக்கத்தக்கது ஆகும்.

 

ஆகையால், இந்த கிரந்தத்தை படிப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு உத்தம கதி கிடைக்கிறது என்பது கருத்து.

 

வேத3சாஸ்திர யுக்தி க்3ரந்த23

ளோதி3 கேள்த3வனல்ல ந்தத

ஸாது43ஹவாஸ ல்லாபக3ளு மொத3லில்ல |

மோத3 தீர்த்தா2ர்யர மதா1னுக3

ராத3வர கருணத3லி பேள்தெ3

மாத4வ ஜகன்னாத2விட்டல திளிஸிது33ரொளகெ3 ||37

 

வேதசாஸ்திர சயுக்தி கிரந்தகள = வேத புராணங்கள், தர்க்க கிரந்தங்கள் ஆகிய கிரந்தங்களை

ஓதி கேள்தவனல்ல = ஸ்வதந்த்ரத்தினால் நானே படித்து, கேட்டவன் அல்ல. எனக்குள் பரமாத்மன் இருந்து படித்து, கேட்கிறான் ஆகையால், அந்தர்யாமியான பரமாத்மனே வித்வாம்ஸன் என்பது கருத்து.

ஸந்தத = அனைத்து காலங்களிலும்

சாதுகள சஹவாஸ சல்லாபகளு = கற்று அறிந்தவர்களின் நட்பு, பழக்கம் எனக்கு இருந்திருக்கவில்லை.

மோததீர்த்தார்யர மதானுகராதவர = ஸ்ரீமன் மத்வாசார்யரின் மதத்தைப் பின்பற்றுபவர்களின்

கருணதலி = கருணையில்

ரமாதவ = ரமாபதியான

ஜகன்னாதவிட்டல = பிம்பரூபியான ஜகன்னாதவிட்டல என்னும் ஸ்ரீஹரி

திளிஸிதுதரொளகெ = எனக்குள் இருந்து தெரிவித்ததை

பேள்தெ = நான் கூறினேன்.

 

வேதம் முதலான சாஸ்திர கிரந்தங்கள் ஆகட்டும், தந்த்ர கிரந்தங்கள் ஆகட்டும், நான் படித்தவனோ, கேட்டவனோ அல்ல. அல்லது அத்தகைய கற்றறிந்த ஞானிகளின் பழக்கத்தில் இருந்து இத்தகைய சத்விஷயங்களை கேட்டவனும் அல்ல. அப்படியெனில், இத்தகைய கவித்துவம் வந்தது எப்படி என்றால், ஸ்ரீமத்வமதத்தை பின்பற்றுபவர்களின் கருணா பலத்தினால், ஸ்ரீஜகன்னாதவிட்டலன் எனக்குள் இருந்து சொன்னதையே சொல்லியிருக்கிறேன்.

 

இப்படி சொன்னதால், தாசராயர் ஞானிகள் அல்ல என்று அர்த்தமல்ல. அவரது வாழ்க்கைச் சரிதத்திலிருந்தும், அவர் இயற்றிய கிரந்தங்களிலிருந்தும் அவரது பாண்டித்யம் நமக்குத் தெரியவருகிறது. ஆனால், இந்த பாண்டித்யம், தன் அந்தர்யாமியான பரமாத்மன் என்னும் சிந்தனையுடன், ஸ்வ அஹங்காரத்தை விரட்டுவதற்காக இப்படி சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.

 

தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி என்னும் 16ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***

 


No comments:

Post a Comment