ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, July 13, 2020

16-20 நாடி பிரகரண சந்தி

ஈ தனுவினொளகி3ஹவு ஓத

ப்ரோதரூபதி3 நாடிக3ளு புரு

ஹூத முக2ரல்லிஹரு தம்மிந்த3தி4கரொடகூ3டி3 |

பீ4திகொ3ளிஸுத தா3னவர

ங்கா4த நாமக ஹரிய கு3

ம்ப்ரீதியலி து3பாஸனெய கை3யுதலெ மோதி3பரு ||16

 

ஈ தனுவினொளகெ = இந்த தேகத்தில்

ஓதப்ரோதரூபதி = குறுக்கும் நெடுக்குமாக

நாடிகளு = நாடிகள்

புருஹூத முகரு = இந்திரன் முதலானவர்கள்

தம்மிந்ததிகரொடகூடி = தம்மைவிட உத்தமர்களான கருட, சேஷாதிகளுடன் சேர்ந்து

தானவர = அசுரர்களை

பீதிகொளிஸுத = பயப்படுத்தியவாறு

ஸங்காதனாமக = யாருக்கும் தெரியாமல் மறைந்திருப்பதால் சங்காத என்னும் பெயருள்ள; அல்லது சந்தாத என்னும் பாட-பேதமும் இருக்கிறது. சந்தாத என்றால் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்பவன் என்று அர்த்தம்.

ஹரிய = இத்தகைய பெயருள்ள ஹரியின்

குண = குணங்களை

சம்ப்ரீதியலி = மிகவும் அன்புடன்

சதுபாஸனெகைவுதலெ = உத்தமமான உபாசனையை செய்தவாறு

மோதிபரு = மகிழ்ச்சிப்படுத்துவர்.

 

இந்த தேகத்தில் நாடிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுக்கொண்டிருக்கின்றன. அந்த நாடிகளில் இந்திராதி தேவதைகள் தம்மைவிட உத்தமமான கருட, சேஷ, ருத்ர, சௌபர்ணி, வாருணி, பார்வதி, பாரதி, சரஸ்வதி, வாயுதேவர், பிரம்மதேவர் ஆகியோருடன் தேகத்தில் இருக்கும் தைத்யர்களை பயப்படுத்தியவாறு சங்காத அல்லது சந்தாத என்னும் பெயரில், இந்த தேகத்தில் இருக்கும் பரமாத்மனை உபாசனை செய்தவாறு மகிழ்ச்சியடைகின்றனர்.

 

ஜலட குக்குட கே21 ஜீவர

கலெவரக3ளொளகி3த்து3 காணிஸி

கொளதெ3 தத்தத்3ரூப தன்னாமத3லி கரெஸுதலி |

ஜலருஹேக்‌ஷண விவித4 கர்ம

ங்க3ள நிரந்தர மாடி3 மாடி3ஸி

2லக3ளுண்ணதெ3 ஞ்சரிஸுவனு நித்யசுக2பூர்ண ||17

 

ஜலஜ = நீரில் வசிக்கும் பிராணிகள்

குக்குட = பூமியில் சஞ்சரிக்கும்

கேட = வானில் சஞ்சரிக்கும் பிராணிகள் என மூன்று வித பிராணிகளின்

களேவரதொளகித்து = சரீரத்தில் இருந்துகொண்டு

காணிஸிகொளதெ = யாருக்கும் காட்டிக் கொள்ளாமல்

தத்தத்ரூப = அந்தந்த ரூபங்களில்

தன்னாமதலி = அந்தந்த பெயர்களில்

கரெஸுதலி = அழைத்துக்கொண்டு

ஜலருஹேக்‌ஷண = தாமரைக் கண்ணன்

விவித கர்மகள = பலவித கர்மங்களை

நிரந்தரதி = தினந்தோறும்

மாடி மாடிஸி = செய்து செய்வித்து

தத்பலகளுணதெ = அவற்றின் பலன்களை அனுபவிக்காமல்

நித்யசுகபூர்ண = நிரந்தரமான சுகபூர்ணனான ஸ்ரீஹரி

சஞ்சரிசுவனு = சஞ்சரிக்கிறான்

 

ஜலஜ என்றால் நீரில் வசிக்கும் பிராணிகள் என்று அர்த்தம். குக்குட என்றால் பொதுவாக கோழிகளுக்குப் பெயரானாலும், பூமியில் வசிக்கும் அனைத்து பிராணிகளும் என்று அர்த்தம் கொள்ளலாம். கேட என்றால் வானில் பறப்பவை. இத்தகைய மூன்று வகையான பிராணிகளிலும் இருந்து, தாமரைக் கண்ணனான, நித்யசுக பூர்ணனான ஸ்ரீஹரி, அந்த பிராணிகளின் அனைத்து கர்மங்களையும் தான் செய்து, அவற்றின் பலன்களை மட்டும் தான் உண்ணாமல் சுகத்துடன் சஞ்சரிக்கிறான்.

 

திளிது3பானெ கை3யுதீ1பரி

மலினனந்திரு து3ர்ஜனர க

ங்க3ளிகெ3 கோ3சரிதெ3 விபஸ்சிதரொட3னெ க3ர்விதெ3 |

மளெ பி3ஸிலு ஹஸி த்ருஷெ ஜயாஜய

2ர நிந்தா3னிந்தெ34யக3ளி

3ளுகத3லெ மத்தா3னெயந்த3தி3 சரிஸு த4ரெயொளகெ3 ||18

 

ஈ பரி = மேற்சொன்ன விதத்தில்

திளிது = அறிந்து

உபாஸனெ கையுத = உபாசனையை செய்து

துர்ஜனர கங்களிகெ கோசரிஸதெ = இவன் இவ்வாறு உபாசனை செய்யும் யோகி என்று காட்டாமல்

விபஸ்சிதரொடனெ = ஞானிகளின் சன்னிதானத்தில்

கர்விஸதெ = நான் ஞானி என்று கர்வம் கொள்ளாமல்

மலினனந்திரு = ஞானசூன்யனைப் போல காட்டிக்கொள்

மளெ பிஸிலு ஹஸி த்ருஷெ = மழை, வெயில், பசி, தாகம்

ஜயாஜய = வெற்றி தோல்வி

களர = அயோக்கியர்களின்

நிந்தா = திட்டுதல்

அனிந்தா = பாராட்டு

பய = பயம்

இவுகளிகெ = இவற்றிற்கு

அளுகதலெ = பயப்படாமல் என்றால் திட்டுவதற்கு வருத்தப்படாமல், பாராட்டுகளுக்கு மயங்காமல்

தரெயொளகெ = பூமியில்

மத்தானெயந்ததி = கர்வம் கொண்ட யானையைப் போல

சரிஸு = சஞ்சரித்துக் கொண்டிரு.

 

முந்தைய பத்யத்தில் கூறியவாறு, உபாசனை செய்தவாறு, உன் ஞானத்தை துஷ்ட ஜனர்களுக்கு (தமோ யோக்கியர்களுக்கு) காட்டிக் கொள்ளாமல் புதோபாலவத்க்ரீடேத் குஷலோஜடவச்சரேத்என்று பாகவதத்தில் சொல்லியிருப்பதைப் போல, ஞானியானாலும், மான அவமானங்களுக்கு பெருமைப்படாமல், ஒரு சிறுவனைப்போல காட்டிக் கொள்ளவேண்டும். எவ்வளவு அறிவாளியானாலும், ஒரு முட்டாள் அல்லது ஒரு பைத்தியக்காரரைப் போல காட்டிக் கொள்ளவேண்டும்.

 

யோக்யரான பகவத்பக்தருடன் நீ சேரும்போது நான் ஞானி என்று அகங்காரம் கொள்ளாமல் அவரில் மரியாதையாக இரு. மழை, வெயில், பசி, தாகம் வெற்றி, தோல்வி, அயோக்கியர்கள் செய்யும் திட்டு, பாராட்டு, அவரால் உண்டாகும் பயம், இவற்றிற்கு மயங்காமல் :

 

ஏதர பய ஸ்ரீநாதன பரமப்ரீதிய படெதவகெ |

பந்து ஜனரு தனகொந்திஸிதாக்‌ஷண பந்த பாக்யவேனோ |

ஹிந்தெமுந்தெ தன நிந்திஸி நுடியலு குந்தாதத்தேனோ ||

மந்தரதர கோவிந்தன மானஸ மந்திரதொளு தந்திட்டவகின்யாதர பய |

 

என்னும் தாசரின் வாக்கியத்திலிருந்தும்,

 

சுகதுக்கேஸமேக்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ

 

என்னும் கீதா வாக்கியத்தாலும்,

 

மேற்சொன்ன சுகதுக்கங்களை சமமாக அறிந்து, மதம் பிடித்த யானை எப்படி யாருக்கும் அஞ்சாமல் தன் இஷ்டப்படி சஞ்சரிக்கிறதோ அப்படியே சஞ்சரித்துக் கொண்டிரு.

 

கானன க்3ராமஸ்த2 ர்வ

ப்ராணிக3ளு ப்ரதிதி3வஸத3லி ஏ

நேனு மாடுவ கர்மக3ளு ஹரிபூஜெயெந்த3ரிது3 |

தே4னிஸுத த்ப4க்தியலி பவ

மானமுக2 தே3வாந்தராத்மக

ஸ்ரீனிவானிக3ர்ப்பிஸுத மோதி3ஸுத நலியுதிரு ||19

 

கானன = காட்டில்

கிராமஸ்த = கிராமங்களில் வசிக்கும்

சர்வப்ராணிகளு = அனைத்து பிராணிகளும்

ப்ரதிதிவஸதலி = தினந்தோறும்

ஏனேனு மாடுவ கர்மகளு = செய்யும் அனைத்து கர்மங்களும்

ஹரிபூஜெயெந்தரிது = ஹரிபூஜை என்று அறிந்து

சத்பக்தியலி = பக்தியுடன்

தேனிஸுத = சிந்தித்து

பவமான முக தேவாந்தராத்மக = வாயுதேவரே முதலான தேவதைகளின் அந்தர்யாமியான

ஸ்ரீனிவாசனிகர்ப்பிஸுத = ஸ்ரீனிவாசனுக்கு அர்ப்பித்தவாறு

மோதிஸுத = மகிழ்ந்தவாறு

நலியுதிரு = நர்த்தனம் செய்தவாறு இரு (சஞ்சரித்திரு).

 

காட்டில் இருக்கும் புலி, சிங்கம் முதலான பிராணிகள், கிராமங்களில் இருக்கும் பசு, நாய், பன்றி போன்ற பிராணிகள், அவற்றின் தகுதிக்கேற்ப எந்த செயல்களை செய்கின்றனவோ, அவற்றை பார்க்கையில், அந்தந்த பிராணிகளில் பரமாத்மனே அந்தந்த ரூபத்தில் இருந்து, அந்தந்த செயல்களை செய்கிறான் என்று சிந்தித்து, அங்கங்கு பகவத் ரூபங்களை சிந்திப்பதே ஹரிபூஜை என்று அறியவேண்டும்.

 

அனைத்து இடங்களிலும் பரமாத்மனை உத்தம பக்தியினால் தியானித்தவாறு, வாயுதேவரே முதலான தேவதைகளின் அந்தர்யாமியான ஸ்ரீலட்சுமிபதிக்கு, மேற்சொன்ன விதத்தில் சிந்தனா பூர்வகமான பூஜையை சமர்ப்பித்தவாறு, மகிழ்ச்சியுடன் சஞ்சரித்துக் கொண்டிரு. குருபரம்பரா மூலமாக வந்த, பரம ரகசியமான உபாசனா மார்க்கத்தை, தாசராயர் உபதேசம் செய்திருக்கிறார் என்று அறியவேண்டும்.

 

நோகனீயனு லோகதொ3ளு ஷுனி

ஸூகராதி33ளொளகெ3 நெலெஸி

த்தே3க மேவாத்3விதிய பஹு ரூபாஹ்வயக3ளிந்த3 |

தா கரெஸுதொளகி3த்து3 திளிதெ3

ஸ்ரீக1மல 4வமுக்2ய சகல தி3

வௌககணாராத்4ய கைகொண்டனுதி3னதி3 பொரெவ ||20

 

நோகனீயனு = சிறியவனாக இல்லாதவன் (உலகத்தில் முதன்முதலில் பிறந்த பிரம்மாதிகளுக்கும் தந்தை ஆனதால், அனைவரைவிடவும் பெரியவன் என்று அர்த்தம்)

லோகதொளு = உலகத்தில்

ஷுனி = நாய்

ஸூகராதிகளொளகெ = பன்றி ஆகியவற்றில்

நெலெஸித்து = நிலைத்திருந்து

ஏகமேவாத்விதிய = எப்போதும் சர்வோத்தமனாகவும், சர்வ ஸ்வதந்த்ரனாகவும் இருப்பவன் ஒருவனே ஆகையால் ஏகமேவபிரம்ம என்னும் பொருள் ஒன்றே என்று பெயர் பெற்றவன். அத்விதிய என்றால் சமம் இல்லாதவன் என்று பொருள். அல்லது அத்விதீயம் வஸ்து ஏகமேவஉலகத்தில் அனேக ஜீவராசிகள் இருந்தாலும், சமம் இல்லாத சர்வோத்தம வஸ்து பிரம்மஎன்னும் பெயருள்ள ஒரே பொருள் என்று பொருள்.

பஹு ரூபாஹ்வயகளிந்த = இத்தகைய ஸ்வாமி, பல ரூபங்களைக் கொண்டவன், மத்ஸ்ய, கூர்ம, ராமகிருஷ்ணாதி பல ரூபங்களை தரித்து,

கரெஸுதொளகித்து = பல பெயர்களால் அழைக்கப்பட்டு, அனைத்து பிராணிகளின் பெயரால், அவற்றிற்குள் இருந்து,

திளிஸதெ = யாருக்கும் காட்டிக் கொள்ளாமல்

ஸ்ரீ=லட்சுமிதேவி

கமலபவ = பிரம்மதேவர் முதலான

சகல திவௌகச கணாராத்ய = அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படும் ஸ்ரீஹரி

கைகொண்டு = அவர்களின் செயல்களை ஏற்றுக்கொண்டு

அனுதினதி = தினந்தோறும்

பொரெவ = அருள்கிறான்.

 

கனீயர் என்றால் சிறியவன் என்று பொருள். நோகனீய என்றால் அப்படி அல்ல என்று பொருள். உலகத்தில் அனைவரையும்விட பெரியவன் என்று அர்த்தம். அத்விதிய என்றால் சமம் இல்லாதவன் என்று பொருள். இத்தகைய குணங்களைக் கொண்ட பொருள் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அந்த பொருளே பரபிரம்மன். அந்த பரபிரம்மனே நாராயணன் என்று அறியவேண்டும். அதற்கு ஆதாரம் என்னவெனில் பிரம்மவிதாப்னோதிபரம்என்னும் ஸ்ருதியினால், பிரம்மனை அறிந்தவன், பரத்தை அடைகிறான். பிரம்மனின் ஸ்வரூபத்தை அறிந்தவன், பிரம்மனை அடைகிறான் என்று சொல்ல வேண்டியதாயிற்று. பரத்தை அடைகிறான் என்று சொல்லியிருப்பதால், பிரம்மனே பரன் என்று சொல்லியதைப் போல் ஆயிற்று. பிரம்மன் என்றாலும், பரன் என்றாலும் அது ஸ்ரீநாராயணனையே குறிக்கிறது என்று பாகவத முதல் ஸ்கந்தம், முதல் ஸ்லோகத்தின் விஜயத்வஜீய உரையில் சொல்லப்பட்டிக்கிறது.

 

யதேதத்வர பிரம்ம வேதவாதேஷு பட்யதே |

ஸதேவ: புண்டரீகாக்‌ஷ: ஸ்வயம் நாராயண: பர: ||

 

வேதாதிகளில், பல இடங்களில், தாமரைக் கண்ணனான, பர என்று அழைக்கப்படுபவனான ஸ்ரீ நாராயணனே பர என்று அழைக்கப்படுகிறான் என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதே முதலாம் ஸ்கந்தத்தில், ‘பிரம்மேதி பரமாத்மேதி பகவானிதி ஷப்த்யதேஎன்று சொல்லிய வாக்கியங்களால், பரபிரம்மனே நாராயணன் என்று தெளிவாகிறது. மேலும், பாகவத 11ம் ஸ்கந்த, 2ம் அத்தியாய, 42ம் ஸ்லோகத்தில் தாத்பர்யத்தில்:

 

பூர்ணத்வாதாத்ம ஷப்தோக்த கஸ்சித்ஸர்வ நரோத்தம: |

ஸோபி நாராயணோனான்ய: ஸதாஸர்வேஷு ஸம்ஸ்தித: ||

தத்வஷா இதரே ஸர்வேஸ்ரீ பிரம்மேஷ புரஸ்ஸரா: |

 

பூர்ணன் ஆகையால் ஆத்மன் என்று பெயர். அவனே நாராயணன். அவனைத் தவிர வேறு யாரும் அல்ல. அவனே அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருப்பவன். ஸ்ரீலட்சுமி பிரம்ம வாயு ஈஸ்வர முதலானவர்கள், அவனின் வசத்தில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

 

இப்படியான பல ஆதாரங்களினால், பரமாத்மன் ஒருவனே சர்வோத்தமன். ஜீவருக்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு இருப்பதால், ஏகமேவா த்விதீயம் என்னும் வாக்கியம், ஜீவர்கள் வேறு அல்ல; பரமாத்மன் ஒருவனே என்று அத்வைதத்தை விளக்குகிறது என்று சொல்லக்கூடாது. ஜீவர்கள் வேறாக இருந்தே இருக்கின்றனர். பரமாத்மனின் ரூபங்களில் வேறுபாடு இல்லை. சர்வதந்த்ர ஸ்வதந்த்ரனாக, சமம் இல்லாதவனாக இருப்பவன் பரமாத்மன் ஒருவனே என்பது கருத்து. இத்தகைய ஸ்வாமி ஒருவனே ஆனாலும், அனந்தானந்த ரூபங்களால், அனைத்து இடங்களிலும் வசித்து, பல ரூபங்களால் பல பெயர்களை பெற்றிருக்கிறான். பிராணிகளில் அந்தந்த உருவங்களைப் பெற்றிருந்தாலும், யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். நாம் செய்யும் பூஜை, தியானாதிகளை ரமா பிரம்மாதி தேவர்களால் வணங்கப்படுபவனான ஸ்ரீஹரி, ஏற்றுக்கொண்டு தினந்தோறும் அனைவருக்கும் அருள்கிறான். 

No comments:

Post a Comment