அம்ஷி அம்ஷந்தர்க3த த்ரய
ஹம்ஸவாஹன முக்2ய தி3விஜர
ஸம்ஷரெந்திளி த3ந்தராத்மக ஸ்ரீஜனார்த்த3னன |
ஸம்ஸ்மரணெ பூர்வகதி3 ஷடதி3க
த்ரிம்ஷதி3த்ரய ரூபவரிது வி
பம்ஸகன பூஜிஸுவரவரெ க்ருதார்த்தரெனிஸுவரு ||6
அம்ஷி = அம்சம் உள்ளவர்கள் என்றால் பித்ரு பிதாமஹ
ப்ரபிதாமஹர்களில் நிலைத்திருக்கும் வசுகண, ருத்ரகண, ஆதித்யகண என்று அர்த்தம்
அம்ஷ = அம்ச ருபம் என்றால் பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ ரூபங்கள்
அந்தர்கதத்ரய = இவற்றில் அந்தர்கதமாக இருக்கும்
ரூபங்கள் 3, இவ்வளவு ரூபங்களைக் கொண்ட ஜனார்த்தனன்
ஹம்ஸவாஹன முக்ய திவிஜர = பிரம்மதேவரே முதலான தேவதைகள்
அஸம்ஷயதி = சந்தேகமில்லாமல் அறிந்து
அந்தராத்மக = அந்தர்யாமியாகி வசிக்கும்
ஸ்ரீஜனார்த்தனன = ஸ்ரீஜனார்த்தனனை
திளிது = அறிந்து
சம்ஸ்மரணெ பூர்வகதி = நன்றாக நினைத்து
ஷடதிக த்ரிம்ஷதித்ரய = 63
ரூபவரிது = ரூபங்களை அறிந்து
விபாம்ஸகன = பக்ஷிராஜனான கருடனின்
அம்ஸகன = முதுகின் மேல் இருக்கும் பரமாத்மன்
பூஜிஸுவரு = பித்ரு காரியங்களால் பூஜை செய்பவர்கள்
க்ருதார்த்தரெனிஸுவரு = அவரே தன்யர்கள் ஆவார்கள்
அம்ஷிக என்றால் சாம்ஷர் என்று அர்த்தம். அதாவது, ஒரு ரூபத்தினால் ஒரு இடத்திலும், வேறொரு ரூபத்தினால் வேறொரு
இடத்திலும் இருக்கும் தகுதி கொண்ட தத்வாபிமானி தேவதைகள். மனிதர்கள் நிரக்ஷர்கள்.
சூரியன் ஆகாயத்தில் ஒளிர்பவன். அதே சமயம், கர்ணனாகவும், சுக்ரீவனாகவும் பிறந்தவன். மற்றும், அனைவரின் கண்களிலும் அம்சத்தினால்
இருக்கிறான். ஆனாலும், மேலேயும் இருக்கிறான். அம்சத்தினால் இப்படி பல இடங்களில் இருக்கிறான். இந்த
சக்தி,
அனைத்து தேவதை, தைத்யர்களிலும் உண்டு. இது மனிதர்களுக்கு இல்லை ஆகையால் இவர்கள் நிரம்ஷர்கள்.
சிரார்த்தத்தில், நிரம்ஷரான பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களில் நிலைத்திருக்கும் 8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள் அம்ஷிகள். முன்பு பார்த்ததைப் போல, ஒவ்வொருவரிலும், பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் மூன்று ரூபங்கள் இருக்கின்றன. இவை அம்ச ரூபங்கள்.
அந்தர்யாமி ரூபங்கள் 3. பித்ரு அந்தர்யாமி, பிதாமஹ அந்தர்யாமி, ப்ரபிதாமஹ அந்தர்யாமி என்று இந்த மூவரிலும் ஜனார்த்தனன் அந்தர்யாமியாக
இருக்கிறான். பித்ருகளை ஆவாஹனம் செய்திருக்கும் பிராமணரின் தேகத்தில் இருக்கும்
தத்வாபிமானிகளான பிரம்மாதிகளின் அந்தர்யாமியாக இருந்து, ஸ்ரீஜனார்த்தனன் சிரார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறான் என்று அறிந்து, சிந்தித்து, மேற்சொன்ன விதத்தில் பித்ரு அந்தர்கத வசு கணர்களில் 24 ரூபங்கள், பிதாமஹ அந்தர்கத ருத்ர கணர்களில் 33 ரூபங்கள், ப்ரபிதாமஹ அந்தர்கத ஆதித்ய கணர்களில் 36 ரூபங்கள், பித்ராதி மூவரிலும் ஜனார்த்தனரூபி 3. என மொத்தம் 96 ரூபங்களை, பிராமணர்களில் சிந்திக்க வேண்டும். மேலும், பித்ருகளின் அந்தர்யாமியான கருட வாகனனான ஸ்ரீபரமாத்மனை சிந்தித்து பூஜிப்பவரே
தன்யர் என்று அறியவேண்டும்.
இந்த பத்யத்தில் ‘ஹம்ஸவாஹன முக்யதிவிஜர சம்ஷயதி’ என்னும் இடத்தில் ‘அஸம்ஷயதி’ என்று போட்டாலும் அது சரியே. அசம்ஷயதி என்றால், பிரம்ம முதலான தேவதைகளின் அந்தராத்மகன் என்று சந்தேகமில்லாமல் அறிந்து - என்று
பொருள். சம்ஷயதி என்றால், ‘சம்யக் ஷேதே அஸ்மின்னிதி சம்ஷய:’ பிரம்மாதி தேவதைகளின், சம்ஷயதி = நல்ல படுக்கையில், அதாவது, வசிக்கத் தகுந்த அவரின் இதயாகாஷத்தில் அந்தராத்மகன் என்று அறிந்து -- என்று
அர்த்தம் வருகிறது.
மூருவரெ ஸாவிரத3 மேலரெ
நூரைது3 ரூபதி3 ஜனார்த்த4ன
ஸூரிக3ளு மாடு3வ ஸமாராத3னெகெ3 விக்4னக3ளு |
பா3ரத3ந்தெ பஹுப்ரகார க2
ராரி காபாடு3வனு ஸர்வஷ
ரீரக3ளொளித்த3வரவர பெஸரிந்த3 கரெஸுதலி ||7
மூருவரெ ஸாவிரத மேலெ அரெனூரைது ரூபதி = 3500 + (100/2) + 5
= 3555 ரூபங்களால்
ஜனார்த்தன = ஜனார்த்தனரூபி
சூரிகளு மாடுவ = ஞானிகள் செய்யும்
ஸமாராதனெகெ = பித்ரு அந்தர்கத ஜனார்த்தனனின் பூஜைக்கு
விக்னகளு பாரதந்தெ = எவ்வித தடைகளும் வராமல்
கராரி = கர ராட்சசனைக் கொன்ற ஸ்ரீஹரி
சர்வஷரீரகளொளித்து = அனைவரின் சரீரங்களில் இருந்து
அவரவர பெசரிந்த = அவரவரின் பெயர்களால்
கரெசுதலி = அழைக்கப்பட்டு
பஹுப்ரகார = பல்வேறு விதங்களில்
காபாடுவனு = காப்பாற்றுவான்.
ஜனார்த்தன என்னும் சொல்லை, எண்ணிக்கையின்படி பார்த்தால், ஜ=3 நா=5 ர்த்த=5 ன=5 என 3555 ஆகிறது. இந்த இடத்தில் எண்ணிக்கையை வலமிருந்து படிக்காமல் அப்படியே சொல்ல
வேண்டும். இவ்வளவு ரூபங்களால் ஸ்ரீஜனார்த்தனன், ஞானிகள்** செய்யும் சமாராதனைகளுக்கு*** எந்தவிதமான விக்னங்களும் வராமல், கர்த்ரு, போக்த்ரு ஆகியோரில் அந்தந்த பெயர்களில் இருந்து, அவர்களை அனைத்து விதங்களிலும் அருள்வான் என்பது கருத்து.
**ஞானிகள் = மேற்சொன்ன விதத்தில்
அனுசந்தானத்துடன் பரமாத்மனை அனைத்து இடங்களிலும் நினைத்து சிரார்த்தத்தை செய்பவர்
என்று பொருள்
***சமாராதனை = (அதாவது, பிராமண பாதபிரட்சாலனத்தில் துவங்கி, கந்த அக்ஷதை போஜனம் தாம்பூலம்
கொடுப்பது வரை அனைத்தும். சிரார்த்தங்களில் கலச பூஜைகள் ஆனபிறகு, ‘பித்ரந்தர்யாமி ஜனார்த்தன வாசுதேவஸ்ய சமாராதனம் கரிஷ்யே’ என்று சங்கல்பம் செய்வதால், சமாராதனை என்பதற்கு, சம்யுக் ஆராதனெ = நன்றாக பூஜிப்பது என்று அர்த்தம் வருகிறது.
ஜயஜய ஜயாகாந்த த3த்தா
த்ரேய கபில மஹிதாஸ ப4க்த
ப்ரிய புராதனபுருஷ பூர்ணானந்த3 ஞானக4ன |
ஹயவத3ன ஹரி ஹம்ஸ லோக
த்ரய விலக்ஷண நிகி2ல ஜக3தா3
ஸ்ரய நிராமய த3யதி3 ஸந்தெயிஸெந்து3 ப்ரார்த்திபுது3 ||8
ஜயஜய = உன் ரூபத்தின் தரிசனத்தைக் கொடுத்து
ஜயாகாந்த = ஜயா நாமகளான லட்சுமிதேவியின் அரசன்
சங்கர்ஷணன்
தத்தாத்ரேய, கபில, மஹிதாஸ
பக்தப்ரிய = பக்தர்களுக்கு ப்ரியமானவன்
புராதனபுருஷ = அனைத்து காலங்களிலும் அனைவரிலும்
வசிப்பவன்
பூர்ணானந்த = பூர்ணமான ஆனந்தஸ்வரூபனே
ஞானகன = வெறும் ஞானாத்மக ஸ்வரூபனே
ஹயவதன, ஹரி,
ஹம்ஸ = துக்கங்களைப் போக்கும் ஹம்ஸரூபியே
லோகத்ரய விலக்ஷண = மூன்று உலகங்களில் இருக்கும்
பிராணகளைவிட வேறுபட்டவனே
நிகில ஜகதாஸ்ரய = அனைத்து உலகத்திற்கும் ஆதரவு
அளிப்பவனே
நிராமய = எவ்வித தோஷங்களும் இல்லாதவனே
தயதி = தயவு செய்து
சந்தெயிஸெந்து பிரார்த்திபுது = என்னை காப்பாற்று
என்று பிரார்த்திக்க வேண்டும். (பிரார்த்தனை செய்தவாறு, கர்மங்களை செய்யவேண்டும் என்பது கருத்து).
பரமாத்மன் சங்கர்ஷண ரூபத்தை ஸ்வீகரித்தபோது, லட்சுமிதேவி ஜயா என்னும் பெயரில் ரூபத்தை எடுத்து, சங்கர்ஷணனின் மனைவி ஆனாள். ஆகையால், ஜயாகாந்த என்றால், சங்கர்ஷணன் என்று பொருள்.
அத்ரி ரிஷிகளின் தவத்திற்கு மெச்சி தன் தேகத்தை ‘புத்ரத்வேன தத்த:’ புத்ர வாத்ஸல்யத்தால் தூங்க வைப்பதற்காக கொடுத்தாள். இப்படியாக அத்ரியிடம்
அவதாரம் செய்ததால், தத்தாத்ரேயன் என்று பெயர் வந்தது. புத்ரனாக கொடுத்ததால், தத்த என்றும், ‘அத்ரீரபத்யம் புமானாத்ரேய:’ அத்ரி ரிஷிகளின் மகனாக ஆனதாலும் ; அல்லது, ‘ததாதி அபீஷ்டமிதிதத்த:’ அபீஷ்டங்களை பக்தர்களுக்கு
கொடுப்பதால் தத்த என்று பெயர் வந்தது.
கம் ஸுகம்பிபதீதி கபி:லாதி கபி:லாதி =
பக்தா:ஸ்வீகரோதீதி ல: = கபிஷ்சாஸௌ லஷ்சேதி கபில: ||
கம் என்றால் சுகம். பி என்றால் பானம் செய்வது. ஆக, கபி என்றால் சுக ஸ்வரூபம் என்று பெயர். லாதி என்றால் ஏற்றுக்கொள்பவன்.
பக்தர்களை ஏற்றுக்கொள்பவன் என்று பொருள். இப்படி சுகஸ்வரூபன், பக்தர்களை காப்பாற்றுபவன் ஆகையால், கபில என்று பெயர்.
மஹிதாஸ என்பது தேவரிஷி அவதாரம். மஹி என்றால் பூஜ்யர்.
உலகங்களே பூஜிக்கும் பிரம்மாதிகள் அனைவரும் பரமாத்மனுக்கு தாசராக இருப்பதால், மஹிதாசர் என்று பெயர்.
ஹரி = கஷ்டங்களை போக்குபவன்.
ஹம்ஸ = துக்கங்களை போக்குபவன்
மற்ற அனைத்தும் மேலே விளக்கியதைப் போலவே ஆகும்.
ஷண்ணவதி எம்பக்ஷரேட்3யனு
ஷண்ணவதி நாமத3லி கரெஸுத
தன்னவரு சத்ப4க்தி பூர்வகதி3ந்த3 மாடு3திஹ |
புண்யகர்மவ ஸ்வீகரிஸி கா
ருண்யசாக3ர ஸலஹுவனு பிர
ஹ்மண்யதே3வ ப4வாப்திபோத பஹுப்ரகாரத3லி ||9
ஷண்ணவதி எம்ப = 96 என்னும்
அக்ஷர = லட்சுமிதேவியரிடமிருந்து
ஈட்யனு = வணங்கப்படுபவனான
காருண்யசாகர = கருணைக் கடலான
பிரம்மண்யதேவ = பிராமணர்களுக்கு அருளும் ஸ்வாமி
பவாப்திபோத = சம்சாரம் என்னும் சாகரத்தைக் கடக்க படகு
போல இருக்கும், ஸ்ரீஹரி,
ஷண்ணவதி நாமதலி கரெசுத = ஷண்ணவதி என்னும் பெயரால் அழைக்கப்பட்டு
தன்னவரு = தன் பக்தர்கள்
ஸத்பக்தி பூர்வகதிந்த மாடுதிஹ = சிறந்த பக்தியால்
செய்யும்
புண்யகர்மவ = சிரார்த்தாதி புண்ய கர்மங்களை
ஸ்வீகரிஸி = ஏற்றுக்கொண்டு
பஹு ப்ரகாரதலி = பல விதங்களில்
ஸலஹுவனு = காப்பாற்றுகிறான்.
மேலே 1,2,3,6ம் பத்யங்களில் பார்த்தவாறு, பரமாத்மன் 96ரூபங்களால் பித்ருகளில் இருப்பதால், ஷண்ணவதி (96) என்று அழைக்கப்படுகிறான். இவ்வாறு அழைத்துக்கொண்டு, கருணைக்கடலான, பிராமணர்களில் மிகவும் அன்பு வைத்திருப்பவனுமான, சம்சார சாகரத்தைக் கடக்க உதவுபவனான, லட்சுமியால் வணங்கப்படுபவனான
ஸ்ரீஹரி,
தன் பக்தர்கள் செய்யும் ஸ்ரார்த்தாதி செயல்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு இஹ பரங்களில் சுகங்களைக் கொடுத்து அருள்கிறான்.
‘க்ஷர:ஸர்வாணி பூதானி கூடஸ்தோக்ஷர
உச்யதெ’
என்னும் கீதை வாக்கியத்திற்கேற்ப, க்ஷர என்றால், அனைத்து பிராணிகள். அக்ஷர என்றால், லட்சுமிதேவி. ஆகையால், அக்ஷரேட்யனு என்றால், லட்சுமிதேவியால் வணங்கப்படுபவன்
என்று பொருள்.
தே3ஹக3ள கொடு3வவனு அவரவர
அஹரவனு கொட3தி3ஹனெ ஸுமனஸ
மஹித மங்களசரித ஸத்கு3ணப4ரித அனவரத |
அஹிக பாரத்ரிக ஸுக2ப்ரத3
வஹிஸி பெ3ன்னலி பெ3ட்டவம்ருதவ
த்3ருஹிண மொத3லாத3வரி கு3ணிஸித3 முரித3னஹிதரனு ||10
தேஹகள கொடுவவ = ஜீவர்களுக்கு தேகத்தைக் கொடுத்து
ஸ்ருஷ்டி செய்யும் ஸ்வாமி
அவரவர = அந்தந்த பிராணிகளின்
அஹரவனு = யோக்யத்திற்கேற்ப ஆகாரங்களை
கொடதிஹனெ = கொடுக்காமல் இருப்பானோ?
சுமனஸமஹித = தேவதைகளால் வணங்கப்படுபவன்
மங்கலசரித = மங்களகரமான சரித்திரத்தைக் கொண்டவன்
சத்குணபரித = உத்தம குணங்களைக் கொண்டவன்
அனவரத = அனைத்து காலங்களிலும் இருப்பவன்
அஹிக = இந்த உலகத்திலும்
பாரத்ரிக = பர லோகத்திலும்கூட
சுகப்ரத = சுகங்களைக் கொடுப்பவன்
பென்னலி = தன் முதுகில்
பெட்டவ = மலையை
வஹிஸி = தாங்கி
அம்ருதவ = அமிர்தத்தை
த்ருஹிண மொதலாதவரிகெ = இந்திராதி தேவதைகளுக்கு
அஹிதரன = (இந்திராதி தேவதைகளுக்கு எதிரான கால நேமி
முதலான) தைத்யர்களை
முரிதனு = சம்ஹரித்தான்.
அனைத்து பிராணிகளுக்கும் சரீரத்தைக் கொடுத்து
ஸ்ருஷ்டித்த ஸ்ரீஹரி, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப ஆகாரத்தைக் கொடுக்காமல் இருப்பானோ? பாகவத 1ம் ஸ்கந்தத்தில்:
அஹஸ்வானி ஸஹஸ்தானாமபதோத் விசதுஷ்டதாம் |
அணூனிதூத மஹதாம் ஜீவோஜீவஸ்ய ஜீவனம் ||
* கை உள்ள மனுஷ்யாதிகளுக்கு, விதைகளிலிருந்து தோன்றிய தானியங்களும்,
* கை இல்லாத பிராணிகளான, பசு,
குதிரை, யானை,
ஆகியவற்றிற்கு கிருமிகள், புற்கள் ஆகியவற்றைக்
கொடுத்திருக்கிறான்.
* புலி முதலானவற்றிற்கு ஆடு, போன்றவற்றையும்,
* நாய் முதலானவற்றிற்கு அவற்றை விட
சிறியதான பூனை ஆகியவற்றையும்,
* பூனை முதலானவற்றிற்கு எலி
போன்றவற்றையும்,
* கோழி, காக்கை, குருவி ஆகியவற்றிற்கு அவற்றைவிட சிறியதான கிருமி, பூச்சிகளையும்,
* நீரில் வசிக்கும் மீன்
முதலானவற்றிற்கு அங்கேயே இருக்கும் மற்ற பிராணிகளை ஆகாரமாகக் கொடுத்திருக்கிறான்.
நம் மனைவி மக்களை நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று
மயக்கத்தில் சொல்கிறோமே தவிர, அப்படி செய்ய நாம்
ஸ்வதந்த்ரமானவர்கள் அல்ல. ஏனெனில்:
காலகர்ம குணாதீனோ தேஹோயம் பாஞ்சபௌதிக: |
கதமன்யாம்ஸ்து கோபாயேத் ஸர்ப்பக்ரஸ்தோ யதாபரம் ||
காலம், வினைப்பயன், கர்ம,
ப்ரக்ருதி குணங்கள், இவற்றிற்கு அதீனமான பஞ்சபூத சரீரம்
இது. அதாவது, நம் சரீரமே நமக்கு நிரந்தரமல்ல. பால்யத்தில் அனைத்திற்கும் பிறரை
எதிர்ப்பார்ப்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதுமை வந்தபிறகு, அது போலதான். நடு வயதில், நான் ஸ்வதந்திரமாக சம்பாதிக்கிறேன்
என்று அறிந்திருக்கிறான். அது மயக்கமே. அப்போதும், இவனின் வினைப்பயன்களுக்கேற்ப செயல்கள் நடக்கிறதே தவிர, நாம் என்ன முயற்சி செய்தாலும், எதுவும் நம் இஷ்டத்திற்கேற்ப
நடப்பதில்லை.
இவ்வளவு ஏன்? நம் தேகம், நம் கட்டுப்பாட்டில் இருந்தால், நாம் முதுமை அடைந்தபிறகு, பல் விழுந்துவிட்டது; காது கேட்கவில்லை; கண் தெரியவில்லை என்று புலம்புவது ஏன்? முகம் விகாரம் அடைவது ஏன்? நம் ஸ்வதந்த்ரத்துடன், நம் இஷ்டத்திற்கேற்ப, இளமையில் எப்படியோ அப்படியே நம்
சரீரத்தை வைத்துக்கொண்டிருக்கலாம். ஏன் அப்படி முடியவில்லை? இதைப் புரிந்தாவது நம் தேகம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று அறியலாம்தானே? இப்படி இருக்கையில், நாம் மற்றவரை காப்பாற்றுவது எப்படி? நாம் மற்றவரை காப்பாற்றுகிறோம் என்று சொல்வது எப்படி இருக்கிறதென்றால் - ‘ஸர்ப்பக்ரஸ்தோ யதாபரம்’ - ஒரு பாம்பின் வாயில் சிக்கி, உயிர் விடத் தயாராக இருக்கும் தவளை ஒன்று, மற்றொரு பாம்பின் வாயில் சிக்கித் தவிக்கும் தவளையைப் பார்த்து - கவலைப்படாதே, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்வது போல இருக்கிறது.
ஆகையால், தேவதைகளால் வணங்கப்படுபவனும், மங்கள சரித்ரனும், சத்குணபூர்ணனுமான ஸ்ரீஹரியை, நீயே கதி என்று நம்பினால், அவன் நம்மை காப்பாற்றாமல் விடுவானோ? இஹ பரங்களில் நமக்கு சுகத்தைக்
கொடுத்து,
நம் துக்கங்களை பரிகரித்து, அனைத்து காலங்களிலும் நம்மை
காப்பாற்றியே தீர்வான்.
இந்திராதி தேவதைகள், தங்கள் ராஜ்யத்தை இழந்து, பரமாத்மனை வேண்டியபோது, அமிர்தம் கடையும் காலத்தில், மந்தர மலையை மத்தாக மாற்றி, பாற்கடலைக் கடையும்போது, பரமாத்மன் கூர்மாவதாரத்தை எடுத்து, அந்த மலையைத் தாங்கி, தேவதைகளுக்காக தானே அக்கடலைக்
கடைந்து,
இந்திராதி தேவதைகளுக்கு அமிர்தத்தைக் கொடுத்து, அவர்களின் எதிரிகளை சம்ஹரிக்கவில்லையா? அவர்கள் நம்பியதைப் போல, நாமும் நம்பினால், நம்மை ஏன் காப்பாற்றமாட்டான்? கண்டிப்பாக காப்பாற்றுவான்.
த்ருஹிண முதலாதவரிகெ -- த்ருஹிண என்றால், பிரம்ம முதலானவர்களுக்கு என்று அர்த்தம் வந்தாலும், அமிர்தத்தைக் குடித்தே பிரம்மதேவர் அமரர் ஆகவேண்டியிருக்கவில்லை. அவருக்கு
பிரம்மகல்ப 1 கல்ப ஆயுள் முதலிலேயே கிடைத்திருக்கிறது. ருத்ர கருட சேஷர்களுக்கும் இல்லை.
இந்திராதிகளுக்கு, போர்களில் மரணம் இல்லாதிருக்கட்டும் என்று அமிர்தத்தைக் கொடுத்து அவர்களை
அமரர் ஆக்கவேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் ஆகியிருந்தது. ஆகையால், பிரம்ம முதலாதவரிகெ என்றால், பிரம்மதேவர் யாருக்கு முதலாதவதாக
இருக்கிறாரோ, அவர்களுக்கு அதாவது இந்திராதி தேவதைகளுக்கு என்று அர்த்தமாகிறது.
பாகவத 4ம் ஸ்கந்தத்தில், ஒரு இடத்தில், பிரம்மன் ருத்ரரை வணங்குவதைப் போல ‘ப்ரம்மதயஸ்தமவகீர் யஜடா:ஸ்மஷானே’ தோன்றுகிறது. அங்கு பிரம்மாதய: என்னும் பதத்திற்கு, ’பிரம்மா: ஆதி பிதா யோஷாந்தே பிரம்மாதய: ஸனகாதய:’ என்று வியாக்யானம் செய்திருப்பார்கள். அதாவது, பிரம்மதேவர் யாருக்கு ஆதியோ, (தந்தையோ) அவர்கள் பிரம்மாதிகள்
என்று பொருள். ஆகையால், பிரம்மதேவரின் மக்களான
சனகாதிகளுக்கு பிரம்மாதிகள் என்று பெயர்.
No comments:
Post a Comment