ஸ்ரீவிரிஞ்சாத்3யமரக3ண ஸம்
ஸேவிதாங்க்4ரி ஸரோஜனீ ஜட
ஜீவராஷிக3ளொள ஹொரகெ3 நெலெஸித்து3 நித்யத3லி |
ஸாவகாஷனு எனிஸி தன்ன க
ளேவரத3ல்லிம்பி3ட்டு ஸலஹுவ
தே3வதே3வகிரமண தா3னவஹரண ஜிதமரண ||41
ஸ்ரீவிரிஞ்சாதி = லட்சுமிதேவி, மற்றும் பிரம்மன் முதலானவர்கள்
அமரகண = தேவதா கணங்கள்
சம்ஸேவிதாங்க்ரி ஸரோஜ = நன்றாக வணங்கப்படும் பாத
கமலங்களைக் கொண்ட ஸ்ரீஹரி
ஈ ஜட ஜீவராஷிகளு = மரங்கள், செடி கொடிகள் ஆகிய ஜட ராசிகளின்
ஒள ஹொரகெ = உள்ளே & வெளியே
நித்யதலி = தினந்தோறும்
நெலெஸித்து = நிலைத்திருந்து
ஸாவகாஷனு எனிஸி = தனக்குள் அவற்றிற்கு இடம்
கொடுப்பவன் என்று பெயர் பெற்று
தேவ = ஸ்ருஷ்ட்யாதி கர்மங்களை செய்பவனான
தேவகிரமண = லட்சுமிபதி
தானவ ஹரண = தைத்யர்களை அழிப்பவன்
ஜிதமரண = மரணத்தை வென்றவன் (என்றால் மரணம் இல்லாதவன்
என்று பொருள்)
தன்ன களேவரதல்லி = தன் தேகத்தில்
இம்பிட்டு = நன்றாக வைத்துக்கொண்டு (ஜட ஜீவராசிகளை)
ஸலஹுவ = காப்பாற்றுவான்.
ஜடஜீவிகள் என்றால் ஸ்தாவரங்கள் என்று பொருள். சேதன, ஜட என்று இரு விதங்கள் உண்டு. முந்தைய பத்யத்தில் சேதன ஜீவர்களில் பரமாத்மனின்
இருப்பை விளக்கினார். லட்சுமிதேவியர், பிரம்ம முதலான தேவதா கணங்கள், ஆகியோரால் நன்றாக வணங்கப்படும் பாத கமலங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், ஜடஜீவரான என்றால், ‘வனஸ்பத்யோஷ திலதாத்வக் ஸாராவீரு தாத்ருமா:’ என்னும் பாகவத மூன்றாம் ஸ்கந்தம் வாக்கியத்தால், ஜடஜீவரில் 6 விதங்கள் உண்டு என்று சொல்கிறார். வெறும் ஜட என்றால், பானை,
மலை,
நம் தேகம் ஆகியவை ஆகும். ஜடஜீவர் என்றால் மேற்கூறிய 6 விதங்களான ஸ்தாவரங்கள் ஆகும்.
* வனஸ்பதி என்றால் ‘பலந்தியே வினாபுஷ்ட்யேர்ஸ்தா வதந்தி வனஸ்பர்தீ’ என்று மூன்றாம் ஸ்கந்தம் விஜயத்வஜீயத்தில் சொல்லியிருக்கிறார். அதாவது, பூ இல்லாமல் பழம் மட்டும் கொடுக்கும் பலாப்பழ மரம் ஆகியவற்றிற்கு வனஸ்பதி
என்று பெயர்.
* ‘பலபாகாந்தா ஓஷதய: வ்ரிஹ்யாதய:’ பழம் ஆனதுமே உலர்ந்து போகும், அரிசி முதலான தானியங்களுக்கு ஔஷதி
என்று பெயர்.
* லதா என்றால் கொடிகள்.
* த்வக்ஸார என்றால் மேலே கெட்டியாக
இருந்து,
உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது. உதாரணம்: மூங்கில்.
* வீருத என்றால் தர்ப்பை, புல் முதலானவை.
* த்ருவ என்றால் புளி போன்ற மரங்கள்.
இப்படியாக 6 விதமான ஜடஜீவர்களின் உள்ளே
வெளியேயும் ஸ்ரீபரமாத்மன் வசிக்கிறான். அல்லது தான் நிறைந்திருக்கும் இந்த
பிரம்மாண்டத்தில் அவற்றிற்கு இடங்களைக் கொடுத்து, அவை தினந்தோறும் வளருமாறு செய்து, அவற்றை காக்கிறான். முக்தியிலும்
இந்த ஜடஜீவர்களுக்கு தன் உலகத்தில், ப்ரளயத்தில் தன் தேகத்தில்
இடத்தைக் கொடுத்து காப்பாற்றுகிறான் என்பது கருத்து.
தேவ தேவகிரமண என்று பரமாத்மனை அழைக்கிறார். ’திவாக்ரீடாயம்’ என்னும் மூலத்திலிருந்து தேவ என்றால் ஸ்ருஷ்டிகர்த்தன் என்று பொருள் வருகிறது.
தேவகிரமண என்று தாசராயர் சொல்கிறார். இதற்கு வியாக்யானகாரர் ஒருவர், தேவகியின் புத்திரன் என்று சொல்கிறார். தாசராயரின் விருப்பம், தேவகியின் புத்திரன் என்றே சொல்வதாக இருந்தால், தேவகி தனய என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லியிருந்தாலும், அதனால் எதுகை, மோனை எதிலும் குறை வந்திருக்காது. அப்படியும், தேவகிரமண என்று சொன்னதில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.
பொதுவாக உலகத்தில் நந்தனா என்று குழந்தைகளையும், ரமணா என்று கணவனையும்தான் சொல்கிறார்களே தவிர, ரமணா என்று குழந்தைகளை குறிப்பதில்லை. ‘நந்தயதீதி நந்தன’ விளையாட்டுகளாலும், தன் குணங்களாலும், தன் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதால், குழந்தைகளுக்கு நந்தன என்ற பெயர் பொருந்தி வருகிறது. ‘ரமுக்ரீடாயாம்’ விளையாட வைப்பதால் ரமணா என்று பெயர். ’ரமயதீதி ராம:’ என்று ராமாதி சொற்களுக்கு சொன்னதைப் போல, ரமண என்னும் சொல்லுக்கு சுகம் கொடுப்பவன் என்றும் ஏன் அர்த்தம் செய்யக்கூடாதென்றால், இதுவரை அப்படி யாரும் சொன்னதில்லை. லோக ரமணன் என்று சொன்னால், அது உலகத்தின் பதி என்றே அர்த்தம்.
மகிழ்ச்சி கொடுக்கிறான் என்னும் அர்த்தத்தினாலேயே, ரமண என்றால் மகன் என்று அர்த்தம் சொல்ல முடியவில்லை. பதி என்றாலும், பர்த்தா என்றாலும் அது மகனையும் குறிக்க முடியும். அது எப்படியெனில், ‘பரணாத்பர்த்தா: பாலனாத்பதி:’ இவை இரண்டும்
காப்பாற்றுபவர்களுக்கான பெயர். மகன் பெரியவனானபிறகு தாயை காப்பாற்றுகிறான்.
அப்படியெனில், அவனை தாயின் பதிபர்த்தா என்று சொல்லவேண்டியிருக்கும். அர்த்தத்தில் சரியாக
இருந்தாலும், உலக வழக்கத்தின்படி இது பயன்பாட்டிற்கு வருவதில்லை. தவறாகவும் தெரியும்.
ஆகையால்,
ரமண என்றால் பதி என்றே அர்த்தம் சொல்ல வேண்டும். ஆகையால் இங்கு தேவகிரமண
என்றால் அது லட்சுமிபதி என்றே தாசராயரின் அபிப்பிராயமாக இருக்க வேண்டும் என்று
ஊகிக்க வேண்டும். தேவகி என்றால் லட்சுமி என்று எங்கு இருக்கிறதென்றால்:
பாகவத 1ம் ஸ்கந்தம் 8ம் அத்தியாயம் 24ம் ஸ்லோகம்:
க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாயச |
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம: ||
இதில் தேவகினந்தனாய என்னும் சொல்லிற்கு, விஜயத்வஜீய வியாக்யானத்தில்:
தேவகி லட்சுமி:தானந்தயிதும் ஷீலமஸ்யேதி தேவகி நந்தன:
தேவகி என்றால் லட்சுமி. அவளுக்கு மகிழ்ச்சியைக்
கொடுக்கும் யோக்யதை இவனில் இருப்பதால், இவனுக்கு தேவகி நந்தன என்றும், லட்சுமிபதி என்றும் பெயர்.
மேலும்:
தேவானாம் கம் சுகம் தாதும் ஷீலமஸ்யா அஸ்தீதி தேவகீ
லக்ஷ்மீ: ||
கம் என்றால் சுகம். தேவதைகளுக்கு சுகத்தைக்
கொடுக்கும் யோக்யதை இவளுக்கு இருப்பதால், லட்சுமிதேவிக்கு தேவகி என்று
பெயர். அல்லது,
தேவவத் கம் யஸ்யா: ஸா தேவகி ||
அதாவது, பரமாத்மனுக்கு அர்த்தாங்கினியான
காரணத்தால், பரமாத்மனைப் போல சுகங்களைப் பெற்றிருப்பதால், லட்சுமிதேவிக்கு தேவகி என்று பெயர் உண்டு. இப்படியாக, தேவகி நந்தன என்றால் லட்சுமிபதி என்று அர்த்தம் சொல்லலாம். இதே ஆதாரத்தின்
பேரிலேயே தாசராயர், தேவகிரமண என்று பிரயோகம் செய்திருக்கிறார் என்று நிச்சயமாக தெரிகிறது.
மாஸ ஒந்த3கெ ப்ரதி திவஸத3லி
ஷ்வாஸக3ளஹவு அஷ்ட சத்வா
ரிம்ஷதி ஸஹஸ்ராதி4கா1ரு ஸுலக்ஷ ஸங்க்2யெயலி |
ஹம்ஸ நாமக ஹரிய ஷோட3ஷ
ஈ ஷதாப்3த3தி3 ப4ஜிஸெ ஒலிவ த3
யா ஸமுத்ர குசேலகொ3லித3ந்த3த3லி தி3னதி3னதி3 ||42
மாஸ ஒந்தகெ = ஒரு மாத காலத்தில்
பிரதி திவஸகெ = ஒரு நாள் கணக்கில்
அஷ்டசத்வாரிம்ஷதி சஹஸ்ராதிகாரு சுலக்ஷ = 6,48,000
சங்க்யெயலி = எண்ணிக்கையில்
ஷ்வாஸகளஹவு = மூச்சுகள் விடுகிறோம் (ஆகிறது)
ஷோடஷ ஈ ஷதாப்ததி = இந்த 116 ஆண்டுகளில்
ஹம்ஸ நாமக ஹரிய = ஹம்ஸ நாமக ஹரியை
பஜிஸெ = இந்த மொத்த ஆண்டுகளில் துதித்தால்
தினதினதி = எப்போதும்
குசேலகொலிதந்ததலி = குசேலனுக்கு தரிசனம் அளித்ததைப்
போல
தயாசமுத்ர = கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி
ஒலிவ = தரிசனம் அளித்து அருள்வான்.
ஒரு நாளுக்கு நாம் விடும் ஸ்வாசங்கள் 21,600. இதை,
பிராணதேவர் நமக்குள் இருந்து செய்விக்கும் ஹம்ஸ மந்திர ஜெபம் என்று முதலாம்
மங்களாசரண சந்தியில் ‘ஆரு மூரெரடொந்து சாவிர’ என்னும் பத்யத்தில் பார்த்தோம்.
இப்படியாக ஒரு நாளுக்கு 21,600; மாதத்திற்கு 21,600 * 30 =
6,48,000 ஸ்வாசங்கள் ஆகிறது. மேற்சொன்ன 116 ஆண்டுகளில், ஒவ்வொரு நாளும் நாம் இந்த மூச்சினை, ஸ்ரீஹம்ஸ நாமக பரமாத்மனின் மந்திர
உபாசனை என்று அறிந்து துதித்தால், குசேலன் என்னும் பிராமணனுக்கு ஸ்ரீகிருஷ்ணன்
அருளி,
இஹபரங்களைக் கொடுத்ததைப் போல, நமக்கும் அருள்வான்.
ஸ்தூ2ல தே3ஹதொ3ளித்து3 வருஷக்கெ
ஏளதி4க வெப்பத்து லக்ஷத3
மேலெ எப்பத்தாரு ஸாவிர ஷ்வாஸ ஜபக3ளனு |
கா3ளிதே3வனு கருணத3லி ஈ
ரேளு லோகதொ3ளுள்ள சேதன
ஜாலதொ3ளு மாடு3வனு த்ரிஜகத் வ்யாப்த பரமாப்த ||43
ஸ்தூல தேஹதொளித்து = ஸ்தூல தேகத்தில் இருந்து
வர்ஷக்கெ = 1 ஆண்டிற்கு
ஏளதிக வெப்பத்து லக்ஷத மேலே எப்பத்தாரு ஸாவிர = 77,76,000
ஷ்வாஸ ஜபகளனு = ஸ்வாச ஜெபங்களை
காளிதேவனு = பிராணதேவர்
கருணதலி = எவ்வித பலன்களையும் எதிர்பாராமல் வெறும்
கருணையுடனே
ஈரேளு லோகதொளுள்ள = 14 உலகங்களிலும் உள்ள
சேதன ஜாலதொளு = ஜீவர்களின் ஸ்தூல தேகத்தில் இருந்து
த்ரிஜத் வ்யாப்த = மூன்று உலகங்களிலும் வியாப்தனாகி
பரமாப்த = அனைவருக்கும் பரம நண்பனாக இருப்பவன்
மாடுவனு = செய்கிறான்.
வாயுதேவர், 14 உலகங்களிலும் நிலைத்திருந்து, அனைத்து பிராணிகளுக்கும் பரம நண்பராகி, 14 உலகங்களிலும் இருக்கும் அனைத்து பிராணிகளின் ஸ்தூல தேகங்களில் இருந்து, அந்த பிராணிகளிடமிருந்து தான் எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பாராமல், பகவத் ஆஞ்யையின்படி, பகவந்தனின் அன்பிற்காக, தன் கருணையால் மாதம் ஒன்றிற்கு 6,48,000 ஸ்வாசங்கள் என ஒரு
ஆண்டிற்கு 77,76,000 ஸ்வாசங்களை தான் செய்து, ஜீவர்களால் செய்விக்கிறார். இந்த
ஸ்வாச ஜப மந்திரங்கள் ஆகியவற்றை, மங்களாசரண சந்தியில் ‘ஆரு மூரெரடொந்து சாவிர’ என்னும் பத்யத்தின் விளக்கத்தில்
பார்த்திருக்கிறோம்.
ஈரெரடு தே3ஹக3ளொளித்து3 ஸ
மீரதே3வனு ஷ்வாஸஜப நா
நூரதி4க வாகி3ப்ப எம்பத்தாரு ஸாஹஸ்ர |
தா ரசிஸுவனு தி3வஸ ஒந்த3கெ
மூருவித4 ஜீவரொளகி3த்து3 க2
ராரி கருணாப3லவ தெ3ந்து1டோ பவனராயரொளு ||44
மூருவித ஜீவரொளு = சாத்விக, ராஜஸ,
தாமஸ என்னும் மூன்று வித ஜீவர்களில்
இத்து = இருந்து
ஆ ஜீவர ஈரெரடு தேஹதொளு = ஸ்வரூப, லிங்க, அனிருத்த, ஸ்தூல என்னும் நான்கு தேகங்களிலும் இருந்து
ஸமீரதேவனு = வாயுதேவர்
நானூரதிகவாகிப்ப எம்பத்தாரு ஸஹஸ்ர = 86,400
ஸ்வாசஜப = ஸ்வாச ஜபங்களை
திவஸ ஒந்தகெ தா ரசிஸுவனு = தினந்தோறும் தான்
செய்கிறான்
பவனராயரொளு = வாயுதேவரில்
கராரி = கர என்னும் அசுரனைக் கொன்ற ஸ்ரீராமதேவர்
என்றால் ஸ்ரீபரமாத்மன்
கருணாபலவதெந்துடோ = கருணாபலமானது எவ்வளவு என்று
சொல்லவும் முடியுமோ? என்றால், பகவந்தனின் சம்பூர்ண அருளுக்குப் பாத்திரர் என்று அர்த்தம்.
வாயுதேவர் அனைத்து பிராணிகளிலும் இருந்து, ஷ்வாஸ ஜபங்களை செய்விப்பது, இந்த ஸ்தூல தேகங்களில் மட்டுமல்ல.
ஸாத்விகாதி மூன்றுவித ஜீவர்களுக்கும், ஸ்வரூப தேகம், லிங்க தேகம், அனிருத்த தேகம், ஸ்தூல தேகம் என்று 4 வித தேகங்கள் உண்டு. இந்த 4 தேகங்களிலும் இருந்து, ஒரு சரீரத்திற்கு ஒரு நாளில் 21,600 ஸ்வாசங்கள் என்று 4 தேகங்களில் ஒரு நாளுக்கு 96,400 ஜபங்களை செய்கிறார்.
எந்த ஸ்ரீராமன், ராமாவதாரத்தில் ஹனுமந்தனுக்கு பரமானுக்கிரகம் செய்தானோ, அதே பரமாத்மனே மூலரூபத்தினால், மூலரூபியான வாயுதேவருக்கு
முழுமையான கருணையைக் காட்டியிருக்கிறார். அந்த கருணாபலம் எவ்வளவு என்பதை
வர்ணிப்பது யாருக்குதான் சாத்தியம்? அதாவது, வாயுதேவர் பகவந்தனின் முழுமையான கருணாபலத்திற்குப் பாத்திரரானவர் என்று
அர்த்தம்.
ஸ்ரீத4வ ஜகன்னாத2 விட்டல
தா த3யதி3 வத3னதொ3ளு நுடிதோ3
பாதி3யலி நா நுடி3தெ3னல்லதெ3 கே1ளி பு3த4ஜனரு |
ஸாது4லிங்க3 ப்ரத3ருஷகரு நி
ஷேதி4ஸிதரேனஹுது3 என்னப
ராத4வேனித3ரொளகெ3 பேள்வுது திளித3 கோவித3ரு ||45
ஸ்ரீதர = லட்சுமிதேவியை தன் மார்பில் தரித்திருக்கும்
ஜகன்னாதவிட்டலனு = பிம்பமூர்த்தியான ஜகன்னாத விட்டலன்
என்னும் பரமாத்மன்
தா = தான்
தயதி = கருணையால்
வதனதொளு = நான் வாயில் இருந்து
நுடிதோபாயதலி = சொல்லியதைப் போல
நா = நான் சொல்கிறேன்
அல்லதெ = தவிர, நான் ஸ்வதந்த்ரமாக எதையும் சொல்ல முடியாதவன்
புதஜனரு = ஞானிகள்
கேளி = கேட்டு
ஸாதுலிங்க ப்ரதர்ஷகரு = சாதுகளைப் போல வேடம்
தரித்தவர்கள்
நிஷேதிஸிதரெ = இது சரியில்லை என்று சொன்னீர்களேயானால்
ஏனஹுது = என்ன ஆகும்
இதரொளகெ = இதில்
என்னபராதவேனு = என் தவறு என்ன இருக்கமுடியும்?
கோவிதரு = ஞானிகள்
பேள்வுது = சொல்ல வேண்டும்.
ஜகன்னாதவிட்டலனான ஸ்ரீதரன், என் வாயில் இருந்துகொண்டு கூறுவதைப் போல நான் சொல்கிறேனே தவிர, என் ஸ்வதந்த்ர புத்தியினால் இந்த கிரந்தத்தில் நான் எதையும் சொல்லவில்லை. இதை
ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும். சஜ்ஜனர்களைப் போலவோ, தபஸ்விகளைப் போலவோ வேடம் தரித்த சிலர் என்றால், அந்த:சுத்தி (அந்தரங்க) இல்லாதவர்கள் இந்த கிரந்தத்தை திட்டுவார்கள். ஆகையால்
ஆவது என்ன? இதில் என்னுடைய தவறு என்ன? ஞானிகள் இதனை யோசிக்க வேண்டும்.
என்று தாசராயர், இந்த கிரந்த கர்த்ருத்வ சக்தியானது, தமக்குள் அந்தர்யாமியாக இருக்கும்
பகவந்தனே தவிர, தமது சொந்த கருத்து எதுவும் இதில் கொஞ்சம்கூட இல்லை என்று அனைத்தையும்
பரமாத்மனுக்கே சமர்ப்பிக்கிறார்.
நாடிப்ரகரண சந்தி என்னும் 12ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment