த்3ருஹிண மொத3லாத3மரரிகெ3 ஸ
ந்மஹித மாயாரமண தானெ
ஸ்வஹனெனிஸி ஸந்த்ருப்திப3டி3ஸுவ சர்வகாலத3லி |
ப்ரஹித ஸங்கருஷண பிதருக3ளி
க3ஹரனெனிப ஸ்வதா4க்2ய ரூபதி3
மஹிஜ ப2ல த்ருணபெஸரினலி ப்ரத்3யும்னனிருத்3த4 ||11
த்ருஹிண மொதலாதமரரிகெ = பிரம்ம முதலான தேவதைகளுக்கு
ஸன்மஹித = சஜ்ஜனர்களால் பூஜிக்கப்படும்
மாயாரமண = மாயாதேவியின் பதியான ஸ்ரீவாசுதேவன்
தானே ஸ்வஹனெனிஸி = தானே, ஸ்வாஹா என்று அழைக்கப்பட்டு
சர்வகாலதலி = அனைத்து காலங்களிலும்
சந்த்ருப்திபடிசுவ = நன்றாக திருப்திப்படுத்துவான்
ப்ரஹித = விசேஷமாக அனைவருக்கும் ஹிதத்தைக் கொடுக்கும்
சங்கர்ஷணன்,
ஸ்வதாக்ய ரூபதி = ஸ்வதா என்னும் ரூபத்தில்
அஹரனெனிஸுவ = ஆகாரம் என்று இருக்கிறான்
(மஹிஜ.. என்று இங்கு தொடங்கும்
ஆறாம் வரி, அடுத்த பத்யத்துடன் சேர்ந்து வருதால், இதன் விளக்கத்தை அங்கு பார்க்கலாம்).
யாகங்களில் ஆஹுதிகளைக் கொடுக்கும் காலங்களில்
தேவதைகளுக்கு பிரம்மணே ஸ்வாஹா, ருத்ராய ஸ்வாஹா, என்று ஸ்வாஹாகாரத்தினாலும், பித்ருகளுக்கு ஸ்வதாகாரங்களிலும், தானே அன்னரூபனாக இருந்து அவர்களை திருப்திப்படுத்துவான். சங்கர்ஷணன், ஸ்வதா ஷப்த வாச்யனாக இருந்து, அன்னமாக இருந்து, பித்ருகளை திருப்திப்படுத்துகிறான் என்று அர்த்தம்.
அன்னனெனிஸுவ ந்ரு பஷுக3ளிகெ3 ஹி
ரண்ய க3ர்ப்பா4ண்ட3தொ3ளு ஸந்தத
தன்னனீபரியிந்து3 பாஸனெகை3வ ப4குதரன |
ப3ன்னப3டிஸதெ3 ப4வஸமுத்3ர ம
ஹோன்னதிய தா3டிஸி சதுரவித4
அன்னமய நாத்ம ப்ரத3ர்ஷன ஸுக2வனீவ ஹரி ||12
(மஹிஜ = பூமியில் உத்தமமான
பல = பலன்
த்ருணபெசரினலி = தானியங்கள், பழங்கள் ஆகிய பெயர்களில் ப்ரத்யும்ன அனிருத்தன்)
ஹிரண்ய கர்ப்பாண்டதொளு = பிரம்மாண்டத்தில்
ந்ரு பஷுகளிகெ = மனிதர்களுக்கும், பசுக்களுக்கும்
அன்னனிஸுவ = தான்யாதி ரூபங்களில் போஜ்யன்
எனப்படுகிறான்
தன்னனு = ஸ்ரீபரமாத்மன், தன்னை
ஈ பரியிந்த = அன்னமயனாகி
ஸந்தத = எல்லா காலங்களிலும்
உபாஸனெகெய்வ = உபாசனை செய்யும்
பகுதரன = பக்தர்களை
பன்னபடிஸதெ = எவ்வித கஷ்டங்களையும் கொடுக்காமல்
சதுர்வித அன்னமயனு = காத்ய, பேய,
லேஹ்ய, போஜ்ய என்னும் நான்கு வித அன்னரூபமான ஸ்ரீஹரி
பவசமுத்ர மஹோன்னதிய = தாண்டமுடியாத சம்சார
சமுத்திரத்தைத் தாண்டச் செய்து
ஆத்மப்ரதர்ஷன சுகவனு = இஹத்தில் தன் அபரோக்ஷ தர்ஷன
சுகத்தையும், முக்தியில் எப்போதும் பகவத்ரூப தரிசன சுகத்தையும்
ஈவ = கொடுக்கிறான்.
பிரம்மாண்டத்தில், அனைத்து பிராணிகளுக்கும், அவரவர்களின் யோக்யதைக்கேற்ப, யார்யாருக்கு எந்தெந்த ஆகாரமோ, அதாவது, மனிதர்களுக்கு காத்ய, லேஹ்ய, போஜ்ய, பேய போன்றன. உண்பது, அன்னத்திற்கு தக்க சட்னி, மாவு,
மிளகு, ஊறுகாய் போன்றன, குடிப்பது என்று 4 விதங்கள் உண்டு. பசு முதலானவற்றிற்கு புற்கள். இந்த பெயர்களால் பிரத்யும்னன், அனிருத்தன் த்ருப்திப்படுத்துகிறான்.
இப்படி அனைத்து பிராணிகளும் உண்ணும் அன்னரூபனாக
பரமாத்மனே அனைவரையும் திருப்திப்படுத்துகிறான். ’அன்னம்பிரம்மேதிவ்யஜானாத்’ என்னும் உபநிஷத்
வாக்கியத்திற்கேற்ப, பரமாத்மனை அன்ன என்று உபாசனை செய்யவேண்டும் என்று அர்த்தம். அன்ன என்னும்
சொல்லுக்கு ‘அத்தீத்யன்னம்’ பிரபஞ்சத்தை உண்பதால் பரமாத்மனுக்கு அன்ன என்று பெயர் என்று அர்த்தம்
சொல்லலாம். ஆகையால், பிரபஞ்சத்தில் அன்னரூபமாக இருப்பதாலும், பிரளய காலத்தில் ப்ரபஞ்சத்தை தன் வயிற்றில் வைத்துக் கொள்வதாலும், பரமாத்மனுக்கு அன்ன என்று பெயர்.
இப்படியாக பரமாத்மன் அன்ன ரூபியாக இருக்கிறான் என்று
நினைத்து யார் உபாசனை செய்கிறார்களோ, அத்தகைய பக்தர்களை சம்சாரத்தில்
கஷ்டப்படுத்தாமல், அவர்களை சம்சார சாகரத்தை தாண்டவைத்து, சதுர்வித அன்னமயனான ஸ்ரீஹரி, இஹத்தில் தன் அபரோக்ஷ தரிசன
சுகத்தையும், முக்தியில் ஸாமீப்யாதி ஸ்தானங்களையும் கொடுத்து, அங்கும் தன் தரிசனத்தை எப்போதும் கொடுத்தவாறு அவர்களை காப்பாற்றுகிறான்.
மன வசன காயக3ள தெ3ஷெயி
ந்த3னுதினதி3 பி3ட3தா3சரிஸுதி
ப்பனு சிதோசித கர்மக3ள ஸத்ப4க்திபூர்வகதி3 |
அனிலதே3வனொளிப்ப நாரா
யணகி3தன்னவு எந்து3 க்ருஷ்ணா
ர்ப்பணவெனுத கொடெ3 ஸ்வீகரிஸி ஸந்தயிப கருணாளு ||13
மனவசன காயகள தெஷெயிந்த = மனஸ், வாக்கு, தேகங்களால்
அனுதினதி = தினந்தோறும்
பிடதெ ஆசரிசுத்திப்ப = செய்து கொண்டிருக்கும்
அனுசித = செய்யக்கூடாத
உசித = செய்ய வேண்டிய
கர்மகள = கர்மங்களை
சத்பக்தி பூர்வகதி = பக்தியுடன்
அனிலதேவனொளிப்ப = பாரதிரமண முக்யபிராணாந்தர்கதனன
நாராயணகெ = நாராயணனுக்கு
இது அன்னவெந்து = இதுவே அன்னம் என்று
கிருஷ்ணார்ப்பணவெனுத = கிருஷ்ணார்ப்பணம் என்று
கொடெ = சமர்ப்பித்தால்
கருணாளு = கருணைக்கடலான ஸ்ரீஹரி
ஸ்வீகரிஸி = அதனை ஏற்றுக்கொண்டு
சந்தெய்ப = காக்கிறான்.
மனோ வாக் காயங்களால் நாம் தினமும் செய்யும் புண்ய பாப
கர்மங்களை பரமாத்மனே செய்விக்கிறான் என்று அறிந்து, திடமான பக்தியினால், இவை அனைத்தும் பரமாத்மனுக்கே
அன்னம் என்று நினைத்து, பாரதிரமண முக்யபிராணாந்தர்கத
ஸ்ரீலட்சுமி நாராயண: ப்ரீயதாம், ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து என்று
சமர்ப்பித்தால், பரமாத்மன் அவற்றை ஸ்வீகரித்து, பாபங்களை சுட்டு, புண்யங்களை வளர்த்து, கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி நம்மைக்
காக்கிறான்.
ஏளு வித3த3ன்ன ப்ரகரணவ
கே1ளி கோவித3ராஸ்யதி3ந்த3லி
ஆலஸவ மாட3த3லெ அனிருத்தா3தி3 ரூபக3ள |
காலகாலதி3 நெனெது3 பூஜிஸு
ஸ்தூலமதிக3ளிகி3த3னு பேளதெ3
ஸ்ரீலகுமிவல்லப4னெ அன்னாத3ன்ன அன்னத3னு ||14
ஏளுவித = 7 விதமான
அன்ன ப்ரகரணவ = அன்ன ப்ரகரணங்களை
கோவிதர = ஞானிகளின்
ஆஸ்யதிந்தலி = முகத்திலிருந்து கேட்டு
ஆலஸவ = சோர்வினை
மாடதலெ = செய்யாமல்
அனிருத்தாதி ரூபகள = அனிருத்த முதலான ரூபங்களை
காலகாலதி = அந்தந்த காலங்களில்
நெனது = நினைத்தவாறு
ஸ்தூலமதிகளிகெ = மனைவி மக்கள் வீடு என்று தற்காலிக
சுகங்களில் ஈடுபட்டு, பகவத் விஷயங்களில் கொஞ்சம்கூட ஞானம் இல்லாதவர்களுக்கு
இதனு பேளதெ = இதனை சொல்லாமல்
ஸ்ரீலகுமி வல்லபனெ = ஸ்ரீலட்சுமிபதியே
அன்னாத = போக்த்ருகளில் இருந்து அன்னத்தை உண்கிறான்
என்று
அன்ன = அன்னமயனும்
அன்னதனு = அன்னத்தைக் கொடுப்பவன் என்றும்
பூஜிஸு = பூஜை செய்.
11, 12, 13 ஆகிய மூன்று பத்யங்களால், 7விதமான அன்னபிரகரணங்களைக் கூறினார். அந்த சப்தான்னங்களையே இங்கு தொகுத்துக்
கொடுத்திருக்கிறார். 7வித அன்னங்களை, ப்ருஹதாரண்ய உபநிஷத்தில், 1ம் அத்தியாயம், 5ம் ஸ்லோகத்தில், சப்தான்ன பிராமணரில் முதலாம் கண்டத்தில்:
யத்ஸப்தான்னானிமேதயா தபஸா அஜனயபிதா ஏகமஸ்ய ஸாதாரணம்
த்வேதேவான பாஜயத், த்ரீண்யாத்மனோs குருதபஷுப்ய ஏகம் ப்ராயச்சத் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம் இத்யாதி ||
இதன் கண்டார்த்தம்:
விஷ்ணு பிரம்மாணா வபிக்ருஹணா வதிஷ்டமதோ க்ருஹே உத்தம
இத்யுக்தமாத்மை வேத்யாதினா ||
தஸ்யக்ருஹிணோ பகவத்ஸ்ருஷ்டம் யத்ஸாதாரணமன்னம்
தன்னஸ்வகீய மேவேதி மந்தவ்யமிதி பாவேன ப்ரக்ருதஹரே: ||
ஸப்தான்ன ஸ்ரஷ்ட்ரத்வமஹிமானமாஹ ||
யத்ஸப்ரான்னமிதி ||
விஷ்ணு பிரம்மதேவர் இருவரும் கிருஹஸ்தாஸ்ரமிகள்
ஆயினர். ஆகையால், கிருஹஸ்தாஸ்ரமத்தில் யார் உத்தமர்கள் என்று ஆத்மைவ இத்யாதி கண்டங்களால்
கேட்டனர். அந்த கிருஹஸ்தன், பகவந்தனால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட
அன்னமானது, அனைத்து பிராணிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மறந்து, தன்னுடையது என்று அறியக்கூடாது என்று கூறுகிறார். ‘யத்ஸப்தான்னானி’ என்னும் கண்டத்தால்
பிதா = அனைத்து உலகங்களுக்கும் தந்தையான ஸ்ரீஹரி.
மேதயா = தன் விருப்பத்தால்
தபஸா = பிராணிகளின் சம்பந்தமான கர்மங்களால்
ஸப்தான்னானி = 7 வித அன்னங்களை
அஜனயத் = ஸ்ருஷ்டித்தான்
பிராணிகளுக்கு திருப்தி ஆவதால், அதற்கு அன்ன என்று பெயர். அந்த 7 வித அன்னங்கள் எவை என்றால்:
* பிராணிபிரத்யமானமேகம் = பிராணிகள்
உண்ணும் சாதாரண அன்னம் 1.
* வைஸ்வதேவ, பலிஹரண இவை இரண்டு
* பிராணிகளின் மனஸ், வாக்,
பஞ்சப்ராண ரூபமானது மூன்று
* பால் அல்லது தண்ணீர் ஒன்று,
என மொத்தம் 7. இந்த ஏழில்,
* ஒன்று மட்டும் உலகத்திற்கு
சாதாரணமானதாகும்.
* வைஸ்வதேவ, பலிஹரண ரூபமான இரு அன்னங்கள் தேவதைகளுக்கு, அவர்கள் மூலமாக பித்ருகளுக்கும் பகிர்கின்றனர் என்று அர்த்தம்.
* மனஸ், வாக்,
பஞ்சப்ராண இந்த மூன்று அன்னங்களையும், பரமாத்மன் தனக்காக வைத்துக் கொண்டான்.
* பசுக்களுக்கு தண்ணீர் ரூபமான ஒரு
அன்னத்தைக் கொடுத்தான். ஆனால், இந்த தண்ணீர் பசுக்களுக்கு மட்டுமே
அல்ல. அனைத்து ஜீவர்களும் தண்ணீரால் வாழ வகை செய்தான்.
இதுபோன்ற விஷயங்களை அங்கு விளக்கமாக சொல்லியிருக்கின்றனர்.
இந்த சப்தான்ன பிராமணங்கள் மொத்தம் 23 கண்டங்களில் இருக்கின்றன. அதில்
நமக்குத் தேவையான 7 கண்டங்களில் வெகு சில பாகங்கள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்
விஷயங்களை அறியவேண்டுமெனில், ப்ருஹதாரண்ய உபநிஷத்திலும், பாஷ்யத்திலும், சப்தான்ன பிராம்மணன் என்னும் 8ம் பிராமணனைப் பார்த்து அறியலாம்.
இதே உபநிஷத்தின் இந்த கண்டத்திற்கு, பாஷ்யத்தில் :
ஸப்தான்னானியதா விஷ்ணு: பரம: புருஷோவிபு: ||
ஸஸர்ஜதேஷாம் ஸ்வார்த்தானி சகார த்ரீணிகேஷவ: |
மனோவாசந்ததா ப்ராணம் தஸ்மாத்யைஸ்துஷ்டி மேதிஸ: |
தஸ்மாத் தத்பக்தி காமஸ்யாத் ஸங்கல்பம்
தத்க்ருதிம்ப்ரதி ||
குர்யாத் தத்வேதனேச்சாஞ்ச ஸ்ரத்தாந்தஸ்ய குணோன்னதௌ ||
இத்யாதி ||
சதுர்த்தம் போஜ்யமேவான்னம் ஸர்வஸாதாரணம் ஸ்ம்ருதம் ||
ஆத்மனோதி ஸமீபத்வம் தஸ்யயோன்னஸ்ய மன்யதே ||
அக்ஷயம் பாபமஸ்யஸ்யாத் தேவபிரம்மஸ்வ ஹாரிண: |
ததேவ மந்த்ரயுக்தப்த்வாத் பலிஹோமாத்மனாத்வயம் |
தேவானம் ப்ரததௌ விஷ்ணுஸ்தஸ்மான்யைவேச்ச யாயஜேத் |
யதீச்சயாயஜேத்தேஷா மபஹர்தாபவிஷ்யதி |
தேவஸ்வந்தே நயேன்யைவ காம்யார்த்தம் வினியோஜிதம் |
பரகீயேனவித்தேன தஸ்மின் வினிமயேயதா |
சதுஷ்டாத் ப்யோத்விபாத்யஸ் சபஷுப்ய: பய ஆத்மகம் ||
ப்ராயச்சத்ஸப்தமான்னம் ஸகோக்ஷீர முக்யமத்ரச |
ஆத்மனேசைவ தேவானாம் தத்தோமார்த்தம் ப்ரகல்பிதம் |
ஸம்வத்ஸரம் கோபயஸாயேன ஹொமோஹரே: க்ருத: |
பகவத்தத்வ விதுஷா தஸ்ய முக்திர் நஸம்ஷய: |
அத்ருஷ்ட பகவத்ரூபஸ்யை தத்தர்ஷன காரணம் |
ஸப்தான்னோபாஸனம் யஸ்யாத் தேவானாம் யோக்யமுத்தமம் |
தஸ்மாத்தேவத்வ மாப்னோதி யோக்யோ தேவ பதஸ்யய: ||
இதன் பொருள்:
ஸ்ரீபரமாத்மன் எப்போது சப்தான்னங்களை ஸ்ருஷ்டித்தானோ
அப்போது பரமபுருஷனான பிரபுவான ஸ்ரீஹரி, மனதிலிருந்தும், வாக்கிலிருந்தும், பஞ்சபிராணங்களிலிருந்தும் செய்யும் க்ரியாரூபமான மூன்று வித அன்னங்களை தன்
பாகம் என்று வைத்துக்கொண்டான். இந்த மூன்று விதமான கர்மங்களால், பரமாத்மன் மகிழ்கிறான். ஆகையால், மனஸ் சம்பந்தமான அன்னம் என்றால், மனதை பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் வைத்து, பகவத் சேவாரூபமான கர்மங்களை செய்வேன் என்று, மனதில் சங்கல்பம் செய்து, அந்த கர்மத்தை செய்து முடித்தபிறகு, நான் அஸ்வதந்திரன், பரமாத்மனே எனக்குள் இருந்து இதனை
செய்வித்தான் என்று அறிந்து, பரமாத்மனுக்கு அர்ப்பிக்க
வேண்டும். இதுவே மனஸ் சம்பந்தமான அன்னம்.
வாக் அன்னத்தை, பகவன்-நிந்தா மற்றும் பகவத் பக்தரின் நிந்தாதிகளில் பயன்படுத்தாமல், வெறும் அவரின் ஸ்தோத்திரங்களை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். ப்ராண உபானாதி 5ல் :
* பிராணனை பகவத் சம்பந்த கர்மங்களை
செய்வதற்கும்,
* அபானத்தை பிற கர்மங்களை
செய்யாதிருக்கவும்,
* பகவத் விரோதிகளை நீக்குவதற்கு வியானத்தையும்,
* யோகதாரணத்திற்காக உதானத்தையும்,
* மனோ வாக் முதலான இந்திரியங்களை
தண்டிப்பதற்கு சமானத்தையும் என,
பஞ்சபிராணங்களால் ஆகும் செயல்களையும் அன்ன என்று
பரமாத்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். (இந்த விஷயங்களை இன்னும் விளக்க முடியும்.
கிரந்தம் பெரிதாகிவிடும் என்பதால், இத்துடன் நிறுத்துகிறோம்).
4ம் அன்னம்: இந்த அன்னம்
அனைவருக்கும் சாமான்யமாக இருப்பதால், யார் இதை தனதென்று நினைக்கிறானோ, அத்தகையவனுக்கு தேவபிராமணரின் சொத்தை அபகரித்த பாவிகளுக்கு வரும் மஹா பாவம்
வரும். இந்த அன்னத்தில் பலிஹோம ரூபமாக இரண்டை தேவதைகளுக்காக ஸ்ரீபரமாத்மன்
கொடுத்திருக்கிறான். அதுவே வைஷ்வதேவ, பலிஹரண. வைஷ்வதேவம் - தேவதைகளுக்கு
மட்டும். பலிஹரணம் - தேவதைகளுக்கும், பித்ருகளுக்கும். ஆகையால், நாம் அன்னத்தை செய்தபிறகு, அந்த அன்னம் தேவதைகளை
சேர்ந்ததாகும்.
ஏனெனில், மழைக்கு அபிமானியான தேவதை, அந்த மழையை தக்க காலத்தில் பெய்வித்து, தானியங்களை விளைவிக்க வேண்டும். நெருப்புக்கு அபிமானி தேவதை, அன்னத்தை வேகவைக்க வேண்டும். இப்படி, பல தேவதைகளின் உதவி இல்லாமல் நம்
அன்னம் தயார் நிலைக்கு வருவதில்லை. ஆகையால், அதனை அவர்களுக்குக் கொடுக்காமல், அவர் அனுமதி இல்லாமல் நம்
இஷ்டத்திற்கு வினியோகம் செய்தால், தேவதைகளின் சொத்தினை அபகரித்த
தோஷம் நமக்கு வருகிறது.
‘சதுஷ்பாதி த்விபாதிகள’ என்றால், பசு,
மனிதர்களின் வாழ்க்கைக்காக ‘பய:’ தண்ணீர் மயமான 7ம் அன்னத்தை ஸ்ருஷ்டித்தார். அந்த அன்னத்தில், பசுவின் பால் மிகவும் முக்கியமானது. அந்த பாலினை, தனக்கும், தேவதைகளுக்கும், ஹோமாதிகளை செய்வதற்காக அனுப்பியுள்ளார். ஆகையால், எந்த புருஷன் ஒரு ஆண்டு வரைக்கும் பசும் பாலினால், ஹோமங்களை செய்கிறானோ, அவன் முக்தியை அடைகிறான். அபரோக்ஷத்தில்
பகவத் ரூபத்தை காணாதவனுக்கு இந்த சப்தான்ன உபாசனம் தரிசனத்திற்கு காரணமாகிறது.
சப்தான்ன உபாசனை, தேவதா-யோக்யமானதால், பரம உத்தமமானதாகும். ஆகையால், இந்த சப்தான்ன உபாசனையை செய்பவன் தேவ பதவிக்கே தகுதியானவன் ஆகிறான். அவன்
தேவத்வத்தை அடைகிறான்.
இதுபோன்ற அனேக விஷயங்களை பிரஹதாரண்ய உபநிஷத்தில்
சொல்லியிருக்கிறார்கள். இதே அர்த்தங்களையே 11ம் பத்யத்திலிருந்து 14ம் பத்யம் வரைக்கும் தாசராயரும்
சொல்லியிருக்கிறார். இத்தகைய 7 விதமான அன்ன ப்ரகரணத்தை, அறிந்தவரின் முகத்திலிருந்து கேட்டு, அறிந்து, அனிருத்தாதி ரூபங்களை நினைத்து பூஜிக்க வேண்டும். ப்ருஹதாரண்ய உபநிஷத்தில்
சொல்லியபடி வைஷ்வதேவ, பலிஹரண என்னும் இரு அன்னங்களின் பிரகரணத்தை ‘த்ருஹிண மொதலாத’ என்னும் பத்யத்திலிருந்து சொல்கிறார். அதில் சொல்லியிருக்கும்படி, ஹோமம் செய்யும் ஸ்வாஹா என்னும் உபாசனையே வைஷ்வதேவ என்று அர்த்தம். அங்கு
வாசுதேவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும். ஸ்வதா ரூபத்தினால், பித்ருகளுக்கு ஆகாரம் என்று சொல்வதே பலிஹரணம். தேவதைகளுக்கு ஸ்வாஹா
ஷப்தத்தினாலும், பித்ருகளுக்கு ஸ்வதா ஷப்தத்தினாலும் பலியைக் கொடுக்க வேண்டும். அங்கு, சங்கர்ஷணனை சிந்திக்க வேண்டும். இப்படி இரு அன்னங்கள் இருக்கின்றன. 12ம் பத்யத்தில் 3-4 இந்த இரு அன்னங்களை சொல்லியிருக்கிறார்.
த்ருண முதலான ஜீவனைவிட மஹிஜ என்றால், பூமியை தோண்டினால் கிடைக்கும் தண்ணீர் என்று அர்த்தம். பசு முதலான அனைத்து
பிராணிகளுக்கும் நீர் மிகவும் முக்கியமானது. இது மூன்றாம் அன்னம்.
நான்காவது சர்வ சாதாரணமான மனுஷ்யதேவதை முதலான
அனைவருக்கும் பயன்படும் அன்னம். இந்த அன்னத்தில் ப்ரத்யும்ன அனிருத்தனை சிந்திக்க
வேண்டும்.
மற்ற மூன்று அன்னங்களை 14ம் மனவசன என்னும் பத்யத்திலிருந்து சொல்லியிருக்கிறார். இந்த மூன்றிலும்
நாராயணனை சிந்திக்க வேண்டும். ப்ருஹதாரண்ய பாஷ்யத்தில் சொல்லிய பிராண ஷப்தத்தையே
தாசராயர்,
‘காய’
என்று சொல்கிறார். இந்த வித்தியாசம் ஏன் என்றால், பிராணோபானாதிகளால், செய்யவேண்டிய கர்மங்களை
பாஷ்யத்தில் சொல்லும்போது,
* பகவத் சம்பந்தமான கர்மங்களை
செய்வதற்கு ப்ராண காரணம் என்றும்,
* அபான, பிற கர்மங்களை விடுவதற்கும்,
* பகவத் விரோதிகளை நீக்குவதற்கு
வியானனும்..
என்று இவையே பஞ்சப்ராணரின் வேலை என்பது
ப்ருஹதாரண்யத்தின் வாக்கியம். தாசராயரின் அபிப்பிராயம் என்னவென்றால், இந்த ப்ராணோபானாதி ஐந்து ப்ராணர்களால் ஆகும் கர்மங்கள், சரீரத்தால் ஆகிறதே தவிர, தேகத்தை விட்டு ஆவதில்லை என்று நினைத்து, மனவசனகாய என்பவை ஒரு அன்னம் என்று சொல்கிறார். ஆகையால், இது ஆசார்யரின் வாக்கியத்திற்கு விரோதமல்ல. இப்படியாக, அனிருத்தாதி 5 ரூபங்களை, மேற்சொன்ன விதத்தில், 7 அன்னங்களில்,
* வைஷ்வதேவத்தில் ஸ்வாஹா ரூபான்ன,
* பலிஹரணத்தில் ஸ்வதா ரூபான்ன,
* ஸாதாரணன்ன,
* தண்ணீர்
இந்த நான்கில், வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த இந்த நான்கு ரூபங்களையும்,
* மன
* வசன
* காய ரூபங்களான
மூன்று அன்னங்களில் நாராயண ரூபத்தை, என மொத்தம் 5 ரூபங்களை 7 வித அன்னங்களில் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. இதனை அறிந்து எந்தெந்த
காலங்களில் எந்தெந்த அன்னத்தை சமர்ப்பிக்கின்றீரோ, அந்தந்த காலத்திற்கு அந்தந்த மூர்த்தியை நினைக்க வேண்டும்.
எப்போதும் இந்திரியங்களை தற்காலிக விஷய சுகங்களில்
ஈடுபடுத்துவோருக்கு இந்த விஷயங்களை உபதேசம் செய்யக்கூடாது. ஸ்ரீபரமாத்மனே இந்த
விதமாக,
அன்னஸ்வரூபனும், அன்னப்ரதனும், அன்ன உண்பவனுமாக இருக்கிறான் என்று அறிந்து உபாசனை செய்யவேண்டும்.
எந்த3ரிது ஸப்தான்னக3ள தெ3ய்
நந்தி3னதி3 மரெயதெ3 ஸதா3 கோ3
விந்த3க3ர்ப்பிஸு நிர்ப4யதி3 மஹயக்ஞவிது3 யெந்து3 |
இந்தி3ரேஷனு ஸ்வீகரிஸி த3ய
தி3ந்த3 பே3டி3ஸிகொளதெ3 தவகதி3
தந்து3 கொடு3வனு பரமமங்கல தன்ன தாஸரிகெ3 ||15
எந்தரிது = இப்படியாக (மேற்சொன்ன விதத்தில்) அறிந்து
சப்தான்னகள = சப்தான்ன பிரகரணங்களை அறிந்து
தெய்னந்தினதி = தினந்தோறும்
மரெயதே = மறக்காமல்
சதா = எப்போதும்
நிர்பயதி = சந்தேகமில்லாமல்
மஹயக்ஞவிது எந்து = இதுவே மிகப்பெரிய யக்ஞம் என்று
கோவிந்தகர்ப்பிஸு = கோவிந்தனுக்கு அர்ப்பித்து இரு
இந்திரேஷனு = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணன்
தயதிந்த = கருணையுடன்
ஸ்வீகரிஸி = அதனை ஏற்றுக்கொண்டு
பேடிஸிகொள்ளதெ = நமக்கு முக்தியைக் கொடு என்று
வேண்டிக்கொள்ளாமல்
தவகதி தன்ன தாசரிகெ = தன் பக்தர்களுக்கு உடனடியாக
பரமமங்கள = பரமானந்தகரமான ஸ்வரூபானந்தத்தை
தந்து கொடுவனு = கொடுக்கிறான் (முக்தியைக்
கொடுக்கிறான்).
No comments:
Post a Comment