ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
முன்னுரை:
10 சந்திகளை இயற்றி, இறுதியில் ‘புத்தி வித்யாபலதி’ என்னும் 18ம் பத்யத்திலிருந்து ‘லோகவார்த்தெ இதல்ல’ என்னும் 22ம் பத்யம் வரைக்கும் ஸ்வ-அஹங்கார கண்டன செய்தவாறு, இந்த கிரந்தத்தின் பலன், இதைக் கேட்பதால் ஆகும் பலன்
ஆகியவற்றைச் சொல்லி, இறுதியான மூன்று பத்யங்களால் மங்கள ரூபமாக பரமாத்மனை வணங்கி, அந்த சந்தியை முடித்திருக்கிறார். பொதுவாக, கிரந்தம் இயற்றுபவர், இவற்றை கிரந்தம் துவக்கும்போதோ
அல்லது அதை முடிக்கும்போதோ சொல்வார்கள். பல ஸ்ருதி சொல்லவேண்டுமெனில், ஒவ்வொரு நிலை முடியும்போதும், சொல்வார்கள். காவியங்களின் நடுவில்
ஸ்வ-அஹங்கார கண்டனைகளோ, கிரந்தத்தின் பலன்களோ சொல்லும்
சம்பிரதாயம் இல்லை. இப்படியிருக்கையில், 9 சந்திகள் வரை ஒன்றும் சொல்லாமல், தாசராயர், 10ம் சந்தியில் இப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமல் போகாது என்று தோன்றுகிறது.
பகவத்கீதையில் முதல் 6 அத்தியாயங்களில் ஞானோபாயனத்தையும், இரண்டாம் 6 அத்தியாயங்களில் சாதனங்களையும், மூன்றாம் 6 அத்தியாயங்களில் இவற்றின் விளக்கங்களையும் சொல்லியிருக்கிறான் ஸ்ரீகிருஷ்ணன்.
கர்மயோக,
பக்தியோக, ஞானயோக என்னும் மூன்றில் கர்மயோகிகள் மனிதர்கள் என்றும், பக்தியோகிகள் தேவதைகள் என்றும், ஸனகாதி ரிஷி ஆகியோர் ஞானயோகிகள் என்றும், பாகவத தாத்பர்யத்தில் விளக்கியிருக்கிறார். ஆனாலும், பக்திக்கு முக்கிய அதிகாரிகள், அவர்கள் தேவாதிகளாக இருக்கட்டும்
அல்லது மனுஷ்யோத்தமர்களாக இருக்கட்டும், அவர்களுக்கு பொதுவாக பக்தி ஞான
சாதனைகள் இருந்தே இருக்கிறது. அவர்களின் கர்ம லட்சணம் என்ன? பக்தி எப்படி பிறக்கிறது? ஞானம் எப்படி கிடைக்கிறது என்னும்
விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளாமல், உபவாசங்களை செய்து சரீர தண்டனையே
கர்மம் என்றும், மூச்சை அடக்குவதே தியானம் என்றும் நினைத்து புரிந்து கொண்டு, சாதனை மார்க்கம் என்றால் என்னவென்றே அறியாமல் கஷ்டப்படும் மக்களின்
மேம்பாட்டிற்காக (அவர்களுக்கு உதவுவதற்காக) தாசராயர், முதலாம் 10 சந்திகளில், கீதையில் சொல்லியிருப்பதைப் போல ஞானோபாயங்களையும், 11 முதல் 17ம் சந்தி வரை சாதனோபாயங்களையும், அதற்குப் பிறகு இவற்றையே விளக்கமாக
சொல்லியிருக்கிறார் என்று சொல்ல வேண்டியதாகிறது.
* முதலாம் மங்களாசரண சந்தி
முடிந்தபிறகு
* 2ம் கருணா சந்தியில், பரமாத்மன் பரம கருணாமயி ஆனதால், பக்தனானவன் என்ன தவறு செய்தாலும்
அதை மன்னிக்கிறான். ஆகையால், செய்ததை பரமாத்மனே செய்வித்தான்
என்று நினைத்து பலன்களை விரும்பாமல் செயல்களை புரிந்து, அவற்றை பரமாத்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
* வியாப்தி சந்தியில் கர்மங்களை தானே
செய்கிறேன் என்று நினைத்து செய்தால் பலன்கள் கிடைக்காது; நம் தேகங்களிலும், இந்திரியங்களிலும் பரமாத்மனே வியாப்தனாக இருந்து அனைத்தையும் செய்விக்கிறான்
என்று நினைத்து, கர்மங்களை செய்தாலேயே கர்மங்களின் பலன் கிடைக்கும் என்று பகவந்தனின்
வியாப்தியை விளக்கினார்.
* போஜனரஸவிபாக சந்தியில்
ஸ்ரீபரமாத்மன் போஜ்ய பதார்த்தங்களில் அனேக ரூபங்களில் இருந்து அந்த சுவையை
ஏற்றுக்கொள்கிறான் என்பதை தெரிவித்து, போஜனங்களை செய்வதும்கூட ஒரு
சத்கர்மமே என்று நினைக்க வேண்டும்.
* விபூதி சந்தியில் நதி ஆகியவற்றில்
ஸ்னானம் செய்வதாகட்டும், அங்கங்கு பகவத் ரூபங்களை
சிந்தித்து, பூஜித்தாலேயே கர்மங்களின் பலன் கிடைக்கிறது என்றார்.
* இதைப்போல, பஞ்சமஹாயக்ஞம் என்றால், அக்னியில் ஆஹுதி கொடுத்து ஹோமம்
செய்வது மட்டுமல்ல என்றும், தந்தை, தாய்,
பூமி,
மேக,
ஆகாய என்னும் பஞ்சாக்னியில், தக்க அனுசந்தானத்துடன் தியானம்
செய்வதே யாகம் என்று யக்ஞகர்ம லட்சணங்களை விளக்கினார்.
* பஞ்சதன்மாத்ரா சந்தியில் ஷப்த, ஸ்பர்ஷாதி வியாபாரங்கள் அனைத்தும் பரமாத்மனே தன் அனந்தானந்த ரூபங்களால்
ப்ருதிவ்யாதிகளில் இருந்துகொண்டு செய்விக்கிறான் என்று அறிந்து செய்யும் செயல்களே
கர்மங்கள் என்று கூறியிருந்தார்.
* மாத்ருகா சந்தியில்
அ-காரத்திலிருந்து துவங்கும் எழுத்துக்களின் தலைவன் பரமாத்மனே ஆகையால், நாம் பேசும் பேச்சுக்களில் கூட பகவத்வாசக என்று அறிந்து, என்ன பேசினாலும் அனைத்தும் பூஜையைப் போன்றே ஆகிறது என்று குறிப்பிடுகிறார்.
* ஜீவப்ரக்ரிய சந்தியில், ஜீவரின் யோக்யதையை அறிந்து தன்னைவிட உத்தம அதிஷ்டானத்தில் பூஜிப்பதே பூஜா
ப்ரக்ரியா என்று கூறினார்.
* சர்வப்ரதீக சந்தியில் ஏரி, குளம் ஆகிய அனைத்து நீர் நிலைகளிலும், எல்லா பூமிகளிலும், எல்லா பொருட்களிலும் ஸ்ரீஹரி
இருக்கிறான் என்று அறிந்து, ஸ்னானாதிகளை செய்தால், தீர்த்தங்களில் ஸ்னானம் செய்த பலனும், யாத்ரா பலனும் கிடைக்கிறது என்று கூறினார்.
இப்படியாக 10 சந்திகளில் பகவத்கீதையில் கூறியதைப்போலவே:
புத்திர்யோகேத் விமாம்ஸ்ருணு | யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கந்த்யக்த்வா தனஞ்சய |
ஸித்யஸித்யோ: ஸமோபூத்வா ஸமத்வம் யோக உச்யதி ||
என்னும் வாக்கியங்களால் யோக என்றால் உபாயம் என்றும்; கர்ம-பலன்களை-விரும்பாததே சன்யாஸம் என்றும் சொல்லி, இவற்றை ஞானோபாயம் என்று விளக்கியிருக்கிறார். அந்த சந்தியின் இறுதியில்
ஸ்ஹ-அஹங்கார கண்டனத்துடன், பலஸ்ருதி மங்களாசரணங்களை சொல்லி
முடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த சந்தியிலிருந்து 17ம் சந்தி வரை, முக்திக்கு சாதனமான தியான ப்ரக்ரிய, நாடி ப்ரக்ரிய, நாமஸ்மரணை முதலான சந்திகளை கூறுகிறார். அவற்றில், தனக்கிருக்கும் அல்ப பக்தியினால் பகவத்ப்ரீதிக்காக, கர்மங்களை செய்து, திடமான பக்தி வந்தபிறகு செய்யவேண்டிய பகவத் தியான, நாமஸ்மரணை, தியானம் ஆகியவற்றை செய்ய வேண்டுமானால், தியானத்திற்கு தரிசனம் தரக்கூடிய பதார்த்தங்களின் ஸ்வரூப ஞானம் மிகவும்
அவசியம். அதற்காக, தியான சாதனை ஆகுமாறு, தியானப்ரக்ரியை என்னும் சந்தியை
இங்கு துவக்குகிறார்.
பாது3கெய கண்டக ஸிகதமொத3
லாது3வனுதி3ன பா3தி4ஸவு ஏ
காத3ஷேந்த்ரியக3ளலி பி3ட3தெ3 ஹ்ருஷீகபன மூர்த்தி |
ஸாத3ரதி3 நெனெவவரு ஏனப
ராத4க3ள மாடித3ரு சரியே நி
ரோதகை3ஸவு மோக்ஷமார்க3கெ து3ரிதராஷிக3ளு ||1
பாதுகெய = பாதுகைகளை அணிந்த புருஷனை
கண்டக = முட்கள்
ஷிகத = மண், கற்கள்
மொதலாதுவு = ஆகியவை
அனுதின = தினந்தோறும்
பாதிஸுவு = பாதிக்குமா?
ஏகாதஷேந்திரியகளலி = 5 கர்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்கள் மற்றும் மனதில்
பிடதெ = இடைவிடாமல்
ஹ்ருஷீகபன = இந்திரியாபிமானியான ஹ்ருஷிகேஷ ரூபி
பரமாத்மனை
மூர்த்தி = ஸ்வரூபத்தை
ஸாதரதி = பக்தி மரியாதையுடன்
நெனெவவனு = நினைப்பவன்
ஏனபராதகள = என்ன தவறுகளை
மாடிதரு சரியே = செய்தாலும்
துரிதராஷிகளு = அந்த பாப ராசிகள்
மோக்ஷ மார்ககெ = மோட்ச மார்க்கத்திற்கு
நிரோதகைஸவு = தடையாக இருக்காது
காலில் பாதுகையை அணிந்துகொண்டு, கல்,
மண் ஆகியவற்றின் மேல் நடந்தாலும், அவை அந்த மனிதனுக்கு எப்படி
பிரச்னைகளைக் கொடுக்காதோ, அதுபோலவே 11 இந்திரியங்களில் இந்திரியாதிபதியான ஹ்ருஷிகேசன் இருக்கிறான் என்று பக்தியுடன்
மரியாதையுடன் யார் நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன தவறுகளை செய்தாலும், அந்த பாப ராசிகள் அவர்களின் மோட்ச மார்க்கத்திற்கு என்றும் தடையாக இருக்காது.
பகவத்பக்தர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் அவரின்
யோக்யதைக்கு மீறி செய்யும் புண்ணிய கர்மங்கள் மட்டும் நாசமாகுமே தவிர, முக்திக்குத் தேவையான புண்ணியங்களை அழித்து, முக்தி மார்க்கத்திற்கு தடை வரும் சூழ்நிலை என்றும் வராது.
அகலிகையை அடைந்ததால் தேவேந்திரனுக்கும், குருஸ்த்ரி சங்கமத்தால் சந்திரனுக்கும் முக்தியில் எந்த சுகத்திற்கும் பிரச்னை
உண்டாகவில்லை. இதைப்போல, தியானத்தில் ஆழ்ந்திருப்பவர்கள், ஏதாவது பாவம் செய்தாலும், அந்த பாபராசிகள் பஸ்மம் ஆகுமே தவிர, முக்திக்கு பிரச்னை உண்டாகாது என்பது கருத்து. இந்த பத்யத்தினால், இந்த சந்தியில் சொல்லவரும் தியானத்தைப் பற்றிய அபிப்பிராயத்தை
குறிப்பிடுகிறார்.
ஹக3லனந்தா3 தீ3பத3ந்த3தி3
நிக3மவேத்3யன பூஜிஸுத கை
முகி3து3 நால்கரொளொந்து3 புருஷார்த்த4வனு பே3ட3த3லெ |
ஜக3து3த3ர கொட்டுத3னு பு4ஞ்சிஸி
மக3 மட3தி3 ப்ராணேந்த்3ரியாத்மா
தி3க3ளு ப4க3வத3தீ3ன வெந்த3டிக3டிகெ3 நெனெவுதிரு ||2
ஹகலு நந்தாதீபதிந்ததி = பகல் வேளையில் பூஜையறையில்
வைக்கப்பட்டிருக்கும் சிறு அகல்விளக்கைப் போல (பகலில், இருட்டை விரட்டுவதற்காக என்றில்லாமல், இறைவனுக்காக என்று ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கைப் போல)
நிகமவேத்யன = வேதங்களால் புகழப்படுபவனான
ஸ்ரீபரமாத்மனை
பூஜிஸுத = பூஜித்தவாறு
கைமுகிது = கைகளால் தொழுது
நால்கரொளொந்து புருஷார்த்தவனு = தர்ம, அர்த்த, காம,
மோக்ஷ முதலான நான்கு புருஷார்த்தங்களில் ஒன்றையும்
பேடதலெ = வேண்டாமல்
ஜகதுதர = ஜகத்தினை வயிற்றில் தரித்திருக்கும்
பரமாத்மன்
கொட்டதனு = கொடுத்திருப்பதை (அருளியிருப்பதை)
புஞ்சிஸி = ஏற்றுக்கொண்டு
மகமடதி ப்ராணேந்த்ரியாத்மாதிகளு = மக்கள், மனைவி, பிராண, இந்திரியங்கள், தன் ஜீவன், அல்லது சரீரம் இவை அனைத்தும்
பகவததீன = பகவந்தனின் அதீனம்
எந்து = என்று
அடிகடிகெ = ஒவ்வொரு நொடியும்
நெனெவுதிரு = சிந்தித்திரு
பகல் நேரத்தில், பூஜை அறையில் எரியும் நந்தாதீபமானது, இருட்டை விரட்டுவதற்காக இல்லாமல், பகவத்ப்ரீதிக்காகவே இருக்கிறது. அப்படியே, எந்நேரமும் பகவந்தனை பூஜித்திருக்க வேண்டும். ஸ்ரீஹரியின் அருளால் எப்போது, என்ன கிடைக்கிறதோ, அதை அனுபவித்தவாறு, இவை அனைத்தும் ஈஸ்வர சங்கல்பமே
என்று நினைத்தவாறு, தன் மனைவி, மக்கள், பிராணன், இந்திரியங்கள், இந்த தேகம் ஆகிய அனைத்தும் பரமாத்மனின் அதினமே என்று நம்ப வேண்டும். இந்த
விஷயத்தில் கனகதாசர் கூறிய ‘தனு நின்னது ஜீவ நின்னது | அனுதினதலி பாஹோ சுக துக்க நின்னதய்ய’ என்று பாடியிருக்கும் விதத்தைப்
போலவே நினைத்து, எப்போதும் பரமாத்மனை நினைத்திருக்க வேண்டும்.
அஸ்வதந்த்ரனு ஜீவ ஹரி ஸ
ர்வஸ்வதந்த்ரனு நித்ய சுக2மய
நிஸ்ஸ்வபத்த3ல்பக்3ஞ ஷக்த ஸது3க்க நிர்விண்ண |
ஹ்ரஸ்வதே3ஹி ஸனாத ஜீவனு
விஷ்வ வ்யாபக கர்த்ரு பி3ரம்ம ஸ
ரஸ்வதீஷாத்3யமரனுத ஹரியெந்து3 கொண்டா3டு3 ||3
ஜீவ = ஜீவன்
அஸ்வதந்த்ரனு = ஸ்வந்தந்த்ரம் இல்லாதவன்
ஹரி = ஸ்ரீஹரி
ஸர்வ ஸ்வதந்த்ரன் = பரிபூர்ண ஸ்வதந்த்ரம் உள்ளவன்
நித்யசுகமய = எப்போதும் சுகமயமானவன்
நிஸ்வ = தரித்திரன்
பத்த = விதிகளுக்கு உட்பட்டவன்
அல்பக்ஞ = கொஞ்சமே ஞானம் உள்ளவன், சிறிது சக்தி உள்ளவன்
சுதுக்க = துக்க ஸ்வரூபன்
நிர்விண்ண = சோர்வு அற்ற
ஹ்ரஸ்வதேஹி = மிகவும் சூக்ஷமமான உருவம் கொண்டவன்
ஸனாத = பரமாத்மன் என்னும் நாதனுடன் இருப்பவன்
ஹரி = ஸ்ரீபரமாத்மன்
விஷ்வவ்யாபக = அனைத்து இடங்களிலும்
வியாபித்திருப்பவன்
கர்த்து = ஸ்ருஷ்ட்யாதி அனைத்து கடமைகளை செய்பவன்
பிரம்ம சரஸ்வதீஷாதி = பிரம்ம, சரஸ்வதி, ருத்ரர் முதலானவர்கள்
அமரனுத = தேவதைகளால் வணங்கப்படுபவன்
ஹரியெந்து = ஸ்ரீஹரி என்று
கொண்டாடு = ஸ்தோத்திரம், பூஜை செய்.
ஜீவன் அஸ்வதந்த்ரன். பரமாத்மன் ஸ்வதந்த்ரன். நித்ய
சுகபூர்ணன். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவன். பிரம்ம ருத்ராதிகளால்
வணங்கப்படுபவன். ஸ்ருஷ்ட்யாதி கர்மங்களை செய்பவன். ஜீவன் தரித்திரன். நித்ய
பத்தன். அல்பக்ஞன். அல்ப சக்தி உள்ளவன். துக்கம் நிறைந்தவன். தீனன். அதிசூக்ஷ்ம
ஸ்வரூபன். பரமாத்மனுடன் கூடியிருப்பவன். பகவந்தனின் அருளினாலேயே ஞான, சக்தி, சுகங்கள் ஜீவனுக்கு கிடைக்கிறது -- என்று அறிந்து பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்ய
வேண்டும்.
மத்தெ விஷ்வாத்யெண்டு1 ரூபொ
ம்ப4த்தரிந்த3லி பெச்சிஸலு எ
ப்பத்தெரடு ரூபக3ளஹவு ஒந்தொ3ந்தெ3 ஸாஹஸ்ர |
ப்ருத2க்ப்ருத2கு நாடிக3ளொளகெ3 ஸ
ர்வோத்தமன திளியெந்து3 பீ4ஷ்மனு
பித்தரிஸித3னு த4ர்மதனயகெ3 ஷாந்திபர்வத3லி ||4
மத்தெ = அடுத்து
விஷ்வாத்யெண்டுரூப = விஷ்வ, தைஜஸ,
ப்ராக்ஞ, ஆத்ம,
அந்தராத்ம, பரமாத்ம, ஞானாத்ம என்னும் 8 ரூபங்களை
ஒம்பத்தரிந்த பெச்சிஸலு = அவ்யக்த, மஹத்தத்வ, அஹங்கார தத்வ, மனஸ்,
மற்றும் பஞ்சபூதங்கள் என்னும் 9ல் ஒவ்வொன்றிலும் எட்டு ரூபங்கள். 8*9=72 ரூபங்கள்
அஹவு = ஆகிறது
ஒந்தொந்து சஹஸ்ர = 72 ரூபங்களில் ஒவ்வொன்றிலும் 1,000 ரூபங்கள் என்றால் மொத்தம் 72*1000=72000
ப்ருதக் ப்ருதக் = தனித்தனியாக
நாடிகளொளகெ = அந்த 72,000 நாடிகளுக்குள்
சர்வோத்தமன = சர்வோத்தமனான ஸ்ரீஹரியை
திளியெந்து = அறிந்துகொள் என்று
பீஷ்மனு = பீஷ்மாசார்யர்
ஷாந்திபர்வதலி = சாந்தி பர்வத்தில் இருக்கும் மோட்ச
தர்மத்தில்
தர்மதனயகெ = தர்மராஜனுக்கு
பித்தரிஸிதனு = விளக்கிக் கூறினார்.
ஸ்ரீபரமாத்மன், விஷ்வாதி 8 ரூபங்களால், மூலப்ரக்ருதி (அவ்யக்த தத்வ), மஹத் தத்வ, அஹங்கார தத்வ, மனஸ்,
பஞ்சபூதங்கள் என இவை 9ல் ஒவ்வொன்றிலும் 8 ரூபங்கள் என்றால், 8*9=72 ரூபங்கள் ஆகின்றன. இந்த 72 ரூபங்களில் ஒவ்வொன்றிலும் 1,000 ரூபங்கள் என்றால் மொத்தம் 72,000 ரூபங்களால், நம் தேகத்திலிருக்கும் 72,000 நாடிகளில் ஸ்ரீபரமாத்மன்
இருக்கிறான் என்று அறிந்து கொள் என்று பீஷ்மாசார்யர் தர்மராஜனுக்கு உபதேசம்
செய்தார் என்று மகாபாரத சாந்தி பர்வத்தில் மோட்ச தர்மத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
’விஸ்தரிஸிதனு தர்மதனயகெ
பீஷ்மபர்வதலி’ என்று சில இடங்களில் இருப்பதால், வியாக்யானகாரர்கள், பீஷ்மாசார்யர், பீஷ்ம பர்வத்தில் தர்மராஜனுக்கு கூறினார் என்று சொல்கிறார்கள். பீஷ்ம
பர்வத்தில், பீஷ்மாசார்யருக்கும், தர்மராஜனுக்கும் உபதேசம் நடைபெறும்
சந்தர்ப்பம் இல்லவேயில்லை. போர் துவங்கும்போது, தர்மராஜன், பீஷ்மாசார்யரை வணங்கி, போரைத் துவக்குவதற்கான அனுமதியைப்
பெற்றான். இரண்டாவது முறை, போரின் 9வது நாளின் இரவில், பீஷ்மாசார்யரிடம் வந்த தர்மராஜன், அவரை சம்ஹரிப்பதற்கான வழியை கேட்டு அறிந்தான். மேற்கண்ட இரு சந்தர்ப்பங்கள்
மட்டுமே இருப்பதால், சாந்தி பர்வதலி என்னும் பாடமே சரியானது என்று அறிவோம்.
எண்டு1 ப்ரக்ருதிக3ளொளகெ3 விஷ்வா
த்யெண்டு ரூபத3லித்து3 ப4குதர
கண்டகவ பரிஹரிஸுதலி பாலிஸுவ ப்ரதிதி3னதி3 |
நெண்டனந்த3தி3 எடெ3பி3ட3தெ3 வை
குண்டரமணனு தன்னவர நி
ஷ்கண்டக ஸுமார்க்க3த3லி நடெ3ஸுவ துர்ஜனர பி3டு3வ ||5
எண்டு ப்ரக்ருதிகளொளகெ = பஞ்சபூதங்கள், அஹங்கார, புத்தி, மனஸ் என்னும் 8 ப்ரக்ருதிகளில்
விஷ்வாதி = விஷ்வ முதலான
எண்டு ரூபதலித்து = ரூபங்களில் இருந்துகொண்டு
பகுதர = பக்தர்களின்
கண்டகவ = பிரச்னைகளை / ஆபத்துகளை
பரிஹரிசுதலி = பரிகரித்து
பாலிஸுவ = பாதுகாக்கிறான்
ப்ரதிதினதி = தினந்தோறும்
நெண்டனந்ததி = உறவினர்களைப் போல
எடபிடதெ = இடைவிடாமல்
தன்னவர = தன் பக்தர்களை
நிஷ்கண்டக = தடைகள் இல்லாத
சுமார்க்கதலி = கற்கள், முட்கள் இல்லாத நல்ல வழியில்
நடெசுவ = நடக்க வைப்பான்
துர்ஜனர = கெட்டவர்களை
பிடுவ = தண்டிப்பான்
வைகுண்டரமணனு = வைகுண்டபதியான பரமாத்மன்
பூமிராபோனலோவாயு: கம்மனோபுத்திரேவச |
அஹங்கார இதீயம்மே பின்னாப்ரக்ருதி ரஷ்டதா ||
No comments:
Post a Comment